WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Obama’s
reign of terror in Afghanistan
ஆப்கானிஸ்தானில் ஒபாமா ஆளுமையின்
பயங்கரம்
James Cogan
4 January 2011
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லையோர பிரதேசங்களில் நடந்து வரும் மோதலின்
இரத்தந்தோய்ந்த
தற்போதைய
ஒன்பதாம் ஆண்டாக
2010
இருந்தது.
ஜெனரல் டேவிட் பேட்ரியாஸ் ஆணையின்கீழ் பிரமாண்டமாக விரிவாக்கப்பட்ட
அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள்,
பல்வேறு இன பாஸ்தூன்களுக்கு எதிராகவும்,
தாலிபானோடு தொடர்பு கொண்ட தங்களின் நாட்டில் அன்னிய நாட்டு
தாக்குதலை விரும்பாத போராளிகள் இயக்கங்களுக்கு எதிராகவும் நிர்மூலமாக்கும்
நடவடிக்கை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற இற்றுப்போன வாய்ஜாலங்களால் நியாயப்படுத்திக்
கொண்டு நடத்தப்பட்டு வரும் இந்த ஆக்கிரமிப்பானது,
உண்மையில் ஒரு நவ-காலனித்துவ
மற்றும் குற்றம்சார்ந்த நடவடிக்கையாகும்.
ஆப்கானிஸ்தானின் எதிர்ப்பை நசுக்கி,
எண்ணெய் மற்றும் எரிவாயு வளம்மிக்க மத்திய ஆசிய பிராந்தியத்தில்
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு நாடாக அதைக் கொண்டு வருவது தான் அதன்
உள்நோக்கம்.
ஆப்கானிஸ்தானிலும்,
அதைச்சுற்றியுள்ள நாடுகளிலும்,
அமெரிக்காவிற்கு போட்டியாளர்களாக உள்ள சீனா,
ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிராக,
அப்பிராந்தியதின் மீதும் மற்றும் இலாபத்திற்கான ஆதாரவளங்களின்
மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரு புவி-அரசியல்
போராட்டத்தின் ஒரு பாகமாக அது உள்ளது.
“ஆப்-பாக்
யுத்தம்”
என்றழைக்கப்படுவதை,
ஒபாமா,
அவருடைய நிர்வாகத்தின் வெளிநாட்டு கொள்கையின் ஓர் அஸ்திவாரக்கல்லாக
ஆக்கி கொண்டிருந்தார்.
ஜனவரி
2009இல்
பதவியில் ஏறியது முதல்,
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கைகள்
100,000த்திற்கு
நெருக்கமாக இரட்டிப்பாக்கப்பட்டிருக்கின்றன.
பல்வேறு நேட்டோ நாடுகளாலும் கூடுதலாக ஆயிரக்கணக்கான துருப்புகள்
அனுப்பப்பட்டுள்ளன.
இது அமெரிக்க தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப்படையின்
(International Security Assistance Force - ISAF)
எண்ணிக்கையை
150,000
க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.
இதற்கு மாறாக,
1980
களில் அந்நாட்டை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளின் எண்ணிக்கை
ஒருபோதும்
110,000ஐ
தாண்டியிருக்கவில்லை.
யுத்தத்தின்
தீவிரம்
2010இல்
முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வன்முறைக்கும்,
காட்டுமிராண்டித்தனத்திற்கும் இட்டுச் சென்றுள்ளது.
தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களின் இரும்புப்பிடிக்கு
எதிராக பெரும்
தாக்குதல்களை நடத்த உதவியாக,
ஆயிரக்கணக்கான அமெரிக்க கடற்படைக் கப்பல்களும் அனுப்பப்பட்டன.
