WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
Reports reveal state massacre of Tunisian protesters
துனிசியாவில் எதிர்ப்பாளர்களை அரசு படுகொலை செய்தது குறித்து தகவல்கள்
வெளிவருகின்றன
By Alex Lantier
12 January 2011
வேலையின்மை
மற்றும் வறிய சமூக நிலைமைகளானது சர்வாதிகார ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலியின்
கீழ் உள்ளதற்கு எதிராக கலகம் செய்த எதிர்ப்பாளர்களை துனிசிய பாதுகாப்புப் படைகள்
பெருமளவில் கொன்றது தொடர்பாக தகவல்கள் நேற்று தொடர்ச்சியாக வெளிவந்தன.
ஒரு
துனிசியப் பல்கலைக்கழக பட்டதாரியும்,
தெரு
வியாபாரியுமானவர் கடந்த மாதம் அவருடைய பழங்கள்,
காய்கறிகள்
அனைத்தையும் பொலிசார் பறிமுதல்கள் செய்ததை எதிர்த்துத் தற்கொலை செய்து
கொண்டதையடுத்து கலங்கள் நாட்டை அதிர்விற்கு உட்படுத்தியுள்ளன.
இதேபோன்ற
எதிர்ப்புக்கள் கடந்த வாரம் அண்டை நாடான அல்ஜீரியாவிலும் நடந்தன. அங்கு அரசாங்கம்
மாவு,
சர்க்கரை மற்றும்
எண்ணெய் ஆகியவை அடங்கிய உதவிநிதி அளிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை
சுமத்த முற்பட்டபோது இவை நிகழ்ந்தன.
துனிசியாவில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை நேற்று
18 என்று
கூறப்பட்டாலும்,
தகவல்கள்
டஜன்கணக்கான எதிர்ப்பாளர்கள் கசேரைன் நகரத்தில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாக
வெளிவந்துள்ளன.
UGTT எனப்படும்
துனிசியத் தொழிலாளர்கள் பொதுத் தொழிற்சங்கத்தின் பிராந்திய அலுவலகங்களின்
உறுப்பினர் ஒருவரான சதோக் மகம்முதி
AFP இடம் கூறினார்:
“முந்தைய இரவு
வன்முறையைத் தொடர்ந்து,
கசேரைனில் பெரும்
குழப்பம் நிலவுகிறது. சினைப்பர் துப்பாக்கித் தாக்குதல்கள் மற்றும்,
வியாபாரப் பகுதிகள்
மற்றும் வீடுகளை முற்றுகையிட்டு கொள்ளை அடித்தல் ஆகியவற்றை பொலிசார் சாதாரண
உடையணிந்து நிகழ்த்திய பின்னர் பொலிசார் பின்வாங்கிவிட்டனர்.
இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம்
50ஆவது இருக்கும்
என்று மகம்முதி கூறினார். இதற்கு கசேரைன் பிராந்திய மருத்துவமனையில் கொண்டுள்ள
தொடர்புகளை மேற்கோளிட்டார்.
அதன் மற்ற
அப்பகுதியிலுள்ள ஆதாரங்கள் மகம்முதியின் தகவலை உறுதிப்படுத்தியதாக
AFP
குறிப்பிட்டுள்ளது.
கசேரைன்
மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் ஒரு மணி நேர
வேலைநிறுத்தம் செய்தனர் என்று
AFP இடம்
பெயரிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பொலிசார்
பாதிக்கப்பட்டவர்கள் மீது ஆபத்தான வன்முறையைப் பயன்படுத்துகின்றனர் என்றும் ஏராளமான
மக்கள் மருத்துவமனைப் பிரேதச் சாலைக்கு கொண்டுவரப்படுகின்றனர்,
அவர்களுடைய
வயிற்றுப் பகுதிகளும் மூளைகளும் வெடித்துச் சிதறியிருந்தன என்றும் அவர்
உறுதிப்படுத்தினார்.
துனிசியாவின் மனித உரிமைகள் குழுவின் மொக்தர் டிரிபி கூறினார்.
“ஒரு கமாண்டோ
நடவடிக்கை நேற்று இரவு நகரத்தைச் சூறையாட எடுக்கப்பட்டது. இது அரசாங்கத்தின்
சதித்திட்டம் பற்றிய கருத்துக்களுக்கு நம்பகத்தன்மை கொடுப்பதற்காக நடத்தப்பட்டது.”
துனிசிய அதிகாரிகள்
“வார இறுதியில்
நடந்த கலகங்களை மக்களில் கொள்ளையடிக்கும் பிரிவினர் மீது குற்றஞ்சாட்டினர்.”
ஜனாதிபதி
பென் அலி நேற்று இத்தகைய திமிர்த்தன அவதூறுகளை எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப் பல
முறை கூறி உரையை நிகழ்த்தினார்.
“வெளிநாட்டிலிருந்து
பணம் பெறும் விரோதப்போக்குடைய கூறுகள்,
தங்கள் ஆன்மாக்களை
தீவிரவாதம்,
பயங்கரவாதம்
ஆகியவற்றிற்கு விற்றுவிட்டனர். அவர்கள் நாட்டிற்கு வெளியிலிருந்து
தூண்டப்படுகின்றனர். இந்நாட்டிற்கு மிகவும் தேவையான ஒற்றுமையைக் காத்து,
அதன் செயல் தொடர்வதை
விரும்பவில்லை.”
“இரவில்
அரசாங்கக் கட்டிடங்களையும்,
தங்கள் வீடுகளிலுள்ள
குடிமக்களையும் முகமூடி அணிந்த குழுக்கள் தாக்கிய செயல்கள் நிகழ்பெற்றுள்ளன.
இத்தகைய பயங்கரவாதச் செயல்களைப் புறக்கணிப்பதற்கில்லை.”
ஆனால் மேலே
குறிப்பிடப்பட்டுள்ள மேற்கோள்கள்
“முகமூடிக்
குழுக்கள்”
பென் அலியின்
உத்தரவின்பேரில் செயல்புரிந்த துனிசியக் கமாண்டோக்களாகத்தான் இருக்கலாம் என்று
தெரிவிக்கின்றன.
துனிசிய
உள்துறை அமைச்சரகம் பெரும் வன்முறை எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப்
பயன்படுத்தப்படுகின்றன என்றது.
அது வெளியிட்ட
அறிக்கை “கசேரைனில்
பொலிசார் முறையான தற்காப்பிற்காக தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். தாக்கியவர்கள்
கணக்கிலடங்காத் தாக்குதல்களை நடத்தினர்,
எரியும் டயர்களை
வீசினர். பொருட்கள் எரிக்கப்பட்டுவிட்ட பொலிஸ் நிலையத்தையும் திறக்குமாறு
கட்டாயப்படுத்தினர்”
அமைச்சரகம் இச்செயல்
“நான்கு
தாக்கியவர்களைக் கொல்லக் காரணமாயிற்று”
என்று கூறியுள்ளது.
அருகிலுள்ள
தாலா நகரத்தின்
UGTT அதிகாரி ஒருவர்
BBC யிடம் பொலிசார்
மக்களை கூட்டமாகக் கூடவேண்டாம்,
இருவர் கூட
சேர்ந்திருக்கக்கூடாது என்று எச்சரித்தனர் என்றார்.
நகரத்தில் உணவுப்
பொருட்கள்,
சூடேற்றுவதற்கான
எண்ணெய் ஆகியவை தீர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
திங்களன்று
மற்றொரு இளம் துனிசியர்—23
வயதான அல்லா
ஹிந்டௌரி—எதிர்ப்புப்
போராட்டத்தில் உயர் அழுத்த மின்சாரத் தந்திக் கம்பத்தில் ஏறி தன்னை மின்சாரத்
தாக்குதல் மூலம்அழித்துக் கொண்டார்.
மத்திய,
மேற்கு வறிய
துனிசியப் பகுதிகளில் மையம் கொண்டுள்ள எதிர்ப்புக்கள் கடலோரப் பகுதி நகரங்களுக்கும்
விரிவடைந்துள்ளன என்ற அறிக்கைகள் வந்துள்ளன. இப்பகுதிகளில் துனிசியாவின் சுற்றுலாத்
தொழில்துறை தளம் அமைந்துள்ளது.
நேற்று தலைநகரான
துனிசில் ஒரு கலைஞர்களின் ஆர்ப்பாட்டத்தை பொலிசார் வன்முறை மூலம் கலைத்தனர்.
AFP ஆதாரங்கள்
எழுதியுள்ளது: “தலைநகரில்
அழுத்தம் நன்கு புலப்படுகிறது. பேஸ்புக் சமூக இணையத்தில் பரப்பப்படும்
ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் அவை அதிகரித்துள்ளன.”
கால்பந்து
விளையாட்டுக்களைத் தடை செய்த பின்,
துனிசிய அரசாங்கம்
திங்களன்று அனைத்துப் பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் காலவரையறையின்றி மூடியது.
ஏராளமான இளைஞர்கள் ஒன்றாகக் கூடுவதைத் தடுப்பதற்கு இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துனிசிய இளைஞர்கள்
30 சதவிகிதம் பேர்
வேலையின்மையை எதிர்நோக்குகின்றனர்.
பிரெஞ்சு நாளேடான
லிபரேஷன் துனிசிய மாணவர்கள் அரேபிய எழுத்துக்களில்
“படுகொலைகள் கூடாது”
எனத் தெளிவுறுத்தும்
கோஷ அட்டைகளை ஏந்தி உட்கார்ந்திருந்த படங்களைப் போட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கும் பென் அலி ஆட்சிக்கும் இடையே வர்க்க மோதல் விரைவில் வளர்ந்து
கொண்டிருக்கிறது. இது சர்வதேச அளவில் வெடிப்புத் தன்மையுடைய திறனை கொண்டுள்ளது—இந்த
வரக்கூடிய நிலைமை ஆளும் வர்க்கத்தில் அச்சங்களை உயர்த்தியுள்ளது.
முதலாளித்துவ செய்தி
ஊடகம் வெகுஜன அதிருப்தி,
எதிர்ப்புக்கள்
மற்றும் வேலைநிறுத்தங்கள் துனிசியாவிலிருந்து அரபு உலகம் முழுவதும்,
இன்னும் அப்பாலும்
விரிவடையலாம் என்று எச்சரித்துள்ளது.
இதற்குக் காரணம்
குறிப்பாக மொத்த வியாபாரிகளும் வங்கிகளும் உணவுப் பொருட்களின் விலையை பல
குடும்பங்கள் வாங்கமுடியாத நிலைக்கு விரைவாக உயர்த்தி வரும் செயற்பாடுகள்தாம்.
அஷார்க்
அல்-அவ்சத்தில்
சௌதி கட்டுரையாளர் ரஹ்மான்
அல்-ரஷீத்
பகுதி முழுவதும் எதிர்ப்புக்கள் பரவுவதால் விளையக்கூடிய
“டொமினோ விளைவுத்
திறன்”
பற்றி எச்சரித்துள்ளார்.
“அச்சம்
முறியடிக்கப்பட்டுவிட்டதா?
இதுதான் மிக முக்கிய
பிரச்சனை என்று தோன்றுகிறது….
எதிர்ப்புக்களை
உளரீதியாக தடுத்துவந்த தடை அகற்றப்பட்டுவிட்டது போல் உள்ளது”
என்று அவர்
எழுதியுள்ளார்.
அமெரிக்க
நட்பு நாடுகளான எகிப்து மற்றும் சௌதி அரேபியா போன்ற நாடுகளிலுள்ள சர்வாதிகாரங்கள்
துனிசிய மற்றும் அல்ஜீரிய எதிர்ப்பாளர்களுடன் ஒற்றுமை வேண்டும் என்ற தகவல்களை இணைய
தள சமூக வலைத் தளங்கள் பரப்பி வருகின்றன என்று பைனான்சியில் டைம்ஸ்
தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் டைம் இதழ்
“ அமெரிக்க நட்புடைய
இரு வட ஆபிரிக்க சர்வாதிகார ஆட்சிகளில் எதிர்ப்புக்களும் வன்முறை அலைகளும்
ஏற்பட்டுள்ளன”
என்று
குறிப்பிட்டுள்ளது.
இதுவரை
அந்நடவடிக்கைகளை அமெரிக்கா எதிர்க்கவில்லை,
“ஏனெனில் அல்ஜீரியா
மற்றும் துனிசிய சர்வாதிகார ஆட்சிகள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்துப்
போராடிவருகின்றன என்பதும் முக்கியக் காரணம் ஆகும்.”
என்று அது விளக்கம்
கொடுத்துள்ளது.
இந்த
ஆட்சிகள் அமெரிக்காவின்
“பயங்கரவாதத்திற்கு
எதிரான போர்”
பற்றிய தேவைகளுக்கு
இணங்கி நடப்பதில் தோல்வி அடைந்தால்,
“இவ்வாட்சிகளை
அமெரிக்கச் சார்புடைய நபர்களைக் கொண்டு,
தங்கள் மக்களைக்
கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றவர்கள் மூலம்,
வாஷிங்டன்
மாற்றிவிடக்கூடும்.
அவற்றின்
கொள்கைகளுடைய சமூக உறுதிப்பாடற்ற தன்மை பிராந்தியத் தீவிரவாதிகளின் நலன்களுக்கு
ஏற்ப செயல்பட்டுத் தூண்டியிருக்கக் கூடும்.
இவ்வாரம் வளைகுடா
நாடுகளுக்குப் பயணித்துள்ள அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் அரபு
உலகில் அரசியல் சீர்திருத்தம் வேண்டும் என்று பகிரங்க அறிவிப்பைக் கொடுக்கும்
திட்டத்தைக் கொண்டுள்ளார்.”
துனிசிய
அரசியல் ஸ்தாபனம் மற்றும் பல ஏகாதிபத்திய சக்திகளினால் துனிசிய ஆட்சியின்
நடவடிக்கைகளுக்கு ஒரு இழிந்த மற்றும் போலித்தன ஜனநாயக வண்ணம் அளித்து சற்றே
அவற்றின் கொலைகளைக் குறைப்பது பற்றிப் பரிசீலிக்கவும் ஊக்கம் கொடுக்கப்படுதற்கான
முயற்சிகள் மேற்கோள்ளப்பட்டுள்ளன.
இவற்றுள்
ஒன்று
UGTT யின்
நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவருவது. இது துனிசியாவின் ஒரே தொழிற்சங்கம் என்பதுடன்
நீண்டகாலமாக பென் அலியை ஆதரிப்பது.
அதன் வலைத்
தளத்திலுள்ள பொருளுரைப்படி,
அது பகிரங்கமாக
2009
இல் ஜனாதிபதித்
தேர்தல்களின்போது ஒப்புதல் கொடுத்து,
பென் அலியின்
“சீர்திருத்தக்“
கொள்கையுடன் தான்
உடன்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது.
இக்கொள்கையில்
பொதுத்துறை வேலைகளில் பெரும் வெட்டுக்கள் அடங்கியுள்ளன. இவை வேலையின்மையை
அதிகரிக்கும் பெரும் பங்கைக் கொண்டவை. தற்போதைய எதிர்ப்புக்களுக்கு உந்துதல்
கொடுக்கும் வகையில் சமூகப் பெருந்திகைப்பை ஏற்படுத்தியவை.
கடந்த மாதம்
தற்போதைய எதிர்ப்புக்கள் தொடங்கியதிலிருந்து,
தொழிற்சங்கம் அதன்
பென் அலிக்கான அரசியல் ஆதரவைக் கைவிட்டுவிடவில்லை.
UGTT தேசியத் தலைமை
வெகுஜன எதிர்ப்புக்களுக்கு ஒற்றுமை காட்டும் விதத்தில் தொழிலாள வர்க்கம்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்ற அழைப்பைக் கொடுக்க மறுத்துவிட்டதுடன்,
கொலைகள் நிறுத்தப்பட
வேண்டும் என்றும் கூறவில்லை. மேலும் எதிர்ப்புக்களில் பங்கு பெற்ற சில
UGTT அதிகாரிகளையும்
குறைகூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால்,
வார இறுதியில்
UGTT துணைப் பொதுச்
செயலாளர் அப்த் பிரிகி எதிர்ப்புக்களை
“தோட்டாக்கள் மூலம்
எதிர்கொள்வது சாதாரணமாக நடைபெறுவதில்லை”
என்றார்.
எதிர்க்கட்சி
அரசியல்வாதியான மஹ்முத் பென் ரொம்தனே பிரிகியின் அறிவிப்பை
UGTT ஐப் பொறுத்தவரை
“பெரும் தலைகீழ்
திருப்பம்”
என்று
பாராட்டியுள்ளார்.
இன்னும்
திமிர்த்தனமாக துனிசியாவின் முன்னாள் காலனித்துவ ஆதிக்க நாடான பிரான்சின் வெளியுறவு
மந்திரி மிஷேல் அலியோ-மரி
பிரெஞ்சுப் பொலிசும்
“பிரான்சின்
செயற்பாடுகளை”
துனிசியப்
பாதுகாப்புப் படைகளுடன் பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்தார்.
“இரு நாடுகளும்,
தம்மிடையேயுள்ள
ஒத்துழைப்பு என்னும் பின்னணியில் செயல்பட்டு உலகிற்கு பாதுகாப்பிற்கு உத்தரவாதம்
ஒன்றாகக் கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்க முடியும்”
என்று அவர் விளக்கம்
கொடுத்தார்.
|