WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
OECD
நாடுகளில் பெருகும் சமூக
சமத்துவமின்மையை ஆய்வு வெளிப்படுத்துகிறது
By Dietmar Henning
8 January 2011
Use
this version to print | Send
feedback
திங்களன்று,
“OECD
யில் சமூக நீதி;
ஜேர்மனி எங்கு உள்ளது?’
என்ற தலைப்பில் Bertlesmann
Foundation திங்களன்று அளித்த ஆய்வு ஒன்று பல
OECD நாடுகளில் சமூக சமத்துவமின்மை அதிகமாவதைக்
காட்டுகிறது. மேலும் ஜேர்மனியில் குறிப்பாக சமூக எதிர்முனைப் பிளவுகள் விரைவாக
அதிகரித்துள்ளன என்றும் காட்டுகிறது.
ஐரோப்பாவில் செல்வ நாடான ஜேர்மனியில் ஏராளமான மக்கள் வறுமை மற்றும்
வேலையின்மை ஆகியவற்றால் பெரும் அவதிக்கு உட்பட்டுள்ளனர்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின்
(OECD)
31 வளர்ச்சியுற்ற நாடுகளின்
பட்டியலில் ஜேர்மனி நடு இடத்தில் உள்ளது--
பெரிய பிரித்தானியா,
செக் குடியரசு ஆகியவற்றிற்குப் பின் நிலையில் உள்ளது.
“சமூக
சமத்துவமின்மையைப் பொறுத்தவரையில்,
ஜேர்மனி இன்னும் சீரான நிலைக்கு வருவதற்குப் பலவற்றைச் செய்ய
வேண்டியுள்ளது”
என்று ஆய்வாளர்கள் ஆய்வைத்
தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய கணக்கீடுகள்
2008ம் ஆண்டு
ஜேர்மனியில் 10 ஆண்டுகளுக்கு
முன்பு இருந்ததைவிட வறுமைத் தரங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன என்று
வெளிப்படுத்தியுள்ளன.
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் நாட்டின் மொத்தம் 9.3
சதவிகித மக்கள் ஏழைகள் என்று கருதப்படுவதாகவும்,
14 சதவிகிதம் பேர்கள் ஒப்புமையில் வறியவர்கள் என்றும்—அதாவது
மொத்தத்தில் 11.5 மில்லியன்
மக்கள் என்று கூறுகிறது.
கிழக்கு மற்றும் வடக்கு ஜேர்மன் பகுதியில் வறுமை
குவிந்துள்ளது.
ஜேர்மனி மறு இணைப்படைந்து 20
ஆண்டுகளுக்குப் பின்னர்
மக்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் கிழக்கு மாநிலங்களில் வறுமையால்
பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர்.
Bertelsmann Foundation
அறிக்கையின்படி,
ஜேர்மனியில் இத்தகைய
துருவப்படல்
நிலைப்பாடு கடந்த 20 ஆண்டுகளில்
மற்ற அனைத்து OECD நாடுகளையும்
விட விரைவான வேகத்தில் நடந்துள்ளது. 2000ம்
ஆண்டிலிருந்து, ஆய்வாளர்கள் ஒரு
ஒப்புமையிலான என்று இல்லாமல் முழு
துருவப்படல்
நிலைப்பாடு பற்றி வருமானக் குழுக்களில் ஆவணப்படுத்தியுள்ளனர்.
இதன் பொருள் உண்மையான வருமானம் ஏழைகளுக்குக்
குறைந்துவிட்டது, ஆனால் அதே
காலத்தில் செல்வந்தர்களுக்கு அதிகரித்துள்ளது என்பதாகும்.
வறுமையின் காரணங்கள்
“சிக்கல்
நிறைந்தவை”
என்று ஆய்வாளர்கள் கூறினாலும்,
சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமை ஆகியவை கல்வி,
தொழிலாளர் சந்தை மற்றும் ஒருங்கிணைப்பில் வேண்டுமென்றே
கடைப்படிக்கப்பட்ட கொள்கையின் விளைவுதான் என்பதைக் கண்டுபிடிக்கத் தவறவில்லை.
