WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
துனிசிய
“ஐக்கிய”
அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் அணிவகுப்பு
By Bill Van Auken
20 January 2011
Use this version to print | Send
feedback
துனிசின் மையப்பகுதி மற்றும் பிற துனிசிய
நகரங்களிலும் அகற்றப்பட்ட சர்வாதிகாரி ஜைன் எல் அபிடைன் பென்
அலியின் ஆட்சியில் பணிபுரிந்த மந்திரிகள் நீக்கப்பட வேண்டும்,
அவருடைய ஆளும்
RCD
(Constitutional Democratic Rally -RDC)
எனப்படும் அரசியலமைப்பு ஜனநாயக அணிக் கட்சி
கலைக்கப்பட வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கானவர்கள்
புதன்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சௌதி
அரேபியாவிற்கு பென் அலி தப்பிச் சென்ற ஐந்து நாட்களுக்குப்
பின்னர் அவர் விட்டுச் சென்ற துனிசிய ஆட்சி செயலிழந்த்தோடு,
ஒரு
“தேசிய
ஐக்கிய”
அரசாங்கத்தை இணைக்கும் முயற்சிகளும்
தெருக்களில் மக்கள் எதிர்ப்பினால் தகர்க்கப்பட்டுள்ளன.
“எங்களுக்கு
ஒரு புதிய பாராளுமன்றம்,
புதிய அரசியலமைப்பு,
ஒரு புதிய குடியரசு தேவை”
என்று துனிசின் மையப்பகுதியிலுள்ள
Bourguiba Avenueல்
அணிவகுத்துச் சென்றபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
பொதுக் கூட்டங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மீறினர்.
வரிசை முழுவதும் நின்றிருந்த பாதுகாப்புப் பிரிவினர்
எதிர்ப்பாளர்கள்மீது கண்ணீர்ப்புகை குண்டைப் பிரயோகம் செய்தனர்.
“இந்த
ஆளும் கட்சியை அகற்றும் வரை இது ஒவ்வொரு நாளும் தொடரும்”
என்று பள்ளி ஆசிரியராக இருக்கும் பயதி போனி
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“நாங்கள்
சர்வாதிகாரியை அகற்றிவிட்டோம்,
ஆனால் சர்வாதிகாரத்தை இன்னும் அகற்றவில்லை.
எங்களை
30
ஆண்டுகளாக அடக்கியாண்டு வரும் இந்த அரசாங்கத்தை
அகற்ற விரும்புகிறோம்.”
பென் அலியின் விசுவாசியான பிரதம மந்திரி மஹ்மத்
கன்னொச்சி,
துனிசியாவில் இருந்து சர்வாதிகரி ஓடியவுடன்
அரசாங்க அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முயன்றவர்,
ஐக்கிய அரசாங்கம் என்று அழைக்கப்படுவதின்
திட்டமிட்ட முதல் காபினெட் கூட்டத்தை ஒத்தி வைக்கும்
கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளார்.
தொடர்ந்த வெகுஜன எதிர்ப்பை அடுத்து,
புதிதாக நியமிக்கப்பட்டிருந்த நான்கு
மந்திரிகள் செவ்வாயன்று அதில் சேர்வதற்கு முதலில் ஒப்புக்
கொண்ட பின்னர்,
அதில் இருந்து நீங்க வேண்டிய கட்டாயத்திற்கு
உட்பட்டனர்
புதிய அரசாங்கத்திற்கு வெகுஜன சீற்றம்
உடனடியாகவும் ஆழ்ந்தும் வெளிப்பட்டது. ஏனெனில் இது பிரதம
மந்திரியையோ அல்லது மற்ற முக்கிய பதவிகளில் இருந்தவர்களையோ
மாற்றவில்லை. அதில் பாதுகாப்பு,
வெளியுறவு,
உள்துறை மற்றும் நிதித் துறைகள் அடங்கியிருந்தன.
ஒரு முதலாளித்துவ எதிர்க்கட்சியான
FDLT
எனப்படும் தொழிலாளர் சுதந்திர ஜனநாயக
அரங்கத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான முஸ்தாபா
பென் ஜாபர்,
அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுவதற்கு
முன்னரே சுகாதார மந்திரிப் பதவியைத் தான் ஏற்பதாக இல்லை என்று
அறிவித்தார்.
