WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
One year since
the earthquake in Haiti
ஹைட்டி
பூகம்பத்திற்கு ஓர் ஆண்டிற்குப்
பின்னர்
Bill Van Auken
12 January 2011
வறுமை
நிறைந்த கரீபியன் நாடான
ஹைட்டியைப் பேரழிவிற்கு
உள்ளாக்கிய,
7.0
ரிக்டர்
அளவிலான பூகம்பத்தின் முதல்
நினைவாண்டை இன்றைய நாள்
(12.01.2011)
குறிக்கிறது.
இந்த பூகம்பம்
அதன் இரண்டரை இலட்ச மக்களின்
உயிரைப் பறித்ததுடன்,
300,000த்திற்கும்
மேலானவர்களைக் காயப்படுத்தியது;
ஏறத்தாழ ஒன்றரை
மில்லியன் மக்கள் அதில்
வீடிழந்தனர்.
இந்த
இயற்கை பேரழிவிற்கு ஓர்
ஆண்டிற்குப் பின்னரும் கூட,
ஹைட்டி மக்கள்
முகங்கொடுக்கும் கொடூரங்கள்
ஆழமடைந்து தான் உள்ளன.
காலரா தொற்றுநோய்
ஆயிரக்கணக்கான மக்களின்
வாழ்க்கையைப் பறித்து வருகிறது;
ஒரு மில்லியன்
மக்கள் அழுக்கடைந்த கூடார
முகாம்களில் விடப்பட்டுள்ளனர்.
இந்த
உக்கிரமான நெருக்கடி,
ஹைட்டியின்
தொழிலாளர் வர்க்கம் மற்றும்
ஒடுக்கப்பட்ட மக்கள்மீது
சுமத்தப்பட்டிருக்கும்
கொடுமையான சமூக மற்றும்
அரசியல் மூலஆதாரங்களை
அடிக்கோடிடுகின்றன.
அதாவது
தோற்றப்பாட்டளவில்,
உலகின்
செல்வவளத்தில் பெரும் பகுதியைக்
குவித்து வைத்திருக்கும்,
உலக வரலாற்றின்
குற்றமிக்க பகுதிகளை
உட்கொண்டிருக்கும் மற்றும்
இலாப அமைப்புமுறையின் ஒரு
குற்றப்பத்திரிக்கையாக
நிற்கும் அமெரிக்காவின்
வாசற்படியில் தான் இதுபோன்ற
நிலைமைகள் மேலோங்கி நிற்கின்றன.
ஹைட்டி
மண்ணில் நிலவும் நிலைமைகளில்
பரிச்சயமானவர்கள்,
அந்த
நாட்டு மக்களின் மீது
அமெரிக்காவின் மற்றும் உலக
ஏகாதிபத்தியத்தின் புறக்கணிப்பையும்,
அசட்டைத்தனத்தையும்
குறித்த திகைக்க வைக்கும்
புள்ளிவிபரங்களை அளிக்கிறார்கள்.
“மலை
போல் குவிந்த இடிபாடுகள்
இன்னும் அங்கு கிடக்கின்றன;
தற்காலிக
தங்குமிடங்கள் கிடைப்பதற்கான
எந்த அறிகுறியும் இல்லாத
நிலையில் பாதிக்கப்பட்டவர்களின்
சூழ்நிலை,
காலரா
பரவுவதற்கான நிலைமைகளை
மோசமாக்குகின்றன;
கடந்து
செல்லும் ஒவ்வொரு நாளிலும்
புதிய தொற்றுகளுக்கான
அச்சுறுத்தல் இன்னும் இன்னும்
அச்சுறுத்துகிறது,”
என்று ஹைட்டிக்கான
கரீபியன் சமூகத்தின் சிறப்பு
பிரதிநிதியும்,
முன்னாள்
ஜமைக்கா பிரதம மந்திரியுமான
பி.ஜெ.
பேட்டர்சன்
தெரிவித்தார்.
“சுருக்கமாக
கூறுவதானால்,
அவதிப்பட்டு
வரும் ஹைட்டிய மக்களின்
துன்பங்களையும்,
மனவேதனைகளையும்
குறைப்பதற்கு அங்கே ஒன்றுமே
இல்லை,”
என்றார்.
