WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
WikiLeaks founder faces “real risk” of
rendition to US, torture and death
ஜூலியன்
அசாஞ்க்கு
வக்கீல்கள்
எச்சரிக்கை
விக்கிலீக்ஸ் நிறுவனர் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு,
சித்திரவதைக்கும்,
மரணத்திற்குமான
“உண்மையான
ஆபத்தை”
எதிர்கொள்கிறார்
By Julie Hyland
12 January 2011
Use this version to print | Send
feedback
நேற்று ஸ்வீடனின் அரசாங்க வக்கீல் அசாஞ்க்கு
எதிராக பிடிவாரண்டின் மூலம் அந்நாட்டிற்கு அவரை நாடு கடத்தி
ஒப்படைப்பது பற்றிய வழக்கில் துவக்க விசாரணைக்காக
விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ் லண்டனிலுள்ள பெல்மார்ஷ்
மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சமூகமளித்தார்.
ஒரு
240,00
பவுண்டுகள் பிணைத் தொகை எடுப்பில் அசாஞ் இப்பொழுது கிட்டத்தட்ட
வீட்டுக் காவலில் இருப்பது போல் உள்ளார்.
இரு
முழுநாட்கள் நாடு கடத்தி ஒப்படைப்பதற்கான விசாரணை பெப்ருவரி
7
மற்றும்
8ம்
திகதிகளில் நடைபெறும்.
இந்தப்
10
நிமிட
விசாரணையானது விக்கிலீக்ஸின் ட்விட்டர் பகிரங்கமாக அசாஞ்
படுகொலைக்கு வாதிடுபவர்கள்,
அவர்
குற்றவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறும் அமெரிக்க
அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகத்தினர்கள் கொலைக்கு
தூண்டுதல் கொடுத்தல் மற்றும் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட
வேண்டும் என்பதை வெளியிட்ட சில மணி நேரத்தில் வந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் பெண் உறுப்பினர்
Gabrielle Giffords
மீது
ருஸ்கோனில் ஜனவரி
8
நடத்தப்பட்ட கொலை முயற்சி மற்றும் பாக்ஸ் நியூஸ்,
குடியரசுக் கட்சியின்
Tea
கட்சிப்
பிரிவு இன்னும் பல வலதுசாரித் தீவிரவாதிகளின்
பிரச்சாரங்களுக்கு இடையேயுள்ள தொடர்புகள் பற்றிய கூடுதல்
சான்றுகள் தெரியவந்தபின்,
இது
வெளியிடப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸின் பணியாளர்களும்,
அதற்குப் பங்களிப்பவர்களும் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும்
செய்தி ஊடகப் பிரமுகர்களால்
“முன்னோடியில்லாத
வன்முறை வனப்புரைத் தாக்குதலின்”
இலக்காக உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டு,
இந்த
அறிக்கை கூறியதாவது:
“உலகில்
எங்கும் எந்த அமைப்பும் விக்கிலீக்ஸை விட தடையற்ற பேச்சு
உரிமைக்குத் தன்னை அர்ப்பணித்தது இல்லை. ஆனால் மூத்த
அரசியல்வாதிகள் மற்றும் கவனத்தை தம்மீது விரும்பும் செய்தி ஊடக
வர்ணனையாளர்கள் குறிப்பிட்ட தனிநபர்கள் அல்லது திரளான குழு
மக்கள் கொல்லப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும்போது,
அவர்கள் கொலைக்குத் தூண்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டிற்கு
உட்படுத்தப்பட வேண்டும்.
கொலைச்
செயலுக்கு அழைப்பு விடுபவர்கள் துப்பாக்கியை உயர்த்தி விசையை
இழுத்துக் கொல்ல முயற்சிப்பவர்கள் போல்தான் குற்றத்தைப்
பகிர்ந்து கொள்ளுகின்றனர்….’
பாலியல் முறைதவறிய நடவடிக்கை என்னும் அரசியல்
உந்துதலினால் தவறாகத் தயாரிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டையொட்டி,
ஸ்வீடனுக்கு அசாஞ் நாடு கடத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டுவிடுவார்
என்ற கவலைகள்,
அவர்
அங்கிருந்து அமெரிக்காவிற்கு
“
கொண்டு
செல்லப்பட்டுவிடுவார்”
,
சித்திரவதையையும்,
ஒருவேளை மரணத்தையும் கூட எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்ற
கவலைகள் விக்கிலீக்ஸின் நிறுவனருடைய சட்டபூர்வ பாதுகாப்பு
ஆலோசகர்கள் பெப்ருவரி விசாரணையில் வெளியிடும் வாதங்களின் ஒரு
பகுதியாக இருக்கும்.
