WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
US
pressure triggers collapse of Lebanese government
அமெரிக்க
அழுத்தம்
லெபனான்
அரசாங்கத்தின்
வீழ்ச்சியைத்
தூண்டுகிறது
By Bill
Van Auken
14 January 2011
Back to
screen version
“தேசிய
ஐக்கிய”
அராசங்கம்
என்று
தவறாகப்
பெயர்
சூட்டப்பட்டுள்ள
லெபனானின்
அரசாங்கம்
ஹெஸ்புல்லா
தலைமையிலான
அரசியல்
முகாம்,
முன்னாள்
பிரதம
மந்திரி
ரபிக்
அல்-ஹரிரி
2005ல்
படுகொலை
செய்யப்பட்டதற்கான
காரணங்களை
ஐ.நா.
விசாரணை
நடத்துவது
என்னும்
கொள்கை
பற்றிய
உடன்பாட்டைக்
காணாததால்,
ஆதரவை
விலக்கிக்
கொண்ட
வகையில்
புதன்கிழமையன்று
வீழ்ச்சியுற்றது.
அரசாங்கத்தின்
சரிவை
அடிக்கோடிட்டுக்
காட்டுவது
பெருகிய
சமூக,
அரசியல்
அழுத்தங்கள்
லெபனானில்
இருப்பது
ஆகும்.
இவை
வெளித்
தலையீடுகளினால்
கூடுதல்
உந்துதல்
பெறுகின்றன.
குறிப்பாக
வாஷிங்டனிலிருந்து
வரும்
சக்தி
வாய்ந்த
தலையீட்டினாலாகும்.
நாட்டில்
ஒரு
புதிய
அரசியல்
கொந்தளிப்புக்காலம்
தொடங்கியிருப்பது
உள்நாட்டுக்
குறும்
பற்றாளர்
குழுக்களுக்கு
இடையேயான
மோதல்
மற்றும்
பிராந்தியத்திலேயே
போர்
என்னும்
அச்சுறுத்தலைக்
கொண்டுள்ளது.
படுகொலை
செய்யப்பட்ட
தலைவரின்
மகனான
தற்போதைய
பிரதம
மந்திரி
சாத்
அல்-ஹரிரி
வாஷிங்டனில்
ஜனாதிபதி
பாரக்
ஒபாமா
மற்றும்
அமெரிக்க
அரச அலுவக்கத்துடன்
ஆலோசனை
நடத்தினார்.
அப்பொழுது
எதிர்த்தரப்பு
மந்திரிகள்
10 பேர்,
மார்ச்
8 கூட்டணியினர்
என்ற
பெயரைக்
கொண்டவர்கள்
கூட்டாட்சியிலிருந்து
தங்கள்
இராஜிநாமாவை
அறிவித்தனர்.
ஹெஸ்புல்லா
ஷியைட்
கட்சி
மற்றும்
பாராளுமன்றத்
தலைவர்
நபி
பெனியின்
தலைமையிலுள்ள
போராளித்தன
ஷியைட்
கட்சியான
அமல்,
மற்றும்
மரோனைட்டின்
முன்னாள்
தளபதி
மைக்கேல்
ஔனின்
கீழுள்ள
சுதந்திர தேசபக்த
இயக்கம் (Free
Patriotic Movement)
ஆகியவற்றைச் சேர்ந்த
மந்திரிகள்
மார்ச்
8ல்
இராஜிநாமா
செய்தனர்.
பின்னர்
11ம்
தேதி
லெபனானின்
ஜனாதிபதி
மைக்கேல்
ஸ்லீமனுக்கு
விசுவாசமாக
இருக்கும்
ஒரு
மந்திரியும்
சேர்ந்தார்.
லெபனிய
அரசியலமைப்பின்படி,
மூன்றில்
ஒரு
பங்கு
மற்றும்
ஒரு
மந்திரி
மந்திரிசபையிலிருந்து
இராஜிநாமா
செய்துவிட்டால்
ஒரு
புதிய
அரசாங்கம்
அமைக்கப்பட
வேண்டும்.
இந்த
மோதல்
ஹெஸ்புல்லா
தலைமையிலுள்ள
எதிர்க்கட்சியை
ஹரிரியிடம்
விசுவாசமாக
உள்ள
மார்ச்
14 கூட்டணி
என்று
அழைக்கப்படுபதற்கு
எதிராக
நிலைநிறுத்தியுள்ளது.
