WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
ISSE/SEP
meetings in Germany defend Julian Assange and WikiLeaks
ஜூலியன் அசாஞ்சேவையும்,
விக்கிலீக்ஸையும்
பாதுகாக்க ஜேர்மனியில்
ISSE/SEP
கூட்டங்கள்
By our
correspondents
24 December 2010
கடந்த வாரம் பேர்லின்
மற்றும் பீலஃபெல்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்காக செய்யப்பட்ட
விளம்பரங்களில் "அசாஞ்சேவை விடுதலை செய்" மற்றும்
''விக்கிலீக்ஸ்
மீது
கைவாயாதே''
என்ற
முழக்கங்கள்தான் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் (ISSE)
மற்றும்
சோசலிச சமத்துவ கட்சியால் (PSG)
விநியோகிக்கப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றிருந்தன.
இரு நிகழ்ச்சிகளிலுமே
ஏராளமானோர் கலந்துகொண்டனர். பேர்லினில்
பெரும்பாலானோர் மாணவர்கள்
அடங்கிய
கிட்டத்தட்ட
100
பார்வையாளர்கள்,
நகரின்
தொழில் நுட்ப பல்கலைக்கழக அரங்கில் திரளாக கலந்துகொண்டனர்.
இரு
நிகழ்ச்சிகளிலுமே அறிமுக உரைகளுக்கு பின்னர் நேரடியான விவாதங்கள் இடம்பெற்றன.
பேர்லினில் நடைபெற்ற
கூட்டத்தை தொடங்கி வைத்த
Christoph Dreier (ISSE
ன் தேசிய
நிர்வாகி) பேசுகையில்,"
விக்கிலீக்ஸின் மீதான தாக்குதல் மற்றும் இணையதள மேடையை உருவாக்கிய,
ஜூலியன்
அசாஞ்சேவின் கைது ஆகியவை,
பத்தாண்டுகளாக இல்லையெனில்,
பல
ஆண்டுகளாக ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் பகிரங்க தாக்குதல் ஆகும்.
விக்கிலீக்ஸ் மற்றும் அசாஞ்சே மீதான தாக்குதல்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளான
கருத்து
சுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரத்தின் உரிமை மீதான தாக்குதல் ஆகும்" என்றார்.
விக்கிலீக்ஸ்
வெளியிட்டவற்றில் "அடிப்படையில் புதிதாக எதுவுமில்லை" என்று பல அரசியல்வாதிகளும்,
ஊடகங்களும் கூறியவற்றில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்கூறி
Dreier
கவனத்தை
ஈர்த்தார். அதே நேரத்தில்,
விக்கிலீக்ஸ் மற்றும் அசாஞ்சேவுக்கு எதிராக அரசாங்கங்கள்,
அரசியல்
கட்சிகள்,
நீதித்துறை,
சட்ட
அமலாக்க முகமைகள் மற்றும் பெரும்பான்மையான ஊடகங்களால் முழுமையான தாக்குதல்கள்
நடத்தப்பட்டுக்கொண்டிருந்தன.
விக்கிலீக்ஸ்க்கு
எதிரான பாரிய எதிர்ப்புக்கு,
வெளிச்சத்திற்கு வந்த இரகசியங்களில் இடம்பெற்றிருந்த கோபமூட்டக்கூடிய தகவல்கள்
நேரடியாக
தொடர்பு இருந்ததாக
Dreier
குறிப்பிட்டார். அதன் பின்னர் அவர்,
"சீனாவுடன்
இராணுவ மோதல்களுக்கு சாத்தியமிருப்பதால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே
ஏற்பட்ட நெருக்கமான கூட்டணி,
நைஜீரியா
போன்று
ஒட்டுமொத்த ஆபிரிக்க நாடுகளை கட்டுப்படுத்தும்
Shell
போன்ற முக்கிய
நிறுவனங்களைப்
பற்றிய
அம்பலம்,
மற்றும்
அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள பல அரேபிய நாடுகள்,
ஈரானுக்கு எதிராக போர் தொடுக்குமாறு வலியுறுத்திய தகவல்கள்" உள்ளிட்ட சில முக்கிய
உண்மைகளை விளக்கத் தொடங்கினார்.
அதே சமயம்
விக்கிலீக்ஸுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பை
வேகமாக
அதிகரித்து வரும் சர்வதேச நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் ஆய்வு
செய்ய வேண்டும்.
உலகம்
முழுவதுமுள்ள அரசாங்கங்கள் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களையும்,
டாலர்களையும் சர்வதேச நிதிய பிரபுக்கள் ஆதாயமடைவதை உறுதிப்படுத்துவதற்காக
அவர்களுக்கு கிடைக்குமாறு செய்துள்ளன.
தற்போது
பெரும்பான்மையான மக்கள் கடுமையான திட்டங்களின் வடிவில் உள்ளவற்றை தேர்ந்தெடுக்க
கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
"பெரும்பான்மையான
மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் ஜனநாயக உரிமைகளுடன்
பொருந்திப்போகக்கூடியவையாக இல்லை. சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி ஜனநாயகத்திற்கு
ஏற்றதாக இல்லை" என்று
Dreier
கூறினார்.
போராடும் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களை அவர் விளக்கத்
தொடங்கினார்: உதாரணமாக,
கிரேக்க
பார ஊர்தி ஓட்டுனர்களின் நீடிக்கும் போராட்டம்;
பிரெஞ்சு
எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு எதிரான பாரிய போலீஸ் நடவடிக்கை,
மற்றும்
ஸ்பெயினில் அரசாங்கத்தின் கடுமையான உத்தரவுகள் மற்றும் தங்களது சம்பள குறைப்புகளை
எதிர்க்க கோரிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் துப்பாக்கி முனையில்
மட்டுமே வேலைக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டு அவர்கள் மீது நடத்தப்பட்ட
தாக்குதல் போன்றவை. "ஸ்பெயினில் சோசலிச அரசாங்கத்தின் பிரதமர் ஸபதேரோவின்
சோசலிச
அரசு
அவசரகால
விதிகளை
பிரகடனப்படுத்தி,
தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் வேலைக்கு திரும்ப நிர்ப்பந்தித்தார்" என்று அவர்
குறிப்பிட்டார்.
உலகம் முழுவதுமே,
உழைக்கும் வர்க்கத்தினர் தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து தங்களை தாங்களே
விடுவித்துக்கொண்டு,
தன்னிச்சையான போராட்டங்களை நடத்தி வருவதால்,
இதுபோன்ற
சர்வாதிகார நடவடிக்கைகள் தயாராகிக் கொண்டிருப்பதோடு,
நடைமுறைப்படுத்தப்படவும்
வாய்ப்புள்ளது.
இதனால்தான் விக்கிலீக்ஸை பாதுகாப்பது மிகுந்த முக்கியமானதாக உள்ளது.
ஜனநாயக
உரிமைகளை பாதுகாப்பதை உழைக்கும் வர்க்கத்தினரின் அரசியல் அணிதிரட்டலுடன் நேரடியான
தொடர்புடையதாக புரிந்துகொள்ள வேண்டும் என்று
Dreier
பேசி
முடித்தார்.
அடுத்து பேசிய
சோசலிச
சமத்துவக் கட்சியின்
(PSG)
தலைவர்
உல்ரிச் ரிப்பேர்ட்
விக்கிலீக்ஸையும்,
அசாஞ்சேவையும் காப்பாற்ற வேண்டும் என்ற அழைப்பை ஏராளமானோர் கவனித்தனர் என்ற உண்மையை
அவர் வரவேற்றார். "ஆனால் எதிர்ப்பு மட்டுமே போதுமானதல்ல" என்று ரிப்பேர்ட்
கூறினார். "தற்போது நாம் உலக நிதியத்தின் ஆளும் தலைவர்கள்,
அவர்களது
அரசாங்கங்கள்,
அவர்களது
நீதித்துறை மற்றும் அவர்களது ஊடகத்தின் கடுமையான அணுகுமுறைகளை
அனுபவித்துக்கொண்டிருப்பதோடு,
சவாலுக்கு உள்ளானதாக அவர்கள் உணரும்போது திரும்பவும் போராட வேண்டும்." விக்கிலீக்ஸை
பாதுகாப்பதையும்,
தகவல்களை
சுதந்திரமாக பரிமாறிக்கொள்வதையும் பரந்த சமூக உள்ளடக்கத்தில் பரிசீலிக்க வேண்டும்.
இயற்கை விஞ்ஞானங்களில்
உள்ளதைப் போன்றே,
குறிப்பிடப்பட்ட
விதிகள்
அரசியலுக்கும் பொருந்தும் என்று ரிப்பேர்ட் வலியுறுத்தினார். சமூகத்தின்
உயர்மட்டத்தில் உள்ள கட்டுப்பாடற்ற செல்வம் மற்றும் உழைக்கும் மக்களில்
பெரும்பாலானோர்களின் வழக்கமான வறுமை ஆகியவை பாரிய சமூக முரண்பாடுகளை ஏற்படுத்துவதை
தவிர்க்க முடியாது. அமெரிக்காவின் பிரதிநிதிகளும்
,இதர
அரசாங்களும் இராணுவ சாகசங்கள் மற்றும் போர் குறித்து எப்படி வெளிப்படையாக
பேசுகிறார்கள் என்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் தெளிவாக்குகின்றன.
