World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan’s PPP-led government on brink of collapse

பாக்கிஸ்தானின் PPP தலைமையிலான அரசாங்கம் சரிவின் விளிம்பில் நிற்கிறது

By Sampath Perera and Keith Jones
5 January 2011
Back to screen version

PPP எனப்படும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியினல் தலைமையில் உள்ள தேசியக் கூட்டணி அரசாங்கம் MQM எனப்படும் முத்தாஹிதா க்வாமி இயக்கம் அதன் தேசிய சட்டமன்றத்தில் உள்ள 25 உறுப்பினர்களும் இனி எதிர்த்தரப்பு இருக்கைகளில் அமர்வர் என்று ஞாயிறு அறிவித்ததைத் தொடர்ந்து ஆபத்தில் உள்ளது.

MQM இவ்வித த்தில் மாறிவிட்டது கடந்த மாதம் JULF எனப்படும் முஸ்லிம் அடிப்படைவாத ஜமியத் உலீமா எ இஸ்லம் எப் எனப்படும் அமைப்பு ஆதரவை நீக்கியதை அடுத்து வந்துள்ளது பாக்கிஸ்தான் மக்கள் கட்சியை பஷ்டுன் தளமுடைய அவாமி தேசியக் கட்சி உடைய ஆதரவை ஒன்றைத்தான் கொண்டுள்ளது என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. இரு இரு கட்சிகளும் மொத் த த்தில் 342 உறுப்பினர்கள் உள்ள தேசியச் சட்ட மன்றத்தில் 158 இடங்களைத்தான் கொண்டுள்ளன; இதன் பொருள் அரசாங்கம் இப்பொழுது வரவிருக்கும் நாட்களில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தீன்மூலம் அகற்றப்பட்டுவிடலாம் என்பதேயாகும்

திங்கள் மற்றும் செவ்வாயன்று பாக்கிஸ்தானின் ஜனாதிபதியும் PPP ன் இணைத் தலைவருமான  அசிப் அலி ஜர்தாரி மற்றும் அவருடைய பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானியும் அரசாங்கத்திற்கு ஆதரவைத் திரட்டுவதற்குப் பரபரப்புடன் செயல்பட்டனர். இதில் MQM  மற்றும் PML(Q)—2002ல் அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ஜெனரல் முஷரப் தன்னுடைய இராணுவ ஆட்சிக்கு சிவிலிய பாராளுமன்ற முகப்புத் தோற்றம் அளிப்பதற்காக தோற்றுவித்ததுஆகியவற்றை அணுகியதும் அடங்கும். வணிகரும் முன்னாள்  பிரதம மந்திரியும் ஒரு காலத்தில் இராணுவத்தின் ஆதரவைக் கொண்டிருந்த, தன்னுடைய முதுபெரும் பகைமைக் கட்சி பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் நவாஸ் ஷரிப்பையும் PPP அணுகியது.

திங்களன்று அமெரிக்க வெளியுறவுச் செய்தித்தொடர்பாளர் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் தன்மையை குறைத்துப் பேச முற்பட்டார்; இந்த ஆட்சி கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முக்கியமான தளவாட, இராணுவ ஆதரவை அளித்து வந்துள்ளது. ஆனால் வாஷிங்டன் திரைக்கு மறைவில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு எதிர்க்கட்சியினரை அவசரப்பட்டு நிலைமையை மாற்றிவிடமால் இருக்குமாறு கோரக் குறுக்கிடுகிறது என்பதற்கான அடையாளங்கள் உள்ளன. PPP தலைமையிலான அரசாங்கம் அகற்றப்படுவது இரு முக்கியமான பிற்போக்குத்தன இலக்குகளுக்கு ஆதரவு கொடுத்து விடும் என்று ஒபாமா நிர்வாகம் அஞ்சுகிறது: அதாவது பாக்கிஸ்தான் ஆப்கானிய எல்லைப் பகுதிகளில் தாலிபனுடன் இணைந்த குழுக்கள் நடத்தும் எழுச்சியாளர் போரை எதிர்த்து இஸ்லாமாபாத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தச் செய்ய முடியாது, மற்றும்அமெரிக்க ஆதரவுடைய  மிருகத்தனமான IMF ன் மறுகட்டமைப்புத்திட்டம் என்பதற்கும் ஊறு ஏற்படும்.

