சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Tunisian events expose pro-imperialist policy of France’s New Anti-Capitalist Party

துனிசிய நிகழ்வுகள் பிரான்ஸின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் ஏகாதிபத்திய சார்பு கொள்கையை அம்பலப்படுத்துகின்றன

By Kumaran Ira
18 ary 2011

Use this version to print | Send feedback

ஜனவரி 14ம் திகதி ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலியை பதவி துறக்குமாறு கட்டாயப்படுத்திய வேலையின்மை, சர்வாதிகாரத்திற்கு எதிரான வெகுஜனத் தொழிலாளர்கள் எதிர்ப்புக்கள் நடந்த துனிசியா நிகழ்வுகள் பிரான்ஸில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற போலி இடது குழுக்களின் வர்க்கத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளன. மேலைத்தேய ஏகாதிபத்திய அரசாங்கங்கள் துனிசியத் தொழிலாள வர்க்கப் போராட்டத்தை தனிமைப்படுத்தி அடக்கும் முயற்சிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளன.

ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரியான 26 வயது மஹ்மத் பௌவஜிஜி தெருக்களில் விற்பனையாளராக இருந்தவர். பொருளாதார நிலைகள் மற்றும் பொலிஸ் துன்புறுத்தல் ஆகியவற்றை எதிர்த்து தனக்கே தீ வைத்துக் கொண்டதை தொடர்ந்து டிசம்பர் 17ல் வெகுஜன எதிர்ப்புக்கள் தொடங்கின. அவர் ஜனவரி மாதம் 4ம் திகதி காயங்களினால் இறந்து போனார். துனிசியாவின் வறிய கிழக்குத், தெற்குப் பகுதிகளில் எதிர்ப்புத் தொடங்கி பின் நாடு முழுவதும் பரவியது. ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலியின் ஆட்சி முதலில் எதிர்ப்புக் காட்டிய தொழிலாளர்களுக்கு எதிராக மிருகத்தனமான அடக்குமுறையைப் பயன்படுத்தியது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில் பென் அலி சௌதி அரேபியாவிற்கு ஜனவரி 14 அன்று ஓடினார்.

NPA துனிசியாவிலுள்ள சமூக, அரசியல் கொந்தளிப்பிற்கு காட்டிய விடையிறுப்பு முக்கிய ஏகாதிபத்திய சக்திகளான அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டிற்கு ஏற்பத்தான் இருந்தது. இவை அனைத்துமே உத்தியோகபூர்வஎதிர்க் கட்சிகள், UGTT எனப்படும் துனிசிய தொழிலாளர்கள் பொதுக் கூட்டமைப்பின் அதிகாரத்துவம் மற்றும் பென் அலியின் ஆட்சியில் எஞ்சியிருந்தவர்களுடன் உடன்பாட்டிற்கு ஊக்கமளித்தன. “ஜனநாயகம்”, ஏன்ஜனநாயகப் புரட்சி என்ற மறைப்பின் கீழ் அதன் நோக்கம் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை முன்னாள் பென் அலி சர்வாதிகார ஆட்சியின் தளத்தைக் கொண்டு அமைப்பது என்பதாக இருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, “அருகில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் தேவை என்ற அழைப்பை எதிரொலித்த வகையில் பிரான்சின் எலிசே ஜனாதிபதி அரண்மனையும்நீடித்த ஜனநாயகத் தீர்வு தற்போதைய நெருக்கடிக்குத் தேவை என்று அழைப்பு விடுத்தது. இத்தகைய இழிந்த நிலைப்பாடுகள் தான் முதலாளித்துவஇடதுகளினாலும் முன்வைக்கப்பட்டன. சோசலிஸ்ட் கட்சி (PS) தலைவர் மாட்டின் ஆப்ரி இழிந்த முறையில் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரகத்தைபென் அலி ஆட்சியின் வலிமையான ஆதரவு அமைப்புக்களில் ஒன்று—“குழப்பத்திற்கு இடமில்லாத வகையில் துனிசியாவில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஆளும் வர்க்கத்துடன் இணைந்த வகையில், NPA துனிசிய நிகழ்வுகளை, சர்வாதிகாரத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான ஒரு புரட்சிகர வர்க்கப் போராட்டம் என்று சித்தரிக்க முற்படாமல், “ஜனநாயக மற்றும் தொழிற்சங்கப் போராட்டம் என்று காட்ட முயன்றது.

ஜனவரி 5ம் தேதி அறிக்கை துனிசியப் போராட்டத்தைஒரு இன்டிபடா”—அதாவது பாலஸ்தீனிய மக்கள் இஸ்ரேலிய அரசிற்குள் ஜனநாயக உரிமைக்கு போராடுவதைப் போன்ற தேசிய இயக்கம் என்றுவிளக்கியது. ஆனால் சமீபத்திய துனிசிய எழுச்சியின் தன்மை இது அல்ல. இது தொழிலாள வர்க்கம் வேலையின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக நடத்திய ஓர் எழுச்சி ஆகும். பென் அலியின் ஆட்சியை அகற்ற முயன்றது.

எதிர்ப்புக்கள் வெளிப்பட்டவுடன், NPA துனிசியத் தொழிற்சங்கமான UCTT நீண்டகாலமாக பென் அலி ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது, தடையற்ற சந்தைச் சீர்திருத்தக் கொள்கைகள் செயல்படுத்துவதில் பங்கு பெற்றதுஆதரித்தது. அதன் ஜனவரி 5ம் திகதி அறிக்கை, “நாடு முழுவதும் நிலவும் ஒரே சக்தி, எதிர்த்தரப்பு ஒன்றும் இதைச் செய்ய முடியாது என்ற நிலையில், உள்ளது UGTT தான், நாட்டின் ஒரே தொழிற்சங்கம்தான் என்றது.

இந்த அறிக்கையில் UGTT தனிப்பட்ட உறுப்பினர்களை, எதிர்ப்புக்களுடன் தங்கள் ஒற்றுமையை அறிவித்தவர்களை பாராட்டியது. “பல உள்ளூர் மற்றும் பிராந்திய UGTT அலுவலகங்கள் மக்களுக்கு ஆதரவு கொடுத்தன, ஆனால் அவை எதிர்ப்பிற்கு ஏற்பாடு செய்யவில்லை என்று அது எழுதியது.

இது ஒரு பொய். UGTT எதிர்ப்புக்களுக்கு  “ஏற்பாடு செய்யவில்லை என்பது மட்டுமின்றி”, அதற்கு ஆதரவாக வேலைநிறுத்த நடவடிக்கை எதற்கும் அழைப்பும் விடவில்லை.

தொழிற்சங்கத்தின் பங்கு பற்றிப் பொய்கூறி, குழப்பத்தை விதைக்கையில், NPA க்கு UGTT யின் அரசாங்கச் சார்பு பங்கு பற்றி நன்கு தெரியும். உண்மையில் தேசிய UGTT அலுவலகம் ஆரம்பத்தில் எதிர்ப்புக்களைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது என்பதை ஒப்புக் கொள்கிறது. “UGTT தலைமையின் உளப்பாங்குகளைக் கண்டிக்க வேண்டும். இது உத்தியோகபூர்வமாக தன்னை அதன் அலுவலகங்கள் சில அமைத்திருந்த எதிர்ப்புக்களில் இருந்து ஒதுக்கிக் கொண்டது, அதேபோல் அங்கு வெளிவந்த ஆட்சி எதிர்ப்பு கோஷங்களில் இருந்தும் தன்னை ஒதுக்கிக் கொண்டது.”

உண்மையில், NPA ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், UGTT ஆனது பென் அலி ஆட்சியின் ஒரு நிரந்தரத் தூணாக இருந்தது. அது பகிரங்கமாக இரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் பென் அலிக்கு ஆதரவைக் கொடுத்து அவருடைய சமூக செலவுக் குறைப்புக்களுக்கும் ஆதரவைக் கொடுத்தது. துனிசிய இதழான Achourouk  க்கு பென் அலி நாட்டை விட்டு ஓடுவதற்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில்இது பின்னர் UGTT வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டது—UGTT யின் செயலர் அப்டிஸ்சலீம் ஜேராட், “ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலியானால் வழிநடத்தப்பட்ட சீர்திருத்த இயக்கம் தரமான கொள்கை அளவில் நவீன துனிசியாவைக் கட்டமைப்பதில் தரம் வாய்ந்த மாற்று வழிவகையாகும் என்று அறிவித்திருந்தார்.

