WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
துனிசிய மக்கள் எழுச்சி பிரான்ஸின் மத்தியதர வர்க்க
“இடதை”
அம்பலப்படுத்துகிறது
By Alex Lantier
25 January 2011
Use this version to print | Send
feedback
துனிசிய ஜனாதிபதி ஜேன் எல் அபிடைன் பென் அலியை
அகற்றிய வெகுஜன எதிர்ப்புக்கள்,
துனிசியாவின் முன்னாள் காலனித்துவ சக்தியாக
இருந்த பிரான்சில்
“தீவிர
இடது”
என்று அழைக்கப்படுபவைகளின் போலித்தனத்திற்கு
ஒரு அடியைக் கொடுத்துள்ளன.
ஒலிவியே பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ
எதிர்ப்புக் கட்சி (NPA)
போன்ற சக்திகள் துனிசிய ஆட்சியுடன் தங்கள் தொடர்புகளை
மூடிமறைக்கப் பரபரப்புடன் செயல்படுகின்றன.
அவற்றின் முக்கிய அரசியல் கட்சியான பிரான்சின்
சோசலிஸ்ட் கட்சி,
(PS)
பென் அலியின் அரசியலமைப்பு ஜனநாயக அணியுடன்
(RCD)
சமூக ஜனநாய சோசலிஸ்ட் இன்டர்நேஷனலில் (Social
Democratic Socialist International)
இணைந்திருந்தது.
உள்நாட்டில் தொழிலாளர் எதிர்ப்பு என்ற அதன்
நிலைப்பாட்டையொட்டி,
பென் அலியையும் அவருடைய பொலிசாரால் நடத்தப்பட்ட
அரசாங்கமும் வேலைகளைக் குறைத்தல்,
சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் ஆகியவற்றை
சர்வதேச நாணய நிதியத்தின்
(IMF)
ஆணைகளுக்கு ஏற்ப குறைத்ததற்கு
PS
ஆதரவையும் கொடுத்திருந்தது.
உயர்மட்ட சோசலிஸ்ட் பிரமுகர்கள் அத்தகைய
கொள்கைகளை விரிவாக்குவதில் முக்கியப் பங்கைக் கொண்டிருந்தனர்.
ஏனெனில்
IMF
ஆனது,
PS
ன் டொமினிக் ஸ்ட்ராஸ் கானினால்
வழிநடத்தப்படுகிறது.
PS
ன்
2012
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் என்பதை அடைய
உயர்மட்ட போட்டியாளரான ஸ்ட்ராஸ் கான்
IMF
ன் ஐரோப்பிய கடன் நெருக்கடிக் காலத்தில்,
சமூகநலக் குறைப்புக்களுக்கான உந்துதலுக்கு
தலைமை தாங்கியுள்ளார்
—குறிப்பாக
கிரேக்கம்,
அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில்.
அவருடைய கடந்த கால மற்றும் தற்போதைய நிதியப்
பிரபுத்துவத்திற்கான பணிகளுக்கு வெகுமதி கொடுக்கும் வகையில்
2008ல்
ஸ்ட்ராஸ் கானுக்கு துனிசியக் குடியரசின் பேரதிகாரி என்னும்
விருதை
(Grand Officer of the Order of the Tunisian Republic)
பென் அலி வழங்கியிருந்தார்.
இவற்றில் எதுவுமே
NPA
ஐ
PS
க்கு ஆதரவு கொடுப்பதை ஊக்கமில்லாமல்
செய்துவிடவில்லை.
பென் அலி ஜனவரி
14ம்
தேதி துனிசிலிருந்து ஓடியபின்,
ஒரு வெற்றுத்தன
PS
அறிக்கை ஒன்றில்,
PS
ஆல் கையெழுத்திடப்பட்டதில்,
பென் அலியின் ஆட்சி ஒரு
“உண்மையான
ஜனநாயக மாற்றத்தைச்”
செயல்படுத்த வேண்டும் என்று விடுத்த
அறிக்கையில் அதுவும் இணைந்து கையெழுத்திட்டது.
ஆனால்,
PS
மற்றும்
NPA
எதிர்பார்த்த
“ஜனநாயக
மாற்றத்திற்கு”
எதிரான மக்கள் எதிர்ப்புக்கள் தொடர்ந்தன—இதில்
பென் அலியின் உதவியாளர்கள் மஹம்மத் கன்னொச்சி அல்லது பௌவத்
மெபஜா போன்றோர் தொடர்ந்து ஆள முற்பட்டுள்ளனர்,
உத்தியோகபூர்வ
“எதிர்த்தரப்பு”
அரசியல்வாதிகள்,
தொழிற்சங்க தலைவர்கள் சிறுபதவிகளை வகிக்க
அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன் பின் பிரெஞ்சு
“இடது”
ஸ்தாபனம் முன்னாள் சர்வாதிகாரியின் அரசாங்க
இயந்திரத்துடன் தங்கள் பிணைப்புக்களை மூடி மறைக்க முற்பட்டன.
ஜனவரி
18ம்
திகதி பென் அலி துனிசிலிருந்து ஓடி நான்கு நாட்களுக்குப்
பின்னர்,
RCD
இரண்டாம் அகிலத்தில் இருந்து வெளியேற்றப்பட
வேண்டும் என்று
PS
கோரியது.
NPA
யும் தன் நிலைப்பாட்டை முற்றிலும் தலைகீழாக
மாற்றிக் கொண்டு,
சில நாட்கள் முன்புதான் அது
“ஜனநாயக
மாற்றத்திற்கு”
தலைமை தாங்குமாறு கோரிய அதே சக்திகளைக்
கண்டித்தது.
நடந்து முடிந்துவிட்டதாக இது கருதிய
“ஜனநாயகப்
புரட்சியை”
பாராட்டிய
NPA
எழுதியது:
“துனிசிய
மக்கள் புரட்சியை திருட அனுமதித்துவிடக்கூடாது.”
துனிசிய நீதித்துறையானது பென் அலி ஆட்சிக்கு
எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை இது
முன்வைத்தது.
“பென்
அலி-ட்ரபெல்சி
சேர்ந்த உறுப்பினர்கள் அவர்களுடைய அடாவடித்தனத்திற்காக
விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்,
அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட
வேண்டும்,
சர்வாதிகாரிக்கு விசுவாசமாக இருந்த பொலிஸ் படை
கலைக்கப்பட வேண்டும்.
படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள்
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.”
ஆனால்
NPA
யே குறிப்பிட்டபடி இது வெறும் பகற்கனவுதான்.
பிரதம மந்திரி கன்னொச்சியின் அடையாளம்—ஒரு
பென் அலி ஆட்சி அதிகாரி,
பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார்--
“இந்த
நடவடிக்கைகள் எடுக்கப்பதடுவதற்கான அறிகுறிகளை இது காட்டவில்லை.”
இதை ஒப்புக் கொண்டபின்,
NPA
ஒப்பிற்கு எழுதியது:
“நல்ல
கண்காணிப்பும்,
மக்கள் அணிதிரள்வும் நிற்பதும் கண்டிப்பாகத்
தொடர வேண்டும்.”
தன் வாசகர்களை ஏமாற்றத்தான்
NPA
முற்படுகிறது,
நீதியைப் பெறுவதற்கு,
நீதிமன்றங்களின் நேர்மையை வெல்வதற்கு மற்றும்
துனிசிய அரசாங்கத்தை செல்வாக்கிற்கு உட்படுத்துவதற்கு சில உரிய
நேரத்தில் நடத்தப்படும் பென் அலி எதிர்ப்புக்கள் போதும் என்று
பாசாங்கு செய்கிறது.