ஹைட்டியிலுள்ள
அரசுசாரா தொண்டு நிறுவனமான
ஆக்ஸ்பேம்
(Oxfam)
அமைப்பின்
அந்நாட்டு இயக்குனர்,
ரோலண்ட் வேன்
ஹௌவெர்மெய்ரென்,
"ஹைட்டியின்
மறுபுனரமைப்பை நிறுத்தி
வைத்திருக்கும்"
2010ஆம்
ஆண்டை
"தீர்மானம்
எடுக்கவியலாத ஓர் ஆண்டாக"
அறிவித்தார்.
அவர் தொடர்ந்து
கூறுகையில்,
“சுமார்
ஒரு மில்லியன் மக்கள் இன்றும்
கூட முகாம்களிலும்,
டார்பாய்களின்
கீழும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்;
நகரத்தின்
சேதங்களினூடாக வாழும் ஏனைய
நூறு ஆயிரக்கணக்கானவர்கள்,
எப்போது வீடு
திரும்புவார்கள் என்பது
அவர்களுக்கே இன்னும் தெரியாது,”
என்றார்.
ஏறத்தாழ
ஒரு மில்லியன் மக்கள் அவசரகால
முகாம்களிலும் அல்லது
போர்ட்-அ-பிரின்சின்
நெரிசல் நிறைந்த முகாம்களில்
உள்ள டார்பாய்களின் கீழும்
வாழ்கிறார்கள்;
இதில்
பாதி அளவிற்கு குழந்தைகள்
இருக்கின்றனர்.
ஹைட்டி
தலைநகரம் இடிபாடுகளில்
சிக்கிக் கிடக்கிறது.
மலைபோல் குவிந்து
கிடக்கும் இடிந்த கான்கிரீட்
மற்றும் முறுக்கிக் கிடக்கும்
உலோகங்களை மண்வெட்டிகளையும்,
தங்களின்
வெறும் கைகளையும் கொண்டு
சரிசெய்ய போராடி வரும் ஹைட்டிய
தொழிலாளர்களால்,
இடிபொருட்களில்
வெறும்
5
சதவீதத்திற்கும்
குறைவாக மட்டுமே சரி
செய்யப்பட்டிருப்பதாக
மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆறு ஆண்டுகளுக்கு
முன்னால் அமெரிக்க இராணுவம்
வெளியேறியதில் இருந்து,
கணிசமான அளவிற்கு
கனரக உபகரணங்கள் அங்கே கிடையாது.
அந்நாட்டின்
முக்கிய விமான நிலையம்,
துறைமுகங்கள்
மற்றும் ஏனைய மூலோபாய தளங்களை
ஒருதலைபட்சமான கட்டுப்பாட்டில்
கொண்டு வர,
அதன்
செல்வாக்கில்,
அமெரிக்கா
சுமார்
22,000
இராணுவ
சிப்பாய்களையும்,
கடற்படை
சிப்பாய்களையும்,
மாலுமிகளையும்
மற்றும் விமானப்படை ஏர்மேன்களையும்
ஹைட்டியில் நிறுத்தியது.
பெருந்திரளான
மக்கள் எழுச்சியின் அச்சுறுத்தலுக்கு
எதிராக அந்த நாட்டை பாதுகாப்பதும்,
ஹைட்டிய அகதிகள்
அமெரிக்காவிற்குள் புகுந்துவிடாமல்
இருக்க கடற்படை மற்றும்
கப்பற்படையை நிறுவுவதும்
தான் அமெரிக்க இராணுவத்தின்
முன்னுரிமையாக இருந்தது.
அந்த
வகையில்,
உயிரிழப்புகளைத்
தவிர்ப்பதற்கும் மற்றும்
அங்கங்களில் காயமடைந்திருந்த
நூறு ஆயிரக்கணக்கானவர்களுக்கு
உதவி தேவைப்பட்ட அந்த முக்கியமான
முதல் வாரங்களின் போது,
அமெரிக்க
இராணுவ உடைமைகளை இறக்குவதற்கு
விமானதடங்களைக் காலியாக
வைத்திருப்பதற்காக பெண்டகன்
தொடர்ச்சியாக மருந்து மற்றும்
உதவிக்கு சென்ற நபர்களின்
விமானங்களைத் திருப்பி
அனுப்பியது.
