சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Riots shake Tunisia and Algeria

துனிசியா மற்றும் அல்ஜீரியாவை கலகங்கள் அதிர வைத்துள்ளன

By Alex Lantier
10 January 2011

Use this version to print | Send feedback
 

கடந்த வாரம் துனிசியா மற்றும் அல்ஜீரியாவில் வெகுஜன எதிர்ப்புக்களை பொலிஸ் நசுக்கியது. ஒரு டஜனுக்கும் மேலானவர்கள் இறந்ததுடன், நூற்றுக்கணக்கானவர்களுக்குக் காயங்கள் ஏற்படுவதற்கும் வகை செய்தது. உணவுப் பொருட்கள் விலையுயர்வுகள் மற்றும் அல்ஜீரியா முழுவதும் அரச உதவி நிதியில் குறைப்புக்கள் ஆகியவற்றிற்கு எதிராக கலகங்கள் எழுந்தன. துனிசியாவில் வேலையின்மை மற்றும் துனிசிய ஜனாதிபதி சின் எல் அபிடைன் பென் அலி ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இதே நேரத்தில் நடைபெற்றுள்ளன.

அல்ஜீரிய எதிர்ப்புக்கள் இராணுவ ஆதரவுடைய தேசிய விடுதலை முன்னணி (FLN)  இன் ஜனாதிபதி அப்டிலஜிஸ் பௌடெப்லிகாவின் ஆட்சியின் தடையற்ற சந்தைக் கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு ஆழ்ந்துள்ளதை பிரதிபலிக்கின்றன. அடிப்படை அரச உதவியில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், மாவுகள், சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலைகள் கடந்த சில மாதங்களில் அல்ஜீரியாவில் இரு மடங்காகிவிட்டன.  உலகச் சந்தை விலைகளும் உயர்ந்துகொண்டிருக்கின்றன, விலையுயர்வின் ஒரு பகுதியை மொத்த உணவுப் பொருட்கள் விற்பனையாளர்கள் மூலம் நுகர்வோர் மீது அரசு சுமத்த முற்படுகிறது.

இன்னும் பரந்த அளவில், எதிர்ப்புக்கள் அல்ஜீரியாவிலுள்ள கடினமான சமூக நிலைமைகள் பற்றிய வெகுஜன சீற்றத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் கருத்துப்படி அல்ஜீரிய மக்களில் 75 சதவிகிதமான 25 வயதிற்கு உட்பட்டவர்கள், அவர்கள் 30 சதவிகிதம் வேலையின்மை விகிதத்தை எதிர்கொள்கின்றனர். அரசாங்கம் அல்ஜீரியாவின் மிகப் பெரிய முறைசாராப் பிரிவிலுள்ள தெரு விற்பனையாளர்கள் மீதும் 17 சதவிகிதம் விற்பனை வரியைச் சுமத்த முற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆங்காங்கே கலகம் பற்றிய தகவல்கள் வந்தவுடன், அல்ஜீரியாவின் முக்கிய நகரங்களில் கடந்த வார இறுதியில் பெருமளவு கலகங்கள் ஏற்பட்டன.

வெள்ளியன்று, கலகப்படைப் பொலிசார் தடுப்புக்களை நிறுவி அல்ஜீயர்சின் பெல்கோர்ட் மற்றும் பாப் எல் ஓவெட் மாவட்டங்களில் எதிர்ப்பாளர்களைத் தாக்கினர். எதிர்ப்பாளர்கள் பொலிஸ் நிலையங்கள், வங்கிகள் அல்லது அரசாங்க அலுவலகங்கள் மீது சில கிழக்கு நகரங்களில்கான்ஸ்டன்டைன், ஜிஜெல், செடிப் மற்றும் போரியா உட்பட, பெரும் சேதம் விளைவித்தனர் என்று அல்ஜீரியாவின் உத்தியோகபூர்வ APS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அல்ஜீரியாவில் இரண்டாவது பெரிய நகரமான ஓரானிலும், அன்னபா மற்றும் முக்கிய நகரமான டிசி ஔசௌயு ஆகிய முக்கிய நகரங்களிலும் வன்முறை மோதல்கள் நடந்தன என்று AFT தகவல் கொடுத்துள்ளது.

நேற்று அரசாங்கம் பின்வாங்கி, சர்க்கரை மற்றும்  மண்ணெண்ணெய் மீதான வரிகளை 41 சதவிகிதம் குறைப்பதின் மூலம் விலைகளைக் குறைப்பதாக அறிவித்தது. Tout Sur lAlferie  வலைத் தளம் உட்பட சில ஆதாரங்களின் கருத்துப்படி இது அரசாங்கப் புள்ளி விவரங்களுக்கு எதிராக உள்ளனஇந்த நடவடிக்கைகளின் நிகர விளைவு உணவு விலைகளில் வெறும் 5 சதவிகிதம் தான் இருக்கும் என்று உள்ளது.