பென் அலியின் சீர்திருத்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கையில், UGTT நிதிய உயரடுக்கு மற்றும் IMF பொருளாதாரத்தின் பல பிரிவுகளும் தனியார் மயமாக்கல், “அமைப்புச் சீராக்கல் திட்டம்”, முன்னோடியில்லாத அளவிற்குதடையற்ற வணிகம் ஆகியவற்றைக் கொண்டுவருவதற்கான ஆணைகளுக்கு ஆதரவைக் கொடுத்தது. இக்கொள்கைகள் துனிசியாவின் உயரடுக்குகளை செல்வக்கொழிப்பு உடையதாக ஆக்கியபோது, ஆயிரக்கணக்கான இளம் துனிசியர்கள், பௌவாஜிஜி போன்றோருக்கு வேலை கிடைப்பதை அரிதாக்கிவிட்டது.

ஜனாதிபதி UGTT உடன் கொண்ட உறவுகளை ஜேராட் வரவேற்று, அரசாங்கத்துடன் இணைந்து பணிபுரிவதை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறி பென் அலிக்கு முன் தாழ்ந்து நிற்பதில் பெருமிதம் கண்டார். “எங்கள் பெருமிதம் இன்னும் அதிகமாகியுள்ளது. எங்கள் திட்டங்கள் ஜனாதிபதி பென் அலி வரையறுத்துள்ள நோக்கங்களுடன் இணைந்துள்ளன. அவருக்கு ஆதரவு கொடுப்பதில் நாங்கள் தயங்கவில்லை, ஏனெனில் UGTT யில் நாங்கள் நபர்களுக்கு விசுவாசம் காட்டவில்லை, அவர்களை மகிழ்விக்கவும் விரும்பவில்லை. மாறாக நாங்கள் அரசியல் திட்டங்களுக்கும் சீர்திருத்தங்களுக்கும்தான் ஆதரவு கொடுக்கிறோம்.”

UGTT ஐ துனிசியாவில் ஒரு சந்தர்ப்பவாத சக்தியாக வளர்ப்பதானது, NPA அதன் ஆழ்ந்த அக்கறையின்மை மற்றும் விரோதப் போக்கை தொழிலாள வர்க்கத்தின்  சமூகக் கோரிக்கைகளுக்குக் காட்டுகிறது. மேலும், இது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. இது தொழிலாள வர்க்கத்தின் சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு முதலாளித்துவ அரசாங்கங்களுடன் சமூகநலச் செலவுகள் பற்றி பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் தீவிர விருப்பம் கொண்ட வலதுசாரித் தொழிற்சங்கங்களுக்கு தாழ்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதுதான் NPA உறுப்பினர்களை இகழ்ந்த முறையில் பிரெஞ்சு எண்ணெய் சுத்திகரிப்பு வேலைநிறுத்தத்தின் வேலைநிறுத்த பொலிஸ் முறிப்பிற்கு ஓர்அடையாள எதிர்ப்புத்தான் வேண்டும் என்று அறிவிக்க வைத்தது.

வெள்ளியன்று துனிசியாவில் இருந்து பென் அலி ஓடுகையில், NPA ஒரு அறிக்கையை வெளியிட்டுக் கூறியதாவது: “சர்வாதிகாரியின் ஓட்டம் துனிசிய மக்களுக்குப் பெரும் வெற்றி ஆகும். NPA துனிசிய மக்களுக்கு அதன் ஆதரவைப் புதுப்பிக்கிறது. அது விழையும் ஜனநாயகப் புரட்சிக்கு ஆதரவைக் கொடுக்கிறது.”

NPA அது எப்படி துனிசிய மக்கள் பென் அலி ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கம் புரட்சி நடத்துவதற்கு உதவும், அதே நேரத்தில் பென் அலியின் எடுபிடிகளுக்குப் பகிரங்க ஆதரவையும் கொடுக்கும் என்பதை விளக்கவில்லை. இப்பிரச்சினை இன்னும் தீவிரமாக புதிய இடைக்கால அரசாங்கம் துனிசியில் அறிவிக்கப்பட்டபோது வெளிப்பட்டது.

அதன் சேர்கையானது புதிய அரசாங்கம் பழைய அரசாங்க அதிகாரத்தை எப்படியும் தொடர உத்தியோகபூர்வ எதிர்ப்பின் சில கூறுபாடுகளை கொண்டுவருவதின் மூலம் முயல்கிறது என்பதைத்தான் தெளிவாக்குகிறது. பென் அலியின் மந்திரிகளில் எட்டு பேர் தங்கள் பதவிகளில் தொடர்கின்றனர்இதில் உயர்மட்டப் பதவிகளும் அடங்கும்: பிரதம மந்திரி மஹ்மத் கன்னொச்சி, வெளியுறவு மந்திரி கர்மெல் மொர்ஜனே, உள்துறை மந்திரி அஹ்மத் கிரியா, முன்னாள் ஸ்ராலினிச அல்லது முதலாளித்துவ சார்பு உடையஎதிர்த்தரப்பு நபர்கள் பல இரண்டாந்தர அமைச்சரகங்களுக்கு, பிராந்திய வளர்ச்சி மற்றும் உயர் கல்வி போன்றவற்றிற்குப் பொறுப்பு ஏற்றனர்.

இது அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. துனிசியாவின் ஆளும் உயரடுக்கு ஏகாதிபத்தியச் சக்திகளுடன் இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைக்க முற்பட்டுள்ளது. அது பென்டகன், Quai d’Orsay, மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை ஆணையிடும் கொள்கைகளைச் செயல்படுத்தும்: அதாவது சமூகநலச் செலவு வெட்டுக்கள், அமெரிக்க நேட்டோபயங்கரவாதப் போருக்கு ஆதரவு, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு மற்றும் பாலஸ்தீனிய மக்களை இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ந்து நசுக்கி வருவதற்கு ஆதரவு ஆகியவை தொடரும்.

பென் அலி துனிசை விட்டு ஓடிய அதே தினத்தில் NPA பிரான்சின் உத்தியோகபூர்வஇடது கட்சிகளுடன் அதாவது சோசலிஸ்ட் கட்சி (PS), பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் பசுமைவாதிகள் உட்பட. ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டது. அறிக்கை கூறுவதாவது: “பிரெஞ்சு அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் துனிசிய ஆட்சிக்கு உட்குறிப்பாக அல்லது வெளிப்படையாக ஆதரவு கொடுப்பதை நிறுத்தி, உண்மையான ஜனநாயக மாற்றத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.”

இந்த அறிக்கையை வெளியிடுகையில் PS மற்றும் PCF இரண்டும் அவற்றின் நீண்டகால, இழிந்த வரலாற்றை, பிரெஞ்சு ஏகாதிபத்தியக் குற்றங்களின் வடிவமைப்பாளர்கள் என்பதைத் தொடர்ந்தன. இவற்றுள் PCF 1956ம் ஆண்டு அல்ஜீரிய சுதந்திரத்திற்கு எதிரான சோசலிஸ்ட் பிரதமர் கைமோலேயின் போர், PS ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் அமெரிக்கத் தலைமையிலான 1991ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக நடந்த வளைகுடாப் போரில் பங்கு பெற்றது, PS-PCF-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கம் 2001ல் ஆப்கானியப் படையெடுப்பில் பங்கு பெற்றது ஆகியவை அடங்கும்.

PCF ன் முன்னாள் செயலரான Marie-George Buffet இந்தக் கூட்டு அறிக்கையின் பின்னணியில் இருந்த சிந்தனை பற்றி ஸ்ராலினிச நாளேடான L’Humanite  இடம் விளக்கினார். அவர் பிரெஞ்சு அரசாங்கம் பென் அலி ஆட்சிக்குக் கொடுத்த நீண்ட கால ஆதரவைக் குறிப்பிட்டார். ஆனால் பென் அலி ஆட்சியின் அஸ்திவாரங்களை மக்கள் எதிர்ப்புக்கள் அதிர்விற்கு உட்படுத்தியபின், அரசின் போக்கில் மாறுதலுக்கு நேரம் வந்துவிட்டது என்றார்.

பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் துனிசியா மீது கொண்டுள்ள வணிக ஆதாயங்களைக் கருத்திற்கொண்டு, அவர் கூறினார்: “துனிசிய ஆட்சி மீது அழுத்தம் கொடுப்பதற்கு எங்களிடம் வழிவகைகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துனிசியாவிற்கும் இடையே ஒரு சலுகை நிறைந்த ஒப்பந்தம் உண்டு. இது பல விதிகளுக்கு உட்பட்டது.”

இந்த ஆதாயம் சந்தேகத்திற்கு இடமில்லாமல், தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு துனிசிய சர்வாதிகாரம் ஒரு புதிய வாழ்வைப் பெற, சற்றே உயர்மட்டத்திலுள்ள நபர்களைச் சிறிது மாற்றும் வகையில் நிலைநிறுத்தியது. NPA சற்றேஇடது முகத்தை இந்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஏகாதிபத்திய தந்திரங்களுக்கு அளிக்க உதவியது.