சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

After the shooting in Tucson

ருசான் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்

By David North
11 January 2011

Use this version to print | Send feedback

ஆறு பேர் இறந்தனர், மற்றும் 14 பேர் காயமடைந்தனர், அதில் இப்பொழுது தன் உயிருக்காகப் போராடும் ஒரு காங்கிரஸ் பெண்மணியும் அடங்குவார். சனிக்கிழமையன்று ருசானில் நிகழ்ந்த வன்முறைக்கு யார் பொறுப்பு?

சந்தேகத்திற்கு இடமில்லாமல், சுப்பாக்கிச் சூடு நடத்தியவரான ஜரேட் எல். லௌப்னருக்கும், முடிவேயில்லாமல் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளின் வெள்ளப் பெருக்கென வெளிப்படும் பாசிசப் பிதற்றல்கள், பெருநிறுவனங்கள் நிதியளித்து நடத்தும் “Tea கட்சிஅமைப்புக்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலியின் வனப்புரையாளர்கள் ஆகியோருக்கும் ஒரு நேரடியான உடனடித் தொடர்பு இருப்பது உண்மைதான். “துப்பாக்கியால் சுட்டவரைத் தூண்டிவிடுவதற்கு அரசியல் சூழ்நிலை மற்றும் எந்தக் குறிப்பிட்ட தனிநபர் குழுவையும் குற்றம் சாட்டுவது ஆதாரமில்லாமல் ஆத்திரமூட்டுவதற்கு ஒப்பாகும்என்று வாஷிங்டன் போஸ்ட்  கடிந்துரைத்திருப்பது அரசியல் இயங்கியல், சமூகத் தளம் மற்றும் அமெரிக்காவிலுள்ள தீவிர வலதின் உளவியல் ஆகியவற்றை பற்றி நன்கு அறியப்பட்டுள்ள உண்மைகளுக்கு முற்றிலும் மாறானது. திரு.லௌப்னர் ஒரு மனஉளைச்சலுக்கு உட்பட்ட இளைஞர், தெளிவான அரசியல் தத்துவம் அற்றவர்என்று போஸ்ட் கூறுவது முற்றிலும் நேர்மையற்றதாகும். அமெரிக்க வலது நீண்ட நாட்களாகவே அதன் வெறுப்பு, தன்னிலை பற்றிய வெறி, பிடிக்காததை ஒதுக்கித் தள்ளுதல், கம்யூனிச எதிர்ப்பு பற்றிய தகவல்கள் உளரீதியாக சிதைவுற்றவர்களை எளிதில் தூண்டிவிடும் தன்மை கொண்டுள்ளது என்பதை அறியும்.

ஆனால் லௌப்னரின் நடவடிக்கைகளை அரசியல் வலதுடைய பிரச்சாரத்தின் விளைவு, அதன் காட்சிப் பொருள் போலுள்ள ஜனரஞ்சகப் பேச்சாளர்கள் வாடிக்கையாகப் பேசுவதின் விளைவு என்று கூறுவது மட்டும் போதாது. ருசானில் நடந்த குருதி கொட்டிய சம்பவத்தில் இன்னும் ஆழ்ந்த சமூகக் காரணங்கள் உள்ளன.

ஜனநாயகக் கட்சி மற்றும் தாராளவாத இடது ஆகியவை எப்பொழுதும் அரசியல் சீர்குலைந்த தன்மை என்ற நிலையில்தான் உள்ளன. இன்னும் நாகரீகமான, மதிப்புக் கொடுக்கும் உரையாற்றல் முறை ஊக்கம் கொடுக்கப்பட்டால் அமெரிக்கா இன்னும் அதிக மகிழ்ச்சியுடைய இடமாக இருக்கும் என்ற சிந்தனையில் தங்களைத் தேற்றிக் கொள்ளுகின்றனர். ஜோன் ஸ்டீவர்ட்டின் நற்செய்தியான நியாயமான மக்களுக்கு முன்னாலுள்ள பணி, “இடதுமற்றும் வலதில், வனப்புரையைக் குறைத்துக் கொள்ளுதல்”, வாதிப்பதைக் குறைத்து, கேட்பதை அதிகரித்தல் மற்றும் ஒரு பொது நிலைப்பாட்டைக் காணல் என்று இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

