World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

WikiLeaks and Tunisia

விக்கிலீக்ஸும் துனிசியாவும்

Patrick Martin
19 January 2011
Back to screen version

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வல்லுனர்கள் கடந்த வாரம் துனிசிய நிகழ்வுகளைமுதல் விக்கீலிக்ஸ் புரட்சி என்று விவரித்துள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளை முறை மற்றும் குற்றங்கள் மற்றும் உலகம் முழுவதும் அதனுடைய ஆதரவான நாடுகளின் கைக்கூலிக்கு இயங்கும்தனம் ஆகியவற்றை ஜூலியன் அசாஞ்ச் மற்றும் அவருடைய சக சிந்தனையாளர்கள் பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிட்ட தைரியமான பணியினால் ஏற்பட்ட தாக்கத்திற்கு வாஷிங்டனில் இருந்து வந்துள்ள எரிச்சல்மிக்க மரியாதை  எனலாம்.

துனிசில் இருந்து அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய தகவல் ஆவணங்கள் 10இனை விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்தியது. இவை அனைத்துமே அமெரிக்கத் தூதர் ரொபேர்ட் கொடெக்கினால் கையெழுத்திடப்பட்டவைவாடிக்கையாக அமெரிக்க அரசாங்கமும் அமெரிக்கச் செய்தி ஊடகமும் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்கள் முக்கியமானவையல்ல, “புதிதாக எதையும் வெளிப்படுத்தவில்லை, சொல்லப்போனால் அமெரிக்க இராஜதந்திர முறையைச் சாதகமாகக் காட்டுகின்றன என்று கூறப்படுவதை அதன் உள்ளடக்கம் பொய்யாக்குகிறது. இவற்றிற்கு அப்பால், தகவல் ஆவணங்கள் கணிசமான முறையில் துனிசிய ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளது, அதே போல் அமெரிக்காதலையசைத்து, கண்சிமிட்டிநாட்டின் சிறைச்சாலைகளில் சித்திரவதை செய்யப்படுவது பற்றி ஏற்கும் அணுகுமுறையையும் அம்பலப்படுத்துகின்றன.

இவை உலகெங்கிலும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு  வாஷிங்டன் ஆதரவு கொடுக்கிறது என்ற போலித்தன மோசடியையும் அம்பலப்படுத்துகின்றன.

ஏழு தகவல் ஆவணங்களில் ஆட்சியைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன. ஜனாதிபதி ஜேன் எல் அபடைன் பென் அலியின், உடல்நிலை, அவர் குடும்பத்தின் ஊழல், குறிப்பாக அவருடைய மனைவியின் சகோதர, சகோதரிகள், Trabelsis (மனைவியின் உறவினர்கள்) பற்றியும் மற்றும் பென் அலிக்குப் பிந்தைய துனிசியாவை உருவாக்குவதில் அமெரிக்காவின் விருப்பத் தேர்வுகள் ஆகியவை பற்றிக் கருத்துக் கூறுகின்றன.

சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு:

ஜூன் 23, 2008: இப்பொழுது இழிந்த செய்தித்தலைப்பில்துனிசியாவில் ஊழல்: உங்களிடம் இருப்பது என்னுடையதேஎன்று உள்ள தகவல். இது குறிப்பாக ட்ராபெல்சிசின் செயல்களை விரிவாகக் கூறுகிறது-அதில் குறைந்தது முதல் சீமாட்டியின் 10 நன்கு அறியப்பட்ட சகோதர, சகோதரிகள், அவர்களுடைய குழந்தைகள் அடங்குவர்-மற்றும் பென் அலியின் ஏழு சகோதர, சகோதரிகள் மற்றும் ஜனாதிபதியின் முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தைகள் ஆகியோர் உள்ளனர். துனிசியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கியமான வணிகமும் இந்த விரிவாக்கப்பட்ட குடும்ப உறுப்பினருடன் தொடர்பு கொண்டது என்று அறிக்கை கூறுகிறது. மேலும், “அது நிதி என்றாலும், வேலைகள், நிலம், சொத்து அல்லது ஏன் உங்கள் படகு என்றாலும், ஜனாதிபதி பென் அலியின் குடும்பம் அதை விரும்புகிறது என்றால், அது தேவையானதைப் பெற்றுவிடும்.”

