WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
துனிசியா
அமெரிக்காவும்
இடைக்கால
அரசாங்கமும்
துனிசிய
மக்களுக்கு
எதிராகச்
சதி
செய்கின்றன
By Ann Talbot
29 January 2011
Use this version to print | Send
feedback
தொடரும்
எதிர்ப்புக்களை
முகங்கொடுக்கும்
வகையில்,
அதிகாரத்தின்
மீது
தன்
பிடியைத்
தக்க
வைத்துக்
கொள்ளும்
வகையில்
இடைக்கால
துனிசிய
அரசாங்கம்
ஒரு
மந்திரிசபை
மாற்றத்தை
அறிவித்துள்ளது.
மந்திரிசபை
மாற்றங்களானது
அகற்றப்பட்ட
ஜனாதிபதி
ஜைன்
எல்
அபிடைன்
பென்
அலியின்
ஆட்சியில்
இருந்த
அரசாங்கத்துடன்
விலத்தி
வைத்துக்கொள்ளும்
நோக்கதைக்
கொண்டது.
இதையொட்டி
பென்
அலியின்
அரசியலமைப்பு
ஜனநாயக
அணி
(RCD)
உடன்
தொடர்புடைய
பல
மந்திரிகள்
நீக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய
மாற்றத்தின்
பூச்சுத்
தன்மை
பிரதம
மந்திரியாக
மஹ்மத்
கன்னொச்சியைத்
தொடர்ந்து
வைத்துக்
கொண்டுள்ளதில்
அடிக்கோடிட்டுக்
காட்டப்படுகிறது.
இவர்தான்
பென்
அலியின்
பிரதம
மந்திரியாகவும்,
முன்னாள்
ஜனாதிபதியின்
RCD
யில்
நீண்டகாலமாக
எடுபிடியாகவும்
இருந்தவர்.
வியாழனன்று
12
மந்திரிகள்
மாற்றப்பட்டு
“சுதந்திரமானவர்கள்”
நியமிக்கப்பட்டுள்ளனர்,
RCD
உறுப்பினர்களாக
அல்லாத
பென்
அலி
ஆட்சியிலிருந்து
இருவர்
மட்டுமே
உள்ளனர்
என்றார்
கன்னொச்சி.
அமெரிக்காவிற்கு
அருகிலுள்ள
கிழக்கிற்கான
விவகாரங்களின்
உதவி
அரச
செயலர்
ஜெப்ரி
பெல்ட்மன்
துனிசிக்கு
வருகை
தந்த
பின்னர்
இந்த
மந்திரிசபை
மாற்றம்
ஏற்பட்டது.
“துனிசிய
மக்களின்
கருத்தை
உரைக்கவும்,
தெளிவாகவும்
கேட்டோம்
என்று
துனிசியத்
தொலைக்காட்சியில்
பெல்ட்மன்
கூறினார்.
அமெரிக்க
வெளியுறவு
அலுவலகத்தின்
மூத்த
அதிகாரிதான்
திரைக்குப்
பின்னால்
உண்மையான
அதிகாரத்தைச்
செலுத்துபவர்.
லெபனானில்
2005ல்
இருந்து
2008
வரை
அதிகாரத்திலிருந்த
Fouad Siniora
வின்
அரசாங்கத்தைக்
கட்டமைப்பதில்
இவர்
முக்கியமான
பங்கைக்
கொண்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
மூன்று
நாட்கள்
துனிசியாவில்
இருந்த
பின்
புதனன்று
பெல்ட்மன்
அங்கிருந்து
புறப்பட்டுப்
பாரிசுக்குச்
சென்றார்.
அங்கு
அவர்
துனிசிய
நிலைமை
பற்றியும்
நஜிப்
மிகாடியின்
புதிய
லெபனான்
அரசாங்கம்
பற்றியும்
பேச்சுக்களை
நடத்தினார்.
இரு
நாடுகளின்
முன்னாள்
காலனித்துவ
சக்தியாக
பிரான்ஸ்தான் இருந்தது.