இஸ்லாமாபாத்தில் நடக்கும் அரசியல் திரித்தல் நிகழ்வுகள் செவ்வாய் பிற்பகல் பாக்கிஸ்தானில் அதிக மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாநிலத்தின் ஆளுனர் சல்மான் டசீர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தடுப்பிற்கு உட்பட்டன. ஜனாதிபதி ஜர்தாரிக்கு மிக நெருக்கமானவரான இருந்த டசீர்; பாக்கிஸ்தானிய முஸ்லிம் லீக் (நவாஸ்) பிரிவிற்கு விரோதப் போக்கைக் கொண்டுள்ளார்.

வசதி மிக்க இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதியில்  இருந்து வெளியேறுகையில் அவருடைய உயர்மட்ட பொலிஸ் பாதுகாப்புப்படை உறுப்பினர் ஒருவராலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆளுனர் சமீபத்தில் நாட்டிலுள்ள சமயத்தை இழிவு படுத்துவோருக்குத் தண்டனை கொடுக்கும் சட்டங்களை கண்டனத்திற்கு உட்படுத்தினார், என்பதால் தான் டசீரைக் கொலை செய்ததாக கொலையாளி கூறியதாகத் தெரிகிறது; அச்சட்டங்களின்கீழ் வறிய கிறிஸ்துவப் பெண்மணியாகிய ஆசியா பீபி தூக்கிலிடப்படக்கூடும் என்ற நிலை இருந்தது.

பாக்கிஸ்தானின் இஸ்லாமிய அடிப்படவாத வலது பீபி மீதான விசாரணை பற்றிய பரந்த குறைகூறலுக்கு விடையிறுக்கும் வகையில் சமயத்தை இழிவுபடுத்துவோருக்கு தண்டனை அளிக்கும் சட்டங்களுக்கு ஆதரவாகப் போராட்டம் ஒன்றை நடத்தியது. இப்பிற்போக்குத்தனச் சட்டங்கள் 1980 களில் அமெரிக்க ஆதரவு பெற்ற இழிந்த ஜியாவுல் ஹக்கின் ஆட்சியில் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்டன; நெருக்கடியில் ஆழ்ந்துள்ள PPP அரசாங்கம் சமீபத்தில் இச்சட்டங்களைக் கைவிடுவது ஒருபுறம் இருக்க, அவற்றைத் திருத்தும் நோக்கம் கூட தனக்கு இல்லை என்று அறிவித்துள்ளது.

டசீரைக் கொலைசெய்தவர் பிறர் தொடர்பின்றிச் செயல்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பாக்கிஸ்தானின் உள்துறை மந்திரி ரெஹ்மான் மாலிக் உறுதிமொழி அளித்தார்.

பாக்கிஸ்தானில் அரசியல் படுகொலைகள் என்ற நீண்ட, இருண்ட வரலாறு உள்ளது; பாக்கிஸ்தானிய முதலாளித்துவ அரச அமைப்புமுறையின் நீடித்த நெருக்கடி மற்றும் அதிகாரத்திற்கான போராட்டம் நாட்டின் இனவழியில் பிரிந்துள்ள அரசியல் உயரடுக்கின் பல பிரிவுகளுக்கு இடையே நடைபெறுவதுதான் காரணம்; இப்பிரிவுகளோ தன்னுடைய சொத்துக்களையும் சலுகைகளையும் காப்பாற்ற வேண்டும், நாட்டின் நிலப்பகுதி இறையாண்மை காக்கப்பட வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் செல்வாக்கைப் பெறுவதற்காக பென்டகனின் எடுபடிகளாகச் செயல்படவேண்டும் என்பவற்றைக் காக்க பாக்கிஸ்தானிய ஆளும் வர்க்கம் நம்பியுள்ள மிகையான இராணுவப்-பாதுகாப்பு கருவியின் பிரிவுகளுடனும் போராட்டங்களைக் கொண்டுள்ளன.

கிட்டத்தட்டச் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜர்தாரியின் மனைவியும் PPP இன்வாழ்நாள் தலைவருமானபெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் W புஷ்ஷின் நிர்வாகம் தலையீடு செய்து கொண்டுவந்திருந்த ஒரு உடன்பாட்டின்கீழ் அவர் பாக்கிஸ்தானுக்கு திரும்பி வந்திருந்தார்; அந்த உடன்பாட்டின்படி அவர் சர்வாதிகாரி முஷரப்புடன் இணைந்து செயலாற்ற ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் இராணுவம், அரசியல் ஆகிய நடைமுறைகளின் சில பிரிவுகள் இந்த ஏற்பாட்டை எதிர்த்திருந்தன.

