WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Detroit Symphony management publishes attack on striking
musicians
டெட்ரோயிட் இசைக்குழு
நிர்வாகம் வேலைநிறுத்தம் செய்துள்ள இசைக்கலைஞர்கள் மீது தாக்குதலை
வெளிப்படுத்துகிறது
By
Shannon Jones
14 January 2011
டெட்ரோயிட்
சிம்பொனி இசைக்குழுவினரின் கலைஞர்களின் வேலைநிறுத்தம்
15வது வாரமாக
நடைபெறுகையில்
DSO நிர்வாகம் குழு
உறுப்பினர்கள்மீது ஒரு பகிரங்கத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஜனவரி
12ம் தேதி
நன்கொடையாளர்கள்,
இசைக்கு ஏற்பாடு
செய்பவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கையில்,
நிர்வாகம் இசைக்குழு
உறுப்பினர்கள் டெட்ரோயிட்டின் பார்வையாளர்களை கவனத்தில் ஈர்த்துப் பொதுமக்களின்
பரந்த ஆதரவைப் பெறும் சமீபத்திய முயற்சிகளை
“தவறாக
வழிநடத்தப்பட்டு,
தூண்டப்பட்டு
நடப்பவை”
என்று அழைத்துள்ளது.
இசைக்
கலைஞர்கள்
“நீண்டகால
DSO நிகழ்ச்சி
ஆதரவாளர்கள்,
நிர்வாகக்குழு
உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்களை விரோதிக்கின்றனர்”
என்று குற்றம்சாட்டி,
நிர்வாகம்
இசைக்கலைஞர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களின் பெயர்களையும்
பட்டியலிட்டுள்ளது.
சங்கப் பிரதிநிதிகள்
நிர்வாகத்தின் சமீபத்திய மறுதொகுப்பு சலுகை முன்மொழிவுகளை ஏற்க பொது அழுத்தங்கள்
கொடுக்கப்பட வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது.
இந்த
முன்மொழிவுத்திட்டம்,
கலைஞர்கள்மீது
தாக்குதலுடன் இணைந்த வகையில் நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
30
மில்லியன் டாலர்
நிதியத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்திட்டம்
வெளியேறும் ஜனநாயக ஆளுனர் ஜெனிபர் கிரான்ஹோம் மற்றும் அமெரிக்கச் செனட் உறுப்பினர்
கார்ல் லெவின் முன்வைத்த திட்டத்துடன் இணைந்துள்ளது என்றும் அதை இசைக்கலைஞர்கள்
சங்கம் உடன்பாட்டிற்கு ஒரு அடித்தளமாக ஏற்றது என்றும்
DSO நிர்வாகம்
கூறுகிறது.
ஆனால் நிர்வாகத்தின்
திட்டத்தில் குறிப்பான கருத்துக்கள் ஏதும் இல்லை.
உண்மையில்
$2 மில்லியன்
கூடுதல் நிதி என்று அது குறிப்பிடுவது இசைக்குழு கூடுதல் நிதியத்தைப் பெறுவதைப்
பொறுத்து உள்ளதைக் குறிப்பிடுகிறது.
மேலும்,
“புதியவை”
என்று கூறப்படும்
திட்டம் DSO
விரும்பும் பணி
விதிகளில் பெரும் மாற்றத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது;
இதுதான்
“விரிவாக்கப்படும்
சமூக மற்றும் கல்விப்பிரிவுச் செயற்பாடுகள்”
என்ற பெயரில் அது
செயல்படுத்த விரும்புவதாகும்.
இம்மாற்றங்கள்
இசைக்குழுவின் எண்ணிக்கையைக் குறைத்தல்,
அதன் நிகழ்ச்சிகளைக்
குறைத்தல்,
இசைக் கலைஞர்களை
பகுதிநேரத் தொழிலாளர்களாக ஆக்குதல்,
ஆகியவற்றுடன்
நிகழ்ச்சியுடன் தொடர்பில்லாத பல பணிகளையும் வலியுறுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
WSWS
க்கு கொடுத்துள்ள
அறிக்கையில் கலைஞர்களின் செய்தித் தொடர்பாளர் செல் வாத்திய நிபுணர் மக்கே
நிர்வாகத்தின் கோரிக்கையை கண்டித்து,
அதை
“ஒரு நியாயமான
திட்டம் இல்லை”
என்றும்
அழைத்துள்ளார்.