“உதாரணமாக
வறுமை பற்றிய இடரானது வேலை முறையில் சீரற்ற வடிவகைகளினால் அதிகரித்துள்ளது என்பது
வெளிப்படை,
இதன் பரப்பு
சமீபத்திய ஆண்டுகளில் பெரிதும் அதிகரித்துள்ளது”
என்று ஆய்வாளர்கள்
எழுதுகின்றனர். “சீரற்ற
வேலை வடிவமைப்புக்கள்”
என்ற சொற்றொடர் சிறு
வேலைகள்,
பகுதி நேர வேலை,
தற்காலிகப் பணி
மற்றும் வேலை தேடித்தரும் அமைப்புக்களின் மூலம் கிடைக்கப்படும் பணிகளைக்
குறிக்கின்றன.
இப்பொழுது
கிட்டத்தட்ட 8
மில்லியன் ஆண்களும்
பெண்களும் ஜேர்மனியில் அத்தகைய பாதுகாப்பற்ற,
குறைவூதிய வேலைகளைக்
கொண்டு தப்பித்து வருகின்றனர். இம்முறையானது ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையிலான முன்னாள்
சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக்
கட்சி அரசாங்கத்தினால் அறிமுப்படுத்தப்பட்டது.
“சமூக
நீதிக்கான அடிப்படை நிலைமைகள் பல துறைகளிலும் காணப்படவில்லை….வறுமை
நிலைமையில் சமூகத்தில் பங்கு பெறுதல்,
சுதந்திரமான வாழ்வை நடத்துதல் ஆகியவை அநேகமாக இயலாது”
என்று ஆய்வாளர்கள் முடிவுரை கூறியுள்ளனர்.
சிறுவர்களின் வறுமை
“கவலைக்கிடமளிப்பதாக
உள்ளது”
என்று ஆய்வு அறிவிக்கிறது.
டென்மார்க்கில் 37
குழந்தைகளில் 1
தான் (2.7%) வறுமைக்
கோட்டின்கீழ் வாழும் நிலையில்,
இந்த எண்ணிக்கை 9 க்கு
1 என்ற விகிதத்தில் (10.8%)
ஜேர்மனியில் உள்ளது.
இதையும் விட பாதிப்பிற்கு உட்பட்டவர்கள் இளம் வயதிற்கு வந்தவர்கள்—18ல்
இருந்து 25 வயதுக்காரர்கள்.
கிட்டத்தட்ட 6ல்
ஒருவர் இக்குழுவில் வறியவர் என்று கருதப்படுகிறார்.
சமூகத்திலுள்ள
துருவப்படல்
நிலைப்பாடு தொழிலாளர் சந்தையில் பிரதிபலிப்பாகிறது.
உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் ஜேர்மனியில் இப்பொழுது
2008 ஆண்டுத் தரத்திற்கு மீண்டும் வந்துவிட்டது—அதாவது
உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முன்பு இருந்தது போல். சில குழுக்கள்தான்,
அதுவும் பெரும்பாலும் ஜேர்மனிய மற்றும் அதிக
தேர்ச்சி,
பயிற்சி உடைய தொழிலாளர்கள் நலன்களைப் பெற்றுள்ளனர்.
குடியேறியுள்ள தொழிலாளர்கள்,
குறைந்த
தேர்ச்சியுடைய,
நீண்ட கால வேலையின்மையில் உள்ளவர்கள் அநேகமாக அரசாங்கத்தின்
அதிகம் கூறப்பட்ட
“வேலைகள்
அற்புதம்”
என்பதிலிருந்து நலன்கள் எதையும் பெறவில்லை.