இக்கூட்டணியின்
சுன்னி
முஸ்லிம்
கட்சிகள்,
வாலிட்
ஜும்ப்ளாட்டின்
ட்ரூஸ்
கட்சி
மற்றும்
பலாங்கிஸ்ட்
கிறிஸ்துவக்
குழுக்களும்
உள்ளன.
இரு
முகாம்களும்
மார்ச்
8, மார்ச்
14 அன்று
நிகழவுள்ள
போட்டி
ஆர்ப்பாட்டங்களுக்கு
அழைப்பு
விடுத்துள்ளன.
முதலாவது
சிரியாவின்
பங்கிற்கு
ஆதரவு
கொடுக்கிறது,
இரண்டாவது
சிரியச்
செல்வாக்கு
முற்றுப்பெற
வேண்டும்
என்று
கோருகிறது.
அரசாங்கத்தின்
முறிவிற்கு
உடனடியாகத்
தூண்டுதல்
கொடுத்தது
மார்ச்
8 கூட்டு
மற்றும்
மார்ச்
14 முகாமுடன்
முறையாக
பிணைந்துள்ள
சிரிய,
சௌதி
அரேபிய
முயற்சிகள்
ஐ.நா.
ஆதரவு
கொண்ட
லெபனானுக்கான
சிறப்பு
நீதிமன்றம்
(STL) பற்றி
பேச்சுவார்த்தைகள்
மூலம்
உடன்பாடு
காணவேண்டும்
என்பது
முட்டுச்சந்தில்
நிற்பதுதான்.
STL
ஆனது,
2005ம்
ஆண்டு
ரபிக்
அல்-ஹரிரியின்
படுகொலை
தொடர்பான
ஹெஸ்புல்லா
“போக்கிரித்தன”
உறுப்பினர்களை
குற்றச்சாட்டிற்கு
உட்படுத்தும்
என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெஸ்புல்லா
பில்லியனரும்
முன்னாள்
பிரதம
மந்திரியுமாக
இருந்தவரை
கொலையில்
எத்தொடர்பும்
இல்லை
என்று
மறுத்து,
இந்நீதிமன்றம்
வாஷிங்டன்
மற்றும்
இஸ்ரேல்
லெபனானில்
தலையீடு
செய்வதற்கு
ஒரு
கருவியாகச்
செயல்படுகிறது
என்று
குற்றஞ்சாட்டியுள்ளது.
பலமுறையும்
ஹெஸ்புல்லா
முகாம்
பிரதம
மந்திரி
சாத்
அல்-ஹரிரி
ஒரு
காபினெட்
கூட்டத்தைக்
கூட்டி
நீதிமன்றம்
பற்றிய
பொது
மனப்பாங்கை
விவாதிக்க
வேண்டும்
என்று
கோரியுள்ளது.
அரசாங்கம்
அதன்
நடவடிக்கைகளிலிருந்து
பின்
வாங்க
வேண்டும்,
லெபனிய
நீதிபதிகளை
நீதிமன்றத்திலிருந்து
திரும்பப்
பெற
வேண்டும்,
அதற்கான
நிதிக்கு
அரசாங்கத்தின்
பங்கை
வெட்டிவிட
வேண்டும்
என்றும்
ஹெஸ்புல்லா
கோரியுள்ளது.
“போலிச்
சாட்சிகள்”
என்று
அழைக்கப்படுபவர்களைப்
பற்றிய
விவாதமும்
தேவை
என்று
எதிர்க்கட்சி
கோரியுள்ளது.
இந்த
வேறுபாடு
நீதிமன்றத்தில்
தயாரித்துக்
கொடுக்கப்பட்ட
சாட்சியத்தில்
உள்ளது.
அது
சிரியா
மற்றும்
சிரிய
ஆதரவு
காட்டும்
நான்கு
லெபனியத்
தளபதிகளை
படுகொலையில்
தொடர்பு
படுத்தும்
முயற்சியில்
ஈடுபட்டிருந்தது.