பெனாசீர் பூட்டோவின் படுகொலைக்குக் காரணம் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதப் போராளிதான் என்று முஷரப் ஆட்சி உடனடியாகக் குற்றம் சாட்டியது; ஆனால் சமீபத்தில்  .நா. விசாரணை ஒன்று இந்த விளக்கத்தை நிராகரித்து, படுகொலை பாக்கிஸ்தானிய நடைமுறைக்குள் இருந்துதான் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற குறிப்பைக் காட்டியுள்ளது.

பூட்டோவின் படுகொலை இராணுவ ஆட்சி எந்த அளவிற்குத் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் நாடு முழுவதும் கலக அலையை ஏற்படுத்தியது; எந்த அளவிற்கு மக்கள் சீற்றம், சரியும் பொருளாதார நிலைமைகள், இராணுவ அரசியல் பொருளாதார சக்திகளின் தன்மை மற்றும் ஆப்கானியப் போரில் இஸ்லாமாபாத்தின் பங்கு ஆகியவை பற்றியும் இருந்தது என்பதையும் காட்டின. பெப்ருவரி 2008 தேர்தல்களில் PPP அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது; PML (N) வலுவான இரண்டாம் அதிக இடங்களைப்பெற்ற கட்சியாக வெளிப்பட்டது; இதன் தலைவர் ஷரிப் தன்னை முஷரப்பினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என்று சித்தரித்துக் கொண்டார்; ஏனெனில் இவரைப் பிரதமர் பதவியில் இருந்து அகற்றிவிட்டுத்தான் ஜெனரல் அதிகாரத்திற்கு வந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கும் சற்றே குறைந்த காலத்தில் PPP, குறிப்பாக ஜர்தாரி, பரந்த மக்கள் வெறுப்பையும் எதிர்ப்பையும் எதிர்கொள்கிறார். பாக்கிஸ்தானிய பொருளாதாரம் உலகப் பொருளாதார நெருக்கடியினால் அதிர்விற்கு உட்பட்டுள்ளது. உணவு, விசை ஆகியவற்றில் விலைகள் சடுதில் உயர்ந்துள்ளது மக்களின் பெரும் பிரிவினரை இன்னும் ஆழ்ந்த வறுமையில் தள்ளியுள்ளது. தொடர்ச்சியான, நீடித்த விசை வெட்டுக்கள் அன்றாட வாழ்வைத் தடைக்கு உட்படுத்துவதுடன், தொழில்துறை உற்பத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சிந்து நதி வெள்ளச் சேதம் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகியும் கூட மில்லியன் கணக்கான மக்கள் உறைவிடம் இன்று உள்ளனர்; இன்னும் பல அவசரகால உதவிகளும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன.

PPP தலைமையிலான அரசாங்கத்தின்கீழ் இஸ்லாமாபாத் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கா நடத்தும் போருக்கு தன் ஆதரவை தீவிரப்படுத்தியுள்ளது. பல முறையும் பாக்கிஸ்தானிய இராணுவம் பாரிய எழுச்சி எதிர் நடவடிக்கைகளை நாட்டின் வடமேற்குப் பகுதியில் நடத்தியுள்ளது; இதில் Strafe குண்டுவீச்சு, உடனடித் தூக்கிலிடுதல், ஆட்கள் காணாமற் போய்விடுதல், குடியேற்ற வகையிலான அனைவருக்கும் தண்டனை ஆகியவை அடங்கும். இவற்றின் விளைவாக பல மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளையும் கிராமங்களையும் விட்டு நீங்க நேர்ந்துள்ளது; பலர் திரும்பி வருவதில்லை.

