World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Tunisia forms unity government dominated by ruling party

ஆளும் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஐக்கிய அரசாங்கத்தை துனிசியா அமைக்கிறது

By Chris Marsden 
18
January 2011
Back to screen version

பிரதம மந்திரி மஹ்மத் கன்னொச்சி அறிவித்துள்ள தேசிய ஐக்கிய அரசாங்கம் துனிசியாவின் ஆளும் உயரடுக்கின் அனைத்துப் பிரிவுகளையும் தொழிலாள வர்க்கம், மாணவர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு எதிராக ஒன்றாகக் கொண்டு வருகிறது.

பதவியிறக்கப்பட்ட ஜனாதிபதி ஜேன் எல் அபிடைன் பென் அலியின் முக்கிய நண்பரான கன்னொச்சியால் அவசரம் அவசரமாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம், மற்றொரு பென் அலி விசுவாசியான முன்னாள் பாராளுமன்றத் தலைவரும் தற்போதைய இடைக்கால ஜனாதிபதி பௌவட் மெபாசா விருப்பத்திற்கு உட்பட்ட கட்டளை என்று கூறப்படுவதின் பேரில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் RDC எனப்படும் பென் அலியின் அரசியமைப்பிற்குட்பட்ட ஜனநாயக கூட்டு என்ற கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு, வெளியுறவு, உள்துறை மற்றும் நிதி மந்திரிகள் அனைவரும் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். கன்னொச்சி பிரதம மந்திரியாக தொடர்கிறார்இப்பதவியை அவர் 1999ல் இருந்து வகித்து வருகிறார்.

முக்கியமான அறிமுகமான நபர்கள் இவர்கள்தாம். கார்டியன் ஒரு தலையங்கத்தில் குறிப்பிடுகிறது: “மற்ற அறிமுகமான நபர்களும் தென்படுகின்றனர். அவர்களில் ஒருவர் பிரதம மந்திரி மஹ்மத் கன்னொச்சிக்கு இடது புறம் அவர் தான் தற்காலிக ஆட்சியாளர் என்று அறிவித்தபோது நின்றிருந்தார் (அது அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பின்னர் தடைசெய்யப்பட்டது). அவர்தான் அப்தல்லா கல்லேல் ஆவார். இவரை ஒரு சுவிஸ் நீதிமன்றம் சித்திரவதை மற்றும் மனித உரிமைகள் மீறலுக்காகத் தேடுகிறது. இவர் தற்பொழுது ஆலோசகர்கள் மன்றத்தின் தலைவர் ஆவார்.”

அவருடைய ஐக்கிய அரசாங்கத்தை பென் அலியின் அரசாங்கத்திலிருந்து தொலைவில் காட்டும் வகையில் கன்னொச்சி சில சீர்திருத்த உறுதிமொழிகளை கொடுத்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் தடையற்று செயல்பட அனுமதிக்கப்படும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், துனிசியாவின் செய்தி ஊடகத்  தகவல் அமைச்சரகத்தின் தணிக்கை முடிவிற்கு கொண்டுவரப்படுவதுடன் அமைச்சரகம் இல்லாமல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக இவர் முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் RDC ஆதிக்கத்திலுள்ள நிர்வாகத்தை ஜனநாயக வண்ணத்தில் சித்தரிக்க முற்பட்டுள்ளார்.

மூன்று முக்கிய எதிர்க்கட்சி நபர்கள் குறைந்த அந்தஸ்துடைய மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். முற்போக்கு ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான நஜிப் செப்பி வளர்ச்சித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஸ்ராலினிச எட்டஜ்டிட் கட்சியின் அஹ்மத் இக்ரஹிம் உயர் கல்வி மந்திரியாகிறார். சுதந்திரம் மற்றும் தொழிலாளர் ஐக்கிய கட்சியை சேர்ந்த முஸ்தாபா பென் ஜாபர் புதிய சுகாதார மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அறிவிப்பை தொடர்ந்து முற்போக்கு ஜனநாயகக் கட்சியின் அஹ்மத் பௌவாசி BBC இடம், “ஆளும் கட்சியைக் கலைப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. ..இந்த அரசாங்கத்துடன் நாம் முன்னேற்றம் காணலாம், இது செயல்படவில்லை என்றால் மீண்டும் தெருக்களுக்குச் செல்லலாம்என்று வலியுறுத்தினார்.