போராளிகளின் மறைவிட முகாம்களை அழிப்பது என்ற போர்வையில்,
கண்டஹார் மாகாண பகுதிகளின் ஒட்டுமொத்த கிராமங்ககளும் தரைமட்டமாக்கப்பட்டன. சுமார்
500,000
மக்களைக் கொண்ட கண்டஹார் நகரே கூட,
இடிந்து நாசமான சுவர்களின் குவியலாகவும் மற்றும் தடைமேடைகளாகவும்
மாற்றப்பட்டது.
அங்கே குடியிருப்போர் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கும்,
தேடல்களுக்கும்,
பயோமெட்ரிக் கண்காணிப்பிற்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.
பெரும்
தொந்தரவான நடவடிக்கைகளுக்கு ஊடாக,
பெரிதும் தீவிரப்படுத்தப்பட்ட அமெரிக்க விமான தாக்குதல்களும்
அங்கே நடந்தன.
முந்தைய ஆண்டில்
640ஆக
இருந்ததுடன் ஒப்பிட்டால், அக்டோபரில்
1,000த்திற்கும் மேலான விமானங்கள்
பறக்கவிடப்பட்டன.
சட்டவிரோத போராளிகளின் வெவ்வேறு குழுவின் மீது விமானத்தாக்குதல்
நடத்துவதைப் பாராட்டி,
ISAF
சிலநாட்களுக்கு ஒருமுறை ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
சட்டவிரோத
போராளிகளைப் படுகொலை செய்யும் அல்லது கைது செய்யும் பணியில்
ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட சிறப்பு மரணப்படைகளின்
(death squad)
நடவடிக்கைகள் ஒபாமாவின்கீழ்
600
சதவீதமாக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் மத்திய காலத்திற்கும்,
டிசம்பர் மத்திய காலத்திற்கும் இடையில் மட்டும்,
இதுபோன்ற படைகள்
1,785
நடவடிக்கைகளை நடத்தியதாகவும்;
880 “போராளி
தலைவர்களை"
கொன்றது அல்லது சிறை பிடித்ததாகவும்;
அதுமட்டுமின்றி,
384
சாமானிய போராளிகளைக் கொன்றதாகவும்;
மேலும்
2,361
சட்டவிரோத போராளிகளைச் சிறை பிடித்ததாகவும் அமெரிக்க இராணுவம்
குறிப்பிட்டது.
சிறப்பு
படையின் இந்தளவிற்கான நடவடிக்கைகள்,
கொடூரத்தின் ஆளுமையைக் குறித்த புள்ளிவிபரங்களை மட்டும் தான்
வழங்குகின்றன.
ஆப்கானிஸ்தானில் போராளிகள் மறைந்திருக்கும் பகுதிகளில் வாழும்
கிராமவாசிகள்,
தங்களின் குடும்பம் அடுத்து இலக்காகிவிடுமோ என்ற அச்சத்தில்
தினந்தோறும் வாழ்ந்து வருகின்றனர்.
நள்ளிரவில் வீடுகள் நொருக்கப்படுகின்றன;
மகளிரும் குழந்தைகளும் துப்பாக்கிமுனையில் அகற்றப்பட்டு,
ஆண்களின் கண்கள் மறைக்கப்பட்டு,
கைகால்கள் கட்டப்பட்டு வெளியே எடுத்துச் செல்லப்படுகின்றனர்.
ஏதாவது எதிர்ப்பு காட்டினால்,
மரணத்தாக்குதல் பயன்படுத்தப்படுகிறது.
சிறை
பிடிக்கப்படும் ஆண்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
பொதுவாக இவர்கள் கைப்பாவை ஆப்கான் அரசாங்கத்தின் அழுக்கடைந்த,
கூட்டத்தால் நிரம்பி வழியும் சிறையில் அடைத்து வைக்க அமெரிக்க
அதிகாரிகளால் ஒப்படைக்கப்படுகின்றனர்.
சிறைச்சாலைகளை நடத்தி வரும் பாதுகாப்பிற்கான தேசிய இயக்ககம்
(NDS)
கைதிகளைச் சித்திரவதைப்படுத்துவதற்காகவும்,
மோசமாக கையாள்வதற்காகவும் வெகுவாக குற்றஞ்சாட்டப்படு வருகிறது.
