செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு முகங்கொடுக்க எகிப்திய அரசாங்கம்
பொலிசை தயார்படுத்தி நிலைநிறுத்துகிறது மற்றும் இணையத் தளங்களை
மூடுகிறது
By Johannes Stern and Stefan Steinberg
28 January 2011
Use this version to print | Send
feedback
ஜனவரி
25ம்
திகதி எகிப்தில் தொடங்கிய வெகுஜன எதிர்ப்புக்கள்,
அரசாங்கத்திடமிருந்து அச்சுறுத்தல் மற்றும்
எகிப்திய பொலிஸாரின் வன்முறையான அடக்குமுறையை மீறித்
தொடர்கின்றன.
வழக்கமான வெள்ளி மதியப் பிரார்த்தனைக்கு
பின்னர் இன்று ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
கெய்ரோ எதிர்ப்பாளர்களுக்கு நடுவே
கண்ணீர்ப்புகை வீச்சு மண்டலம்
மேலும் மூன்று இறப்புக்கள் செவ்வாயன்று ஏற்கனவே
நடந்த மரணங்களை தொடர்ந்து வெளிவந்துள்ளன. பொலிஸ் படையினர்
1,000
பேருக்கும் மேலானவர்களைக் கைதுசெய்துள்ளனர்
என்பதை உள்துறை அமைச்சரகம் உறுதிபடுத்தியது.
அரசாங்கம் மேலும் பெரும் வெகுஜன அடக்குமுறைக்கு
தயாரித்துவருகிறது என்பதற்கான அடையாளங்கள் உள்ளன.
தலைநகரான கெய்ரோவில் சிறப்புப் படைப்பிரிவுகள்
குவிக்கப்பட்டுள்ளன.
“பயங்கரவாத
எதிர்ப்புப் பிரிவினர்,
தெருக்களில் அபூர்வமாகக் காணப்படும் இவர்கள்,
மூலோபாய இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் இந்த வாரம் மிகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்த
மத்திய தகிர் சதுக்கமும் அடங்கும்”
என்று
Associated Press
தகவல் கொடுத்துள்ளது.
இணைய தளச் சேவைகள் மூடப்பட்டுவிட்டன. பேஸ்புக்,
ட்வீட்டர் மற்றும் ப்ளாக்பெரி ஆகியவற்றை
செயற்படுத்துவதும் நிறுத்தப்பட்டுவிட்டது,
இது எகிப்திற்குள்ளும்,
வெளியுலகத்தோடுமுள்ள தொடர்புகளை தடைக்கு
உட்படுத்தும் முயற்சி ஆகும்.
எதிர்க்கட்சி அமைப்புக்களும் பிரமுகர்களும்
மஹமத் எல்-பரடெய்,
முஸ்லிம் பிரதர்ஹுட் உட்பட,
காலம் தாமதித்து இந்த ஆர்ப்பாட்டங்களில்
வேலையின்மை,
வறுமை மற்றும் அரசாங்க அடக்கமுறை ஆகியவற்றிற்கு
எதிராக வந்துள்ள இந்த இயக்கத்தைக் கட்டுப்படுத்தித்
தகர்ப்பதற்காக பங்கு பெறுகின்றனர். செவ்வாயன்று பொலிஸ்
படையினர் பிரதர்ஹுட் தலைவர்களையும் ஆர்ப்பாட்டத்தில்
தொடர்புடைய மற்றவர்களையும் முன்கூட்டியே கைதுசெய்துவிட்டனர்.
1977ல்
எகிப்தில் நடைபெற்ற பெரும் ரொட்டிக் கலகங்களை ஒட்டிய வகையில்,
எகிப்திய உள்துறை அமைச்சரகம் அனைத்து
ஆர்ப்பாட்டங்களையும் தடைக்கு உட்படுத்தியுள்ளது.
அதிக ஆயுதங்கள் கொண்ட கலகம் அடக்கும் பிரிவினர்
உட்பட மாபெரும் பொலிஸ் குவிப்பு இருந்தாலும்கூட,
ஆர்ப்பாட்டங்கள் புதன்,
வியாழக்கிழமைகளில் தொடர்ந்தன.
பொலிசார் எதிர்ப்பாளர்களை கலைக்க தடியடிப்
பிரயோகம் செய்து,
கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்து தங்களை காத்துக்
கொண்டனர்.
