சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

World economy faces deepening turmoil

உலக பொருளாதாரம் ஆழ்ந்த கொந்தளிப்பை முகங்கொடுங்கிறது

Nick Beams
8 January 2011

Use this version to print | Send feedback

லெஹ்மென் பிரதர்ஸ் பொறிவால் தூண்டப்பட்ட நிதியியல் உடைவுக்கு இரண்டு ஆண்டுக்குப் பின்னால், மீளவியலாத அளவிற்கு மோசமடைந்திருக்கும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் நிதியியல் அமைப்புமுறை, முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பின் ஒரு சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளது என்ற கவலைகளின் வெளிப்பாட்டோடு இந்த புதிய ஆண்டு பிறந்துள்ளது. சுருக்கமாக கூறுவதானால், நிதியியல் நெருக்கடி கீழிறங்கி அதன்பின்னர் மேலெழும் ஒரு சுழற்சியாக இல்லை, மாறாக பொருளாதார உடைவின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கின்றது என்ற புரிதல் அதிகரித்து வருகிறது.

கிளிண்டன் நிர்வாகத்தில் வர்த்தகத்திற்கான இணைச்செயலாளராக இருந்தவரும், தற்போது யேல் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதியியல் பிரிவு பேராசிரியருமான ஜெஃப்ரீ கார்டன், கடந்த மாதம் வெளியான ஒரு கருத்துரையில் பின்வருமாறு எழுதினார்: "21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் முடிவிற்கு வருகின்ற நிலையில், கடந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் ஒரேசீரான வளர்ச்சியைக் குறித்த நீளமான நினைவுகளை விட்டுச் செல்கிறது. உலகளாவிய பொருளாதாரத்தின் எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது? நாம் அறிந்திருக்கும் உலக பொருளாதார அமைப்பின் தேய்வு நாட்கள் குழப்பமாகவும், சாத்தியமானால் பேரழிவுமிக்க வகையிலும் பங்கு வகிக்கின்ற [உள்ளபடியே] நிலையில், அடுத்த பல ஆண்டுகளுக்கு, விசித்திரமான குழப்பங்களை நாம் எதிர்பார்க்கலாம்

ஐரோப்பா தான் உடனடியாக கவனத்தின் முன் வந்து நிற்கிறது. டிசம்பர் 30இல் நியூயோர்க் டைம்ஸில் வெளியான முன்னாள் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் சைமன் ஜோன்சனின் கருத்துப்படி, ஐரோப்பிய மண்டலத்தின் மிகவும் அனுபவம் மிக்க பார்வையாளர்கள், 2011இன் தொடக்கத்தில் ஐரோப்பாவில் மற்றொரு தீவிர நெருக்கடியை எதிர்பார்க்கிறார்கள். இது அதன் பலவீனமான அரசாங்கங்களின் தொடர்ச்சியான நிதி தேவைகளுடன் தொடர்புபட்டிருக்கும்.” 

ஆனால் அட்லாண்டிக்குடன் இந்த கொந்தளிப்பு நிற்காது என்று எச்சரிக்கும் அளவிற்கு அவர் சென்றார். நிதியியல் சந்தைகள் ஐரோப்பாவை முடித்துக் கொண்டு, அவை அமெரிக்காவின் நிதியியல் சந்தையின் தைரியத்தைப் பரிசோதிக்க வரும்.” "நாங்கள் டாலரை வெளியிடுபவர்கள்; ஆகவே எங்களுக்கு சில சிறப்பு சலுகைகள் உண்டு என்பதால் ஐரோப்பியர்களில் இருந்து நாங்கள் வித்தியாசப்பட்டவர்கள்" என்பது ஒட்டுமொத்த அமெரிக்க மேற்தட்டின் நம்பிக்கையாக இருந்தாலும் கூட, அமெரிக்காவின் மேன்மை காலமெல்லாம் இப்போது கடந்து போய்விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

பைனான்சியல் டைம்ஸ் இதழும் இவ்வாறே, 'அடுத்த சில மாதங்களில் ஐரோப்பிய நிதியியல் நெருக்கடி பரவும்' என்று குறிப்பிட்டுக் காட்டியது. கடந்த ஆண்டானது, ஐரோப்பிய மண்டல கடன் நெருக்கடியைக் கொண்டு வந்தது. கிரீஸ் மற்றும் அயர்லாந்தைப் பிணையெடுக்க வேண்டியதிருந்தது; போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் மீதான பெரும் கேள்விக்குறிகள் இன்னும் தொங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இது விரிவாக ஒருமுனைப்படக்கூடும். மேற்கத்திய உலகம் எந்தளவிற்கு மாட்டிக் கொள்ளும் என்பது தான் 2011இன் கேள்வியாக உள்ளது, என்று அது ஜனவரி 3இல் எழுதியது.