NDSஇல்
கைதிகளைக் கையாளும் அமெரிக்க முறை
"குறிப்பாக
சர்வதேச சட்ட மீறலாக இருப்பதாக"
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின் ஆசிய பசிபிக் இயக்குனர்,
சாம் ஜரீப் கடந்த மாதம் ஆஸ்திரேலிய பிராட்கேஸ்டிங்
கார்ப்பரேஷனுக்குத் தெரிவித்தார்.
ஆப்கான்
மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு இடையில்,
ISAF
மற்றும் ஆப்கான் அரசாங்கத்திற்கு எதிரான போராளிகளின் தாக்குதல்
இலக்குகளும்,
கடந்த ஆண்டைவிட
66
சதவீதம் அதிகரித்தது.
போராளிகளின் நடவடிக்கை பல மாவட்டங்களில் அதிகரித்து வருவதுடன்,
புவியியல்ரீதியாகவும் எதிர்ப்பு பரவலாகி உள்ளது.
ஒபாமாவின்
தீவிரத்தால்,
அமெரிக்கா மற்றும்
NATO
துருப்புகளும் யுத்தத்தில் பெரும் எண்ணிக்கையில் காயப்பட்டன.
2008இல்
295
நபர்கள் மற்றும்
2009இல்
521
நபர்கள் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில்,
2010இல்
மொத்தம்
711
நபர்கள்---499
அமெரிக்கர்கள்,
103
பிரிட்டிஷ் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு பங்களிப்பளிக்கும் ஏனைய
நாடுகளின்
109
துருப்புகள்—உயிரிழந்தனர்.
சாலையோர குண்டுவெடிப்புகளில் படுகாயமடைந்த டொஜன் கணக்கானவர்கள்
உட்பட,
சுமார்
3,000
நபர்கள் காயமடைந்தனர்.
2010இன்
முதல்
10
மாதங்களில்,
ஆப்கானிய குடிமக்களின் சாவு
20
சதவீதம் உயர்ந்து,
5,500க்கு
நெருக்கமாக உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது.
ISAF
அல்லது ஆப்கான் அரசாங்க படைகளைக் குறிவைத்து புதைக்கப்பட்ட
போராளிகளின் சாலையோர குண்டுகள் வெடித்ததன் விளைவாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள்
தங்களின் உயிரை இழந்தனர்.
வருகிற
ஆண்டுகள்,
2010இல்
விரவிய இரத்தத்தை விட குறைவாக இருக்காத வகையில் வடிவத்தை எடுக்கின்றன.
2011
மத்தியில் கணிசமான எண்ணிக்கையில் அமெரிக்க துருப்புகளைத் திரும்ப
பெறுவது மீதான எவ்வித பேச்சுக்களுக்கும் ஒபாமா வெள்ளைமாளிகை செவிகொடுக்க
மறுத்துள்ளது.
இந்நிலையில்,
அந்த நாட்டிலிருந்து அனைத்து பாதுகாப்புகளையும் திரும்ப பெற,
ஆக்கிரமிப்புக்கு ஆதரவான ஆப்கான் இராணுவத்திற்கும்,
பொலிஸிற்கும்
2014
இறுதிக்குள் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நேட்டோ நாள்
குறித்துள்ளது.
இதுபோன்றவொரு முன்னோக்கு நடந்தாலும் கூட,
காலம்வரம்பில்லாமல் ஆப்கானிஸ்தானில் ஒரு கணிசமான உள்நாட்டு படையைத்
தங்க வைப்பதே அமெரிக்க இராணுவத்தின் விருப்பமாக உள்ளது.
வடமேற்கு
பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நேரடியாக தரைவழியாக தலையிடுவதற்கான வாய்ப்பும் நிறைய
உருவாகியுள்ளது.
