சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The crisis in Europe and the financial aristocracy

ஐரோப்பிய நெருக்கடியும், நிதியியல் பிரபுத்துவமும்

Stefan Steinberg
21 January 2011

Use this version to print | Send feedback

இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நிதிமந்திரிகளின் சமீபத்திய கூட்டமானது, ஐரோப்பிய மற்றும் சர்வதேச வங்கியியல் மற்றும் நிதியியல் தொழிலமைப்புகளுக்கு ஐரோப்பிய அரசியல் அமைப்புமுறை முழுமையாக மண்டியிட்டிருப்பதை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டியது. (பார்க்கவும்: “ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகள் கூட்டம்
யூரோ நெருக்கடி பற்றி உடன்பாடு ஏதும் இல்லை
”.)

ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் நிதியியல் சந்தைகளுக்கும் இடையிலான உறவுகளைக் குறித்து குறிப்பிடுகையில், பிரிட்டிஷ் பொருளாதார வல்லுனர் பிலிப் லெக்ரைன் பின்வருமாறு எழுதுகிறார்: “வரிசெலுத்துவோர்மீது இழப்புகளை திணிப்பதற்கு முன்னுரிமை அளித்து அரசாங்கங்களின் செல்வாக்கு உடையும் அளவிற்கு நீண்டு சென்றாலும் கூட எப்பாடுபட்டாவது வங்கியின் பங்குதாரர்களை காப்பாற்றியாக வேண்டும் என்று இதுவரையில் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் முடிவெடுத்திருந்தன.”

அவர்கள் பங்கிற்கு, மொத்த ஐரோப்பிய கருவூலங்களையும் அவர்கள் பின்னால் வைத்திருப்பதாக மறுஉத்தரவாதம் அளித்ததுடன், நிதியியல் உலக கோமான்கள் புது சுறுசுறுப்புடன் அவர்களின் நாசகரமான வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜேர்மன் இதழான Süddeutsche Zeitungஇன் ஒரு தலையங்கம், நிதியியல் ஊகவணிகர்களின் நவீன பெருக்கத்திலுள்ள செயல்முறையை விபரிக்கிறது:

பனிச்சறுக்கல் விளையாட்டில் அவர்களின் இரண்டு-வார விடுமுறையைக் கழித்துவிட்டு திரும்பியிருந்த அந்த செலாவணி முகவர்களும், நிதியியல் மேலாளர்களும் அதிகளவில் கடன்பட்டுள்ள யூரோ நாடுகளுக்கு எதிராக அவர்களின் ஊகவணிகத்தை புதுப்பித்துள்ளனர். இந்த புத்தாண்டில் அவர்களின் முதல் பலியாக இருப்பது, போர்ச்சுக்கல்"

பின்னர் அந்த தலையங்கம் ஊகவணிகர்களுக்கு ஆதரவாக "நீண்டகாலமாக இருந்து வரும் சம்பிரதாயங்களையும்" குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த ஊகவணிகர்கள் தான், செலாவணிகளையும், கடன்பட்டுள்ள நாடுகளின் பங்குகளையும் ஐரோப்பிய ஒன்றிய நிதியியல் குடையின்கீழ் கொண்டு வருவதற்காக, அவற்றிற்கு எதிராக சூதாடி வருகிறார்கள். கடந்த ஆண்டில் கிரீஸூம், அயர்லாந்தும் தான் இதுபோன்ற நிதியியல் செயல்பாடுகளின் முதல் பலிகளாக இருந்தன. அதேநேரத்தில் போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் இத்தாலி 2011இன் முதல் பகுதியில் ஊகவணிகர்களின் மைய-நலன்களாக உள்ளன.

ஒன்றன்பின் ஒன்றாக, இந்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான வட்டிவிகிதங்களுடன் சேர்ந்த கடன்களை ஏற்க நிர்பந்திக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு தசாப்தங்களாக ஐரோப்பிய வங்கிகள் அவற்றின் கிரிமினல் முதலீட்டு நடைமுறைகள் மூலமாக மலைபோல் குவித்துக்கொண்ட வாராகடன்களைத் தக்கவைத்து அவற்றின் காப்பறைகளை மீண்டும் நிரப்பிக் கொள்வது தான், பலபில்லியன்-யூரோ கடன்களின் (கிரீஸ் விஷயத்தில் 110 பில்லியன், அயர்லாந்து விஷயத்தில்90 பில்லியன்) அடிப்படை நடைமுறையாக உள்ளது. நிதியை உயர்த்த விரும்பும் ஊகவணிகர்களுக்கு, பூஜ்ஜிய வட்டிவிகிதங்களுடன் அரசு கடன் பிணையெடுப்பை அளித்த ஒட்டுமொத்த நிகழ்முறையும், மொத்தமாக பெரும்இலாபங்களைக் குவிப்பதற்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளன.