ஜனநாயகத்திற்கு
மதிப்பு
கொடுப்பது
பற்றி
எந்த
அறிக்கைகளை
அது
கொடுத்தாலும்,
வாஷிங்டன்
துனிசிய
எழுச்சியை
அடக்குவதற்குத்தான்
செயல்பட்டு
வருகிறது.
இலக்கை
அடைய
மந்திரிசபை
மாற்றங்கள்
தோல்வியுற்றால்,
அமெரிக்கா
மாற்றீட்டுத்
தந்திரோபாயங்களைக்
கையாளும்.
வாஷிங்டன்
கருத்தில்
கொண்டுள்ள
ஒரு
விருப்பத்
தேர்வு
ஒரு
இராணுவச்
சர்வாதிகாரத்தை
நிறுவ
வேண்டும்
என்பதாகும்.
இம்மாதம்
முன்னதாக,
துனிஸ்
இன்னும்
பிற
நகரங்களில்
பெரும்
எதிர்ப்புக்கள்
ஏற்பட்டபோது,
அமெரிக்கத்
தளபதிகள்
நேரடியாக
துனிசிய
தளபதிகளுடன்
தொடர்பு
கொண்டு
பென்
அலிக்கு
அவர்கள்
கொடுத்துவந்த
ஆதரவை
விலக்கிக்
கொள்ளுமாறு
கூறினர்.
இதையொட்டி
நீண்டகாலம்
அமெரிக்க
நண்பராக
இருந்த
பென்
அலியின்
23
ஆண்டுகால
ஆட்சி
விரைவிலேயே
முடிவிற்கு
வந்தது.
துனிசிய
இராணுவம்
தலையிட்டு
முக்கிய
நகரங்கள்
மற்றும்
அரசாங்கம்
நிறுவியுள்ளவைகள்
பாதுகாக்கப்பட
உதவின,
ஆனால்
இடைக்கால
அரசாங்கம்
இராஜிநாமா
செய்யவேண்டும்
அல்லது
கன்னொச்சி
உட்பட
முன்னாள்
பென்
அலியின்
கூட்டாளிகள்
அகற்றப்பட
வேண்டும்
என்ற
ஆர்ப்பாட்டக்காரர்களின்
கோரிக்கைகளில்
தலையிடவில்லை.
பென்
அலியுடன்
பிணைந்திருந்த
பொலிஸ்
மற்றும்
பிற
சக்திகளுக்கு
எதிராகப்
புரட்சிக்குப்
பாதுகாவலர்
என்று
இராணுவம்
தன்னைக்
காட்டிக்
கொள்ளுகிறது.
ஆனால்
இந்த
வாரம்
முன்னதாக
ஜேனரல்
ரஷிட்
அம்மர்,
இராணுவத்தின்
தலைவர்,
இடைக்கால
அரசாங்கம்
அகற்றப்பட
வேண்டும்
என்ற
குரல்கள்
தொடர்ந்தால்,
மாற்றீடு
ஒரு
சர்வாதிகாரமாகக்
கூடும்
என்று
எச்சரித்தார்—இந்த
ஆபத்து
பென்
அலியின்
முன்னாள்
ஆதரவாளர்களிடம்
இருந்து
வரக்கூடும்
என்றும்
அவர்
தெரிவித்தார்..
அதன்பின்
அம்மர்
மீண்டும்
மௌனமாகிவிட்டார்.
ஆனால்
பின்புலத்தில்
மேலாதிக்க
நிலைப்பாட்டை
இராணுவம்
தொடர்ந்து
கொண்டுள்ளது.
ஒரு
பின்னோசே
போன்ற
நபர்
போல
அம்மர்
இன்னும்
உபயோகமாக
இருக்க
முடியும்.
எழுச்சியைக்
குருதியில்
மூழ்கடித்து
அழித்துவிடக்கூடிய
வகையில்.
