WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
பணவீக்கம்
சீன
அரசாங்கத்தை
தொல்லைப்படுத்துகிறது
By John Chan
5 January 2011
Use
this version to print | Send
feedback
பணவீக்கம்
மற்றும்
வீட்டு
விலைகள்
பற்றிய
சமூக
அழுத்தங்களை
குறைக்கும்
வகையில்
சீனப்
பிரதமர்
வென்
ஜியாபாவோ
அரசாங்கம்
விலை
அதிகரிப்புக்களை
கட்டுப்படுத்தும்
என்ற
தொடர்ச்சியான
உறுதிமொழிகள்
கொடுப்பதின் மூலம்
முயல்கிறார்.
வென்னுடைய
நடவடிக்கைகள்
ஆளும்
சீனக்
கம்யூனிஸ்ட்
கட்சிக்குள்
உள்ள
அச்சங்களான
சரியும்
வாழ்க்கத்தரங்கள்
பல
மில்லியன்கள்
கொண்ட
தொழிலாள
வர்க்கத்தை
அரசியல்
போராட்டத்திற்கு
இழுத்துவிடும்
என்பதைத்தான்
நிரூபிக்கின்றன.
டிசம்பர்
26ம்
தேதி
சீனத்
தேசிய
வானொலி
நிலையம்
ஏற்பாடு
செய்திருந்த
உரை
நிகழ்ச்சியில்
வென்
அரசாங்க
உதவிகள்
பொது
வீடுகளுக்கு
கொடுத்தல்,
வாடகை
உதவியளித்தல்,
பெருகிவிட்ட
நிலச்
சொத்து
ஊகங்களை
தடுத்தல்
போன்ற
நடவடிக்கைகள்
மூலம்
உயரும்
வீட்டு
விலைகளைக்
கட்டுப்படுத்த
இருப்பதாக
உறுதியளித்தார்.
மன்னிப்புக்
கோரும்
வகையில்
இருந்த
குரல்
குறிப்பில்,
பரந்த
மக்களுக்கு
தான்
முன்னர்
கொடுத்திருந்த
வீட்டு
விலைகள்
உயர்வை
“நியாயமான
அளவிற்கு”
கட்டுப்படுத்தி
வைப்பதாகக்
கூறியிருந்த
உறுதிமொழியைக்
காப்பாற்ற
முடியவில்லை
என்பதை
வென்
ஒப்புக்
கொண்டார்.
மத்தியதர
மற்றும்
குறைந்த
வருமானம்
உடையவர்கள்
வீடுகள்
வாங்குவதில்
கொண்டுள்ள
இடர்பாடுகளைப்
பற்றிக்
குறிப்பாகச்
சுட்டிக்
காட்டிய
பிதரமர்,
மக்கள்
தொகை
கூடுதலாக
இருப்பதும்
போதுமான
நிலங்கள்
இல்லாமல்
இருப்பதும் தான்
வீடுகளை
வசதியாக
வாங்க
முடியாத
நிலையைத்
தோற்றுவிப்பதாக
அறிவித்தார்.
உண்மையில்
வீடுகள்
பற்றிய
நெருக்கடியின்
உண்மையான
காரணங்கள்
2008 உலக
நிதிய
நெருக்கடியைத்
தொடர்ந்து
ஒரு
பொருளாதாரப்
பின்னடைவை
தவிர்க்க
சீன
அரசாங்கம்
எடுத்த
நடவடிக்கைகளில் தான்
உள்ளன.
வேலையின்மை
பெருகியுள்ளதின்
சமூக
விளைவுகள்
பற்றிப்
பீதி
அடைந்துள்ள
பெய்ஜிங்
அரச
வங்கிகளுக்கு
பொருளாதார
செயற்பாடுகளுக்கு
ஊக்கம்
தரும்
வகையில்
எளிய
கடன்களை
டிரில்லியன்
கணக்கான
யுவான்கள்
மூலம்
அளிக்க
வேண்டும்
என்று
உத்தரவிட்டது.
