WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :ஆசியா
:
பாகிஸ்தான்
அமெரிக்க ட்ரோன் தாக்குதல்கள் பாக்கிஸ்தானில் சீற்றத்தைத்
தூண்டுகின்றன
By James Cogan
26 January 2011
Use this version to print | Send
feedback
ஞாயிறன்று பாக்கிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான்
பழங்குடிப் பகுதியிலுள்ள மிர் அலியிலும்,
நாட்டின் வட மேற்கு கைபர்-பக்டூன்க்வா
மாகாணத்தின் தலைநகர் பேஷாவரிலும் ஆயிரக்கணக்கான மக்கள்
அணிவகுத்து பாக்கிஸ்தானுக்குள் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது
அலையென அமெரிக்க பிரிடேட்டர் ஏவுகணைத் தாக்குதல்கள்
நடத்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நூற்றுக்கணக்கான பஷ்டுன் பழங்குடி மக்கள்
தன்னெழுச்சியாக மிர் அலி ஆர்ப்பாட்டத்தில் கூடினர்.
சில
மணி நேரம் முன்புதான்,
ஒரு
பிரிடேட்டர் நான்கு அமெரிக்க-எதிர்ப்புப்
போராளிகள் என்று கருதப்பட்டவர்களின் காரைப் பின்தொடர்ந்து அதை
Hellfire
ஏவுகணைகள் மூலம் அது டோகா மடக்கெல்லில் நிறுத்திவைக்கப்பட்டு
இருந்தபோது தீக்கிரையாக்கியது.
அதில்
இருந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்.
இரு பிற பிரிடேட்டர் தாக்குதல்களும் தொடர்ந்தன.
டோகா
மடக்கெல்லிற்கு அருககேயே ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டிச்
சென்றவர் மற்றும் இருவர் கொலையுண்டனர். பின் மற்றொரு ஏவுகணைத்
தாக்குதல் மிரன்ஷா என்னும் வடக்கு வஜீரிஸ்தான் மிகப் பெரிய
சிறு நகரத்திற்கு அருகே உள்ள வீடு ஒன்றில் நடந்தபோது
குறைந்தபட்சம் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
ஞாயிறன்று பேஷாவரில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் நாட்டிற்குள்
அமெரிக்கச் செயற்பாடுகள் பற்றி பாக்கிஸ்தானில் பெருகியுள்ள
சீற்றத்தை உயர்த்திக் காட்டின-இவை
ஜெனிவா ஷரத்தின் கீழ் பாக்கிஸ்தானிய இறைமையை பெரிதும்
அத்துமீறுபவை என்பதோடு சட்டத்திற்கு புறம்பான கொலைகளும்
மற்றும் சாதாரண குடிமக்களின் வீடுகள்,
வாகனங்களையும் குறிவைக்கின்றன.
இஸ்லாமிய ஜமான்-இ-இஸ்லாமி
(JI)
அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பேஷாவர் எதிர்ப்பு கிட்டத்தட்ட
10,000
முதல்
15,000
மக்களை
ஈர்த்தது.
அவர்கள் கைபர் பக்டூன்க்வா மாகாணப் பாரளுமன்றத்திற்கு முன் ஆறு
மணி நேரம் அணிவகுத்து நின்றனர்.
ஆங்கில
மொழியில் எழுதப்பட்ட கோஷ அட்டைகள்
CIA
எனப்படும் அமெரிக்க உளவுத்துறைப் அமைப்பின் பாக்கிஸ்தானியப்
பிரிவுத் தலைவர் ஜோனதன் பாங்க்ஸ் கைது செய்யப்பட வேண்டும்
என்று கோரின. இவரைப் பற்றிய மூடி மறைக்கப்பட்ட தகவல்கள் கடந்த
ஆண்டு வெளிப்பட்டு விட்டன.
பிரிடேட்டர்கள்
CIA
செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களால் தொலைதூரத்தில்
இருந்து,
பல
நேரமும் அமெரிக்காவில் இருந்தேகூட இயக்கப்படுகின்றன.
