WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
Tirupur suicides: The human cost of India’s
capitalist expansion
திருப்பூர் தற்கொலைகள்:
இந்தியாவின் முதலாளித்துவ விரிவாக்கத்தின் மனித விலை
By
a WSWS reporting team
31 December 2010
தென்னிந்தியாவில் ஆடை தயாரிப்பு தொழிலில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரமாக
திகழும் திருப்பூரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்,
அவர்களது வாழ்க்கை துணைகள் அல்லது குழந்தைகள் என சுமார் ஆயிரம் பேர்
கடந்த 2010 செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாண்டுகளில் தற்கொலை செய்துகொண்டதற்கு
காரணமாக திகழும் அவர்களது நிலைகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக உலக சோசலிச வலைத்
தள நிருபர்கள் அங்கு சென்றனர்.
கவுதம் என்ற
25 வயதுடைய இயந்திர
இயக்குனரின்
உறவினர்களிடம் நாங்கள் முதலில் பேசினோம். அவர்கள் எங்களிடம்
கவுதமும்,
அவரது மனைவி பிரியாவும் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டதற்கு
காரணமான துயரமான சூழ்நிலைகள் குறித்து எங்களிடம் விளக்கினார்கள்.
கடந்த
செப்டம்பர் 14 ஆம் தேதியன்று கவுதம் வீட்டிற்கு திரும்பியபோது,
அவரது மனைவி பிரியா கூரையிலிருந்து ஒரு கயிற்றில் தூக்கில்
தொங்கியதை பார்த்தார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து மணந்த தனது மனைவியின்
தற்கொலையால் மிகவும் மனமுடைந்து போன கவுதம்,
தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று
அங்கே விஷமருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார்.
உள்ளூரில்
வட்டிக்கு கடன்கொடுப்பவர்களிடமிருந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இந்த
தம்பதியர்,
அவர்களால் வேட்டையாடப்பட்டனர்.
இந்த கடன்கொடுப்பவர்களின் அடியாட்கள்,
கவுதம் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று
பிரியாவை துன்புறுத்தியுள்ளனர். இந்த நெருக்கடியை தாங்க முடியாமல் பிரியா தற்கொலை
செய்துகொண்டார்.
தற்போது,
பிரியா மற்றும் கவுதமின் பெற்றோர்கள் ஒன்றரை வயது பேரக்குழந்தையை
வளர்க்க எவ்வித உதவியுமின்றி தவிக்கின்றனர்.
மற்றொரு
தொழிலாளியான
சாமிநாதன்,
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக கீழ்கண்ட குறிப்பை
எழுதியுள்ளார்:
"நான்
திருப்பூருக்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நான் கொடுக்க வேண்டிய கடன் அசல் தொகை ரூ.21,000
($467).கடந்த
நான்கு மாதங்களாக என்னால் கடனை செலுத்த முடியவில்லை.
இதனால் நான் மிகவும் அவமானமும்,
வேதனையும் அடைந்தேன். இனிமேலும் நான் உயிர் வாழ விரும்பவில்லை. இந்த
துன்பத்திலிருந்து எப்படி மீள்வது என்று எனக்கு தெரியவில்லை. எனவே யாரும் அறியாத
இடத்தை நோக்கி எனது பயணத்தை நான் தொடங்குகிறேன். எனது பிள்ளைகள் குறித்து எனக்கு
பிரச்சனையில்லை. என்னுடைய ஒரே விருப்பம்,
எனது இளைய மகளின் திருமணமாவதை
கண்ணால் பார்க்க வேண்டும் என்பது மட்டும்தான்."
கடன்கொடுப்பவர்களின் துன்புறுத்தல் காரணமாக,
திருப்பூரில் ஆடை தயாரிப்பு ஆலை ஒன்றில் துணிவெட்டுபவராக
வேலை பார்த்த 26 வயது அமீர் என்பவரும் விஷமருந்தி உயிரை
மாய்த்துக்கொண்டார்.
தனது சகோதரியின்
திருமணத்திற்காக கடன்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட அவரால்,
பின்னர் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல்போனபோது
கடன் தொகை மிக அதிகமாக உயர்ந்துவிட்டதை கண்டார்.
செல்வம்
என்ற மற்றொரு 27 வயது ஆடைத்
தொழிலாளி
தற்கொலை செய்துகொண்டதற்கான சூழ்நிலைகளை பற்றியும் நாங்கள் அறிந்துகொண்டோம்.
ஒரு விபத்தில் செல்வத்தின்
கை எலும்பு
முறிந்தது.
அவர் குணமாகி வந்தபோது,
அவரது முதலாளி மீண்டும் அவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ள மறுத்துவிட,
அவரால் மற்றொரு வேலையை தேடிக்கொள்ள முடியவில்லை.
வருவாய் இல்லாமல் போனதால்,
அவரது திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு அவரது மனைவி,
ஆறு வயது மகள் மற்றும் ஒன்றரை வயது மகன் ஆகியோர் அவரிடமிருந்து
பிரிந்தனர். அதன்பின்னர் சில நாட்களிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர்
ஆடை தொழிற்சாலையில் துணிவெட்டுபவராக வேலை பார்க்கும் 27 வயது இப்ராகிம்,
தாமும்,
பல்லாயிரக்கணக்கான இதர ஆடைத் தொழிலாளர்களும் சந்திக்கின்ற
நிலைகள் பற்றி உலக
சோசலிச
வலைத்
தளத்திடம் பேசினார்.
"மிக
சொற்பமான கூலியையே நாங்கள் பெறுகிறோம்" என்று சொன்ன இப்ராகிம்,
"எங்களது
குடும்பங்களுக்கான மிக அடிப்படைத் தேவைகளுக்கு போதுமான பணம் கூட எங்களிடம் இல்லை.
கூடுதலாக சம்பாதிப்பதற்காக நாளொன்றுக்கு வழக்கமாக 12,
16 அல்லது சில நேரங்களில் 24 மணி நேரம் கூட,
நீண்ட நேரம் நாங்கள் வேலை செய்கிறோம். இதனால் நாங்கள் எங்களது
குடும்பத்தினரோடு செலவழிக்கவோ அல்லது எங்களது குழந்தைகள் கூட விளையாடவோ எங்களுக்கு
நேரமே இருப்பதில்லை.
"எங்களுக்கு
இங்கே எவ்வித அரசாங்க மருத்துவமனைகளோ அல்லது
தொழிலாளருக்கான
அரசு
மருத்துவ
காப்புறுதியோ
(ESI-
Employees State Insurance)
மருத்துவமனைகளோ இல்லை.
உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய் என்றாலும் கூட,
அதற்கான மருத்து வசதிகள் எங்களுக்கு கிடைக்கும் என்றாலும்,
அதனை எங்களால் பெற முடியாது
.தனியார் மருத்துவ
நிலையங்களுக்கோ
அல்லது மருத்துவமனைக்கோ செல்ல முடியாது என்பதால் இங்கே பல பேர் தங்களது உயிர்களை
இழந்துள்ளனர்."
"நாங்கள்
இங்கே அடிமைகளாகத்தான் இருக்கிறோமே அன்றி வேறெதுவுமில்லை.
மாநிலத்திலோ அல்லது மத்தியிலோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
அவர்கள் எங்களது துன்பங்களுக்கு எவ்வித தீர்வையும் அளிக்கப்போவதில்லை. எங்களது இந்த
அவல நிலை மாறப்போவதில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட சாதியோ அல்லது மதமோ எங்களுக்கு உணவு
அளிக்கப்போவதில்லை. சாதி,மத,
மற்றும் மொழியால் பிரிந்துகிடக்கும் நாம் அவற்றிலிருந்து விடுபட்டு
தொழிலாளர்களாக ஒன்றுபட வேண்டும்."
நிச்சயமாக,
திருப்பூரில் நிலவும் மனநிலை குறித்து அதிகாரிகள்
கலக்கமடைந்துள்ளனர்.
நாங்கள் அந்த நகருக்கு சென்றிருந்த தினத்தன்று
மாவோவாத
தீவிரவாதிகளை தேடுவதாக கூறி ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு தொழிலாளர்களின்
அக்கம்பக்கத்து வீடுகள் ஒவ்வொன்றிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின்
உண்மையான நோக்கம்,
போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த ஆடைத் தொழிலாளர்களை
அச்சுறுத்துவதற்குதான்.
நூல்
ஏற்றுமதிக்கு உச்ச வரம்பை ஏற்படுத்துமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி
தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவானதாக கூறப்படும் இந்திய (மார்க்சிஸ்ட்)
ஸ்ராலினிச
கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகளால் கூட்டாக இணைந்து போராட்டம்
நடத்தப்பட்டாலும்,
தொழிலாளர்கள்
சுயாதீனமாக
இவ்வாறு செயல்படுவார்களோ
என்ற
கவலை
நிறுவனங்களிடம்
இல்லாமல்
இல்லை. சமீப மாதங்களாகவே,
தமிழகத்தில் தொழில் கூடங்களில் தீவிர போராட்ட அலைகள் காணப்படுகின்றன |