WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
துனிசிய
ஆளும்
தட்டினர்
தேசிய
அரசாங்கம்
அமைப்பதாக
உறுதியளித்துக்கொண்டு,
இராணுவ
ஆட்சியைச்
சுமத்துகிறது
By Chris Marsden
17 January 2011
Use this version to print | Send
feedback
ஜனாதிபதி
ஜைன்
எல்
அபிடைன்
பென்
அலியை
நாட்டை
விட்டு
ஓடச்செய்து
சௌதி
அரேபியாவில்
அடைக்கலம்
தேடக்
கட்டாயப்படுத்திய
வெகுஜன
எழுச்சியை
தொடர்ந்து
துனிசிய
ஆளும்
தட்டினர்
அதன்
ஆட்சியைக்
காப்பாற்ற
முற்பட்டுள்ளது.
அதன்
மூலோபாயம்
நடைமுறையில்
இராணுவ
ஆட்சியை
சுமத்தும்
நேரத்தில்
ஒரு
தேசிய
ஐக்கிய
அரசாங்கம்
அமைக்கப்படும்
என்று
உறுதியளிப்பதாக
உள்ளது.
பென்
அலியின்
நீண்ட
கால
நண்பர்
பிரதம
மந்திரி
மஹ்மத்
கன்னொச்சி
இடைக்கால
ஜனாதிபதியாக
பதவியை
எடுத்துக்கொள்ள
மேற்கொண்ட
முன்முயற்சிகள்
தோற்றுவிட்டன.
அவருக்கு
பதிலாக
பாராளுமன்றத்தின்
தலைவர்
பௌவத்
மெபசா
பதவியேற்றுள்ளார்.
பென்
அலியின்
மற்றொரு
முன்னாள்
விசுவாசியான
மெபசா
உடனடியாக
ஒரு
தேசிய
ஐக்கிய
அரசாங்கத்தை
அமைக்கும்
பணி
கன்னொச்சியிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது
என்று
அறிவித்தார்.
“இதில்
எந்த
விதிவிலக்கும்
ஒதுக்கலும்
இல்லாமல்
அனைத்து
துனிசியர்களும்
சேர்த்துக்
கொள்ளப்படுவர்,
பென்
அலியின்
கட்சி
உட்பட”
என்று
மெபாசா
உறுதியளித்துள்ளார்.
இந்த
அரசியல்
மோசடி
எதிர்க்கட்சித்
தலைவர்
நெஜிப்
செப்பியினால்
ஒப்புக்
கொள்ளப்பட்டுள்ளது.
அவர்தான்
ஜனநாயக
முற்போக்குக்
கட்சிக்கு
தலைவராவார்.
அதே
போல
முன்னாள்
ஸ்ராலினிச
எட்டாஜ்டிட் (புனருத்தாரன)
கட்சியின்
தலைவரான
அஹ்மெத்
பென்
ப்ராஹிமும்
இதற்கு
ஆதரவு
கொடுத்துள்ளார்.
நேற்று
கன்னொச்சியை
சந்தித்த
பின்னர்
செப்பி
தேர்தல்கள்
சர்வதேச
கண்காணிப்பின்கீழ்
“ஆறு
அல்லது
ஏழு
மாதங்களில்
நடத்தப்படும்”
என்றார்.
நாடுகடத்தப்பட்டுள்ள
சட்டவிரோத
துனிசிய
இஸ்லாமியக்
கட்சி
என்னஹ்டாவின்
தலைவரான
ரஷேல்
கன்னொச்சியும்
ஒரு
ஐக்கிய
அரசாங்கத்தில்
பங்கு
பெறுவதாக
உறுதிமொழி
கொடுத்துள்ளார்.
அவருடையது
ஒரு
ஜனநாயக
இயக்கம்
என்றும்
அது
போராளித்தன
அச்சுறுத்தலை
அளிக்காது
என்றும்
அவர்
கூறினார்.
மக்கள்
சீற்றத்தைத்
தணிக்கும்
வகையில்
பென்
அலியின்
உடனடிக்
குடும்பத்தினர்
மற்றும்
சில
முக்கிய
ஆதரவாளர்கள்
மீது
நடவடிக்கை
எடுப்பதின்
மூலம்
ஒரு
உதாரணம்
காட்டப்படலாம்.
பென்
அலியின்
சிறப்புப்
பொலிஸ்
படையின்
தலைவரான
அலி
செரியட்டி
கைது
செய்யப்பட்டு
வன்முறையைத்
தூண்டி
தேசியப்
பாதுகாப்பை
அச்சுறுத்தியதாகக்
குற்றம்
சாட்டப்பட்டுள்ளார்.
இத்தந்திரோபாயங்கள்
ஒரு
சர்வாதிகார
ஆட்சியைத்
தகர்ப்பதை
விட
சர்வாதிகாரியை
அகற்றுவது
எளிது
என்பதைத்தான்
நிரூபிக்கின்றன.
இராணுவம்தான்
துனிசியாவின் மீது
திறமையுடன்
கட்டுப்பாட்டைக்
கொண்டுள்ளது.
மக்களுக்கு
எதிராக
பென்
அலி
சார்புடைய
பொலிஸ்
மற்றும்
இரகசியப்
பொலிஸ்
கருவிகளுக்கு
எதிராக
ஒரு
மக்கள்
ஐக்கியம்
என்று
சித்தரிக்கப்பட்டாலும்
அதன்
துப்பாக்கிகளும்
டாங்குகளும்
துனிசிய
முதலாளித்துவ
வர்க்கம்
கீழிருந்து
வரும்
அச்சுறுத்தலுக்கு
எதிராகப் பாதுகாக்கப்படும்
என்பதை
உறுதிப்படுத்தும்
வகையில்தான்
இருக்கின்றன.
இதைத்தவிர,
குடிமக்கள் போராளிகளும்,
முறையாகக்
கொள்ளையடிக்கப்
பயிற்றுவிக்கப்பட்டவர்களும்
உள்ளனர்.
இவர்களில்
பெரும்பாலானவர்கள்
பென்
அலியின்
தொடர்புடையவர்கள்
என்றுதான்
நம்பப்படுகின்றனர்.
துனிசியாவில்
ஒவ்வொரு
40
பேருக்கும்
ஒரு
பொலிஸ்
இருப்பதாகக்
மதிப்பீடு
செய்யப்பட்டுள்ளது.
டாங்குகள்,
துருப்புக்கள்
மற்றும்
ஹெலிகாப்டர்கள்
தலைநகர்
துனிஸின்
மையப்
பகுதியை
முற்றிலும்
மூடிவைப்பதற்கு
நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இவை
முக்கியப்
பொதுக்கட்டிடங்களுக்கு
காவலாக
உள்ளன.
இராணுவ
ஹெலிகாப்டர்கள்
தலைக்கு
மேல்
ரோந்து
புரிகின்றன.
கொள்ளை
அடிப்பவர்கள்
டஜன்
கணக்கில்
இழுத்துச்
செல்லப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான
மக்களோ
பசியினால்
திகைப்பிற்குரிய
செயல்களில்
ஈடுபட
உந்துதல்
பெறுகின்றனர்.
உணவு
வழங்குவதற்கில்லை
என்று
பல
கடைகள்
கூறிவிட்டதாகத்
தகவல்கள்
வந்துள்ளன.
ஆட்சியின்
தொடர்ந்த
மிருகத்தனம்
சனிக்கிழமை
மிகக்
கோரமான
நிகழ்வின்
மூலம்
அடிக்கோடிட்டுக்
காட்டப்பட்டுள்ளது.
அதில்
ஒரு
பெரும்
தீ
மொனாஸ்டிரிலுள்ள
சிறை
எரிந்து
42
பேரைக்
கொன்றது.
அதிகாரிகள்
கைதிகளை
வெளியே
விடமறுத்துவிட்டனர்.
உள்ளே
நெருப்பில்
எரிந்து
சாம்பல்
ஆக
வேண்டியிருந்தது
அல்லது
மூச்சித்
திணறி
இறந்து
போயினர்.
கார்டியனின்
Angeline Chrisafis “நூற்றுக்கணக்கான
படையினர்களும்
டாங்குகளும்
வெறிச்சோடிவிட்ட
மைய
துனிசை”
ஒருவரும்
வரமுடியாமல்
செய்துவிட்டன”
என்று
எழுதியுள்ளார்.
அவர்
மேலும்
கூறினார்:
“கண்ணீர்ப்புகைக்
குண்டுக்களுக்கு
இடையே,
உடைக்கப்பட்ட
கடைகளும்
எரிக்கப்பட்ட
நடைபாதிகளிலும்
ஏராளமான
காலணிகள்
கிடந்தன.
ஒரு
இடது
கால்
காலணி,
ஒரு
ஜோடி
பேஸ்பால்
ஷூக்கள்,
ஒரு
பெண்ணின்
நாகரிகக்
காலணி,
ஒரு
பளபளக்கும்
கறுப்பு
ப்ரோக்
என.
பொலிசார்
தாக்கவந்தபோது
அல்லது
இவர்களை
இழுத்து
அடித்தபோது,
ஓடிய
நிலையில்
இவை
மக்களால்
கழற்றி
எறியப்பட்டன.
பெரும்
சர்வாதிகாரியின்
ஆட்சிக்கு
எதிராக
நடந்த
அந்த
தூக்கியெறிதலின்
அமைதியான
எதிர்ப்பில்
இவை
ஏற்பட்டன”
என்று
அவர்
தொடர்ந்து
எழுதியுள்ளார்.
“
‘மல்லிகைப்
புரட்சியை’
(Jasmine Revolution)
ஜாக்
காலணிகள்
நசுக்குகின்றனவா?”
என்ற
வினாவை
CNN
எழுப்பியுள்ளது.
CNN
ன்
பென்
வெடெமன்
தொடர்கிறார்:
“இப்பொழுது
அந்த
இயக்கம்
ஓர்
உண்மையான
மாற்றத்தை
விளைவிக்குமா,
அல்லது
உயர்மட்டத்தில்
வெறும்
மாற்றத்தை
மட்டும்தான்
ஏற்படுத்துமா
என்பது
தெளிவாக
இல்லை.
இராணுவமும்
பாதுகாப்புப்
படைகளும்
துனிசில்
ஒழுங்கை நிலைநாட்ட
முற்பட்டுள்ளன
–
இரவு
முழுவதும்
ஊரடங்கு
உத்தரவு
என்பது
கடுமையாகச்
செயல்படுத்தப்படுகிறது….இது
ஒரு
இராணுவ
ஆட்சி
மாற்றம்
என்ற
உணர்வுதான்
அதிகம்
காணப்படுகிறது.”
துனிசிய
ஆளும்
தட்டினர்
எதிர்ப்பை
அடக்குவதின்
நோக்கத்திற்கு
அனைத்து
ஏகாதிபத்தியச்
சக்திகள்
மற்றும்
அரபு
ஆட்சிகளின்
ஆதரவைக்
கொண்டுள்ளது.
இவை
அனைத்தும்
ஒரு
புரட்சித்
தொற்றுப் பரவல்
என்பது
மக்ரெப்பின்
மற்ற
பகுதிகள்
மற்றும்
மத்திய
கிழக்கு
முழுவதும்
பரவக்கூடும்
என்று
அஞ்சுகின்றன.
முன்னாள்
காலனித்துவ
ஆட்சியாளரான
பிரான்ஸ்
எதிர்ப்புக்களுக்கு
ஆதரவு
என்ற
தோற்றத்தைக்
காட்டியுள்ளது.
துனிசியாவில்
இதற்காகச்
சுதந்திரமான
தேர்தல்கள்
விரைவில்
நடத்தப்பட
வேண்டும்
என்று
அழைப்பு
விடுத்துள்ளது.
பல
நாட்கள்
ஒருபக்கமும்
சாயாமல்
இருந்த
அமெரிக்கா
ஜனாதிபதி
ஒபாமா
துனிசிய
எதிர்ப்பாளர்களின்
‘தைரியத்தையும்’,
“துணிவான”
போராட்டத்தையும்
பாராட்டுவதற்கு
உந்துதல்
கொடுத்துள்ளது.
பிரிட்டனின்
Telegraph
இரு
அரசாங்கங்களின்
பாசாங்குத்தனத்தையும்
சுட்டிக்காட்டி,
பென்
அலியின்
வீழ்ச்சிக்கு
முன்பு
“அமெரிக்கா
அப்பொழுதுதான்
மற்றும்
ஒரு
12
மில்லியன் டொலர்
இராணுவ
உதவியாக
துனிசியாவிற்கு
அளித்தது.
பிரான்ஸ்
இது
பற்றிய
படிப்பினைகளை
இப்பொழுது
கூறுவது
ஒரு
முன்கூட்டிய
இயலாச்செயல்
என்று
கூறியுள்ளது.
வெளியுறவு
மந்திரி
Michele Alliot Marie
துனிசியாவிற்கு
கொடுக்கப்பட
வேண்டிய
தகவல்
“நட்புரிமை”
கொண்டிருக்க
வேண்டும்
என்று
கூறி,
“நிலைமையைத்
தீர்ப்பதற்குப்
பாதுகாப்புப்
படைகளை
வேண்டுமானால்
அனுப்புவதாகவும்”
கூறினார்.
அரபு லீக்
அமைதிக்கு
அழைப்பு
விடுத்து,
“அனைத்து
அரசியல்
சக்திகளும்,
துனிசியச்
சமூகத்தின்
பிரதிநிதிகள்,
அதிகாரிகளும்
ஒன்றாக
இணைந்து
ஒற்றுமையுடன்
துனிசிய
மக்களின்
சாதனைகளைத்
தக்கவைத்து
தேசிய
சமாதானத்தை
அடைய
வேண்டும்”
என்று
வலியுறுத்தியுள்ளது.
முக்கிய
சக்திகளின்
அடிப்படைக்
கவலைகளைத்
தெளிவாக்கும்
வகையில்
ஜேர்மனியின்
Deutsche Welle “துனிசியாவில்
நடப்பது
ஒரு
வரலாற்றுத்
தன்மை
நிறைந்த
நிகழ்வு
ஆகும்.
முழு
அரபு
உலகிற்கும்
இது
ஒரு
வலுவான
குறிப்பைக்
காட்டுகிறது.
சர்வாதிகார,
ஊழல்
நிறைந்த
ஆட்சியாளர்களுக்கு
எதிராக
மக்கள்
வெற்றிகரமாக
எழுச்சி
செய்யமுடியும்
என்பதை
இது
காட்டுகிறது,
அதையொட்டி
உள்நாட்டு,
வெளிநாட்டு
இராணுவத்
தலையீடு
இல்லாமல்
“ஆட்சி
மாற்றம்”
நிகழும்
என்பதும்
தெரிய
வந்துள்ளது.
அதேபோல்
எதிர்க்கட்சி
அரசியல்வாதிகள்,
சாதாரண
மக்களின்
பிரதிநிதிகள்
குறுக்கீடு
இல்லாமலும்
நிகழும்
என்பதும்
தெரிய
வந்துள்ளது.”
இது
ஒரு
வரவேற்கத்தக்க
நிகழ்வு
அல்ல
என்பதையும்
செய்தித்தாள்
தெளிவாக்கியுள்ளது.
“இத்தகைய
இயங்கு
சக்தி
ஒரு
கட்டம்
வரைதான்
விரும்பத்தக்கது.
துனிசியாவில்
பங்குபெற்ற
அனைவரும்
இது
அடையாள
முறையில்
தங்கள்
நாட்டிற்கு
அப்பாலும்
செல்லும்
என்பதற்கான
பெரும்
பொறுப்பைக்
கொண்டுள்ளனர்.
பழைய
ஆட்சியின்
எஞ்சிய
சக்திகள்,
எதிர்த்தரப்பினர்
மற்றும்
சாதாரணச்
சமூகம்,
“தெரு”
அனைத்துமே
ஒரு
வெளிப்படையான,
ஒழுங்கான
ஆட்சி
மாற்றம்
நடப்பதற்கான
முயற்சிக்குப்
பொறுப்பு
ஏற்க
வேண்டும்”
என்று
Deutsche Welle
எழுதியுள்ளது.
Business Insider
இன்னும்
அப்பட்டமாக
ஒரு
தலைப்பில்
“முதலில்
துனிசியா,
அடுத்த
மாற்றம்
எங்கு…?”
என்ற
வினாவை
எழுப்பியுள்ளது.
பென்
அலி
அகற்றப்பட்டது
குறித்து
மிக
வெளிப்படையான
அறிக்கை
துனிசியாவின்
அண்டை
நாட்டு
லிபியாவின்
தலைவர்
முயாம்மர்
கடாபியிடம்
இருந்து
வந்துள்ளது:
“துனிசியாவில்
நடப்பது
பற்றி
நான்
பெரும்
வேதனை
அடைந்துள்ளேன்.
துனிசியா
இப்பொழுது
அச்சத்தில்
வாழ்கிறது.
குடும்பங்கள்
சோதனைக்குட்பட்டு,
உறுப்பினர்கள்
அவர்கள்
படுக்கையறையிலேயே
கொலை
செய்யப்படலாம்.
குடிமக்கள்
தெருக்களில்
கொல்லப்படலாம்.
இது
ஏதோ
ஒரு
போல்ஷிவிக்
அல்லது
அமெரிக்கப்
புரட்சி
போல்
உள்ளது”
என்றார்
அவர்.
எதிர்ப்பாளர்கள்
விக்கிலீக்ஸ்
தகவல்
ஆவணங்கள்
கசிய
விட்டவற்றால்
வழிநடத்தப்படுள்ளனர்.
அவற்றில்
பென்
அலியின்
குடும்பத்தின்
ஊழல்
பற்றித்
தெரிவிக்கப்பட்டுள்ளன
என்றார்
அவர்.
இத்தகவல்
ஆவணங்கள்
“குழப்பங்களை
தோற்றுவிக்க
தூதர்களால்
எழுதப்பட்டவை”
என்றார்
அவர்.
“நீங்கள்
பெரும்
இழப்பை
அடைந்துள்ளீர்கள்.
துனிசியாவை
ஆட்சி
செய்ய
ஜைன்
(பென்
அலியை)
விடச்
சிறந்தவர்
ஒருவரும்
இல்லை”
என்று
அவர்
சேர்த்துக்
கொண்டார்.
தான்,
பென்
அலிதான்
இன்னமும்
“துனிசியாவின்
சட்டபூர்வ
ஜனாதிபதி”
என்று
கருதுவதாகத்
தெரிவித்தார்.
கடாபியின்
கவலை
முற்றிலும்
ஏட்டுத்தனமானது
அல்ல.
அவருடைய
தொலைக்காட்சி
உரை
அல்-பேயடாவில்
எதிர்ப்புக்கள்
பற்றித்
தகவல்கள்
வந்தபோதே
ஒளிபரப்பாயிற்று.
அவற்றில்
ஆர்ப்பாட்டக்காரர்கள்
வறிய
வீட்டு
நிலை
பற்றிப்
பொலிசுடன்
மோதி
அரசாங்க
அலுவலகங்களையும்
தாக்கினர்.
துனிசியாவின்
மற்றொரு
அண்டை
நாடான
அல்ஜீரியா
ஒரு
1,000
மைல்
நீள
எல்லையைப்
பகிர்ந்து
கொள்கிறது.
இங்கு
ஏற்கனவே
வேலையின்மை
மற்றும்
அடிப்படை
உணவுப்
பொருட்களை
விலையேற்றம்
பற்றிய
கலகத்தைக்
கண்டுள்ளது.
அதில்
ஐந்து
பேர்
கொல்லப்பட்டனர்.
இது
ஜனாதிபதி
அப்துல்
அசிஜ்
பௌடிபிகாவின்
ஆட்சி
சர்க்கரை மற்றும்
சமையல்
எண்ணெய்
ஆகியவற்றின்
விலையைக்
குறைக்கும்
கட்டாயத்திற்குத்
தள்ளியது.
ஆனால்
இதுவும்
மக்கள்
எதிர்ப்பைச்
சமாதானப்படுத்த
முடியவில்லை.
சனிக்கிழமை
ஒரு
அரசாங்கக்
கட்டிடத்தில்
ஒரு
நபர்
தனக்கே
தீ
வைத்துக்
கொண்டு
இறந்து
போனார்.
இந்த
நிகழ்வு
துனிசியாவில்
எதிர்ப்புக்களைத்
தூண்டிய
தற்கொலை
நிகழ்வைத்தான்
எதிரொலிக்கிறிது.
மண்ணெண்ணெய்
ஊற்றிக்
கொண்டு
மொஹ்சன்
பௌடெர்பிப்
தன்
உடலையே
கடந்த
வியாழனன்று
எரித்துக்
கொண்டார்.
அவருக்கு
ஒரு
வேலை
மற்றும்
வீடு
கொடுக்க
முடியவில்லை
என்று
பௌக்கட்ராவின்
மேயர்
கூறியபின்
இது
நடந்தது.
அல்ஜீரியச்
செய்தி
ஊடகம்
பொதுவாக
பென்
அலியின்
வீழ்ச்சியை
வரவேற்றுள்ளது.
Le Quotidien d’Oran
இது
“நம்
அதிகாரிகளை
வியர்த்துக்
கொட்ட
வைத்துள்ளது.
அவர்கள்
இந்நிகழ்வின்
தொற்றுப் பரவல்கள்
அல்ஜீரியாவிலும்
வரலாம்
என்று
பீதி
அடைந்துள்ளனர்”
என்று
எழுதியுள்ளது.
ஜோர்டானில்
5,000க்கும்
மேலானவர்கள்
கடந்த
வாரம்
ஒரு
எதிர்ப்பை
நடத்தினர். இது
உணவுப்
பொருட்கள்
விலையேற்றம்,
வேலையின்மை
ஆகியவற்றிற்கு
எதிரான
“சீற்ற
தினம்”
என்று
விளக்கப்பட்டது.
இர்பிட்,
காரக்
மற்றும்
மான்
ஆகியவற்றில்
நடந்த
எதிர்ப்புக்கள்
பாத்திஸ்ட்
கட்சி
ஆதரவாளர்களால்
தலைமை
தாங்கப்பட்டன.
அவர்கள்
பிரதம
மந்திரி
சமீர்
ரிடால்
பதவியில்
இருந்து
இறங்க
வேண்டும்
என்று
கோரினர்.
“ஐக்கியப்பட்ட
வர்க்கம்,
ஐக்கியப்பட்ட
அரசாங்கம்
உங்கள்
இரத்தத்தை
உறிஞ்சிவிட்டன
என்று
எதிர்ப்பாளர்கள்
கோஷமிட்டனர்.
அரசர்
இரண்டாம்
அப்துல்லாவின்
ஆணையின்பேரில்
சில
உணவுப்
பொருட்கள்,
எரிபொருள்
மீதான
விலைகளையும்
வரிகளையும்
குறைத்த
வகையில்
ஜோர்டான்
இதை
எதிர்கொண்டது.
அரசாங்கம்
2011
வரவு-
செலவுத் திட்டத்தில்
141
மில்லியன்
பவுண்டுகளை
ரொட்டி
உதவி
நிதிக்கும்
எரிபொருள்
விலையைக்
குறைக்கவும்,
வேலைகளைத்
தோற்றுவிக்கவும்
ஒதுக்கியுள்ளது.
ஒபாமா
நிர்வாகம்
அதன்
உதவி
நிதித்
தொகுப்பு
ஜோர்டானுக்கு
அளிப்பதை
100
மில்லியன் டொலர்
கூடுதலாக
இந்த
ஆண்டு
அதிகரித்துள்ளது.
உலகின்
ஆட்சியாளர்களுக்குப்
பெரும்
கவலை
தருவது
இப்பகுதியில்
பெரும்
நாடான
எகிப்தில்
வெடிக்கும்
அதிருப்தி
ஆகும்.
ஹொஸ்னி
முபாரக்கின்
ஆட்சி
சமாதானப்படுத்தும்
வகையில்
பேசுகிறது,
“சகோதரத்துவ
துனிசிய
மக்களின்
விருப்பங்களை”
தான்
மதிப்பதாக
அறிவித்துள்ளது.
மேலும்
“துனிசிய
சகோதரர்கள்
நிலைமையைச்
சீராக்கி
துனிசியா
பெரும்
குழப்பத்தில்
சரியாமல்
செய்யப்
போதுமான
அறிவைக்
கொண்டுள்ளனர்
என்று
தான்
நம்புவதாகவும்”
கூறியுள்ளது.
வெள்ளியன்று
எகிப்தியத்
தலைநகர்
கைரோவில்
எதிர்ப்புக்கள்
இருந்தன.
ஆர்ப்பாட்டக்காரர்கள்,
“அவருக்காவும்
ஒரு
விமானம்
காத்திருக்கிறது
என்று
முபராக்கிடம்
கூறுங்கள்,
பென்
அலி
அவர்களே!”
என்று
கோஷம்
எழுப்பினர்.
கைரோவின்
ஜாமலெக்கில்
துனிசியத்
தூதரகத்திற்கு
வெளியே
எதிர்ப்பாளர்கள்,
“ஹொஸ்னி
முபாரக்
ஒழிக!”,
“பென்
அலி,
நீ
ஒரு
மோசக்காரன்!”
முபாரக்,
நீ
ஒரு
மோசடிக்காரன்”
“கடாபி,
நீ
ஒரு
மோசடிக்காரன்”
என்று
கோஷமிட்டனர்.
“ “துனிசில்
இன்று
புரட்சி,
நாளை
எகிப்தில்”
என்று
கோஷ
அட்டைகளில்
எழுதப்பட்டிருந்தது.
துனிசிய
மக்களுக்கு
ஆபத்து
என்பது
செய்தி
ஊடகம்
மிக
நேரிய
“மல்லிகைப்
புரட்சியின்
கூறுபாடுகள்”
என்று
பாராட்டுவது,
அதன்
பன்முகச்
சமூகத்
தன்மை
மற்றும்
தலைமையின்மையைப்
பாராட்டுவது
என்பது
உண்மையில்
அதன்
பெரும்
வலுவற்ற
தன்மை
ஆகும்.
தலையங்கக்
கருத்தில்
பைனான்சியில்
டைம்ஸ்
துனிசிய
நிகழ்வுகள்
“1989
கிழக்கு
ஐரோப்பியப்
புரட்சிகளின்”
அரசியல்
தொடர்ச்சியாக
உள்ளன
என்று
விவரித்துள்ளது
ஒரு
தேசிய
ஐக்கிய
அரசாங்கம்
விரைவில்
அமைக்கப்பட
வேண்டும்,
“புதிய
ஒழுங்கிற்கான
இடைக்
காலத்தில்
ஏற்பட்டுள்ள
திறந்த
காயங்கள்
ஆறுவதற்கு”
விரைவான
நடவடிக்கைகள்
எடுக்கப்பட
வேண்டும்”
என்று
கூறி,
“அமெரிக்காவும்
ஐரோப்பிய
ஒன்றியமும்
துனிசியாவின்
“மல்லிகைப்
புரட்சி”
விளைவு
பற்றி
அஞ்சுவதற்கான
காரணம்
ஏதுமில்லை”
என்றும்
வலியுறுத்தியுள்ளது.
முதலாளித்துவமும்,
அதனுடைய
கட்சிகள்
ஆகியவற்றிற்கு
இடது
அரசியல்
தலைமை
கொடுத்திருந்த
முன்னாள்
ஸ்ரானிச
அரசுகளின்
ஆட்சிகள்
வீழ்ச்சியுற்றதைப்
போன்றே,
பென்
அலியின்
ஆட்சிக்குப்
பதிலாக
வரும்
அரசாங்கமும்
மக்கள்
நலன்களுக்கு
விரோதமாகத்தான்
இருக்கும்.
அவைகள்
போன்றே
ஏகாதிபத்தியச்
சக்திகளுக்கு
உறுதியான
நட்பைக்
காட்டும்.
நான்காம்
அகிலத்தின்
அனைத்துலகக்
குழுவின் பிரிவுகளை
புரட்சிகரக்
கட்சிகளாகக்
கட்டமைக்கப்படுவதில் தான்
துனிசியத்
தொழிலாள
வர்க்கத்தின்
அரசியல்
தலையீடு
என்பதின்
முழு
நனவுச்
செயற்பாடு
அனைத்தும்
தங்கியுள்ளன. |