சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : துனிசியா

Police crackdown in Tunisia meets resistance

துனிசியாவில் பொலிஸ் அடக்குமுறையை எதிர்ப்பு எதிர்கொள்கிறது

By Ann Talbot
25 January 2011

Use this version to print | Send feedback

திங்கள் காலையில் பிரதம மந்திரி மஹ்மத் கன்னொச்சியின் அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக துனிசியப் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டை வீசினர். ஊரடங்கு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவு முழுவதும் அமைதியாக வெளியே முகாமிட்டிருந்தனர். இடைக்கால அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் என்று கோரினர், ஏனெனில் இது அகற்றப்பட்ட ஜைன் அலி அபிடைன் பென் அலியின் ஆதரவாளர்களின் ஆதிக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

இடைக்கால காபினெட் உறுப்பினர்களில் 14 பேரில் 11 பேர் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், இது ஜனநாயகம் அல்ல என்று ஒரு ஆர்ப்பாட்டக்காரர் நிருபர்களிடம் கூறினார்.

பல நாட்களாக பிரதம மந்திரி அலுவலகத்தின் வெளியே எதிர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்பொழுதோ கூட்டம் கிராமப்புறங்களில் இருந்தும் உள்நாட்டில் இருக்கும் சிறுநகரங்களில் இருந்தும் சிதி பௌஜிட்டுக்கள் உட்பட ஏராளமானவர்களைக் கொண்டு அதிகரித்து விட்டது. அங்குதான் வேலையில்லாத கல்லூரிப் பட்டதாரி மஹ்மத் பௌஜாஜி தன்னையே அழித்துக்கொண்ட வகையில் ஜனாதிபதியை அகற்றிய இந்த எதிர்ப்புக்களுக்கு தூண்டுதலாக இருந்தார். இப்பகுதிகள் வேலையின்மை மற்றும் வறுமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டவை. சுற்றுலாத் தொழில் மூலம் இவை அதிக நலன்களைப் பெறுவதில்லை, பொருளாதாரத்திற்கு அதுதான் ஆதாரமாக உள்ளது.

சில நாட்களாக பொலிஸ், கண்ணீர்ப்புகைக் குண்டை வீசுதல், அடித்தல் அல்லது எதிர்ப்பாளர்களைக் கைது செய்வது ஆகியவற்றில் ஈடுபடாது உள்ளது. ஆர்ப்பாட்டங்களில் பொலிசார் கூடச் சில நேரம் கலந்து கொண்டனர். ஆனால் திங்கட்கிழமை முற்றிலும் மாறுபட்ட உத்தியைத்தான் கண்டது. அரசாங்கம் அதிகாரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்ற உறுதியை அது அடையாளம் காட்டியதுடன் அது இராஜிநாமா செய்யவேண்டும் என்று மக்கள் கோருவதையும் எதிர்க்க உறுதியாக உள்ளது. மேலிருந்து உத்தரவு வந்திருந்தால் ஒழிய பொலிஸ் தங்கள் வாடிக்கையான மிருகத்தன வழிவகைகளுக்குத் திரும்பியிருக்க மாட்டார்கள்.

அரசாங்க வளாகத்திற்குள் இருந்தவர்களுடன் சேர முற்பட்ட கிட்டத்தட்ட 1,000 ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் வகையில் கூரான கம்பிகள் போன்ற தடுப்புக்கள் பொலிசால் அமைக்கப்பட்டன. “நாங்கள் தடுப்புக்களை முறியடித்து எங்கள் சகோதரர்களுடன் சேர இவர்கள் ஏன் அனுமதிக்கவில்லை? எதிர்ப்புக்களை நடத்தும் உரிமை கொடுத்துவிட்டுப் பின்னர் ஏன் நிறுத்துகின்றனர்? அரசாங்கம் உண்மையில் அதிர்விற்கு உட்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்களா? பென் அலியின் ஆட்சி தான் மீண்டும் வந்துவிட்டது போல் தோன்றுகிறது என்று ஒரு எதிர்ப்பாளர் கூறினார்.