அரசாங்கம் கால்பந்து விளையாட்டுக்களுக்கும் தடை விதித்துள்ளது. “எதிர்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புத் திறனைவிளையாட்டுக்கள் கொண்டுள்ளன என்று அரசாங்கம் கருதுவதாக BBC குறிப்பிட்டுள்ளது.

அல்ஜீரிய உள்துறை மந்திரி டாஹோ ஓல்ட் காப்லியே மூன்று இளைஞர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் Msita, Tipasa, Bourmerdes ஆகிய இடங்களில் கொல்லப்பட்டனர் என்பதை நேற்று உறுதிப்படுத்தினார். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் 300 பேர் காயமடைந்தனர் என்று கூறுகிறது. 65 வயது டாக்சி ஓட்டுனர் சாடெக் பென்ட்ஜெடிட் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பொலிசிடம் இருந்து தீவிரமாக வெளிப்பட்ட நேரத்தில் வந்த புகையைச் சுவாசித்ததனால் இறந்து போனார் என்று Le Figaro  தகவல் கொடுத்துள்ளது.

கடந்த வார இறுதியில் எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவினரின் சில பிரிவுகளுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன என்ற வந்த தகவலை அடுத்து துனிசியாவில் அமைதியின்மை அதிகரித்தது.

கசெரைன், தாலா என்னும் இரு நகரங்களில் 14 பேர் இறந்தனர் என்று BBC எழுதியுள்ளது. துனிசியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் நேற்று பல அரசாங்கங்க கட்டிடங்கள் கசெரைனில் குழுக்களால் தாக்கப்பட்டன, தீ வைக்கப்பட்டன, மூன்று வங்கிகள் அழிக்கப்பட்டன, அத்துடன் ஒரு பொலிஸ் நிலையம், ஒரு பெட்ரோல் விற்பனை நிலையமும் அழிக்கப்பட்டன. ஒரு பொலிஸ் வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டதுஎன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ரெகுவெப் நகரில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

அலைந்து திரிந்து காய்கறி விற்கும் வேலையில்லாத ஒரு பட்டதாரியான மகம்மது பௌவாஜிசி சிடி பௌஜிட்டில் அரசாங்க அலுவலகங்களுக்கு எதிரே தனக்குத்தானே தீவைத்துக் கொண்டார் என்பது தெரியவந்தவுடன் எதிர்ப்புக்கள் தொடங்கின. அவர் அவருடைய காய்கறிக் குவியலை பொலிசார் பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அவரிடம் காய்கறிகள் விற்பதற்கு உரிமம் இல்லை என்று பொலிஸ் கூறியுள்ளது. ஜனவரி 4ம் திகதி பௌவாஜிசி இறந்து போனார்.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், “சென்று வருக, மகம்மது, நாங்கள் உங்களுக்காக பழி தீர்ப்போம். இன்று உங்களுக்காக நாங்கள் அழுகிறோம், உங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தியவர்கள் அழுமாறு செய்வோம்என்று கூவினர்.

அவருடைய சித்தப்பா மெஹ்தி ஹோர்ச்சனி AFP இடம் கூறினார்: “தன்னுடைய நிலைமை மற்றும் தன் சகோரதரர்களின் நிலைமை பற்றி கவனத்தை ஈர்ப்பதற்காக மகம்து தன் உயிரைக் கொடுத்தார்.” அல்ஜீரியாவைப் போலவே துனிசியாவும் இளைஞர்கள் வேலையின்மை என்னும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அரசின் தடையற்ற சந்தைக் கொள்கைகள் வேலைகளைக் குறைத்து தனிப்பட்ட தொடர்புகள் இருத்தல் அல்லது இலஞ்சம் கொடுத்தல் ஆகியவை இல்லாமல் எவரும் வேலைபெறுவது கடினம் என்று ஆக்கிவிட்டது.

Le Monde எழுதியது: “அரசு வலுவாக ஆதரிக்கும் பொருளாதாரத்தில், ஒரு முதுகலைப் பட்டம் உறுதியான வேலைக்கு உத்தரவாதமாக, அரச அல்லது அரசத் துணை அலுவலகங்களில் இருந்தது. ஆனால் இப்பொழுது அனைத்தும் மாறிவிட்டன. பௌர்குபா சகாப்தத்திற்குப் பின் முக்கிய அடிப்படைச் சீர்திருத்தங்களின் விளைவுகள் இவை. வேலையின்மை 1990களின் கடைசிப் பகுதியிலிருந்து உயர்ந்து கொண்டு வருகிறது.” இளைஞரிடையே வேலையின்மை விகிதம் என்பது இப்பொழுது அல்ஜீரியாவிற்கு ஒப்பாக உள்ளது.