அனைவரையும் சமரசப்படுத்திச் செல்லுதல் என்னும் நோயுற்ற உணர்வு காங்கிரஸ் உறுப்பினரான பெண்மணி கிளிப்போர்ட்ஸ் மீதான படுகொலை முயற்சிக்குப் பின்னர் தெளிவான பிற்போக்குத்தன வெளிப்பாட்டைத்தான் கண்டுள்ளது. நேஷனின்  ரிச்சர்ட் கிம் முன்வைத்த கருத்துப்படி, வலதின் வன்முறைக்கு மாற்று என்னும் முறையில் அமெரிக்க மக்கள் அரசியலும், குடியுரிமையும் நோக்கத்தில் பெருந்தன்மை கொண்டவைமக்களின் விரோதி என்று இழிவாகப் பேசுவதற்கு மாறாக-- விரிவாக்கப்பட்டு, களிக்கப்பட வேண்டியவை என்ற கருத்தைத்தான் போற்றுகின்றனர்.”

இச்சொற்கள் அமெரிக்காவில் இடதுஎன்று கூறி ஏற்கப்பட்டுள்ள அரசியலின் திவால் தன்மையின் சுய அம்பலம் என்னும் பேரழிவுதான். மேலும் தீவிர வலது (முற்றிலும் பெருநிறுவனப் பணத்தைப் பெற்ற போதிலும்) எப்படி மக்கள் குறைகளைச் சுரண்ட முடிகிறது, சமூக அதிருப்தி பற்றிய ஏகபோக உரிமை வனப்புரையைக் கொட்டுகிறது என்பதையும் காட்டுகின்றன.

1930களின் பெரும்மந்த நிலைக்குப் பின்னர் மோசமான பொருளாதாரச் சரிவின் நான்காவது ஆண்டில் அமெரிக்கா நுழைந்துள்ளது. உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் என்று உள்ளது (இந்த எண்ணிக்கையில் இனி வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்தவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை). வீடுகளின் விலையுயர்வில் ஏற்பட்ட சரிவு பல மில்லியன் கணக்கான அமெரிக்க குடும்பங்களின் நிகர மதிப்பைச் சரியச் செய்துவிட்டதுடன் பல மில்லியன் குடும்பங்கள் முன்கூட்டிய ஏல விற்பனையினால் தங்கள் வீடுகளையும் இழந்துவிட்டன. சமூக சமத்துவமின்மை 1920 களுக்குப் பின் காணப்படாத தரத்தை அடைந்துவிட்டன. கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்கத் தொழிலாளர்களின் வருமானம் தேக்க நிலையில்தான் உள்ளது. அநேகமாக வருமானத்தில் வளர்ச்சி என்பது 1970களில் இருந்து பெரும் செல்வந்தர்கள், மக்கள் தொகையில் ஒரு சதவிகித உயர் மட்டத்தில் இருப்பவர்களின் பைகளில்தான் சேர்ந்துள்ளது.

செப்டம்பர் 2008 நிதி நெருக்கடியின் வெடிப்பிற்குப் பின் புஷ் மற்றும் ஒபாமாவின் நிர்வாகங்கள் அவற்றின் ஆற்றல் முழுவதையும் நிதிய, பெருநிறுவன உயரடுக்கின் செல்வம் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்குத்தான் செலவழித்தன. அவற்றின் பொறுப்பற்ற ஊக வணிகம்தான் பேரழிவிற்கு நேரடியாக வழிவகுத்திருந்தது. ஒபாமாவின் கீழ், அரசு முழுவதும் நிதிய நலன்களுக்கான பிடிப்பைத்தான் இன்னும் இறுக்கமாக வளர்த்திருந்தது. நிதியத் தொழில்துறையில் எவரும் இப்பேரழிவிற்குப் பொறுப்புக்கூறவில்லை என்பது மட்டுமின்றிபொருளாதார ஒட்டுண்ணிகளின் அரசியல் அதிகாரமும் செல்வமும் புதிய உயரங்களுக்கு வளர்ந்து விட்டன. உண்மையில் ஒபாமாவின்கீழ், வெள்ளை மாளிகை, கோல்ட்மன் சாஷ்ஸ் மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனங்களின் இணைக் கிளை அலுவலகம் போல் பணிபுரிகிறது.