ஆனால்
மூலதனத்தின்
பெரும்பகுதி
பல
வணிகங்களாலும்
நிலச்
சொத்து
ஊகங்களுக்குத்
திருப்பப்பட்டன.
இது
விலைவாசிகளை
உயர்த்தியது.
இப்பொழுது
முதல்
சீனாவின்
வீடுகள்
விலைகள்
வானளாவ
உயர்ந்துவிட்டன,
தெற்கு
தொழில்துறை
மையமாக
குவாங்ஜோவில்
மிக
வியத்தகு
முறையில்
அதிகமாயின.
அங்கு
விலைகள்
கடந்த
ஆண்டு
36 சதவிகிதம்
உயர்ந்தன.
பரபரப்பான
ஏற்றம்
இப்பொழுது
கட்டுமானப்
பணி
மற்றும்
பிற
தொழில்களில்
நடைபெறுகிறது.
ஆனால்
ஊகக்காரர்கள்
ஏராளாமான
அடுக்கு
வீடுகள்
கட்டிடங்களைக்
காலியாக
வைத்து
இன்னும்
உயர்ந்த
விலை
கிடைக்கும்
என்ற
நம்பிக்கையில்
உள்ளனர்.
இது
மில்லியன்
கணக்கான
நகர்ப்புறத்
தொழிலாளர்களை
வீட்டுச்
சந்தையில்
இருந்து
தூக்கியுள்ளன.
இணைய
தளத்தில்
சுற்றிவரும்
ஒரு
நகைச்சுவை,
மாபெரும்
ஏமாற்றத்
திகைப்பும்
சீற்றமும்
வளர்ந்து
வருவதைக்
காட்டுகிறது.
பெய்ஜிங்கில்
ஒரு
அடுக்கு
வீட்டை
வாங்குவதற்குக்
கிட்டத்தட்ட
மூன்று
மில்லியன்
யுவான்கள்
($450,000)
தேவைப்படுகிறது.
சராசரி
நிலப்பகுதியில்
உழைக்கும்
ஒரு
விவசாயி
டாங்
மரபு
ஆட்சிக்காலத்தில்
இருந்து
--1300
ஆண்டுகளுக்கு
முன்பு
அது
ஆண்டது—
உழைத்தால்தான்
அத்தகைய
வீட்டை
வாங்க
முடியும்
என்று
நகைச்சுவை
கூறுகிறது.
சராசரி
மாத
ஊதியம்
பெறும்
ஆலைத்
தொழிலாளி
1840
அபின்
போர்க்
காலத்தில்
இருந்து,
வார
இறுதி
விடுமுறை
நாட்களிலும்
உழைத்தால்தான்
அப்படி
ஒரு
வீட்டை
வாங்க
முடியும்.
வீடுகளின்
விலைகள்
உயர்ந்துள்ள
வானளாவிய
மட்டங்களினால்,
ஊகக்
குமிழி
வெடிக்கக்
கூடும். இது
ஒரு
நிதிய
நெருக்கடியை
சீன
வங்கி
முறைக்குள்
கட்டவிழ்க்கும்.
பல
உள்ளூர்
அரசாங்கங்களுக்கும்
நிதிய
நெருக்கடி
ஏற்படும்—
அவையோ
ஏற்கனவே
நிலச்
சொத்து
தொடர்பில்
அதிகம்
ஈடுபட்டுள்ளன.
அதே
நேரம்,
விவசாய
நிலங்களில்
கணிசமான
பகுதி
வீடுகள்
கட்டுபவர்களுக்கு
விற்கப்படுகின்றன.
இது
உணவு
உற்பத்தியில்
குறைவை
ஏற்படுத்தி
அடிப்படைப்
பொருட்களின்
விலையையும்
உயர்த்திவிட்டது.
நவம்பர்
மாதம்
சீனாவின்
நுகர்வோர்
விலைக்
குறியீடு
5.1 சதவிகிதம்
ஆண்டுதோறும்
என்ற
கணக்கில்
உயர்ந்துவிட்டது.
ஆனால்
உணவுப்
பொருட்களில்
விலைகள்
11.7 சதவிகித
உயர்வைக்
கண்டன.
தானியங்களில்
விலை
14.7 சதவிகிதம்,
சமையல்
எண்ணெய்
14,3 சதவிகிதம்,
பழங்கள்
28.1 சதவிகிதம்
மற்றும்
முட்டைகள்
17.6 சதவிகிதம்
என
உயர்ந்தன.
பெரும்பாலான
சீனக்குடும்பங்கள்
தங்கள்
வருமானத்தில்
பெரும்பகுதியை
உணவு
மற்றும்
பிற
அடிப்படைத்
தேவைகளுக்குச்
செலவிடுவதால்,
இவற்றின்
விலை
உயர்வுகள்
என்பது
அவர்கள்
வாழ்க்கைத்
தரங்களில்
தீவிர
அரிப்பு
என்பதை
ஏற்படுத்துகின்றன.
தொழிலாள
வர்க்கத்தை
சமூகப்
போராட்டங்களில்
ஈடுபட
உந்துதல்
கொடுக்கக்
கூடிய
தன்மையில்
பணவீக்கத்தின்
பங்கு
உள்ளது
என்பதை,
மே-ஜூன்
1989ல்
ஏற்பட்ட
இயக்கம்
மற்றும்
கடந்த
ஆண்டு
மே
ஜூனில்
கார்த்தொழில்,
மின்னணுத்
தொழிலாளர்கள்
ஈடுபட்டதுபோல்
என்பதை
முழு
நனவுவுடன்
அறிந்துள்ள
CCP ஆட்சியானது
விலை
உயர்வுகளுக்குக்
கூருணர்ச்சியை
வெளிப்படுத்தியுள்ளது.
ஆன்லைனில்
2010 விலை
உயர்வுகளைப்
பற்றி
கேள்விகள்
கேட்கப்பட்டபோது,
வென்
இவை
குறைவூதிய,
மத்தியதர
வருமானம்
ஈட்டுபவர்களுக்குப்
பெரும்
இடரைக்
கொடுக்கின்றன
என்பதை
ஒப்புக்
கொண்டார்.
“மொத்த
விலை
அளவைக்
கட்டுப்படுத்த
எங்களால்
முழுதும்
முடிகிறது”
என்று
உறுதியளித்த
அவர்
அரசாங்கத்தின் மீது
“நம்பிக்கை”
வேண்டும்
என்ற
அழைப்பையும்
விடுத்தார்.
தொழிலாள
வர்க்கத்தை
எதிர்கொள்ளும்
இடர்கள்
பற்றி
அரசு
எப்படிக்
கவலை
கொண்டுள்ளது
என்று
காட்டும்
மற்றொரு
முயற்சியில்,
ஜனாதிபதி
ஹு
ஜின்டாவோ
பெய்ஜிங்கின்
வறிய
பகுதிகள்
சிலவற்றை
டிசம்பர்
29 அன்று
பார்வையிட்டு
குறைவூதியக்
குடும்பங்களுக்கும்
இன்னும்
அதிகமாக
நிதி
உதவி
அளிக்கப்படும்,
வீடுகள்
கட்டப்பட
வேண்டும்
என்று
அழைப்பு
விடுத்தார்.
அதிகாரிகள்
நிலையாக
காய்
கறிகள்
மற்றும்
பிற
அடிப்படைத்
தேவைகள்
தலைநகரத்திற்கு
வருமாறு
உத்தரவாதம்
அளிக்க
வேண்டும்
என்றும்
விலைகளை
அப்பொழுதுதான்
குறைக்க
முடியும்
என்றும்
அறிவித்தார்.