துனிசியாவில் ஒரு பிரெஞ்சு வணிகர் Le Monde  இடம் கூறினார்: “சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்ற ஒருவர் பெட்ரோல் நிலையத்தில் விற்பனையாளராக இருப்பதைக் காண்பது இங்கு அபூர்வம் அல்ல. சுத்தம் செய்யும் பெண்கள் ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்கள், பழங்கள் விற்பனை செய்பவர் கணக்கில் முனைவர் (doctorate) பட்டம் பெற்றவர், என்றெல்லாம் உள்ளது.”

எதிர்ப்புக்கள் கடக்கப்படுவதைத் தடைசெய்ய முற்படுதல், செய்தி ஊடகத்தில் இது பற்றித் தகவலை நிறுத்துதல் போன்றவற்றின் மூலம் துனிசிய அரசாங்கம் இப்பொழுது இணைய தளத்திலும் தணிக்கையைக் கொண்டுவந்துள்ளது. பேஸ்புக்கை அணுகும் வாய்ப்பை அது தடுத்தது. அதேபோல் வலைத்தள மெயில் முறை விண்ணப்பங்களும் கடந்த வாரம் நிறுத்தப்பட்டன. துனிசியாவில் செய்தியாளர்களும் அரசியல் செயலர்களும் தங்கள் தளங்கள் பாதிப்பிற்கு உட்படுத்தப்பட்டு பிறரால் எடுத்துக் கொள்ளப்பட்டன என்று கூறியுள்ளனர்.

குறிப்பாக பென் அலியின் ஆட்சி துனிசியா பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களை விவாதிக்கும் வலைத் தளங்களை தடுப்பிற்கு உட்படுத்தும் ஆர்வத்தில் உள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் பென் அலி குழுவிற்கு துனிசிய மக்களுக்கு எதிராக உறுதியாக ஆதரவைக் கொடுத்தாலும், அமெரிக்கத் தூதரகத்தின் துனிசிய நிலைமை பற்றிய வெளிப்படையான மதிப்பீடுபொதுவாக மக்களிடம் இருந்து மறைக்கப்படுவதுஅரசாங்கத்தைப் பற்றிய பேரழிவு தரும் சித்திரத்தைக் கொடுத்துள்ளது.

ஜூலை 2009 தகவல் கேபிள், விக்கிலிக்ஸால் வெளியிடப்பட்டதில், அமெரிக்கத் தூதரக அலுவலர்கள் எழுதினார்கள்: “சில முக்கிய மதிப்பீடுகளை நாம் பகிர்ந்து கொண்டு, நாடு வளர்ச்சியில் வலுவான நிலையைக் கொண்டுள்ளது என்றாலும், துனிசியா பெரும் பிரச்சினைகளையும் சந்திக்கிறது. ஜனாதிபதி பென் அலிக்கு வயதாகிக் கொண்டு வருகிறது, அவருடைய ஆட்சி இழிந்துள்ளது, அவருக்கு அடுத்தாற்போல் பதவிக்கு வருபவர் பற்றித் தெளிவு இல்லை. அரசியல் சுதந்திரம் இல்லாதது பற்றி பல துனிசிய மக்கள் பெரும் திகைப்பு கொண்டுள்ளனர். நாட்டின் முதல் குடும்பத்தின் ஊழல், உயர் வேலையின்மை மற்றும் பிராந்திய சமத்துவமற்ற நிலை ஆகியவை பற்றி சீற்றம் அடைந்துள்ளனர்.”

மற்றொரு தகவல் கேபிளில்துனிசியாவில் ஊழல்கள்: உங்களிடம் இருப்பது என்னுடையதுதான்என்ற தலைப்பைக் கொண்டதுஅமெரிக்கத் தூதரக அலுவலர்கள் எழுதினர்: “துனிசியாவில் ஊழல் என்பது மிகவும் மோசமாகிக் கொண்டுவருகிறது. அது ரொக்கம், பணிகள், நிலம், சொத்து அல்லது உங்கள் ஆடம்பரப்படகு என்றாலும், ஜனாதிபதி பென் அலியின் குடும்பம் அதை வாங்க இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டு, அக்குடும்பம் அதை அநேகமாக வாங்கியும் விடும்…. ஜனாதிபதி பென் அலியின் விரிந்த குடும்பம் பல நேரமும் துனிசி ஊழலின் அச்சு என்று மேற்கோளிடப்படுகிறது. அரை மாபியா என்று பல நேரமும் குறிக்கப்படும் இக்குடும்ப விரிவு இக்குடும்பம்என்று சொன்னாலே எந்தக் குடும்பம் என்று உங்களுக்கு தெரிந்துகொள்ளுவதற்குப் போதுமானது. நாட்டின் வணிக சமூகத்தின் பாதி பேர் பென் அலித் தொடர்பை திருமண உறவின் மூலம் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். இந்த உறவுகளில்  பலரும் தங்கள் உறவின் துணையினால் அதிக நலன்களை அடைந்துள்ளனர்.”