பழைய ஒழுங்கிற்கு விசுவாசமாக துனிசிய மாவோயிச தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இஸ்லாமிய அல்-நஹ்டர் கட்சி இரண்டும் புதிய அரசாங்கத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளன.

அல்-நஹ்டரின் தலைவர் ஷேக் ரஷிட் அல்-கன்னொச்சி அப்படியிருந்த போதிலும் கூறிய கருத்து: “வருங்காலத்தில் அரசாங்கத்தில் பங்கு பெற நாங்கள் அழைக்கப்பட்டால், அதை ஏற்பது பற்றிப் பரிசீலிப்போம்.”

அரசாங்கம் அமைந்துள்ள முறையானது பென் அலி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக தெருவிற்கு வந்து போராடிய அனைவருக்கும் ஒரு அவமதிப்பு ஆகும். மூடிய கதவுகளுக்குப் பின் உரசல்களும் பேரங்களும் நடந்து கொண்டிருக்கையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் RDC யின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று கோரியவர்கள், தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

துனிசில், ஆர்ப்பாட்டக்காரர்கள் RDC தலைமையகத்தை சுற்றிக் கூடி RDC மந்திரிகளை சேர்த்துக்கொள்ளும் இடைக்கால மந்திரிசபைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். “எங்கள் குருதி, ஆன்மா ஆகியவற்றுடன் நாங்கள் தியாகிகளாகத் தயார். RCD ஐ வெளியேற்று! சர்வாதிகாரக் கட்சியை அகற்றுக!” என்று கோஷமிட்டனர்.

உள்துறை அமைச்சரக கட்டிடத்திற்குள் அவர்கள் நுழைந்தவுடன் பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, நீர்க் குண்டுகள், கண்ணீர்ப்புகை குண்டுகள் ஆகியவற்றை கூட்டத்தின் மீது பயன்படுத்தினர். ஆர்ப்பாட்டங்கள் மத்திய துனிசியப் பகுதியான சிடி பௌஜிட் மற்றும் அருகேயுள்ள ரெகுவெப் ஆகியவற்றிலும் நடந்தன.

பொலிசும் பாதுகாப்புப் பிரிவுகளும் RDC தலைமையின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. இராணுவம் துனிசில் தாக்குதல் நடந்தபோது உஷார் நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. முந்தைய இரவில் பொலிசார் இராணுவத்துடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டது. இராணுவம் ஏற்கனவே புதிய அரசாங்கத்திற்குத் தன் விசுவாசத்தை உறுதியளித்திருந்தது.

இராணுவம் அகற்றப்பட்ட சர்வாதிகாரிக்கு விசுவாசமாக இருந்த ஆயுதங்கள் தரித்த ஆயிரக்கணக்கான குடிமக்கள் போராளிகளை அழித்து விடும் முயற்சியில்இருந்தது என்று டைம் ஏடு கூறியுள்ளது. பென் அலியின் ஆயுதம் தரித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் 6,200 பேரில் 3,000 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று ஏடு கூறியுள்ளது.

ஞாயிறு இரவு அழுத்தங்கள் மிக அதிகமாக இருந்தன. குறிப்பாக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் அலி செரியாட்டி கைது செய்யப்பட்ட பின்னர். ஆனால் திங்களன்று புதிய அரசாங்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவம் பாதுகாப்புப் பிரிவினருக்கு எதிர்த்தரப்பு எதிர்ப்புக்களை எப்படியும் சமாளிக்க அனுமதித்துவிட்டது. இது கன்னொச்சி கூறியுள்ள புதிய அரசாங்கத்தின் அறிவிப்பானநம் முன்னுரிமை பாதுகாப்புஎன்பதுடன் இயைந்திருந்தது.