தற்போதைய அராசங்க நெருக்கடி சமீபத்திய IMF ஆணைக்குட்பட்ட சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவது பற்றிய நீண்ட, பிளவுற்ற விவாதங்கள் என்னும் பின்னணியில் வந்துள்ளது. பாக்கிஸ்தானுக்குக் கொடுக்கப்படும் $11.3 பில்லியன் கடனில் கடைசி இரு தவணைகள் அளிப்பதின் நிபந்தனையாக IMF இஸ்லாமாபாத் அனைத்து விசை விலைக்கான உதவித் தொகைகளையும் நிறுத்த வேண்டும், சமூக மற்றும் வளர்ச்சிச் செலவுகளை மீண்டும் குறைத்து நாட்டின் பற்றாக்குறையை நிகர உற்பத்தி விகிதத்தில் 4.7 சதவிகத்தமாகச் செய்ய வேண்டும், ஒரு தற்காலிக 10 சதவிகித வெள்ள நிவாரண வரி ஆண்டிற்கு 300,000 ரூபாய்கள் அதற்கும் மேல்  ($3,500) வருமானம் உள்ளவர்கள் மீது  விதிக்க வேண்டும், தற்பொழுதுள்ள விற்பனைவரிக்குப் பதிலாக 15 சதவிகிதம் சீர்திருத்தப்பட்ட மத்திய விற்பனை வரி (Reformed General Sales Tax) விதிக்கப்பட வேண்டும் என்பவற்றைக் கூறியுள்ளது; கடைசியில் கூறப்பட்டுள்ள RGST என்பது அரசாங்கத்திற்குக் கூடுதல் வருவாயைக் கொடுக்கும், ஏனெனில் அந்த வரி மருத்துகள், உரங்கள், விவசாயக் கருவிகள், சில உணவுப் பொருட்கள் இன்னும் பல இதுவரை வரிவிலக்குப் பெற்றிருந்த அடிப்படைப் பொருட்கள்மீது விதிக்கப்படும்.

பாக்கிஸ்தான் அரசியல் உயரடுக்கின் அனைத்துப் பிரிவுகளும் PPP, PML (N) ல் இருந்து MQM வரை முன்பு IMF ன் சிக்கனத் திட்டங்களைச் செயல்படுத்தி, தனியார்மயமாக்குதல் இன்னும் பல பிற்போக்குத்தனசந்தை சீர்திருத்தங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளன. அதேபோல் இவை அனைத்தும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுக்கின்றன; சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய அமெரிக்கத் தூதரகத் தகவல் தந்திகள் நிரூபித்துள்ளபடி அவை பாக்கிஸ்தானுக்குள் பிரிடேட்டர் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கும் ஆதரவைக் கொடுத்துள்ளதும் இதில் அடங்கும்.

ஆனால் அரசாங்கத்திற்கு எதிராகப் பெருகியுள்ள மக்கள் சீற்றத்தைப் பற்றி அவற்றிற்குத் தெரியும் என்பதுடன் அதற்கு அஞ்சவும் செய்கின்றனர். சமீபத்திய மாதங்கள் முக்கிய அரசியல் வாதிகளிடம் இருந்து புதிய வனப்புரைகள் வெளிவருவதைத்தான் கண்டுள்ளனஇதில் பாக்கிஸ்தானில் ஒருபுரட்சிதேவை என்று பலமுறையும் வலியுறுத்தப்பட்டுள்ளதும் அடங்கும்; இதைத்தவிர கடுமையான அரசியல் உட்பூசல்கள் உள்ளன; இவற்றுள் பல தேசிய -இனவழி-வகுப்புவாத அழுத்தங்களைத் தூண்டிவிட்டு அவற்றைச் சுரண்டும் தனைமையைத்தான் கொண்டுள்ளன.

முக்கிய அடிப்படைக் கட்டுமானத்தைக் கொடுக்க முடியாமல், அடிப்படை நிவாரணங்களையும் பாக்கிஸ்தானிய முதலாளித்துவ அரசாங்கம் கொடுப்பதில் முழுத் தோல்வி அடைந்ததை அப்பட்டமான நிரூபிக்க வாய்ப்புக் கொடுத்த வெள்ளங்களை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானியத் தேசிய சட்டமன்றம் ஒரு சிறப்புக் கூட்டத் தொடரில் ஒருமனதாக ஜனநாயகத்தை காத்தலுக்கான உறுதிமொழி, “முற்போக்குத்தன நிலச் சீர்திருத்தம்தொடக்கப்படுதல், பண்ணை அடிமை முறை அகற்றப்படல், ஊழல்கள் களையப்படுதல் ஆகியவை நிறைவேற்றப்படும் என்று தீர்மானங்களை இயற்றியது.