மில்லியன் கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் உள்ளுணர்வாகவும் சரியாகவும் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளின் அரசியல்வாதிகளும் விற்பனைக்குத்தான் உள்ளனர் என்று கருதுகின்றனர். அரசாங்கத்தால் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் செல்வந்தர்களுடைய நலன்களுக்காகத்தான் உள்ளன. ஆயினும்கூட இந்த அரசியல் முறையைத்தான் மக்கள் போற்ற வேண்டும்”, “விரிவாக்க வேண்டும்”, “களிக்க வேண்டும்என்று நேஷன் விரும்புகிறது. கொடூரமான சமூக நெருக்கடியின் நடுவேயுள்ள பெரும்பான்மை சாதாரண மக்களுக்கு இத்தகைய செய்தி எப்படியான அழைப்பைத் தரும்? நேஷன் மற்றும் அதே போன்ற கருத்துடைய முற்போக்குத்தனவெளயீடுகள் அமெரிக்க அரசியலுக்குப் பொதுவாகவும், ஒபாமா நிர்வாகத்திற்கும் குறிப்பாகவும் கொடுக்கும் புகழுரைகள் செவிட்டுக் காதுகளில் விழுகின்றன என்பதில் என்ன வியப்பு?

மக்களின் பெருகிய விகிதத்திலான ஏமாற்றத் திகைப்பு மற்றும் சீற்றம் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகின்றன. ஆழ்ந்த நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு வழியைக் காணவும் அது பற்றிக் கேட்கவும் அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு யார் கூறுகின்றனர், யார் அவர்களுக்காகப் போராடுகின்றனர், மேலும் மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது எவ்வாறு போராடுவது? ஸ்ரைன்பெக்கின் Grapes of Wrath ல் இயக்குனர் ஜோன் போர்ட்டின் காலம் காலமாக நீடிக்கும் சினிமா வடிவம் ஒன்று உள்ளது. அதில் பரம ஏழை விவசாயி ஒருவர், வாழ்நாள் முழுவதும் உழைத்திருந்த நிலத்தை இழக்கவுள்ள நிலையில் பெரும் திகைப்புடன் கேட்கிறார்: “நான் யாரைச் சுட வேண்டும்?” நேரான விடை கிடைக்காததால் அவர் பெரும் ஏமாற்றத்துடன் தரையில் சரிகிறார்.

இன்று மில்லியன் கணக்கான மக்கள் அதேபோன்ற நிலையில்தான் உள்ளனர். பேரழிவினால் அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இல்லை, அவர்கள் ஒன்றும் எவரையும் சுடவோ, கொல்லவோ விரும்பவில்லை. ஆனால் அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதற்காகப் போராடத் தயாராக உள்ளனர். ஆனால் முழுச் சமூக அமைப்பு மற்றும் அது நிறுவியுள்ள அரசியல் முறையானது எதிர்ப்பு மற்றும் முற்போக்கான மாறுதல் ஆகியவற்றை அனுமதிக்கவில்லை என்பதுதான் காணப்படுகிறது. பெரும்பாலான அமெரிக்க உழைக்கும் மக்கள் முறையாக கட்டமைக்கப்பட்டுள்ள சமூக எதிர்ப்பு என்னும் ஒரு செயலில் கூட பங்கு பெறும் வாய்ப்பைப் பெற்றதில்லை.