எகிப்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் ஒரு பத்திரிகையான Al Ahram கருத்துத் தெரிவிக்கையில், பென் அலியினால் செய்யப்பட்ட ஒரு அரசியல் பிழையின் ஒரு அவசியமான திருத்துதலாகவே எதிர்க்கட்சியினர் சேர்த்துக் கொள்ளப்பட்டது இருந்தது. அலியினுடைய 'மிகப்பெரிய தவறு' துனிசியாவில் எதிர்க்கட்சியினரை செயலிழக்கசெய்ததே. அதுவும் பெரியளவில் கலகம் ஆரம்பித்தபோது...  பேச்சுவார்த்தை நடாத்தவோ அல்லது ஆர்ப்பாட்டத்தை முடிவிற்கு கொண்டுவர ஒரு பேரம் பேசுவதற்கு அங்கே ஒரு தலைமையில்லை' என குறிப்பிட்டது'

ஆர்ப்பாட்டங்களை முடிவிற்குக் கொண்டுவருவது என்பது முற்போக்கு ஜனநாயகக் கட்சி, எட்டாஜ்டிட் மற்றும் சுதந்திரம், தொழிலாளர் ஐக்கியம் ஆகிய கட்சிகளின் பொறுப்பாக அளிக்கப்பட்டது. துனிசிய ஆளும் உயரடுக்கு அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவையும் கொள்ளும் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஜனநாயக எதிர்ப்பிற்கு அவை காட்டிய ஆதரவுச் சொற்கள் பயனற்றவை.

மேற்கூறிய கார்டியனின் தலையங்கம் துனிசிய முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டதாவது: “திமிர்த்தனமான பாசாங்குத்தனத்திற்கான பரிசு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கு செல்லுகிறது. அவர்தான் கடித்த பற்களுக்கு இடையே பிரான்ஸ் துனிசிய மக்களுடன் தோளோடு தோள் உரசி நிற்கிறது என்றார். துனிசிய அதிகாரிகள் 21 சாதாரணக் குடிமக்கள் பொலிஸ் தோட்டாங்களால் கொல்லப்பட்டனர் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, தேசிய சட்டமன்றத்தில் வெளியுறவு மந்திரி Michle Alliot-Marie பேசிய உரையை தயவு செய்துமறந்துவிடுங்கள். அதுதான் பிரெஞ்சுக் கலகப் பொலிஸ் துனிசிய உதவிக்கு அனுப்பத் தயார் என்று கூறிய உரையாகும்.”

ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகள் மற்றும் அமெரிக்காவும் இதே போன்ற குற்றத்தைத்தான் செய்தன. பென் அலி ஆட்சிக்கு எதிரான கொந்தளித்த சீற்றத்தைச் செயல் வடிவம் கொடுக்க வைத்தது ஆளும் உயரடுக்கின்முதல் குடும்பத்திற்குஆதரவான அமெரிக்கத் தகவல் ஆவணங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதுதான். ஊழலின் பரப்பு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தபோதிலும் இவ்ஆவணங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

வாஷிங்டனின் முன்னாள் நண்பர் வீழ்ச்சி அடையும் நிலையை எதிர்கொண்ட அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளின்டன் ஞாயிறன்று புதிய அரசாங்கம் விரைவில் ஒழுங்கை நிறுவ வேண்டும் என்றும்துனிசிய அரசியலில் அனைத்துப் பிரிவினருடன் இணைந்து செயலாற்ற அது விருப்பம் கொண்டுள்ளதற்கு பாராட்டும்தெரிவித்தார். அமெரிக்காதுனிசியாவுடன் இணைந்து நிற்கும்என்று அவர் உறுதியளித்தார்.

கன்னொச்சி மற்றும் மெஹ்பாஜாவின் ஜனநாயகச் சார்புடைய கருத்துக்கள் எவருக்கும் சமாதானம் தரும் என்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதேபோல் RDC யின் மேலாதிக்க நிலை சவாலுக்குட்படும் என்பதற்கான வாய்ப்பும் மிகக் குறைவுதான்.