JI
தலைவர்கள்,
தாக்குதல்களை அமெரிக்கா நடத்துவதை பாக்கிஸ்தானிய அரசாங்கம்
தடுக்க வேண்டும் என்று வெகுஜன வனப்புரை அழைப்புக்களை
வெளியிட்டுள்ளனர்.
ஆனால்
தூதரகத் தகவல் ஆவணங்கள்,
கடந்த
ஆண்டு விக்கிலீக்ஸால் பகிரங்கமாக்கப்பட்டவை,
ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி மற்றும் பிரதம மந்திரி யூசுப் ராசா
கிலானி ஆகியோர் பிரிடேட்டர் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவைக்
கொடுக்கின்றனர் என அம்பலப்படுத்தியுள்ளன.
எப்பொழுதாவது அவர்கள் பகிரங்கமாக இதை எதிர்ப்பது என்பது
அமெரிக்கக் கொடூரங்கள் பற்றிய மக்களின் சீற்றத்தைத்
தணிப்பதைத்தான் முற்றிலும் நோக்கமாகக் கொண்டவை ஆகும்.
அமெரிக்க அதிகாரிகளிடம் ஒரு கூட்டத்தில் கிலானி கூறினார்:
“CIA
இதைச்
செய்வது பற்றி நான் பொருட்படுத்தவில்லை,
ஆனால்
சரியான மக்களை அவர்கள் தாக்க வேண்டும்.
நாங்கள் நாட்டின் சட்டமன்றத்தில் இது பற்றி எதிர்ப்புத்
தெரிவித்துப் பின்னர் அதைப் புறக்கணித்து விடுவோம்.”
ட்ரோன் தாக்குதல்கள் அலையெனத் தொடர்ந்த
பின்னரும்கூட,
ஜனாதிபதி ஜர்தாரியும் பாக்கிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான
ISI
ன்
தலைவரும்
CIA
இயக்குனர் லியோன் பனேட்டாவுடன் வாஷிங்டனில் ஜனவரி
14ம்
திகதி நடைபெற்றுவரும் அமெரிக்கச் செயற்பாடுகள் பற்றி
விவாதிக்கப் பேச்சுக்களை நடத்தினர்.
சமீபத்திய தாக்குதல்கள்,
ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றிற்கு விடையிறுக்கும் வகையில் கிலானி
அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் அது பாக்கிஸ்தானிய
அரசாங்கம் கொலைகளில் முழு உடந்தையாக இருந்துவருவதைத்தான்
அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஒபாமா
நிர்வாகம் பாக்கிஸ்தானுக்கு அதற்கென ட்ரோன்களைக் கொடுக்க
வேண்டும் என்று ஒபாமா நிர்வாகத்திற்கு அவர் அழைப்பு
விடுத்தார். இதையொட்டி படுகொலைகள் மற்றும் பயங்கரவாதச்
செயற்பாடுகளை இஸ்லாமாபாத்தே செய்யலாம் என்பது இதன் நோக்கம்
ஆகும்.
அமெரிக்கச் செயற்பாடுகள் அவருடைய அரசாங்கம் மற்றும்
இராணுவத்திற்கு எதிராக “வெறுப்புணர்வை”
தோற்றுவிப்பதாகவும் அவர் புகார் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மூன்று
தாக்குதல்கள்
2011ன்
முதல் வாரங்களில் நடந்த பிரிடேட்டர் தாக்குதல்களும் குறைந்தது
10
என
ஆக்கியுள்ளது. இது வடக்கு வஜீரிஸ்தான் இன்னும் அமெரிக்க
ஆக்கிரமிப்பிலுள்ள ஆப்கானிஸ்தானிய எல்லையிலுள்ள
பிற
பிரிவுகள் மீது சுமத்தப்படும் அமெரிக்க கொடூரங்களில் இடைவெளி
ஏதும் இல்லை என்பதைத்தான் தெளிவாக்குகிறது.