ஜேர்மனியில் ஒவ்வொரு இரண்டாவது வேலையின்மையிலுள்ள நபரும்
ஓராண்டிற்கும் மேலாக வேலையில் இல்லை—அதாவது
நீண்டகால வேலையின்மை நிலையில் உள்ளார்.
ஸ்லோவாக்கியா விதிவிலக்கைத் தவிர,
இது OCED
முழுவதும் தனித்தன்மையில் உள்ளது.
ஒருமுறை நீடித்த வேலையின்மை என்றால்,
எப்பொழுதும் நீடித்த வேலையின்மைதான்.
இதுதான் ஜேர்மனியில்
“வேலைகள்
அற்புதத்தின்”
உண்மை நிலையாகும்.
ஜேர்மனிய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு
இருக்கும் குடியேற்றத் தொழிலாளர்கள் வேலையின்மையினால் உள்ளூர் ஜேர்மனியர்களைப் போல்
இரு மடங்கு பாதிப்பிற்கு உட்பட்டிருக்கக்கூடும்.
குறைந்த
தேர்ச்சியுடைய
தொழிலாளர்கள் மற்ற OECD
நாடுகளில் இருப்பதை விட முறையான வேலையை குறைவாகத்தான் பெற்றிருப்பர்.
பெல்ஜியத்திலுள்ள நிலைமையும் ஜேர்மனியில் உள்ளதற்கு
ஒப்பாகவே உள்ளது.
நாட்டின் வேலையில்லாதவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர்
ஓராண்டிற்கும் மேலாக வேலையில் இல்லை.
இப்போக்கு வயதானவர்களையும் பாதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.
OECD
யில் தொழிலாளர் சந்தைக் கொள்கையின் மோசமான விளைவு துருக்கியில்
பதிவானது. பெரும்பாலான வடக்கு ஐரோப்பிய நாடுகள் சிறந்த தரங்களைப் பெற்றுள்ளன.
ஆனால் ஸ்வீடன் ஒப்புமையில் அதிக இளைஞர் வேலையின்மைத்
தரத்தைக் கொண்டுள்ளது—மொத்த
விகிதத்தைப் போல் இங்கு மூன்று மடங்கு அதிகம் ஆகும்.
பின்லாந்து,
நோர்வே மற்றும் டென்மார்க் நாடுகளிலிருக்கும்
குடியேறுபவர்களுக்கு
“குறைந்த
வாய்ப்புக்கள்தான்”
உள்ளன என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்வீடனில் இரண்டாவது தலைமுறை குடியேற்றத் தொழிலாளர்களின்
மாணவர்கள் உள்ளூர் ஸ்வீடிஷ் சிறுவர்களை விட உயர் கல்விக்கு குறைந்த வாய்ப்பைத்தான்
கொண்டுள்ளனர்.
ஆயினும்கூட,
வடக்கு ஐரோப்பிய நாடுகளில் கல்விமுறை சிறந்த தேர்வு
முடிவுகளை வெளியிடுகின்றன. ஜேர்மனியக் கல்வி முறையில் அதிக மாற்றம் ஏற்படவில்லை
என்பதை ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த நிலை சர்வதேச PISA
ஒப்புமைக் கல்வி அறிமுகப்படுத்த பின்னரும்
கூட நீடிக்கிறது. வறிய
குடும்பங்களிலிருந்து சிறுவர்கள் கல்வியில் வெற்றி பெறுவது என்பது
“மற்ற
OECD நாடுகளைவிட ஜேர்மனியில் குறைவாகும்”
என்று அறிக்கை கூறுகிறது.
“கல்வி
என்பது அதிகமாக ஒரு குழந்தையின் தோற்றமூலம்,
சமூகப்,
பொருளாதாரப் பின்னணியை நம்பியுள்ளது.