இவை அச்சடிக்கப்பட்டுள்ள காகிதத்தின் மதிப்பைக் கூட இத்தீர்மானங்கள் கொண்டிருக்கவில்லை என்பதைக் கூறத் தேவையில்லை. அவற்றிற்கு வாக்களித்தவர்கள் தொடர்ந்து பல இராணுவச் சர்வாதிகாரிகளுக்கு உடந்தையாக இருந்தனர், அவர்களே பெரும் நிலச்சுவான்தார்கள் அல்லது அப்பிரிவின் நகர்ப்புற வக்கீல்கள் மற்றும் வணிகப்பங்காளிகள் ஆவர். ஆனால் அத்தகைய அடையாளத் தீர்மானங்கள் தேவை என்று பாக்கிஸ்தானின் அரசியல் வாதிகள் உணர்வது நாட்டின் தீவிர சமூக, அரசியல் நெருக்கடிக்கு உதாரணமாகும்.

சர்வாதிகாரி முஷரப்பிற்கு ஆதரவு கொடுத்த வலதுசாரி கராச்சித் தளத்தைக் கொண்ட இனவழிக் கட்சியான MQM ஆளும் கூட்டணியில் இருந்து தான் விலகியுள்ளதை நியாயப்படுத்தும் வகையில், ஜனவரி 1 முதல் பெட்ரோலியப் பொருட்களின் விலையை அரசாங்கம் 9% உயர்த்துவதற்கு தான் ஆதரவைக் கொடுப்பதற்கில்லை என்று கூறியுள்ளது.

முன்னதாக MQM, புதுப்பிக்கப்பட்ட மத்திய விற்பனை வரி (RGST) ஐயும் எதிர்த்து இதற்குப் பதிலாக  விவசாய வருமானத்தின்மீது வரிவிதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டது. RGST ஐ எதிர்க்கையில் MQM, PML(N) இரண்டுமே புதிய வரி பொருளாதாரச் செயல்களை அழுத்தும், செலவுகள் கூடும் என்னும் வணிகத்தின் பல பிரிவுகளுடைய அச்சங்களுக்குத்தான் குரல் கொடுத்துள்ளன.

ஆனால் MQM, அரசாங்கத்தில் இருந்து விலகுவதோடு சிந்து மாநிலத்திலும் நிர்வாகத்தில் PPP உடன் கூட்டணி கொண்டிருப்பதில் இருந்து விலகப் போவதாக அச்சுறுத்தியிருக்கையில், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தான் கொண்டுவராது, அத்தகைய தீர்மானத்திற்கு ஆதரவளித்து வாக்கும் அளிக்காது என்றும் குறிப்புக் காட்டியுள்ளது.

PML(N), அரசாங்க நெருக்கடி பற்றித் தெளிவற்ற நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளது. செவ்வாய் பிற்பகல் ஷரிப் தான் அரசாங்கத்திற்கு 72 மணி நேரக்கெடு கொடுத்துள்ளதாகக் கூறினார். கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் புடை சூழ நின்ற அவர் அரசாங்கம் அதன் நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் என்று விரும்பினால், அது ஒரு இடைக்காலமக்கள்செயற்பட்டியலுக்கு உடன்பட வேண்டும், அதில் சமீபத்திய பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது திரும்பப் பெறப்பட வேண்டும், எரிவாயு மற்றும் மின் விசை அளிப்புக்களில் உள்ள குறைகள் நீக்கப்பட வேண்டும், விசைக் கட்டுப்பாடு வேண்டும், பிற விலைகள் உயர்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அரசாங்கச் செலவில் பாரிய 30% குறைப்பு வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கியுள்ளன.

இச்செயற்பட்டியலுக்கு அரசாங்கம் இணங்காவிட்டால், தான்எதிர்க்கட்சிகளை அழைத்து அவற்றைச் செயல்படுத்த இருப்பதாகஷரிப் கூறினார். ஆனால் பின்னர் PML (N) அதிகாரிகள் ஷரிப் அரசாங்கம் தோற்கடிக்கப்பட பங்குபெறத் தயாரில்லை என்று குறிப்புக் காட்டினர்; PML(N)  தலைமையில் பஞ்சாபை ஆளும் கூட்டணியில் இருந்து PPP  வெளியேற்றப்படத்தான் இது கூறப்பட்டுள்ளது என்றனர். PML (N) தலைவர் ராசா ஜாபருல் ஹக், ராய்ட்டர்ஸிடம் இந்த நேரத்தில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம்நாடு முழுவதற்கும் சேதம் விளைவிக்கும்என்றார்.