பிரிடேட்டர் செயற்பாடுகள் ஆப்கானிய எழுச்சியை
வலுவிழக்கச் செய்வதற்கு நடத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அங்கு
முக்கியமான இனமான பஷ்டூன் போராளிகள் வட மேற்கு
பாக்கிஸ்தானிலுள்ள பஷ்டூன் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளனர்.
ஆக்கிரமிப்பு-எதிப்பு
நடவடிக்கைகள் அப்பிராந்தியத்தைப் பாதுகாப்பான இடமாக
2001
அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஓய்வெடுக்கவும்
தளவாடங்களைப் பெறவும் கருதுகின்றன.
பாக்கிஸ்தானின் பழங்குடிப்பகுதிகளில் இருந்து
ஆயிரக்கணக்கானவர்கள் பல நேரம் எல்லை கடந்த ஆப்கானிய
போராளிகளுக்கு அவர்களுடைய அமெரிக்க,
நேட்டோ
துருப்புக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு உதவுகின்றனர்.
ஆனால் பிரிடேட்டர் தாக்குதல்களால்
கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிய போராளிகளோ
அல்லது பாக்கிஸ்தானிய பழங்குடிப் போராளிகளோ இல்லாமல்,
சாதாரண
குடிமக்களாக உள்ளனர்.
பாக்கிஸ்தானிய அரசாங்க ஆதாரங்கள்,
பிரிடேட்டர்கள் ஒரு போராளி கொல்லப்பட்டால் அத்துடன்
50
சாதாரண
குடிமக்களும் கொலை செய்யப்படுகின்றனர் என்று கூறியுள்ளது.
ட்ரோன்
செயற்பாடு
2008ல்
வியத்தகு முறையில் பெருகியுள்ளதில் இருந்து,
குறிப்பாக
2009ல்
அமெரிக்காவில் ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்றதிலிருந்து,
பாக்கிஸ்தானின் வடமேற்குப் பகுதியில்
2,000க்கும்
மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த
ஆண்டு கிட்டத்தட்ட
120
பிரிடேட்டர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
2,000க்கும்
மேற்பட்ட வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடியினர் வெள்ளியன்று
மிரன்ஷாவில் கடந்த வாரம் பிரிடேட்டர் தாக்குதல்களுக்கு
எதிர்ப்புத் தரும் வகையில் கூடினர்.
உள்ளூர் தலைவர்களும் மத குருமார்களும் அமெரிக்கா பொறுப்பற்ற
அச்சுறுத்தும் நடவடிக்கையை குடிமக்களுக்கு எதிராக நடத்துகிறது
என்ற குற்றத்தைச் சாட்டியுள்ளனர்.
அப்பகுதியிலுள்ள அச்சம் நிறைந்த சூழ்நிலை பற்றி அவர்கள் கூறி,
மக்கள்
மசூதிகளுக்குச் செல்லவும் அச்சப்படுகின்றனர் என்றும் சிறு
குழுக்களாகக் கூட கூடுவதற்கு,
கவனத்தை அது ஈர்த்துவிடும் என்பதால்,
பயப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாக்கிஸ்தானிய தாலிபன்-டெஹ்ரிக்-எ-தாலிபன்-சமீபத்திய
பிரிடேட்டர் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று
லாகூர் மற்றும் கராச்சி நகரங்களில் குண்டுத் தாக்குதல்களை
நடத்தியது.
இத்தகையை
ஷியைட்
மத நம்பிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் பிற்போக்குத்தன குறும்
பற்றுத் தாக்குதல்கள் பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு
அமெரிக்காவுடன் அதன் கொலைக்கார நடவடிக்கைகளின் உடந்தையாக
இருப்பதைத் தொடர்வதற்கு போலிக் காரணத்தைத்தான் அளிக்கின்றன.
லாகூரில் ஒரு இளவயதுச் சிறுவன் மத ஊர்வலத்தில்
நுழைபவர்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த ஒரு பொலிஸ்
சோதனைச் சாவடியை அணுகி தன் உடலுடன் பிணைக்கப்பட்டிருந்த பெரும்
வெடிப்பொருளை வெடிக்க வைத்தான்.
