WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Mass
protests continue in Bahrain
பஹ்ரைனில் வெகுஜன
எதிர்ப்புக்கள் தொடர்கின்றன
By Niall
Green
24 February 2011
இந்த வாரம்
பஹ்ரைனின் தலைநகர் மனாமாவில் பல்லாயிரக்கணக்கான அரசாங்க-எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் ஆர்ப்பரித்தனர்.
எதிர்ப்புக்கள்
நிறுத்தப்பட வேண்டும் என்னும் அரசாங்கக் கோரிக்கைகளை மீறி,
எட்டு பேர் இறப்பு,
நூற்றுக்கணக்கானவர்கள் காயம் என்று மதிப்பிடப்பட்டுள்ள கடந்த வாரத்தில்
கூட்டத்தின்மீதான தீங்கு விளைவித்த பொலிஸ் தாக்குதல்களுக்கு இடையே,
கூட்டம் ஆட்சி
அகற்றப்பட வேண்டும் என்றும் கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களுக்கு நீதி வேண்டும் என்றும்
அழைப்பு விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளத்திற்குத் தாயகமாக பேர்சிய வளைகுடாவில் உள்ள ஒரு
சிறிய தீவின் முடியாட்சியான பஹ்ரைனில் மனாமாவின் பேர்ல் சதுக்கம்
எதிர்ப்புக்களுக்கு ஒரு குவிப்பு மையமாகிவிட்டது,
அரசர் ஹமத் பின் இசா
அல் கலிபாவும் அவருடைய குடும்பத்தினரும் வாஷிங்டன் மற்றும் அண்டை முடியாட்சியான
சௌதி அரேபியா ஆகியவற்றின் ஆதரவுடன் நாட்டை ஆண்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் சதுக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
மீது பொலிஸார் மிருகத்தனமான தாக்குதலை நடத்தினர்;
கண்ணீர்ப்புகை
குண்டுகள் போடப்பட்டன;
ஆண்கள்,
பெண்கள் மற்றும்
குழந்தைகளும் அடித்து உதைக்கப்பட்டனர்.
வார இறுதியில்
பேர்ல் சதுக்கத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர் திரும்பப் பெறப்பட்ட பின்,
நூற்றுக்கணக்கான
மக்கள் மீண்டும் எதிர்ப்பு முகாம் ஒன்றை அங்கு நிறுவியுள்ளனர்.
திங்கள்
ஆர்ப்பாட்டம் ஆட்சியினால் கொல்லப்பட்டவர்களைக் குறிக்கும் வகையில்
“தியாகிகளுக்கு
விசுவாசம் காட்டும் அணிவகுப்பு”
என்று கூறப்பட்டது.
பொது மக்களில்
பலரும்,
சீற்றத்தின் முக்கிய இலக்கு
1971ல் இருந்து
அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் பிரதம மந்திரி,
இளவரசர் கலிபா பின்
சல்மன் என்று
அரசரின் சிற்றப்பன் ஆனாலும்,
மக்கள் ஆளும் மரபு
அகற்றப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்.
“எங்களுக்கு
ஒரு புதிய அரசாங்கம் தேவை.
மக்கள் நாட்டை
ஆளவேண்டும்”
என்று செவ்வாய்
பிற்பகலில் பேர்ல் சதுக்கத்தில் கூட்டம் கோஷமிட்டது.
ஆயிரக்கணக்கானவர்கள்
நாளின் முற்பகுதியில் கடந்த வாரம் பொலிசால் சுட்டுக் கொல்லப்பட்ட
20 வயது ரெதா
மஹ்மத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கூடினர்.
AOL
செய்தி நிறுவனம்
எதிர்ப்பாளர் ஒருவர்,
வேலையின்மையில் உள்ள
கிரேன் செலுத்தநுபவரான,
இப்ராஹிம் அல் ஹுர்
செவ்வாயன்று தன்
6 வயது மகளைப்
பேர்ல் சதுக்கத்திற்கு அழைத்துவந்தார் என்று தகவல் கொடுத்துள்ளது.
“நாங்கள் அமைதியாக
வருகிறோம் என்பதை நிருபிக்க விரும்புகிறேன்;
நாங்கள் ஒன்றும்
போரிட வரவில்லைந எங்கள் உரிமைகளை—இளைஞர்கள்,
முதியவர்கள்,
ஆடவர்,
பெண்டிர்
அனைவருக்கும்—கேட்க
வந்துள்ளோம்”
என்றார் அவர்.
ஜனநாயக
உரிமைகள் இல்லாதது பற்றிய சீற்றத்துடன்,
இளைஞர்களும்
தொழிலாளர்களும் கடுமையான பொருளாதாரச் சூழலை சந்திக்கின்றனர்.
