WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
No agreement on euro crisis
ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகள் கூட்டம்
யூரோ நெருக்கடி பற்றி உடன்பாடு ஏதும் இல்லை
By Stefan Steinberg
20 January 2011
Use this version to print | Send
feedback
இந்த வாரம் திங்கள்,
செவ்வாய் அன்று நடைபெற்ற ஐரோப்பிய நிதி
மந்திரிகளின் உச்சிமாநாடு கண்டத்தின் பெருகும் பொருளாதார,
சமூக நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்பது
பற்றித் தெளிவான ஒருமித்த உணர்வை அடைவதில் தோற்றுவிட்டது.
குறிப்பிட்ட ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு
எதிராக சர்வதேச சந்தைகளில் ஒரு புதிப்பிக்கப்பட்ட தாக்குதல்
இருக்கும் நிலையில்,
சமீபத்தில் பிரஸ்ஸல்ஸில் நடந்த உச்சிமாநாடு
மீண்டும் ஐரோப்பிய நாடுகள் பிடிவாதமாக கண்டம் முழுவதும் சிக்கன
நடவடிக்கைக்கான முறையான பிரச்சாரம் நடத்திக் கொண்டு,
ஐரோப்பாவை இன்னும் பெரும் பொருளாதாரக்
குழப்பத்தில் தள்ளுவதற்கு அச்சுறுத்திவரும் வங்கிகள்,
நிதிய அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை
எதையும் எடுக்க மறுத்துள்ளது.
அதே நேரத்தில்,
ஐரோப்பிய ஒன்றித்திற்குள் இருக்கும் பூசல்களும்
பிளவுகளும்
2008
நிதிய நெருக்கடி அதன் மூன்றாம் ஆண்டின்
நடப்பின் விளைவில் இன்னமும் தீவிரமாகி வருகின்றன என்பதைத்தான்
இக்கூட்டம் தெளிவாக்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தில் விவாதத்திற்கு
எடுத்துக் கொள்ளப்பட்ட முக்கியப் பிரச்சினை,
கடந்த ஆண்டு அவசர அவசரமாக கிரேக்கப்
பொருளாதாரத்திற்கு எதிராக இயக்கப்பட்ட அலை போன்ற ஊக
நடவடிக்கைகளில் இருந்து யூரோவைக் காப்பாற்றும் முயற்சியான
EFSF
எனப்படும் ஐரோப்பிய நிதி உறுதிப்பாட்டு
நிதியத்தை எப்படி விரிவுபடுத்துவது என்பதாகும்.
கடந்த மே மாதம்
€440
பில்லியன் நிதியும் அத்துடன்
€280
பில்லியன் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதம்
பற்றியும் ஐரோப்பிய நாடுகள் உடன்பாட்டைக் கண்டன.
நிறுவப்பட்டதில் இருந்து இந்த நிதி
குறைந்துவிட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அயர்லாந்துப்
பொருளாதாரத்தைப் பிணை எடுப்பதற்குக் கிட்டத்தட்ட
€100
பில்லியனை அளித்தது.
அயர்லாந்தும் மூல ஐரோப்பிய ஒன்றிய நிதியில்
கையெழுத்திட்ட நாடாகும்;
அதன் பொருள் உடன்பாட்டில் தன்னுடைய பிணை
எடுப்பிற்கு ஒரு நாடே பங்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற
விதி சேர்க்கப்பட்டதாகும்.
மூலத் தொகையான
€440
பில்லியன்
EFSF
ஒரு மூன்று
AAA
தரத்தை நிதியச் சந்தைகளில் வாங்குவதற்கு
உறுதிப்பாடுகளை கொடுத்த அளவில் இன்னும் சுருக்கம் அடைந்தது.
இதன் பின்னர்,
கடந்த ஆண்டு இறுதியில்,
€440
பில்லியன் மூல நிதிக்கு அளிப்புக்கள் கொடுத்த
மற்ற பொருளாதாரங்களும் தொடர்ச்சியாக—போர்த்துக்கல்,
ஸ்பெயின்,
பெல்ஜியம் மற்றும் இறுதியில் இத்தாலி என—தரமளிக்கும்
அமைப்புக்களில் பார்வையிலும் பத்திரச் சந்தைகளின் பார்வையிலும்
விழுந்து,
அந்நாடுகள் கடனுக்காகத் திருப்பிக் கொடுக்கும்
வட்டிப்பணங்களை முறையாக உயர்த்திவிட்டது.