1980க்கு முன்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்பின் மற்ற வடிவங்கள்பெரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நகர்ப்புற எழுச்சிகள் ஆகியவையும் அடங்கும்அமெரிக்க வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தன. ஏதேனும் ஒருவகையில் வர்க்கப் போராட்டம் சமூக முன்னேற்றத்தின் முனைப்பு இயந்திரமாக இருந்தது. 1980களின் தொடக்கக் காலத்தில் அரிசோனாவில் பிலெப்ஸ் டோட்ஜிற்கு எதிரான பித்தளைச் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் முக்கிய மையாமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வேலைநிறுத்தத்தின் முக்கிய குவிய இடமான ஒன்று ருசானில் இருந்து அதிக தொலைவில் இல்லாமல் இருந்த அஜோ சிறு நகரம் ஆகும். அந்த வேலைநிறுத்தம் 1980களின் மற்ற பிற வேலைநிறுத்தங்களைப் போலவே காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களும் சிவில் உரிமை அமைப்புக்களும்1930 கள் மற்றும் 1965 க்கு இடையே நடந்த பெரும் சமூகப் போராட்டங்களில் வெளிப்பட்டவைமக்கள் அதிருப்தியின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் தடுத்து நசுக்குவதற்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. வேலைநிறுத்தங்கள் மற்றும் கிட்டத்தட்ட மற்ற அனைத்து சமூக எதிர்ப்பு வடிவமைப்பும் மறைந்துவிட்டன. இதே காலகட்டத்தில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் நிர்வாகங்கள் செல்வந்தர்களுக்கு வரிகளைக் குறைத்து, அவர்கள் மகத்தான தனிச் சொத்துக்களைக் குவித்துக் கொள்ள உதவின.

ஆனால் இடைவிடாமல் அதிருப்தி வளர்ச்சியுற்று ஒரு வடிகாலை நாடுகிறது. அதற்கு முற்போக்கான, நம்பிக்கைதரும் வெளிப்பாடு கிடைக்காத அளவில், முறையாக அமைக்கப்பட்ட கூட்டு வர்க்கப் போராட்டம் என்ற வடிவில் இல்லாத வரை, இது பெரும் ஏமாற்றம் கொண்ட தனிநபர்களின் தீய வெளிப்பாட்டு வெடிப்புகளில்தான் தோன்றுகிறது. சமூகத்திலுள்ள பிரிவுகளில் பல, உளரீதியாக தொந்திரவிற்கு உட்பட்டவர்கள் மட்டும் என்று இல்லாமல்தீவிர வலதின் வனப்புரைக்கு சுலபமாக உள்ளாகின்றார்கள். பிந்தையவற்றிற்குப் பெருநிறுவனம் நிதியளிப்பதுடன், விளம்பரமும் எப்பொழுதும் சாத்தியமாக இருக்கின்றன.

ருசானில் நடந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாகும். குவிந்துள்ள சமூக அதிருப்திக்கு ஒரு புதிய மற்றும் முற்போக்காக வெளிப்படுவதற்கான பாதை தேவை. சோசலிசப் போராட்டத்திற்கான அப்பாதை தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புதிய புரட்சிகர இயக்கத்தைக் கட்டமைப்பதற்குப் போராடுவதன் மூலம்தான் திறக்கப்படும்.

இப்போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்குத்தான் சோசலிச சமத்துவக் கட்சி ஆன் ஆர்பரில் ஏப்ரல் 9-10, 2011ல் ஒரு பொதுக் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. பொதுமாநாடுகள் ஏப்ரல் 16ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸிலும், ஏப்ரல் 30 ல் நியூ யோர்க்கிலும் நடைபெறும். இப்போராட்டத்தில் சேர விரும்பும் அனைவரையும் இந்த முக்கிய நிகழ்வுகளில் பங்கு பெறுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

(மாநாடுகள் பற்றிய தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்)