சௌகரியமான
வீடுகளுக்கு தீவிரத் தட்டுப்பாடு உள்ளது;
இளைஞர்களிடையே
வேலையின்மை என்பது
20%க்கு அருகில்
உள்ளது.
அல்
கலிபாக்களும் ஆளும் உயரடுக்கும் அதிகாரத்தை குறுகிய பற்று அழுத்தங்களை திரிப்பதின்
மூலம் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
அவர்கள் சுன்னி
முஸ்லிம்கள் ஆவர்;
ஆனால் நாட்டின்
மொத்த மக்கட்தொகையான
1.2 மில்லியனில்
ஷியைட் பிரிவினரின் ஆதிக்கம்
70% என்று உள்ளது.
ஷியைட் மக்கள்
குறுகிய பற்றை ஒட்டி பிரிவினையில் அவதியுறுகிறார்கள்,
பாதுகாப்புப்
படைகளில் பணி புரிய முடியாது,
அரசாங்கத்தில் பல
துறைகளில் பணிபுரிய முடியாது.
முடியாட்சி மத்திய
கிழக்கின் மத்தியபகுதிகளில் இருந்து நாட்டில் பொலிஸ் பணிக்கும் சுன்னிக்களை
கூலிக்கு அமர்த்துகிறது.
ஆட்சி-எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் ஷியைட்டுக்கள் என்றாலும்,
எதிர்ப்பாளர்கள்
குறுகிய பற்று என்னும் பிளவைக் கடந்து ஆட்சிக்கு ஐக்கியமான எதிர்ப்பைக் கொடுக்க
முயல்கின்றனர்.
ஆர்ப்பாட்டங்களில்
பொதுவான கோஷம் “சுன்னி,
ஷியா வேறுபாடு
கிடையாது;
ஐக்கியமான பஹ்ரைன்
மக்கள்தான் உள்ளனர்.”
ஆனால்
முடியாட்சியும் அதன் ஆதரவாளர்களும் வெளிப்படையாக சிந்திப்பது எதிர்ப்பாளர்களுக்கு
எதிரான குறுகிய பற்று வழி வன்முறைதான்;
ஆட்சியாளர்களின்
ஆதரவாளர்கள் திங்கள் இரவன்று மத்திய மனாமாவில் ஒரு மசூதிக்கு அருகே பல
ஆயிரக்கணக்கான சுட்டிக்கள் நிறைந்த எதிர்-ஆர்ப்பாட்டத்தை
நடத்தினர்.
முடியரசு-சார்பு
கூட்டத்தின் அமைப்பாளர்கள் எதிர்க்கட்சிகள் தெருக்களில் கூடுவதைக்கைவிட்டு,
அரசாங்கப்
பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு உடன்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
உத்தியோகபூர்வ எதிர்த்தரப்பு தலைவர்கள் தாங்கள் முடியாட்சியை வீழ்த்த முற்படவில்லை,
மாறாக
முடியாட்சியுடன் பேச்சு நடத்தத் தயார் என்ற குறிப்பைக் காட்டியுள்ளனர்.
ஆனால் ஆட்சிக்கு
மக்கள் கொண்டுள்ள விரோதப் போக்கின் ஆழ்ந்த தன்மையைக் காணும்போது,
இதுவரை அவர்கள்
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை,
எதிர்ப்பாளர்கள்
கொலையுண்டது விசாரிக்கப்படும் வரை,
முறையான பேச்சுக்கள்
நடத்த மறுத்துவிட்டனர்.
எதிர்ப்பாளர்களை திருப்திப்படுத்தும் முயற்சியில்,
பஹ்ரைனின் அரசாங்கம்
நேற்று கிட்டத்தட்ட
250 அரசியல் கைதிகளை
விடுவித்தது.
பேர்ல்
சதுக்கத்திலுள்ள எதிர்ப்பாளர்கள் அதை
“தியாகிகள் சதுக்கம்”
என்று
பெயரிட்டுள்ளனர்;
இது பொலிசால் கொலை
செய்யப்பட்டவர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் உள்ளது;
முடியாட்சி
அளித்துள்ள சலுகை பற்றி அவர்கள் அதிக அக்கறை கொள்ளவில்லை.
“எங்கள்
முக்கிய கோரிக்கை கொலைசெய்தவர்கள் மீது விசாரணை வேண்டும்”
என்று ஒரு
வேலையின்மையில் உள்ளவர் புதன் அன்று
AFP செய்தி
நிறுவனத்திடம் கூறினார் மற்றொரு எதிர்ப்பாளர் சதுக்கத்தில் முகாமிட்டிருந்தவர்,
ஓய்வுபெற்ற நகரசபை
தொழிலாளி,
சபா அபடி,
“என் வாயில்
துப்பாக்கியை நுழைத்து என்னைப் போகச் சொன்னாலும்,
நான் போக மாட்டேன்.