எக்குற்றத்திற்கும் உட்படுத்தவில்லை என்ற உண்மை
இருந்தபோதிலும்கூட,
அசாஞ்
அங்கு அனுப்பப்பட வேண்டும் என்று ஸ்வீடன் முயல்கிறது.
பாலியல் பலாத்காரம்,
பாலியல் தொந்திரவு,
சட்டவிரோத வற்புறத்தல் என்று ஸ்வீடனில் இரு பெண்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
இரு
பெண்களுமே அசாஞ்யுடன் விருப்பத்துடன் பாலுறவு கொண்டதாக ஒப்புக்
கொண்டுள்ளனர்.
ஆனால்
ஒருவர் அசாஞ் பாலியல் தொடர்பின்போது ஆணுறை பயன்படுத்தவில்லை
என்று கூறுகிறார்.
மற்றவர் தான் முழுமையாக விழித்திருக்காத நிலையில் தன்னுடன்
அசாஞ் பாலியல் தொடர்பு கொண்டார் என்று கூறுகிறார்.
விருப்பத்துடன் ஒவ்வொரு பெண்மணியுடனும் தொடர்பு கொண்டதை அசாஞ்
ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் குற்ற நடவடிக்கை எதையும்
செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் ஸ்வீடனின் தலைமை அரசாங்க வக்கீல்
ஈவா பின்னே அவருக்கு எதிரான பாலியல் பலாத்கார விசாரணையை
“அசாஞ்
பாலியல் பலாத்காரம் என்று சந்தேகப்படுவதற்கு எந்தக் காரணமும்
இல்லை”
என்ற
வகையில் கைவிட்டார்.
ஆனால் இப்பொழுது அசாஞ்க்கு எதிரான
குற்றச்சாட்டுக்கள் ஸ்வீடன் அதிகாரிகளால் செய்தி ஊடகத்திற்குத்
தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதன்பின் பாலியல் பலாத்கார
விசாரணை மீண்டும் பெண்களுக்காகச் செயல்படும்
Claes Borgstrom
தூண்டுதலின் பேரில் துவக்கப்பட்டது.
Borgstrom
ஒரு
சமூக ஜனநாயகவாதி,
இவர்
2000
க்கும்
2007க்கும்
இடையே அரசாங்கத்தில் பணிபுரிந்தார்.
இரு
பெண்களில் ஒருவர் ஸ்வீடன் நாட்டு சமூக ஜனநாயகக் கட்சியின்
கிறிஸ்துவப் பிரிவுடன் தொடர்புடையவர்.
அசாஞ்சின் சட்டபூர்வ பாதுகாப்புக் குழு
“இடைக்கால
வாத வரைவு”
என்னும் அறிக்கையை,
நாடு
கடத்தி ஒப்படைத்தலுக்கு எதிரான தங்கள் வாதங்களின் அடிப்படையைச்
சுட்டிக்காட்டி வெளியிட்டுள்ளனர்.
EAW
எனப்படும் ஐரோப்பிய கைது ஆணை பல அளவுகோல்களின்படி செல்லாது
என்று இது வாதிடுகிறது.
ஸ்வீடனின் அரசாங்க வக்கீல்
Marienne Ny
ஒரு
EAW
ஐ
வெளியிட நீதிமுறை அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் ஒரு
முந்தைய வழக்கில் ஸ்வீடன் தேசிய பொலிஸ் குழுதான் அத்தகைய
அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஒரே அமைப்பு என்ற தீர்ப்பு
வெளிவந்துள்ளது.
மேலும்
EAW
ஒரு
முறையற்ற நோக்கத்திற்காக வெளியிடப்பட்டுள்ளது.
அசாஞ்சை இன்னும் விசாரணைக்குட்படுத்தும் வசதிக்காகத்தான் நாடு
கடத்தி ஒப்படைத்தல் கோரப்படுகிறது,
எவ்விதக் குற்றச்சாட்டு பற்றியும் இன்னும் முடிவு
எடுக்கப்படவில்லை என்று பல முறை கூறியுள்ளார்.
இது
நாடு கடத்தி ஒப்படைத்தல் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவது
ஆகும்.