ஒபாமவின்கீழ்,
CIAவும்,
இராணுவமும் அந்நாட்டின் பழங்குடி அமைப்புகளில் உள்ள பழங்குடி
போராளிகளுக்கு எதிராக படிப்படியாக அதன் சூழ்ச்சியையும்,
சட்டவிரோத பிரச்சாரங்களையும் அதிகரித்துள்ளன.
மத்திய அரசு நிர்வாகத்தின்கீழ் இருக்கும் பழங்குடி பகுதிகளில்
நடத்தப்பட்ட ஆளில்லாத வான்வழி தாக்குதல்களின் எண்ணிக்கை
2009ஐ
விட இரண்டு மடங்கிற்கும் மேலாக,
குறைந்தபட்சம்
134
ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக,
Conflict Management Centreஆல்
வெளியிடப்பட்ட ஓர் ஆண்டு இறுதியறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அந்த அறிக்கை குறிப்பிட்டது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆளில்லா வான்வழி
தாக்குதல்களால்
2,043
மக்கள்,
இதில் பெரும்பாலானவர்கள் வெகுஜன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்;
2010இல்
மட்டும்
929
நபர்கள் காயமடைந்திருப்பதையும் இதனோடு சேர்த்து கொள்ளலாம்;
இவ்வகையில் அந்த ஆண்டு மிகவும் அதிகளவில் இரத்தஞ்சிந்திய ஆண்டாக
இருந்தது.
அந்த தாக்குதல்கள் ஒரு
"படுகொலை
செய்வதற்கான நடவடிக்கையாக தொடங்கி,
பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக திரும்புவதாக"
அந்த அறிக்கை குறிப்பிட்டது.
புத்தாண்டின் முதல் நாளிலேயே வடக்கு வர்ஜிஸ்தானில் நடத்தப்பட்ட மூன்று தொடர்ச்சியான
ஆளில்லா வான்வழி தாக்குதல்கள் குறைந்தபட்சம்
19
மக்களைக் கொன்றது.
2011
இன்னும் மோசமான அளவிற்கு மரண எண்ணிக்கையைச் சந்திக்கும் என்பதற்கு
அதுவொரு அறிகுறியாக இருந்தது.
பெருந்திரளான மக்களைக் கொன்று குவிப்பதால் ஏற்பட்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய
வெறுப்பானது,
சந்தேகத்திற்கு இடமின்றி,
போராளிகளின் குழுக்கள் பொருள்களைப் பெறுவதற்கும்,
போராளிகளை நியமிப்பதற்கும் பழங்குடி அமைப்புகளைப் பாதுகாப்பு
புகலிடங்களாக பயன்படுத்துவதற்கான ஒரு காரணியாக இருக்கிறது.
வேட்டையாடும் தாக்குதல்களால் கொல்லப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட
பெரும்பான்மையான மக்கள் போராளிகள் கிடையாது,
மாறாக வெகுஜன மக்கள்.
வடமேற்கு பாகிஸ்தானில் குறைந்தபட்சம்
1,300
ஆண்கள்,
பெண்கள் மற்றும் குழந்தைகளைப் படுகொலை செய்ததில்,
ஒபாமா நிர்வாகம் தலைமைதாங்கி வருவதாக பாகிஸ்தானிய வட்டாரங்கள்
கணிக்கின்றன.
ஆப்கான்
யுத்தத்தில் நடத்தப்பட்ட பல ஏனைய குற்றங்களுக்கு இடையில்,
சட்டவிரோத படுகொலைளும் குடிமக்களின் வீடுகள்,
வாகனங்களைக் குறிவைப்பதென்பதும் ஜெனீவா உடன்படிக்கைக்கு
எதிரானதாகும்.
எவ்வாறிருப்பினும்,
தண்டனையிலிருந்த விதிவிலக்காக இருந்து தொடர முடியும் என்று ஒபாமா
நிர்வாகம் உணர்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்திய குற்றங்களில் பங்கேற்றதன் மூலமாகவும்,
துருப்புகளை அளிப்பதன் மூலமாகவும் ஐரோப்பிய சக்திகளும்,
ஆஸ்திரேலியாவும் யுத்தத்தில் உடந்தையாக உள்ளன.