புதன் பிற்பகல் தேசிய வக்கீல்கள்
சங்கத்திலிருந்து வக்கீல்கள் தங்கள் தலைமையகத்திலிருந்து
கெய்ரோ நகர மையத்திற்கு விரைந்து வந்து,
சுவர் போல் இருந்த கலகம் அடக்கும் பொலிஸ்
பிரிவைத் தாண்டி தெருக்களில் ஆர்ப்பரித்தனர்.
ஒரு ஆர்ப்பாட்டக்காரரை அடித்துக் கொண்டிருந்த
பொலிசார் மீது அவர்கள் கற்களையும் செங்கற்களையும் வீசினர்.
மோதல்கள் தீவிரமான நிலையில் மக்கள் தங்கள்
இல்லங்களிலிருந்து கீழிறங்கி
“முபாரக்
ஆட்சியைக் கைவிட வேண்டும்”
என்ற கோரிக்கையுடன் சேர்ந்து கொண்டனர்—இது
எகிப்திய ஜனாதிபதி பற்றிய குறிப்பு ஆகும்.
வக்கீல்கள் கட்டிடத்தின் படிக்கட்டுக்களில்,
நூற்றுக்கணக்கான கலகம் அடக்கும் பொலிஸ்
பிரிவினர் இன்னும் அதிக எதிர்ப்பாளர்கள் சேர்ந்து வந்த
ஆர்ப்பாட்டங்களை சுற்றி வளைத்து மூடினர்.
கிட்டத்தட்ட மாலை
4
மணிக்கு,
பொலிசார் தங்கள் தடிகளை உயர்த்தி கண்ணீர்ப்புகை
குண்டுகளையும் சுட்டபோது ஏற்பட்ட வெடிச்சத்தத்தில் மக்கள்
சிதறியோடினர்.
புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்புக்கள் பற்றிய தகவல்
கெய்ரோவிற்குக் கிழக்கே சூயஸ் நகரத்திலும் புதன் அன்று
நடைபெற்றது பற்றிய தகவல்கள் வந்துள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சவக்கிடங்கிற்கு வெளியே
கூடினர். செவ்வாய் எதிர்ப்பின்போது மடிந்த மூன்று பேரில்
ஒருவரின் சடலம் அங்கு அடக்கத்திற்கு எடுத்துச் செல்லுவதற்காக
வைக்கப்பட்டிருந்தது.
பொலிசார்
கண்ணீர்ப்புகைக் குண்டு,
ரப்பர்த் தோட்டாக்கள் ஆகியவற்றைப்
பயன்படுத்தியும் வானை நோக்கி உண்மையான தோட்டாக்களைச் சுட்டு
கூட்டத்தை சிதறடித்தனர்.
பின்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பொலிஸ்
நிலையத்தையும் ஆளும்
NDP
தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தையும்
தாக்கினர்.
குறைந்தது
55
பேராவது இம்மோதல்களில் காயமுற்றனர்.
வியாழனன்று கெய்ரோவிலும் மற்ற நகரங்களிலும்
மோதல்கள் இருந்தன.
பொலிசாருடன் துப்பாக்கிச் சண்டையிட்டதாக
சூயசிலிருந்து தகவல் வந்துள்ளது. பொலிசுக்கும் பெடௌன்
எதிர்ப்பாளர்களுக்கும் எகிப்தின் காசா எல்லைக்கு அருகேயுள்ள
ஷேக் ஜுவயித்தில் மோதல்கள் நடந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.
மேற்கு எகிப்தின் எல்லை நகரமான சல்லுமிற்கு
அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் லிபியாவிற்கும் எகிப்திக்கும்
இடையேயுள்ள முக்கிய சாலையைத் தடைக்கு உட்படுத்தினர்.
பொலிஸ் வாகனங்கள்
எதிர்ப்பாளர்கள் கடுமையாக அடக்கப்படுவர் என்பதை
ஹஸ்னி முபாரக்கின் அரசாங்கம் தெளிவாக்கியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அலுவலகத்தின் முழு ஆதரவு
தனக்குள்ளது என்பதை அது நன்கு அறியும்.
வியாழக்கிழமையன்று,
ஜனாதிபதி பராக் ஒபாமா மோதல் பற்றிய தன் முதல்
பகிரங்க அறிக்கையை வெளியிட்டார்.
அமெரிக்கப்
பணத்தை நிறையப்பெற்று ஆதரவைக் கொண்டுள்ள
நிலையில் எகிப்திய ஆட்சி மிருகத்தனமாக அமைதியான
எதிர்ப்பாளர்களை நசுக்கிக் கைது செய்து கொண்டிருக்கும்
நேரத்தில்,
அவர் அனைத்துத் தரப்பினரும் வன்முறையை நிறுத்த
வேண்டும் என்ற இழிந்த முறையீட்டை விடுத்தார்.