கேளிக்கைப் படகு லாசர்ட் ப்ரெர்ஸ் (Lazard Frres) என்னும் முதலீட்டு வங்கியின் பாரிஸ் அலுவலகத்தின் தலைமை நிர்வாகிக்குச் சொந்தமானது. இது இரு ட்ராபெல்சிகளால் கைப்பற்றப்பட்டு வேறு வர்ணம் பூசப்பட்டது. இருவரில் ஒருவரான இமத் ட்ராபெல்சி, பென் அலியின் நெருங்கிய உறவினர், துனிஸ் விமான நிலையத்தில் வார இறுதியில் நாட்டை விட்டுத் தப்பி ஓட முயன்றபோது குத்திக் கொல்லப்பட்டார். அப்பொழுது ஆட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டளர்களின் கூட்டம் ஒன்று அவரை வெறுக்கப்பட்டமுதல் குடும்பத்தின்”  உறுப்பினர் என்று அடையாளம் கண்டது.

ஜூலை 17, 2009: “ஒரு தொந்திரவிற்குட்பட்ட துனிசியா: நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் ஒரு தகவல் தந்தி, ஆட்சியைஇழிவானதுஎன்று விவரித்து பென் அலிக்குப் பின் யார் வருவார் என்பது தெளிவில்லை என்று கூறியுள்ளது. “பல துனிசிய மக்கள் அரசியல் சுதந்திரம் இல்லாததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர், முதல் குடும்பத்தின் ஊழல் பற்றிச் சீற்றம் கொண்டுள்ளனர், அதே போல் உயர்ந்தளவு வேலையின்மை, பிராந்தியத்தில் சமத்துவமின்மை பற்றியும் சீற்றம் கொண்டுள்ளனர்என்று அமெரிக்கத் தூதர் தகவல் கொடுக்கிறார். 2009 தேர்தல் ஆண்டு என்னும் நிலையில், “பென் அலி மீண்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் வழிவகை சுதந்திரமாகவோ, நியாயமாகவோ இருக்காது.”

ஜூலை 27, 2009: இத்தகவல் ஆவணம் தூதர் கோடெக் மற்றும் அவருடைய மனைவிக்கு, பென் அலியின் மருமகன் மஹ்மத் சமெர் எல் மடேரி மற்றும் ஜனாதிபதியின் மகள் ஆகியோரின் வீட்டில் கொடுக்கப்பட்ட தனிப்பட்ட விருந்து பற்றிய விவரத்தைக் கூறுகிறது. குடும்பம் வாழும் பெரும் ஆடம்பரச் சூழ்நிலையை கோடெக் விவரிக்கிறார். இதில் (ஒரு பாலைவன நாட்டில்) நீரூற்றுக்கள், கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ஒரு புலி ஆகியவை உள்ளன. எல் மடேரிஅதிகம் கோருபவர், வெற்றுத்தனமானவர், திருப்தி செய்வது கடினம்”, அவருடைய மனைவிகபடமற்றவர், அதிகம் அறியாதவர்என்று அழைத்து, “எல் மடேரி மற்றும் நெஸ்ரைன் வாழும் ஆடம்பர வாழ்க்கை மற்றும் அவர்கள் நடந்து கொள்ளும் முறை ஏன் அவர்களும் பிற பென் அலி குடும்பத்தினரும் சில துனிசியார்களால் விரும்பப்படவில்லை, ஏன் வெறுக்கப்படுகின்றனர் என்பதைத் தெளிவாக்குகிறது.”

அமெரிக்கச் செய்தி ஊடகம் இந்த ஊழல் தகவல் ஆவணங்களைப் பற்றிக் குறிப்பிட்டது. ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட மூன்று மற்ற தகவல் தந்திகள் பற்றி மௌனமாக இருந்தது. அவை புஷ் மற்றும் ஒபாமாவின் கீழ் அமெரிக்க நிர்வாகத்தின் நேரடி ஒத்துழைப்பு, துனிசிய சிறைகளில்  சித்திரவதை எவ்வாறு இருந்தது என்பது பற்றி ஆவணப்படுத்தியுள்ளன.

மார்ச் 3, 2008: இத்தகவல் ஆவணம் துனிசிக்கு அமெரிக்க உதவி வெளிவிவகாரச் செயலர் டேவிட் வெல்ஷ் பயங்கரவாதம் பற்றியும் மற்ற பிராந்திய பிரச்சினைகள் பற்றியும் பென் அலியுடன் பேச்சுக்கள் நடத்த வந்த மூன்று நாள் பயணத்தின் விளைவுகளைப் பற்றித் தெரிவிக்கிறது. துனிசிய மற்றும் அமெரிக்க விசாரிப்பவர்கள் கையாளும் சித்திரவதைப் பயன்பாடு பற்றி இதிலுள்ள சொல்லாட்சி கடுமையான உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளது.