பூகம்பம்
நிகழ்ந்து வெறும்
11
நாட்களுக்குள்,
அமெரிக்க-ஆதரவு
ஜனாதிபதி ரீனெ ப்ரீவெலினின்
ஹைட்டிய அரசாங்கம்—இடிபாடுகளில்
இருந்து
132
நபர்களை
மட்டும் உயிருடன் மீட்டிருந்த
நிலையில்—தேடுதல்
மற்றும்
மீட்பு நடவடிக்கை முடிந்துவிட்டதாக
அறிவித்தது.
போதிய
பொறுப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தால்,
மேலும் பலரை
காப்பாற்றி இருக்கலாம்.
மனிதாபிமான
அடிப்படையில் இல்லாமல்,
தேசிய நலன்கள்
மற்றும் இலாப கணக்குகளின்
அடிப்படையில் வாஷிங்டனிலிருந்து
முடிவுகள் எடுக்கப்பட்டன.
காயப்பட்ட
ஹைட்டியினரை மீட்பதில் மேலும்
அதிகமான ஆதாரவளங்கள் மட்டும்
தான் வீணாகும் என்பதும்
சந்தேகத்திற்கிடமின்றி அந்த
முடிவுகளில் உள்ளடங்கி
இருந்தது.
இதற்கு
மாறுபட்ட விதத்தில்,
பாதிக்கப்பட்ட
ஹைட்டிய மக்களுக்கு அமெரிக்கா
மக்களின் மற்றும் ஒட்டுமொத்த
உலக மக்களின் உடனடி பிரதிபலிப்பு,
ஒற்றுமையின்
ஒரு வெளிப்பாடாக இருந்தது.
முன்னொருபோதும்
இல்லாத அளவிற்கு அமெரிக்காவில்
இருந்து மட்டும்
1.3
பில்லியன்
டாலர் உதவிநிதி அளிக்கப்பட்டது,
இதில் பெரும்பாலும்
சாதாரண உழைக்கும் மக்களிடம்
இருந்து வந்திருந்தது.
இருந்தும்
ஓர் ஆண்டிற்குப் பின்னர்,
Chronicle of Philanthropyஇன்
ஓர் ஆய்வின்படி,
ஹைட்டியை
மீட்டெடுப்பதிலும்,
மறுகட்டுமானம்
செய்வதிலும் அந்த நிதியில்
வெறும்
38
சதவீதம்
மட்டுமே செலவிடப்பட்டிருந்தது.
அந்த பணத்தின்
பெரும்பகுதி அரசுசாரா
அமைப்புகளின் மற்றும் தொண்டு
அமைப்புகளின் கருவூலங்களுக்குள்
திரும்பிவிட்டதாக ஹைட்டியில்
பரவலாக சந்தேகங்கள் நிலவுகின்றன.
அரசாங்கங்களின்
விடையிறுப்பு இதையும் விட
மோசமாக உள்ளது.
கடந்த
ஆண்டு மார்ச்சில் கூட்டப்பட்ட
உதவிநிதி சேகரிப்பு மாநாட்டில்,
5.3
பில்லியன்
டாலருக்கும் அதிகமாக வழங்க
உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் அதில்
824
மில்லியன்
டாலர் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது.
வாஷிங்டனின்
விடையிறுப்பு எல்லாவற்றையும்
விட மிகவும் மோசமாக உள்ளது.
அது
2010இல்
1.15
பில்லியன்
டாலர் மட்டுமே அளித்தது.
அதைத் தொடர்ந்து
அது வாக்குறுதி அளித்திருந்த
தொகையை
2011
வரையில்
தோற்றப்பாட்டளவில் தள்ளி
வைப்பதாக அறிவிப்பை மட்டுமே
வெளியிட்டது.