தீர்மானங்கள் மூலமாக ஆக்கிரமிப்பை அனுமதித்தும்,
ஜனாதிபதி ஹமீத் கர்ஜாயின் முற்றிலும் ஊழல்நிறைந்த ஆப்கான்
அரசாங்கத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்ததன் மூலமாகவும் ஐக்கிய நாடுகள் சபையும்
அதேஅளவிற்கு இதில் உடந்தையாகி உள்ளது.
இது எல்லாவற்றிற்கும் இடையில்,
அரசாங்கங்கள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வரவு-செலவு
திட்டங்களில் மக்கள்விரோத வெட்டுக்களைத் திணித்து வருகின்ற நிலையில்,
பயங்கரவாத அச்சுறுத்தல்களின் வெளிப்படையான எச்சரிக்கைகள் ஜனநாயக
உரிமைகளைக் கிழித்தெறியவும்,
அரசு ஒடுக்குமுறைக்கான துருப்புகளைக் கட்டியெழுப்பவும்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
யுத்தத்தை
நியாயப்படுத்தி குரல் கொடுப்பதிலும்,
அதன் குற்றங்களை மறைப்பதிலும் பரந்துபட்ட சர்வதேச ஊடகங்கள் ஒரு
கூலிவேலை பாத்திரத்தை வகிக்கின்றன.
ஜூலையில்,
விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட பத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ
ஆவணங்கள் மரணப்படையின்
(death squad)
கொலைகார
பாத்திரத்தையும்,
ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் நடந்து வரும் படுகொலை
நடவடிக்கைகளையும் வெளியிட்டிருந்த போதிலும் கூட,
அவை ஒருசில நாட்களில் தட்டிக்கழிக்கப்பட்டன.
அமெரிக்காவிலும்,
ஐரோப்பாவிலும்,
சர்வதேச அளவிலும் நடத்தப்படும் ஒவ்வொரு கருத்துக்கணிப்பும்
ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு எதிராக அதிகரித்துவரும் எதிர்ப்பை
எடுத்துக்காட்டுகின்றன.
ஆனால்,
அதற்கடுத்தபடியாக அவை எந்த அரசியல் வெளிப்பாடும் காணவில்லை.
2008
அமெரிக்க தேர்தல்களில் பராக் ஒபாமாவை
"யுத்த
எதிர்ப்பு"
வேட்பாளராக ஆதரித்த தாராளவாத மற்றும் போலி-இடது
கட்சிகளும்,
அமைப்புகளும் ஆக்கிரமிப்பை ஒன்று வெளிப்படையாக ஆதரிக்கின்றன அல்லது
வெள்ளை மாளிகையிலிருந்து புஷ்ஷால் கொண்டு வரப்பட்ட ஏகாதிபத்திய திட்டத்தைத் தொடரும்
ஒபாமாவின் முகத்திற்கு முன்னால் மௌனமாக நிற்கின்றன.
அமெரிக்காவிலும்,
ஐரோப்பாவிலும்,
ஆக்கிரப்பில் பங்கு வகிக்கும் ஏனைய நாடுகளிலும் உள்ள தொழிலாளர்
வர்க்கம் மட்டும் தான் ஆப்கானிய யுத்தத்திற்கு எதிராக ஒன்று திரளக்கூடிய ஒரே சமூக
சக்தியாக உள்ளது.
இன்னும் பல ஆண்டுகள் கொடூரம் தொடரும் என்ற முன்னோக்கிற்கு எதிராக,
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்புகள் மற்றும் ஏனைய
வெளிநாட்டு துருப்புகள் அனைத்தும் நிபந்தனையற்ற முறையில் உடனடியாக வெளியேற வேண்டும்,
யுத்த குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
என்று தொழிலாளர்களும்,
மாணவர்களும் வலியுறுத்த வேண்டும்.
|