சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Man attempts suicide in Romanian parliament

ருமேனியப் பாராளுமன்றத்தில் ஒரு மனிதர் தற்கொலை செய்ய முயற்சித்தார்

By Diana Toma
10 January 2011

Use this version to print | Send feedback

ருமேனியாவில் எமில் போக்கின் கன்சர்வேடிவ் அரசாங்கம் சுமத்திய முன்னோடியில்லாத சிக்கன நடவடிக்கைகள், அதிகமாகும் வறுமையை எதிர்கொள்பவர்களை, “வாய்ப்பில்லாத நாடுஎன்று பலரும் இப்பொழுது அழைக்கப்படும் நாட்டில் முன்னோக்கு இல்லாத தன்மையையொட்டி, தீவிர எதிர்ப்புக்களைத் தெரிவிக்க வகை செய்துள்ளன.

டிசம்பர் 23ம் திகதி ருமேனியப் பாராளுமன்றம் ஒரு அதிர்ச்சிதரும் நிகழ்வை அடுத்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க நேர்ந்தது. தேசியத் தொலைக்காட்சி நிலையத்தில் (TVR) ஒரு மின்சாரப் பிரிவுத் தொழிலாளராக உள்ள 40 வயதான ஆட்ரியன் சோபரு பாராளுமன்ற பலகணியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இச்சோக நிகழ்வு புகைப்படக் கருவியில் பதிவானது.

இம்மனிதர் ஒரு வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார்: “நீங்கள் எங்கள் மீது தோட்டாக்களைச் செலுத்தியுள்ளீர்கள், எங்கள் குழந்தைகளில் வருங்காலத்தை நீங்கள் அழித்து விட்டீர்கள், நீங்கள் எங்களை விற்றுவிட்டீர்கள்என்று அதில் எழுதப்பட்டிருந்தது. சோபரு, “போக், நீங்கள் எங்கள் குடும்பத்தைக் கொன்றுவிட்டீர்கள்! எங்கள் குழந்தைகளிடம் இருந்து ரொட்டியை எடுத்துக் கொண்டுவிட்டீர்கள்! உங்களுக்காகத்தான் போக்!’ என்று பலகணி விளிம்பில் நின்று கூவினார். பின்னர் அவர் பேரவை மன்றத்தில் 6 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தார்.

சோபருவிற்கு முகத்தில் காயங்களும் மற்ற ஆபத்தான காயங்களும் ஏற்பட்டன. பல்கலைக்கழக மருத்துவமனை ஊழியர்கள் கருத்துப்படி அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்படுவதுடன், உளரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படும். அவருடைய உறவினர்கள் மற்றும் வல்லுனர்களின் கருத்துப்படி, அவருடைய செயல் தன்னுடைய நிலை மற்றும் குறிப்பாக அவர் குடும்பத்தின் நிலையில் இருந்து விளைந்துள்ள பெரும் திகைப்புத்தான் காரணம் எனப்படுகிறது.

பெரும் மன இறுக்கத்தால் அவதியுறும் தன்னுடனைய குழந்தையைக் காப்பாற்றும் வாய்ப்பு இல்லாமல் இந்த 40 வயது மனிதர் உள்ளார். அவருடைய வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அவருக்குக் கொடுக்க வேண்டிய ஆதரவு சிறிதும் இல்லை. இதையொட்டி அவர் பெரும் மனத்தளர்வில் ஆழ்ந்துள்ளார். இவருடைய பெருந்திகைப்புச் செயல் பிரதம மந்திரி எமில் போக்கின் தலைமையிலுள்ள அரசாங்கத்தை எதிர்க்கும் நோக்கத்தை தெளிவாகக் கொண்டிருந்தது.

ஆண்டிரியன் சோபனுவின் சக ஊழியர்கள் அவருடைய பெரும் வறிய வாழ்க்க நிலைமை பற்றி சில உட்பார்வைகளைக் கொடுத்துள்ளனர். ஒரு நோயுற்ற குழந்தையின் தந்தை என்னும் முறையில் இருக்கும் அவருடைய ஊதியம் போக் அரசாங்கத்தால் 550 லீயில் இருந்து (அமெரிக்க$160) 150 லீக்கு (அமெரிக்க$45) குறைக்கப்பட்டுள்ளது. ஒருவர் கூறினார்: “அவருடைய குழந்தை ஒன்று மன இறுக்கத்தால் அவதியுறுகிறது. சமீப ஆண்டுகளில் அவருக்கு அதற்கு மருத்துவத்திற்கு இலவச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு முறைக்கான மருத்துவமுறைக்கு மட்டும் 200 லீக்கள் (அமெரிக்க$55) செலவாகிறது. குழந்தைக்கு வாரத்திற்கு மூன்று முறைகள் தேவை. அவர் மாதத்திற்குக் கிட்டத்தட்ட 1000-2000 லீக்கள்தான் (அமெரிக்க $350) சம்பாதிக்கிறார். அவருடைய வருமானம் முழுவதையும் மருத்துவ உதவிக்குச் செலவழித்தாலும், அந்தப் பணம் தேவைப்படும் 12 பயிற்சிகளில் பாதிக்குத்தான் உதவும்.”