ஒரு பிரபல அமெரிக்க முதலீட்டு வங்கி, அதன் மிகப் பெரிய நிறுவன முதலீட்டாளர்களிடம் நடத்திய ஓர் ஆய்வையும் பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டுக் காட்டியது. அதில், கடன் நெருக்கடி ஐரோப்பாவைத் தாக்கும்போது, அமெரிக்காவையும் எட்டுமா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. பத்து சதவீதத்தினருக்கும் வெகு குறைவானவர்கள் மட்டும் தான் "ஒருபோதும் இல்லை" என்று தெரிவித்தனர்

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பொருளாதார மற்றும் நிதியியல் பிரச்சினைகள் ஆழமடைந்து வரும் நிலையில், தொடர்ந்து உயர்ந்து வரும் சீனப் பொருளாதாரம் கூட உலகளாவிய பொருளாதார விரிவாக்கத்திற்கு ஒரு புதிய அடித்தளத்தை அளிப்பதில் இருந்து வெகு தூரத்தில் இருப்பதுடன் அதுவே சர்வதேச கொந்தளிப்பின் ஒரு புதிய அலைக்கு ஆதாரமாக ஆகலாம்

உயர்ந்து வரும் பணவீக்கமானது, வட்டிவிகிதங்களை நீக்க அதிகாரிகளை இட்டுச் சென்றுள்ளது. இதன் வேகம் மிகவும் விரைவாக இருக்குமேயானால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மைய பாத்திரத்தை வகித்துள்ள, முதலீடு மற்றும் நிலச்சொத்துகள் குமிழியில் (இதில் பெரும்பான்மை உள்நாட்டு அரசாங்க அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்டது) ஒரு பொறிவை ஏற்படுத்தும் என்ற கவலைகளை இது தூண்டிவிட்டுள்ளது.

பெய்ஜிங் பல்கலைக்கழக பேராசிரியர் மெக்கேல் பெட்டிஸின் கருத்துப்படி: கடன் அளவுகள் கவலைப்படும் அளவிற்கு அதிகமாக உள்ளன. மேலும் இவை மீள் சமப்படுத்தலில் (rebalancing) ஓர் ஆழ்ந்த தடையாக செயல்படத் தொடங்குகின்றன. அரசு சார்ந்த நிறுவனங்களில் ஒரு பெரும் நிதியியல் இடர்பாட்டை ஏற்படுத்தாமல் வட்டிவிகிதங்களை உயர்த்துவதில், People's Bank of China விற்கு அதிகளவில் இது சிக்கலாக மாறிக் கொண்டிருக்கிறது.

உலகளாவிய நிதியியல் நெருக்கடியால் எரிச்சலூட்டப்பட்டிருந்த போதினும் சீனப் பொருளாதாரத்திற்குள் இருக்கும் ஆழ்ந்த பிரச்சினைகள், நீண்ட-கால வழிமுறைகளில் வேரூன்றியுள்ளது. டிசம்பர் 23இல் China Daily இல் பிரசுரிக்கப்பட்ட Peoples' Bank of China இன் 'நாணய கொள்கை தீர்மானிப்புக்குழுவின்' ஒரு முன்னாள் உறுப்பினர் யூ யொங்டிங்கின் ஒரு கருத்துப்படி, கடந்த மூன்று தசாப்தங்களில் சீனாவின் அடித்தளத்தை உருவாக்கிய "கிழக்காசிய வளர்ச்சி வடிவத்தின்" ஆற்றல் தற்போது ஏறத்தாழ தீர்த்துவிட்டிருக்கிறது. இதன்விளைவாக, சீனா ஒரு சிக்கலான சந்தியை அடைந்துள்ளது என்பதுடன், துன்பம்தருகின்ற கட்டமைப்பு சீரமைப்புகள் இல்லையென்றால் அதன் பொருளாதார வளர்ச்சியின் உந்துவிசை இல்லாமல் போகும்.” 

அமெரிக்காவின் நடவடிக்கைகள், உலக பொருளாதாரத்தின் ஆழமான குழப்பங்களுக்கு இன்னும் அதிகமாக எண்ணெய் வார்த்து வருகிறது.

யுத்தத்திற்கு பிந்தைய பெரும்பாலான காலங்களில், அமெரிக்கா உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் நங்கூரமாக செயல்பட்டது. இன்று, அது அதனுடைய பொருளாதார பிரச்சினைகளை அதன் போட்டியாளர்களை விலையாக கொடுத்து தீர்க்க விரும்பும் நிலையில், அது ஸ்திரமின்மையின் முதன்மை மூலஆதாரங்களில் ஒன்றாக உள்ளது

உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்குள் பில்லியன் கணக்கான டாலர்களை இறக்கி வருகிற, பணத்தை வாரியிறைக்கும் (“quantitative easing”) என்றழைக்கப்படும் அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பின் கொள்கை, உலக பொருளாதாரம் முழுவதிற்கும் அதிர்ச்சி அலைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த கொள்கை தான் மலிவு நிதியின் கையிருப்பை அதிகரித்து, அமெரிக்க டாலரின் மதிப்பைக் கீழே கொண்டு வந்து கொண்டிருக்கிறது

உடனடி விளைவுகளில் ஒன்றாக, உணவு மற்றும் எண்ணெய் போன்ற இதர அடிப்படை பொருட்களின் ஊகவணிகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உணவு விலைகள் தற்போது 2007-2008 விலையுயர்வுகளின் போது எட்டப்பட்ட அளவுகளையும் தாண்டிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்த வாரம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது

பணத்தை வாரியிறைப்பதால் தூண்டப்பட்டு "சுடச்சுட பணத்தின்" உள்வருகையைச் சந்தித்த பல நாடுகள், புதிய நிதியியல் கட்டுப்பாடுகளைத் திணிக்க விரும்புகின்றன. நிதி வருகையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முயற்சியில் பிரேசில் சமீபத்தில் புதிய வங்கியியல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இவ்வாறே, பெசொவின் (peso) மதிப்பைக் குறைத்து வைக்கும் முயற்சியில் சிலியின் அதிகாரிகள் பணச்சந்தைகளில் தலையீடு செய்துள்ளனர்

உலக பொருளாதாரத்தில் ஆழமடைந்து வரும் பிளவுகளைக் குறிப்பிட்டுக் காட்டி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிங்லிட்ஜ் குறிப்பிடுகையில், 2009 பொருளாதார நெருக்கடிக்கு பெரும் சக்திகள் காட்டிய ஒருங்கிணைந்த கொள்கை பிரதிபலிப்பானது, தற்போது ஒரு "உணர்விழந்த நினைவுகளாக" இருப்பதாக குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தார், மிகவும் மோசம், அமெரிக்காவின் பணத்தை வாரியிறைக்கும் (Quantitative easing) முறை, பெரும் மந்தநிலைக்குக் காரணமான கொள்கைகளின் தற்போதைய ஒரு நவீன வடிவமாக பார்க்கப்படுகிறது. ஏனையவர்களின் மீது சுமையைச் சுமத்தி --அதாவது இறக்குமதிகளை ஊக்கப்படுத்தாமல், ஏற்றுமதிகளை அதிகரித்து கொண்டு-- தங்களை-ஊக்குவித்துக் கொள்ள செலாவணி விகிதங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற பாதையில் உலகம் விழிப்பு கொண்டு வருகிறது. அயல்நாட்டவரை பலிகொடுத்து தான் செழிக்கும் (beggar-thy-neighbour) இதுபோன்ற கொள்கைகள் 1930களில் பயனளிக்கவில்லை, ஏனென்றால் நாடுகள் வேறுவிதத்தில் பிரதிபலிப்பைக் காட்டின. இன்றைய காலகட்டத்திலும் அதே தான் நடக்கும்.” 

1930களில் இருந்த காப்புவரி தடைகள் (tariff barriers) உலகை ஒரு தொடர்ச்சியான விரோதம் மிக்க பொருளாதார அணிகளாக பிரித்து அந்த தசாப்தத்தின் இறுதியில் யுத்தம் வெடிக்க இட்டுச் சென்றதைப் போல, அதே விதத்தில் செலாவணி வெடிப்பு உலக சந்தையை உடைக்க அச்சுறுத்துகிறது.

பெரும் சக்திகளுக்கு இடையில் நிலவும் பதட்டங்கள், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைப்பாட்டின்மீது தொடர்ந்து கொடூரமான தாக்குதல்களைக் கொண்டிருக்கின்றன. சிக்கன நடைமுறைகளை திணிக்க பிரிட்டன், கிரீஸ், ஸ்பெயின் மற்றும் பிரான்சில் உள்ள அரசாங்கங்களால் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக, வங்கிகள் மற்றும் நிதியியல் சந்தைகளால் ஏவப்பட்டு, கட்டவிழ்த்து விடப்படும் அரசு வன்முறைகளானது, இலாப அமைப்புமுறையின் வரலாற்றுரீதியிலான திவால்நிலைமைக்கு தொழிலாள வர்க்கத்தைக் கடன்தீர்க்க, எங்கெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கம் விரும்பும் நிலையில், என்ன வரவிருக்கிறது என்பதையே முன்கூட்டிக் காட்டுகிறது

எல்லைகளுக்கும், கண்டங்களுக்கும் இடையில் முதலாளித்துவ அமைப்பின் உடைவு தொடர்ந்து கொண்டிருக்கையில், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த உலகளாவிய பதிலிறுப்பை அபிவிருத்தி செய்ய வேண்டும். பொருளாதாரம் மற்றும் நிதியியல் மூலஆதாரங்களை பொதுமக்களின் கரங்களில் வைத்திருக்கும் மற்றும் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கேற்ப பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் தொழிலாளர் அரசாங்கங்களை உருவாக்குவதும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஓர் ஐக்கியப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்புவது தான் முன்னிருக்கும் வேலையாக உள்ளது. இது தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் முன்னோக்காக உள்ளது.