“நாடு
கடத்தி ஒப்படைத்தல் சட்டத்தின்படி
…
வெறும்
சந்தேகம் மட்டும் நாடு கடத்தி ஒப்படைத்தல் கோரிக்கைக்குத்
தளமாக இருக்கக்கூடாது”
என்பது
நன்கு ஏற்கப்பட்ட மரபு ஆகும்.
குற்றவிசாரணை சாட்டப்படுவதற்கு எந்த
முகாந்திரமும் இல்லை என்ற நிலையில்,
தொலைபேசி அல்லது வேறு வகையில் வினாக்களுக்கு விடையிறுக்கத்
தான் தயார் என்று அசாஞ் பல முறை கூறியுள்ள நிலையில்,
EAW
என்பது
ஸ்வீடிஷ் அரசாங்க வக்கீல் நெறியற்ற வகையில் அதிகாரத்தை
பயன்படுத்துவது என்று பொருளாகும்.
வழிவகையில் ஏற்படும் தவறுகளில் பிற
உதாரணங்களையும் ஆவணம் கோடிட்டுக் காட்டுகிறது. அசாஞ் மீது
குற்றம் சாட்டியுள்ளவர்கள் அனுப்பியது என்னும்
SMS
தகவல்கள் குறிப்பாக ஸ்வீடிஷ் வக்கீலால் வெளியிடப்படவில்லை
என்பதும் இதில் அடங்கும்.
ஒரு
பெண்மணி அனுப்பிய
SMS
தகவல்
தான்
“அரைத்
தூக்கத்தில்”
பாலுறவு நடந்தபோது இருந்ததாகக் கூறுகிறது என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
“புகார்
கொடுத்தவரின் சாட்சியமே தான்
“அரைத்
தூக்கத்தில்”
இருந்தது என்பது
EAW
வில்
ஒரு குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளப்பட்டு,
அவர்
முழுத் தூக்கத்தில் இருந்தார் என்பதற்கு ஆதாரமாகக்
கொள்ளப்பட்டு,
பாலியல் பலாத்காரக் குற்றத்திற்கு ஆதரவைக் கொடுக்கும் வகையில்
மாற்றப்பட்டால்,
இதுவே
குற்றச்சாட்டு தவறான வழிவகை என்பதற்குப் போதுமானது.”
கூறப்படாத மற்ற பொருளுரைத் தகவல்கள்,
ஆனால்
அசாஞ்சின் ஸ்வீடிஷ் வக்கீல்
Bjoem Hurtig
பார்த்தவை,
“பழிவாங்குதல்,
நிறையப் பணம் செய்யும் வாய்ப்பைப் பெறுதல்,
ஸ்வீடன் தேசிய செய்தித்தாள்
Expression
இடம்
தெரிவித்தல் ஆகியவை பற்றிக் கூறுகின்றன.”
“நேர்த்தியான
சாட்சியம்,
சிறப்பான ஸ்வீடிஷ் அதிகாரிகளிடமிருந்து வந்துள்ளது என்பது,
திரு.
அசாஞ்
ஸ்வீடன் குற்றத்துறை அதிகாரிகளின் சட்டவிரோத,
ஊழல்
நடத்தையின் வழிவகையினால் பாதிக்கப்பட்டவர் என்பதைத்தான்
காட்டுகிறது”
என்று
ஆவணம் தொடர்கிறது.
அசாஞ்சின் பெயரை செய்தி ஊடகத்திற்கு ஒரு பாலியல் பலாத்கார
வழக்கில் சந்தேகத்திற்கு உரியவர் என்று வெளியிட்டதானது
ஸ்வீடனின் சட்டத்திற்கு முரணானது ஆகும்.
“இது
உலகம் முழுவதிலும் அவரைக் களங்கப்படுத்துவதை உறுதி செய்யும்.”
முதலில் கொண்டுவரப்பட்ட பாலியல் பலாத்கார
விசாரணை கைவிடப்பட்டது,
“இதன்
பின் ஒரு இரகசிய வழிவகை தொடரப்பட்டது,
இதில்
அசாஞ்சும் அவருடைய வக்கீல்களும் ஒதுக்கப்பட்டனர். அதன் விளைவாக
குறைகூறியவர்களுக்காக செயல்படும் வக்கீல் கோரிக்கையின் பேரில்
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு நியி னால் புதுப்பிக்கப்பட்டது”—இந்த
வழிவகை
ECHR
எனப்படும் ஐரோப்பிய மனித உரிமைகள் மரபுகளுக்கு மீறியதாகும்.
அரசாங்க வக்கீலின் அலுவலகம் சட்டவிரோதமாக
அசாஞ்க்கு எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து ஒரு பகுதியை
ஆங்கில செய்தி ஊடகத்திற்கு அளித்தது.
“இதன்
நோக்கம் அவர் இங்கிலாந்திலும் மற்ற இடங்களிலும் இன்னும்
கேவலப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.”
இதைத்தவிர,
ஸ்வீடன் அரசாங்கம்
Borgstrom
க்கு
“சர்வதேச
செய்தியாளர்களுக்கு அசாஞ்சின் குணநலனைப் படுகொலைக்கு
உட்படுத்தும் வகையில் அவரைப் பற்றிய அவதூறை பரப்பவும்,
இக்குற்றச் சாட்டுக்களுக்கு அவர் நியாயமான விசாரணையைப்
பாதிக்கும் வகையில் பேட்டி கொடுப்பதற்கு”
பணம்
கொடுத்துள்ளது.
ECHR
படி,
நாடு
கடத்தி ஒப்படைத்தலுக்கு ஒரு பிடி ஆணை ஒரு மனிதனின்
“இனம்,
மதம்,
தேசியம்,
பால்,
பாலுறவு நோக்குநிலை அல்லது அரசியல் கருத்துக்களுக்காக
குற்றவிசாரணை நடத்துதல்”
என்றால் தடைசெய்யப்படலாம் என்று உள்ளது. அதேபோல் நாடு கடத்தி
ஒப்படைத்தலுக்குள்ளாகும் நபர் நியாயமற்ற விசாரணையை எதிர்கொள்ள
நேரிடும் அல்லது மேற்கூறிய எதையொட்டியும் தண்டனைக்கு
உட்படுத்தப்படலாம் அல்லது காவலில் வைக்கப்படலாம்”
என்றாலும் தடைக்கு உட்படுத்தப்படலாம்.
EAW
அசாஞ்க்கு எதிராக வெளியிடப்பட்டுள்ளது,
“அவருடைய
அரசியல் கருத்துக்களுக்காக குற்றவிசாரணை நடத்த அல்லது
தண்டிப்பதற்காக”
மற்றும்/அல்லது
“அக்கருத்துக்களையொட்டி”
விசாரணையில் முன்கூட்டிய கருத்து நிலவ வேண்டும் என்பதற்காக,
என்று
அசாஞ்சேயின் வக்கீல்கள் வாதிட்டுள்ளனர்.
மனித உரிமைகள் அடிப்படையை கோடிட்டுக்காட்டும்
பிரிவு,
நாடு
கடத்தி ஒப்படைத்தலை எதிர்ப்பது என்பது ஐரோப்பா மற்றும்
அமெரிக்காவில் மக்களுடைய குடியியல் உரிமைகள் அரிப்பு பற்றிய
கடுமையான நிலைப்பாடு ஆகும்.
நாடு கடத்தி ஒப்படைத்தல் என்பது அசாஞ்சேயின்
மனித உரிமைகளை மீறுவது ஆகும் என்று ஆவணம் கூறுகிறது. ஏனெனில்
ஸ்வீடன் அவரை
“அதன்பின்
அமெரிக்காவிற்குக் கட்டாயமாக நாடு கடத்தி ஒப்படைப்பதற்கு
உடந்தையாக இருக்கும்”,
அங்கு
அவர் சித்திரவதை அல்லது மரணத்தைக் கூட எதிர்நோக்கலாம்.
எந்த நாட்டில் சிலர் முறையாக
நடத்தப்படமாட்டார்களோ அங்கு அவர்களை அனுப்பிவைக்கும் வகையில்
ஸ்வீடனின் வரலாறு உள்ளது.
தற்காப்புவாதம் ஐ.நா.மனித
உரிமைகள் குழு முன்பு ஸ்வீடன்
“சித்திரவதைத்
தடுப்பு பற்றிய விதிகளை பல முறை மீறியுள்ளது”
என்று
கூறியுள்ளது. இது ஸ்வீடனிலிருந்து எகிப்திற்கு அனுப்பப்பட்ட
மகம்மத் அல்ஜேரி பற்றிய குறிப்பு ஆகும். அவர் எகிப்தில்
சித்திவதை செய்யப்பட்டார்.
“அமெரிக்கா
மற்றும் எகிப்து,
என்ற
வகையில் வெளிநாட்டு முகவர்கள் ஸ்வீடிஷ் பகுதியில் செய்த
மீறல்கள்”
இதில்
அடங்கும்.
அல்ஜேரி வழக்கில் தவறாக நடத்தப்பட்ட இடர்
இருந்தது என்பதை ஸ்வீடன் ஒப்புக் கொண்டுள்ளது. அது அவர்
அனுப்பப்படுவதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம்
இதற்கு மாறாகக் கூறப்பட்ட
“இராஜதந்திர
உத்தரவாதங்களை”
நம்பியது என்று
HRC
தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வக்கீல்களின் வாதம் தொடர்கிறது:
“ஸ்வீடனுக்கு
நாடு கடத்தி ஒப்படைக்கப்பட்டால் அமெரிக்கா அவரை
அனுப்பிவைக்குமாறு கோரும் மேலும்/அல்லது
அமெரிக்காவிற்குச் சட்டவிரோத வகையில் கடத்திச்
செல்லப்படக்கூடும்,
அங்கு
அவர் குவாண்டிநாமோ குடா அல்லது பிற இடத்தில்,
ECHR
விதி
3
ஐ
மீறும் சூழ்நிலையில் இருக்க நேரிடும் என்ற உண்மையான ஆபத்தும்
உள்ளது.”
“உண்மையில்,
அமெரிக்காவிற்கு திரு. அசாஞ் நாடு கடத்தி ஒப்படைக்கப்பட்டால்,
மரண
தண்டனை நிறைவேற்றப்படமாட்டது என்ற உத்தரவாதம் இல்லாமல்,
அது
அவரை மரண தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் தள்ளிவிடும்.”
“மரண
தண்டனையைப் பொறுத்தவரை,
முக்கியமான நபர்கள் உட்குறிப்பாகவோ அல்லது வெளிப்படையாகவோ திரு.
அசாஞ்
மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்
என்பது நன்கு அறியப்பட்டதுதான்”
என்று
ஆவணம் தொடர்ந்து எழுதியுள்ளது.
2010
ஜனாதிபதித் தேர்தலில் ஒருவேளை குடியரசுக் கட்சியின்
வேட்பாளராகும் திறன் கொண்ட,
மற்றும் பாக்ஸ் நியூஸ் உரையாடல் நிகழ்ச்சி நடத்தும்,
மைக்
ஹக்கபீயை இது பெயரிட்டுள்ளது.
இவர்
அமெரிக்கத் தூதரகத் தகவல் ஆவணங்களை கசியவிட்டவர்கள் மரணதண்டனை
பெற வேண்டும் என்று கூறியுள்ளார். குடியரசுக் கட்சியின்
முன்னாள் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பாலின்
“அல்
கெய்டா,
தாலிபன் தலைவர்களைப் போல் அசாஞ் வேட்டையாடிக் கண்டுபிடிக்கப்பட
வேண்டும்”
என்று
கூறியுள்ளார்.
அசாஞ் ஸ்வீடனிலிருந்து
“தன்
நாட்டிற்கு நாடு கடத்தி ஒப்படைக்கப்பட வேண்டும்”
என்று
அமெரிக்கா கோரினால்,
அசாஞ்சின் வக்கீல்கள்
“அமெரிக்க
அழுத்தத்திற்கு ஸ்வீடன் அடிபணியும் என்றும் அமெரிக்கா
ராஜதந்திர முறையில் கொடுக்கும் உத்தரவாதமான அசாஞ் தவறாக
நடத்தப்படமாட்டார் என்பதை ஏற்கும் என்றும்,
அவர்
அமெரிக்காவிற்கு அனுப்பப்படலாம்,
தவறாக
நடத்தப்படுவார்”
என்றும் கூறியுள்ளனர்.
சோசலிச சமத்துவக் கட்சியும்,
சமூக
சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பும் அமெரிக்கா
முழுவதும் கசிந்துள்ள ஆவணங்களின் முக்கியத்துவத்தை
விவாதிக்கவும்,
விக்கிலீக்ஸின் மீதான தாக்குதலின் அரசியல்
உட்குறிப்புக்களையும் விவாதிக்க பல கூட்டங்களை நடத்துகின்றன.
நாடுமுழுவதும் நடக்கும் கூட்டங்கள் பற்றிய தகவல்கள்,
உங்கள்
பகுதியில் நடக்கும் கூட்டம் பற்றி விவரம் அறிய இங்கு
கிளிக் செய்யவும். |