சமீபத்தில்
வெளியிடப்பட்டுள்ள
விக்கிலீக்ஸ்
தகவல்
ஆவணங்களில்
ஒன்று
பெய்ரூட்
அமெரிக்கத்
தூதரகத்திலிருந்து
மே
2008ல்
அனுப்பப்பட்டது,
STL ன்
மூத்த
நீதிபதி
டானியல்
பெல்லார்மேர்
சிரியாவிற்கு
எதிராக
“தன்னிடம்
வழக்கு
இல்லை”
என்று
ஒப்புக்
கொண்டதாக
மேற்கோளிட்டுக்
கூறியுள்ளது.
கொலைக்கு
சிரியா
ஊக்கம்
கொடுத்தது
என்ற
கருத்தை
முதலில்
முன்வைத்தபின்,
நீதிமன்றம் பின்னர்
சாட்சிகளின்
சாட்சியங்களுக்கு
ஆதாரம்
இல்லை
என்று
கூறி
நான்கு
லெபனியத்
தளபதிகளை
விடுவித்தது.
இவர்கள்
நான்கு
ஆண்டுகள்
குற்றச்சாட்டுக்கள்
ஏதும்
இல்லாமல்
சிறையில்
வைக்கப்பட்டிருந்தனர்.
தளபதிகளில்
ஒருவர்,
தவறாகக்
காவலில்
வைக்கப்பட்டிருந்ததற்காக
சிரியாவில்
ஒரு
வழக்கைத்
தொடர்ந்தார்.
இதையொட்டி
கிட்டத்தட்ட
30 அரசியல்வாதிகள்
மற்றும்
செய்தியாளர்களும்
லெபனானினாலும்,
மற்ற
இடங்களிலும்
குற்றச்சாட்டை
எதிர்கொண்டுள்ளனர்.
ட்ரூஸ்
தலைவரான
வாலிட்
ஜும்ப்ளாட்
AFP செய்தி
அமைப்பிடம்
கூறினார்:
“நீதிமன்றத்தைப்
பொறுத்தவரை
ஒரு
முக்கிய
சலுகைகைய
அறிவிக்கும்
விளிம்பில்
சாத்
ஹரிரி
இருந்தார்,
ஆனால்
மந்திர
சக்திகள்
அவரை
அவ்வாறு
செய்யவிடாமல்
செய்துவிட்டன.”
ஜும்ப்ளாட்
“இச்சக்திகளுடைய”
அடையாளங்கள்
பற்றி
விளக்கவில்லை
என்றாலும்,
மோதலில்
சௌதி-சிரிய
மத்தியஸ்த்தை
அகற்றுவதற்கான
முக்கிய
அழுத்தம்
வாஷிங்டன்
மற்றும்
பாரிசிலிருந்து
வந்தது
என்பது
தெளிவு.
இக்கருத்து
இன்னும்
வெளிப்படையாக
எரிசக்தித்
துறை
மந்திரி
ஜிப்ரல்
பசிலினால்
முன்வைக்கப்பட்டது.
இவர்தான்
முதலில்
இராஜிநாமா
செய்த
10 மந்திரிகளில்
ஒருவராவார்.
லெபனானின்
Daily Star இடம்,
“மறுபக்கம்
வெளி,
குறிப்பாக
அமெரிக்க
அழுத்தத்திற்கு
தலை
வணங்கியது,
சௌதி-சிரிய
கருத்துக்கள்,
ஆலோசனைகள்,
விருப்பங்கள்
ஆகியவற்வறைப்
புறக்கணித்தது”
என்றார்.
இதே
போல்
நிர்வாக
வளர்ச்சித்
துறையின்
அரச
மந்திரியான
மஹ்மத்
நீஷ்
கூறினார்:
“அரேபிய
முயற்சியை
நாம்
நேரிய
முறையில்
சமாளித்தோம்.
அது
பற்றிப்
பேரம் கூட
நடத்தினோம்.
ஆனால்
அமெரிக்கக்
குறுக்கீட்டின்
விளைவாகவும்
மறுபக்கம்
அதை
எதிர்கொள்ள
முடியாத
நிலையிலும்,
இந்த
முயற்சி
தீர்வின்றிப்
போய்விட்டது.”
அமைச்சரவை
கலைக்கப்பட்டதை
தொடர்ந்து
அவசரமாக
வாஷிங்டனுக்கு
சென்றிருந்த
சாத்
அல்-ஹரிரி
பாரிஸில்
பிரெஞ்சு
ஜனாதிபதி
நிக்கோலா
சார்க்கோசியைச்
சந்திப்பதற்கும்
சென்றிருந்தார்.
