WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
எதிர்ப்புக்கள் தொடர்வதால்,
துனிசிய
“ஐக்கிய”
அரசாங்கம் பிளவடைகிறது
By Chris Marsden
19 January 2011
Use this version to print | Send
feedback
அமைக்கப்பட்டு ஒரு நாளுக்கும் குறைவாகவுள்ள
நிலையில்,
ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலியினுடைய கட்சியின்
ஆதிக்கத்திற்கு மக்களின் பரந்த
விரோதப்
போக்கின் காரணமாக,
குறைந்தது ஐந்து மந்திரிகளாவது,
அனேகமாக இன்னும் அதிகமானவர்கள் கூட துனிசியாவின் தேசிய ஐக்கிய
அரசாங்கத்திலிருந்து வெளியேற்றி அகற்றப்படும் கட்டாயத்தில்
உள்ளனர்.
பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிக
முக்கியத்துவம் இல்லாத அமைச்சரகங்களை பெற்றனர். ஆனால் புதிய
அரசாங்கமானது பென் அலியின் அரசியலமைப்பு ஜனநாயக கூட்டின்
(Constitutional Democratic Rally -RDC)
ஒரு
முகமே தவிர வேறு ஒன்றுமில்லை என்ற உண்மையை எவரிடமும்
ஏமாற்றமுடியவில்லை.
பிரதம மந்திரி கன்னொச்சி முந்தைய
அரசாங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஐந்து மந்திரிகளில்
ஒருவராவார். மற்றவர்களில் இடைக்கால ஜனாதிபதி போவிட் மெஹ்காசா,
உள்துறை மந்திரி அஹ்மத் பிரியா,
வெளியுறவு மந்திரி கமல் மோர்ஜனே மற்றும் பாதுகாப்பு,
நிதி
மந்திரிகளும் அடங்கியிருந்தனர்.
RDC
உறுப்பினர்கள் அனைத்து முக்கியப் பதவிகளையும் பெற்றனர்,
எதிர்த்தரப்பினர் வண்ணப்பூச்சுத் தோற்றத்திற்காக சிறிய பதவிகளை,
சில
வேண்டுமேன்றே தோற்றுவிக்கப்பட்டவற்றை ஏற்றனர்.
ஆனால் எதிர்ப்புக்களைத் தொடர்ந்து புதிய
அரசாங்கத்தில்
RDC
பங்கு
பற்றிக் குவிப்புக் காட்டத் தொடங்கியவுடன்,
UCTT
எனப்படும் துனிசியத் தொழிலாளர்களின் பொதுத்
தொழிற்சங்கத்திலிருந்து வந்த மூன்று மந்திரிகள்,
இளநிலை
போக்குவரத்து மந்திரி அனௌர் பென் குவிட்டர்,
இலாகா
இல்லாத மந்திரி அப்டெல்ஜெலில் பெடௌல் மற்றும் இளநிலை தொழிற்
துறை மந்திரி ஹௌசின் டிமசி ஆகியோர் வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து
FDLT
எனப்படும் சுதந்திர தொழிலாளர் ஜனநாயக அரங்குக் கட்சியின்
(Democratic Forum for Labour and Liberty)
சுகாதார மந்திரி முஸ்பாபா பென் ஜாபரும் விலகினார்.
கலாச்சாரத்துறை மந்திரி மௌபிடா தட்லும்
“இராஜிநாமா
செய்வது பற்றிப் பரிசீலிப்பதாக”
தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கன்னொச்சிக்கு அவருடைய அரசாங்கத்தை
நியாயப்படுத்துவதில் பெருகிய இடர்கள் இருந்தன.
பென்
அலியின் முன்னாள் உற்ற நண்பர்களின் ஜனநாயக வேட்கையை பறைசாற்றிய
அவர் ஒரு வானொலிப் பேட்டியில்,
“சூனிய
வேட்டை ஆடுவதை நாம் தவிர்க்க வேண்டும்,
தேசிய
சமரசத்திற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்…..