கடந்த ஆண்டு அரசாங்கம் அறிமுகப்படுத்திய வெட்டுக்கள் சமூகத்தின் ஒவ்வொரு கூறுபாட்டையும் பாதித்துள்ளன. இவற்றில் பொதுத்துறைப் பணிகளில் பெரும் ஊதியக் குறைப்புக்கள், ஓய்வூதியங்களில் வெட்டுக்கள், கல்வி மற்றும் சுகாதாரப் பணிகளில் குறைப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

பொதுப்பணித் துறை ஊதியங்களை அரசாங்கம் 24 சதவிகிதம் குறைத்துள்ளது. அதே நேரத்தில் அடிப்படைப் பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி 19ல் இருந்து 24 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சோபனுவின் விவகாரம் இக்குறைப்புக்களின் விளைவுகளைத் தெளிவாக்குகிறது. மன இறுக்கமுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையங்களை ருமேனியா கொண்டிருக்கவில்லை. சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். சிகிச்சைக்கான செலவு மாதம் €1,500 ஐ விட அதிகமாகலாம். இதன் பொருள் பல குழந்தைகளுக்கு மருத்துவ வசதி மறுக்கப்படுகிறது என்பதாகும்.

தற்கொலை முயற்சிக்குப் பின்னர் பேசிய பிரதம மந்திரி போக் சோகத்திற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுத்து, அவருடைய அரசாங்கத்தின் போக்கை இந்த எதிர்ப்பு பாதிக்காது என்று அறிவித்தார். “பல ருமேனியர்களும் கடினமான வாழ்வை நடத்துகின்றனர் என்பது எங்களுக்குத் தெரியும், நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்….தற்காலம் மிகவும் கடினமானது, நாம் அதைக் கடந்துதான் தீரவேண்டும்.... இன்று நாம் பார்த்த நிகழ்ச்சி ஒன்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்லஎன்றார் அவர்.

ருமேனியப் பாராளுமன்றத்தில் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சி ஒரே ஒரு சோக நிகழ்வு அல்ல. சமீபத்தில் அத்தகைய நிகழ்ச்சி நாட்டின் தேசியத் தொலைக்காட்சி நிலையத் தலைமையகத்தில் (TVR) நடந்தது. நவம்பர் 18ம் திகதி ஒரு 45 வயதான மின்சாரத் தொழிலாளர் நிலவறையில் தூக்குப்போட்டுத் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தான் திருப்பிக் கொடுக்க முடியாத அளவிற்கு இவருக்குக் கடன் சேர்ந்துவிட்டதால் அவர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவிற்கு வந்தார் என்று விசாரணைகள் முடிவிற்கு வந்துள்ளன. பெரும் திகைப்பின் விளிம்பை அவர் அடைந்து விட்டிருந்தார். இந்த நாடகத்தின் பரிமாணம் மிகப் பெரியது. ஏனெனில் TVR ஊழியர் இரு குழந்தைகள், மனைவி மற்றும் தாயார் ஆகியோரை விட்டு இறந்துவிட்டார். செய்தியைக் கேட்ட தாயாருக்கு பாரிச வாதம் வந்துவிட்டது.

பொதுச் சுகாதாரப் பயிலகத்தின் புள்ளிவிவரங்களின்படி, ருமேனியாவில் தற்கொலைகளின் எண்ணிக்கை 2010ல் கிட்டத்தட்ட இருமடங்காக ஆகிவிட்டது. மேலும் ஏராளமான மக்களைத் திகைப்பிற்கு உட்படுத்தும் சிக்கன நடவடிக்கைகள் ஏதும் முடிவிற்கு வருவது போல் இல்லை.

பைனான்சியல் டைம்ஸில் வந்துள்ள ஒரு தகவல் போர்த்துக்கல் அல்லது கிரேக்கம் போன்ற நலிவுற்றிருக்கும் பொருளாதாரங்களைவிட மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது. இந்த வெட்டுக்கள் ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளாக, ஸ்ராலினிச ஆட்சியின் சரிவிற்குப்பின் இடருறும் மக்களை மேலும் இன்னலுக்கு உட்படுத்தியுள்ளன. ருமேனியப் பொருளாதாரம் 2011ல் இன்னும் 2 சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகுப்பாய்வாளர்கள் அரசாங்கம் இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் இவ்வாண்டு பிற்பகுதியில் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கின்றனர். அரசாங்கச் செயற்பட்டியலில் பொதுப்பணி வேலைகள் அதிகமாகக் குறைக்கப்படும், ஊதிய வெட்டுக்கள் வரும் மற்றும் அரசாங்க நிலையங்கள், அமைப்புக்கள் பரந்த அளவில் மூடப்படும்.

நாட்டின் மொத்த நிகர உற்பத்தி இந்த பால்டிக் நாட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறைந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இதைவிட மோசமான நிலைமை லாட்வியா, எஸ்டோனியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில்தான் உள்ளது.