WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The Palestine papers and the dead-end of nationalism
பாலஸ்தீன ஆவணங்களும்,
தேசியவாதத்தின் முட்டுச்சந்தும்
Bill Van Auken
26 January 2011
Back
to screen version
அல்-ஜசீராவால்
இந்த வாரம் வெளியிடப்பட்ட பாலஸ்தீன ஆவணங்கள்,
ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் ஒரு சுயாதீனமான பாலஸ்தீன அரசைக் கட்டியெழுப்பும்
தேசியவாத வேலைத்திட்டம்,
அவர்களின்மீது அடக்குமுறை நடத்த ஒரு புதிய கருவியாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பது
மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு மிகவும் வெளிப்படையாகிவிட்டதற்கு ஒரு
ஆவணப்படுத்தப்பட்ட உறுதிப்படுத்தலை வழங்குகின்றன.
இந்த ஆவணங்கள்
“அமைதி
பேச்சுவார்த்தைகள்”
அதாவது,
இரண்டு தசாப்த காலமாக பாலஸ்தீனர்கள் மீது மட்டுமில்லாது,
மாறாக
ஒட்டுமொத்த உலகின்மீதே வாஷிங்டனால் நடத்தப்பட்ட ஏமாற்று என்பதற்கான ஒரு ஒரு
சிறப்பான எடுத்துக்காட்டை வழங்குகின்றன.
1988இல்
பாலஸ்தீன விடுதலை இயக்க
(PLO)
தலைவர் யாசர் அராபத்
இஸ்ரேலை அங்கீகரிக்கவும்,
அதன் பாதுகாப்பிற்கு
உத்தரவாதமளிக்கவும்,
மற்றும் நீண்டகாலமாக
PLO அடையாளம்
காணப்பட்டு வந்த ஆயுதமேந்திய போராட்டத்தைக் கைவிடவும் உடன்பட்டபோது,
அமெரிக்காவின்
தரகுவேலையுடன் அப்போது தான் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன.
அந்த
“நிகழ்முறை”
1993 ஒஸ்லோ
ஒப்பந்தங்களுடன் (Oslo
Accords)
மேலும் அமைப்புமுறைக்குள் கொண்டு வரப்பட்டது.
அந்த ஒப்பந்தங்கள்,
பாலஸ்தீன-இஸ்ரேல்
பிரச்சினைக்கு “இரண்டு-அரசு
தீர்வை” (two-state
solution)
அமைத்துக் கொடுத்ததுடன்,
பாலஸ்தீன
அதிகாரத்திற்கும்
(Palestine Authority - PA)
அஸ்திவாரமிட்டது.
வெள்ளை மாளிகையின்
புல்வெளியில் “உடைகலைத்து
ஆட”
தமக்கு
உத்தரவிடப்பட்டிருந்ததாக அராபத் எதிர்த்த அதே ஆண்டு,
இஸ்ரேல் பிரதம
மந்திரி யெட்ஜாக் ராபினுடன் அவர் வெட்கமில்லாமல் கை-குலுக்கியதையும்
கண்டது.
ஆரம்பத்திலிருந்தே அமெரிக்க ஏகாதிபத்தியம்,
இஸ்ரேலின்
ஆக்கிரமிப்பின் கீழ் நசுக்கப்பட்ட அல்லது லெபனான்,
ஜோர்டானின் அகதிகள்
முகாமில் ஏழ்மையிலும்,
நாடிழந்த
நிலைமையிலும் கைவிடப்பட்ட மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள் எதிர்கொண்டிருந்த
நிலைமைகளை மேம்படுத்த சிறிதும் பொறுப்பேற்காமல் இந்த பேச்சுவார்த்தைகளைத்
தொடர்ந்தது.
அதைவிட,
அதற்குப்பின்
பதவிக்கு வந்த குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி நிர்வாகங்களின் நோக்கம்
மத்தியகிழக்கில் அமெரிக்காவின் தலையீடை வசதிப்படுத்துவதிலும்,
பாலஸ்தீன மக்களின்
போராட்டங்களை ஒடுக்குவதற்கு பாலஸ்தீன தலைமையின் ஒரு பிரிவை ஒரு கருவியாக
செதுக்குவதிலுமே இருந்தது.