நிதிய மற்றும் அரசியல் வட்டங்களில் ஒருமித்த
உணர்வு மே மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட முக்கால் டிரில்லியன்
யூரோக்கள் முற்றிலும் போர்த்துக்கல்,
ஒருவேளை ஸ்பெயின் ஆகியவற்றின் தவிர்க்க முடியாத
பிணை எடுப்பிற்குப் போதாது என ஆயிற்று.
இதன் விளைவாக ஐரோப்பிய அரசாங்கங்கள்,
குறிப்பாக கண்டத்தின் மிகப் பெரியப்
பொருளாதாரமான ஜேர்மனிய அரசாங்கம்,
அவற்றின்
EFSF
நிதிக்குக் கொடுக்கும் அளிப்புக்களை அதிகமாக்க
பெரும் அழுத்தத்திற்கு உட்பட்டன.
தன்னுடைய பங்கிற்கு ஜேர்மனிய அரசாங்கம் தன்
பங்கில் எந்த உயர்விற்கும் உறுதியாக மறுப்புத் தெரிவித்து
ஐரோப்பா முழுவதும் கடும் சிக்கன நடவடிக்கைகள்
தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது.
பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாடு நடப்பதற்கு முன்னதாக
நடந்த தொடர் நிகழ்வுகள் இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது
என்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் பெருகிய
அழுத்தங்களை வெளிப்படுத்தின.
ஒரு வாரம் முன்பு,
ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல்
EFSF
நிதியை அதிகரிப்பதற்கான சரியான நேரம் இது அல்ல
என்று அறிவித்தார்.
ஐரோப்பிய ஆணையத்தின்
(EC)
தலைவர் ஜோஸ் மானுவல் பாரோசா மற்றும் ஐரோப்பிய
ஒன்றிய நிதி ஆணையாளர் ஒல்லி ரெஹ்ன் ஆகியோர் கருத்துக்களுக்கு
மேர்க்கல் விடையிருத்தார்;
அவர்கள் இருவரும்
EFSF
விரிவாக்கப்பட வேண்டும் என்று திங்கள்
கூட்டத்திற்கு முன்னதாக அழைப்புக்களை வெளியிட்டிருந்தனர்.
மேர்க்கெலின் விடையிறுப்பு பாராசோவிற்குத்
தெளிவான அவமதிப்பு என்று கருதப்பட்டது;
இவரை ஐரோப்பிய அரசியல் குழுத்தன்மையில்
ஜேர்மனிய சான்ஸ்லருடைய தொகுப்பில்தான் உள்ளார்;
சமீபத்தில் இவர் மீண்டும் ஐரோப்பிய ஆணையத்தின்
குழுவாக நியமிக்கப்பட்டது ஜேர்மனியின் ஆதரவு அதிகம் என்பதால்
எனக்கூறப்படுகிறது.
நிகழ்வைப் பற்றிய தன் அறிக்கையில்
கார்டியன்
ஜேர்மனிய சான்ஸ்லருக்கும் ஐரோப்பிய ஆணையத்தின் முக்கிய
அதிகாரிக்கும் இடையே திரைக்குப் பின்னால் கடுமையான வார்த்தைப்
பறிமாற்றங்கள் இருந்தது என்று விளக்கியுள்ளது.
“பகிரங்காமக
மெர்க்கெலும் அவருடைய நிதி மந்திரி வுல்ப்காங்க ஷௌபிளவும்
பாரோசாவின் குறுக்கீட்டை
“தேவையற்றது”
என்று விவரித்தனர்.
தனிப்பட்ட முறையில் சான்ஸ்லரின் அலுவலகம்
பாரோசாவை வாயை மூடிக் கொண்டு இருக்குமாறும் யூரோ வலைய
அராசாங்கங்கள் உத்தரவாதம் அளித்த
€400
பில்லியன் அவருடைய பணம் இல்லை என்பதால்
அதுபற்றி அவர் ஏதும் கூறத் தேவையில்லைஎன்று கூறிவிட்டது.