ஜனநாயக உரிமைகள்
மற்றும் சுதந்திரங்களை நசுக்குவதற்கெதிரான போராட்டம்,
அதைப்போன்று போர் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்கு ஒரு
அரசியல் வேலைத்திட்டமும்,
அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பை ஒரு தெளிவான அரசியல் பாதையை
காட்டும்
திறனுடைய
ஒரு கட்சியும் தேவையாக உள்ளது.
அப்படியான
ஒரு
வேலைத்திட்டம் இரண்டு கொள்கைகளை கூட்டாக கொண்டிருக்கும்.
முதலாளித்துவத்திற்கு எதிராகவும்,
உண்மையான
சோசலிச பார்வையை அடிப்படையாகக் கொண்டும் அது இருக்க வேண்டும். அதிகரித்து வரும்
சமூக நெருக்கடிகளை,
சீர்திருத்தங்களின் அடிப்படையில் வகுக்கப்பட்ட முதலாளித்துவ சமூகத்தின்
வரையறைக்குள் தீர்க்க முடியாது. அதுபோன்ற ஒரு பார்வை உலகளாவியதாக இருக்க வேண்டும்,
ஏனெனில்
தேசிய அடிப்படையில் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது. மேலும்,
இந்த
வேலைத்திட்டம் போர்கள்,
உள்நாட்டுயுத்தங்கள் மற்றும் புரட்சிகளால்
எடுத்துக்காட்டப்படும் கடந்த நூற்றாண்டின் வரலாற்று பாடங்களின் அடிப்படையில் இருக்க
வேண்டும்.
பீலஃபெல்டில்
நடந்த
கூட்டத்தில்
PSG
நிர்வாக
உறுப்பினர்
டீட்மார்
ஹென்னிங் உரையாற்றினார். தற்போது கிடைத்துள்ள இரகசிய ஆவணங்களில் அம்பலமாகியுள்ள,
ஏகாதிபத்திய சக்திகளால்
(குறிப்பாக
அமெரிக்காவால்)
மேற்கொள்ளப்பட்டிருக்கும் போர் ஆயத்தங்களின் சட்டவிரோதத் தன்மை
முழுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்பின்னர் அவர்,
விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணங்களுக்கு எதிராக முக்கியமாக வெளிப்பட்ட அரசியல்
மற்றும் ஊடக அமைப்புகளின் குரோதமான பதிலளிப்பையும்,
அதுபோன்ற
பதிலளிப்புகள் அமெரிக்க மற்றும் மற்ற பல நாடுகளின் ஜனநாயக வீழ்ச்சியின் பின்னணியில்
வைக்கப்பட்டுள்ளதையும் விரிவாக விளக்கினார்.
விக்கிலீக்ஸ் மீதான
தாக்குதலுக்கும்,
சமூக
சமத்துவமின்மை அதிகரித்துவருவதற்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பையும்,
பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளின் காரணமாக மக்கள் மீது நடத்தப்படும் கூரிய
சமூக தாக்குதல்கள் மற்றும் புதிய போர்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான
ஆயத்தங்களையும் ஹென்னிங் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக நடந்த
விவாதங்களில்,
இரண்டு
முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன. முதலில்,
புதிய
கட்சிக்கான தேவை குறித்த தங்களது சந்தேகங்களை பல பேச்சாளர்கள் வெளிப்படுத்தினர்.
அதுபோன்ற
ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு விக்கிலீக்ஸ் வெற்றிபெற்றிருந்தது,
ஏனெனில்
அதன் அமைப்பாளர்கள் ஒரு கட்சியின் வடிவத்தில் அதனை நடத்திச் செல்லாமல்,
வெளிப்படையான இணையதள மேடையில் நடத்திச் சென்றிருந்தனர். ஜூலியன் அசாஞ்சேவுக்கு
ஆதரவான பாதுகாப்பும்,
ஒழுங்கமைப்பும்
கூட
கட்சிகளூடாக
இல்லாது
இணையதளங்கள் ஊடாகத்தான் நடந்தேறியது.
