செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
The middle class “left”
and the Tunisian revolt
மத்தியதர
வர்க்க
“இடதும்”
துனிசிய
புரட்சியும்
By Jerry
White
21 January 2011
Back
to screen version
துனிசியாவில் எழுச்சி இப்பொழுது அதன்
ஆரம்பக்
கட்டங்களில் உள்ளதுடன்,
பென் அலி
சர்வாதிகாரக் குழுவில் எஞ்சியுள்ளவர்கள்,
முதலாளித்துவ
எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றால் நிலைமையை
ஸ்திரப்படுத்துவதற்கான முயற்சிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெகுஜன இயக்கத்தை
அடக்கும் திறனுடைய ஒரு அரசாங்கத்தை ஒன்றாக இணைத்துக் கொண்டுவந்து அமெரிக்க,
பிரெஞ்சு
ஏகாதிபத்தியத்தையும்
மற்றும் துனிசிய ஆளும் உயரடுக்குகளின் நலன்களையும்
பாதுகாக்க அவை
முற்படுகின்றன.
இம்முன்முயற்சி
இச்சக்திகளின்
கரங்களிலேயே விடப்பட்டுவிட்டால்,
இராணுவ அடக்குமுறை
மற்றும் வேறு ஒரு சர்வாதிகார ஆட்சி அமைப்படக்கூடும் என்ற உண்மையான ஆபத்து உள்ளது.
துனிசிய
மக்களை எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான பணியானது,
தொழிலாள
வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகரத் தலைமையையும்
மற்றும்
வேலைத்திட்டத்தையும்
தயாரிப்பதாகும்.
இந்த வெகுஜன
இயக்கத்தின் கோரிக்கைகளான
வேலைகள்,
கௌரவமான வாழ்க்கைத்
தரங்கள்,
அடிப்படை ஜனநாயக உரிமைகள்,
நாட்டை சர்வதேச
நாணய
நிதியம்,
சர்வதேச நிறுவனங்கள்
மற்றும் உள்ளூர் முதலாளித்துவத்தினர் ஆகியோர் கொள்ளை அடிப்பதை நிறுத்துதல் என்பவை
தொழிலாள வர்க்கம்
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி பொருளாதாரத்தை சோசலிச வகையில் மறு சீரமைத்தால்
அன்றி
அடையப்பட முடியாது.
அத்தகைய
போராட்டத்தை எதிர்க்கும் வகையில்,
ஏராளமான மத்தியதர
வர்க்க “இடது”
அமைப்புக்கள்
உலகெங்கிலும் துனிசியத் தொழிலாள வர்க்கத்தை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகளுடன்,
எல்லாவற்றிற்கும்
மேலாக UGTT (துனிசியத்
தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு)
க்குள் பிணைக்க
முற்பட்டுள்ளன.
இதில் பிரான்சில்
புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியும்
(NPA) அடங்கும்.
See “Tunisian events expose pro-imperialist policy of France’s New
Anti-Capitalist Party”).
அமெரிக்காவில்
ISO எனப்படும்
சர்வதேச சோசலிச அமைப்பு
UGTT க்கு பேராதரவு
கொடுக்கும் அமைப்புக்களில் ஒன்றாகும்.
இந்த வாரம் அதன்
Socialist Worker
என்னும் வலைத் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்று,
“கடந்த சில
வாரங்களாக UGTT
வேலையில்
உள்ளவர்கள்,
வேலையற்றவர்கள்
ஆகியோரை ஒழுங்கமைத்து எதிர்ப்பை தெரிவிப்பதற்காக ஒருங்கிணைக்கும் முயற்சியில்
முக்கிய கருவாகச் செயல்பட்டுவருகிறது என்பதை நிரூபித்துள்ளது”
என்று
அறிவித்துள்ளது.
இது ஒரு
பொய் ஆகும்.
UGTT யின் முதல்
பிரதிபலிப்பு
எதிர்ப்புக்களை
நிராகரிப்பதாகத்தான்
இருந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
தெருக்களில் சுட்டுக் கொல்லப்பட்டு
வந்த போதும் கூட,
UGTT தலைவர்
அப்திசலேம் ஜேராட்
(Abdessalem Jerad)
பென் அலியுடன்
கூடிப் பேச்சுக்களை நடத்தி வந்தார்.
UGTT
நீண்டகாலமாகவே ஆட்சிக்கு
(பென்
அலியின்)
ஆதரவு கொடுத்து,
சர்வதேச
நாணய
நிதியம் கோரியிருந்த
அடிப்படைச் சீர்திருத்தங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த உதவியாக
இருந்து வந்துள்ளது.