முன்னாள் ஜனாதிபதியின்,
முந்தைய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த பல மந்திரிகள் பொது
நலனுக்குத் தங்களால் இயன்றவரை பாடுபட்டிருந்தனர்”
என்று
கூறினார்.
“அவர்கள்
கைகள் கறைபடியாதவை. அவர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் தங்கள்
பணிகளைச் செய்தனர்,
சிலர்
தீமை இழைக்கும் திறனையும் குறைக்க முயன்றனர்”
என்று
அவர் கூறினார்.
பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியின் புதிய
மந்திரியான அஹ்மத் நஜிப் செப்பியின் தலைமையிலுள்ள பெரிய
எதிர்க்கட்சியான முற்போக்கு ஜனநாயகக் கட்சி நடத்திய கூட்டம்
வெடிப்புத் தன்மை நிறைந்திருந்தது.
கைகளில் தலையை புதைத்துக் கொண்டு செப்பி அமர்ந்திருக்கையில்,
ஒரு
கட்சி உறுப்பினர் கேட்டார்,
“ஒரு
கொலைகாரர்,
நம்
தலைவராக இன்று எப்படி இருக்க முடியும்?”
மாலைக்குள் பிரதம மந்திரியும் இடைக்கால
ஜனாதிபதியும்
RDC
யில்
இருந்து தங்கள் தாமதிக்கப்பட்ட இராஜிநாமாவை அறிவித்தனர்.
இந்த சூழ்ச்சிக் கையாளல்கள் தலைநகர் துனிஸ்,
மற்றும்
Stax, Regueb, Kasserine, Sidi Bouzid
ஆகிய
இடங்ஙளில் நடந்த சீற்றம் மிகுந்த எதிர்ப்புக்களை ஒட்டி
தேவையாயின.
பல மணி நேரமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருகிய
பொலிஸ் மிருகத்தனத்தை மீறி தங்கள் விரோதப் போக்கை
வெளிப்படுத்தி பென் அலி இல்லாத பென் அலி சர்வாதிகார ஆட்சியை
மறுகட்டமைக்கும் முயற்சியை எதிர்த்தனர்.
சில
நூறுபேர்
UGTT
தலைமையகத்திற்கு அணிவகுத்து அது அரசாங்கத்தில் பங்கு
பெற்றிருப்பதை எதிர்ப்பதற்கு சென்றபோது எதிர்ப்புக்கள்
தொடங்கின.
“பழைய
ஆட்சியில் இருந்து எஞ்சியவை தேவை இல்லை”
என்று
ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
“குடிமக்களே,
தியாகிகளே,
அதே
அரசாங்கம் தான் இன்னும் உள்ளது.
நாம்
எதிர்ப்போம்,
அரசாங்கம் சரியும் வரை தொடர்ந்து எதிர்ப்போம்.”
கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவினர் கைத்தடிகள்,
கேடயங்கள்,
கண்ணீர்ப்புகை குண்டுகள் ஆகியவற்றுடன் இதை எதிர்கொண்டனர்.
ஒரு
எதிர்ப்பாளர் தரையில் தள்ளப்பட்டு பின் பல முறையும்
உதைக்கப்பட்டதை அனைவரும் பார்த்தனர்.
மற்றொருவருடைய கை முறிந்தது.
ஓட
முயன்றவர்கள் தடியடிக்கு உட்பட்டனர்.
வடக்கு
நகரமான
Bizerte
யில்
எதிர்ப்பாளர்கள் பலமுறையும் சினைப்பர்களால் சுடப்பட்டதைக்
காட்டிய வீடியோ வெளிவந்துள்ளது.
புதிய உள்துறை மந்திரி
RDC
யின்
அஹ்மத் பிரியா ஒரு பொது அறிக்கையை வெளியிட்டார்:
“சுதந்திரத்திற்குப்
போராடிய மக்களுக்கு நாம் நன்றி செலுத்துவோம்,
நெருக்கடியில் நாட்டிற்கு அவர்கள் உதவினர். ஆனால் நம்மை
அச்சுறுத்திய குற்றவாளிகளுக்குத் தண்டனையையும் வழங்குவோம்…
ஜனநாயகம் வேண்டும் என்போம்,
சுதந்திரம் வேண்டும் என்போம்,
ஆனால்
குழப்பம் வேண்டாம் என்று கூறுவோம்.”
பொதுக் கருத்துக்கள் கன்னொச்சியின் போலி
அரசாங்கம் அடக்க முயற்சிக்கும் சீற்றத்தின் வெடிப்புத் தன்மையை
நன்கு புலப்படுத்துகின்றன.
“புதிய
அரசாங்கம் ஒரு போலித்தனமானது.
உயிர்களையும்,
குருதியையும் கவர்ந்த புரட்சிக்கு இது ஒரு அவமதிப்பு ஆகும்”
என்று
ஒரு ஆர்ப்பாட்டக்காரர்
கூறினார்.
“எதுவும்
மாறவில்லை.
முன்பு
இருந்த ஆட்சிதான் இன்னும் தொடர்கிறது,
எனவே
நாம் போராட்டத்தைத் தொடர வேண்டும்”
என்று
பென் அலியின் பொலிசால் சித்திரவதைக்குட்பட்ட ஆசிரியர் மஹ்மத்
செமி கூறினார்.
“எமது
புரட்சி,
என்னிடம் இருந்தும் என் மக்களிடம் இருந்தும் திருடப்படுகிறது
என்று அஞ்சுகிறேன்….
அவர்கள்தான் மக்களை
22
ஆண்டுகளாக அடக்கியவர்கள்”
என்று
22
வயது
மாணவரான
Ines Mawdud
கூறினார்.
ஒரு துனிசிய பேஸ்புக் பக்கத்தில் கூறப்படுவது:
“சர்வாதிகாரக்
கட்சியும்,
சர்வாதிகாரம்,
கொடுங்கோன்மை ஆகியவற்றின் அடையாளமுமான
RCD
இன்னும் பணியைத் தொடர்கிறது.”
மற்றொரு பேஸ்புக் பக்கத்தில் கூறப்படுவது:
“சர்வாதிகாரி
வீழ்ச்சி அடைந்துவிட்டார். ஆனால் சர்வாதிகாரம் இன்னும்
வீழ்ச்சி அடையவில்லை.
துனிசியர்கள் தங்கள் பணியைக் கட்டாயமாக தொடர வேண்டும்.”
தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும்
சந்தர்ப்பவாதிகளும் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு
உட்பட்டனர். ஆனால் முதலில் அரசாங்கத்தில் சேர்ந்ததற்கு அவர்கள்
எந்த விளக்கமும் கொடுக்கவில்லை,
மன்னிப்பும் கோரவில்லை.
உண்மை
என்னவென்றால் அவர்கள் தொடர்ந்து இருப்பது
(மக்களால்)
ஏற்கப்பட முடியாதது ஆகிவிட்டது.
அன்று முன்னதாக,
UGTT
யின்
சிறப்புக் கூட்டம் புதிய அரசாங்கத்திற்கு அங்கீகாரம்
தருவதில்லை என்று முடிவெடுத்தது.
“இது
தெருவிற்கு வந்துள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு விடையிறுப்பு
ஆகும்”
என்று
தொழிற்சங்க அமைப்பான அபின் அல்-பிரிக்கி
கூறினார்.
ஆனால் அதிகாரத்திலிருந்து வெளியேறியிருப்பது
ஒன்றும் இக்கூறுபாடுகளின் அடிப்படை ஊக்கத்தை மாற்றவில்லை—அதாவது
தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தகர்த்து துனிசிய
முதலாளித்துவத்தை காப்பாற்றுவது என்பதை.
ஒவ்வொரு நாளும் கடக்கையில்,
“மல்லிகைப்
புரட்சி”
என்று
அழைக்கப்படுவதின் அடித்தளத்திலுள்ள சமூக முரண்பாடுகள்
வெளிப்படையாகின்றன.
துனிசியாவில் வெகுஜன எழுச்சி பற்றி மிக முக்கியமாக
கருத்துக்களில் ஒன்று நியூ யோர்க் டைம்ஸின் டேவிட் டி.
கிர்க்பாட்ரிக்கினால்
கூறப்பட்டது.
“தெருக்களில்,
துனிசியப் புரட்சி தொடர்ந்து வளர்ச்சி அடைகிறது.
இன்னும் அதிக வேலைகள் வேண்டும் என்று இடருற்ற மாநிலங்களில் அது
தொடங்கியது. குறிப்பாக துனிசியாவில் அதிக எண்ணிக்கையாகி வரும்
இளம் கல்லூரிப் பட்டதாரிகளுக்கு என்று.
பின்
இது தொழிலாளர்களிடையே,
சிறு
வணிக உரிமையாளர்களிடையே மற்றும் கடலோர வாழ்க்கைத்
தொழில்நடத்தும் வகுப்பினரிடையே திரு.பென்
அலியின் குடும்பத்துடன் தொடர்புபடுத்திக் காணப்படும்
அப்பட்டமான ஊழலுக்கு எதிரான புரட்சி என்று பரவியது.
“ஆனால்
திங்கட்கிழமை தெருக்களில் இருந்த எதிர்ப்பாளர்கள் கூடுதலாகத்
தொழிலாள வர்க்கத்திலிருந்து வந்தவர்களாக தோன்றியது. அவர்களுள்
திரு.
பென்
அலி அரசாங்கத்தின் தவறாக நடத்தப்பட்ட கடினமாகிவிட்ட,
மூத்த
எதிர்ப்பாளர்களும் அடங்கியிருந்தனர்.”
இதற்கு மாறாக
“தெருக்களுக்கு
புறத்தே,
சில
துனிசிய தொழிலில் சிறப்புச் தேர்ச்சியுள்ளவர்கள் கடந்த வாரம்
திரு.
பென்
அலியின் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள்
தாங்கள் புதிய அரசாங்கத்தின் நிதானமான முதல் நடவடிக்கைகள்
பற்றிக் களிப்புக் கொண்டதாகக் கூறினர்.”
எதிர்ப்புக்களின் மற்றொரு கூறுபாடு அவர்கள்
இஸ்லாமிய அல்-நஹ்தர் இயக்கத்தின் சட்டபூர்வமாகச்
செயல்படக்கூடிய
ஜனநாய
உரிமையைப் பாதுகாக்கத் தயாராக இருந்தது ஆகும். அதே நேரத்தில்
அவர்கள் பொதுவாக அரசியல் இஸ்லாத்திற்கு விரோதமாகத்தான்
இருந்தனர். அதற்கு பெரிதும் மதச்சார்பற்ற எதிர்ப்பு
இயக்கத்தில் அதிக செல்வாக்கு இல்லை.
அல்-நஹ்தரின் தலைவர் ஷேக் ரஷிட் அல்-கன்னோச்சி
துனிசியாவிலிருந்து
1991ல்
வெளியேற்றப்பட்ட ஆணை இரத்து செய்யப்பட்டு ஒரு பொது மன்னிப்புச்
சட்டம் ஒப்புதல் பெறும் வரை திரும்பமுடியாது என்று அரசாங்கம்
கூறியுள்ளது.
இத்தகைய உண்மையான மக்கள் எழுச்சி
துனிசியாவிற்கு அப்பாலும் பரவக்கூடும் என்னும் ஆபத்துதான்
இப்பொழுது ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அரபு ஆட்சிகளுக்கு
முக்கிய கவலையாக உள்ளது.
இதுவரை அவ்வாறு ஏற்பட்டுவிடவில்லை.
ஆனால்
எகிப்து,
அல்ஜீரியா மற்றும் மௌரிடானியா ஆகியவற்றின் எதிர்ப்பாளர்கள்
ஆரம்பத்தில் துனிசிய வெகுஜன எதிர்ப்பைத் தூண்டிய தற்கொலை
எதிர்ப்புச் செயலைப் பின்பற்றியுள்ளனர்.
