World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Sudan: A tale of blood and oil in Africa

சூடான்: ஆபிரிக்காவில் இரத்தம் மற்றும் எண்ணெய்யின் ஒரு கதை

Ann Talbot
11 January 2011
Back to screen version

சூடானின் தெற்கு மாகாணங்கள் பிரிய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் வெகுஜன வாக்கெடுப்பு மீதான ஊடக செய்திகள், வாரயிறுதியில் தேர்தல் முடிவதற்கு முன்பாகவே, ஒரு கொண்டாட்டமான தன்மையை எடுத்திருக்கின்றன. இதே தொனி, ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியூயோர்க் டைம்ஸில் தலையங்கத்திற்கு அடுத்தப்பக்கத்தில் எழுதப்பட்ட செய்தியிலும் வெளிப்படுகிறது.

"இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாக்கெடுப்பு, நீண்டகாலமாக செய்யப்பட்டு வந்த சுய-நிர்ணயத்திற்கான ஒரு வழிமுறையாக உள்ளது. வெற்றிகரமாக முடியும் வாக்குப்பதிவு கொண்டாடுவதற்குரிய காரணமாக இருக்கும் என்பதுடன், ஆபிரிக்காவின் நீண்ட கால பயணத்தில் இது ஜனநாயகம் மற்றும் நீதியை நோக்கிய ஒரு முன்னோக்கிய எழுச்சிமிக்க படியாக இருக்கும்,” என்று அவர் அறிவிக்கிறார்.

இதுபோன்ற அறிக்கைகள் போலித்தனமாக இருக்கின்றன. வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையில் பல தசாப்தங்களாக நடந்து வரும் உள்நாட்டு யுத்தத்தின்கீழ் ஒரு கோடு வரையப்படும் என்ற நம்பிக்கையில், தெற்கில் பிரிவினைக்கான உற்சாகம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1956 சுதந்திரப் போராட்டத்தின் போதிலிருந்து தொடங்கி, 2005 வரையில் தொடர்ந்த மோதலில் இரண்டு மில்லியன் மக்களுக்கும் மேல் கொல்லப்பட்டனர். கடந்த 21 ஆண்டுகள் இதில் மிகவும் பேரழிவுமிக்கனவாக இருந்தன என்பதுடன், இதில் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 4 மில்லியனுக்கும் நெருக்கமாக உள்ளது. அகதி முகாம்களில் தான் தலைமுறைகள் உருவாக்கப்படுகின்றன.

ஆனால் சுய-நிர்ணயத்திற்கோ, அமைதிக்கோ அல்லது ஜனநாயகத்திற்கோ இந்த வெகுஜன வாக்கெடுப்புடன் எந்த சம்பந்தமும் கிடையாது. தெற்கில் சுமார் 80 சதவீதம் இருக்கும் சூடானிய எண்ணெய் தொழில்துறையில் செல்வாக்கு பெற்றிருக்கும் சீனாவிற்கு எதிராக மூலோபாய ஆதாயங்களைப் பெறுவதற்கான அமெரிக்க முயற்சிகளால் இது நடத்தப்படுகிறது. அதன் நோக்கம், அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் அமெரிக்க ஆதிக்கத்திற்கான ஒரு தளமாக வைத்திருக்க உதவும் ஒரு கைப்பாவை அரசை ஸ்தாபிப்பதாக உள்ளது.

தெற்கின் பிரிவினையும், ஒரு புதிய முதலாளித்துவ அரசின் உருவாக்கமும் மத மற்றும் இன மோதலைத் தான் அங்கே நீடிக்கும். அதன் அதிகபட்ச விளைவாக, ஒரு யுத்தத்தின் புதிய தொடக்கம் இருக்கக்கூடும். ஏற்கனவே முன்மொழியப்பட்ட வடக்கின் எல்லைக்கும், தெற்கின் ஒரு புதிய அரசிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 30க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்காவிற்கு முழுமையாக தெரியும். வடக்கிலுள்ள ஹார்தௌமின் (Khartoum) மீது சாத்தியமுள்ள ஓர் எதிர்கால தாக்குதலுக்கு, தயாரிப்பைச் செய்வதற்காக தெற்கு சூடானிய மக்கள் விடுதலை இராணுவத்திற்கு (SPLA) வாஷிங்டன் ஆயுதமளித்து, பயிற்சியும் அளித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவு காட்டக்கூடும். ஒமர் அல்-பஷீர் அரசாங்கத்திற்கு ஒபாமா குறிப்பாக உணர்த்திய எச்சரிக்கைகள் இந்த அச்சுறுத்தலைத் தான் அடிக்கோடிடுகின்றன. “நீங்கள் உங்களின் நன்றிக்கடனை நிறைவேற்றினால், அமைதியை நாடினால், பொருளாதார தடைகளை நீக்குவது, அமெரிக்க சட்டத்திற்கிணங்க, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து சூடானை நீக்குவது உட்பட அமெரிக்காவுடன் வழக்கமான உறவுகளுக்கான பாதை இருக்கும். இல்லையென்றால், சர்வதேச நன்றிக்கடனை அவமதிப்பவர்கள் இன்னும் அதிகமான அழுத்தத்தையும், புறக்கணிப்பையும் எதிர்கொள்வார்கள்"

ஆபிரிக்காவில் 50க்கு மேற்பட்ட  அரசுகள் தற்போது இருக்கின்றன. அவற்றின் எல்லைகள் அனைத்தும் முன்னாள் காலனித்துவ சக்திகளின் வரலாற்றுரீதியிலான சதியால் முத்திரை குத்தப்பட்டுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், போர்ச்சுக்கல், இதர பிற நாடுகள் அவற்றின் எதிரிகளுக்கு எதிராக தங்களின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளை அடையாளப்படுத்த, தற்போதைய எல்லைகளைக் குறித்து வைத்தன. மேலும் அவற்றை பிரிப்பதற்கும், வெற்றி கொள்வதற்கும், ஆள்வதற்குமான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இன மோதல்களைத் தூண்டிவிடவும், ஊக்குவிக்கவும் அவற்றை பெரும்பாலும் திட்டமிட்டு வரைந்து வைத்தன. இது தான் சகித்துக்கொண்ட விளைவுகளுடன், 19ம் நூற்றாண்டு "ஆபிரிக்க உயர்வின்" பாரம்பரியமாக இருக்கிறது.

தெற்கு சூடானில் ஓர் அரசை உருவாக்குவதற்கான முன்மொழிவானது, நைஜீரிய உள்நாட்டு யுத்தத்தின் போது முந்தைய பியாஃப்ரா குடியரசின் (Republic of Biafra) உருவாக்கத்தை விட சற்றும் குறையாத ஓர் இழிவான மரபைக் கொண்டுள்ளது.

சூடானைப் போன்றே, நைஜீரிய எல்லைகளும் ஏகாதிபத்திய சக்திகளின் எதிரிகளின் முறையீடுகளால் நிறைந்திருந்தது. 1960இல் சுதந்திரத்திற்கு பின்னர், பாதி-சுயாட்சி பெற்ற வடக்கு பாலைவன முஸ்லீம் நிலப்பிரபுத்துவ அரசுகளுக்கும், நாட்டின் எண்ணெய் வளங்கள் நிறைந்த தெற்கு மற்றும் கிழக்கில் இருந்த கிறிஸ்துவ மற்றும் ஆன்மவாத (animist) பேரரசுகளுக்கும் இடையில் வெடித்த மோதல்களால் அந்த நாடு கிழிந்துபோனது. 1967இல், கிழக்கத்திய பிராந்தியத்தின் இராணுவ ஆட்சியாளர்கள் பியாஃப்ராவின் சுதந்திரத்தை அறிவித்தனர்அது தூண்டிவிட்ட யுத்தத்தில், பியாஃப்ரா மீண்டும் நைஜீரியாவிற்குள் எடுக்கப்படுவதற்கு முன்னதாக, 1 மில்லியன் குடிமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

முன்னாள் காலனியாதிக்க சக்தியான பிரிட்டன், பியாஃப்ராவை அங்கீகரிக்கவில்லை என்பதுடன், ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் இலாபங்களை அது பாதுகாக்க விரும்பியதால், அது லிபோ மக்களின் மனஉறுதியால் பாதிக்கப்படாமல் இருந்தது. அவை நைஜீரிய அரசுடன் இலண்டன் உறவுகளைப் பிணைத்து வைத்திருந்தன. வாஷிங்டனும் நைஜீரியாவை ஆதரித்தது. பிரான்ஸ், போர்ச்சுக்கல், இஸ்ரேல், ரோடிஷியா, தென் ஆபிரிக்கா மற்றும் வாடிகன் ஆகியவை பியாஃப்ரா பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தன.

ஏகாதிபத்திய சதியின் கொடூரமான வரலாறை ஒருவர் சூடானிலிருந்தே நினைவு கூரலாம். 1880களில் இருந்து, நைல் நதி தோன்றும் ஒரு பிராந்தியத்தைப் பிரான்ஸ் கைப்பற்றாமல் தடுக்க, பிரிட்டன் சூடானை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றது. ஆபிரிக்க துருப்புகளின் ஒட்டுமொத்த உயிர்களையும் விலையாக அளித்த பின்னர், 1898இல் சூடான் பிரிட்டனின் காலனி நாடாக ஆனது.

தற்போதைய வடக்கு-தெற்கு பிளவு என்பது பிரிட்டிஷ் ஆட்சியின் மரபிலிருந்து வருவதாக உள்ளது. பழங்குடி குழுவை, இனக் குழுவை அல்லது மதக்குழுவை ஒன்று மற்றொன்றுக்கு எதிராக பிரிட்டன் நிலைநிறுத்தியது. இதுபோன்ற பிளவுகளை அதிகரிக்க பிரிட்டனின் அடியை ஒட்டி ஒபாமாவும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ஒருபுறம் அமைதியைக் குறித்து வெளியில் பேசிக் கொண்டே, தெற்கிற்கு இரகசியமாக அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருந்த விதத்தை விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட இராஜாங்க கசிவுகள் ஆவணப்படுத்துகின்றன. உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த 2005 அமைதி உடன்படிக்கையின் கீழ், எளிய ஆயுத உபகரணங்களை அளிக்கவும், SPLAவை பயிற்றுவிக்கவும் அமெரிக்கா அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 2008இல் ஏடன் வளைகுடாவில், சோமாலி கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட டாங்கிகளின் ஒரு சரக்கு, கிரேனேட் வீசிகள் மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், அப்போது அமெரிக்கா குறிப்பிட்டதைப் போல கென்யாவிற்கு அல்லாமல், தெற்கு சூடானுக்கு அனுப்பப்பட்டதை விக்கிலீக்ஸ் உறுதிப்படுத்தியது. அந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டதானது, தற்போதைய வெகுஜன வாக்கெடுப்பு மற்றும் பிரிவினைவாதத்திற்கு தயாராக SPLAவை ஆயுதமேந்தச் செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இருந்தது.

ஆபிரிக்காவில் அமெரிக்க கொள்கையின் ஒருமுனைப்பு, சீனாவின் எழுச்சிக்கு அது காட்டும் விரோதமாக உள்ளது. ஆபிரிக்காவில் இருக்கும் சீனாவின் பிரசன்னம் குறித்து ஆபிரிக்க வெளிவிவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் ஜோன்னி கார்சனிடமிருந்து வந்த கருத்துக்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. அதில் அவர், ஓர் அமெரிக்க இராணுவ பதிலிறுப்பைத் தூண்டிவிடக்கூடிய, "கலகம் உண்டுபண்ணுபவர்கள் (tripwires) என்று அவர் எதை அழைத்தாரோ, அதை அடையாளம் காட்டுகிறார். அதுவாவது: “அவர்கள் இராணுவ தளங்களுக்கான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனரா? அவர்கள் இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கின்றனரா? அவர்கள் உளவு நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்து வருகிறார்களா? இந்த விஷயங்கள் அபிவிருத்தி ஆகத் தொடங்கினால், பின் அமெரிக்கா கவலைப்பட தொடங்க வேண்டியதிருக்கும்.”

கார்சன் தொடர்ந்தார்: “சீனா பொதுநல காரணங்களுக்காக ஆபிரிக்காவில் இல்லை. சீனா முக்கியமாக சீனாவிற்காக தான் ஆபிரிக்காவில் இருக்கிறது.”

இது, அமெரிக்கா விஷயத்திலும் உண்மையாக உள்ளது. இராணுவத்தைக் கட்டியெழுப்புவதையும், அந்த கண்டம் முழுவதிலும் உள்ள ஆட்சிகளுக்கு ஆயுதங்களை வினியோகிப்பதையும், சீனா செய்யவில்லை, ஆனால் அமெரிக்கா செய்து வருகிறது.

அதிகரித்து வரும் சீனாவின் இராணுவ திறன்கள் குறித்து, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரோபர்ட் கேட்ஸ் சமீபத்தில் அவருடைய கவலைகளை வெளியிட்டு இருந்தார். பெய்ஜீங்கிற்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில், சீனாவின் அதிகரித்துவரும் இராணுவ முதலீட்டிற்கு பதிலிறுப்பாக அமெரிக்காவும் அதன் இராணுவ சக்தியை அதிகரிக்கும் என்று கேட்ஸ் எச்சரித்தார். “நாம் நம்முடைய சொந்த திட்டங்களுடன் போதியளவிற்கு பதிலிறுப்பைக் காட்ட வேண்டும்,” என்று அவர் அச்சுறுத்தினார்.

அமெரிக்கா ஆபிரிக்காவில் ஓர் ஆயுதப் போட்டியை தொடங்கி கொண்டிருக்கிறது. உலகை மீண்டும் பிளவுபடுத்துவதற்கான போராட்டத்தைக் கட்டவிழ்த்து விடுவதில் ஆபிரிக்கா மூலோபாய முதன்மை யுத்தகளங்களில் ஒன்றாக ஆகி வருகிறது. இதற்காக, அதன் எண்ணெய் மற்றும் கனிம வளங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

அவர்களின் கைப்பாவைகளாக செயல்படும் உள்நாட்டு உயர் தட்டுகளின் மற்றும் பெரும் சக்திகளின் சூறையாடும் வடிவங்களுக்கு சூடானின் மற்றும் ஆபிரிக்க கண்டத்தின் பரந்துபட்ட மக்கள் பிணையாளிகளாக ஆக்கப்பட்டு வருகிறார்கள். அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் தொழிலாள வர்க்கத்தின் துணையுடன் அந்த கண்டத்தின் சோசலிச விடுதலைக்கு அர்பணிக்கப்பட்ட, ஆபிரிக்க தொழிலாள வர்க்கத்தின் மற்றும் விவசாயிகளின் ஒரு பெரும் அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வது தான், முன்னிற்கும் அடிப்படை தேவையாக உள்ளது.