வெளியான புதிய ஆவணங்கள் உறுதிப்படுத்துவதைப் போல,
வாஷிங்டன் அதன் கூட்டாளி இஸ்ரேலினால் நடத்தப்பட்ட ஒவ்வொரு குற்றத்தையும் ஆதரித்தும்,
பாலஸ்தீனதரப்பு பேச்சுவார்த்தையாளர்களை வெளிப்படையாகவே அவமதித்தும்,
சிறிதும் இரக்கமில்லாமலும்,
வன்முறையோடும் அதன்
"அமைதி
பேச்சுவார்த்தை"
மூலோபாயத்தைத் தொடர்ந்தது.
பாலஸ்தீன அதிகார ஜனாதிபதி மஹ்மொத் அப்பாஸிற்கு கீழ்ப்படிந்திருந்த
பாலஸ்தீனதரப்பு பேச்சுவார்த்தையாளர்களும்,
அவர்கள் பங்கிற்கு,
பாலஸ்தீன போராட்டம் ஒருசமயம்
"சிவப்பு
கோடுகள்"
என்று
அழைத்த அனைத்து பிரச்சினைகளிலும் முற்றிலுமாக சமரசப்பட தயாராக இருந்தனர்.
தோற்றப்பாட்டளவில் மொத்த கிழக்கு ஜெருசலேமையும் சியோனிச
குடியிருப்புகளுக்கு விட்டுக்கொடுத்ததும்,
வெறும்
10,000
நபர்களை
மட்டும் திரும்ப உள்ளே ஏற்றுக்கொள்ள உடன்பட்டு ஐந்து மில்லியன் பாலஸ்தீனியர்கள்
திரும்புவதற்கான உரிமையைப் பெறாமல் கைவிட்டதும்,
ஒரு
"யூத
நாடு"
என்பதற்கு உத்தரவாதமளிக்க பத்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய அரேபியர்களை வெளியேற்றும்
இனச்சுத்திகரிப்புக்கு உதவ உடன்பட்டதும் இதில் உள்ளடங்கும்.
ஆளும் பத்தாஹ் கன்னையின் தரப்பில் சேர்ந்திருந்த அல் அக்சா
தியாகிகளின் இராணுவப்படையின் உறுப்பினர்களையும் சேர்த்து,
தனிப்பட்ட பாலஸ்தீன எதிர்ப்பு போராளிகளையும் படுகொலை செய்ய,
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகார அதிகாரிகளுக்கு இடையில் நடந்த விவாதங்களின்
குறிப்புகளும் இந்த ஆவணங்களில் உள்ளன.
பாலஸ்தீனதரப்பு தலைமை பேச்சுவார்த்தையாளர் சயீப் எரிகத்,
செப்டம்பர்
2009இல் ஒபாமாவின்
மத்தியகிழக்கு துணை தூதர் டேவிட் ஹேல் உடனான ஒரு சந்திப்பில் அந்த கூட்டுறவை
இன்னும் வலுப்படுத்தினார்.
"ஒரு அதிகாரத்தை,
ஒரே துப்பாக்கியை,
ஒரே சட்டத்தின்
விதிகளை ஸ்தாபிக்க பாலஸ்தீனியர்களை நாம் கொன்றாக வேண்டும்,"
என்றார் எரிகத்.
"நாங்கள் எங்களுடைய
கடமையைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.
சட்டவிதிகளையும்,
சட்ட ஒழுங்கையும்
காப்பாற்றுவதற்காக நாங்கள் எங்களின் சொந்த மக்களைக் கொல்ல,
முயற்சியையும்
நேரத்தையும் செலவிட்டுள்ளோம்,"
என்றார்.
காசா
பகுதியில் ஒட்டுமொத்த தண்டனையை முகங்கொடுத்து வந்த மில்லியன்கணக்கான
பாலஸ்தீனியர்களின் விடுதலையை விட,
பத்தாஹ் தலைமை அதன்
ஹமாஸ் எதிரிகளை நசுக்குவதில் மிகவும் அக்கறை கொண்டிருந்தது என்பதையும் ஆவணங்கள்
எடுத்துக்காட்டுகின்றன.
1,400க்கும்
மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்த
2008-2009
காசாவில் நடத்தப்பட்ட
இஸ்ரேலிய தாக்குதலில் உடந்தையாக இருந்ததையும்,
அதுகுறித்து
பாலஸ்தீன அதிகாரத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததையும் அவை
குறிப்பிடுகின்றன.