ஐரோப்பாவிற்குள் சீற்றக் கருத்துப் பறிமாற்றம்
பற்றிய மற்றும் ஒரு குறிப்பு இதே கட்டுரையில்
கூறப்பட்டுள்ளது;
அது போர்த்துக்கல்லின் பிரதம மந்திரி ஜோஸ்
சாக்ரடிஸ் ஜேர்மனிய சான்ஸ்லருக்கு ஐரோப்பிய ஒன்றியக்
கூட்டத்திற்கு முன் பெரும் திகைப்புக் கூடிய தொலைபேசி அழைப்பை
விடுத்திருந்தார்.
சந்தைகளின் பாரிய அழுத்தங்களை ஒட்டி,
சாக்ரடிஸ் மெர்க்கலை தான் என்ன செய்வது என்று
கேட்டார்;
மெர்க்கல் விரும்புவது எதையும் செய்வதாகவும்
இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தவும் பிணை
எடுப்பைத் தவிர்க்கச் செய்வதாகவும் உறுதிளித்தார்.
சாக்ரடிசைச் சிறது பொறுத்திருக்குமாறு கூறி,
மெர்க்கல் தன்னுடைய அலுவலகத்திற்கு அப்பொழுது
வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான டொமினிக்
ஸ்ட்ராஸ் கானிடம் ஆலோசனை கேட்டார்.
ஸ்ட்ராஸ்கான் உடனடியாக சாக்ரடிஸ் நாடிய உதவி
மறுக்கப்பட வேண்டும் என்றும் போர்த்துக்கல் பிரதம மந்திரி
சொன்னபடி செய்வார் என்று நம்புவதற்கில்லை என்றும் கூறிவிட்டார்.
பேர்லின் மீது ஐரோப்பிய அழுத்தம் மீண்டும்
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் ஜோன் குளோட் திறிசே மற்றும்
பெல்ஜிய நிதி மந்திரி டிடியர் ரேன்டெர்ஸும்
EFSF
ல் இருக்கும் எஞ்சிய நிதி திங்கள்
கூட்டத்திற்குள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு
விடுத்தபோது அதிகமாகியது.
நிதி மந்திரிகள் உச்சிமாநாட்டிலேயே,
இன்னும் அதிக பிளவுகள் வெளிப்பட்டன;
ஒரு தனிக்கூட்டம் யூரோப்பகுதி
உறுப்பினர்களுக்கு இடையே மூலோபாயம் பற்றி விவாதிக்க,
மூன்று
A
தரம் நிதியச் சந்தைகளில் இருந்து பெறுவதற்கு,
நடைபெற்றது;
இதில் ஆஸ்திரியா,
பின்லாந்து,
பிரான்ஸ்,ஜேர்மனி,
லுக்சம்பேர்க்,
நெதர்லாந்து ஆகியவை இருந்தன.
இக்கூட்டத்தின் விவாதங்கள் பற்றி விவரங்கள்
வெளிப்படவில்லை;
ஆனால் இந்த செல்வம் கூடுதலாக உள்ள ஐரோப்பிய
நாடுகள் தங்கள் தனிப் பேச்சுவார்த்தைகளை நடத்தின என்பது
குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தைத் தொடர்ந்து,
ஜேர்மனிய அரசாங்கம்
EFSF
நிதியத்தை அதன் மூலத் தொகையான
€440
பில்லியனுக்கு மீட்பதற்கு ஒப்புமையில் ஒரு
சிறிய அதிகத் தொகையைக் கொடுக்க அது தயார் என்பதைத்
தெளிவாக்கியது.
EFSF
அதிகாரங்களை விரிவுபடுத்தி அது ஐரோப்பிய மத்திய
வங்கி போல் அரசாங்கப் பத்திரங்களை வாங்குவதற்கு வகை செய்வது
பற்றி பின்னர் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுவிட்டது.
ஐரோப்பிய நிதி மந்திரிகள் ஐரோப்பிய
வங்கிகளுக்கு அழுத்தச் சோதனை என்னும் புதிய தொடர்களுக்கும்
ஒப்புக் கொண்டனர்;
ஆனால் இவற்றின் முடிவு இந்த ஆண்டு ஜூலை
மாதம்தான் வெளியிடப்படும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற முந்தைய சோதனைகள் தொடரின்
முடிவு பரந்த அளவில் கேலிக்கூத்து என்று விவரிக்கப்பட்டது.
