WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
ஏசியன்
அமைப்பு நாடுகளிற்கிடையிலான
போக்குவரத்து இணைப்புக்கள் சீனாவுடன் பொருளாதார
ஒருங்கிணைப்பிற்கு ஏற்றம் அளிக்கின்றன
By John Chan
27 January 2011
Use this version to print | Send
feedback
சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின்
(ASEAN)
10 உறுப்பினர் அமைப்பானது தாய்லாந்திலும் சீனாவிலும் கூட்டாக
ஜனவரி
23
முதல்
25
வரை
நடத்திய வெளிநாட்டு மந்திரிகள் உச்சிமாநாடானது சீனாவின்
சாலைகள்,
இரயில்வேக்கள் மற்றும் குழாய்த்திட்டங்களின் வலையமைப்புக்
கட்டுமானத்தை உயர்த்திக் காட்டியுள்ளது.
அமெரிக்காவுடன் பெருகிய முறையில் ராஜதந்திர மற்றும் மூலோபாயப்
போட்டியை எதிர்கொண்டிருக்கும் நிலையில்,
இப்போக்குவரத்து இணைப்புக்கள் எரிசக்தி இறக்குமதி வழியைச் சீனா
தன் பாதுகாப்பில் கொள்ளவும் தென்கிழக்கு ஆசியாவை அதன்
பொருளாதாரச் சுற்றுக் கோளில் இன்னும் இணைக்கவும் வடிவமைப்பைக்
கொண்டுள்ளன.
வடக்கு தாய்லாந்தில் சியாங் ராயில் கூட்டம்
ஆரம்பித்ததுடன் மந்திரிகள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின்
தலைநகரான குன்மிங்கிற்குப் பயணத்தை மேற்கொண்டனர்.
மெகோங்
ஆற்றைக் கடந்து லாவோசிலுள்ள
Houey Xay
க்கு
ஒரு ஆடம்பரப் படகு மூலம் சென்று,
பின்
பேரூந்து ஒன்றில் சீன நகரமான ஜிங்ஹாங்கிற்குச் சென்று,
அங்கிருந்து ஒரு விமானத்தின் மூலம் குன்மிங்கை அடைந்தனர்.
அங்கு
சேர்ந்தவுடன் அவர்கள்
R3A
எனப்படும்
1,750
கீ.மீ.
நீள
குன்மிங்-பாங்காக்
நெடுஞ்சாலையைப் பரிசோதித்துப் பார்த்தனர். இப்பொழுது அது
“வடக்கு-தெற்கு
பொருளாதாரத் தாழ்வாரம்”
என்று
அழைக்கப்படுவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
இப்பயணம்
“ASEAN
இணைப்பின் பெரும் திட்டம்”,
கடந்த
அக்டோபர் ஆசியான் உச்சிமாநாட்டில் ஏற்கப்பட்டதை பெருமையுடன்
காட்டியது.
ஆசியானின் தலைமைச் செயலர் சுரின் பிட்ஸுவான் அறிவித்தார்:
“இச்
சாலைப் பயணம்,
ஆசியான் வெளிநாட்டு மந்திரிகள் மற்றும் சீன வெளிநாட்டு மந்திரி
மாண்புமிகு யாங் ஜீச்சியால் மேற்கோள்ளப்பட்டது உலகத்துடன்
நாங்கள் திறைமையுடன் தொடர்பு கொண்டுள்ளோம்,
இத்தொடர்பு
2015ல்
ஒரே சமூகமாக விளங்கும்போது உறுதியாக முன்னேறும் என்பதை
நிரூபிக்கிறது.”
புதிய போக்குவரத்து இணைப்புக்கள் ஆசியான்-சீன
தடையற்ற வணிக உடன்பாட்டிற்கு ஆக்கம் தரும் என்று சுரின்
கூறினார்.
ஓராண்டிற்கு முன்னர்தான் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில்,
இந்த
உடன்பாடு கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் மக்களுக்கு மொத்த
வர்த்தக அளவு அமெரிக்க
4.5
டிரில்லியன் டொலர் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நம்முடைய
பொருட்கள்,
நம்முடைய சுற்றுலாத் துறை மற்றும் நம்முடைய சேவைத் துறை ஆகியவை
பெருமளவும் சீனாவுடன் இணைப்பு முறையினால் பெரிதும் பயனடையும்”
என்றார் அவர்.