இரவும் பகலும்
இங்குத்தான் இருப்பேன்”
என்றார்.
பஹ்ரைனின்
ஆளும் குடும்பத்திற்கு முக்கிய ஆதரவு அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகும்.
இந்தத் தீவுநாடு
1947ல் இருந்து
அமெரிக்க கடற்படையின் தாயகமாக உள்ளது;
அமெரிக்காவின்
ஐந்தாம் கடற்படைப் பிரிவு இங்கு
1995ல் இருந்து
உள்ளது.
வாஷிங்டனின் மிக முக்கியமான
இராணுவப் புறக் காவல் நிலையங்களில் ஒன்றாக இருக்கும் இது
2001ல் இருந்து
விரிவுபடுத்தப்பட்டுள்ளது;
ஈராக்கில் அமெரிக்க
ஆக்கிரமிப்பிற்கு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
பஹ்ரைனில்
அமெரிக்க இராணுவத்தின் நிலைப்பாடு வாஷிங்டன் மத்திய கிழக்குப் பகுதியில் ஆதிக்கம்
செலுத்தும் முயற்சியில் முக்கிய கூறுபாடு ஆகும்.
உலகின் பெரும்
எண்ணெய் பிற இடங்களுக்கு அனுப்பப்படும் இடத்தில் உள்ள இந்நாடு,
சௌதி அரேபியாவின்
பரந்த கிழக்கு எண்ணெய் வயல்களுக்கு அருகே உள்ளது.
ஐந்தாம் கடற்படைப்
பிரிவு பெரும் கோட்டையாகவும் ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்குத் தளமாகவும் உள்ளது.
பஹ்ரைனில்
நடக்கும் ஆர்ப்பாட்டங்களை அமெரிக்கா அதன் முக்கிய நண்பர்களான சௌதி அரேபியாவில் உள்ள
அல் சௌத் மன்னர்களுக்கு அச்சறுத்தல் எனக் காண்கிறது.
அங்கு இன்னும்
எதிர்ப்புக்கள் வெடிக்கவில்லை என்றாலும்,
அரபு உலகம்
முழுவதும் எழுச்சிகளுக்கு ஆதரவு உள்ளது என்பது இணையத்தளத்தில் வெளிப்பட்டுள்ளது.
பஹ்ரான் நாடுகளில்
உள்ள எதிர்ப்புக்களுக்கு சௌதி ஆதரவாளர்கள் தோற்றுவித்த ஒரு பேஸ்புக் பக்கம்,
“பஹ்ரைனில் உள்ள
எங்கள் சகோதரர்களுக்கு அவர்களுடைய அமைதியான சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக
நாங்கள் நிற்கிறோம்.
அமைதியான
எதிர்ப்பாளர்கள்,
ஆயுதமற்ற
ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்கொள்ளும் அனைத்து வித வன்முறைத் தாக்குதல்களையும்
நாங்கள் கண்டிக்கிறோம்.”
இந்தப் பேஸ்புக்
பக்கம் பஹ்ரைன்னின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷியாக்கள்,
சுன்னிகளுக்கு இடையே
ஐக்கியம் வேண்டும் என்று விடுத்துள்ள அழைப்பிற்கும் ஆதரவு கொடுக்கிறது.
மற்றொரு
பேஸ்புக் பக்கம் மார்ச்
11ம் தேதி சௌதி
அரேபியா நெடுகிலும்
“சீற்ற தினமாக”
கடைப்படிக்கப்பட
வேண்டும்,
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசாங்கத்தைக் கோர,
மகளிருக்கு கூடுதல்
உரிமைக்காக மற்றும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு ஆகியவற்றிற்காக என்று
கோரியுள்ளது.
சௌதி
முடியாட்சி பஹ்ரைன் மற்றும் பிற அரபு நாடுகளில் நடக்கும் எதிர்ப்புக்களை விரோதப்
போக்கு,
எச்சரிக்கையுடன்
காண்கிறது. 1996ல்
சௌதி அரேபியப் படைகள் பஹ்ரைன்மீது படையெடுத்து மனாமாவில் ஆட்சிக்கு முட்டுக்
கொடுத்தன;
சௌதியின் உள்துறை மந்திரி
இளவரசர் நயெப் பின் அப்துல் அஜிஸ் அல்சௌத் சமீபத்தில் பஹ்ரைன் மக்கள் இயக்கம்
“கட்டுப்பாட்டை
மீறிப் போனால்”
மீண்டும்
குறுக்கிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
அரபு உலகம்
முழுவதும் நடக்கும் நிகழ்வுகள் பற்றித் தெளிவாகக் கவலை கொண்டுள்ள சௌதி முடியாட்சி
நேற்று
$37 பில்லியன்
உதவிப் பொதி ஒன்றை கூடுதல் மருத்துவ வசதிகள்,
நலன்களுக்குக்
கொடுப்பதற்காக அளித்து அறிவித்தது.