தன்னுடைய நலனை விரிவாக்கவும், அரசாங்கத்தைத் தோற்கடித்து புதிய தேர்தல்களுக்கு வகை செய்வதில் எதிர் கட்சிகள் காட்டும் தயக்கத்தில் முக்கிய காரணியாக இருப்பது, பாக்கிஸ்தானை இன்னும் ஆழ்ந்த அரசியில் நெருக்கடியில் தள்ளக்கூடாது என அமெரிக்கா கொடுக்கும் அழுத்தந்தான்.

ஆனால் PML (N) இன்னும் மற்ற எதிர்க்கட்சிகளும் இக்கட்டத்தில் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கும் அஞ்சுகின்றன; ஏனெனில் IMFன் சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தும் பொறுப்பை எடுத்துக் கொள்ள அவை விரும்பவில்லை; இதேபோல்உள்நாட்டுத்திட்ட நடவடிக்கைகள், பாக்கிஸ்தானின் நிதிய, பொருளாதார நெருக்கடியை நாட்டின் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் மீது சுமத்துபவற்றை நோக்கம் கொண்டவற்றையும் செயல்படுத்த விரும்பவில்லை.

பொருளாதாரம் அதிர்ச்சியில் இருக்கையில், பொதுமக்கள் அதிருப்தி பணவீக்கம் பற்றிப் பெருகி மோசமாகியிருக்கையில், அமெரிக்கா பயங்கரவாத த்திற்கு எதிரான அதன் போரில் விரிவாக்கமடைந்த ஒத்துழைப்பை நாடுகிறது [அதாவது, ஆப்கானியப் போருக்கு]; எந்த அரசியல் கட்சியும் ஒரு மாற்றீட்டு அரசாங்கத்தை இந்நிலையில் அமைக்க ஆர்வம் காட்டவில்லைஎன்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பாக்கிஸ்தானின் இராணுவத்தைப் பொறுத்தவரைதற்போதைய அரசியல் நிலையை அது ஏற்கிறது; ஏனெனில் அதன் மரபார்ந்த PPP உடனான விரோதப் போக்குபல தசாப்தங்களாக இராணுவ ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்புடன் அக்கட்சி ஆதரவு காட்டியுள்ளது, இஸ்லாமிய சோசலிசக் கட்சி போலஇன்னும் நீடித்துத்தான் உள்ளது.

ஏனெனில் அமெரிக்க-பாக்கிஸ்தான் உறவிற்கு உறுதியானது என்று வாஷிங்டனின் தொடர்ந்த ஆதரவைக் கொண்டிருப்பதாலும், PPP தலைமையிலான அரசாங்கத்தின் நலிந்த தன்மை, உடந்தை ஆகியவற்றினாலும், பாக்கிஸ்தானிய இராணுவம் இன்னும் கூடுதலான அதிகாரத்தை கொள்ள வைக்கும் .

இராணுவ மற்றும் சிவிலிய ஆட்சிக்கு இடையே உள்ள வேறுபாடு வெறும் தோற்ற வேறுபாடுதான்; ஏன்னில் PPP தலைமையிலான அரசாங்கம் போர்ச் செயற்பட்டியலைத்தான் கொண்டுள்ளது, முஷரப் போன்றே சந்தைச் சீர்திருத்தங்களையும் தொடர்கிறது. அரசாங்கம், இராணுவம் ஆகியவற்றின் ஒரு அதிகாரி கூட, முஷரப் சர்வாதிகாரத்தை நீட்டிப்பதில் அவருடைய பங்கிற்காக, குற்ற நடவடிக்கை எதிர்கொள்வது ஒருபுறம் இருக்க, எவ்வித தண்டனையையும் பெறவில்லை. அமெரிக்க-பாக்கிஸ்தானிய இராணுவ அச்சு பாக்கிஸ்தானிய மக்களின் விருப்பங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

பாக்கிஸ்தானின் அனைத்துப் பிரிவுகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சோசலிசப் புரட்சி ஒன்றின்மூலம்தான் பாக்கிஸ்தான் மக்களுடைய ஜனநாயக, சமூக அபிலாசைகள் அடையப்பட முடியும்.