லெபனானில்
தன்
நலன்களைத்
தொடர
ஒபாமா
நிர்வாகம்
நீதிமன்றத்தை ஒரு
கருவியாக
காண்கிறது.
குறிப்பாக
ஹெஸ்புல்லாவை
வலுவிழக்கச்
செய்து
அதற்கு
எதிராக
அதன்
முக்கிய
சர்வதேச
நட்பு
நாடான
ஈரான் மீது
பெரும்
தாக்குதலை
நடத்தவும்
முயல்கிறது.
வெளியுறவுச்
செயலர்
ஹிலாரி
கிளின்டன்
அமைச்சரவை
இராஜிநாமாவை
எதிர்கொள்ளும்
வகையில்
விடுத்த
அறிக்கை
ஒன்று
இதைத்
தெளிவாக்குகிறது.
“இன்று
நடந்தது
லெபனானுக்கு
உள்ளேயும்
வெளியேயும்
உள்ள
சக்திகள்
நீதியைத்
தகர்த்து
லெபனானில்
ஸ்திரப்பாடு,
முன்னேற்றம்
ஆகியவற்வறைக்
கீழறுக்கும்
வெளிப்படையான
முயற்சி
என்றுதான்
நாம்
காண்கிறோம்”
என்று
கட்டார்
தோஹாவில்
ஒரு
செய்தியாளர்
கூட்டத்தில்
அவர்
கூறினார்.
“லெபனான்
இப்பொழுது
அதன்
நலன்களின் பின்னே
ஒன்றுபட
வேண்டும்.
லெபனிய
மக்கள்,
அரசியல்
கட்சிகளின்
வேறுபாடுகளுக்கு
அப்பால்
செல்ல
வேண்டும்.
அரசியல்
கட்சிகள்
ஒன்றும்
விசாரணைக்கு
உட்படாது,
தனிநபர்கள்தான்.”
ஹெஸ்புல்லாவின்
நடவடிக்கை
“பொறுப்பைக்
கைவிடும்
முயற்சி”
ஆகும்
என்றார்
அவர்.
அவருடைய
இத்தகைய
முற்றிலும்
பாசாங்குத்தனக்
கருத்துக்கள்
ஹெஸ்புல்லா
மீது
வாஷிங்டனின்
உத்தியோகபூர்வ
உளப்பாங்குப்
பின்னணியில்
வெளிப்படையாகின்றன.
அதை
ஒரு
வெளிநாட்டுப்
பயங்கரவாத
அமைப்பு
என்று
வாஷிங்டன்
பெயரிட்டுள்ளது.
ஏனெனில்
தெற்கு
லெபனானில்
இஸ்ரேலிய
ஆக்கிரமிப்பிற்கு
அது
ஆயுதமேந்திய
எதிர்ப்பைக்
காட்டியிருந்தது.
ஜூன்
2009 தேர்தலைத்
தொடர்ந்து
சாட்
அல்-ஹரிரி
அமைத்துள்ள
கூட்டணி
அரசாங்கம்
ஆரம்பத்தில்
இருந்தே
உறுதியற்ற
தன்மையில்தான்
உள்ளது.
ஏனெனில்
ஹெஸ்புல்லா
திறமையான
தடுப்பதிகாரத்தைச்
செயல்படுத்தி
வருகிறது.
அல்-ஹரிரியின்
கூட்டணி
ஆட்சி
பாராளுமன்றத்தில்
மிகச்
சிறிய
பெரும்பான்மையை
கொண்டது.
அதே
நேரத்தில்
ஹெஸ்புல்லா
மற்றும்
அதன்
கூட்டுக்
கட்சிகள்
மக்கள்
வாக்குப்
பதிவு
எண்ணிக்கையில்
பெரும்பான்மையைக்
கொண்டிருந்தன.
லெபனானின்
ஜனநாயக
முறையற்ற
ஏற்கப்பட்ட
அதிகாரப்
பகிர்வு
வழிப்படி,
பாராளுமன்ற
இடங்கள்
கிறிஸ்துவர்கள்,
முஸ்லிம்களால்
சமமாகப்
பகிர்ந்து
கொள்ளப்படுகின்றன.