இத்தகைய மதிப்பீடுகள் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆட்சிகளின் இரட்டைத் தரங்களை, மத்திய கிழக்கு ஆட்சிகளை நடத்தும் விதத்தில் உயர்த்திக் காட்டுகின்றன. தோல்வி அடைந்தவுடன் அமெரிக்க ஆதரவு பெற்ற ஈரானிய வேட்பாளர் மீர்ஹொசைன் மௌசவி 2009ல் ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்களைத் திருட முயன்றபோது, அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்கள் ஈரானிய அரசாங்கம் எதிர்ப்புக்களை அடக்கியதைக் கண்டித்தன.

ஆனால், பென் அலியின் வன்முறை, தணிக்கை ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறை, அதுவும் துனிசிய ஆளும் குழுவின் நலன்களுக்காக என்பது, எந்த எதிர்ப்பையும் தூண்டவில்லை. ஏனெனில் அவர் ஒரு மேலை நண்பர் என்றுதான் காணப்படுகிறார்.

அல்ஜிரியா மற்றும் துனிசியாவின் காலனித்துவ ஆளும் சக்தியாக இருந்த பிரான்ஸ், இரு நாடுகளில் இருந்தும் நிறைய குடியேறியவர்களைக் கொண்டுள்ளது, எதிர்ப்புக்கள் பற்றி உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை. Le Monde  குறிப்பிடுவதாவது: “நீண்ட காலமாக துனிசியா ஐரோப்பாவின் பொருளாதார விஷயங்கள், குடியேற்றம், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆகியவற்றில், ஒரு சலுகை பெற்ற பங்காளியாக உள்ளதுஇத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகியவை இதற்கு உறுதியான நட்பு நாடுகள் ஆகும். இதுதான் இதுவரை மேலாதிக்கத்தைக் கொண்டுள்ள சங்கடமான நிலையில் மௌனம் காத்தல் என்பதற்குக் காரணம் ஆகும்.”

சனிக்கிழமை அன்று, அமெரிக்க அரச அலுவலக செய்தித் தொடர்பாளர் P.J.Crowley துனிசியாவில் அனைத்துத் தரப்பும் தடுப்புணர்வைக் காக்க வேண்டும்என்று அழைப்புவிடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் துனிசியாவின் தூதர் அரச அலுவலகத்திற்கு பேச்சுக்களுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

முதலாளித்துவ செய்தி ஊடகம் மற்றும் இராஜதந்திர ஸ்தாபனமானது இந்த எதிர்ப்புக்கள் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என்ற கவலையை உயர்த்தியுள்ளது. உண்மையில் அவற்றின் அடிப்படைக் காரணங்கள்மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் சமூக இழப்புக்களை ஏற்படுத்தும் அரசாங்கச் செயல்கள்உலகெங்கிலும் தொழிலாளர்களை எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான்.

சௌதி அரேபியாவின் Arab News அப்பட்டமாக எழுதியது: “இந்த மோதல்களை வட ஆபிரிக்காவின் உள்ளூர் இகழ்வு என்று காண்பவர்கள் மீண்டும் சிந்திக்க வேண்டும். இந்த இளம் துனிசியரை இறப்புக்கு விரட்டிய நம்பிக்கையற்ற நிலை பல்லாயிரக்கணக்கான அவருடைய நாட்டு மக்களை துனிசியாவில்அபூர்வமாக நடப்பதைச் செய்யத் தூண்டியுள்ளதுஅதாவது தெருக்களுக்கு வந்து கலகம் செய்தல் என்பதை. இதில் இளம் அல்ஜிரியர்கள் கொள்ளை அடித்தல், கலகம் செய்தல் என்று இந்த வாரம் விலைவாசி உயர்விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது, எதிர்பார்த்த சட்டம் மற்றும் ஒழுங்கின் சிதைவுதான். அரேபிய உலகில் வேறு எங்கும் கூட இது நிகழலாம். வட ஆபிரிக்காவில் மட்டும் வேலையின்மை என்ற ஆவி உலவவில்லை.”

எதிர்ப்புக்கள் ஐரோப்பாவிலும் பரவலாம். அங்கு வட ஆபிரிக்க குடியேற்ற மக்கள் ஏராளமாக உள்ளனர். பிரான்சில் அல்ஜீரிய, துனிசிய எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்து ஒரு ஆர்ப்பாட்டம் நேற்று மத்தியதரைக் கடல் துறைமுக நகரமான மார்சேயியில்  நடந்தது.