துனிஸ் பிராந்திய தொழிலாளர் சங்கத்தின் (Regional Workers’ Union of Tunis)  ஹபிப் ஜேர்ஜிர் ஐ மேற்கோளிட்டு independent புதிய அரசாங்கம் தெருக்களில் எப்படிக் காணப்படுகிறது என்ற குறிப்பைக் காட்டியுள்ளது. “RCD பின்கதவு வழியே வெளியே போய், சன்னல் வழியே உள்ளே வந்துவிட்டதுஎன்றார் அவர். “தெருக்களிலும் அரசாங்கத்திலும் நாம் போராளிகளை வைத்திருக்கக் கூடாது.”

அரசியலளவில் உறுதியற்றும் சமூக அளவில் எதிர்முனைகளில் முன்பு இருந்ததைப் போல்தான் துனிசியா இப்பொழுதும் உள்ளது. இதேதான் மெக்ரெப் மற்றும் பரந்த மத்திய கிழக்கிலும் உண்மையான நிலை ஆகும்.

துனிசிய நிகழ்வுகளிலிருந்து வரக்கூடிய விளைவுகள் அரபு ஆட்சிகளுக்கு தொடர்ந்து கவலை கொடுக்கின்றன. அவைகள் தொற்றுபோல் இருக்கும் வறுமை மற்றும் வேலையின்மை சமமாக இதேபோல் நாடுகளில் கொண்டுள்ளன. எகிப்திய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே திங்களன்று ஒரு நபர் தன்னை தீக்கிரையாக்கிக் கொண்டார். இது 26 வயது மஹ்மத் பௌவாஜிஜி செயலைத்தான் எதிரொலிக்கிறது. அதுவோ துனிசியாவில் மக்கள் சீற்றத்திற்கு குவிப்பு ஆனது. அத்தகைய நிகழ்வுகள் நான்கு அல்ஜீரியாவிலும் ஒன்று மௌரிடானியாவிலும் நடந்துள்ளன.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னுள்ள மத்திய கேள்வி நிரந்தரப் புரட்சியின் புரட்சிகர மூலோபாயத்தை ஏற்றல் என்பதாகும். இது முதலில் லியோன் ட்ரொட்ஸ்கியால் விளக்கப்படுத்தப்பட்டது. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும்வளர்ச்சியடையும்உலகம் என்று அழைக்கப்படுவது முழுவதும் தவிர்க்க முடியாமல் முக்கிய ஏகாதிபத்தியச் சக்திகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இவைகள் நேரடிச் சுரண்டுபவர்களாகவும் முக்கிய உலக நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உள்ளூர்ப் பொலிஸ் போலவும் செயல்படுகின்றன. அவற்றின் கொள்கை தேவைகளின் பொருள் தொழிலாளர்கள் மற்றும் வறிய விவசாயிகள் எப்பொழுதும் வறிய நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான். தேசிய முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவின் கீழும்ஜனாநாயகப் புத்துயிர்ப்புஎன்பது வரமுடியாது.

சமூகத்தின் அனைத்து அடக்கப்பட்ட பிரிவுகளையும் அணிதிரட்டி சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக நடத்தும் அரசியல் போராட்டம் ஒன்றுதான் முன்னேற்றப் பாதையை வகுக்கக் கூடியதாகும்.

புரட்சித்தொற்றுஆபத்து என்று இடைவிடாமல் கூறி, ஆளும் உயரடுக்குகளே துனிசிய மக்கள் இயக்கம் மத்திய கிழக்கு மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதி என்று ஒப்புக் கொள்கின்றனர். தொழிலாள வர்க்கம் தன்னை ஒரு தேசிய முன்னோக்குடன் வரம்பு கட்டிக் கொண்டுவிடக் கூடாது. துனிசியப் போராட்டம் முழு நனவுடன் தொழிலாளர்கள் மற்றும் அடக்கப்பட்ட மக்களுடனும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் இருப்பவர்களுடனும் முன்னாள் காலனித்துவ நாடுகளுடனும் பிணைக்கப்பட வேண்டும். முன்னேறிச் செல்வதற்கு முக்கியமான கேள்வியாக இருப்பது உலகந்தழுவிய முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள மூலதனத்திற்கு எதிராக ஒரு சர்வதேசப் புரட்சிகர இயக்கம் ஒன்றை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுக்களின் பிரிவுகளாக கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே.