World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Tucson shootings: A warning to the American people

ருசான் துப்பாக்கிச்சூடு: அமெரிக்க மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

Barry Grey
10 January 2011
Back to screen version

அரிசோனாவின் ருசானில் சனியன்று நடந்த மூர்க்கத்தனமான துப்பாக்கிச்சூடு சம்பவம், தெளிவாக ஒரு வலதுசாரி பயங்கரவாத நடவடிக்கையாக இருந்தது. துப்பாக்கியேந்திய ஒருவர், மொத்தம் இருந்த 20 நபர்களை நோக்கி சுட்டார். அதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் பெண்மணி கப்ரியல் கிஃபோர்ட்ஸூக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது, மத்திய நீதிபதி ஜோன் எம். ரோல் மற்றும் ஏனைய ஐந்து பேர்கள் உயிரிழந்தனர்.

பிமா மாகாண ஷெரீப் கிளாரென்ஸ் டபிள்யூ. டுப்னிக் பத்திரிக்கைக்கு அளித்த அவருடைய முதல் அறிக்கையில், அந்த துப்பாக்கிசூடு சம்பவத்தைத் தங்களின் அரசியல் நோக்கத்திற்கேற்ப நிலைநிறுத்துவதில் சரியாக நின்றிருந்தார். வலதின் அரசியலை எடுத்துக்காட்டும் மற்றும் அரிஜோனாவை வெறித்தனத்தின் தேசிய மையமாக பாத்திரப்படுத்தும் அந்த "அரசியல் வெறுப்பை" அவர் குற்றஞ்சாட்டினார்.

புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான உணர்ச்சிப்பெருக்கை ஊக்குவிப்பதற்கும், மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, தேசிய ஊடகத்தால் சட்டபூர்வமாக்கப்பட்ட மெக்சிக்கன் எல்லையில், ஆயுதமேந்தி சட்டத்தை தம் கையிலெடுக்கும் குழுவினரின் (vigilante) நடவடிக்கைகளையும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். தங்களின் சட்டபூர்வ அந்தஸ்தை நிரூபிக்க முடியாத, “சந்தேகப்படும்படியாக" இருக்கும் தனிநபர்கள் எவரையும் தேடவும், நிறுத்தி கைதி செய்யவும் பொலிஸிற்கு உரிமை அளிக்கும், அரசியலமைப்பிற்குள் கொண்டு வரப்படாத ஒரு சச்சரவுமிக்க சட்டம் கடந்த ஆண்டு அரிஜோனாவில் கொண்டு வரப்பட்டது.

பிற்போக்குத்தனமான அரசியல் சூழலில் ருசான் துப்பாக்கிச்சூட்டில் ஷெரீப்பிற்கு இருந்த தொடர்புகளில் இருந்து ஏறத்தாழ உடனடியாகவே பின்வாங்கத் தொடங்கிய ஊடக விமர்சகர்கள், துப்பாக்கியால் சுட்ட அந்த மனிதருக்கும் வலதுசாரி அரசியலுக்கும் இடையிலான தொடர்புகளையும் இருட்டடிப்பு செய்யத் தொடங்கினர்.

ஊடகம் அந்த தாக்குதலை மனம்குழம்பிய ஒரு தனிநபரால் நடத்தப்பட்ட வன்முறையின், விளக்கமுடியாத ஒரு நடவடிக்கையாக சித்தரித்துக் காட்ட விரும்புகிறது. குறிப்பாக Daily Beast's இல் வெளியான ஒரு தலையங்கத்தில், வாஷிங்டன் நிர்வாகசபை தலைவரும் CNN நெறியாளருமான ஹோவார்டு குர்ஜ் சனியன்று எழுதினார், “இது சுமார் ஓர் ஆண்டுக்கு முன்னர் வெளியான சரா போலின் வரைப்படத்தோடு சம்பந்தப்பட்டதல்ல; இது மனித உயிருக்கு மதிப்பளிக்காத ஒருவரின் தன்னிச்சையான முட்டாள்தனமாகும்.”

தாராளவாத MSNBCஇன் உரையாடல் நிகழ்ச்சியில் (talk show) நிகழ்ச்சியாளர் ராகேல் மேடொவ்வும் இதேபோன்ற ஒரு கருத்தை எதிரொலித்தார். இணைய பத்திரிக்கையான Slateஇல் ஜேக் ஷாபெரால் மேற்கோளிடப்பட்டதில், அந்த பெண்மணி எழுதினார், “உண்மைகளுக்கான வேறு காரணங்கள் எதுவும் இல்லாமல், துப்பாக்கிசூடு நடத்தியவரின் உள்நோக்கங்கள் மற்றும் மூலக்காரணங்களை ஊகிப்பதிலிருந்து ஒன்றையும் பெற முடியாது.”

ஆனால் உண்மைகள் தெளிவாக இருக்கின்றன. துப்பாக்கியால் சுட்ட 22 வயது நிரம்பிய ஜார்ட் லீ லாப்னெர் குறித்த ஆரம்ப தகவல், அவர் அதிதீவிர-வலதுசாரி (ultra-right) அரசியல் செல்வாக்கின்கீழ் இருந்தார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. யூ-டியூப்பில் அவரின் கருத்துக்கள் "இரண்டாவது" அமெரிக்க அரசியலமைப்பு, “நம்பிக்கை துரோக சட்டங்கள், தங்கத்தை ஆதாரமாக கொள்ளாத செலாவணிகள் ஆகியவற்றின்ஆதாரத்தோடு தெளிவாக இருக்கின்றன. இது தீவிர-வலதின் குறிப்பு மொழியை நினைவூட்டுகிறது.

காங்கிரஸ்பெண்மணி கிஃப்போர்ட்ஸ், கடந்த மார்ச்சில் ஜனாதிபதி ஒபாமாவின் மருத்துவக்காப்பீட்டு (health care) சட்டமசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அடுத்த நாள் அவருடைய ருசான் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல் உடைக்கப்பட்டது உட்பட, வலது அரசியல் தாக்குதல்களின் இலக்கில் இருந்தார். 2010 இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸில் இருக்கும் ஜனநாயக கட்சியினரின்கீழ் இருக்கும் சீரழிந்த 20 மாவட்டங்களைக் காட்டும் அமெரிக்காவின் ஒரு வரைபடத்தை சரா போலின் வெளியிட்டார். இதில் ஒவ்வொரு மாவட்டமும் பிரச்சினையின் மைய இலக்காக குறிக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒன்றாக கிஃப்போர்ட்ஸின் ருசான் மாவட்டமும் இருந்தது.

Tea கட்சியைச் சேர்ந்த கிஃப்போர்ட்ஸின் எதிர்ப்பாளரும், முன்னாள் கடற்படை உதவி ஆய்வாளருமான ஒருவர் "கப்ரியல் கிஃப்போர்டைப் பதவியில் இருந்து நீக்க உதவுங்கள்" என்ற முழக்கத்தின்கீழ் பிரச்சார நிகழ்வுகளை நடத்தியதுடன், “அவரை ஒரு தானியங்கி M16 துப்பாக்கியைக் கொண்டு சுடவேண்டும்" என்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

நீதிபதி ரோலும் கூட புலம்பெயர்வுக்கு எதிரான வெறியர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கொலை மிரட்டல்களுக்கு இலக்காகி இருந்தார். 2009இல் அமெரிக்க மார்ஷல்கள் அவரை மாதம் முழுவதும் 24 மணி நேர பாதுகாப்பின்கீழ் வைத்திருந்தனர்.

Tea கட்சி ஆதரவுடன் இருந்த குடியரசு கட்சி வேட்பாளரை சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து கடந்த நவம்பரில் காங்கிரஸில் மூன்றாவது முறையாக கிஃப்போர்ட்ஸ் பதவி ஏற்ற பின்னரும், அந்த பெண்மணிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. ஒரு யூதரான கிஃப்போர்ட்ஸிற்கு எதிரிகள் யாரேனும் இருந்தனரா என்று ஊடகங்களால் கேட்கப்பட்ட போது, அவருடைய குடும்பத்தினர் Tea கட்சியின் பெயரைத் தான் வெளியிட்டனர்.

அரசியல் வலதின் மொழியானது, உணர்ச்சித்ததும்பும் வன்முறை முறையீடுகளோடு நிரம்பியது என்பது மறுக்க முடியாததாக உள்ளது. வன்முறை சூழலை உருவாக்குவதில் குறிப்பாக ரேடியோ மற்றும் தொலைக்காட்சி உரை-நிகழ்ச்சிகளின் பாத்திரத்தை ஷெரீப் டுப்னிக் குறிப்பிட்டார். கிலென் பெக் போன்ற உளவியல்துறை பிரபலங்களும் மற்றும் ரஷ் லிம்பாஹ் போன்றவர்களின் வலதுசாரி உரை-நிகழ்ச்சிகளால் ஒளி/ஒலி அலைகள் நிரம்பியுள்ளது என்பதும் ஓர் உண்மையாக உள்ளது.

இதுபோன்ற பேச்சுக்கள் ஸ்திரமில்லாத மற்றும் ஒருமுனைப்படாத தனிநபர்களின் நடவடிக்கைக்கு ஓர் எழுச்சியை அளிக்கிறது என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

1995இல் ஒக்லஹோமாவில் பெடரல் அலுவலக கட்டிடத்தின் குண்டுவெடிப்பின் போதிருந்து, 2001இல் ஆந்த்ராக்ஸ் (நச்சுக்கிருமி) தாக்குதல்கள் மற்றும் 2009இல் கருக்கலைப்பிற்கு எதிரான ஒரு வெறியரால் நடத்தப்பட்ட கான்சாஸ் மருத்துவர் ஜோர்ஜ் டில்லரின் படுகொலை உட்பட, வலதுசாரி வன்முறையின் பெரும் எண்ணிக்கையிலான பெரியபெரிய அத்தியாயங்கள் இருந்து வருகின்றன. இந்த மூன்று சம்பவங்களிலேயுமே, வலதுசாரி குழுக்களுடனான குற்றவாளிகளின் தொடர்புகள், அரசாங்கத்தாலும், ஊடகங்களாலும் இருட்டிற்குள் கைகழுவி விடப்பட்டன.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, குடியரசு கட்சி அதற்கான ஆதரவின் அஸ்திவாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக இனவாத மற்றும் பாசிச சக்திகளுக்கு முறையிட்டும், அவற்றோடு கைகோர்த்தும் இருந்து வருகிறது. பெருநிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் விடாப்பிடியாக வலதுசாரி அரசியல் சூழலை ஊக்குவிக்க விரும்பி வருகின்றன.

ஒருவாரத்திற்கு முன்னால், இன்று கிஃப்போர்ட்ஸ் மீதான கொலை முயற்சியைக் கண்டித்து வரும் இதே அரசியல்வாதிகளில் சிலரும், ஊடக செய்தி தொடர்பாளர்களும் தான் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் படுகொலைக்கு அழைப்பு விடுத்தனர். அதிதீவிர-வலதின் உட்கூறுகளைத் தூண்டிவிடும் Fox News ஊடகத்தின் மொகல் ரூபெர்ட் முர்டோச் போன்ற தற்போதையவர்கள், ருசானில் நடந்த மனிதபடுகொலைக்கு எவ்வித பொறுப்புக்களையும் காட்ட வெட்கமின்றி மறுத்து வருகிறார்கள்.

ருசான் துப்பாக்கிச்சூடு சம்பவம், தொடர்ச்சியான 10 யுத்த ஆண்டுகளையும், அமெரிக்க இராணுவத்தின் இரக்கமற்ற ஊக்குவிப்பையும் தொடர்ந்து நடந்துள்ளது. இராணுவத்திற்கு எல்லா அரசியல்வாதிகளும், குறிப்பாக தாராளவாத ஜனநாயகவாதிகள் மிகப் பணிவோடும், பலவீனத்தோடும் வளைந்து கொடுப்பதென்பது, எதிர் படைகளைக் கொல்லுதல் மற்றும் சித்திரவதையை சட்டபூர்வமாக செய்தல் ஆகிய வழக்கமான ஆதாரங்களுடன் சேர்ந்து, மனித உயிருக்கு மதிப்பில்லாமல் செய்வதுடன் கைகோர்த்து சென்றுள்ளது.

அரசிற்குள்ளேயே இருக்கும் உட்கூறுகளால் ஆதரிக்கப்பட்ட வலதுசாரி வன்முறை தான், அமெரிக்காவில் பெரும் சமூக நெருக்கடி நிறைந்த சில குறிப்பிட்ட காலக்கட்டங்களில் அரசியலின் திசையை மாற்ற வரலாற்றுரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. 1960களில், மூன்று அரசியல் படுகொலைகள்ஜோன் எஃப். கென்னடி, மார்ட்டீன் லூதர் கிங், மற்றும் இராபர்ட் கென்னடி ஆகியோரின் படுகொலைகள்அமெரிக்க அரசியல் அச்சை வலதிற்குத் திருப்ப ஒரு பெரும் பாத்திரம் வகித்தன.

எப்போதும் போலவே ருசான் சம்பவத்திற்கும் வலதுசாரி அதன் பிரதிபலிப்பில் உறுதியாக இருக்கிறது; தாராளவாதிகளோ கோழைத்தனத்தோடு நழுவுகிறார்கள். ஜனநாயக கட்சியினர் எப்போதும் பூர்ஷூவா அரசியலில் வெளிப்படும் உண்மையான இயல்பு மரத்துப்போயிருப்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டுகிறார்கள். அதன் கொடூரமான குணாம்சம் குடியரசு கட்சியிலும், பெருநிறுவன ஊடக வாய்ஜாலக்காரர்களின் வலையமைப்பிலும் அதன் தெளிவான வெளிப்பாட்டைக் காண்கிறது. ஆனால் ஜனநாயக கட்சி அதன் சொந்த விமர்சன பங்களிப்பைச் செய்து வருகிறது.

ஒட்டுமொத்த சமூக மற்றும் அரசியல் சூழ்நிலை என்பது வெளிநாட்டு யுத்தங்கள் மற்றும் இராணுவ வன்முறையின் முடிவில்லா வழிபாட்டின் விளைபொருளாக உள்ளது. இவை தான் ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் சமூகத்தைப் பணயமாக வைத்து பெருநிறுவன இலாபத்திற்கான இடைவிடாத தேடலின் விளைவாக ஏற்படும் உள்நாட்டு சமூக சீரழிவிற்கும் காரணமாக இருக்கின்றன. இதனால் தான் ஜனநாயக கட்சியினர் ஒருபோதும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேசுவதில்லை; அரசியல் தன்மை தெளிவாக இருந்தாலும் கூட அந்த சம்பவங்களைக் குறித்து வெளிப்படையாக பேசமாட்டார்கள்.

"இடது மற்றும் வலதின் தீவிரவாதத்தை" நிராகரித்துவிட்டு, “ஒன்றுபடுங்கள்" என்ற அமைதியான முறையீடுகள்அந்த துப்பாக்கிசூடு சம்பவத்திற்குப் பின்னர், ஒபாமாவினாலும், ஏனைய முன்னனி ஜனநாயக கட்சியினராலும் இதுபோன்றவை தான் கூறப்பட்டது தவறானவையாகும்; அத்துடன் போலித்தனமானதும் கூட, அவை பொதுமக்களை அரசியல்ரீதியாக ஏமாற்றுகின்றன.

துப்பாக்கியால் சுட்ட அந்த நபருக்கும், வலதுசாரி சக்திகளுக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் உன்னிப்பாக ஆராயப்பட்டு, பொதுமக்களுக்கு வெளிப்படுத்திக் காட்டப்பட வேண்டும். லாப்னெர் வேண்டுமானால் துப்பாக்கி விசையை இழுத்திருக்கலாம், ஆனால் பெருநிறுவனத்திலும், அரசியல் அமைப்பிலும் இருக்கும் உயர்மட்ட உட்கூறுகள் தான் அதற்கான அடிப்படை நீதியையும், அரசியல் பொறுப்பையும் தாங்கி நிற்கின்றன. அவை வெளியில் கொண்டு வரப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.