பொலிஸ் நடவடிக்கையை எதிர்கொள்ளும் வகையில் எதிர்ப்பாளர்கள் ஒரு கறுப்பு அலங்காரக் கார் மீது கற்களை வீசினார். அது வளாகத்திற்கு வந்தபோது அதில் ஒரு மந்திரி இருந்திருக்க வேண்டும். நிதி அமைச்சரக அலுவலகத்தின் சில சன்னல்களும் உடைக்கப்பட்டன. பொலிஸ் கார்கள் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அரசாங்கம் இராஜிநாமா செய்யும் வரை, பென் அலி போல் ஓடிப்போகும் வரை, இங்கு இருப்போம் என்று 22 வயது மாணவர் ஒத்மெனெ செய்தி ஊடகத்திடம் கூறினார்.

இதற்கிடையில் ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் தெருக்களுக்கு வருவதை இது உத்தரவாதம் செய்யும். திங்களன்று பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதையொட்டி படிப்பதற்கு மாணவர்கள் சென்றுவிடுவர் என்று நினைத்தது.

துனிசியாவில் தொடரும் எதிர்ப்புக்கள் மற்றும் அது பரவக்கூடிய அச்சுறுத்தல் பற்றித் தெளிவாகக் கவலை கொண்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். பிரெஞ்சுப் பிரதம மந்திரி பிரான்சுவா பியோனை துனிசியாவிற்கு அவசரக்கால உதவித் தொகுப்பு அளிப்பதற்குக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். “இது மிக விரைவில் செய்யப்படும் என்றார் அவர்.

வட ஆபிரிக்கா, “குறிப்பாக அல்ஜீரியாவில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிக் கவலை கொண்டுள்ளதாக சார்க்கோசி கூறினார். அப்பிராந்தியத்தில் அல்ஜீரியா பிரான்ஸின் மற்றொரு முன்னாள் காலனிப் பகுதியாக இருந்தது

நேற்று பொலிசார் தலைநகர் அல்ஜியர்ஸில் எதிர்ப்பு ஒன்றை நசுக்கினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுதலான அரசியல் சுதந்திரத்தைக் கோரினர். டஜன் கணக்கானவர்கள் கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவினால் காயப்படுத்தப்பட்டனர், பல கைதுகளும் நடந்தன

துனிசியா மற்றும் அல்ஜீரியாவில் நடைபெறும் அடக்குமுறைகள் இப்பிராந்தியத்தின் நெருக்கமான ஒருங்கிணைப்புத் தன்மைக்கு மற்றொரு அடையாளம் ஆகும். வட ஆபிரிக்காவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அடக்குமுறை ஆட்சிகள் புதுப்பித்த வகையில் எதிர்ப்பு அலையை நிறுத்துவது என்ற உறுதியைக் கொண்டுள்ளன.

அல்ஜீரியாவிலும் துனிசியாவில் மீண்டும் வந்துள்ள நெறியான எதிர்ப்புக்களை இரக்கமின்றி அடக்குவதில் பிரான்ஸ் சந்தேகத்திற்கு இடமின்றி திரைக்குப் பின் பங்கைக் கொண்டுள்ளது. பென் அலி ஓடிப்போவதற்கு முன் பிரெஞ்சு வெளியுறவு மந்திரி Michele Alliot Marie பென் அலிக்குஉலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு பாதுகாப்புப் படைகளின் செயற்பாடு பற்றி அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

ஜனவரி 14ம் திகதி, பென் அலி ஓடிப்போன நாளில்தான், பிரெஞ்சு அரசாங்கம் துனிசியாவிற்கு அனுப்பப்பட இருந்த கலகத்தை அடக்கும் தளவாடங்கள் நிறைந்த ஒரு கப்பலை நிறுத்தியது. இதில் குண்டுகள் துளைக்காத அங்கிகள், மற்றும் கண்ணீர்ப் புகையிலிருந்து பாதுகாப்பவைகள் ஆகியவை அடங்கியிருந்தன. இவைகள் விமானம் நிலையத்தில் ஏற்கனவே இருந்தது.