அதனுடன் சேர்ந்து,
ஒன்றரை மில்லியன்
பாலஸ்தீனியர்களை பசியிலும்,
துயரத்திலும்
ஆழ்த்திய காசா பகுதியில் இஸ்ரேலியர்கள் அவர்களின் பிடியை இறுக்க வேண்டுமென்று
பாலஸ்தீன அதிகார பேச்சுவார்த்தையாளர்கள் கேட்டிருந்த பல விவாதங்களையும் அந்த
குறிப்புகள் விவரிக்கின்றன.
பிராந்திய
கட்டுப்பாடு மற்றும்
“ஜனநாயகத்தைக்”
கொண்டு வருதல் என்ற
போர்வையின்கீழ்,
அமெரிக்காவும்
இஸ்ரேலும் மேற்கு கரையில் பாலஸ்தீனியர்கள்மீது ஒரு பொலிஸ் அரசைத் திணித்துள்ளனர்.
இஸ்ரேலிய
ஆக்கிரமிப்பிற்கு துணைநிற்கும் அந்த பொலிஸ் அரசு,
CIA உதவித்தொகைகள்
மற்றும்
USAID
தொடர்புகளால்
தங்களைத்தாங்களே கொழுக்க வைத்திருக்கும் சில விரல்விட்டு எண்ணக்கூடிய
கோடீஸ்வரர்களான,
வேறு
யாரையும் அல்லாமல் அதே பாலஸ்தீன அதிகாரத்தின் அதிகாரிகளையுமே கொண்டுள்ளது.
பாலஸ்தீன அதிகாரத்தில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமான விகிதமான
எண்பது பேருக்கு ஒருவர் என்பது உலகிலேயே மிக உயர்ந்த அளவினதாக உள்ளது.
அதேவேளையில் சிறைக்கூடங்களின் கட்டுமானம் பள்ளிகளை விஞ்சி உயர்ந்துவருகிறது.
இந்த
சிறைக்கூடங்களின் உள்ளே சித்திரவதையும் பரவியுள்ளது.
2009இல்
பதவிகாலம் முடிந்துவிட்ட நிலையில் எந்த தேர்தல்களுக்கும் அழைப்புவிடுக்காத அப்பாஸ்,
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அமைப்புகளையும்,
விதிகளையும் தம்முடைய அதிகாரத்தால் இல்லாதொழித்தார்.
பாலஸ்தீன ஆவணங்கள் வெளிப்படுத்துவதைப் போல,
இந்த
ஓர் ஏற்பாடு வாஷிங்டனால் கோரப்பட்டதாகும்.
வெளிவிவகாரத்துறை செயலர் ஹில்லாரி கிளிண்டன்,
பாலஸ்தீன அதிகாரத்தின் தலைமையில் ஏதேனும் மாற்றம் இருந்தால்,
அவ்வாறு நிகழாமல் தடுக்க அச்சுறுத்தியதும் பதிவாகியுள்ளது.
சந்தேகமேயில்லை,
காசா
பகுதிகளை ஆட்சி செய்துவரும் இஸ்லாமிய ஹமாஸ் இயக்கத்தினுள் உள்ள பத்தாஹின்
எதிரிகளுக்கு இந்த பாலஸ்தீன ஆவணங்கள் உடனடி ஆதாயங்களில் ஒன்றாக இருக்கும்.
செவ்வாயன்று ஒரு ஹமாஸ் செய்திதொடர்பாளர் கூறுகையில்,
“பாலஸ்தீன
அதிகாரத்தை உருவாக்கிய பத்தாஹின் ஆட்கள் வேறெதையும் அல்ல,
மாறாக
பாலஸ்தீன மக்களின் நலன்களைக் காட்டிக்கொடுப்பதையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்”
என்பதை அந்த ஆவணங்கள் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.
ஹமாஸின் எழுச்சியானது,
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தேசியவாத திட்ட கருச்சிதைவிலிருந்து பெற்ற பரந்த
ஏமாற்றத்தின் ஒரு நிகழ்முறையாக இருக்கின்ற போதினும்,
அந்த
இஸ்லாமிய இயக்கம் எந்த நிலையான மாற்றீட்டையும் அளிக்கவில்லை.