இந்த அறிவிப்பு
அமெரிக்காவில் ஒரு அறுவை சிகிச்சைக்காக மூன்று மாத காலம் சென்றிருந்து திரும்பி
அரசர் அப்துல்லா சௌதிக்கு வந்தபின் வந்துள்ளது.
சௌதி மன்னரை
வரவேற்கக்கூடிய பிரமுகர்களில் ஒருவர் பஹ்ரைனின் அரசர் ஹமத் ஆவார்;
இவர் ரியத்
ஆட்சியுடன் மக்கள் எதிர்ப்பை எப்படி அடக்குவது என்று பேச்சுக்கள் நடத்துவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
திங்களன்று
நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள கட்டுரை ஒன்று கலிபாக்களின் சர்வாதிகார ஆட்சியைத்
தக்க வைக்க நீண்ட காலமாக அமெரிக்க இராணுவம் செய்துவரும் முயற்சிகளைப் பதிவு
செய்துள்ளது.
2004ல் இருந்து
2007 வரை பஹ்ரைனில்
அமெரிக்கக் கடற்படையின் முன்னாள் அரசியல் ஆலோசகராக இருந்த க்வென்த் டோடை
செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது;
அவர் பென்டகனுக்கும்
வெள்ளை மாளிகைக்கும் மத்திய கிழக்கு,
வட ஆபிரிக்கா
விவகாரங்கள் குறித்து ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
”கலிபாக்களுக்கு
ஆதரவாக அனைத்தையும் நாம் செய்துகொண்டு வருகிறோம்;
பஹ்ரைன் பகுதிகளில்
உள்ள நிலைமை குறித்து முழு உணர்வுடன் பொருட்படுத்தாமலும் இருக்கிறோம்”
என்று டோட் செய்தித்
தாளிடம் கூறினார்.
Bahrain
Center for Human Rights
ஐச் சேர்ந்த நபில் ரஜப்
பஹ்ரைனில் ஷியைட்டுக்களுக்கு எதிராக நடக்கும் அரசாங்கப் பாகுபாட்டை ஒப்புக் கொள்ள
மறுக்கும் அமெரிக் இராணுவத்தின் நிலைப்பாடு பற்றிப் புகார் கூறியுள்ளார்.
“ரஜப் தான்
வாஷிங்டனில் பேசுவதற்கு அழைக்கப்பட்டார் என்றும் இரு செனட்டர்கள் அவரைச்
சந்திக்கக்கூடாது என்று இராணுவம் வலியுறுத்தியதாகவும்,
அவருக்கு
விருந்துகூடக் கொடுக்கக்கூடாது என்று கூறியதாகவும் தெரிவித்தனர் என்றார்.”
“அமெரிக்க
இராணுவம் எப்பொழுதும் மனித உரிமைகள் சமூகத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராகத்தான்
கொண்டுள்ளது”
என்றார் ரஜப்.
“எதிர்த்தரப்புடன்
நல்ல உறவுகளை அமெரிக்கா கட்டமைக்கவில்லை.
அடிப்படைவாதிகள்
அல்லது தீவிரவாதிகள் என்றுதான் எதிர்த்தரப்பினர் சித்தரிக்கப்பட்னர்;
இது அவர்கள்
அரசாங்கத்திற்கு காட்டும் ஆதரவு நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக நடக்கிறது.”
மனாமாவில்
உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆட்சியுடனும் சில ஷியைட் எதிர்க் குழுக்களுடனும்
ஒத்துழைத்து அரசாங்க எதிர்ப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறது.
குறிப்பாக அமெரிக்கா
பஹ்ரைனின் அதிக அதகாரமற்ற பாராளுமன்றத்தில் உட்கார அனுமதிக்கப்பட்டுள்ள ஷியைட்
குழுக்களில் ஒன்றான அல் வெபக்கை நாடுகிறது;
கட்சியின் செய்தித்
தொடர்பாளர் கலீல் எப்ரகிம் அல்-மர்ஜுக்
அமெரிக் கா “பஹ்ரைன்
ஷியைட்டுக்கள் அவர்கள் உரிமைகளைப் பெற வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்த வேண்டும்”
என்று அழைப்பு
விடுத்துள்ளார்.
ஷியைட்
முதலாளித்துவக் கட்சிகளுடன் வாஷிங்டனும் பஹ்ரைன் முடியாட்சியும் ஒத்துப்போவது
என்பது மனாமாவில் நடக்கும் எதிர்ப்புக்களை அகற்றி அப்பகுதியில் இருக்கும் மக்களை
அடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. |