WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
ஸ்பெயினின் விமானப்
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்கள் மீது
அரசாங்கம் குற்ற விசாரணை நடத்த வசதியளிக்கிறது
By
Robert Stevens and Paul Stuart
7 January 2011
Use
this version to print | Send
feedback
ஸ்பெயின்
சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி
(PSOE) அரசாங்கமானது
2,200 விமானப்
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீதான தன் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது.
விமானப்
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்,
அரசாங்கம் டிசம்பர்
4ம் திகதி சுமத்திய
ரோயல் ஆணை
(1673/2010) கீழ்
எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆணையின் கீழ்
கட்டுப்பாட்டு அதிகாரிகள் அரச எச்சரிக்கை நிலைக் காலம் முடியும் வரை விமானப் படைத்
தலைமைத் தளபதியின் கீழ்
“இராணுவக்
கட்டுப்பாட்டில்”
உழைக்கும்
கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளனர்.
டிசம்பர்
3ம் திகதி
பொறுத்துக் கொள்ள முடியாத நிலைமையிலான தாக்குதல்கள் தங்கள் உரிமைகளுக்கு ஏற்பட்டதை
அடுத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பெருமளவில் வெளிநடப்பு செய்ததையடுத்து இந்த
உத்தரவு சுமத்தப்பட்டது.
டிசம்பர்
29ம் திகதி மாட்ரிட்
நீதிமன்றத்தின் தலைமை அரசாங்க வக்கில் எடுவார்டோ எஸ்டெபன்,
டிசம்பர்
3-4 அன்று பணியை
நிறுத்தியதற்காகச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் ஆட்சி எதிர்ப்பிற்காக
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது குற்ற விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்று கோரி ஒரு கடிதத்தை வெளியிட்டார்.
அரசாங்கம் இப்பொழுது
“பொதுவாக”
கட்டுப்பாட்டு
அதிகாரிகளை தொடர்புபடுத்தி குற்ற விசாரணைக்கு உட்படுத்துதல் என்னும் அச்சறுத்தலை
அதிகரித்துள்ளதாக அரசாங்க வக்கீல் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாக
El Pais
தகவல் கொடுத்துள்ளது.
தலைமை
அரசாங்க வக்கீல் கான்டிடோ கோண்டே-பும்பிடோ
1964 விமானப்
போக்குவரத்துச் சட்டங்களின்
20வது விதிப்படி
எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இது விமானப்
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் தளபதி
பிராங்கோ காலத்திய சட்டம் இரண்டாவது தடைவயாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற பொருளைத்
தரும்.
எச்சரிக்கை நிலை என்று
அரசாங்கம் அறிவித்துள்ளது
1975ல் முடிவுற்ற
பிராங்கோ ஆட்சியின் முடிவிற்குப் பின் முதலாவது பிரகடனம் ஆகும்.
ஆட்சி
எதிர்ப்புக் குற்றச்சாட்டுக்களுக்காக அதிகபட்ச தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்
என்று தொடர்ந்து கூறும் கோண்டே பும்பிடோ,
“நாம் ஒன்றும்
தொழிலாளர் பிரச்சினை பற்றி இங்கு கையாளவில்லை. ஏனெனில் விமானப் போக்குவரத்துக்
கட்டுப்பாட்டு அதிகாரிகள் எந்த நேரத்திலும் சட்டபூர்வ வழிவகைகளைப் பயன்படுத்தவில்லை,
ஆனால் முன்கூட்டித்
திட்டமிடப்பட்ட விமான நிலையங்களை கைவிடுதல்,
அதையொட்டி ஸ்பெயின்
குடிமக்களுக்குப் பெரும் சேதம் ஏற்படுத்துதல் என்பவற்றைத்தான் செய்துள்ளனர்”
என்றார்.
இடையூறு
ஏற்பட்ட காலத்தில் இலாபங்களை இழந்த தனிநபர்கள்,
நிறுவனங்கள் மற்றும்
அமைப்புக்கள் கோரும் நஷ்ட ஈட்டைக் கொடுக்க நேரும் என்ற பட்சத்தில் விமானப்
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட
வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடுவது பற்றித் தான் பரிசீலித்து
வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் இடைவிடாத பிரச்சாரத்தால் ஊக்கம் பெற்றுள்ள,
எதிர்பார்க்கப்படும்
தனியார் இழப்பீட்டுத் தொகைகளை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம்
வசூலிப்பதற்கான தயாரிப்பாக தலைமை வக்கீலின் நடவடிக்கை உள்ளது.