அயர்லாந்தின் இரு முக்கிய நிதிய நிறுவனங்கள்,
நாட்டின் பொருளாதாரச் சரிவின் மையத்தில்
இருந்தவை—திவாலாகிவிட்ட
பாங்க் ஆப் அயர்லாந்து மற்றும் அலைட் ஐரிஷ் வங்கி ஆகியவை—கடந்த
ஆண்டு சோதனைகளின் போது சீராக உள்ளன என்று கூறப்பட்டுவிட்டது.
பிரஸ்ஸல்ஸில் இவ்வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற
ஐரோப்பிய நிதி மந்திரிகளின் உச்சிமாநாடு கடந்த ஆண்டில்
நடைபெற்ற அத்தகைய கூட்டங்கள் தொடரில் சமீபத்தியது ஆகும்.
முக்கிய ஐரோப்பிய அதிகாரிகள்—ஜோன்
குளோட் ஜங்கர் உச்சிமாநாடு
“மிக
அதிக அளவு ஒற்றுமைத் தன்மையை”
கொண்டிருந்தது என்றார்-
உடைய வெற்றுத்தன அறிவிப்புக்களை ஒதுக்கி
வைத்துப் பார்த்தால்,
கடந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கும் நாட்டுக்
குழுக்களுக்கும் இடையே வெளிப்பட்டுள்ள பிளவுகள் முறியும்
நிலைக்கு வந்துள்ளன என்பதுதான் தெளிவாகிறது.
உண்மையில்,
ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய நிறுவன
அமைப்புக்களும் ஒரு இலக்கில்தான் ஒன்றாக இணைந்துள்ளன:
அதாவது வங்கிகள் மற்றும் நிதியச் சந்தைகளின்
நலன்களுக்கு அவை முற்றிலும் தாழ்ந்து இருக்க வேண்டும் என்பதில்.
சர்வதேச நிதிய உயரடுக்கின் கொள்கையான எல்லா
இடங்களிலும் கடும் சிக்கனம்,
மற்றும் செல்வந்தர்களுக்க ஆதரவாக சமூக
ஆதாரங்கள் பெருமளவில் மறு பங்கீடு செய்யப்பட வேண்டும் என்பது
ஐரோப்பிய கண்டத்தையே நெருக்கடியை நோக்கி மகத்தான முறையில்
விரைவாகக் கொண்டு செல்கிறது.
2011
பற்றிய அதன் உலகப் பொருளாதார நிலைமை பற்றிய
சமீபத்திய அறிக்கையில்
UNCTAD
ஐரோப்பா அதன் நெருக்கடியில் இருந்து மீளும்
என்ற போலிப் பரவசத்திற்கு எதிராக எச்சரித்துள்ளது.
ஐரோப்பாவில்
2010ம்
ஆண்டு பொருளாதார வளர்ச்சி
“பல
முக்கிய பலவீனங்களை மூடிமறைத்துள்ளது”
என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தொழில்துறை உற்பத்தி கண்டம் நெடுகிலும்
2008ல்
அடைந்த அதன் உச்சக்கட்டத்தைவிட
12%
குறைவாக இருந்தது என்றும்
“மிக
ஆபத்தை வளர்க்கும் வகையில் மீட்பு பலவித வேகங்களில்
நடைபெறுகிறது.
ஒரு முனையில் ஜேர்மனியின் தலைமையில்
ஒப்புமையில் வலிமையுடன் மீட்பு காட்டப்படுகிறது…
அவை உலக வணிகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை
முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டன.
மறுமுனையிலோ நிதிய நெருக்கடியில் ஆழ்ந்துள்ள
கிரேக்கம்,
அயர்லாந்து,
போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் போன்றவை
மந்தநிலையில் தொடர்ந்து இருக்கும் அல்லது குறைந்த மீட்சியை
அடையும்….”
கடுமையான முறையில் அறிக்கை,
“கணிப்பிற்கு
இடர்கள் கீழ்நோக்கிய தன்மையைத்தான் கொண்டுள்ளன”
என்று குறிப்பிட்டு,
“நடைபெற்றுவரும்
நிதியச் சிக்கன நடவடிக்கைகள் அல்லது திட்டமிடப்பட்டுள்ளவை ஒரு
புதிய பொருளாதாரச் சரிவு என்னும் ஆபத்தை ஏற்படுத்தலாம்…
அல்லது புதிய நிதியச் சந்தைக் கொந்தளிப்பை
ஏற்படுத்தி”
“யூரோவின்
மீது நம்பிக்கையை”
குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் என்றும்
எச்சரிக்கிறது. |