ஜூன் 18, 2009: இத்தகவல் ஆவணம், தூதர், செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவருடன் நடத்திய விவாதம் பற்றிக் குறிப்பிடுகிறது. பிந்தையவர் துனிசியச் சிறைகளுக்கு இரகசிய உடன்பாட்டினால் கட்டுப்பட்டு பார்வையிடச் சென்ற பின்னர் தான்இத்தூதரின் இடத்தில் இருக்க விரும்ப மாட்டேன்என்று  கூறினார். அதுவும் குவண்டநாமோ குடா கைதிகளை துனிசியப் பொறுப்பில் மாற்றுவது பற்றி பரிந்துரை கொடுக்கும்போது.

ஜூன் 23, 2009: ஐந்து நாட்களுக்குப் பின்னர் ஒரு தகவல் ஆவணம் துனிசிய அரசாங்கம் கைதிகளை துனிசிப் பொறுப்பில் ஒப்படைப்பதை உறுதிப்படுத்த ஐரோப்பிய நாடுகள் துனிசியக் கைதிகளை குவண்டநாமோவில் இருந்து அழைத்துவர வேண்டாம் எனக்கோரி அழுத்தம் கொடுப்பது பற்றி உள்ளது. பிரிட்டிஷ் மற்றும் கனேடியத் தூதர்கள் துனிசியா வாடிக்கையாகக் கைதிகளைச் சித்திரவதை செய்கிறது என்று கூறிய கருத்துக்கள் மேற்கோளிடப்பட்டுள்ளன.

தகவல் ஆவணங்களில் உள்ள பொருளுரை அமெரிக்க அரசாங்கம் கசிவுகளைப் பற்றி ஏன் பெரும் சீற்றம் அடைந்தது, அது ஏன் அசாஞ்சின் மீது குற்றவிசாரணை நடத்தவும், விக்கிலீக்ஸ் வெளிவருவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாடுகிறது என்பதையும் நிரூபிக்கிறது. இந்த வெளிப்பாடுகள் பென் அலியின் ஆட்சியைக் கீழறுக்கும் உறுதியான அரசியல் தாக்கத்தையும் மற்றும் பின்னர் சர்வாதிகாரியை அகற்றிய வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு பெரும் பங்கைக் கொண்டிருந்தன.

அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அச்சுறுத்தலைப் பிரதிபலிக்கும் அமெரிக்கத் இராஜதந்திர இரகசியங்களை அம்பலப்படுத்துகிறது என்பதற்கு மிகவும் அப்பால் துனிசிய நிகழ்வுகள் பெருகிய சமூக மற்றும் அரசியல் நெருக்கடி மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெடிப்புத் தன்மையுடைய வர்க்க அழுத்தங்கள் உள்ள நிலையில், வாஷிங்டனின் புவிசார் மூலோபாய நிலைப்பாட்டிற்கு தீவிர பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

இணைய தளம் அரசியல் சூழ்நிலையை தோற்றுவிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது மட்டுமின்றி, துனிசியாவில் வெகுஜன இயக்கம் அமைக்கப்பட, அணிதிரட்டப்படவும் பெரும் பங்கைக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான வீடுகளில் தயாரிக்கப்பட்ட வீடியோக் காட்சிகள், பொலிஸ் அடக்குமுறை மற்றும் வெகுஜன எதிர்ப்பைக் காட்டுபவை வலைத் தளத்தில் காட்டப்பட்டனதுனிசிய மக்கள் பேஸ்புக், ட்விட்டர் (Facebook, Twitter) இன்னும் பல சமூக இணைய தளங்களையும் ஆட்சிக்கு எதிரான மக்களைத் திரட்டவும், இயக்கவும், அமைக்கவும் பயன்படுத்தினர்.

துனிசிய நிகழ்ச்சிகளில் இணைய தளத்தின் பங்கிற்கு விடையிறுக்கும் வகையில் அமெரிக்க அரசாங்கம் வலைத்தள அரசியல் உள்ளடக்கத்தை தணிக்கை செய்தல், கட்டுப்படுத்துதல் என்றும் தன் முயற்சிகளை முடுக்கிவிடும் என்பது உறுதி.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க விரும்பவர்கள், ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் அசாஞ்ச் மற்றும் விக்கிலீக்ஸின் பாதுகாப்பிற்கு துணை நிற்க வேண்டிய தேவையைத்தான் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது