சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Thousands march in France to support the Tunisian people

துனிசிய மக்களுக்கு ஆதரவாக பிரான்சில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுப்பு
 

By Antoine Lerougetel
17 January 2011

 

Use this version to print | Send feedback
 

Marseille
மார்சேய்: “பென் அலி - ட்ரபெல்சி = கன்னொச்சி = மாபியா என்று கோஷ அட்டை கூறுகிறது

 

சனிக்கிழமையன்று பிரான்சின் நகர மையங்களில் துனிசியச் சர்வாதிகாரியை நாட்டை விட்டு ஓடச்செய்த மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரிசில் 8,000 அணிவகுப்பாளரும், மார்சேயில் கிட்டத்தட்ட 2,000 பேரும் இருந்தனர்.

 

பிரான்சில் 600,000 துனிசிய மக்கள் வாழ்கின்றனர். இதே அளவிற்கு பிரெஞ்சு குடிமக்களாக மாறிவிட்ட துனிசியர்களும் இருக்கக்கூடும். ஆர்ப்பாட்டக்காரர்களில் இவர்கள் பெருமளவிற்கு இருந்தனர்.

 

23 ஆண்டு ஆட்சிக்குப் பின் நாட்டை விட்டு பென் அலியைத் துரத்தியதில் பெருமை கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தில்அவருடைய குடும்பமும் குறிப்பாக அவருடைய மனைவி லெய்லா ட்ராபெல்சியும் நாட்டின் செல்வத்தின் பெரும் பகுதியைச் சூறையாடியிருந்தனர் வருங்காலம் பற்றிய கவலையும் அதிகமாக இருந்தது.

 

மார்சேயில் ஆர்ப்பாட்டக்காரர்கள், “எங்கள் புரட்சியைத் திருடாதீர்கள் என்ற உறுதியைக் கொண்டிருந்த பெரிய பதாகையை உரிமையுடன் உயர்த்திக்காட்டினர். ஒரு கோஷ அட்டை முன்னாள் பிரதம மந்திரி மஹ்மத் கன்னொச்சியைத் தாக்கியது. அவர் உத்தியோகபூர்வமாக சனிக்கிழமை அன்று துனிசியாவின் ஜனாதிபதியாக இருந்தார். பின்னர் அவருக்குப் பதிலாக பௌவட் மெபசா பதவிக்கு வந்தார். கோஷ அட்டை: “பென் அலி - ட்ரபெல்சி = கன்னொச்சி = மாபியா என்று கூறியது.

 

ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியரும் அரசியல் அகதியாக புலம்பெயர்ந்தவரான மஹ்மத் அமாமி, நீம்ஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, பலருடைய கருத்துக்களையும் பிரதிபலித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அரசாங்கம் தந்திரங்களைச் செய்து பென் அலி ஆட்சியை பென் அலி இல்லாமல் கொண்டுவந்துவிடும் என்று நினைக்கிறேன்.”

 

ஆர்ப்பாட்டங்களுக்கு பிரெஞ்சு முதலாளித்துவக் கட்சிகள், குட்டி முதலாளித்துவ இடது கட்சிகள்சோசலிஸ்ட் கட்சி (PS),

ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் இடது கட்சி போன்றவைகொடுத்த ஆதரவு முற்றிலும் பாசாங்குத்தனம் நிறைந்ததாகும். துனிசிய மக்களின் புரட்சி பரவித் தொற்றும் தன்மையைக் கொண்ட அரபு உலகிலும் மத்திய கிழக்கிலும் பரவக்கூடும் என்று அஞ்சி, இவை அனைத்தும் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்ஜனநாயகத்திற்கான அழைப்பு கொடுத்து இயக்கம் வளர்வதை நிறுத்த முற்படுகின்றன.

 

இந்த அரசாங்கங்களானது இடைக்கால ஆட்சி, பென் அலியின் நீண்ட காலப் பிரதமராக பணியாற்றிய மஹ்மத் கன்னொச்சிக்கும் பாராளுமன்றத் தலைவர் பௌவட் மெபெசா தலைமையின் கீழ் நடப்பதற்கு முழு ஆதரவைக் கொடுக்கின்றன. ஓடிப்போவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பென் அலி ஆணையிட்ட நெருக்கடிக் கால ஆட்சியைத்தான் இவர்கள் செயல்படுத்துகின்றனர். பிரான்சின் குட்டி முதலாளித்துவஇடது கட்சிகள் எதிரொலிக்கும் நிலைப்பாட்டில், ஐரோப்பிய அரசாங்கங்கள் உத்தியோகபூர்வஎதிர்க்கட்சிகளுடன்”, UGTT எனப்படும் துனிசியத் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு மற்றும் பிற பென் அலி சர்வாதிகாரத்தின் மற்றய முக்கிய பகுதிகளுடனும்ஜனநாயகத்திற்கு என்று கூறிக்கொண்டு பேச்சுவார்த்தைகள் தொகுப்பை நடத்த முற்பட்டுள்ளன.

 

ஜனநாயகத்திற்கான அழைப்புக்கள் மற்றும் தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான அழைப்புக்கள் என்பது தேசிய, பிரெஞ்சு மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தின் பொருளாதாரக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது அல்லது ஒரு பயங்கர அச்சுறுத்தல் ஆட்சியின் கீழ் பென் அலியின் அதிகாரமானது அரசின் மீது பொலிஸ் மற்றும் இராணுவம் ஆகியவை தக்கவைத்து வந்த நிலை, இவைகள் எவற்றையும் சவால் விடவில்லை. இச்சக்திகள், நெருக்கடிக் காலத்தில் கூடுதலாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளவை தொடர்கின்றன, அவற்றின் கொலை வெறியை பென் அலி அகன்றதிலிருந்து இன்னும் விரைவுபடுத்தியும் உள்ளன. அவர் ஓடிப் போய் சில மணி நேரங்களுக்குள்ளாக, 42 பேரின் மரணங்கள் ஒரு சிறை தீப்பற்றி எரிந்தபோது அதில் இருந்த கைதிகளைப் பொலிசார் விடுவிக்காததால் நேர்ந்தன.

 

WSWS ஆதரவாளர்கள் மெக்ரெப்பில் சமூக மோதல் குறித்த சர்வதேச தாக்கங்களைக் கொண்டிருந்த அறிக்கையை மார்சேய் மற்றும் பாரிஸ் ஆர்ப்பாட்டங்களில் வழங்கினர். ஒரு ஜனநாயகச் செயல்முறையை இராணுவமும் பொலிசும் கட்டுப்பாட்டில் இருக்கும்போது எப்படி அடையமுடியும் என்ற வினாவை அது எழுப்பியது. “பெரும்பாலான மக்களின் நலன்களை உண்மையில் பிரதிபலிக்கக் கூடிய அரசாங்கங்கள் தொழிலாளர்களின் அரசாங்கங்கள்தான். அவைதான் மெக்ரப் சர்வாதிகார ஆட்சிகள் அனைத்தையும் வீழ்த்தியபின் அமைக்கப்பட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 
Paris
பாரிஸ் ஆர்ப்பாட்டம்
. “துனிசியா எழுச்சிபெறு, நாங்கள் உங்களுடன் உள்ளோம் என்று கூறும் பதாகை

 

பாரிசில் Fide என்பவர், WSWS இடம் கூறினார்: “பென் அலி அகன்றுவிட்டது ஒரு பெரிய முன்னேற்றம் என்று நினைக்கிறேன். ஆர்ப்பாட்டமும் அரசியல் கட்சிகளும் நல்ல முறையில் ஏற்பாடாகியிருந்தன. கோஷங்கள் தெளிவில்லை. மிகவும் வறிய நிலையிலுள்ள மக்களுக்கு சமூக சீர்திருத்தங்களை நாம் செய்ய வேண்டும். மக்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் சில உண்மையான சோசலிஸ்ட்டுக்கள் இருந்தால் நல்லது என்று கருதுகிறேன். தேசிய ஐக்கிய அரசாங்கம் என்பதுடன் உடன்படுகிறேன், ஆனால் RCP [பென் அலியின் கட்சி கூடாது. செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது.”

 

மக்கள் மீது மதத்தின் பாதிப்பு இருப்பதைக் குறிப்பிட்டு அவர் தெரிவித்தார்: “மக்களிடையே அரசியல் கல்வி பற்றிப் பெரிதும் உணர்வு இல்லை. நானும் அப்படித்தான் உள்ளேன், அரசியலில் அறியாமையில் இருக்கிறேன்.” இயக்கம் பரவக்கூடும், எனவே இதையொட்டி சில அரபு அரசாங்கங்கள் உணவு விலைகளை குறைத்துவிட்டன என்று அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் இயக்கத்தை சமாளிக்க பென் அலிக்கு உதவ பிரெஞ்சுப் பொலிசை அனுப்பத் தயார் என்று கூறிய வெளியுறவு மந்திரி கருத்து பற்றி அவர் கோபம் கொண்டார்.

 

மார்சேய் ஆர்ப்பாட்டம் பற்றி ஒரு பிராங்கோ-துனிசியரான Houssamani கூறினார்: “கன்னொச்சியை நாம் அகற்ற வேண்டும், துனிசியா ஒரு புது அடிப்படையில், குறிப்பாக ஜனநாயகத்துடன், தொடங்க வேண்டும்.”

 
Marseille
மார்சேய் ஆர்ப்பாட்டம்
. பதாகை கூறுகிறதுஎங்கள் புரட்சியைத் திருடாதீர்கள்

 

துனிசியாவிலிருந்து எதிர்ப்புக்கள் சர்வதேச அளவில் பரவும் என்று தான் நம்புவதாக Houssamani கூறினார். “அல்ஜீரியா மற்றும் மொரோக்காவிற்கு நாங்கள் உதாரணமாக இருப்போம் என்று நம்புகிறேன். அவர்கள்தான் துனிசியாவை பின்பற்ற ஒரு பாதையைக் காண வேண்டும்.”

 

“NPA ஆனது இந்த இயக்கத்தை இன்ரிபடா போல் கருதுவதை நான் ஏற்கவில்லை. ஒரு மாதம் முன்புதான் நாட்டிலிருந்து நான் வந்தேன். நான் விடுமுறையின் போது அடிக்கடி அங்கு செல்லுவேன், இளம் துனிசியர்களுக்கு வேலை இல்லை. அங்கு வறுமைதான் உள்ளது. காலையில் எழுந்தால் அவர்களுக்குச் செய்வதற்கு இலக்கு ஒன்றும் இல்லை. வேலையின்மையில் வாடுகின்றனர். இந்த நிலைமையை பிறர் பயன்படுத்துவதை காண்கின்றனர். வேறுநாட்டில் இருந்து வருபவர்கள் பை நிறையப் பணம் வைத்துள்ளனர் என்றார்.

 

பொருளாதாரத்தில் பட்ட முதுகலைப் படிப்பை மேற்கொண்டுள்ள நெஜ்மெடைன் கூறினார்: “மக்களுக்காக ஒரு அரசாங்கம் வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், ஒரு ஜனநாயக அரசாங்கம். ஒரு சுதந்திர அரசாங்கம் வேண்டும், அடக்குமுறை கூடாது, அனைவருக்கும் சமூக சமத்துவம் தேவை.”

 

இந்த இயக்கம் மற்ற இடங்களிலும் பரவ வேண்டும். ஒரு ஊழல் அரசாங்கத்தை அகற்றுவதற்குத் துனிசியர்களால் முடிந்தது. அப்படியானால் மற்றவர்களாலும் ஏன் முடியாது? தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கம் தேவைதான், அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தைத்தான் முக்கியமாக மற்றும் சமுக சமத்துவம் பற்றியும் நினைக்கிறது என்று நம்புகிறேன். வறுமை, வேலையின்மை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை முக்கிய பிரச்சினைகள் துனிசியாவில் உள்ளன. பொருளாதார வளர்ச்சி உள்ளது, ஆனால் அது மோசமாக பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இன்னும் மோசமாக உள்ளது. அவர்களும் துனிசியாவில் நடந்தது போல் செய்ய வேண்டும். மக்கள் தங்கள் விதிகளைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.”

 

துனிசியப் பின்னணியுடைய வணிகரான சோபியன் கூறினார்: “கருத்து எதையும் கூறாததிலிருந்து, பிரெஞ்சு அரசாங்கத் தலைவர் [ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி] உளப்பாங்கை நாங்கள் அறிய முடிகிறது. இவர்கள் அனைவரும் பென் அலி அகன்றுவிட்டதில் அதிருப்திதான். பென் அலி பிரான்சிற்கு நிதிய ஆதரவைக் கொடுத்தார் தன்னுடைய மக்களுக்காக பிரான்ஸ் இதில் ஈடுபாடு காட்டும்; அதேபோல் பெரிய பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்காகவும் ஈடுபடும். அதைத்தவிர பிரான்ஸ் ஒன்றும் துனிசியாவைப் பற்றிக் கவலைப்படாது. இது ஒரு புரட்சி. ஒரு பொலிஸ் நிலையத்தை துனிசியர் ஒருவர் தாக்குவார் என்று நீங்கள் கற்பனைகூட செய்ய முடியாது. இது மகத்தான விடயம். மேலை மக்கள் இந்த இயக்கத்தை தாக்குகின்றனர், ஆனால் வரவிருக்கும் ஆண்டுகளில் துனிசியாவில் ஜனநாயகம் மலர்வதை நீங்கள் காண்பீர்கள்.”

 

மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் WSWS இடம் பென் அலி ஆட்சியில் இருந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வேண்டும் எனத் தான் விரும்புவதாகக் கூறினார். “அது ஒரு சமூகப் பேரழிவாக இருந்தது. மக்கள் பெருமளவில் சிறையில் அடைக்கப்பட்டனர். வருமானங்களில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. பெரும் செல்வந்தர்கள், வறியவர்கள் என்று. எங்களுக்கு ஒன்றும் தற்காலிகத் தீர்வு வேண்டாம். பல அமைப்புக்கள் இறுதி வெற்றிவரை தொடர விரும்பவில்லை. ஆனால் இதுதான் ஆரம்பம். நாங்கள் கைவிட மாட்டோம். அல்ஜீரியாவிலும் மொரோக்காவிலும் இதேபோன்ற பிரச்சினைகள்தான் உள்ளன.”