டைம்
இதழின் கருத்துப்படி டிசம்பர் மாதம் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வெளிநடப்பால்
பாதிக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட
5,500 பயணிகளின்
குழுக்கள் ஆண்டு இறுதிக்குள் ஒரு பயணிக்கு
10,000 டொலர் வீதம்
“அறநெறி
அடிப்படையில் இழப்பீடுகளைக்”
கோருவதற்கு சிவில்
வழக்குகளைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளன.
அத்தகைய
நடவடிக்கையின் மதிப்பிடப்பட்டுள்ள
மொத்தச் செலவுகள்
கிட்டத்தட்ட 55 ஈரோ
மில்லியன் என்று ஆகும்.
தொழிற்சங்க
அதிகாரத்துவத்தின் உதவியுடன் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீதான குற்ற விசாரணை
நடைபெறுகிறது.
மோதலின் ஒவ்வொரு
கட்டத்திலும் அரசாங்கத்துடன் ஒத்துழைத்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு
அதிகாரிகள் தொழிற்சங்கம் (USCA)
இப்பொழுது குற்றவிசாரணைக்கு உதவுவதுடன்,
அதன்
உறுப்பினர்களையே சிறைக்கு அனுப்பக் கூடிய வாய்ப்பிற்கும் ஒத்துழைக்கிறது.
தொழிலாளர்கள் நிலைமைகள் மீதோ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான விமானப்
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும்,
USCA ஒரு ஒன்றுபட்ட
தாக்குதலை உறுதிகுலைக்கவும்,
தகர்க்கவும்
அனைத்தும் செய்துள்ளது.
பெப்ருவரி
மாதம்
PSOE ஓர் அரசர்
ஆணையை (1/2010)
கட்டுப்பாட்டு
அதிகாரிகளின் ஊதியங்களை
40 சதவிகிதம்
குறைத்தல்,
பணிநேரங்களை
அதிகரித்தல்,
கூடுதல் பணி
நேரத்திற்கான ஊதியத்தைக் குறைத்தல்,
ஓய்வு நேரத்தைக்
குறைத்தல் ஆகியவற்றிற்காக ஆணையிட்டது.
IFATCA எனப்படும்
சர்வதேச விமானப்
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கூட்டமைப்பின் கருத்துப்படி,
“ஒரு கட்டுப்பாட்டு
அதிகாரியின் நிகர வருமானம் ஒரே நாளில்
30 முதல்
50 சதவிகிதம் வரை,
அவர் முன்னதாகச்
செய்திருந்த கூடுதல் பணிநேரத்தையொட்டி,
குறைந்துவிட்டது.”
ஆகஸ்ட்
மாதம்
USCA கட்டுப்பாட்டு
அதிகாரிகளின் அரச நிறுவனமான
Aeropuertos Espanoles y Navegacion Aerea
எனப்படும்
AENA
நிர்வாகத்திற்கு எதிரான ஒரு வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக
92 சதவிகிதத்தை அது
பெற்றிருந்தபோதிலும் கூட,
கைவிட்டனர்.
மாறாக,
அரசாங்கம் தலையிட்டு
மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று கோரியது.
ஆகஸ்ட் மாத
இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தைக் கைவிட்ட
USCA உடைய தலைமைத்
தொடர்பாளர் Cesar
Cap, “பொறுப்பை
நிரூபிக்கும் வகையில்,
நிர்வாகக் குழு
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள வேலைநிறுத்தம் பற்றிய உரிமையைச் செயல்படுத்துவது இல்லை
என்று முடிவெடுத்துவிட்டது”
என்று அறிவித்தார்.
இது
PSOE ஐத் தன்
தாக்குதல்களை தீவிரப்படுத்த அனுமதித்தது. இதையொட்டி அரசர் ஆணை
(1001/2010)
வெளியிடப்பட்டது.
இதில் கட்டுப்பாட்டு
அதிகாரிகள் ஆண்டு ஒன்றிற்கு
1,670 மணி நேரம்
பணிபுரியவேண்டும்,
இதைத் தவிர
AENA முடிவெடுக்கும்
வகையில்,
கட்டாயமாக
80 மணிநேரம் கூடுதல்
நேரம் உழைக்க வேண்டும் என்பவை அடங்கியிருந்தன.
அரசாங்கத்துடன் தொழிற்சங்கம் இணைந்து செயல்படுவதன் விளைவு பற்றிப் பல கட்டுப்பாட்டு
அதிகாரிகள் சீற்றம் அடைந்தனர்.
ஆகஸ்ட்
19, 2010 அன்று
USCA மற்றும்
AENA ஆகியவற்றிற்கு
இடையே செய்துகொள்ளப்பட்ட
“முன்கூட்டிய
ஒப்பந்தம்”
பற்றிக் கருத்துத்
தெரிவித்த IFATCA
இது தொழிற்சங்க
உறுப்பினர்களால் ஏற்கப்பட்டது என்றாலும்
“அதிக உற்சாகத்துடன்
செய்யப்படவில்லை”
என்றார்.
டிசம்பர்
மாதம் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வெளிநடப்பு செய்வதற்கு முன்,
தொழிற்சங்கம்
AENA விற்கு ஒரு
திட்டத்தை அளித்தது. அதில் அரசாங்கம் நாடிய அடிப்படைக் கோரிக்கைகள் அனைத்தும்
ஏற்கப்பட்டன என்று கூறப்பட்டது.
USCA கூடுதல்
பணத்திற்கு வேண்டுகோள் விடுக்கவில்லை,
பெப்ருவரி மாதம்
போக்குவரத்து அமைச்சரகம் அளித்திருந்த விதிகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று ஆகஸ்ட்
மாதம் வரைவு உடன்பாட்டின் ஒரு பகுதியாக கையெழுத்தும் இட்டது.
USCA இவ்வாறு
சரணடைந்தது பற்றிக் கருத்துத் தெரிவித்த
IFATCA மற்றும்
USCA “ஒரு திட்டத்தை
முன்வைத்துள்ளது,
இது தற்போதைய தேக்க
நிலையைத் தீர்க்கக் கூடும்,
அதில் அடுத்த மூன்று
ஆண்டுகளுக்கு ஊதியங்கள் இதே நிலையில் வைக்கப்படும் என்பதும் அடங்கியுள்ளது”
என்று தெரிவித்தது.
USCA ன் செய்தித்
தொடர்பாளர் டானியல் ஜமிட் தொழிற்சங்கங்களின் திட்டங்களின்படி மோதலை
“விரைவில் முடிக்க
வேண்டும் என்பற்காக”
ஒரு உடன்பாடு
“பத்து
நாட்களுக்குள் காணப்படும்”
என்றார்.
டிசம்பர்
3ம் திகதி
கட்டுப்பாட்டு அதிகாரிகள்,
முந்தைய அரசர்
ஆணையில் கோடிட்டுக் காட்டப்பட்ட செய்ய வேண்டிய ஆண்டு வேலை நேரங்களுக்கும் மேலாக
அவர்கள் முடித்துவிட்டதால்,
வேலைக்குச் செல்ல
மறுப்பதாகத் தெளிவுபடுத்தினர்.
ஒரு புதிய அரசர்
ஆணையின் முன்கூட்டிய பிரதியையும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பெற்றனர். இது முன்னதாக
அன்று அமைச்சர் குழுவினால் இயற்றப்பட்டது. கடுமையான முறையில் அவர்களுடைய பணி
நிலைமைகளை மோசப்படுத்தி,
பணி நேரங்களையும்
விரிவாக்கியது.
USCA உடனடியாக இந்த
நடவடிக்கைக்குத் தான் பொறுப்பு இல்லை என்று கூறி அரசாங்கம் அதன் உறுப்பினர்களுக்கு
எதிராக இராணுவத்தைத் திரட்ட அரங்கு அமைத்தது.
USCA தொழிலாளர்கள்
மீண்டும் விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்குத் திரும்ப வேண்டும் என்று கோரி,
இந்த நடவடிக்கை
“தன்னெழுச்சியாக
செய்யப்பட்டது”,
“தீவிரமான முடிவு”
என்றும் கண்டித்தது.
இதன்பின்
USCA அதிகாரிகள்
பிரதம மந்தரி ஜோஸ் ஸாபத்தேரோவின் வேண்டுகோளுக்கு இணங்க,
பொதுத்துறை
அமைச்சரகத்தில் ஒரு இரகசிய காபினெட் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்களுடைய அடுத்த
நடவடிக்கை ஒரு மாட்ரிட் ஓட்டலுக்குச் செல்லுவது என இருந்தது. அங்கு கட்டுப்பாட்டு
அதிகாரிகள் கூட்டம் போட்டிருந்தனர். பாதுகாப்பு அமைச்சரகம் உறுதிபடுத்தியுள்ளபடி,
உறுப்பினர்கள்
வேலைக்குத் திரும்புவதை தவிர வேறு விருப்புரிமை பெற்றிருக்கவில்லை,
இராணுவச் சட்டத்தின்
கீழ் இருப்பதை ஏற்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சர்வாதிகார
ஆட்சியை முகங்கொடுக்கும் நிலையில்,
USCA யின் ஒரே
செயற்பாடு PSOE
அரசாங்கத்திற்கான
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பெருகிய அதிருப்தி மற்றும்
எதிர்ப்பை அடக்குவதாகத்தான் இருந்தது.
தொழிற்சங்கம் அதன்
உறுப்பினர்களை டிசம்பர்
15ம் திகதியிட்டு
“விருப்பக் கடிதம்”
ஒன்றில்
கையெழுத்திடுமாறு கோரியது. அதில்
அவர்கள் எந்தத்
தொழில்துறை நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்,
“பணியின் தொடர்ச்சி
நடக்க உறுதியளிப்பர்”
என்று உத்தரவாதம்
இருந்தது.
இக்கடிதம்
அதில்
கையெழுத்திட்டுள்ளவர்கள்
“தற்போதைய
சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள விதிகளுக்கு”
உட்படுவர் என்றும்
“இருதரப்பினருக்கும்
இடையே ஏற்பட்ட முந்தைய உடன்பாடுகளுக்கும்”
உட்படுவர் என்றும்
இருந்தது.
USCA
உடைய பெரும் முயற்சிகளையும்
மீறி,
விமானக் கட்டுப்பாட்டு
அதிகாரிகளில் 15
சதவிகிதம் ஆவணத்தில்
கையெழுத்திட மறுத்து விட்டனர்.
இதை
அரசாங்கத்திடம் ஒரு உறுதிமொழி போல்
USCA அளித்தது.
உறுப்பினர்கள் கட்டுப்பாட்டையும் பொலிசாரையும் மீற மாட்டார்கள் என்பதை உறுதியாக
நம்பலாம் என்றும் அந்த அடிப்படையில் எச்சரிக்கை நிலை கைவிடப்பட வேண்டும் என்று
கோரியது. அது டிசம்பர்
16 அன்று
சட்டமன்றத்தில் புதுப்பிக்கப்படுவதற்காக வர இருந்தது.
ஆனால் கட்டுப்பாட்டு
அதிகாரிகள் வருங்காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்று
தொழிற்சங்கம் உடன்பாட்டில் கொடுத்த உறுதிமொழியும் அரசாங்கத்திற்கு போதுமானதாக இல்லை.
மீண்டும்
PSOE கட்டுப்பாட்டு
அதிகாரிகள் மீது தாக்குதல்களை தொடர்ந்தனர்.
ஜனவரி
15ம் தேதி வரை
எச்சரிக்கை நிலை தொடரும் என்று அராசங்கம் அறிவித்த நிலையில்,
வளர்ச்சித்துறை
மந்திரி ஜோஸ் பிளாங்கோ,
“ஒரு சில
கையெழுத்துக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறுவது
சேதம்,
மிரட்டுதல் ஆகியவற்றிற்கு
மீண்டும் திரும்புதல் என்று பொருளாகும்”
என்றார்.
எச்சரிக்கை
நிலை நீடிக்கப்பட்டபின்,
USCA டிசம்பர்
3 அன்று
கட்டுப்பாட்டு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையோடு எத்தொடர்பும் இல்லை என்ற
நிலைப்பாட்டைத் தொடர்ந்தது. மேலும் அரசாங்கத்துடனான தன் ஒத்துழைப்பையும்
தீவிரப்படுத்தியது.
USCA யின் சீசர்
காபோ வெளிநடப்பு பற்றி,
“அது ஒரு தவறு….தங்கள்
தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளை மூடி மறைக்க அவர்கள் கூடுதல்
விடையிறுப்பைக் காட்டுகின்றனர்.
நாங்களும் அதில்
விழுந்துவிட்டோம்.”
என்று கூறியதாக
டைம் மேற்கோளிட்டுள்ளது.
இது ஒரு
பொய் ஆகும்.
தொழிலாளர்கள்
ஒன்றும் “கூடுதல்
விடையிறுப்பைக்”
காட்டவில்லை. மாறாக,
UPCA
அரசாங்கத்துடனும்
AENA உடனும்
நெருக்கமாக இணைந்து செயல்படும் சூழ்நிலையில்,
தங்களைப்
பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில்தான் ஈடுபட்டனர். இதற்காக
USCA அதன்
உறுப்பினர்களின் நிலைப்பாடு,
விதிகள் ஆகியவற்றைக்
கூட அழிப்பதற்கு எதையும் ஏற்கத் தயாராக இருந்தது.
PSOE,
சர்வதேச
நிதிய
மூலதனத்திற்காக
AENA வின்
49 சதவிகிதம்
முழுவதையும் விற்பதற்கான வழிவகைக்கு ஏலம் கோரும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது.
விமானப்
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் தோல்வி ஸ்பெயினின் விமான நிலையங்களைத்
தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒரு முக்கிய காரணி ஆகும்.
இவைதான்
ஐரோப்பாவிலேயே இன்னும் அதிகமான முறையில் அரசாங்கத்தால் நடத்தப்படும் முறையாக உள்ளது.
AENA ஐ விற்பது
என்னும் திட்டம் ஆரம்ப எச்சரிக்கை நிலை சுமத்தப்பட்டபோதே அறிவிக்கப்பட்டது.
கடந்த மாதம்
ஒரு புதிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொகுப்பை
நியமிப்பதற்கான வழிவகை உண்மையில் ஜூலையிலேயே தொடங்கிவிட்டது என்று பிளாங்கோ
கூறினார்.
கிட்டத்தட்ட
3,200 விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்படுகின்றன.
“புதிய அதிகாரிகளின்
பயிற்சி புதிய நிறுவனங்கள் துவக்க ஊக்குவிக்கப்படுவதோடு வடிவமைக்கப்படும். அது
அரசாங்கத்திற்குச் சொந்தமான ஏகபோக உரிமை மாதிரி என்பதாக இராது”
என்று பிளாங்கோ
கூறினார்.
இந்த ஆண்டு
அரசாங்கம்
Alicante, Valencia, Ibiza, La Palma de Mallorca, Lanzarote, Fuerteventura,
Sevilla உட்பட பல
விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரங்களை விற்கும் திட்டங்களைக் கொண்டிருக்கிறது.
எஞ்சியிருப்பவை
2012 ல்
தனியார்மயமாக்கப்படும்.
இதற்கு
USCA எதிர்ப்பு
எதையும் தெரிவிக்கவில்லை.
ஜனவரி
1ம் தேதி ஒரு
செய்தித்தாள்
The Leader
“AENA அதிகாரிகள்
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தொழிலாளர்கள் சங்கம்
USCA வை அந்த வாரம்
தெரிவித்துத் தங்கள் திட்டங்களைக் கூறினர்”
என்று எழுதியுள்ளது.
“புதிய
தனியார்மயமாக்கப்படும் நிறுவனங்களுடன் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குப் புதிய
ஒப்பந்தங்கள் வழங்கப்படும்,
அல்லது
தனியார்மயமாக்கப்படாத விமான நிலையத்தில் முதல் விருப்பத்தை அவர்கள் மறுத்தால் ஓர்
இடம் கொடுக்கப்படும்.
இரண்டையுமே
அதிகாரிகள் நிராகரித்தால்,
அவர்களுடைய
ஒப்பந்தங்கள் காலாவதி செய்யப்பட்டு பணிநீக்க நிதித் தொகுப்பு அளிக்கப்படும்”
என்று அறிக்கையில்
சேர்த்துள்ளது.