அரசாங்கத்தில் சேர்ந்திருந்த மூன்று மற்ற
எதிர்த்தரப்பு நபர்கள்—
போக்குவரத்து,
தளவாடங்கள் இளநிலை மந்திரி
Annour Ben Gueddour,
தொழிலாளர் துறை மந்திரி
Houssine Dimass
மற்றும்
“பிரதம
மந்திரிக்கு மந்திரி”
என்னும் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பதவியில்
இருத்தப்பட்ட
Abdeljelil
ஆகியோரும் தங்கள் இராஜிநாமாவை அறிவித்தனர்.
UGTT
எனப்படுதம் துனிசிய பொதுத் தொழிலாளர்
சங்கத்தின் பிரதிநிதிகளாக இம் மூவரும் இருந்தனர். அது
ஒன்றுதான் பென் அலியின் ஆட்சியில் அங்கீகாரம் பெற்றிருந்த ஒரே
தொழிற்சங்கம் ஆகும். இது தன் அதிகாரத்துவத்தைப் பயன்படுத்தி
துனிசியத் தொழிலாள வர்க்கம் அடக்கப்படவும் அதன் மீது
கண்காணிப்புக் கொள்ளவும் உதவியது.
UGTT
யின் தலைமைச் செயலர் அப்டிஸலிம் ஜேராட்,
2009ல்
தொழிற்சங்கக் கூட்டமைப்பை தில்லுமுல்லுத் தேர்தல் ஒன்றில் பென்
அலிக்கு ஆதரவாகத் திரட்டியவர்,
புதனன்று,
அவருடைய அமைப்பு புதிய அரசாங்கத்தில்
“பழைய
ஆட்சி நபர்கள்”
இருக்கும் வரை பங்கு பெறாது என்று கூறினார்.
“பழைய
ஆட்சியின் அதிகாரச் சின்னங்களை அடக்கியுள்ள அரசாங்கத்தில்
நாங்கள் பங்கு பெற முடியாது”
என்று பிரதம மந்திரி கன்னொச்சியை சந்தித்த
பின்னர் ஜேராட் அறிவித்தார்.
UGTT
தலைவரே அத்தகைய
“அடையாளம்தான்”
என்பது பல துனிசியத் தொழிலாளர்களுக்கு
தெரியாமல் இல்லை.
பழைய தொழிற்சங்கக் கருவி தன்னுடைய நடவடிக்கைகளை
வெகுஜன இயக்கத்தை மூச்சுத்திணறடிக்கும் நோக்கத்துடன் இயைந்து
நடத்திவருகிறது,
ஆட்சிக்கு உறுதியளிக்கவும் முயல்கிறது.
தெருக்களில் வெகுஜன எதிர்ப்பைக்
கருத்திற்கொண்டு ஐக்கிய அரசாங்கத்தை நிறுவும் முயற்சி
பயனளிக்காது என்ற முடிவிற்கு அது வந்துள்ளது.
UGTT
புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,
இந்த அரசாங்கம்
“தொழிலாளர்கள்
அல்லது பொதுமக்களின் விழைவுகளை பூர்த்தி செய்யாது. கடந்தகால
வழக்கங்களிலிருந்து புதிய வழிவகைக்கு உண்மையில் செல்லாது. இதன்
சமபல நிலை முந்தைய அரசாங்கங்கள் மற்றும் ஆளும் கட்சியின் பல
உறுப்பினர்களைத் தான் கொண்டுள்ளது. இதைத்தவிர
UGTT
பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையும்தான்
காணப்படுகிறது”
என்று கூறியுள்ளது.
ஜேராடோ அல்லது
UGTT
யின் அறிக்கையோ ஏன் தொழிற்சங்கக் கருவி
முன்னதாக ஐக்கிய அரசாங்கத்தில் சேர முயன்றது என்பது பற்றி எந்த
விளக்கமும் கொடுக்கவில்லை.
UGTT
யின் செய்தித் தொடர்பாளர்,
அகற்றப்பட்ட சர்வாதிகாரியின் மந்திரிசபையில்
இருந்தவர்கள் அனைவரும் அகற்றப்பட வேண்டும் என்று குரல்
கொடுக்கையில்,
பிரதம மந்திரி கன்னொச்சியைப் பொறுத்த வரை அது
விதிவிலக்காக இருக்கும் என்று கூறியுள்ளது.
மக்கள் எதிர்ப்பைச் சிதைக்கும் வெற்று
முயற்சியில் கன்னொச்சியும் இடைக்கால ஜனாதிபதி மெஹ்பாஜாவும்
செவ்வாயன்று,
நாட்டை பல தசாப்தங்கள் ஆண்டுவந்த பென் அலியின்
RCD
கட்சியில் இருந்து தாங்கள் நீங்குவதாக
அறிவித்துள்ளனர்.
இத்தகைய அடையாளச் செயல் வெகுஜன
எதிர்ப்புக்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற
நிலையில்,
எதிர்க்கட்சித் தலைவர் பென் ஜாபர்
ராய்ட்டர்ஸிடம் புதன்கிழமை அன்று அரசாங்கத்தை விட்டு நீங்குவது
என்ற தன் கருத்தை மறுபரிசீலனை செய்ய இது போதுமானது என்றார்.
அவருடைய கட்சியின் செய்தித் தொடர்பாளர்,
கட்சி அரசாங்கத்திலிருந்து
“உத்தியோகப்பூர்வமாக
”நீங்கிவிட்டது,
ஆனால் ஒரு மாற்றீட்டு நிர்வாகத்தை
அமைப்பதற்குப் பேச்சுக்களை நடத்தி வருகிறது என்றார்.
துனிசியாவில் நிகழும் புரட்சிகர நிகழ்ச்சிகள்
பற்றிப் பெரும் கவலைகள் அமெரிக்கா,
ஐரோப்பா மற்றும் அரபு உலகம் முழுவதும்
வெளிவந்துள்ளன.
புதன்கிழமையன்று துனிசியாவிலுள்ள அமெரிக்கத்
தூதர் கோர்டன் கிரேயை மேற்கோளிட்டு
Al Jazeera
பென் அலி அகற்றப்பட்ட பின்
“எதிர்ப்புக்களுக்கு
ஒரு மாதம் கடந்த பின் அவருடைய பகிரங்கக் கருத்துக்கள்
முற்றுப்பெற்றுள்ளன”
எனக் கூறியுள்ளது.
பெரும் எச்சரிக்கை உணர்வுடன் அனைத்துத்
தரப்பினரும்
“பொறுப்புடன்
நடந்து கொள்ள வேண்டும்”
என்று கிரே அழைப்பு விடுத்துள்ளார்.
“ஜனநாயக
வெளிப்பாடு ஒரு முன்னேற்றச் செயலாக வந்துள்ளது….
என்ற நிலைமையைத்தான் துனிசியாவில் நாம்
காண்கிறோம் என்று நினைக்கிறேன்”
என்று அரபு செய்தி இணையம் ஒன்றிடம் கிரே
கூறினார்.
“இது
ஒரு புதிய நிகழ்வு,
அதிக அனுபவம் இல்லாமல் மக்கள் இதைச் செய்து
கொண்டிருக்கின்றனர்.”
தூதரின் சார்பற்ற தன்மை உடைய கருத்துக்கள்
வாஷிங்டன் சௌதி அரேபியாவிற்கு பென் அலி விமானத்தில் ஏறும் கணம்
வரை தான் ஆதரவு கொடுத்திருந்த ஆட்சியில் எஞ்சியிருப்பதைக்
காப்பாற்ற முடியுமா என்ற உறுதியற்ற தன்மையைத்தான்
பிரதிபலிக்கின்றன.
இதற்கிடையில் ஐரோப்பாவில் ஐரோப்பிய
பாராளுமன்றத்திலுள்ள சோசலிஸ்ட்டுக்கள்,
ஜனநாயகவாதிகளின் முற்போக்குக் கூட்டு
செவ்வாயன்று பென் அலியின்
RCD
கட்சியானது சோசலிஸ்ட் இன்டர்நேஷனலில் இருந்து
“அசாதாரணமான
சூழ்நிலையில்”
வெளியேற்றப்பட்டுவிட்டது என்று அறிவித்தது.
1970
களில் இருந்து
RCD
இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளது.
இச் சர்வதேச அமைப்பில் பிரிட்டிஷ்,
ஆஸ்திரேலிய தொழிற் கட்சிகள்,
ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி,
பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சி மற்றும்
உலகெங்கிலுமுள்ள சமூக ஜனநாயகக் கட்சிகளும் மற்றும்
முதலாளித்துவ தேசியக் கட்சிகளும் உள்ளன.
வாஷிங்டனில் ஒபாமா நிர்வாகத்தைப் போல்,
இக்கட்சிகள் துனிசியாவை முறையாகக் கொள்ளை
அடித்த,
தெருக்களில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களைச்
சுட்டுக் கொன்ற,
ஒரு அமைப்புடன் சகோதரத்துவ உறவுகளைக்
கொண்டிருந்தன.
பென் அலி அதிகாரத்தை இழந்துவிட்டார் என்பது
மிகவும் தெளிவாகும் வரை காத்திருந்த பின்னர் தான் சமூக
ஜனநாயகக் குழு உறவுகளைத் துண்டித்தது.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகை ஜனாதிபதி ஒபாமா
எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்குடன் செவ்வாயன்று தொலைபேசித்
தொடர்பு கொண்டார் என்று அறிவித்துள்ளது.
“துனிசியாவில்
நடக்கும் சமீபத்திய போக்குகள் பற்றி ஜனாதிபதி பேசியதுடன்,
ஜனாதிபதி முபாரக்குடன் கருத்துக்களைப்
பகிர்ந்து கொண்டார். வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு
அமைதி திரும்ப வேண்டும்,
அப்பொழுதுதான் துனிசிய மக்களின் விழைவுகளைப்
பூர்த்தி செய்வதற்கு தடையற்ற,
நியாயமான தேர்தல்கள் நடத்தப்பட முடியும்,
அனைவருக்கும் பொருந்தும் மனித உரிமைகள்
நிலைநிறுத்தப்பட துனிசியாவில் இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட
முடியும்”
என்று ஓர் அறிக்கையில் வெள்ளை மாளிகை
கூறியுள்ளது.
இந்தத் தொலைப் பேசி அழைப்பு முபாரக் ஷர்ம் எல்-ஷேக்கில்
ஒரு சமூகப் பொருளாதார அரபு லீகின் உச்சிமாநாட்டை நடத்திக்
கொண்டிருந்தபோது வந்தது.
உச்சிமாநாட்டிற்கு அளித்த தன் உரையில் எகிப்திய
சர்வாதிகாரி துனிசிய நிகழ்வுகள் பற்றி ஏதும் கூறவில்லை.
“அரபு
தேசியப் பாதுகாப்பில்”
வேலை அளித்தல்,
பொருளாதார வளர்ச்சி ஆகியவை பிரச்சினகள் ஆகும்
என்று மட்டும் வலியுறுத்தினார்.
உச்சிமாநாட்டில் பங்கு பெற்ற அதிகாரிகளின்
கவனம் எழுச்சியின் மீது தான் இருந்தன. மேலும் தங்கள்
அடக்குமுறை ஆட்சிகளும் அடுத்தாற்போல் இத்தகைய நிலையை
எதிர்கொள்ளக்கூடும் என்ற ஆதாரமான அச்சங்களும் பிரதிபலிப்பாயின.
குவைத்தின் ஆளும் எமிரான ஷேக் சபா அல் அஹ்மத்
அல்-சபா,
துனிசிய மக்கள்
“இந்தக்
குறிப்பிட்ட கட்டத்தைக் கடந்த உறுதிப்பாடு,
பாதுகாப்பு”
ஆகியவற்றை அடையவேண்டும் என்று
வலியுறுத்தியதுடன் நிறுத்திக் கொண்டார்.
அரபு ஆளும் உயரடுக்கிற்குள் இந்த அச்சங்களுக்கு
நேரடி வெளிப்பாடு கொடுத்த சில குரல்களில் ஒன்று அரபு லீக்
செயலரான அம்ர் மௌசா ஆவார்.
“துனிசியாவில்
புரட்சி என்னும் அடிப்படையில் நடக்கும் நிகழ்வுகள் பொருளாதார,
சமூக வளர்ச்சி என்ற தலைப்பையுடைய இந்த
உச்சிமாட்டில் பிரச்சினையில் இருந்து அதிக தொலைவிலுள்ள
பிரச்சினை அல்ல”
என்றார் அவர்.
“அரபுக்
குடிமகன் முன்னோடியில்லாத சீற்றத்தை வெளிப்படுத்தும் கட்டத்தை
அடைந்துவிட்டார்”
என்று மூசா எச்சரித்து,
அரபு சமூகங்கள்
“வறுமை,
வேலையின்மை குறியீடுகளில் பொதுச் சரிவு”
ஆகியவற்றைக் கொண்டு
“தீர்க்கப்படாத
அரசியல் பிரச்சினைகளை”
எதிர்கொள்ளுகின்றன என்றார்.
பல அரபு நாடுகளிலும் வெளிப்படக்கூடிய
“பெரும்
சமூக அதிர்ச்சிகளுக்கு”
துனிசியா ஒரு எச்சரிக்கை ஆகும் என்றார் அவர்.
துனிசிய நிகழ்வுகளானது பிராந்தியம் முழுவதும்
பரவக்கூடும் என்ற அச்சுறுத்தல் பெரும் துன்பம் தரும் வகையில்
பல நிகழ்ச்சிகள் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இதில் அண்டைய நாட்டுத் தொழிலாளார்கள்
26
வயது துனிசிய மஹம்மத் பௌசஜிஜியைப்
பின்பற்றியுள்ளனர். அவர் கடந்த மாதம் பொலிசுக்கு எதிர்ப்புத்
தெரிவிக்கும் வகையில் தன்னையே தீக்கிரையாக்கிக் கொண்டார்.
