World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Photo essay

Sri Lanka: Thousands of shanty dwellers to be evicted from central Colombo

புகைப்படக் கட்டுரை

இலங்கை: ஆயிரக்கணக்கான சேரிப்புற மக்கள் மத்திய கொழும்பிலிருந்து வெளியேற்றப்படவுள்ளார்கள்

28 December 2010

 Back to screen version

பின்வரும் புகைப்படக்கட்டுரை, இலங்கையின் மத்திய கொழும்பில் உள்ள சேரிப்புற மக்களின் கொடூரமான வாழ்க்கை நிலமைகளின் ஒரு சிறு பகுதியை வெளிப்படுத்துகின்றது. இந்தப் புகைப்படங்கள் புகைப்பட ஊடகவியாளர் சாந்தன் குமாரசாமியினால் எடுக்கப்பட்டவை. 

மத்திய கொழும்பில் உள்ள சனத்தொகையின் 50 வீதமனாவர்கள் அல்லது  70,000 குடும்பங்களுக்கு மேல் இலங்கை அரசாங்கத்தினால் அவர்களுடைய வீடுகள் அழிக்கப்பட்டு வெளியேற்றப் படவிருக்கிறார்கள். ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவின் திட்டமான, நகரின் உட்பகுதியில் உள்ள கிட்டத்தட்ட 390 ஹெக்டயர் நேர்த்தியான நிலங்களை விடுவித்து, நாட்டின் தலைநகரத்தை தெற்காசிய நிதி மையமாக மாற்றுவதன் ஒரு பாகமே இந்த பரந்த வெளியேற்றமாகும். 

அரசாங்கம் நகர அபிவிருத்தி அதிகார சபை, காணி சீர்திருத்த அபிவருத்தி சபை ஆகிய இரு சிவில் அமைப்புக்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததுடன், ஏற்கனவே அங்குள்ளவர்களை பலவந்தமாக அகற்றுவற்கு படைகளையும், பொலிசாரையும் அனுப்பியது.

சோசலிச சமத்துவக் கட்சியின் உதவியுடன், சேரிப்புற மக்களில் சிலர் வீட்டு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுவொன்றை அமைத்து, தமது வீடுகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்குமாறு சகல தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.