பென் அலியின் பழைய எடுபிடிகள் கலகம் அடக்கும்
பொலிஸ் பிரிவைத் திரட்டி வெகுஜன எதிர்ப்புக்கள் நசுக்குவதைத்
தொடர்கின்றனர். அதே நேரத்தில் சர்வாதிகாரியும் அவருடைய
நெருக்கமான ட்ரபெல்சிஸ் உறவினர்களும் சௌதி அரேபியாவில் மறைந்து
வாழ்கின்றனர்—1.5
டன் எடைத் தங்கம் என்று சில செய்தி ஊடங்கங்கள்
கூறுகின்றன. அதைத்தவிர மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பிற
பொருட்களும் உள்ளன.
இக்கூறுகளுக்கு இன்னமும் அமெரிக்க,
ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்வாதிகளின் ஆதரவு
தொடர்கிறது. மத்திய கிழக்கில் மேலைச் சார்புடைய
சர்வாதிகாரங்களுக்கு எதிரான எதிர்ப்புக்கள் வெடித்தெழும் என்று
அவை அஞ்சுகின்றன.
மெஹ்பாசா மற்றும் கன்னொச்சியுடன் போராடி,
முழு துனிசிய அரசியல் மற்றும் பொருளாதார
அமைப்பை வேரோடு அகற்றுவதற்கு,
தொழிலாள வர்க்கம் பென் அலி சர்வாதிகாரத்தின்
அரச இயந்திரத்தையும் அதேபோல் அதற்கு ஆதரவு கொடுக்கும் ஐரோப்பிய
மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியச் சக்திகளை வீழ்த்துவதற்கும் ஒரு
புரட்சிகரப் போராட்டத்தை நடத்த வேண்டும். சமூக நல வெட்டுக்களை
எதிர்க்கும்,
மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய போர்களையும்
எதிர்க்கும் இப்போராட்டத்தின் முக்கிய கூட்டுச் சக்தியாக உலகத்
தொழிலாளர் வர்க்கம் தான் இருக்கிறது.
துனிசியாவில் வெகுஜன எழுச்சியும் நிரந்தரப்
புரட்சியின் முன்னோக்கும் என்ற ஒரு சமீபத்தியக் கட்டுரையில்
உலக சோசலிச வலைத் தளம் எழுதியது:
“துனிசியாவிற்கும்
மக்ரெப் மற்றும் மத்திய கிழக்கில் தொழிலாளர் வர்க்கத்திற்கும்
ஒடுக்கப்பட்ட
மக்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரே
செயற் திட்டம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு
முன்வைக்கும் சோசலிச புரட்சி வேலைத்திட்டம்தான்.
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன போராட்டத்தின்
மூலம் தான்,
உள்ளூர் முதலாளித்துவம் மற்றும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சமூகத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட
பிரிவுகளையும் வழி நடத்தும் இயக்கத்தின் மூலம் தான் ஜனநாயக
மற்றும் சமூக உரிமைகள் பெறப்பட முடியும் என்பதோடு,
அரசியல் வாழ்வின் அஸ்திவாரமாக சமூக
சமத்துவமின்மை நிறுவப்பட முடியும்.
“இப்போராட்டம்
வெறும் தேசிய அளவில் மட்டும் நடத்தப்பட முடியாதது.
வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் தொழிலாள
வர்க்கத்தை மத்திய கிழக்கு,
மக்ரெப் சோசலிச அரசுகள் என்ற பதாகையின் கீழ்
உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக ஐக்கியப்படுத்த
ட்ரொட்ஸ்கிச கட்சிகள் கட்டப்பட வேண்டும்.”
பிரான்சின்
“தீவிர
இடதில்”
பெரும்பான்மையாக இருக்கும் தொழிற்சங்க
அதிகாரிகள்,
“மனித
உரிமைச்”
செயற்பாட்டாளர்கள்,
உயர் கல்வியாளர்கள் மற்றும் மாணவராக
இருக்கும்போதே அரசியலை தொழிலாக கொண்டு முன்னேற விழைபவர்கள்
ஆகியோரின் வழிகாட்டும் முன்னோக்கு முற்றிலும் மாறுபட்டதாக
உள்ளது.