இந்தக்
கட்டத்தில்
இராணுவப்
பயன்பாடு
என்னும்
கருத்தைக்
கொண்டுவருவது,
அதுவும்
மக்கள்
எழுச்சி
மத்திய
கிழக்கு
மற்றும்
வட
ஆபிரிக்காவில்
பரந்து
வரும்போது,
வாஷிங்டனுக்கு
ஆபத்தைத்தான்
கொடுக்கும்.
ஒபாமா
நிர்வாகமும்
துனிசிய
ஆளும்
உயரடுக்கும்
இதையொட்டி
பெருகியமுறையில்
முன்பு
சட்டவிரோதமான
எதிர்க்கட்சி
என்று
இருந்தவற்றை,
அது
இஸ்லாமியவாதிகள்
என்றாலும்
பெயரளவிற்கு
இடதுசாரி
என்றாலும்,
மக்கள்
இயக்கத்தைக்
கட்டுப்படுத்தி
அதை
முதலாளித்துவத்திற்குப்
பின்
கொண்டுவருவதற்காக
நம்பியுள்ளன.
இதற்காக
உத்தியோகபூர்வமாக
ஜனநாயகச்
சீர்திருத்தம்
பற்றிய
உறுதிமொழிகள்
என்ற
தோற்றங்களையும்
வளர்த்து
வருகின்றன.
மந்திரிசபை
மாற்றத்தை
தொடர்ந்தும்,
எதிர்ப்பாளர்கள்
பிரதம
மந்திரியின்
அலுவலகத்தைத்
தொடர்ந்து
சூழ்ந்திருந்தனர்.
கடந்த
நான்கு
இரவுகளாக
ஊரடங்கு
உத்தரவை
மீறி
அவர்கள்
இவ்வாறு
செய்துள்ளனர்.
பொலிசாருடன்
பலமுறை
மோதல்களும்
ஏற்பட்டுள்ளன.
மந்திரிசபை
மாற்றத்தால்
அகற்றப்பட்டவர்களுள்
ஒருவர்
வெளியுறவு
மந்திரி
கமெல்
மொர்ஜனே
ஆவார்.
இவருக்குப்
பதிலாக
அஹ்மத்
க்வானிஸ்
பதவிக்கு
வந்துள்ளார்.
அமெரிக்கா
ஆரம்பத்தில்
பென்
அலிக்குப்
பதிலாக
மொர்ஜனேயை
ஆதரித்தது
என்ற
கருத்து
இருந்தது.
ஆனால்
அவர்
பழைய
ஆட்சியுடன்
வெகு
நெருக்கமாக
இருந்தார்.
பெல்ட்மன்
தன்
வருகையின்
போது
இவரைச்
சந்தித்தார்.
இடைக்கால
அரசாங்கத்திற்கு
ஒரு
வனப்புப்
பூச்சு
கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால்
செல்வாக்கற்ற
மந்திரிகளுக்குப்
பதிலாக
மைய
ஆட்சியின்
கீழ்மட்ட
அதிகாரிகள்
பதவிக்கு
வந்துள்ளனர்.
உள்துறை
அமைச்சரகம்
பர்ஹட்
ரஜ்கிக்குக்
கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்
அரசாங்கத்
தலைமை
வக்கீல்
என்னும்
முறையில்
பென்
அலியின்
சர்வாதிகாரத்தைச்
செயல்படுத்தும்
பொறுப்பைக்
கொண்டிருந்தார்.
“அறிவாளிகள்
சபை”
ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது.
இதில்
பென்
அலியுடன்
முன்பு
பதவியிலிருந்த
ஹபிப்
பௌர்கிபா
காலத்திய
பிரமுகர்களும்
உள்ளனர்.
ஆயினும்கூட,
முக்கிய
துனிசியத்
தொழிற்சங்கமான
துனிசிய
தொழிலாளர்
பொதுக்
கூட்டமைப்பு
(UGTT)
மந்திரிசபை
மாற்றத்தை
வரவேற்றுள்ளது.