கிறிஸ்துவர்கள்
கிட்டத்தட்ட
நாட்டின்
மொத்த
மக்கட் தொகையான
4 மில்லியன்
மக்களில் மூன்றில்
ஒரு
பங்குதான்
என்றாலும்
இந்நிலைப்பாடு
உள்ளது.
இப்பொழுது
மக்கட்தொகையில்
40
சதவிகிதத்திலிருந்து
மிகப்
பெரிய
confessional
குழுவாக
இருக்கும்
ஷியைட்டுக்கள்
வரலாற்றளவில்
மிகக்
குறைந்த
விதத்தில்தான்
அரசாங்கத்தில்
பிரதிநிதித்துவப்படுகின்றனர்.
ஆனால்
இப்பொழுது
Daily Star மார்ச்
8 கூட்டிற்குள்
உள்ள
ஆதாரங்கள்
128 உறுப்பினர்கள்
கொண்ட
பாராளுமன்றத்தில்
பெரும்பான்மை
கொண்டிருப்பதாகத்
தெரிவிக்கின்றன.
மேலும்
இம்முகாம்
பிரதம
மந்திரிப்
பதவிக்கு
தன்
வேட்பாளரைப்
பெயரிடக்கூடும்
என்றும்
குறிப்புக்
காட்டியுள்ளன.
இத்தகைய
பெரும்பான்மை
இருந்தாலும்,
வாஷிங்டன்
பலமுறையும்
ஹெஸ்புல்லா
தலைமையிலான
கூட்டணி
லெபனானில்
அரசாங்கம்
அமைப்பதை
அப்பகுதியில்
தன்
மூலோபாய
நலன்களுக்கு
நேரடி
அச்சுறுத்தல்
என்று
காணும்
எனவும்,
உறுதி
குலைக்கும்
நடவடிக்கைகளில்
குவிப்புக்
காட்டும்
என்றும்,
ஏன்
நேரடி
இராணுவ
ஆக்கிரமிப்புக் கூட
செய்யலாம்
என்றும்
தெளிவாக்கியுள்ளது.
அல்-ஹரிரி
கால
வரையறையற்று
அதிகாரத்தில்
இடைக்கால
பிரதமராக
ஒரு
“தற்காலிகப்
பொறுப்பு
கொண்ட”
அரசாங்கத்தில்
தன்னைத்
தக்க
வைத்துக்
கொள்ளுவார்
என்று
அமெரிக்க
நிர்வாகம்
எதிர்பார்ப்பது
போல்
தோன்றுகிறது.
இதற்கிடையில்
இஸ்ரேலிய
இராணுவம்
லெபனானின்
எல்லைக்கு
அருகேயுள்ள
தன்
சக்திகளை
உயர்
எச்சரிக்கை
நிலையில்
இருத்தியுள்ளதாக
அறிவித்துள்ளது.
“இஸ்ரேலின்
வடக்கு
கட்டுப்பாட்டுத்
தளத்தின்
மூத்த
அதிகாரி
ஒருவர்,
லெபனானில்
நடக்கும்
நிகழ்வுகளை
தளபதிகள்
ஏற்கனவே
நிலைகுலைந்துள்ள
வடக்கு
எல்லையில்
சூடுபிடிப்பதற்கு
ஹெஸ்புல்லா
ஏதேனும்
முயற்சிகளை
மேற்கொள்ளுமா
என
உன்னிப்பாகக்
கவனித்து
வருகின்றனர்
என்றும்
அது
அரசியல்
கொந்தளிப்பில்
இருந்து
கவனத்தைத்
திசைதிருப்பக்கூடிய
முயற்சியாக
இருக்கலாம்”
என்றும்
இஸ்ரேலிய
நாளேடு
Haaretz வியாழனன்று
கூறியுள்ளது.
தெற்கு
லெபனான்
மற்றும்
பெய்ரூட்டின்
தெற்குப்
பிறநகரங்களை
பெரும்
சேதத்திற்கு
உட்படுத்திய
மிருகத்தனமான
2006ம் ஆண்டுப்
போரை
இஸ்ரேல்
நடத்தியது.
அதில்
கிட்டத்தட்ட
1,200 லெபனியர்கள்
கொல்லப்பட்டனர்.
5,000க்கும்
மேற்பட்டவர்கள்
காயமுற்றனர்.
இவர்களில்
அதிகம்
பாதிக்கப்பட்டவர்கள்
சாதாரண
குடிமக்கள்
ஆவர். |