பொலிசார் அவருடைய வாழ்விற்கு ஆதாரமாக இருந்த ஒரு காய்கறி
வண்டியைக் கைப்பற்றியிருந்தனர்.
துனிசியா மற்றும் அரபு உலகம் முழுவதும்
கணக்கிலடங்காத மற்றவர்களும் இதேபோல் உள்ள நிலையில் இளம்
தொழிலாளியுடைய செயல்,
அவருக்கு முறையான வேலை கிடைக்கவில்லை என்ற
பொழுது செய்தது,
எதிர்ப்புக்களைத் தூண்டியது. பென் அலியை
வீழ்த்திய மாபெரும் எழுச்சியாக உயர்ந்தது.
உயரும் விலைகள் மற்றும் வேலையின்மை கடந்த மாதம்
அதிகம் என்பவற்றிற்காக எதிர்ப்புக்கள் நடத்தியிருந்த
அல்ஜீரியாவிலும் மூன்று பேர் புதன்கிழமை அன்று தங்களையே
தீக்கிரையாக்க முயன்றதின் மூலம் தற்கொலைக்கு முயன்றனர் என்று
Agence France Presse
தகவல் கொடுத்துள்ளது.
முகம்மது பௌவாஜிஜியின் நடவடிக்கைகளுக்கு
வழிவகுத்த நிகழ்ச்சிகளே மீண்டும் நடந்தது போல்,
ஒரு
37
வயது அல்ஜீரியத் தொழிலாளியும் ஆறு பேரின்
தந்தையுமான அபிப் ஹத்ரி தன்மீது
Oued
என்னும் கிழக்கு நகரத்தில் முக்கியச் சந்தையில்
பெட்ரோலை ஊற்றிக்கொண்டு நெருப்பை வைத்துக் கொள்ள முயன்றார்.
உள்ளூர் மக்கள் சரியான நேரத்தில் அதைத் தடுத்து நிறுத்தினர்.
பொலிசுடன் அப்பொழுதுதான் ஒரு மோதலில் ஹட்ரி
ஈடுபட்டிருந்தார். அவர்கள் அவர் சட்டவிரோதமாக உணவு விற்பனை
செய்வதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.
அல்ஜீரியாவிற்கு வெளியேயுள்ள ஒரு சிறு
நகரத்தில் ஐம்பது வயதுள்ள ஒரு பெண்மணி எரிவாயுவைத் தன்மீது
விட்டுக்கொண்டு தீவைத்துக் கொள்ள முயன்றார். வீட்டு உதவி
கிடைக்காத காரணத்தால் அவர் இவ்வாறு செய்தார்.
இவரும் சரியான நேரத்தில் தீ வைத்துக் கொள்ளாமல்
காப்பாற்றப்பட்டார்.
ஒரு
35
வயது அல்ஜீரிய நபர் அல்ஜீயர்ஸுக்கு வெளியே
Dellys
நகர அரங்கிற்கு வெளியே தனக்குத் தீ வைத்துக்
கொள்ளுவதில் வெற்றி அடைந்தார்.
மருத்துவ அதிகாரிகள்
AFP
இடம் உடல் முழுவதும்
95
சதவிகிதம் மோசமான தீக்காயங்களுடன் அவர் நிலை
மோசமாக உள்ளது என்று கூறினர்.
செவ்வாயன்று,
ஆறு பேருக்குத் தந்தையும் வேலையில்லாத
தொழிலாளியும் வேலை,
வீடு இல்லாத காரணத்தை எதிர்த்துத் தனக்கே
நெருப்பு வைத்துக் கொண்டவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையில் எகிப்தில் அரசாங்க நீர் நிறுவன
ஊழியர் ஒருவர் கெய்ரோவில் கவர்னர் அலுவலகத்திற்கு எதிரா தனக்கே
தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
இந்த வாரம் எகிப்தில் அவ்விதத் தற்கொலை
முயற்சிகளில் நான்காவது ஆகும் இது.
செவ்வாயன்று தீக்காயங்களால் ஒருவர் இறந்து
போனார்.
ஆறு பேருக்குத் தந்தையான வேலையில்லாமல் வாடிய
ஒருவரும் தனக்கே நெருப்பு வைத்துக் கொண்டபின் செவ்வாயன்று
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். |