ஐந்து OECD
நாடுகளில் தான் (ஆஸ்திரியா,
பிரான்ஸ்,
நியூசிலாந்து,
பெல்ஜியம், ஹங்கேரி)
மாணவர்களின் சமூகச் சூழ்நிலைக்கும் அவர்களுடைய பள்ளிச்
செயற்பாட்டிற்கும் இடையேயுள்ள உறவு ஜேர்மனியில் உள்ளதைவிடக் குறிப்பிடத்தக்கதாக
உள்ளது”
என்று ஆய்வு தொடர்ந்து கூறியுள்ளது.
ஆய்வாளர்கள் தங்கள் ஆய்விற்கு
OECD யின் உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்களை ஐரோப்பிய
ஒன்றியத்தின் புள்ளிவிவர அலுவலகம் (Eurostat)
மற்றும் லுக்சம்பேர்க்கின்
வருமான ஆய்வு (LIS)
ஆகியவற்றிலிருந்து எடுத்துக் கொண்டனர். இது தங்கள் அறிக்கை சமூகப் பிரச்சினைகளின்
உண்மையான பரப்பை மூடிமறைக்க விரும்புகின்றனர் என்பதைக் காட்டுகிறது.
உதாரணமாக ஜேர்மனியில் OECD
ஆரம்பத்தில்
குழந்தை வறுமை விகிதத்தை 16.3
சதவிகிதம் என்று காட்டியிருந்தது.
இந்தப் புள்ளிவிவரம் பெரிதும் யூரோஸ்டாட் மற்றும்
LIS இல் இருந்து வேறுபட்டதால்,
ஆய்வாளர்கள் தங்கள் புள்ளிவிவரங்களை பொருளாதார
ஆராய்ச்சிக்கான ஜேர்மன் அமைப்பு (DIW
- German Institute for Economic Research)
கொடுத்த குறைந்த எண்ணிக்கையிலிருந்து கணக்கீடு செய்தனர்.
இதன் விளைவாக குழந்தைகளிடையே வறுமை அளவு என்பது இப்பொழுது
10.8 சதவிகிதம் என்று குறைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும்,
ஆய்வு சமூக சமத்துவின்மை பல OECD
நாடுகளில் வெடிப்புத் தன்மையை அடைந்து வருகிறது என்பதை
நிரூபிக்கிறது. இத்தாலி,
போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் போன்ற தெற்கு ஐரோப்பிய
நாடுகள் ஜேர்மனியை விட மோசமான தரவிகிதங்களைத்தான் கொண்டுள்ளன.
இந்த அறிக்கை அமெரிக்காவிலும் அயர்லாந்திலுமுள்ள நிலைமை
பற்றியும் குறைகூறியுள்ளது,
“இவற்றில்
குறிப்பாகக் கவலை தரும் வகையில் வறுமை உள்ளது”
என்று கூறியுள்ளது.
ஜேர்மனியில் எல்லாவற்றிற்கும் மேலாக பரந்துள்ள
சமூகப் பிளவானது குழந்தைகளின் வறுமை நிலை,
கல்வி முறையில் சமூகத் தேர்வு முறை மற்றும் நீண்டகால
வேலையின்மையில் இருப்பவர்கள் முகங்கொடுக்கும் நலன்களற்ற தன்மை,
குறைவூதிய குடியேறிய தொழிலாளர்கள் தொழிற்சந்தையில்
பெற்றிருக்கும் நிலைப்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ
ஜனநாயக ஒன்றியம்) தலைமையிலுள்ள
கூட்டாட்சி அரசாங்கத்தின் தற்பொழுதைய சிக்கனத் திட்டம்,
பில்லியன் கணக்கில் பொதுச் செலவுகளை வெட்டுவதில் தொடர்பு
உடையது,--அதிலும் குறிப்பாக
நீண்ட கால வேலையின்மையில் வாடுபவர்களைப் பாதிப்பது—சமூகப்
பிளவுகளை அதிகரிக்கத்தான் செய்யும். |