ஆட்சியின்
முயற்சிகள்
இருந்தபோதிலும்கூட,
Chinese Academy of Social Sciences (CASS)
மற்றும்
சீன
மக்கள்
வங்கி
டிசம்பர்
15 வெளியிட்டுள்ள
அறிக்கைகளானது
அரசாங்கத்திடம்
மக்கள் நம்பிக்கை
இழந்துவருகின்றனர்
என்பதைக்
காட்டுகின்றன.
CASS
வெளியிட்ட
“Social Blue Paper”
என்னும்
ஆய்வுக்கட்டுரை
சீனப்
பொருளாதாரம்
2010ம்
ஆண்டில்
10 சதவிகிதம்
வளர்ச்சியுற்று
5.6 டொலர்
டிரில்லியனை
அடைந்தபோதிலும்கூட,
மக்கள்
முந்தையாண்டுகளை
விட
குறைந்த
திருப்தியுடன்தான்
உள்ளனர்,
வருங்காலத்தைப்
பற்றி
அதிகம்
கவலைப்படுகின்றனர்
என்று
எச்சரித்துள்ளது.
கிராமப்புறப்
பகுதிகளிலும்
சிறு
நகரங்களிலும்
வசிக்கும்
மக்கள்,
மக்கட்தொகையில்
பெரும்பாலானவர்கள்,
குறிப்பிடத்தக்க
வகையில்
தங்கள்
வாழ்வில்
நம்பிக்கை
இழந்துள்ளனர்.
இந்த
அரசாங்கத்தின்
பொருளாதார,
சமூக
மற்றும்
வெளியுறவுக்
கொள்கைகளைக் கூட
சமாளிக்கும்
திறன்
பற்றி
நம்பிக்கை
இழந்துள்ளனர்
என்று
எச்சரித்துள்ளது.
சீனாவின்
எழுச்சிபெற்று
வரும்
சர்வதேச
அந்தஸ்து
பற்றிய
“தேசியப்
பெருமித
உணர்வு”
கணிசமாகச்
சரிந்து
அதன்
2006 தரத்தை
அடைந்துவிட்டது
என்று
இது
சுட்டிக்காட்டுகிறது.
அக்கட்டத்தில்தான்
இப்பெருமிதம்
ஏற்றம்
காணத்
தொடங்கியது.
Blue Paper
இந்த
அரசாங்கத்தின் மீது
நம்பிக்கைக்
குறைவிற்கு
முக்கிய
காரணம்
மக்களுடைய
வருமானங்கள்
மொத்த
உள்நாட்டு
உற்பத்தி
வளர்ச்சியை விடப்
பின்தங்கி
இருத்தல்,
பணவீக்கம்,
வீடுகள்
விலை
உயர்வு
ஆகியவற்றாலும்
சமூகப்
பாதுகாப்பு
முறை
ஒழுங்காக
இயங்காததாலும்,
வறியவர்களும்
செல்வந்தர்களுக்கும்
இடையே
பிளவு
அதிகரிப்பதாலும்
ஏற்பட்டுள்ளது
என்று
ஒப்புக்
கொண்டுள்ளது.
மத்திய
வங்கியின்
அறிக்கை
நுகர்பொருட்கள்
விலைகள்
பற்றிய
மக்கள் திருப்தி
1999 க்குப்
பின்னர்
மிகக்
குறைவான
நிலையில்
உள்ளது
என்றும்
74 சதவிகிதம்
மக்கள்
விலை
உயர்வுகள்
“நியாயமில்லாமல்
அதிகமாகிவிட்டன”
என்று
நம்புவதாகவும்,
76 சதவிகிதம்
வீடுகள்
விலைகள்
“மிக
அதிகமாக
உள்ளன”
என்று
கருதுவதாகவும்
கண்டறிந்துள்ளது.
தொழிலாள
வர்க்கத்தின்
சில
பிரிவுகளிடையே
எழுச்சி
உணர்விற்கான
அடையாளங்கள்
ஏற்கனவே
தோன்றியுள்ளன.