DSO
நிர்வாகக்குழு கொடுத்துள்ள
சமீபத்திய அறிக்கை இம்மாதம் முன்னதாக நிர்வாகம்
2010-2011 இசை
நிகழ்ச்சிகளில் எஞ்சி இருப்பவற்றை இரத்து செய்யக்கூடும் என்ற அச்சுறுத்தல்களைத்
தொடர்ந்து வந்துள்ளது.
DSO வின்
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இசைவிழாக் காலத்தில் எஞ்சியிருப்பதை இம்மாதம் பின்னர்
நடைபெற உள்ள ஒரு கூட்டத்தில் இரத்து செய்யும் திட்டத்தைப் பரிசீலிக்க உள்ளனர்.
தற்போதைய
இசைத் தொடரில்
40% இசை
நிகழ்ச்சிகள் இரத்து செய்ய வழிவகுத்துவிட்ட
DSO நிர்வாகத்தின்
கடின நிலைப்பாட்டில்,
அது இசைக்கலைஞர்களை
“தவறாக
வழிசெலுத்தப்படுகின்றனர்”
என்று கூறுவது
நகைப்பிற்கிடமானது.
பொறுப்பற்றவர்கள்
மிக அதிக ஊதியம் பெரும் நிர்வாகிகள்தான்,
அதில்
DSO தலைவர்,
உயர் நிர்வாக
அதிகாரியுமான அனே பார்சன்ஸ் ஆகியோரும் அடங்குவர்;
இவர்கள்தான்
இசைக்கலைஞர்கள்மீது பாரிய இடர்களைச் சுமத்த முயல்கின்றனர்;
அதில் புதிய
இசைக்குழு உறுப்பினர்களுக்கு
30 முதல்
40சதவிகித ஊதியக்
குறைப்புக்கள் அடங்கியுள்ளன;
இது
DSO வின்
உயர்ந்ததரத்தில் உள்ள அமெரிக்க இசைக்குழு என்னும் நிலையை அழித்துவிடும்
அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
வலதுசாரிச்
சிந்தனைப்போக்கினால் கண்கள் மறைக்கப்பட்டுள்ள
DSO நிர்வாகம்
டெட்ரோயிட்டின் கலாச்சார
வாழ்விற்கு
தோற்றுவிக்கும் மதிப்பிடமுடியாத தீமையைப் பற்றிப் பொருட்படுத்தாமல் இப்பகுதியில்
மிக முக்கியமான கலைப் பொக்கிஷங்களை தகர்க்க முயல்கிறது.
இசைக்கலைஞர்களின் சங்கமான
டெட்ரோயிட்
இசைக்கலைஞர்களின் கூட்டமைப்பு
ஏற்கனவே நிர்வாகம்
கோரியுள்ள சலுகைகளில் பெரும்பாலானவற்றை கொடுத்துள்ளது,
மேலும் சற்று
குறைந்த கடினமான
திட்டத்திற்கும்
இசைவு தெரிவிக்கும் நிலையில் உள்ளது;
DSO உயர்தர
இசைஞர்களை ஈர்க்கும் வாய்ப்பு அல்லது அதன் சிறந்த திறமையைத் தக்க வைக்க வேண்டும்
என்றால் இது தேவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
வேலைநிறுத்தம் செய்யும் இசைக்கலைஞர்கள் நிர்வாகம் புதிய இசைக்குழு உறுப்பினர்களின்
ஆரம்ப ஊதியத்தில் குறைப்பு என்னும் கோரிக்கையை நிராகரிப்பதில் குறிப்பிடத்தக்க
வகையில் பிடிவாதமாக உள்ளனர்.
செய்தி
ஊடகம்,
அரசியல் வாதிகள்
மற்றும் முக்கிய தொழிற்சங்கங்கள் எனபவற்றின்
பொருட்படுத்தாத்தன்மை அல்லது முழு நடைமுறையில் வெளிப்படையான விரோதப் போக்கு
ஆகியவற்றிற்கு
எதிராக பல மாதங்களாக இசைவாணர்கள் தைரியமாகப் போராடி வருகின்றனர்.
மெட்ரோ-டெட்ரோயிட்
AFL-CIO, ஐக்கியக்
கார்த்தொழிலாளர் சங்கம் மற்றும் ஜனநாயகக் கட்சி நடைமுறை ஆகியவற்றில் இருந்து
நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும்,
வேலைநிறுத்தம்
முடிக்கப்பட வேண்டும் என்னும் பெரும் அழுத்தத்தை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்;
அழுத்தம்
கொடுப்பவர்களில் கிரான்ஹோம் மற்றும் லெவினும் அடக்கம் ஆகும்.
DSO
நிர்வாகம் கார்
நிறுவனங்களுக்கு
UAW யினால்
கொடுக்கப்பட்ட பெரும் சலுகைகளினால் தங்கள் தாக்குதல்களை நடத்த ஊக்கம் பெற்றுள்ளது
என்பதில் சந்தேகம் இல்லை;
அதில் புதிய
தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுவிட்டன;
தொழிற்சங்கத் தலைவர்
பாப் கிங் UAW
இலாபங்களை
அதிகரிக்கவும் நிறுவனங்களின் போட்டித் தன்மையை அதிகரிக்கவும் தேவையானவற்றை செய்வதாக
அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் வேலைநிறுத்தம் செய்யும் இசைக்கலைஞர்கள் தங்கள் போராட்டத்திற்கு
பொதுமக்கள் ஆதரவைத் திரட்டும் முயற்சியைத் தொடர்கின்றனர்;
நிர்வாகத்தின்
தாக்குதல் அமெரிக்க மற்றும் சர்வதேசரீதியில் கலை மற்றும் கலாச்சாரத்தின்
மீதான பரந்த
தாக்குதலின் ஒரு பகுதிதான்.
ஜனவரி
12ம் திகதி
டெட்ரோயிட்
Majestic Café
என்னும் நகர மையப்பகுதி விடுதியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில்,
DSO இசைக்கலைஞர்கள்
உள்ளூர் உணவு விடுதி உரிமையாளர்களுடன் ஒரு கூட்டினை
அறிவித்துள்ன.
வேலைநிறுத்தத்தை
ஒட்டி விடுதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதில் அவர்கள்
பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர்.
பல விடுதிகளில்
ஒன்றான Clubhouse
Restaurant and Lunge
இல்
மார்ட்டின் தன்னுடைய
விடுதி மாதத்திற்கு
$10,000 முதல்
$15,000 வரை நஷ்டம்
அடைவதாகக் கூறினார்.
நிருபர்களிடம்
அவருடைய பாட்டனார்
UAW Local 600 ல்
உறுப்பினராக இருந்தார் என்றும் அவர் இசைக்கலைஞர்க்களுக்கு
100% ஆதரவு
கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
DSO
இசைக்கலைஞர்கள் தாங்கள் நகர
மைப்பகுதியில் நேரடி இசையை உணவுவிடுதிக்கு வருபவர்களுக்குத் தர முன்வந்துள்ளதாக
அறிவித்தனர்;
இது இசை அரங்கு
என்னும்
St.Patrick Catholic Church
இல் ஜனவரி
15 அன்று நடக்க
இருக்கும் புதிய வேலைநிறுத்த ஆதரவிற்கான இசை நிகழ்விற்கு முன்பு இருக்கும்.
DSO
இசைக்கலைஞர்களின் தலைமைச்
செய்தித் தொடர்பாளர் ஹேடன் மக்கே நிர்வாகம் தனக்கு முழு ஊதியங்களைக் கொடுத்துக்
கொண்டுவருகிறது,
அதாவது பார்சன்ஸைப்
பொறுத்த வரை
$40,000 ஓராண்டிற்கு
என என்றார்.
அவர்
நிர்வகிப்பதற்கு
இசைக்குழு இல்லை என்ற உண்மை இருந்தாலும் இது தொடர்கிறது என்று அவர் கூறினார்.
DSO
இசைக்கலைஞர்கள் பரந்த தேசிய,
சர்வதேச ஆதரவை சக
இசைக்கலைஞர்கள் இன்னும் மற்றவர்களிடம் இருந்து பெறுகின்றனர்.
இன்றுவரை
கிட்டத்தட்ட
300,000 டாலர்
வேலைநிறுத்த நிதிக்கு நன்கொடைகளாக வந்துள்ளன.
கடந்தவார
இறுதியில் டெட்ரோயிட் நகர்ப்பகுதியில்
Bolls Family YMCA
வில் நடைபெற்ற
DSO
ஒலிக்கருவிக் கலைஞர்களின்
இலவச
நிகழ்ச்சி
பெரும்
கூட்டத்தை ஈர்த்தது.
Beatrice, Greg Staples
வயலினில்,
கரோலனை கோட்
வியோலாவில் மற்றும் செல்லாவோல்
Una O’Riordian பல
தொல்கலை (classical)
பாடல் வகைகளை
இசைத்தனர்;
அவற்றுள்
மொசார்ட்டின்
Quartet in A Major, K.464,
ஆகியவை அடங்கும்;
மேலும்
“ஹேடன்”
நால்வர் இசையில்
இருந்து ஒரு பாடலும் கார்லோ கார்டேயினால்
Gango por Una Cabaza
வும் இசைக்கப் பெற்றன.
உலக சோசலிச
வலைத் தளம்
DSO வயலின் கலைஞர்
மரியன் டனௌவை ஜனவரி
12 செய்தியாளர்
கூட்டத்திற்கு பின்னர் சந்தித்தது.
“செய்தியாளர்
கூட்டம் நடத்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.
நாங்கள் இங்கு
ஒற்றுமையாக உள்ளோம்,
டெட்ரோயிட்டை ஒரு
சிறந்த இடமாக ஆக்கும் முயற்சியைக் கொண்டுள்ளோம்.
அவர்களுடைய
செயற்பாட்டினால் மறைந்துவிடக்கூடிய ஒரு பெரும் இசைக்குழுவை நாங்கள் கொண்டுள்ளோம்.
அவர்கள்
இசைக்கலைஞர்களை மதிப்பதும் இல்லை,
இங்கு தொடர ஊக்கம்
கொடுப்பதும் இல்லை.
அனைவரும் இடர்
அடைவர்.
உணவு விடுதி
உரிமையாளர்கள் இன்று
அதைத்தான் எங்களிடம் கூறினர்.
“நான்
ருமேனியாவில் இருந்து வந்துள்ளேன்.
நான்
அமெரிக்காவிற்கு
1990ல்
குடிபெயர்ந்தேன்.
DSO வின் தரம் நான்
பங்கு பெற்ற முக்கிய இசைக்குழுக்களில் உயர்ந்து இருந்தது.
இதற்கு ஒரு
வரலாற்றுப் பின்னணி உண்டு;
நான் ருமேனியாவில்
சிறு பையனாக இருக்கும்போதே அது பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்.
பெரிய நடத்துனர்களான
நீம் ஜார்வி,
பால் பரே
போன்றவர்களின் கீழ் அரங்கத்தில் ஏறி நிகழ்ச்சியில் பங்கு பெறுவது எனக்குப் பெரும்
கௌரவம் ஆகும்.
இந்த இசைக்குழுவின்
உறுப்பினர் என்பதில் இன்னும் நான் பெருமிதம் கொண்டுள்ளேன்.
“கலைகள்
எப்பொழுதும் சரியாகப் போற்றப்படுவது இல்லை என்பது என் நினைப்பு.
நீங்கள் சுற்றுலாப்
பயணி என்னும் முறையில் இப்பொழுது ஐரோப்பாவிற்குச் சென்றால்,
வியத்தகு மக்களால்
தோற்றுவிக்கப்படும் கலைப்பொருட்களைத்தான் முதலில் காண விரும்புவீர்கள்.
அது பற்றிப்
போராட்டமே உண்டு;
வருங்காலத்
தலைமுறைகளில் என்ன நேரிடும் என்பது கேள்விக்குறி.
DIA (Detroit Institute of Arts)
மறைந்துவிட்டால்,
ஒரு கலைப்படைப்பை
யார் காணப்போகிறார்கள்?
கலைக்கு ஆதரவு தேவை.
பங்குச் சந்தைகளில்
கிடைப்பது போல் உடனே இதில் ஆதாயம் கிடைக்காது;
ஆனால் இது
வருங்காலத் தலைமுறைகளுக்கான நீண்ட கால முதலீடு ஆகும்.
அதிருஷ்டவசமாக
ஐரோப்பாவில் கலைகளுக்கு அமெரிக்காவில் உள்ளதைவிடக் கூடுதலான அரசாங்க உதவிகள் உள்ளன.”
WSWS
ஜனவரி
10ம் திகதி
டெட்ரோயிட் இசை நிகழ்ச்சியைக் கேட்டவர்களிடமும் கருத்துக்
கேட்டது.
தொழில்ரீதியற்ற வயலின் கலைஞரான
Ida
ஆன் ஆர்பரில் இருந்து
பயணித்து DSO
கலைஞர்களைக் கேட்க
வந்திருந்தார். “இசைக்கலைஞர்கள்
ஒருங்கிணைந்த இசைச்செல்வங்கள்;
அவர்கள்
கேட்பவர்களுக்கு அரியதைக் கொடுக்கின்றனர்,
தங்கள் பணியைச்
சிறப்பாகச் செய்கின்றனர்.”
என்றார் இவர்.
“நிர்வாகம்தான்
உற்பத்தியாளராக இல்லாமல் உள்ளது.
நீங்கள் ஆலைக்குச்
செல்லுங்கள்;
அங்கும் இதை
நிலைமைதான்.
ஊதியக்
குறைப்புக்கள் என்று வந்தால்,
நிர்வாகம்தான்
அதிகக் குறைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
“இசை
இல்லாவிடின் வாழ்வு எப்படி இருக்கும்?
இசையை டாலரைக்
கொண்டு மதிப்பிட இயலாது.
இந்தக் கலைஞர்களை
நான் உயர்வாக மதிக்கிறேன்.
தங்கள் வாழ்வைக்
கலைக்காக இவர்கள் அர்ப்பணித்துள்ளனர்.
“ஒரு
பெரிய சித்திரமாகப் பார்த்தால்,
இசைக்குழு
உறுப்பினர்கள் ஜனரஞ்சக இசை நட்சத்திரங்களைவிட அதிகம் சம்பாதிக்க வேண்டும்.
நீங்கள் அவர்கள் பணி,
அர்ப்பணிப்பு
இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால்,
இவர்கள் குறைந்த
அளவு வருமானமே பெறுகின்றனர்.
“நான்
சிறு வயதில் இருந்தபோது,
என்னுடைய தாயார்
பண்டைய பாடல்கள் அனைத்தையும் வானொலி மூலம் கேட்பார்.
நாங்கள் இசைக்குழு
நிகழ்வுகளுக்குச் செல்லுவோம்.
அது எனக்கு நான்
பயில ஊக்கம் கொடுத்தது;
இசை என்பது ஒரு
சக்தி வாய்ந்த மொழி;
சொற்கள் கூட
விவரிக்க முடியாத அளவிற்கு அது சக்தி வாய்ந்த மொழி ஆகும்.”
“பண்டைய
இசைக்கு இப்பொழுது அதிக ஆர்வம் இல்லை.
இளைஞர்கள் இந்த
இசைக்குழுக்களை நிறையக் கேட்க வேண்டும்.” |