WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கை
சோ.ச.க.
விக்கிலீக்ஸையும்
ஜூலியன்
அசாஞ்சையும்
பாதுகாக்க
பொதுக்
கூட்டமொன்றை
நடத்தியது
By our correspondents
24 December 2010
Use
this version to print | Send
feedback
விக்கிலீக்ஸையும் அதன் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சையும் பாதுகாத்து
உலக சோசலிச வலைத் தளம் (WSWS)
முன்னெடுத்துள்ள அனைத்துலகப் பிரச்சாரத்தின் பாகமாக, இலங்கையில் சோசலிச சமத்துவக்
கட்சியும் (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள்
(ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் டிசம்பர் 21 அன்று கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை
நடத்தின.
மாணவர்கள், கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும்
தொழில் வல்லுனர்களுமாக பல தரப்பினர் தீவின் பல பகுதிகளில் இருந்து கூட்டத்துக்கு
வருகை தந்திருந்தனர். கூட்டத்துக்கான பிரச்சாரத்தின் பாகமாக,
“ஜூலியன்
அசாஞ்சை விடுதலை செய்! விக்கிலீக்ஸ் மீது கைவைக்காதே!”
என்ற
WSWS
வெளியிட்டிருந்த அறிக்கையின்
ஆயிரக்கணக்கான பிரதிகளை சோ.ச.க.
மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ.
உறுப்பினர்கள்
விநியோகித்திருந்தனர்.
கொழும்பு நகர மண்டப பிரதேசத்தில் ஜயவர்தன மண்டபத்தில் நடந்த இந்தக்
கூட்டத்துக்கு சோ.ச.க.
அரசியல் குழு உறுப்பினர் விலானி
பீரிஸ் தலைமை வகித்ததோடு,
WSWS
அனைத்துலக ஆசிரியர் குழு
உறுப்பினர் கே.
ரட்னாயக்க மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ.
செயலாளர் கபில பெர்ணான்டோவும்
இதில் உரையாற்றினர்.
கூட்டத்தை ஆரம்பித்து வைத்த விலானி பீரிஸ்,
விக்கிலீக்ஸுக்கும் ஜூலியன்
அசாஞ்சுக்கும் எதிரான ஆத்திரமூட்டல்களதும் மற்றும் அண்மையில் ஜனநாயகக் கட்சி
மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளும் கூட்டுத்தாபன ஊடகங்களும் அசாஞ் ஒரு
“பயங்கரவாதி”
என கூறுவதனதும் அரசியல்
முக்கியத்துவத்தை விளக்கினார்.
அமெரிக்க
மற்றும் சர்வதேச ஆளும் வர்க்கங்கள் ஜனநாயக உரிமைகள் பற்றிய மிகவும் அடிப்படை
கருத்துக்களையும் மறுக்கின்றனர் என தெரிவித்தார்.
“ஆளும்
தட்டுக்கள் இத்தகைய கருத்துருக்களை தலைகீழாக மாற்றியுள்ளன. அவர்கள் குறுகிய நிதியக்
குழுவின் நலன்களுக்காக தாம் முன்னெடுக்கும் யுத்தக் குற்றங்கள், மனித உரிமை
மீறல்கள் மற்றும் சதிச் செயல்களை “ஜனநாயகமாக”
வருணிக்கும் அதே வேளை,
விக்கிலீக்ஸால் இத்தகைய ஏகாதிபத்திய அட்டூழியங்கள் அம்பலப்படுத்தப்பட்டவுடன் அதை
‘குற்றவியல்’
மற்றும்
‘சட்டவிரோத’
செயல் என வகைப்படுத்துகின்றன”
என
பீரிஸ் கூறினார்.
2009 முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத
யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றிய
அமெரிக்க அரசாங்கத்தின் போலித்தனமான
“அக்கறையை”
விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளதாக பீரிஸ் கூறினார்.