வியாழனன்றே வெள்ளை மாளிகையின் செய்தித்
தொடர்பாளர் ரோபர்ட் கிப்ஸ் முன்னதாக வெளியுறவுச் செயலர் ஹிலாரி
கிளின்டன் விடுத்த கருத்துக்களை எதிரொலித்து முபாரக் அரசாங்கம்
“உறுதியாக”
உள்ளது என்று கூறினார்—இது
அமெரிக்கா அதன் நீண்ட கால நண்பருக்குத் தொடர்ந்து ஆதரவு தரும்
என்பதின் தெளிவான அடையாளம் ஆகும்.
இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக
முக்கியமான அரபு நட்பு நாடு ஆகும். இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக
அதிக நிதியுதவியை அமெரிக்காவிலிருந்து பெறுகிறது.
அமெரிக்க அரசாங்கம்
1981ல்
முபாரக் பதவியேற்றதிலிருந்து ஆண்டு ஒன்றிற்கு
1.3
பில்லியன் டொலர் இராணுவ உதவி பெற்றுவருவதாக
மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய வகைகளில் நிதியுதவியாக
28
பில்லியன் டொலருக்கு மேல்
1975
முதல் பெற்றுள்ளது.
சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள்
எகிப்திய அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அனைத்து
முக்கிய கொள்கைகளிலும் அடிமைத்தனமான ஆதரவைக் கொடுக்கிறது
என்பதை தெளிவுபடுத்தியுள்ளன
--
இதில் பாலஸ்தீனியர்களை அடக்குதல்,
இஸ்ரேலுடனான ஒத்துழைப்பு,
ஈரானுக்கு எதிரான படையெடுப்பிற்கு தயாரிப்பு
ஆகியவை அடங்கும்.
கெய்ரோவில் பொலிஸ் பிரசன்னம்
எகிப்தும் துனிசியாவைப் பின் தொடர்ந்தால்
விளையக்கூடிய வியத்தகு உட்குறிப்புக்கள் இந்த வாரம்
பைனான்சியல் டைம்ஸில்
ஒரு முன்னாள் அமெரிக்க மத்திய கிழக்குத் தூதரும் இப்பொழுது
உட்ரோ வில்சன் மையத்திலுள்ள
Aaron David Miller
ஆல் தெளிவாக்கப்பட்டுள்ளது.
“ஒரு
ஓரத்திலுள்ள அரபு அரசான துனிசியாவில் நடப்பது ஒரு விஷயம்,
ஆனால் இப்பொழுது அப்பிராந்தியத்திலுள்ள
அமெரிக்கப் பாதுகாப்பிற்குத் தூணாக இருக்கும் இரண்டு அல்லது
மூன்று நாடுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள்,
அவைகள் அலையின் மோதல் விளைவுகளை
எதிர்கொள்கின்றன.”
முபாரக் அரசாங்கம் தற்போதைய எதிர்ப்புக்களை
மிருகத்தனமாக நசுக்குவதற்கு வாஷிங்டன் பச்சை விளக்கைக்
காட்டியுள்ளது. ஆனால் மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள் அடுத்து சில நாட்களில் எகிப்தின் முக்கிய
நகரங்களின் புறநகர்ப் பகுதிகளிலிருந்து மில்லியன்கணக்கான வறிய
தொழிலாளர்களும் இவற்றில் சேரக்கூடும் என்ற கவலை மேலைத்தேய
வட்டங்களில் உள்ளது.
முபாரக் ஆட்சியின் பொலிஸ் இராணுவத்
தந்திரோபாயங்கள் தோல்வியுற்றால்,
ஒரு இரண்டாவது முன்னணி,
எகிப்தில் முதலாளித்துவ ஆட்சியைத் தக்க
வைத்துக்கொள்ளுவதற்காகத் தயாரிக்கப்பட்டு வருகிறது.
எல்-பரெடெய்
மற்றும் முஸ்லிம் பிரதர்ஹூடினர் தாங்களும் இன்றைய எதிர்ப்பில்
கலந்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.
அவர்களின் நோக்கம்,
ஆரம்பத்தில் அவர்கள் எதிர்த்திருந்த இந்த
வெகுஜன ஆர்ப்பாட்டங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்
என்பதாகும்.