Dealogic இன் புள்ளிவிபரங்களின்படி, இதுபோன்ற பரிவர்த்தனைகளின் அடிப்படையில் ஐரோப்பாவில் அதிக வருவாய் ஈட்டியதில் முதன்முறையாக Deutsche Bank அமெரிக்காவைச் சேர்ந்த ஜேபி மோர்கனை மிஞ்சியது. ஜேர்மனியின் மிகப்பெரிய Deutsche Bank இன் ஐரோப்பிய வருவாயில் மூன்று மடங்கிற்கும் அதிகமானவை, நிறுவன வர்த்தகத்திலும் மற்றும் அரசாங்க பங்குகளிலும் வேரூன்றியுள்ளன.

2010இல் ஐரோப்பிய அரசாங்கத்திற்கு கடன் அளித்த முதல் 10 நிதியியல் குழுமங்களில், (இரண்டாவது இடத்தில் Deutsche Bank கைக் கொண்டு) பார்க்லே வங்கியின் முதலீட்டு பிரிவான பார்க்லே கேப்பிடல் முதலிடத்தில் இருந்தது.

ஐரோப்பாவில் தம்முடைய செயல்பாடுகளின் வெற்றி பெருக்குடன், பார்க்லே தலைமை நிர்வாகி பாப் டைமண்ட் அவருடைய வங்கியின் இலாப மற்றும் கொடுப்பனவு கலாச்சாரத்தை முழுசக்தியுடன் பாதுகாக்க முனைந்தார். இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், அவர் பிரிட்டிஷ் கருவூல தேர்ந்தெடுப்பு குழுவிடம் வங்கிகளின்பச்சாதாபம் மற்றும் பரிதாபகரமான காலமெல்லாம் முடிந்துவிட்டது" என்று தெரிவித்திருந்தார்.

உண்மையில், உலகை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டுவருவதில் நிதியியல் பிரபுத்துவம் வகித்த பாத்திரத்தில், அவர்கள் பக்கம் சிறிது கூட பச்சாதாபம் இருக்கவில்லை. 2008இன் இறுதியிலும், 2009இன் தொடக்கத்திலும் வருவாயில் ஏற்பட்ட சிறிய வீழ்ச்சியைத் தொடர்ந்து, முன்னணி நிதியியல் நிர்வாகிகளின் சம்பளமும், கொடுப்பனவுகளும் மீண்டுமொருமுறை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டிற்கான டைமண்டின் சொந்த சம்பள தொகுப்பேஒரு அதிகபட்ச கூட்டுத்தொகையாகமொத்தம் சுமார் 8.5 மில்லியன் பவுண்டுகள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஒப்பீட்டளவில் எடுத்துக்காட்டாக 2009இல் 25 முன்னனி ஹெட்ஜ் நிதி மேலாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஏறத்தாழ 1 பில்லியன் டாலர் வருவாயோடு ஒப்பிட்டால், இது மிகவும் குறைவாக இருக்கும். இந்த பிந்தைய தொகை ($1 பில்லியன்), 2008இல் ஏற்பட்ட வோல்ஸ்ட்ரீட் முறிவு மற்றும் உலகளாவிய நிதியியல் நெருக்கடி ஆகியவற்றிற்கு முன்னர், 2007இல் முன்னனி ஹெட்ஜ் நிதி மேலாளர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகையான முந்தைய தொகையையும் (£8.5 மில்லியன்) மிஞ்சிவிடுகிறது.

வங்கி கொடுப்பனவு தொகுப்புகளில் வோல் ஸ்ட்ரீட்டின் கோல்ட்மென் சாச்ஸ் முன்னணியில் உள்ளது. அது கடந்த ஆண்டு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக மொத்தம் 15.4 பில்லியன் டாலர் (இது முந்தைய ஆண்டு மொத்தத்தை விட 3.5 சதவீதம் அதிகம்) செலுத்தியதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெளியிட்டது.

இந்த பணம்கொழித்த மேற்தட்டு அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும் இலாபங்கள் மற்றும் கொடுப்பனவுகளில் சாதனையளவுக்கு இருப்பதென்பது, அதன் மிருகத்தனமான, ஊகவியாபார நிறுவனங்களின் கழுத்துப்பட்டை, உலகின் உழைக்கும் மக்களை பிரித்துமேய உறுதிசெய்வதன்மீது உள்நோக்கம் கொண்டுள்ளது. ஐரோப்பாவில் இது, பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்க போராட்டங்கள் மூலமாக வென்றெடுக்கப்பட்ட சமுக நலன்புரி  திட்டங்களைத் திட்டமிட்டு அழிக்கும் வடிவத்தை எடுக்கிறது.

பல ஐரோப்பிய நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட மக்கள்விரோத செலவினக்குறைப்பு திட்டங்கள், அரசுத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் கூலிகளை 5 மற்றும் 15 சதவீதத்திற்கு இடையில் வெட்டியுள்ளன. ஏற்கனவே, நிதியியல் பத்திரிகைகளால் 30 சதவீத வெட்டுக்களுக்கு முறையீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதேநேரத்தில், சுருங்கும் சம்பள விகிதங்களை முகங்கொடுக்கும் அதே தொழிலாளர்கள், மதிப்பு கூட்டு வரி போன்ற நுகர்பொருள் வரிகளை அரசாங்கங்கள் அதிகரித்து வருவதால், அடிப்படைத் தேவைகளின் செலவுகள் உயர்ந்து வருவதை முகங்கொடுக்கின்றனர்.

ஒன்றின்பின் ஒன்றாக ஒவ்வொரு நாடாக, சமூக அமைப்புமுறைகள் இடிக்கப்பட்டும் மருத்துவநல திட்டங்கள் சூறையாடப்பட்டும் வருகின்றன. பணச்சந்தைகளிடமிருந்து வரும் முறையீடுகளை எதிரொலிக்கும் விதத்தில், கடந்த வாரம் ஜேர்மன் அதிபர் ஐரோப்பா முழுவதும் ஓய்வூதிய வயதை 67ஆக உயர்த்த அழைப்புவிடுத்தார்.

நிதியியல் மேற்தட்டுக்களால் அறிவுறுத்தப்பட்டு, அதற்கு கீழ்படியும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சிதைத்து-எரிக்கும் உத்திகள், தொழிலாளர்களையும், மத்தியதர வர்க்கத்தையும் துரிதமாக வறுமையில் தள்ளி வருகின்றன. இந்த அடுக்கின் பேராசை கொண்ட முற்றிலும் இரக்கமற்ற இயல்பு உலக அரசியலுக்குள் ஒரு புதிய மற்றும் வெடிப்பார்ந்த ஆக்கக்கூறைக் கொண்டு வருகிறது.

ஒருசில நாள் இடைவெளியில் வெறுக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரியை கீழிறக்கிய, துனிசியாவின் சமீபத்திய போராட்டங்களும், சமூக எழுச்சிகளும் நாடுகளில் திணிக்கப்பட்டு வரும் வாழ்க்கைத்தரங்கள் மீதான வெட்டுக்களுக்கு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் ஒரு சக்திவாய்ந்த பிரதிபலிப்பை எடுத்துக்காட்டுகிறது. எவ்வாறிருப்பினும், ஐரோப்பாவிலிருந்து கிடைக்கும் பாடம் என்னவென்றால், ஒருசமயம் தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டிருந்த கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீதும் அல்லது உத்தியோகப்பூர்வ அரசியல் வட்டாரத்தின் இடதுசாரியாக உட்கார்ந்திருந்த மத்தியதரவர்க்க குழுக்களிலிருந்த அவர்களின் கூட்டாளிகள் மீதும் சிறிது கூட நம்பிக்கை வைக்க முடியாது என்பதாக உள்ளது.

உண்மையில் பின்னுக்கிழுப்பதில், தொழிற்சங்கங்களுடன் சேர்ந்த "சோசலிச" மற்றும் சமூக-ஜனநாயக அரசாங்கங்கள் தான், கிரீஸ் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயினின் வங்கிகள் சார்பாக மக்கள்விரோத செலவினவெட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகின்றன. வங்கிகள் வகிக்கும் பாத்திரத்திலிருந்தும், நிதியியல் பிரபுத்துவத்துடன் அவற்றிற்கு இருக்கும் சொந்த சிக்கல்களிலிருந்தும் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே, இந்த அரசாங்கங்கள் தேசியவாத மற்றும் சோவினிசத்தின் மிக கொடூரமான வடிவங்களை ஏவிவிட விரும்புகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடு மட்டும் தான், இந்த சர்வதேச நிதியியல் மாஃபியாவின் நடவடிக்கைகளாலும், அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களில் உள்ள அதன் கூட்டாளிகளின் நடவடிக்கைகளின் விளைவாகவும், மனிதயினத்திற்கு ஏற்படும் ஒரு புதுப்பிக்கப்பட்ட பேரழிவைத் தடுக்க முடியும். இது வங்கிகள் மற்றும் அனைத்து முக்கிய சர்வதேச நிதியியல் அமைப்புகளையும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையின்கீழும் பொதுவுடைமையாக்கும் ஒரு போராட்டத்தையே குறிக்கிறது.