“புலிகளுக்கு
எதிரான யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின் போது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும்
அவரது சகாக்களாலும் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றி ஒபாமா நிர்வாகம் நன்கு
அறிந்திருந்ததை உறுதிப்படுத்தும், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அனுப்பிய
இரகசிய தகவலை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு
உடந்தையாக இருந்த அமெரிக்கா, அதற்குப் பொறுப்பானவர்களை மூடி மறைக்கவும் உதவி
செய்துள்ளது,”
என
பீரிஸ் கூறினார்.
1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள உலக முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள
மிகப்பெரும் நெருக்கடியின் மத்தியிலேயே விக்கிலீக்ஸின் அம்பலப்படுத்தல்கள்
வெளிவந்துள்ளன என ஐ.எஸ்.எஸ்.ஈ. தலைவர் கபில பெர்ணான்டோ தெரிவித்தார். உலகம்
பூராவும் உள்ள அரசாங்கங்கள், இப்போது அந்த நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கம்,
மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் முதுகில் ஏற்றிவிடும் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளன என அவர் கூறினார்.
நாட்டுக்கு நாடு, ஆட்சியாளர்கள் பொதுக் கல்வியை வெட்டிச் சாய்க்கத்
தொடங்கியுள்ளதோடு அத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்கும் இளைஞர்களையும் ஒடுக்குகின்றன என
அவர் கூறினார். இலங்கையிலும் பிரிட்டனிலும் இலவச கல்விக்காகப் போராடும் மாணவர்களை
அதிகாரிகள் பொலிஸ்-இராணுவ வழிமுறைகளைக் கொண்டு எதிர்த்துத் தாக்குகின்றனர்.
விக்கிலீக்ஸின் கருத்துச் சுதந்திரத்தையும் மாணவர்களின் கல்வி
உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் காப்பதற்கு இடையில் ஒரு இன்றியமையாத
அரசியல் உறவு இருந்துகொண்டுள்ளது என பெர்ணான்டோ தெளிவுபடுத்தினார்.
விக்கிலீக்ஸுக்கு எதிரான மூர்க்கமான பிரச்சாரமானது அடிப்படை உரிமைகள் மீதான ஒரு
தாக்குதல் என்பதை சகல இடங்களிலும் உள்ள மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர்
கூறினார். விக்கிலீக்ஸையும் ஜூலியன் அசாஞ்சையும் பாதுகாக்க
WSWS
முன்னெடுக்கும் பிரச்சாரத்தை
உலகம் பூராவும் உள்ள மாணவர்கள் ஆதரிக்க வேண்டும்.
கே.
ரட்னாயக்க
ஜூலியன் அசாஞ்சுக்கு எதிராக இரு சுவிடிஷ் பெண்களால்
சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகம் என்று சொல்லப்படும் குற்றச்சாட்டு
போலியானது, மற்றும் அது விக்கிலீக்ஸையும் அதன் ஸ்தாபகரையும் மௌனமாக்குவதற்கான
சர்வதேச பிரச்சாரத்தின் பாகமாக சோடிக்கப்பட்டதாகும் என சோ.ச.க. அரசியல் குழு
உறுப்பினர் கே. ரட்னாயக்க தெரிவித்தார்.
“ஒபாமா
நிர்வாகம் மற்றும் அதன் பங்காளிகள் உட்பட அமெரிக்க அரசாங்கத்தால் செய்யப்பட்ட
யுத்தக் குற்றங்கள் மற்றும் இரகசிய இராஜதந்திர வேலைகளை அம்பலப்படுத்தும் ஆவணங்களை
வெளியிட்டது மட்டுமே ஜூலியன் அசாஞ் செய்ததாக சொல்லப்படும்
‘குற்றமாகும்’
என அவர்
தெரிவித்தார்.
விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரே
அம்பலப்படுத்தல், 1917 அக்டோபரில் ரஷ்யப் புரட்சி நடந்த பின்னர், ஏகாதிபத்திய
சக்திகளுக்கு இடையிலான இரகசிய இராஜதந்திர உடன்படிக்கைகளை வெளியிட்டமையே என
ரட்னாயக்க சுட்டிக் காட்டினார். அப்போது லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கியதாவது:
“தமது
பாராளுமன்ற மற்றும் இராஜதந்திர முகவர்களுடன் சேர்ந்து நிதி உடமையாளர்களும்
தொழிற்துறை அதிபர்களும் இரகசியமாக தீட்டிய திட்டங்கள் பற்றிய உண்மையான ஆவணங்களை
ரஷ்ய மக்களும் ஐரோப்பிய மக்களும் உலகம் பூராவும் உள்ள மக்களும் படிக்க வேண்டும்...
இந்த இரகசிய இராஜதந்திரத்தை தூக்கிவீசுவது என்பது, ஒரு நேர்மையான, பொது மக்கள்
சார்ந்த, உண்மையான ஜனநாயகப் பூர்வமான வெளிநாட்டுக் கொள்கைக்கான அடிப்படை
நிபந்தனையாகும். அத்தகைய ஒரு கொள்கையை நடைமுறையில் முன்னெடுப்பதை தனது கடமையாக
சோவியத் அரசாங்கம் கருதுகிறது.”
பேச்சாளர் வரலாற்றில் சமாந்தரமான நிகழ்வுகளை சுட்டிக் காட்டினார்.
“இன்று
முதலாளித்துவம் இன்னுமொரு பொறிவின்கீழ் தடுமாறிக்கொண்டிருப்பதோடு ஒரு புதிய
காலகட்டம் திறந்துவிடப்பட்டுள்ளது. பிரதானமாக அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டு,
பிரதான வல்லரசுகளுக்கு இடையில் பதட்ட நிலைமைகள் ஆழமடைந்து வருகின்ற அதே வேளை,
உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது ஈவிரக்கமற்ற
தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தனது மூலோபாய மற்றும்
பொருளாதார நலன்களைப் பற்றிக்கொள்வதற்காக வாஷிங்டன் எடுக்கும் முயற்சிகள்
உக்கிரமடைந்துவரும் முரண்பாடுகளை மட்டுமே அதிகரிக்கச் செய்கின்றன.
அவை அழிவுகரமான யுத்தங்களுக்கு
மட்டுமே வழிவகுக்கும்.”
இந்த தகவல் ஈரானுக்கு
எதிராகத் தற்போது அமெரிக்கா மேற்கொண்டுவரும் ஆத்திரமூட்டல்களை மட்டுமன்றி,
காஷ்மீரில் இந்திய அரசாங்கம்
மேற்கொள்ளும் திட்டமிட்ட சித்திரவதைகளையும் வாஷிங்டன் மூடி மறைத்துள்ளதை
அம்பலப்படுத்தியுள்ளது,
என ரட்னாயக்க தெரிவித்தார்.
“ஜனாதிபதி ஒபாமாவும் மற்றும்
அவருக்கு முன்னதாக ஜனாதிபதி புஷ்ஷும்,
காஷ்மீரில் நடந்துகொண்டிருப்பதை
அறிந்திருந்த போதிலும் அதனை மூடி மறைத்தனர்.
அதற்குக் காரணம்,
அமெரிக்கா இந்தியாவை சீனாவுக்கு
எதிரான ஒரு மூலோபாய பங்காளியாக வைத்துக்கொள்ள முயற்சிப்பதேயாகும்,”
என அவர் கூறினார்.
விக்கிலீக்ஸ் மீது
அதிகரித்துவரும் தாக்குதல்கள் பற்றி, அடிக்கடி எகாதிபத்திய-விரோத
வாய்வீச்சுக்களை வீசும் ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சி போன்ற
இலங்கையின் போலி-தீவிரவாதிகளிடம் இருந்து எந்தவொரு கருத்தும் வெளிவரவில்லை என்பதை
ரட்னாயக்க குறிப்பிட்டார்.