மாற்றத்திற்கான தேசியக் கூட்டமைப்பு என்பதை
நிறுவியுள்ள எல்-பரெடெய்
தன்னுடைய ஆஸ்திரிய இல்லத்திலிருந்து எகிப்திற்கு வியாழனன்று
திரும்பி வந்துள்ளார். அணிதிரள்வுகளில் பங்கு பெறுவதைத் தவிர
“வேறு
விருப்பத் தேர்வு”
இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
“நிகழ்வுகள்
அமைதியான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும்
என்பதை உறுதியாக்குவதற்காக”
தான் திரும்பி வந்துள்ளதாக அவர் நிருபர்களிடம்
கூறினார்.
“மாற்றீட்டுப்
பாராளுமன்றம்”
என அழைக்கப்படுவதில் ஒரு முக்கிய பங்கைப்
பெறுவதற்கு எல்-பரடெய்
முயல்கிறார். இதையொட்டி முக்கிய முதலாளித்துவத்தின்
எதிர்க்கட்சி இயக்கங்கள் அனைத்தும் எகிப்தில் ஒன்றாகக்
கொண்டுவரப்படுகின்றன.
இப்பாராளுமன்றத்தில் வெளிப்படையாகக்
கூறப்பட்டுள்ள நோக்கம்,
அதன் நிறுவன அறிவிப்பின்படி,
சுயாதீன வெகுஜன எதிர்ப்புக்களைத் தடுத்தல்
ஆகும். இக்குழுவின் ஆவணம்
“வெகுஜன
வெடிப்பு”
என்பது அரசாங்கம் சீர்திருத்தங்களை
செயல்படுத்தாவிட்டால் நிகழும் என்றும் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு
Al Masry Al Youm
என்னும் செய்தித்தாளுக்குக் கொடுத்த பேட்டி
ஒன்றில்,
எல் பரடெய் எகிப்தில் எதிர்கட்சிகள் எனக்
கருதப்படுபவை அனைத்தும் கூட்டணி காணத் தன் ஆதரவு உள்ளது
என்றார்.
“அடுத்த
கட்டத்தில் நாம் ஒற்றுமையான எதிர்க்கட்சியை வைத்திருப்போம் என
நம்புகிறேன்,
NAC,
அல் வைத் கட்சி,
முஸ்லிம் பிரதர்ஹுட்,
காபா
[ஜனநாயக
முன்னணிக் கட்சி]—அனைத்தும்
நமக்குத் தேவை.
அதேபோல் இளைஞர்களை தொழிற்சங்கங்களுடன் இணைக்க
வேண்டும் மற்றும் உயரடுக்கினரையும் இளைஞர்களுடன் சேர்க்க
வேண்டும்.”
எகிப்திற்குத் திரும்புவதற்கு முன்பு,
எகிப்தில் குறைந்த ஆதரவை மட்டும்,
ஆனால் மேலைத்தேய செய்தி ஊடகத்தில் பெரும்
பாராட்டிற்கு உட்பட்ட எல்-பரடைய்
முஸ்லிம் பிரதர்ஹுட்டுடன் இணைந்து செயலாற்றத் தன் விருப்பத்தை
மீண்டும் வலியுறுத்தினார்.
தானும் பிரதர்ஹுட்டும் ஒரே அரசியல்
நோக்கங்களின் பல கூறுபாடுகளைப் பகிர்ந்து கொள்வதாக எல்-பரடெய்
வலியுறுத்தினார்.
“அவர்கள்
மத உணர்வு நிறைந்த கன்சர்வேடிவ் குழுவினர்,
அதைப்பற்றி ஐயமில்லை,
ஆனால் அவர்கள் எகிப்திய மக்களில்
20
சதவிகிதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
எகிப்திய மக்களில்
20
சதவிகிதத்தை நீங்கள் எப்படி ஒதுக்க முடியும்?’
என்றார் அவர்.
தங்கள் பங்கிற்கு முஸ்லிம் பிரதர்ஹுட்டைச்
சேர்ந்தவர்கள் எல்-பரடெய்யுடன்
இணைந்து பணிபுரியத் தயார் என்பதைத் தெளிவாக்கியுள்ளனர்.
செவ்வாயன்று அமைப்பின் பதாகைகள் அல்லது
கோஷங்கள் இல்லாதது பற்றிக் குறிப்பட்ட காமல் நாசர்,
பிரதர்ஹுட்டின் செய்தி ஊடக ஆலோசகர்,
நிகழ்ந்த வன்முறைகளில் அமைப்பு தொடர்பு
கொண்டிருந்தது என்ற அரசாங்கக் கூற்றை மறுத்தார்.