ஒன்பது
பேர் கொல்லப்பட்டனர்,
70க்கும்
மேலானோர் காயமுற்றனர்.
குறைந்தபட்சம்
20
பேர்
மருத்துவமனையில் “ஆபத்தான
காயங்கள்”
என்ற
பட்டியலில் உள்ளனர்.
90
நிமிஷங்களுக்கு பின்னர் கராச்சியில் ஒரு மனிதர் ஒரு பொலிஸ்
ரோந்துப் படைக்கு அருகே மோட்டார் சைக்கிளில் இணைக்கப்பட்ட
வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தார்.
இதில்
ஒரு பொலிஸ் அதிகாரியும் அருகே நின்றிருந்த குடிமகன் ஒருவரும்
கொல்லப்பட்டனர்,
பலர்
காயமுற்றனர்.
பாக்கிஸ்தானிய தாலிபனின் செய்தித் தொடர்பாளர்
ஒருவர் உள்ளூர் லாகூர் தொலைக்காட்சிக்கு விடுத்த அறிக்கை
ஒன்றில் தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றார்.
அவர்
கூறியதாவது:
“பழங்குடிப்
பகுதிகளில் நடைபெறும் ட்ரோன் தாக்குதல்கள்,
இராணுவ
நடவடிக்கைகளுக்கு இது ஒரு பதிலடியாகும்.”
பாக்கிஸ்தானிய நகரங்களில் வருங்காலத்திலும் குண்டு
வெடிப்புக்கள் வரும் என்ற எச்சரிக்கையைக் கொடுத்த அவர்,
“எங்களிடம்
3,000க்கும்
மேற்பட்ட பயிற்சி பெற்ற தற்கொலைப் படையினர் உள்ளனர்”
என்று
கூறினார்.
பாக்கிஸ்தானிய அரசாங்கம் வடக்கு
வஜீரிஸ்தானுக்குள் தாலிபன் போராளிகளை முற்றிலும் அழிப்பதற்கு
பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்று ஒபாமா
நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகிறது.
பாக்கிஸ்தானிய இராணுவம் இந்த வஜீரிஸ்தானின் கடினப் பகுதிகளில்
அதிக இறப்பு எண்ணிக்கையை அடையக்கூடும் என்ற கவலையில் ஜர்தாரி
இதை எதிர்த்து வந்துள்ளார். அதேபோல் அமெரிக்க ஆணையின் பேரில்
பாக்கிஸ்தானியக் குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் வெகுஜன
எதிர்ப்பு பெருகும் என்றும் கவலை கொண்டுள்ளார்.
கடந்த வார
நியூ
யோர்க் டைம்ஸ்
கருத்துப்படி,
தாக்குதலுக்கான அழுத்தம் சமீபத்திய மாதங்களில் சற்று
குறைந்துள்ளது,
ஏனெனில் பிரிடேட்டர் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
அமெரிக்க இராணுவம் நிலைமையின் “வெளிச்சப்
பகுதியைத்தான்”
காண
முற்படுகிறது.
நூற்றுக்கணக்கான தாலிபன் போராளிகள் வடக்கு வஜீரிஸ்தானில்
“முகாம்
கொண்டிருப்பதாகவும்”
பாக்கிஸ்தானிய அரசாங்கம் பொருள்படச் செயலாற்றாத நிலையில்
பழங்குடிப் பகுதியில் நகரும் எதுவுமே விரோத இலக்கைத்தான்
கொள்ளும் என்றும் கருதப்படுகிறது.
டைம்ஸிடம்
ஒரு
CIA
அதிகாரி கூறினார்:
“இந்த
வருடத்தில்
நடைபெறவுள்ள
பாக்கிஸ்தான்
தாக்குதலின்போது
வடக்கு
வஜீரிஸ்தான் பிராந்தியத்தில்
ஒன்றுதிரண்டிருக்கும்
போராளிகள்
மீ்து
வான்தாக்குதல்
நடாத்துவதாவது
கிளர்ச்சியாளர்களை
பலவீனப்படுத்திவிடும்''. |