திடீரென பென் அலியின் வீழ்ச்சியினால், பிரான்சின் சர்வதேசப் புகழிற்கு ஏற்பட்ட சேதத்தை சற்றே குறைக்கும் முயற்சியில் சார்க்கோசி ஈடுபட்டார். துனிசிய மக்களின் சீற்றத்தை  பிரான்ஸ் குறைமதிப்பிட்டுவிட்டதாக அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் அவருடைய அரசாங்கம் துனிசிய சர்வாதிகாரி பென் அலி வீழ்ச்சி அடையும் வரை கொடுத்த ஆதரவிற்கு மன்னிப்புக் கோர மறுத்துவிட்டார். இறப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில் பிரான்ஸ் மௌனமாக இருந்தது எனக் கூறப்படுவதுமிகையான கூற்று என்றார்.

இது, மூன்று ஆண்டுகளில் சார்க்கோசியின் முறையான செய்தியாளர் மாநாடாகும். இதுவே மக்கள் எதிர்ப்புக்கள் வட ஆபிரிக்காவில் பிரான்சின் செல்வாக்கைக் குறைக்கத் தான் அனுமதிக்கப்போவது இல்லை என்ற எண்ணத்தின் தெளிவான அடையாளம் ஆகும். அதேபோல் இப்பிராந்தியத்தை எதிர்ப்பு இல்லாமல் அமெரிக்கா மேலாதிக்கம் செய்யவும் விடப்போவதில்லை என்பதின் அடையாளமும் ஆகும். தற்போதைய பிரெஞ்சுத் தூதர் மாற்றப்பட இருப்பதுடன் தானே சமீபத்தில் துனிசியாவிற்குச் செல்ல இருப்பதாகவும் Alliot Marie கூறியுள்ளார்.

பென் அலியின் அரசாங்கத்தை விடச் சிறிதும் குறைவற்ற பிற்போக்குத்தன இடைக்கால அரசாங்கத்திற்குத்தான் பிரான்ஸ் ஆதரவு கொடுத்து வருகிறது. அரசாங்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்துவிட்டதாகக் கன்னொச்சி கூறினாலும், அவ்வாறு அது செய்துவிடவில்லை. Mornaguia சிறையில் இன்னும் 1,000 பேருக்கு மேல் வாடுவதாகத்தான் தெரிகிறது. போர்ஜ் லமரி சிறைக்கு வெளியே உறவினர்கள் கூடி நின்று அங்குள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோருகின்றனர்.

கடந்த வாரம் போர்ஜ் லமரியைவிட்டு 20 பேரைக் கொண்ட பஸ் ஒன்று புறப்பட்டது. ஆனால் இன்னும் பலர் அங்கு இருப்பதாகத்தான் உறவினர்கள் கூறுகின்றனர். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தன்னுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு தாயார் கூறினார். “அவர்கள் அவனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தனர். சித்திரவதை செய்கின்றனர், கிட்டத்தட்ட இறந்துவிடும் வரை சித்திரவதை செய்கின்றனர் என்றார் அவர்.

தொழிலாள வர்க்க இளைஞர்கள் வறிய பகுதிகளிலிருந்து சுற்றி வளைத்து இழுத்துவரப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஆதரவு கொடுத்ததால் துனிசியா அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான நட்பு நாடாக உள்ளது. இதன் விளைவு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல நேரமும் வெறும் ஆதாரமற்ற சாட்சியங்களினால் தண்டனைக்கு உட்படுகின்றனர் அல்லது சித்திரவதை மூலம் கிடைக்கப்பட்ட ஒப்புதல்களையொட்டி தண்டனை பெறுகின்றனர்.

சாதாரண உடையணிந்த பாதுகாப்பு அதிகாரிகள் இளைஞர்களுடன் மசூதியில் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை முடிந்து வெளியே வரும்போது இளைஞர்கள் காரில் ஏற்றப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அதற்குப்பின் என்ன நடக்கிறது என்பது பற்றி எவருக்கும் தெரியாது என்று ஒருவர் புகார் கூறினார்.