இந்தத் தட்டுக்களின் பார்வை—இவை
மத்தியதர வர்க்கத்தின் கூடுதல் சலுகை பெற்ற பிரிவுகளில்
இருந்து வருபவை—ஜனவரி
மாதம் துனிசிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
Larbi Chouikha, Le Monde
க்குக் கொடுத்த ஒரு பேட்டியில் நன்கு
கூறப்பட்டுள்ளது:
பென் அலி துனிசிலிருந்து ஓடியவுடன்,
Chouikhua
ஒரு
“வெல்வெட்
புரட்சி”
வேண்டும் என்றார். இது
1989ல்
ஸ்ராலினிச ஆட்சியிலிருந்து செக்கோஸ்லோவாக்கியாவில்
முதலாளித்துவம் புதிப்பிக்கப்பெற்றது,
இடைக் காலத்தில் புதிய ஆட்சி தன்னை
வெகுநெருக்கமாக சர்வதேச நிதியின் கோரிக்கைகளுடன் பிணைத்துக்
கொண்டது.
“இப்பொழுதுள்ள
பிரச்சினை இதுதான்:
சூறையாடலின் வெடிப்பை நாம் எப்படித் தடுப்பது,
இது பொறுத்துக் கொள்ள முடியாதது?
நம்மை அச்சுறுத்தும் முறிவு இது.
இச்சிறுவர்கள் ட்ரபெட்சி குடும்பத்தின்
சொத்துகளை மட்டும் தாக்கவில்லை,
பொலிஸ் நிலையங்கள் மற்ற அனைவரின்
சொத்துக்களையும் தாக்குகின்றனர்.”
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இத்தாக்குதல்,
பென் அலி ஆட்சிக்கு எதிராகப் போரிடுபவை,
Choulkha
உடைய கருத்தை,
துனிசிய எதிர்ப்பின் உத்தியோகபூர்வ அல்லது
பகுதி உத்தியோகபூர்வத்தின் வர்க்கத் தன்மையை ஒப்புக்கொள்ளும்
விலைமதிப்பற்ற தன்மை உடையதாக்குகிறது.
அதேபோல் அவற்றின் பிரெஞ்சு
“தீவிர
இடது”
ஆதரவாளர்களின் தன்மையையும் புலப்படுத்துகிறது.
இவர்கள் வசதியான சொத்துக்களுக்கு
உரிமையாளர்கள். ட்ரபெல்சி குடும்பம் சொந்தச் செல்வக் கொழிப்பு
பெற்றது பற்றி பொறாமை கொண்டவர்கள். இவர்களுடைய தொழிலாள
வர்க்கத்தின் மீதான அச்சமும் விரோதப் போக்கும்
சர்வாதிகாரத்திற்கு எதிரான குறைகூறல்களை விட மிக அதிகம் ஆகும்.
பென் அலியின் சர்வாதிகாரம் தள்ளாடித் தடுமாறி
நிற்கையில்,
இவர்களுடைய முதல் எண்ணம் ஆட்சியின் பொலிசைத்
தக்க வைத்துத் தங்கள் செல்வங்களைக் காப்பது மற்றும் மத்திய
கிழக்கு,
ஐரோப்பா இன்னும் அப்பாலும் படரக்கூடிய
தீவிரத்தனத்தை தடுத்தல் என்பதுதான்.
உத்தியோகபூர்வ துனிசிய எதிர்க்கட்சிகளுக்கு
பிரான்சின்
“தீவிர
இடது”
கொடுக்கும் ஆதரவில் இதுதான் அடிக்கோடிட்டுக்
காட்டப்படுகிறது. அதேபோல் சோசலிஸ்ட் கட்சி அதன் தயவை நாடி
நிற்பவர்களின் ஏமாற்றுத்தன தந்திர உத்திகளில் இருப்பதையும்
அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்:
|