சர்வதேச
செய்தி
ஊடகத்தால்
அதிகம்
தகவல்
கொடுக்கப்படாத
இந்நிலையில்,
தொழிலாளர்கள்
அதிக
ஊதியங்களை
அடைவதற்கு
வேலைநிறுத்தங்களை
நடத்தியுள்ளனர்.
ஒரு
சீனத்
தொழிலாளர்கள்
உரிமைக்குழு
Sough China Morning Post
இடம்
ஆசிய
விளையாட்டுக்கள்
அங்கு
நடப்பதற்கு
முன்பு
குவாங்டாங்
மாநிலத்தில்
குறைந்தது
மூன்று
வேலைநிறுத்தங்கள்
ஏற்பட்டன
என்று
கூறியது.
பொலிஸ்
தலையிட்டு
இவற்றில்
இரண்டு
வேலைநிறுத்தங்களை
முறியடித்தன—ஒன்று
அக்டோபர்
26ம்
தேதி
Shenzhen Ricoh Elemx
ஆலையில்
தொழிலாளர்கள்
க்வார்ட்ஸ்
கைக்கடிகாரங்கள்
உற்பத்தியிடத்திலும்,
மற்றொன்று
லாங்ஹுவா
மாநிலத்தில்
நவம்பர்
12ம்
தேதி
சன்யோ
ஹுவாகியாங்கிலும்
ஏற்பட்டது.
கடந்த
ஆண்டு
இருவார
வேலைநிறுத்தத்தை
தொழிலாளர்கள்
நடத்திய
போஷனில்
உள்ள
ஹோண்டா
கார்ப்
பாகத்
தயாரிப்பு
நிறுவனத்திலுள்ள
தொழிலாளர்கள்
பிரதிநிதி
ஒருவர்
Sough China Morning Post
இடம்
அவருடைய
அடிப்படை
ஊதியம்
மாதம்
ஒன்றிற்கு
995 யுவானில்
இருந்து
1,300 க்கு
வேலைநிறுத்தத்தை
அடுத்து
உயர்த்தப்பட்டாலும்,
இந்த
நலன்கள்
ஏற்கனவே
உயர்ந்துவிட்ட
விலைவாசி
உயர்வுகளால்
அரிப்பிற்கு
உட்பட்டுவிட்டன
என்று
கூறினார்.
“வீட்டு
வாடகை
பகிர்ந்து
கொள்ளும்
வீட்டில்
300 யுவான்
அதிகரித்துவிட்டது.
உணவு,
மின்சாரக்
கட்டணம்,
கைபேசிச்
செலவுகள்
கிட்டத்தட்ட
1,000 யுவான்கள்
என்று
ஆகிவிட்டன.
இதைவிட
கேளிக்கையிலும்
நான்
ஈடுபடாமல்
இருந்தால்தான்
மாதத்திற்கு
200 யுவான்
சேமித்து
Lunar
புத்தாண்டிற்கு
வீட்டிற்கு
எடுத்துச்
செல்ல
முடியும்”
என்று
அவர்
கூறினார்.
பெய்ஜிங்கின்
வறிய
பகுதிகளுக்கு
ஹு
வருகை
புரிவதற்கு
முதல்நாள்
தலைநகரத்தில்
குறைந்த
பட்ச
ஊதியம்—நடைமுறையில்
மில்லியன்
கணக்கான
குடியேறிய
தொழிலாளர்களின்
அடிப்படை
ஊதியம்—திடீரென
20 சதவிகிதம்
உயர்த்தப்பட்டு1,160
யுவான்
($US172) என
நிர்ணயிக்கப்பட்டது.
இந்த
நடவடிக்கை
அதிருப்தியைக்
குறைக்கும்
நோக்கம்
கொண்டது
என்றாலும்,
இதனால்
அதிகத்
தாக்கம்
இராது.