முதலாளித்துவ இராஜதந்திரம் உண்மையில் எவ்வாறு செயற்படுகின்றது
என்பது பற்றிய அத்தியாவசியமான தகவலை விக்கிலீக்ஸ் உழைக்கும் மக்களுக்கு
வழங்கியுள்ளது என பேச்சாளர் விளக்கினார்.
“அமெரிக்க
மற்றும் ஏனைய ஏகாதிபத்தய சக்திகள் விக்கிலீக்ஸின் அம்பலப்படுத்தல்கள் பற்றி
அச்சமடைந்துள்ளன. எனெனில், அவற்றுக்கு எதிராகப் போராட்டத்துக்கு வரும் தொழிலாள
வர்க்த்தையும் சாதாரண வெகுஜனங்களையும் பலப்படுத்தும் வல்லமை அதற்கு உண்டு,”
என அவர்
கூறினார்.
இத்தகைய போராட்டங்கள் புரட்சிகர, சோசலிச மற்றும் சர்வதேச ரீதியில்
அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்க இயக்கத்தின் முன்னேற்றத்தின் ஊடாக மட்டுமே
அபிவிருத்தியடைய முடியும் என வலியுறுத்திய ரட்னாயக்க, நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப
இணையுமாறு சபையோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசாஞ்சை பாதுகாக்கும் தீர்மானம்
ஒன்றுக்கு ஒருதலைப்பட்சமாக வாக்களித்ததுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது. அசாஞ்சுக்கு
எதிரான பிரச்சாரம்,
“அமெரிக்காவும்
அதன் பங்காளிகளும் முன்னெடுக்கும் ஒரு அரசியல் வேட்டையாடல்”
என
கண்டனம் செய்த அந்தத் தீர்மானம், விக்கிலீக்ஸுக்கு யுத்தக் குற்றங்களை
அம்பலப்படுத்தும் இரகசிய ஆவணங்கள் கிடைப்பதற்கு மூலகாரணமாக இருந்தார் என்ற
சந்தேகத்தில் அமெரிக்க இராணுவ சிப்பாய் பிரட்லி மன்னிங் தடுத்து
வைக்கப்பட்டிருப்பதும் இந்த ஜனநாயக-விரோத பிரச்சாரத்தின் பாகமேயாகும் என சுட்டிக்
காட்டியது.
“அசாஞ்
கைது செய்யப்பட்டது உட்பட விக்கிலீக்ஸுக்கு எதிரான அடக்குமுறை, ஜனநாயக உரிமைகள்
மீதான கடுமையான தாக்குதலாகும். அது வெறுமனே அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகள்
செய்த குற்றங்கள் அம்பலப்படுப்பதை தடுப்பதை இலக்காகக் கொண்டதல்ல. மாறாக, அத்தகைய
அரசாங்கங்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் குற்றங்களை அம்பலப்படுத்த
எத்தணிக்கும் எவரையும் அச்சறுத்துவதையும் மௌனமாக்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.”
விக்கிலீக்ஸை காப்பதற்கான ஒரு
அனைத்துலகப் பிரச்சாரத்தை அபிவிருத்தி செய்வது,
“ஒவ்வொரு
நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு வாழ்வா சாவா என்ற பிரச்சினையாகும்”
என அந்த
தீர்மானம் முடிவில் விளக்கியுள்ளது.
***
கூட்டத்தின் முடிவில், வருகை தந்திருந்தவர்களில் பலர்
WSWS
நிருபர்களுடன் உரையாடினர்.
இலங்கையில் ஒரு முன்னணி மனித
உரிமைகள் சட்டத்தரணியான ரட்னவேல் தெரிவித்ததாவது:
“கூட்டத்தில் உரையாற்றியவர்கள்,
விக்கிலீக்ஸ் பற்றியும் அசாஞ்
கைது செய்யப்பட்டது பற்றியும் பல முக்கியமான விடயங்களை வெளிப்படுத்தினார்கள்.
இலங்கையில் இத்தகைய கூட்டத்தை
நடத்திய ஒரே ஒரு அமைப்பு WSWS
மற்றும் சோ.ச.க.யும்
மட்டுமே.