கடந்த
ஜூலையில்,
ஹைட்டிக்கான
ஒபாமா நிர்வாகத்தின் தூதரும்,
அந்த நாட்டிற்கான
ஐக்கிய நாடுகள் சபையின்
சிறப்பு தூதரும் மற்றும்
இடைக்கால ஹைட்டி மீட்பு
கமிஷனில்
(IHRC)
ஹைட்டியின்
பிரதம மந்திரி ஜீன்-மேக்ஸ்
பெல்லிரைவுடன் இருக்கும்
ஒருவருமான முன்னாள் அமெரிக்க
ஜனாதிபதி பில் கிளிண்டன்,
உதவித்தொகைகள்
மெதுவாக வருவதைக் குறித்து
விரக்தியை வெளிப்படுத்தி
விட்டு,
உதவித்தொகை
அளிக்க ஒப்புக்கொண்டவர்களை
அவர்களின் வாக்குறுதிகளில்
நிலைநிறுத்த அழுத்தம்
அளிக்கப்படும் என்று உறுதி
அளித்தார்.
அவருடைய
மனைவியும் வெளியுறவுத்துறை
செயலாளருமான ஹிலாரி ரோதம்
கிளிண்டன் உட்பட,
வெளிப்படையாகவே
அவர் இந்த முயற்சியில் மிகக்
குறைந்தளவிற்கே வெற்றி
பெற்றார்.
தனியார்
முதலீடுகள் மற்றும் அமெரிக்க
வங்கிகள் மற்றும் பன்னாட்டு
நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதற்கு
ஏற்ற நிலைமைகளுக்கு—கூலிகளைப்
பெருமளவிற்குக் குறைப்பதன்
அடிப்படையில்—உத்திரவாதம்
அளிப்பதில் தான் ஹைட்டியின்
மறுகட்டுமானம் தங்கியுள்ளது
என்பது மட்டும் தான்
ஏற்றுக்கொள்ளத்தக்க வழியாக
உள்ளது என்பதை அவர் தொடர்ந்து
தெளிவுபடுத்தி உள்ளார்.
பூகம்ப
பேரழிவிற்கு மேலாக காலரா
தொற்றுநோயும் வந்துள்ளது.
ஏற்கனவே
3,600
உயிர்களைப்
பறித்துள்ள இந்த நோய்,
குறைந்தபட்சம்
400,000
மக்களைத்
தாக்கக்கூடும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோய்
இன்னும் முழுவீச்சில் பரவத்
தொடங்கவில்லை என்று
பொதுசுகாதாரத்துறை வல்லுனர்கள்
தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதினும்,
இந்த நோயினால்
தாக்கப்பட்டவர்களின் கொடூரமாக
எண்ணிக்கை அமெரிக்க ஊடகங்களில்
குறிப்பிடப்படுவதில்லை.
ஹைட்டிய
மக்களின் வாழ்க்கையில் ஒபாமா
நிர்வாகம் அசட்டையாக இருப்பது,
அந்த நாட்டிற்கு
மக்களை மீண்டும் திருப்பி
அனுப்பும் முடிவால்
அடிக்கோடிடப்பட்டுள்ளது.
இந்த மாதம்
திட்டமிட்டவாறு
350
ஹைட்டியினர்
திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
இதில் பலர்,
காலரவால்
சீரழிந்து கிடக்கும் ஹைட்டிய
சிறைச்சாலைகளில் காவலில்
வைக்க அனுப்பப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கை
மரண தண்டனைக்கு ஒப்பானதாக
இருக்கிறது.
தொற்றுநோய்
பூகம்பத்தின் விளைவு அல்ல.
மாறாக,
பூகம்பத்தினால்
ஏற்பட்ட அசாதாரண உயிரிழப்புகளைப்
போலவே,
ஹைட்டியின்
மீதிருந்த ஏகாதிபத்திய
ஆதிக்கத்திலிருந்தும்,
குறிப்பாக
கடந்த நூற்றாண்டில் அமெரிக்க
அரசாங்கமும்,
அமெரிக்க
வங்கிகளும்,
பெருநிறுவனங்களும்
வகித்த பாத்திரத்தினாலும்
விளைந்த கடுமையான பின்தங்கிய
நிலைமை,
ஏழ்மையின்
விளைபொருளாக உள்ளது.
நீண்டகாலமாகவே
ஹைட்டி புவிமண்டலத்தின்
மேற்கத்திய பகுதியில்
இருக்கும்
மிக ஏழ்மையான நாடாக இருக்கிறது.
பூகம்பத்திற்கு
முன்பே கூட,
நகர்புற
மக்கள்தொகையில் பாதிக்கும்
குறைவானவர்களுக்கும்,
புறநகர்களில்
வாழ்ந்தவர்களில் ஐந்தில்
ஒருவரைவிட குறைவானவர்களுக்கும்
தான் கழிவுநீர் வெளியேற்றுவதற்கான
வசதி இருந்தது.
இதுவே
கூட கொடுமையான காலாராவிற்கு
அந்த நாட்டை இரையாக்குகிறது.
பூகம்பத்திற்கு
முன்னதாக,
ஹைட்டிய
மக்கள்தொகையில் சுமார்
நான்கில் மூன்று பகுதியினர்
நாளொன்றுக்கு
2
டாலருக்கும்
குறைவாக பெற்று வாழ்ந்து
கொண்டிருந்தனர்.
உத்தியோகப்பூர்வ
பொருளாதாரத்தில் வெறுமனே
20
சதவீதத்தினர்
மட்டும் தான் வேலைகளைப்
பெற்றிருந்தனர்.
நகர்புற
குடிவாசிகளில்
86
சதவீதத்தினர்
சேரிகளில் இருந்த வீடுகளில்
இருந்தனர்.
இந்த
நிலைமைகள்,
1915இல்
இருந்து
1934
வரையில்
அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பினால்
திணிக்கப்பட்டிருந்த ஓர்
அடக்குமுறை அரசியல் மற்றும்
சமூக அமைப்புமுறையுடனும்,
அமெரிக்க
ஆதரவுடனான டுவாலியர்
(Duvalier)
வம்சத்தின்
30
வருட
காட்டுமிராண்டித்தனமான
சர்வாதிகாரத்தோடும்,
வாஷிங்டன்
மற்றும் சர்வதேச நாணயம்
நிதியத்தால்
"தாராளவாத
கட்டுப்பாடற்ற சந்தை"
என்றழைக்கப்பட்டதன்
திணிப்போடும் பிரிக்க
முடியாதபடிக்கு பின்னிபிணைந்துள்ளன.
வாஷிங்டனின்
கிரிமினல் கொள்கைகள் மீதும்,
அந்நாட்டின்
குறுகிய மற்றும் ஊழல் நிறைந்த
நிதியியல் மேற்தட்டின் மீதும்
அதிகரித்து வரும் ஹைட்டிய
மக்களின் விரக்தியும்,
கோபமும்,
சமீபத்திய
மாதங்களில் முதலில் காலரா
பரவுவதன்மீது ஐக்கிய நாடுகள்
சபையின் துருப்புகளுக்கு
எதிராகவும்,
பின்னர்
மோசடியான நவம்பர்
28
தேர்தலுக்கான
பிரதிபலிப்பிலும் காட்டப்பட்ட
பெருந்திரளான மக்களின்
தொடர்ச்சியான எதிர்ப்பில்,
எழுச்சி
கண்டுள்ளது.
இந்த
பெரும் எதிர்ப்பு அமெரிக்காவிலும்,
சர்வதேச அளவிலும்
உழைக்கும் மக்களின் முழு
ஆதரவைப் பெற்றுள்ளது.
ஹைட்டிக்கு
உடனடியாகவும்,
பெருமளவிலும்
உதவி வழங்குவதற்கான கோரிக்கை
முதலில் எழுப்பப்பட வேண்டும்.
ஆனால்
உள்நாட்டு மேற்தட்டுக்களின்
மற்றும் வெளிநாட்டு வங்கிகளின்
மற்றும் பெருநிறுவனங்களின்
நலன்களின் அடிப்படையில்
இல்லாமல் மக்களின் தேவைகளின்
அடிப்படையில் அந்த நாட்டை
மறுகட்டமைப்பு செய்வது,
ஹைட்டி மக்களுக்கு
உதவி வழங்குவதென்பது,
ஹைட்டியிலும்,
அமெரிக்காவிலும்
மற்றும் புவிமண்டலம் முழுவதிலும்
உள்ள தொழிலாளர் வர்க்கத்தை
சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான
ஒரு பொதுவான போராட்டத்தில்
ஐக்கியப்படுத்துவதன் மூலமாக
மட்டுமே எட்டப்பட முடியும் |