UGTT
நீண்டகாலமாக
பென்
அலிக்கு
ஆதரவு
கொடுத்து
வந்தது,
அவருக்குப்
பதிலாக
வந்த
இடைக்கால
அரசாங்கத்தில்
சேர்ந்தது,
ஆனால்
வெகுஜன
எதிர்ப்பை
ஒட்டி
அதன்
பிரதிநிதிகளை
திரும்பப்
பெற்றுக்
கொண்டது.
மக்கள்
இயக்கத்தை
நன்கு
நெரிப்பதற்காக அதற்குப்
பின்
இது
ஒரு
முக்கிய
நிலைப்பாட்டைக்
கொண்டுள்ளது.
மந்திரிசபை
மாற்றங்கள்
எதிர்ப்புக்களை
நிறுத்தப்
போதுமானவை
என்ற
கருத்தைப்
பற்றி
அவநம்பிக்கையுடன்
கேம்ப்ரிட்ஜ்
ஆராய்ச்சியாளர்
ஜோர்
ஜோபி
கூறினார்:
“இவர்கள்
பழைய
ஆட்சியின்
பெரும்
புள்ளிகள்.
இது
செயற்படாது.
தெருவிற்கு
இதில்
விருப்பமிருக்காது.”
பல
ஆர்ப்பாட்டக்காரர்களும்
துனிசியாவில்
வறிய
பகுதிகளில்
இருந்து
வருகின்றனர்.
தங்கள்
அற்ப
வாழ்க்கைத்
தரம்
இன்னும்
கூடுதலாக
பென்
அலியின்
IMF
ஆணைக்குட்பட்ட
பொருளாதார
சீரமைப்பினால்
அரிப்பிற்குட்பட்டதைத்தான்
அவர்கள்
கண்டனர்.
இயக்கமானது
தொழிலாள
வர்க்கம்
மற்றும்
கிராமப்புற
வறியவர்கள்
அணிதிரட்டப்படுவதைப்
பிரதிபலிக்கிறது
என்பதுடன்
பழைய
ஆட்சியின்
அனைத்துக்
கூறுகளுக்கும்,
UGTT
உட்பட,
ஒரு
அச்சுறுத்தலைக்
கொடுக்கிறது.
பிந்தையது
1957ல்
துனிசியா
சுதந்திரம்
அடைந்ததிலிருந்து
அரசியலில்
ஒரு
பங்கைக்
கொண்டுள்ளது.
இதன்
முன்னாள்
தலைமை
உறுப்பினரான
ஹபிப்
அசௌர்
Bourguiba
வின்
நவ
டெஸ்டோர்
கட்சியின்
முக்கிய
உறுப்பினராக
இருந்தார்.
அவர்
அரசாங்கத்துடன்
ஒரு
சமூக
ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்ட
பின்னர்
பாஸ்பேட்
சுரங்கத்
தொழிலாளர்கள்,
ஜவுளி
ஆலைத்
தொழிலாளர்கள்
இன்னும்
பிற
தொழிலாள
வர்க்கத்தின்
வேலைநிறுத்தங்களுக்கு
1977-78ல்
ஆதரவு
கொடுக்க
மறுத்து
விட்டார்.
இராணுவம்
இந்த
வேலைநிறுத்தங்களை
பெரும்
மிருகத்தனத்துடன்
அடக்கியது.
பென்
அலி
1987ல்
அதிகாரத்திற்கு
அவருடைய
“அமைதியான
புரட்சி”
என்பதின்
மூலம்
வந்தபோது,
ஆரம்பத்தில்
அவர்
ஜனநாயக
சீர்திருத்தங்கள்
வரும்
என
உறுதியளித்தார்.
ஆனால்
உள்துறை
அமைச்சர்
என்ற
முறையில்
அவர்
Bourguiba
வின்
கீழிருந்த
எதிர்ப்புக்களை
அடக்கியதைக்
கண்காணித்து,
குண்டர்கள்,
தகவல்
கொடுப்பவர்கள்
ஆகியோரைக்
கொண்ட
இரகசிய
குடிப்
படையையும்
கட்டமைத்தார்.