நேற்று எகிப்தில் ஒரு மனிதர் கெய்ரோவில் தன்னை
தீக்கு இரையாக்கிக் கொண்டார். இது இரு நாட்களில் நடந்த
மூன்றாவது நிகழ்வு,
நேற்றே
நடந்த இரண்டாவது நிகழ்ச்சி ஆகும்.
இதற்கு ஒரு நாள் முன்னதாக மௌரிடானியா மற்றும்
அல்ஜீரியாவில் எதிர்ப்பாளர்கள் தங்களுக்கே தீ வைத்துக்
கொண்டனர்.
துனிசிய எழுச்சி தொடங்கியதிலிருந்து அல்ஜீரியாவில் நான்கு பேர்
இவ்விதத்தில்
தங்களையே அழித்துக் கொள்ள முற்பட்டுள்ளனர்.
இன்று எகிப்தில் ஷர்ம் எல்-ஷேக்கில்
அரபு லீக் கூடுகிறது. இதன் நோக்கம் வர்த்தகம் மற்றும்
வளர்ச்சியை விவாதிப்பது என்று கூறப்படுகிறது.
ஆனால்
உண்மையான செயற்பட்டியல் துனிசியா பற்றித்தான்.
நேற்று,
குவைத்தின் மகம்மத் அல்-சபா
வெளியுறவு மந்திரிகளின் தயாரிப்புக் கட்டம் ஒன்றில் கூறினார்:
“அரபு
உலகம் இன்று முன்னோடியில்லாத அரசியல் வளர்ச்சிகளைக் காண்கிறது,
மற்றும் அரபு தேசியப் பாதுகாப்புத் துறையில் உண்மையான
சவால்களையும் எதிர்கொள்கிறது….
நாடுகள் சிதைகின்றன,
மக்கள்
எழுச்சிகளை நடத்துகின்றனர்…
அரபுக்
குடிமகன் கேட்கிறார்:
தற்போதைய அரபு லீக் இந்தச் சவால்களை இயக்க உணர்வுடன் சந்திக்க
முடியுமா?’
இக்கூட்டத்தில் இருந்தவர்களில் துனிசியாவின்
புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவு மந்திரி கமெல் மொர்ஜனேயும்
ஒருவராவார்.
தன்னுடைய சக நண்பர்களுக்கு அவர் அவர்களுடைய நிலை எவ்வளவு
ஆபத்தாகிவிட்டது என்பதை தெளிவாக்கியிருப்பார்.
அரபு ஆட்சிகள் முகங்கொடுக்கும் நெருக்கடியின்
அளவை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில்,
எகிப்தின் அடையாளப் பங்குக் குறியீடு நேற்று கடந்த மே
மாதத்திற்கு பின்னர் பெரும் சரிவைக் கண்டது.
இதற்குக் காரணம் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
வெளியேறியதுதான்.
ப்ளூம்பேர்க்கின் கருத்துப்படி,
“அரபு
முதலீட்டாளர்கள் உட்பட வெளி முதலீட்டாளர்கள்
226.5
மில்லியன் எகிப்திய பவுண்டுகளை நிகரமாக இழந்தனர்
($38.9
மில்லியன்)…”வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் தங்கள் நிலைப்பாட்டைக் குறைக்கின்றனர்.
ஏனெனில் துனிசியாவில் நாம் காணும் கூடுதலான அரசியல் ஆபத்து பல
இடங்களிலும் வெளிப்படாலம் என்பதால்”
என்று
கெய்ரோவைத் தளமாகக்கொண்ட அக்யூமன் பாதுகாப்புப் பத்திர
அமைப்பின் மத்திய கிழக்கு,
வட
ஆபிரிக்கப் பிரிவுகளின் தலைமை விற்பனையாளர் அஹ்மத் அல்சீசி,
கூறினார்.
கட்டுரையாளர் கீழ்க்கண்டதையும்
பரிந்துரைக்கிறார்:
|