USCA
கட்டுப்பாட்டு அதிகாரிகளை
ஒதுக்கி வைத்து அணிதிரட்டல் செய்யாமல் செய்தது ஸ்பெயினின் இரு முக்கிய தொழிற்சங்கக்
கூட்டமைப்புக்களின் முழு ஆதரவைப் பெற்றது—அதாவது
பொதுத் தொழிலாளர்கள் சங்கம் (UGT)
மற்றும் தொழிலாளர்கள் ஆணைக் குழுக்கள் (CC.OO)
ஆகியவற்றாலாகும்.
மேலும் பொறுப்பைக்
கொண்டது IFATCA
ஆகும். இது அதன்
134 உறுப்புக்களுடைய
சங்கங்கள் கட்டுப்பாடு கொண்டுள்ள
50,000 தொழிலாளர்களை
பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஸ்பெயின்
தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு
“ஐரோப்பா முழுவதும்
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஒற்றுமையுடன் நடவடிக்கை எடுக்க
வாய்ப்பு”
உண்டு,
“ஏற்கனவே பல
ஐரோப்பித் தொழிற்சங்கங்களுக்கு இடையே ஒற்றுமை உடன்பாடு உண்டு,
அதன்படி சமூக
மோதல்களில் அவை ஒன்றுக்கொன்று ஆதரவு தரும்”
என்று கூறிய
பின்னரும் கூட,
இக்கூட்டமைப்பு
இந்நிலை பற்றி ஏதும் செய்யவில்லை.
USCA
மற்றும்
ATCEUC எனப்படும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்
ஒருங்கிணைப்பு அமைப்பிலும் இடம் பெற்றுள்ளது. அது
28 ஐரோப்பிய
நாடுகளிலுள்ள
13,000 தொழிலாளர்களை
பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
டிசம்பர்
4ம் தேதி
வாடிக்கையான ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டதைத் தவிர,
ATCEUC
ஸ்பெயினிலுள்ள தொழிலாளர்களுக்கு உதவ ஏதும் செய்யவில்லை.
டிசம்பர்
10 அன்று
ATCEUC மற்றொரு
அறிக்கையை ஸ்பெயின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பற்றி வெளியிட்டது.
“ஸ்பெயின் அரசாங்கம்
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொண்டிருக்கும்
முடிவுகளிலுள்ள வன்முறை பற்றி அதிர்ச்சி அடைந்துள்ளதாக”
குறிப்பிட்ட அந்த
அறிக்கை குறிப்பிட்டதாவது,
“எனவே ஸ்பெயின்
அரசாங்கம் அல்லது நிறுவனம் தொடர்புடைய எந்த ஐரோப்பியக் கூட்டத்திலும் பங்கு
பெறுவதைத் தவிர்ப்பதைத் தவிர வேறு எந்த விருப்புரிமையும் எங்களுக்கு இல்லை”
என்று முடிவுரையாகக்
கூறியுள்ளது.
தொழிற்சங்க
அதிகாரத்துவம் தொழிலாளர்களுக்கு எதிரான பெரும் அரச அடக்குமுறை நடப்பதற்கான வழியை
வகுத்துள்ளது. இதில் வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் அடக்குவதற்கு
இராணுவம் பயன்படுத்துவது அடங்கியிருப்பதை ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள
வர்க்கம் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும்.
தொழிற்சங்கங்கள்
தங்கள் வாழ்க்கை மற்றும் ஜனநாயக உரிமைகளை தகர்ப்பதற்கு எதிரான தொழிலாளர்கள் எதிர்த்
தாக்குதல் நடத்துவதற்கு முக்கிய தடை என்ற தங்கள் பங்கைத்தான் உறுதி செய்துள்ளன.
தொழிலாளர்கள்
தொழிற்சங்கங்களின் இத்தகைய அழுகிய கருவிக்கு எதிரான அரசியல் புரட்சியை நடத்துவதோடு,
புதிய போராட்ட
அமைப்புக்களை தொழிலாளர்களின் அனைத்து ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் நிறுவ வேண்டும்.
|