எதிர்ப்பாளர்கள் மீது திங்கள் நடத்தப்பட்ட தாக்குதல் துனிசிய எழுச்சி ஒரு திருப்பு முனையை அடைந்துவிட்டதைக் குறிக்கிறது. ஒரு வாரத்திற்குள் இடைக்கால அரசாங்கம் அவமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பென் அலிக்கு ஆதரவு கொடுத்த UGTT தொழிற்சங்கம் கூட அதன் இடைக்கால அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டு தொழிற்சங்கத் தொடர்புடைய மந்திரிகள் இராஜிநாமா செய்யவேண்டும் என வலியுறுத்திவிட்டது.

ஆரம்பத்தில் துனிசிய ஆளும் உயரடுக்கு எதிர்ப்புக்கள் உத்வேகத்தை இழந்துவிடும், மக்கள் ஒரு சில வண்ணப்பூச்சுக்கள் மூலம் திருப்தி அடைந்துவிடுவர் என்று நம்பியது. மாறாக துனிசிய சமூகத்தில் பெரும் இழப்புகளுக்கு உட்பட்ட தட்டுக்கள் தங்கள் உறுதியைக் காட்டும் வகையில் எழுச்சியை தொடர்கின்றன. அவர்கள் இறந்துவிட்ட உறவினர்கள் புகைப்படங்களை அசைத்துக் காட்டும் சிறுநகர, கிராமப் பகுதி மக்களிலிருந்து எதிர்ப்பாளர்கள் ஏராளமாக வருகின்றனர். உலக நிதிய நெருக்கடியின் பாதிப்பு இச் சமூகத் தட்டுக்களிடையே விடையிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எளிதில் நிறுத்தப்பட முடியாதது ஆகும்.

ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டுள்ள இச்சமூக நிலை மாற்றம் துனிசிய இராணுவத்தின் தலைவர் ஜெனரல் ரஷிட் அம்மர் குறுக்கீட்டில் பிரதிபலிப்பாயிற்று. இதுவரை அவர் மௌனமாக இருந்தார். எழுச்சி பற்றிய அவருடைய முதல் அறிக்கை ஒரு சர்வாதிகார அச்சுறுத்தலாக இருந்தது.

எங்களுடைய புரட்சி, உங்களுடைய புரட்சி, இளைஞர்களுடைய புரட்சி தோற்கும் நிலையில் உள்ளது…. சில சக்திகள் ஒரு அதிகார வெற்றிடத்திற்கு அழைப்பு விடுகின்றன. அத்தகைய வெற்றிடம் அச்சுறுத்தலைத்தான் கொண்டுவரும், அது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்.”

எதிர்ப்பாளர்கள் அரசாங்க வளாகத்தை விட்டு நீங்க வேண்டும், “இந்த அரசாங்கம் செயல்படட்டும், இந்த அரசாங்கமோ அல்லது வேறு ஒன்றோ, செயல்பட வேண்டும்.”

UGTT மற்றும் பல எதிர்க் கட்சி அமைப்புக்களும் பலமுறையும் இராணுவம் மற்றும் ரஷிட் அம்மரை குறிப்பாக நட்புக் காட்டுபவர் என்று சித்தரித்துள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களும், இராணுவத்தினரும் பகிர்ந்து கொள்வதாகக் கூறப்படும் தேசிய நலன்கள் அடிப்படையில் அவைகள் அவருக்கு முறையிட்டுள்ளன. எனவேதான் அவர்எங்களுடைய புரட்சி என்று கூறி, தான் முற்றிலும் எதிர்க்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாகத் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிலைமை மோசமாகிவிட்டதால் பென் அலியிடம் அவர் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று கூறியதுதான் அவருடைய பங்கு இதுவரை. அதுவும் அமெரிக்க இராணுவம் அந்த முடிவிற்கு வந்துவிட்டதால். இதன்பின் அவர் பென் அலி மற்றும் அவர் குடும்பத்தினர் நாட்டை விட்டு 56 மில்லியன் டொலர் மதிப்புடைய 1.5 டன்கள் தங்கக் கட்டிகள், மற்றும் பெரும் வெளிநாட்டு நாணயக் குவியல் ஆகியவற்றுடன் செல்ல அனுமதித்தார்.