சீன-ஆசியான்
வர்த்தகம் கடந்த ஆண்டு
2009ல்
இருந்ததைவிட
37.5
சதவிகிதம் அதிகரித்து
292.78
பில்லியன் டொலராக ஆயிற்று.
ஆசியானின் மிகப் பெரிய வணிகப் பங்காளியாக சீனா ஆகியுள்ளது.
சீன
ஏற்றுமதிகள் ஆசியனுக்கு
30.1
சதவிகிதம் அதிகரித்துள்ளன என்றாலும் ஆசியான் அதன் வணிகப்
பற்றாக்குறை கடந்த ஆண்டு
16.34
பில்லியன் டொலர் என்று இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அங்கு
பெருகியுள்ள மின்சார மற்றும் இயந்திரப்
பொருட்களின் இறக்குமதியாகும்.
புதிய சாலைகளும் இரயில்வேப் பாதைகளும் சீனா
பெருகிய முறையில் பிராந்திய உற்பத்தி வலையமைப்பின் மையமாக
வருகையில் கட்டமைக்கப்படுகின்றன. உதிரிப்பாகங்கள்,
மூலப்
பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் நிறைய நாடுகளில் இருந்து
பெறப்படுவதோடு,
இந்தோனேசியாவின் நிலக்கரி,
மலேசியாவின் மின்னணு உதிரிப் பொருட்கள் ஆகியவையும் அடங்கும்.
சீனப்
பொருளாதாரம் கடந்த இரண்டு தசாப்தங்களில் பெற்றுள்ள விரைவான
விரிவாக்கத்தின் உந்துதலினால்,
தடையற்ற வணிக உடன்பாடும்
1997-98ல்
ஆசிய நிதிய நெருக்கடியையடுத்து வளர்ந்த ஒருங்கிணைப்பை
விரைவுபடுத்தியுள்ளது.
குன்மிங்கில் வெளியுறவு மந்திரிகள் கூடுகையில்,
அருகேயுள்ள குவாங் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த
ஆணையம் ஒரு
2.6
பில்லியன் டொலர் மதிப்புடைய உயர் வேக இரயில்வே இணைப்பை,
மாநிலத் தலைநகர் நான்னிங்கில் இருந்து வியட்நாமிலுள்ள ஹனோய்,
லாவோஸிலுள்ள வியன்டியன்,
கம்போடியாவிலுள்ள பூம் பென்,
தாய்லாந்திலுள்ள பாங்காக்,
மலேசியாவிலுள்ள கோலாலம்பூர்,
கடைசியில் சிங்கப்பூர் ஆகியவற்றை இணைப்பதற்கான திட்டத்தை
அறிவித்துள்ளது.
இந்த உயர்வேக இரயில் அடுத்த
5
ஆண்டுகளில்
300
பில்லியன் யுவான்
($45
பில்லியன்)
“நான்னிங்-சிங்கப்பூர்
பொருளாதார தாழ்வாரத்தை”
தோற்றுவிக்கும் திட்டத்திறனின் ஒரு பகுதி ஆகும்.
நான்னிங்கிலிருந்து லாவோசுடனான எல்லை வரை புதிய பாதைகள்
கட்டமைப்பு இந்த ஆண்டின் இரண்டாவது பகுதியில் தொடங்க
இருக்கின்றன.
இந்த இரயில்வே வலையமைப்பின்
நிர்ணயிக்கப்பட்டுள்ள வணிக மையம் பாங்காக் ஆகும்.
தாய்லாந்தின் தலைநகரம் சீன ஏற்றுமதிகளுக்குப் புதிய சந்தைகள்
திறப்பதற்கான நுழைவாயிலாக,
தென்
கிழக்கு ஆசியாவின்
600
மில்லியன் மக்களுக்காக இருக்கும். சீன அரசாங்கம் இதற்கு
முற்படுவதின் காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதன்
விற்பனைகள் குறைந்து வருவதை ஈடு செய்வதாகும்.
பாங்காக் திட்டமிட்ட சீன நிதியில் ஒரு
1.5
பில்லியன் டொலர் சீனப் பொருட்களின் மொத்த வணிக மையமாக மாறும்.
இந்த
மையத்தில் மொத்த வணிகப் பகுதி
700,000
சதுர
மீட்டர்கள் என்று கிட்டத்தட்ட
100
கால்பந்து மைதானங்களின் அளவில் இருக்கும்.
சீனத் தயாரிப்புப் பொருட்கள் மீண்டும் புதிய
வணிக மையத்தின் மூலம் மறு ஏற்றுமதி செய்யமுடியும்,
அதையொட்டி சீனாவின் மீது சுமத்தப்படும் தடைகள் தவிர்க்கலாம்
என்பதுடன் சீனாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடைய புதிய
காப்புவரியற்ற இணைப்புக்களும் பயன்படுத்தப்படவும் முடியும்
என்று ஆசியான்-சீனப்
பொருளாதார வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் தலைவரான யாங் பாங்ஷு
செய்தி ஊடகத்திடம் கூறினார்.
உதாரணமாக,
இது
சீன உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்காவானது சீனத் தயாரிப்பு
மரத்தில் தயாரிக்கப்படும் படுக்கைப் பொருட்கள் மீது
விதிக்கப்படும்
43
முதல்
216
சதவிகிதம் வரையிலான
anti-dumping
வரியைத் தவிர்க்க உதவும்.
இதில் சாலைகள்,
இரயில்வேக்கள் மற்றும் குழாய்த் திட்டங்கள் என்று இந்தோசீனத்
தீபகற்பம் நெடுகிலும் வரவிருக்கும் கட்டுமானத் திட்டங்களில்
பரந்த மூலோபாய நலன்களும் உள்ளடக்கியிருக்கின்றன.
ஒரு
மத்திய மதிப்பீடானது மலாக்கா நீர்சந்திக்கு மாற்றீட்டுப்
பாதைகள் அமைப்பதாக இருக்கும்,
இதனால்தான்
80
சதவிகிதம் சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய்
2008ல்
கொண்டுவரப்பட்டது.
நிலப்பாதைகள்,
குழாய்த்திட்டங்களையும் நிறுவ பெய்ஜிங் முற்பட்டுள்ளது.
அதையொட்டி மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து வரும்
எண்ணெய் கலன்கள் பர்மா அல்லது தீபகற்பத்தின் மற்ற பகுதிகளில்
இறக்கப்பட்டு,
எண்ணெய் தரைமூலம் தென்மேற்கு சீனாவிற்கு அனுப்பப்பட முடியும்.
குன்மிங் மற்றும் பர்மிய வணிக மையமான
ரங்கூனையும் இணைக்கும் வகையில்,
1,920
கி.மீ.
உயர்
வேக இரயில்வேயை கட்டமைக்க தொடங்கியுள்ளது. பின்னர் இந்தப்
பாதையை பர்மிய நகரான தவாய் வரை விரிவாக்கும் கருத்து உள்ளது.
அங்குதான் தாய்லாந்து முதலீட்டாளர்கள் ஒரு பெரிய
துறைமுகத்திற்கான திட்டத்தைக் கொண்டுள்ளனர்.
சீனாவும் ஒரு இரயில்பாதையை
1,100
கி.மீ.
குழாய்த்திட்டத்தையொட்டி இணையாக குன்மிங்கையும் மேற்கு பர்மிய
ஆழ்கடல் துறைமாகமாக க்யோக்ப்யூவுடன் இணைப்பதை கட்டமைக்கவும்
பரிசீலிக்கிறது.
இதைத்தவிர,
பெய்ஜிங் ஸ்டில்வெல் சாலையை மறுகட்டமைக்கவும் முயல்கிறது,
இது
அமெரிக்க இராணுவத்தால் இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகள்
ஜப்பானுக்கு எதிரான போரில் சீனாவிற்கு உதவியளிப்பற்காகக்
கட்டப்பட்டது.
இச்சாலை பர்மாவின் கசின் மாநிலத் தலைநகரான
மைட்கியினாவிலிருந்து இந்திய எல்லைக்கு அருகேயுள்ள பர்மிய
நகரான பாங்சாவு வரை செல்வது மீண்டும் யுன்னான் கட்டுமான
பொறியியல் நிறுவனத்தால் (Yunnan
Construction Engineering Company)
பர்மிய யுஜானக் குழுவுடன் கூட்டு முயற்சியாக,
கடந்த
நவம்பர் மாதம் கையெழுத்தான ஓர் உடன்படிக்கையின்படி கட்டப்படும்.
இத்திட்டங்கள் சீனாவானது பர்மாவுடன்
(மியன்மார்)
கொண்டுள்ள பெருகிவரும் பொருளாதாரத் தொடர்பின் ஒரு பகுதி ஆகும்.
2010ன்
முதல் ஐந்து மாதங்களில் சீன முதலீடு பர்மாவில்
8.2
பில்லியன் டொலர் என்று இருந்தது. இதில் பெரும்பகுதி
உள்கட்டுமானத் திட்டங்களுக்காகும். அதையடுத்து வட்டியில்லாமல்
4.5
பில்லியன் டொலர் கடன் கடந்த செப்டம்பர் மாதம் இராணுவ ஆட்சிக்
குழுவிற்குக் கொடுக்கப்பட்டது.
சீனாவின் பெருகும் செல்வாக்கு இப்பகுதியை
இன்னும் ஆழ்ந்த பெரும் சக்திகளின் போட்டிக்கு இட்டுச்
செல்கிறது. ஏனெனில் அமெரிக்கா தன் நடைமுறையிலுள்ள புவியியல்
மற்றும் பொருளாதார நலன்களை பெய்ஜிங்கிற்கு விட்டுக்
கொடுத்துவிடாது.
ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் கீழ் வாஷிங்டன் சீனாவை மூலோபாய
வகையில் சுற்றிவளைத்து இறுக்க முற்படுகிறது. தன்னுடைய நீண்ட
கால நட்பு நாடுகளான ஜப்பான்,
தென்கொரியா,
ஆஸ்திரேலியா,
பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் மேலும் புதிய பங்காளிகளான
வியட்நாம் போன்றவற்றையும் பயன்படுத்துகிறது.
கடந்த
18
மாதங்களில் அமெரிக்கா ஆசியான் நாடுகளுடன் தன் தொடர்புகளை சீன
முயற்சிகளை எதிர்க்கும் வகையில் முடுக்கிவிட்டுள்ளது.
2009
நடுப்பகுதியில் அமெரிக்க வெளிவிகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன்
“தென்கிழக்கு
ஆசியாவிற்கு மீண்டும்”
என்ற
கொள்கையை அறிவித்தார். இது ஆக்கிரோஷமான முறையில் சீனச்
செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.
கிளின்டன் ஆசியானின்
Treaty of Amity and Cooperation
ல்
கையெழுத்திட்டு பிராந்திய அரங்கில் சேருவதற்கு முதல் படியாகப்
பயன்படுத்தியது. இது அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் முன்னாள்
புஷ் நிர்வாகத்தை
“இராஜதந்திர
முறையில் செயற்படாமை”
பெய்ஜிங் தென்கிழக்கு ஆசியாவில் வலுப்பெற அனுமதித்தது என்ற
குறைகூறலையடுத்து வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் கிளின்டன் ஹனோயில் நடந்த
ஆசியான் உச்சிமாநாட்டில் அமெரிக்கா தென் சீனக் கடலில்
“தடையற்ற
கப்பல் போக்குவரத்திற்குச் சுதந்திரம்”
என்பதைத் தக்கவைப்பதை
“தேசிய
நலன்களாக”
கருதுகிறது என்று அறிவித்த வகையில் தலையீட்டைப் பெருக்கியது.
அங்குத்தான் சீனா கடல்சார்ந்த நிலப்பகுதி மோதல்களை வியட்நாம்,
பிலிப்பைன்ஸ்,
மலேசியா,
ப்ரூனே
போன்ற நாடுகளுடன் கொண்டுள்ளது.
சீனாவின் எழுச்சியும் அதற்கு வாஷிங்டனின் விரோதப் போக்குடைய
முகங்கொள்ளலும்,
இவ்விதத்தில் தென்கிழக்கு ஆசியாவை ஏகாதிபத்திய சக்திகளுக்கு
இடையேயான மோதலின் களமாக ஆக்கி வருகிறது. இதில் பல அரசியல்
வெடிப்புத்தன்மை நிறைந்த குறிப்புக்கள்,
மோதல்,
பூசல்கள் ஆகியவற்றிற்கு வழி செய்யும் வகையில் உள்ளன. |