“மக்கள்
எதிர்ப்புக்களில் தன்னார்வத்துடன் பங்கு பெற்றனர்,
யார் யாருடைய பக்கம் என்பதைக் கூற வழியில்லை”
என்றார் நாசர்.
பிரதர்ஹுட் எல்-பரடெய்யின்
நிழற்குழுவின் ஒரு பகுதிதான் என்றும் சேர்த்துக் கொண்டார்.
பிரதர்ஹுட்டின் மற்றொரு செய்தித் தொடர்பாளர்
எதிர்ப்புக்கள் பெருகி முபாரக் அரசாங்கத்திற்கு ஒரு உண்மையான
அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்ற அச்சங்களை வெளிப்படுத்தினார்.
“ஆர்ப்பாட்டக்காரர்களின்
கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் என நாங்கள் நம்புகிறோம்”
என்று எசம் அல்-எரியன்
அறிவித்தார்.
Al-Wafdத்தின்
தலைவரான அல் சயீட் அல் பாதவி புதன்கிழமையன்று ஒரு செய்தியாளர்
கூட்டத்தைக் கூட்டி
“எகிப்திய
மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட”
அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்று அழைப்பு
விடுத்தார்.
'ஒரு
தேசிய மீட்பு அரசாங்கம்'
என்னும் திட்டத்தை
Al-Wafd
முன்வைத்துள்ளது. அது மீண்டும் ஒழுங்கை நிறுவி
எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகள் தடைக்கு உட்படுத்தப்பட வேண்டும்”
என்றார்.
மக்களின் எந்தச் சுயாதீன இயக்கத்தையும்
மூச்சுத் திணற அடக்கும் முயற்சியின் மற்றொரு கூறுபாடு,
அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்
தொழிற்சங்க இயக்கம் ஆகும்.
எகிப்திய வணிகத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின்
(ETUF)
தலைவர் ஹுசைன் மொகவர் தொழிற்சங்கத் தலைவர்கள்
”இந்நேரத்தில்
அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் பங்கு பெறுவதைத் தடுக்க வேண்டும்”
என்று அழைப்பு விடுத்துள்ளார்.
புதன்கிழமையன்று,
ஆளும்
NDP
யின் செல்வாக்கிற்குள் அடங்கிய
ETUF,
எகிப்திய உள்துறை அமைச்சரகத்தை செவ்வாயன்று
தேசிய பொலிசுக்கான விடுமுறை தினத்தன்று பாராட்டி அறிக்கை
வெளியிடக்கூடிய அளவிற்குச் சென்றது.
அல் மஸ்ரி அல் யூம்
கருத்துப்படி மொகவர் அவருடைய அதிகாரிகளுக்கு எதிர்ப்புக்களில்
தொழிலாளர்கள் சேர முற்படும் முயற்சி நடவடிக்கைகள் பற்றி
24
மணிநேரமும் தகவல் கொடுக்குமாறு கூறி
உத்தரவிட்டார்.
எகிப்திய மக்களுக்கு ஒரு பொறி தயாராகிறது.
தொழிலாளர்களும் இளைஞர்களும் சமரசத்திற்கு
இடமில்லாத விரோதப் போக்கை எல்-பரடெய்,
முஸ்லிம் பிரதர்ஹுட் மற்றும் பிற முதலாளித்துவ
அமைப்புக்களின் காலம் கடந்த தலையீடுகள் வெள்ளி
ஆர்ப்பாட்டத்தில் ஏற்படுவதைத் தடுக்கும் நிலைப்பாட்டைக் கொள்ள
வேண்டும்.
இச்சக்திகள் உண்மையான சுயாதீன இயக்கத்தை
நெரிக்க முற்படுகின்றன. இதையொட்டி முதலாளித்துவத்தைப்
பாதுகாத்து நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆணைகளுக்குத்
தாழ்ந்து நடக்கச் செய்ய முற்படுகின்றன. அதுதான் இத்தகைய வறிய
நிலைக்குக் காரணம் ஆகும்.
இப்போரட்டத்தை முன்னேற்றுவிப்பதற்கு,
ஒரு புதிய புரட்சிகரத் தலைமை கட்டமைக்கப்பட
வேண்டும். அது எகிப்திய தொழிலாள வர்க்கத்துடன் பிராந்தியம்
முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட
வெகுஜனத்தையும் ஒருங்கிணைக்க,
ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கு
அடிப்படையின் கீழ் இருக்க வேண்டும்.
இதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவான உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோக்கு ஆகும் |