மேலும்,
அரசியல்
கட்சிகள் ஒரு வழியிலோ அல்லது மற்றொரு வழியிலோ
முதலாளித்துவ சமூகத்தின் தற்போதுள்ள வரையறைக்குள்தான் செயல்படவேண்டும் என்பதோடு,
அவற்றை
தவிர்க்க முடியாமல் தாங்களே பின்பற்ற வேண்டியதுள்ளது
எனவும்
பொதுவாக
கூறப்படுகின்றது.
விக்கிலீக்ஸ் பல
முக்கிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளதாக
PSG
மற்றும்
ISSE
பேச்சாளர்கள்
குறிப்பிட்டனர்.
இந்த
ஆவணங்கள் மற்றும் சந்திப்புகளின் நோக்கங்கள் அம்பலமானது மிகவும் முக்கியமானதாக
இருந்ததோடு,
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் ஒரு போலீஸ் அரசு மற்றும் போருக்கான
ஆயத்தங்களின் முன்னேறிய நிலையையும் தெளிவாக்கியது.
ஆனாலும்,
அம்பலமாகியுள்ள சமூக பிரச்சனைகளை தீர்வுடன் ஒப்பிடக்கூடாது.
அதற்குப்
பதிலாக,
சமூகத்தின்
நிலையை
எடுத்துக்காட்டுவதன்
மூலம்,
ஆட்சி
தலைவர்களை பாதையை மாற்றச் செய்வதற்கான சாத்தியமுள்ளது என்று ஒருவர் நம்பலாம்.
ஒரு
மருத்துவ பரிசோதனையை மட்டுமே,
வெற்றிகரமான ஒரு அறுவை சிகிச்சையுடன் ஒப்பிட முடியாது.
அதுபோன்று ஆவணங்கள் அம்பலமானதும் ஒரு முதல்கட்ட நடவடிக்கை மட்டுமே. சமூக
பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு தேவையாக உள்ள உழைக்கும் மக்களின் மாபெரும் அரசியல்
தலையீடு
ஒரு
அரசியல் வேலைத்திட்டம் மற்றும் கட்சி இல்லாமல் சாத்தியமில்லை.
தற்போதுள்ள எந்த ஒரு
கட்சிகளும் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கக்கூட இல்லை என்பதே
உண்மையாக உள்ள அதே நேரத்தில்,
அரசியல்
நிகழ்வுகளில் ஒரு கட்சியின் தலையீடு தேவையில்லை என்ற முடிவிற்கு
வருவது
என்பதும் தவறானதாகத்தான் இருக்கும்.
தொழிலாளர் இயக்கத்தின்
அனைத்து முன்னாள் கட்சிகளும் சந்தர்ப்பவாத அமைப்புகளாக வீழ்ச்சியடைந்துபோனதையும்,
அதே
பாதையைத்தான் அனைத்துக் கட்சிகளுமே பின்பற்றும்
என்ற
முடிவுக்கு வருவது தவறாக வழிநடத்தப்படுவதாகவே
இருக்கும்.
அதைவிட,
இந்த
இயக்கங்களின் சந்தர்ப்பவாத சமரசங்களின் குறிப்பிட்ட காரணங்களை ஆய்வு செய்வதும்,
ஒரு
கொள்கைரீதியான
புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதற்கான பாடங்களை பெற்றுக்கொள்வதும்
அவசியமாக
உள்ளது.
விவாத்தில் அதிக
நேரத்தை ஆக்கிரமித்த இரண்டாவது கேள்வி,
ஜூலியன்
அசாஞ்சே மற்றும் விக்கிலீக்ஸின் உண்மையான பாதுகாப்பை சுற்றி வந்தது.
விக்கிலீக்ஸை பாதுகாக்கும் முன்னணி இடத்தில் உலக சோசலிச வலைத் தளம்,
ISSE
மற்றும்
PSG
ஆகியவை நிற்கின்றன என்பது
ஒரு
தற்செயலான
நிகழ்வல்ல என்று அந்த கேள்விக்கான பதிலில் வலியுறுத்தப்பட்டது.
பேச்சு
சுதந்திரத்தின் உரிமை பாதுகாப்பு மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளும் நமது
வேலைத்திட்டத்தின் அடிப்படை அம்சமாக உள்ளன.
எதிர்காலத்தில் மேலும்
நடக்கப்போகும் நடைமுறை
மற்றும்
அரசியல் நடவடிக்கை குறித்து தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்று இரண்டு
கூட்டங்களிலுமே தீர்மானிக்கப்பட்டது.
மேலதிக
நடவடிக்கைகளுக்கான தேதிகள் மற்றும் விவரங்கள் உலக சோசலிச வலைத் தளத்தில்
தெரிவிக்கப்படும். |