போலி ஜனாதிபதித்
தேர்தல்களின்போது இது பகிரங்கமாக பென் அலிக்கு ஆதரவு கொடுத்து,
மிகச் சமீபத்தில்கூட
தொழிலாளர்களிடம் அவர்தான்
“சுதந்திரம் மற்றும்
ஸ்திரமான
சூழ்நிலைக்கு உத்தரவாதம்
அளிக்க முடியும்”
என்று கூறியது.
இந்த
உண்மைகளை முற்றிலும் மறைக்க முடியாத நிலையில்,
Socialist Worker
இன் எழுத்தாளர்
Matt Swagler “துரதிருஷ்டவசமாக,
தொழிற்சங்கத்
தலைவர்கள் இயக்கத்தில் சற்றே தாமதமாகச் சேர்ந்தனர்.
ஆரம்பத்தில்
எதிர்ப்புக்களை கண்டித்து அவற்றிடம் இருந்து விலகியிருந்தாலும்,
அனைத்து
அங்கதவர்களாலும்
அவர்கள் செயற்பாடுகளில் சேருமாறு
அழுத்தம்
கொடுக்கப்பட்டது.
ஆனால் பென் அலிக்கான
எதிர்ப்பை
இல்லாதொழிப்பதற்கே
அவர்கள்
கூடிய
கவனத்தில்
கொண்டிருந்தனர்.”
UGTT
யின் உண்மையான பங்கு என்ன?
அரசாங்க
வன்முறைகளை மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் வந்து ஆர்ப்பரிக்கையில்,
UGTT யின் தேசியக்
குழு ஜனவரி 11ம்
தேதி ஒரு அவசர கூட்டத்தைக் கூட்டியது.
அமைதிக்கு அழைப்பு
விடுத்த அது,
அரசாங்கம்
தொழிற்சங்கத்தை “நாட்டில்
ஏற்பட்டுள்ள துயர சம்பவங்களுக்கு”
குற்றம்
சாட்டக்கூடாது என வலியுறுத்தியது.
இது அலி அகற்றப்பட
வேண்டும் என்று கோரவில்லை;
மாறாக
“தேசத்தின்
உறுதிப்பாடு,
பாதுகாப்பு,
செழிப்பு ஆகியவற்றை
உறுதிபடுத்தத் தேவையான பொருளாதார,
சமூக
சீர்திருத்தங்களை தீர்மானிக்க
ஒரு தேசிய
கலந்துரையாடல் குழு தோற்றுவிக்கப்பட வேண்டும்”
என்று கோரியது.
வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் அதிகரித்தபோது,
UGTT தலைவர்கள் ஒரு
பெயரளவிற்கான இரண்டு மணி நேர வேலைநிறுத்தத்திற்கு ஜனவரி
14ம் திகதி
அழைப்புவிடுத்தது.
இது எழுச்சியை
அடக்குவதற்கும் ஒரு எதிர்த்தரப்பு சக்தி என்று தன்னைக் காட்டிக்கொள்ளவும் நிகழ்ந்த
ஒரு
போலி முயற்சியாகும்.
பென் அலி
சவுதி அரேபியாவிற்கு
ஓடிவிட்டபின்,
UGTT விரைவில் அதன்
ஆதரவை அவருடைய எடுபிடிகளின் தந்திரஉத்திகளுக்குக் கொடுத்து ஒரு
“தேசிய ஐக்கிய”
அரசாங்கம்
அமைப்பதற்கு உதவியது.
UGTT
யின் மூன்று அதிகாரிகள்
அரசாங்கத்தில் மந்திரிப் பதவிகளை ஏற்றனர்.
அரசாங்கமோ பென்
அலியின் அரசியலமைப்பு
ஜனநாயக
கூட்டு
(RCD)
எனப்படுவதின்
உறுப்பினர்களுடைய
மேலாதிக்கத்தின்கீழ் இருந்தது.
எதிரப்புக்கள்
தொடர்ந்து,
RCD உடைய பங்கு
பற்றி
கவனம்
காட்டத்
தொடங்கியவுடன்,
மூன்று
UGTT மந்திரிகளும்
இராஜிநாமா
செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.
UGTT
யின் அதிகாரத்திற்கு ஏற்றம்
கொடுக்கும் வகையில்,
Swagler எழுதுகிறார்:
“துனிசிய தொழிலாளர்
இயக்கம் ஒரு முக்கிய தீவிரமான
வரலாற்றை
குறிப்பாக
1978 பொது
வேலைநிறுத்தத்தின்போது
கொண்டிருந்தது.