சீனா
முழுவதும்
200 மில்லியன்
வெளியிடங்களில்
இருந்து
வரும்
தொழிலாளர்களுக்கு
கொடுக்கப்படும்
சராசரி
குறைந்தப்பட்ச
ஊதியம்
கிட்டத்தட்ட
1,500 யுவான்
ஆகும்.
ஹாங்காக்
தொழில்நுட்பப்
பல்கலைக்கழகப்
பேராசிரியர்
Pun Ngai
தொழிலாளர்களுடைய
ஊதியங்கள்
30 சதவிகிதம்
உயர்த்தப்பட்டாலும்கூட, “நகரங்களில்
கௌரவமாக
வாழ்வதற்கு
அது
போதாது”
என்று
எச்சரித்தார்.
ஆழ்ந்த
தொழிலாளர்
அமைதியின்மை
மற்றும்
வேலைநிறுத்தங்கள்
2011ல்
வரக்கூடும்
என்று
Pun
எச்சரித்துள்ளார்.
ஊதிய
உயர்வுகளில்
ஏற்றம்
என்பது
அதிமாக
இருக்காது
அல்லது
சிறிதும்
இருக்காது.
பணவீக்கத்திற்கு
பெய்ஜிங்கின்
விடையிறுப்பு
கடன்
அட்டை
வழங்குவதை
இறுக்கிப்பிடித்தல்,
வட்டி
விகிதங்களை
உயர்த்துதுல்
என்றுதான்
கடந்த
இரண்டு
மாதங்களாக
உள்ளது.
இது
பொருளாதார
வளர்ச்சியையும்
குறைத்துவிடும்.
அதே
நேரத்தில்
ஐரோப்பாவில்
நடைபெற்று
வரும்
கொந்தளிப்பு—சீனாதான்
மிகப்
பெரிய
ஏற்றுமதிச்
சந்தையாக
உள்ளது—மற்றும்
அமெரிக்காவில்
நலிந்த
நுகர்வோர்
தேவை
என்பதின்
பொருள்
இந்நாட்டின்
உற்பத்திப்
பிரிவு
கூடுதல்
உற்பத்தித்திறனால்
திணறுகிறது
என்பதாகும்.
சீன
வங்கிக்
கட்டுப்பாட்டு
ஆணையத்தில்
தலைவரான
லியு
மிங்காங்
டிசம்பர்
மாதம்,
“பெரும்பாலான
தொழில்துறை
உற்பத்திப்
பொருட்கள்
சீனச்
சந்தைகளில்
கூடுதல்
உற்பத்தித் திறனைக்
கொண்டுள்ளன.
இதையொட்டி
மேல்நோக்கிச்
செல்லும்
பணவீக்கத்தை
கீழ்நோக்குமாறு
இயக்குவது
இயலாது”
என்று
எச்சரித்தார்.
வேறுவிதமாகக்
கூறினால்,
உற்பத்தியாளர்கள்
அதிக
உற்பத்திச்
செலவுகளை
அதிக
விலைக்கு
பொருட்களை
விற்பதின்
மூலம்
ஈடு
செய்ய
முடியாது.
இதையொட்டி
அவர்களுக்குத்
தொழிலாளர்களுக்கு
ஊதிய
உயர்வுகள்
கொடுக்கும்
வாய்ப்பு
இல்லை.
தொழிலாளர்களுடைய
வாழ்க்கைத்
தரங்களோ
பணவீக்கத்தால்
அரிக்கப்பட்டுள்ளன.
பிரதமர்
வென்
மற்றும்
ஜனாதிபதி
ஹுவின்
வனப்புரைகள்,
சாதாரண
மக்களுடைய
நிலைமை
பற்றிய
அவர்கள்
கவலையின்
பகிரங்க
வெளிப்பாட்டின்
பின்னணியில்,
ஆட்சி
தொழிலாள
வர்க்கத்துடன்
ஒரு
மோதல்
பாதையில்
செல்லுகிறது
என்னும்
அவர்களுடைய
பெருகிய
அச்சம்
காணப்படுகிறது. |