அது
மத அடிப்படைவாதம் நிறைந்த தேசியவாதத்தின் மற்றொரு மாற்றுவடிவத்தைத் தான்
பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதுடன்,
பெருந்திரளான பாலஸ்தீன தொழிலாளர்களின் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் சமூக நலன்களை
அல்லாமல்,
அதற்கு மாறாக இஸ்ரேல் மற்றும் வாஷிங்டனுடன் அதன் சொந்த பேரத்தை பேச தயாராகவுள்ள ஒரு
தேவைமிகுந்த முதலாளித்துவ அடுக்கின் சமூக நலன்களைப் பிரதிபலிக்கிறது.
1988இல்
தொடங்கிய இந்த நீண்ட,
துன்பியலான பாதை உலக நிலைமைகளின் ஆழமான மாற்றங்களால் தயாரிக்கப்பட்டிருந்தது.
அது
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முதலாளித்துவ தேசியவாத வேலைத்திட்டத்தின்
அடிப்படையில்,
பாலஸ்தீன மக்களின் ஜனநாயக மற்றும் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வது சாத்தியமில்லை
என்பதை வெளிப்படுத்திக்காட்டியுள்ளது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் வீரம்மிக்க எதிர்ப்புகள் ஒரு
பெருந்திரளான மக்கள் அடித்தளத்தையும்,
உலகளாவிய அளவில் மதிப்பையும் அதற்கு அளித்திருந்தது என்ற போதினும்,
ஆரம்பத்திலிருந்தே அது அதன் பிழைப்பிற்கு,
வேறுவேறு அரேபிய ஆட்சிகளுக்கு இடையிலான உபாயங்கள் மீதும்,
மற்றும் வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவின் அதிகாரத்துவத்திற்கு இடையிலான முரண்பாட்டைப்
பயன்படுத்திக் கொள்வதன் அடிப்படையிலும் அமைத்திருந்தது.
இந்த
தனக்குசாதகமான பேயுடன் பேரம்பேசுதலின் பேரத்தின் பகுதியாக,
அரேபிய அரசுகளுக்குள் இருந்த வர்க்க போராட்டம் தொடர்பாக,
அது
ஒரு தெளிவான நடுநிலைமையைக் கொண்டிருந்தது.
1980களின்
இறுதிவாக்கில்,
இந்த
பேரத்தின் விலை தெளிவாக வெளிப்பட்டது,
அப்போது உற்பத்தியில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு எழுந்த உலகளாவிய
ஒருங்கிணைப்பை அடிப்படையாக கொண்டு,
உலக
முதலாளித்துவத்தில் ஏற்பட்ட ஆழமான மாற்றங்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் எதைச்
சார்ந்திருந்ததோ அந்த முக்கிய சக்திகளுக்கு குழிபறித்தது.
தேசியவாத அரேபிய ஆட்சிகள் ஏகாதிபத்தியத்துடன் சாத்தியப்பட்ட வகையில் இன்னும்
நெருக்கமாக நெருங்கி செல்ல திரும்பியதானது,
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீளமைப்பு கொள்கை மற்றும் சோவியத்
ஒன்றியத்தின் சிதைவோடு பிணைந்திருந்தது.
பாலஸ்தீன பிராந்தியங்களுக்குள்ளே,
இந்த
நிகழ்போக்கு முதலில் இன்டிபாடாவை
(intifada-
பாலஸ்தீன அரேபியர்களின் எழுச்சி)
கொண்டுவந்தது.
இந்த
தன்னிச்சையான கிளர்ச்சி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் சுயாதீனமாக
எழுந்ததுடன் முடிவாக அது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைக்கு எதிராக
திரும்பியது.
அந்த
போராட்டம்,
ஒரு
சுதந்திரமான முதலாளித்துவ அரசை உருவாக்கும் அதன் திட்டத்தின் அஸ்திவாரத்தையே
அச்சுறுத்தியதாக பாலஸ்தீன விடுதலை இயக்க தலைமை அஞ்சியது.
இறுதியில்,
யாசர்
அராபத்தின் எலும்புகளின்மீது தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம் திடமாக வலதை நோக்கி
நகர்ந்தது.
அவர்
தான் ரமல்லாஹில் அவருடைய சுற்றெல்லைக்குள் தன்னை சிறைப்படுத்திவைத்து,
2004
நவம்பரில் விளங்கப்படுத்தப்படாத சூழ்நிலைகளில் மரணமானார்.
அவரிடத்தை அப்பாஸ் வந்து நிரப்பினார்.
பாலஸ்தீன ஆவணங்களின் வெளியீடும்,
பாலஸ்தீன அதிகாரத்திற்கு திறந்துவிடப்பட்டிருக்கும் ஆழமான நெருக்கடியும் வெறுமனே
தற்செயலாக பொருந்தி வந்தவை அல்ல,
மாறாக
அது முன்நிகழ்ந்திராத துனிசிய தொழிலாளர்களின் எழுச்சியுடனும்,
அல்ஜீரியா,
எகிப்திலும் மற்றும் அரேபிய உலகின் வேறுநாடுகளிலும் பரவியுள்ள மக்களின்
பேரெழுச்சிகளோடும் பொருந்தி நிற்கிறது.
கடந்த வாரம் துனிசிய மக்களின் புரட்சிகர போராட்டத்துடன்
ஐக்கியப்படவிருந்த ஓர் ஆர்பாட்டத்தை உடைக்க பாலஸ்தீன அதிகாரம் ரமல்லாஹின்
தெருக்களில் அதன் இரகசிய பொலிஸை நிறுத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் தெருக்களிலிருந்து விரட்டப்பட்டனர்;
துனிசிய கொடியைத் துணிச்சலாக வீசிக் காட்டிய ஒரு பாலஸ்தீனிய இளைஞர் அடித்து
நொருக்கப்பட்டு,
அவர்
கரங்களில் இருந்து அது பறித்து கிழிக்கப்பட்டது.
அப்பாஸூம்,
அவர்
கூட்டமும் துனிசிய அரசாங்கத்திற்கு எதிராக மேலெழுந்துவரும் தீவிர சமூக
முரண்பாடுகளைக் கண்டு அஞ்சுவதுடன்,
மத்தியக்கிழக்கில்
அமெரிக்க கொள்கையின் தூண்களாக இருந்தவர்கள் தூளாகிப்போவதும் அவற்றின் சொந்த பொலிஸ்
அரசு ஆட்சிக்கு எதிராக அடிமட்டத்திலிருந்து ஒரு போராட்டத்தை உருவாக்கும்.
பாலஸ்தீனத்திலும்,
மத்தியகிழக்கு முழுவதிலும் நடக்கும் நிகழ்வுகள்,
லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்தை துல்லியமாக உறுதிப்படுத்தியுள்ளன.
ஓர்
ஆரம்பக்கட்ட வரலாற்று காலகட்டத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகளில்,
ஜனநாயக மற்றும் தேசிய கடமைகள்,
ஏகாதிபத்திய சகாப்தத்தில்,
முதலாளித்துவ எழுச்சியுடன்,
ஒரு
சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக
புரட்சிகரரீதியில் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே எட்டப்பட முடியும்.
பாலஸ்தீன மக்களின் விடுதலை ஓர் ஏகாதிபத்திய தரகுவேலை மூலமாக
“இரு-அரசு
தீர்வுடன்”
ஒருபோதும் எட்டப்பட முடியாது.
தசாப்தங்களாக இருந்துவரும் அடக்குமுறையையும்,
வறுமையையும்,
வன்முறையையும் முடிவுக்குக் கொண்டு வருவது தொழிலாள வர்க்கத்தின் கடமையாக உள்ளது.
இது
இஸ்ரேலிலும் அரேபியாவிலும் ஏகாதிபத்திய மற்றும் உள்ளூர் முகவர்களுக்கு எதிரான ஒரு
பொதுப்போராட்டத்தில் தேசிய மற்றும் மத எல்லைகளைக் கடந்து ஐக்கியப்பட வேண்டும்.
இது தான் துனிசியா,
எகிப்து மற்றும் அரேபிய உலகம் முழுவதிலும் உள்ள சோசலிசப் புரட்சியின் முன்னோக்காக
உள்ளதுடன்,
இது
இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கும்,
அதன்
அமெரிக்க ஆதரவாளர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது.
உலக
முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத நெருக்கடியால் எண்ணெய் வார்க்கப்பட்டிருக்கும்
அந்த பிராந்தியம் முழுவதும் எழுந்துவரும் சமூகப் போராட்டங்கள்,
உலகம்
முழுவதிலும் உள்ள முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டத்தின் ஒரு
பாகமாக,
மத்திய கிழக்கு சோசலிச கூட்டமைப்பிற்கான
(Socialist Federation of the Middle East)
போராட்டத்தில் யூத மற்றும் அரேபிய தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுவது தான் அவசியமான
தேவையாக முன்நிற்கிறது. |