ஆனால் அடக்குமுறை,
அரசாங்க வேலைகள்
தனியார்மயமாக்கப்பட்டது மற்றும் தொழிற்சங்கத் தலைமை உறுதுணையாக நின்றது ஆகியவற்றின்
கூட்டினால் அது கடுமையாகப் பாதிப்பிற்கு உட்பட்டது.
துனிசிய
தொழிற்சங்கங்கள் அவற்றின் முந்தைய வலிமை,
ஒற்றமை உணர்வை
எதிர்ப்பு இயக்கத்துடன் மீண்டும் பெறுமோ என்பது பொறுத்திருந்துதான் காண வேண்டிய
நிலை ஆகும்.”
UGTT அதன்
மூலத்தில்
இருந்தே,
மிகப்
பிற்போக்குத்தன சக்திகளின் கருவியாக,
எல்லாவற்றிற்கும்
மேலாக,
பிரெஞ்சு,
அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் கருவியாகத்தான் செயல்பட்டுவந்துள்ளது.
1978ம் ஆண்டு
தன்னுடைய கட்டுரையில்
Nigel Disney “துனிசியாவில்
தொழிலாள வர்கப் புரட்சி”
என்பதில்
குறிப்பிட்டுள்ளது போல்,
“UGTT 1946ம் ஆண்டு
அப்பொழுது ஏற்கனவே இருந்த தொழிற்சங்கங்களின் இணைப்பினால் நடைமுறைக்கு வந்தது;
ஆனால் தேசிய
சுதந்திரத்திற்கான
போராட்டக் காலத்தில் வலதிற்கு நகர்ந்தது.
ஆனால் சேர்ந்த
ஓராண்டிற்குள்ளேயே,
UGTT, 1951ம் ஆண்டு
கம்யூனிச
சார்பு உடைய உலக
தொழிற்சங்கங்களின்
கூட்டமைப்பை
(World
Federation of Trade Unions)
விட்டு நீங்கியது;
அதற்குப் பதிலாக
சர்வதேச
தொழிற்சங்கங்களின்
கூட்டமைப்பில்
(International
Confederation of Free Trade Unions)
சேர்ந்தது.
இந்த அமைப்பின்மூலம்
UGTT யின் தலைமை
நெருக்கமான பிணைப்புக்களை
AFL எனப்படும்
அமெரிக்கத்
தொழிலாளர் கூட்டமைப்புடன் கொண்டது;
அது இன்றளவும்
தொடர்கிறது.”
AFL
ன் உலளாகவிய,
கம்யூனிச
எதிர்ப்புச் செயல்களுக்குத் தலைமை தாங்கிய
Irving Brown, CIA (அமெரிக்க
மத்திய உளவுத்துறை)
உடன் இணைந்து
UGTT, மற்றும் பென்
அலியின் RCD
கட்சியின்
முன்னோடிகளுடனும் உடன் மிக நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டது.
துனிசியாவில்
AFLஇன்
நடவடிக்கைகள் வட
ஆபிரிக்கா மட்டுமில்லாமல் கண்டம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள்
மற்றும் சூழ்ச்சிகளை தயாரித்து நடத்துவதற்கு
உந்துதளமானது.
1978ம்
ஆண்டு துனிசிய பொது வேலைநிறுத்தம் சிதைந்து வந்த பொருளாதார நிலைமை மற்றும் அரசியல்
அடக்குமுறைகள் பற்றி தொழிலாளர்,
மாணவர்கள்
கொண்டிருந்த அமைதியின்மையினால் ஒரு வெடிப்புத்தன்மை நிறைந்த போராட்டமாயிற்று.
நூற்றுக்கணக்கானவர்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
200க்கும் மேற்பட்ட
தொழிற்சங்க அதிகாரிகள்,
UGTT தலைமை உட்பட,
சிறையில்
அடைக்கப்பட்டனர்.
ஆனால்
1981 ஐ ஒட்டி,
தொழிற்சங்க
அதிகாரிகள் விடுவிக்கப்பட்டு மன்னிப்பும் அளிக்கப்பட்ட பின்னர்,
அடக்குமுறையைக்
கையாண்டிருந்த,
UGTT ஆதரவுடைய ஆளும்
Destourian Socialist Party,
தான் சீர்திருத்தப்பட்டுவிட்டதாகக்
கூறியது. 1987ல்
அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான பென் அலி அதிகாரத்திற்கு வந்தார்.
இவை எதுவமே
சர்வதே
சோசலிச
அமைப்பிலோ
(ISO),
அதே போல் மற்ற போலி
இடது அமைப்புக்களிலோ
எந்த
தாக்கத்தையும்
ஏற்படுத்தவில்லை.
முதலாளித்துவ
எதிர்கட்சிகள் கொண்டுள்ள மாய்த்துவிடும் பொய்த்தோற்றங்கள் பற்றி தொழிலாள
வர்க்கத்திற்கு எச்சரிக்கை கொடுப்பதற்கு மாறாக,
அவை அத்தகைய
தோற்றங்களுக்கு ஊக்கம் கொடுத்து,
வெகுஜன அழுத்தம்
UGTT ஐ உடன்பட
வைக்கும்,
முதலாளித்துவ
எதிர்க்கட்சிகளுக்கு இடதில் உள்ளவற்றையும் இணங்க வைக்கும் என்பதற்கும் ஊக்கம்
கொடுத்தன.
துனிசியத்
தொழிலாளர்களுக்கும்
இளைஞர்களுக்கும்
“சீர்திருத்தம்
பற்றிய உறுதிமொழிகளை இடைக்காலத் தலைவர்கள் செயல்படுத்தி,
அடக்குமுறைக்கு
முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்”
என்று
Swagler
வலியுறுத்தியுள்ளார்.
மேலும்
“துனிசிய இடதில்
உள்ள தொழிற்சங்கங்களும் எதிர்த்தரப்பு அமைப்புக்களும் முற்பாக்கான சமூக மாறுதலைக்
கொண்டுவரும் இயக்கத்தை அமைக்க,
முக்கியமான பங்கை
மேற்கொள்ளலாம்”
என்றும் அவர்
கூறினார்.
சர்வாதிகாரத்தின்கீழ்
தடைசெய்யப்பட்ட
ஸ்ராலினிச துனிசிய தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி
(PCOT), இஸ்லாமியக்
கட்சிகள் வரை
எதிர்தரப்புக் கட்சிகள் என
அழைக்கப்படும் ஒவ்வொன்றும்
முதலாளித்துவ
ஒழுங்கமைப்பை
பாதுகாக்கின்றன.
“தீவிரமான
சமூக மாற்றத்திற்கு”
ஒரு அமைப்பு
என்பதற்கு
முற்றிலும் மாறாக,
அவை நேர்த்தியுடன்
அனைத்து மக்கள் எதிர்ப்பையும் அடக்கும் அரசாங்கத்தை உருவாக்க
உழைக்கின்றன.
இம்முயற்சிகளில்
மத்தியதர வகுப்பு
“இடது”
அமைப்புக்கள்
முக்கிய தூணாகச் செயல்படுவதுடன்
பிரெஞ்சு,
அமெரிக்க
ஏகாதிபத்தியங்களின் துணைக் கருவியாகவும் செயல்படுகின்றன.
இத்தகைய
பங்கினை
முதல் அல்லது
இரண்டாவது தடைவையாக அவர்கள் செய்யவில்லை என்பது உறுதி.
2009ம் ஆண்டு
அனைத்து
“இடது”
தோழமையினரும்
ஈரானிய ஆட்சியை பசுமை
புரட்சி என்று
அழைக்கப்பட்ட காலத்தில் ஸ்திரமின்மையை
உருவாக்கும்
நடவடிக்கைகளுக்கு
ஆதரவு கொடுத்து,
வாஷிங்டனுக்கு
இன்னும் நட்புக் காட்டும் ஆட்சியை இருத்த
எதிர்த்தரப்பினருக்கு
ஆதரவு
கொடுத்தன.
துனிசிய
மக்கள் பெரும் அரசியல் சாவல்களை எதிர்கொண்டுள்ளனர்;
இவை வரலாற்றின்
அடிப்படையில் தளத்தைக் கொண்ட ஒரு புரட்சிகரத் தலைமையைத் தவிர வேறு எதனாலும்
தீர்க்கப்பட முடியாததாகும்;
அப்போராட்டத்திற்கு
உருவகமாக உள்ள ஒரே கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவான உலக
ட்ரொட்ஸ்கியின் இயக்கம் ஒன்றுதான்.
துனிசியத்
தொழிலாளர்கள்,
இளைஞர்கள்,
புத்திஜீவிகள்
ஆகியோரை எங்கள் இயக்கத்தின்
வேலைத்திட்டத்தை
படிக்குமாறு ஊக்கம் கொடுப்பதுடன்,நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்
பிரிவுகளை துனிசியாவிலும்
வட ஆபிரிக்கா முழுவதும் கட்டமைக்குமாறும் ஊக்கம் தருகிறோம். |