சௌதி அரேபியாவிற்குப் பென் அலி புறப்பட்டது தாங்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக எஞ்சியிருந்த துனிசிய முதலாளித்துவம் கொடுக்கத் தயாராக இருந்த விலையாகும். இராணுவம் துணை நிற்கும் இடைக்கால அரசாங்கம்தான் அவர்கள் எதிர்ப்புக்களைக் கடக்கவும் முந்தைய அரசு போலவே அடக்குமுறையைத் தவிர்க்க முடியாமல் கையாளும் புதிய ஆட்சியைக் கட்டமைப்பதற்கான  அமைப்பு ஆகும்.

துனிசியா மற்றும் பிரான்ஸிலுள்ள ஆளும் வர்க்கங்கள் எழுச்சி தொடர அனுமதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளன. பெரும்பாலும் சர்வாதிகார அடிப்படை கொண்ட ஆட்சி மீட்கப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றன. எழுச்சி நிறுத்தப்படாவிட்டால், அது பரவும் என்று அவை அஞ்சுகின்றன. சிறிய அளவு என்றாலும் அல்ஜீரியாவில் நடந்த ஆர்ப்பாட்டம் இந்த வழிவகை ஏற்கனவே துவங்கிவிட்டது என்பதைக் காட்டுகிறது. யேமனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழக வளாகங்களில் அத்துமீறி நுழைந்துவிட்டனர். சூடானில் கூட எதிர்ப்புக்கள் வந்துள்ளன.

எகிப்தில் இன்றுபுரட்சி நாள் திட்டமிடப்பட்டுள்ளது. எகிப்திய பங்குச் சந்தை சரிந்துள்ளது. அதன் நாணயமும் உலகச் சந்தைகளில் சரிந்துள்ளது. கலகம் அடக்கும் பொலிஸின் கூடுதல் பிரிவுகள் கெய்ரோவில் துனிசியத் தூதரகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் பிரதர்ஹுட், ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை எதிர்க்கும் பெரிய குழுக்களில் ஒன்று, ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள மறுத்துள்ளது. அவர்கள் தேர்தல்கள் வேண்டும் என்றும் 1967 முதல் நடைமுறையிலுள்ள அவசரக்காலச் சட்டங்கள் திரும்பப் பெறப்படவேண்டும் என்றும் முறையிட்டுள்ளனர்.

இக்கோரிக்கைகளை செயல்படுத்துவது எகிப்தை துனிசியாவில் காண்பதை விட அதிகமான பொது எழுச்சியில் இருந்து பாதுகாக்கும் என்று அது கூறியுள்ளது.

எகிப்தில் பிரதர்ஹுட் தடைசெய்யப்பட்ட இயக்கமாகும். இதன் உறுப்பினர்கள் வாடிக்கையாக துன்புறுத்தப்படுகின்றனர், கைது செய்யப்பட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் சித்திரவதைக்கு உட்படுகின்றனர். ஆனால் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அவர்கள் உடனடி விடையிறுப்பில் அவர்கள் உண்மையான மக்கள் எழுச்சிக்குக்காட்டும் விரோதப் போக்கைத்தான் வெளிப்படுத்தியுள்ளனர். எகிப்தில் அத்தகைய எழுச்சி, பல மில்லியன் தொழிலாள வர்க்க மக்கள் இருக்கும் நிலையில், துனிசியாவை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று அவர்கள் கருதுவது முற்றிலும் சரியே.

துனிசிய மற்றும் அரபு மக்களின் வெகுஜன எழுச்சிக்கு, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சர்வதேசிய சோசலிச தலைமை தேவைப்படுகிறது. அது தேசிய ஒற்றுமை, தேசிய நலன்களுக்கான அனைத்து முறையீடுகளையும் நிராகரிக்கும். துனிசியா, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலுள்ள தொழிலாளர்கள் அவர்களுக்கு தேவைப்படும் வளைந்து கொடுத்து இணக்கம்காணாத தலைமையை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைத் தவிர வேறு எந்த அமைப்பிலும் காண இயலாது.