ஆயினும்கூட,
UGTT
அரசாங்கத்திற்கு
அதன்
ஆதரவைத்
தொடர்ந்து,
பென்
அலிக்கு
தில்லுமுல்லு
நடத்தப்பட்ட
தேர்தல்களின்
போதும்
ஆதரவைக்
கொடுத்தது.
மந்திரிசபை
மாறுதல்
எதிர்ப்புக்களுக்கு
முடிவு
கட்டவில்லை
என்றால்,
மற்ற
திட்டங்களும்
தயார்
நிலையில்
உள்ளன.
துனிசிய
அரசாங்க
அதிகாரிகள்
நியூ
யோர்க்
டைம்ஸிடம்
தாங்கள்
தற்பொழுதைய
தேக்கத்திற்கு
முற்றுப்புள்ளி
வைக்க
ஒரு
எதிர்த்தரப்பு
நபரைத்
தேடுவதாகக்
கூறினர்.
இதில்
முக்கியமாக
இருப்பவர்கள்
நடா
கட்சியின்
இஸ்லாமியவாதிகள்
ஆவர்.
பைனான்சியல்
டைம்ஸ்
லண்டனில்
நாடு
கடந்து
வாழும்
அதன்
தலைவரான
ரஷித்
கன்னொச்சியை
லண்டனில்
விரைவில்
சந்தித்தனர்.
அவருடைய
துணைத்
தலைவரான
அலி
லாராயெட்
நியூ
யோர்க்
டைம்ஸ்
மற்றும்
டெய்லி
டெலிகிராப்
ஆகியவற்றுடன்
பேசினார்.
ஆனால்
இருவரில்
எவருமே
துனிசிய
எழுச்சியில்
பங்கு
கொள்ளவில்லை.
அவர்களுடைய
கட்சியும்
பங்கு
பெறவில்லை.
அவர்கள்
மக்கள்
எழுச்சியின்
தலைவர்கள்
என்று
தங்களை
எளிதில்
காட்டிக்
கொள்ள
முடியாது.
வாஷிங்டனும்
துனிசிய
ஆட்சியும்
மற்ற
சக்திகளைத்தான்
நாட
வேண்டியிருக்கும்.
மிகச்
சமீபத்தில்
அமைக்கப்பட்ட
குழுக்களில்
ஒன்று
14
ஜனவரி
இயக்கம்
என்பதாகும்.
பென்
அலி
ஓடிய
அன்று
இப்பெயர்
அதற்கு
இடப்பட்டது.
இது
அரபு
தேசியவாத
இயக்கங்களின்
கூட்டணி
ஆகும்.
இதில்
பாத்
இயக்கம்
மற்றும்
தன்னைத்தானே
இடது
கட்சிகள்
என்று
கூறுபவை,
PCOT
என்னும்
துனிசியத்
தொழிலாளர் கம்யூனிஸ்ட்
கட்சி
ஆகியவை
அடங்கும்.
அதன்
முக்கிய
பணிகளில்
ஒன்று,
“ஓர்
அரசியல்
அமைப்பை
இயற்றுவதற்கான
தேர்தல்களுக்குத்
தயாரிப்பது”
என்று
இதன்
நிறுவன
அறிக்கை
இனங்காணுகிறது.
இது
நீண்ட
கால
PCOT
ன்
நிலைப்பாடு
ஆகும்.
அதுதான்
“உண்மையான
ஜனநாயகக்
குடியரசை
நிறுவமுடியும்,
அதில்தான்
மக்கள்
சுதந்திரம்,
சமூக
சமத்துவம்
மற்றும்
தேசிய
கௌரவம்
ஆகியவற்றை
உயிர்ப்பிக்க
முடியும்”
என்று
அறிவிக்கிறது.
இதே
அழைப்புத்தான்
1990ம்
ஆண்டு
துனிசியத்
தேசிய
மீட்பு
முன்னணியினால்
வெளியிடப்பட்ட
அறிக்கையிலும்
காணப்படுகிறது.
அது
PCOT
மற்றும்
நடா
ஆகியவற்றையும்
பிரதிபலிப்பதாகக்
கூறியிருந்தது.
PCOT
ஒரு
மாவோயிசக்
குழு
ஆகும்.
தன்
விசுவாசத்தை
முன்னாள்
அல்பானியத்
தலைவர்
என்வர்
ஹோக்ஸ்ஹா
மற்றும்
ஸ்ராலினிச
பாரம்பரியத்திற்கு
பறைசாற்றுகிறது.
அதன்
தொழிலாள
வர்க்க
விரோதம்
மற்றும்
சோசலிச
சர்வாதிகாரத்திற்கு
எதிர்ப்பு ஆகியவற்றிற்கு கொண்டுள்ள
விருப்பம்,
“இரு-கட்டப்”
புரட்சி
என்னும்
அதன்
முன்னோக்குடன்
பிணைந்துள்ளது.
கோட்பாட்டளவில்
இது
சோசலிசத்திற்கான
எந்தப்
போராட்டத்தையும்
தெளிவற்ற,
தொலைவிலுள்ள
வருங்காலத்திற்குத்
தள்ளுகிறது.
நடைமுறையில்,
சோசலிசத்திற்கான
போராட்டத்தை
எதிர்த்து,
தொழிலாள
வர்க்கத்தை
உள்ளூர்
முதலாளித்துவம்
மற்றும்
ஏகாதிபத்தியத்திற்கு
தாழ்த்தி
வைக்கிறது.
இதன்
தற்போதைய
முக்கியத்துவம்
மாஸ்கோ
ஆதரவு
கொண்டிருந்த
துனிசிய
கம்யூனிஸ்ட்
கட்சியின்
சரிவும்,
காட்டிக்
கொடுப்புக்களாலும்
ஏற்பட்ட
அரசியல்
வெற்றிடத்தை
இது
நிரப்பக்
கூடிய
திறனினால்
வந்துள்ளது.
இது
1934ம்
ஆண்டு
பிரெஞ்சு
கம்யூனிஸ்ட்
கட்சியின்
ஒரு
பிரிவாக
நிறுவப்பட்டது.
பாசிசச்
சார்பு
விஷி
ஆட்சியினால்
இது
சட்டவிரோதமாக்கப்பட்டது.
1962ல்
Bourguiba
இதைச்
சட்டவிரோதம்
என்று
அறிவித்தார்,
ஆனால்
1991ல்
சட்டத்திற்கு
உட்பட்டது
என்று
அறிவித்தார்.
அது
தன்னை
ஒரு
தேசிய
ஜனநாயக
அமைப்பாக
அடையாளம்
காட்டிக்
கொண்டு,
அனைத்து
“தேசபக்தியுடைய
வர்க்கங்களுக்கும்
இடையே”
ஒற்றுமை
வேண்டும்
எனக்கூறுகிறது.
1988ல்
இது
பென்
அலியின்
தேசிய
உடன்பாட்டில்
கையெழுத்திட்டது.
கிழக்கு
ஐரோப்பாவில்
ஸ்ராலினிச
ஆட்சிகள்
சரிந்தபின்,
இக்கட்சி
கம்யூனிசத்துடன்
எந்தத்தொடர்பு
இல்லை
என்று
நிராகரித்துவிட்டது.
1993ல்
இது
Movement Ettajdid (புத்துயிர்ப்பு
இயக்கம்)
என்று
மாறியது.
இடைக்கால
அரசாங்கத்தில்
அஹ்மத்
இப்ராஹிம்
என்பவர்
இக்கட்சியைச்
சேர்ந்தவர்
ஒருவர்
மந்திரியாக
உள்ளார்.
1986ல்
Bourguiba
ஆட்சி
நெருக்கடியில்
நுழைந்து
இறுதியில்
பென்
அலியை
1987ல்
அதிகாரத்திற்குக்
கொண்டுவந்த
நிலையில்
PCOT
நிறுவப்பட்டது.
கட்சி
உறுப்பினர்கள்
கைதுசெய்யப்பட்டு,
சிறையில்
அடைக்கப்பட்டனர்.