வேறு கட்சிகளோ அல்லது
அமைப்புகளோ இந்த சம்பவங்களின் உண்மைகளை மக்கள் முன் வைப்பதில் அக்கறை காட்டவில்லை.
இந்த தகவல்கள் மிகவும்
முக்கியமானவை.”
துறைமுக அதிகாரசபையில்
பயிற்சி பெறும் ஒருவர் பேசும் போது,
“சொற்பொழிவுகளை கேட்ட பின்னர்,
இப்போது நான் இந்தக்
கூட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுள்ளேன்.
அசாஞ் மற்றும் அவரது இணையத்
தளம் சம்பந்தமாக அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் ஊடகங்கள் என்று
சொல்லப்படுபவையும் ஏன் பயப்படுகின்றன என்பது இப்போது எனக்குப் புரிகிறது.
ஆட்சியாளர்கள்,
அவர்களது அட்டூழியங்கள் மற்றும்
சதித் திட்டங்களின் உண்மையான முகத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளதோடு,
இந்தத் தகவல்களின் மூலம்,
நாடுகளுக்கு இடையில்
அபிவிருத்தியடையும் பதட்ட நிலைமைகளை எம்மால் புரிந்துகொள்ள முடியும்.
ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்
எங்களை மூன்றாம் உலக யுத்தத்துக்குள் இழுத்துச் செல்கின்றார்கள்.
விக்கிலீக்ஸைப் பாதுகாப்பதற்கான
பிரச்சாரத்தை நாம் விரிவுபடுத்தி உக்கிரப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்தாகும்,”
என்றார்.
இலங்கையின்
டெயிலி மிரர்
பத்திரிகையின் காட்டூன் கலைஞரான கிஹான் டி சிகேரா தெரிவித்ததாவது:
“உலகம் பூராவும் உள்ள
அரசாங்கங்களின் உயர் மட்டத்தில் நடப்பவற்றை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது என
நான் நினைக்கின்றேன்.
பேச்சு சுதந்திரம் கருத்துச்
சுதந்திரம் என்ற விடயங்கள் உள்ளன.
அவை அனுபவிக்க வேண்டியவையாகும்.
சகல மக்களும் இவற்றை ஒரு
சொத்தாக இல்லாமல்,
உயர் மட்டத்தில் என்ன
கலந்துரையாடப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான உரிமையாக இத்தகைய உரிமைகளை
அனுபவிக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
அந்தவகையில்,
பிரதான ஊடகங்கள் தனது கடமையை
தவறியுள்ளன.
அசாஞ் ஒரு மிகவும் பெறுமதி மிக்க
சேவையை ஆற்றியுள்ளார்.
“விக்கிலீக்ஸ்
ஒரு சாதாரணமான மற்றும் விளைவுகளை ஏற்படுத்தும் பெருந்திறமை கொண்டதாகும். எனவே
அசாஞ்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட முறை ஆச்சரியத்திற்குரியதல்ல.
சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்கும் அனைவரும் விக்கிலீக்ஸ் மீதான
தாக்குதலை எதிர்த்துப் போராட வேண்டும். உண்மையை அம்பலப்படுத்திய ஒரு மனிதனுக்கு
தண்டனை கொடுக்க முடியாது.
“தலைவர்கள்
உண்மைக்கு பயந்தவர்கள் என்பதே மூல காரணமாகும். இது சம்பந்தமாக உங்களது பிரச்சாரத்தை
நான் மதிக்கின்றேன், மற்றும் நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்காத
போதிலும் நான் அடிக்கடி WSWSஐ
வாசிக்கிறேன்.
எந்தவொரு சமரசமும் செய்ய முடியாது.
முதலாளித்துவ முறைமையால்
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பது மிகவும் தெளிவானது.
இலாபத்துக்காக மட்டுமே வேலை
செய்தால் மக்களுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது.
முதலாளித்துவ முறைமை ஒரு
முடிவுக்கு வந்துவிட்டது என்றே நான் நினைக்கின்றேன்.” |