சிலர்
சித்திரவதைக்குட்பட்டு
மடிந்தனர்.
இதன்
தலைவர்
ஹம்மா
ஹம்மாமி
மற்றும்
அவருடைய
மனைவி
ரதியா
நஸ்ரௌல்
ஆகியோர்
சர்வதேச
அளவில்
மனித
உரிமைகள்
செயற்பாட்டாளர்கள்
என்று
நன்கு
அறியப்பட்டுள்ளனர்.
இவர்கள்
2000ம்
ஆண்டில்
PCOT
உறுப்பினர்களாக
இருந்ததற்காகக்
கைதுசெய்யப்பட்ட
பெரும்பாலான மாணவர்கள் உட்பட
17
நபர்களில்
இவர்களும் இருந்தனர்.
தற்போதைய
எழுச்சி
தொடங்கியவுடன்
கைது
செய்யப்பட்டவர்களில்
ஹம்மாமியும்
உள்ளார்.
தற்பொழுதுதான்
சிறையில்
இருந்து
விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி
14
இயக்கம்
முன்வைத்துள்ள
“அரசியல்
அமைப்பு”
என்பது
ஒரு
மோசடியாகும்.
இடைக்கால
அரசாங்கத்தைக்
கண்காணிக்கும்
அமைப்பாக
மட்டுமே
அது
கருதப்படுகிறது.
தொழிலாளர்களைத்
தாக்குவதில்
நீண்ட
வரலாற்றை
உடைய
இராணுவம்,
பொலிஸ்
இரண்டுமே
பழைய
ஆட்சியின்
உறுப்பினர்களைக்
கொண்ட
ஒரு
அரசாங்கத்தின்
கட்டுப்பாட்டின் கீழ்
இருக்கும்.
ஒரு
சில
புது
முகங்கள்
மட்டுமே
அதில்
இருக்கும்.
உண்மையில்,
இராணுவத்தின்
பங்கு
எப்பொழுதுமே
ஆட்சியைப்
பாதுகாப்பது
என்றுதான்
உள்ளது.
எழுச்சிக்கு
எதிராக
வெளிப்படையாக
அது
தலையிடாத
காரணம்
அதன்
தலைமை
அமெரிக்காவுடன்
நெருக்கமாகச்
செயல்பட்டுவருவதால்தான்.
வாஷிங்டன்
இன்னும்
ஒரு
சிவிலிய
அரசாங்கத்தைக்
கட்டமைக்க
முயல்கிறது.
PCOT
தொடர்ச்சியாக
இராணுவத்தை
புரட்சியின்
காவலர்
என்று
சித்தரிக்கிறது.
மேலும்
ஆட்சியில்
இருந்து
சுதந்திரமாகச்
செயல்படும்
மக்கள்
சக்தி
என்றும்
குறிப்பிடுகிறது.
இவ்விதத்தில்
அது
மிக
ஆபத்தான
போலித்
தோற்றங்களைப்
பரப்புவதுடன்
தொழிலாள
வர்க்கத்தின்
குருதி
கொட்டும்
தோல்விக்கும்
வழிவகுக்கிறது.
துனிசியாவிலும்
அரபு
உலகம்
முழுவதிலும்
தொழிலாள
வர்க்கத்திற்கும்
ஒடுக்கப்பட்டுள்ள
மக்களுக்குமான
முன்னேற்றப்பாதைக்கு—
அதாவது
ஜனநாயக
உரிமைகளைப்
பாதுகாக்கும்
ஒரே
வழிவகையான,
வறுமையையும்
வெகுஜன
வேலையின்மையையும்
முடிவிற்கு கொண்டு வருவது—உள்ளூர்
முதலாளித்துவம்
மற்றும்
ஏகாதிபத்தியத்திற்கு
எதிராகப்
போராடுவதுடன்
தொழிலாளர்களின் அதிகாரத்திற்கும்
மற்றும்
சோசலிசத்திற்காவும்
ஐக்கியப்பட்ட
போராட்டத்தை
நடத்துவதுதான். |