World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Gaddafi threatens mass killings as popular rebellion spreads

வெகுஜன எழுச்சி பரவுகையில் கடாபி படுகொலைகள் செய்யப்படும் என்று அச்சுறுத்துகிறார்

By Patrick Martin
23 February 2011
Back to screen version

முயன்மார் கடாபியின் ஆட்சிக்கு எதிரான எழுச்சி நாட்டின் கிழக்குப் பாதியில் ஒருங்கிணைக்கப்பட்டு, தலைநகரான டிரிபோலியின் புறநகரங்களுக்கும் பரவுகையில், லிபிய ஆட்சியாளர் செவ்வாயன்று ஒரு தொலைக்காட்சி உரையில் தன் மக்களையே படுகொலைகளுக்கு உட்படுத்தபோவதாக அச்சுறுத்தியுள்ளார்.

ஒரு வாரமாக நடக்கும் எழுச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; ஜனவரி 14 அன்று துனிசிய ஜனாதிபதி பென் அலி அகற்றப்பட்ட பின்னர் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் வெடித்துள்ள மக்கள் இயக்கங்கள் எதிலும் இல்லாத அளவிற்குப் பெரும் குருதி கொட்டுதலை இந்த இயக்கம் எதிர்கொண்டுள்ளது.

அல் ஜசீராவின் தொலைக்காட்சி செய்திப் பிரிவு, எண்ணெய் தொழிலாளர்கள் அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் சேர்ந்துள்ளனர், அதையொட்டி நபூரா எண்ணெய் வயல் மூடப்பட்டுள்ளது என்ற தகவலைக் கொடுத்துள்ளது.

ஒரு சிறிய பாதுகாப்பு முகவர்கள் அடங்கிய கூட்டத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது போல் தோன்றும் ஒரு 70 நிமிடக் கடும் சாடல் உரையில், கடாபி லிபிய மக்கள் திரண்டு நின்று தன் ஆட்சியைக் காக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்; அதே நேரத்தில் அவரை எதிர்ப்பவர்கள்மீது மோசமான வரலாற்றுத்தன்மை கொண்ட குற்றங்கள் இழைக்கப்படும் என்ற அச்சுறுத்தலையும் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா, ஈராக்கிய நகரமான பல்லுஜாவை அழித்தது, சீனா 1989ல் தியனான்மன் சதுக்கத்தில் எழுச்சியை நசுக்கியது, ரஷ்ய பாராளுமன்றத்தின் மீது போரிஸ் யெல்ட்சின் குண்டுவீசியது ஆகியவற்றை இசைவுடன் பாராட்டி மேற்கோளிட்ட அவர், எழுச்சியாளர்கள் கைவசம் இருக்கும் டேமா மற்றும் பேடா நகரங்கள்மீது இவைபோல்தான் நடக்கும் என்று உதாரணம் காட்டினார். எதிர்ப்பாளர்களைதூக்கிலிடப்போவதாகஅச்சுறுத்திய அவர், அமெரிக்கா வாக்கோ படுகொலை நடத்தியதற்கு ஒப்பாக இதைச் சாதகமான முன்னோடிச் செயலாகக் குறிப்பிட்டார்.

தன்னுடைய ஆதரவாளர்கள்வீட்டிற்கு வீடு லிபியாவில் சென்று தூய்மைப்படுத் வேண்டும்என்று அழைப்புவிடுத்த கடாபி ஏகாதிபத்திய ஆதரவிற்கும் வெளிப்படையான முறையீட்டை வெளியிட்டார்; லிபியாவின் இரண்டாம் பெரிய நகரமான பெங்காசி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பிடியில் விழுந்து கொண்டிருக்கிறது என்றும்அல் கேய்டாவிற்கு இது ஒரு தளத்தைக் கொடுக்கும்என்றும் கூறினார்.

உண்மையில் இந்த எழுச்சியில் எத்தகையை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பிற்கும் கணிசமான பங்கு இருப்பதாகச் சான்றுகள் ஏதும் இல்லை; இது பொருளாதாரக் குறைபாடுகளின் உந்துதலால் நிகழ்கிறது; லிபியாவை வட்டார மற்றும் பழங்குடிப் பிழை முறைகளினால் பிளவுபடுத்தியுள்ளது; இதை கடாபி திறமையுடன் தன்னுடைய 41 ஆண்டு ஆட்சியில் திரித்து கையாண்டுள்ளார்.

முகாம்களில் இருந்து வளர்ந்த ஒரு புரட்சியாளர்என்று தன்னைப் பிரகடப்படுத்திக் கொண்டு, ஒருதியாகியாகஇறப்பதற்கும் தயாராக இருப்பதாக கடாபி கூறினாலும், அவர் லிபியாவின் மகத்தான எண்ணெய் இருப்புக்களில் இருந்து பெரும் செல்வக் கொழிப்பை ஈட்டியுள்ள முதலாளித்துவ குறுகியத் தன்னலக்க குழுவின் நலன்களுக்குத்தான் ஆட்சி நடத்துகிறார். இந்த நாடு எண்ணெய் உற்பத்தியில் ஒன்பதாம் இடத்தைக் கொண்டுள்ளது; இத்தாலி இன்னும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கிய எண்ணெய் அளிக்கும் நாடாக உள்ளது.

தன்னுடைய ஆட்சியின் முதல் தசாப்தங்களில் வெகுஜன ஆதரவைப் பெற்றிருந்தாலும் இதில் 1980 களில் ரேகன் நிர்வாகத்துடன் தீவிர மோதல் காலமும் அடங்கியிருந்ததுகடாபி பெருகிய முறையில் தனிமைப்பட்டு, செல்வாக்கிழந்து விட்டார். அவருடைய தொலைக்காட்சி அழைப்பை மதித்து ஒரு சில நூறு ஆதரவளார்கள்தான் டிரிபோலியில் பசுமைச் சதுக்கத்திற்கு வந்தனர்; அவர்களுள் பெரும்பாலானவர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆவர்.

எழுச்சி பரவுகையில், பல உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆட்சியைவிட்டு நீங்கினர். மிகச் சமீபத்தியவர், உள்துறை மந்திரியும் Thunderbolt கமாண்டோப் பிரவுத் தளபதியும், லிபிய முடியாட்சியை 1969ல் அகற்றிய காலத்தில் இருந்து கடாபியின் விசுவாசியுமாக இருக்கும் Abdel Fattah Younis ஆவார்.

பெங்காசியில் செவ்வாயன்று தான் எழுச்சியாளர்களுடன் சேர்ந்துவிடுவதாக யூனிஸ் அறிவித்து மற்ற இராணுப் படைகளையும் கடாபியுடன் முறித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். பெங்காசியில் முதல் பொது எழுச்சித் தேதி பற்றிக் குறிப்பிட்டு அவர் அல்ஜசீராவிடம், “பெப்ருவரி17 புரட்சியை எதிர்கொள்ளும் வகையில் நான் என் பதவிகள் அனைத்தையும் துறந்துவிட்டேன், என்னுடைய நம்பிக்கை அதில் நியாயமான கோரிக்கைகள் உள்ளன என்பதாகும்என்றார்.

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கிட்டத்தட்ட பாதிக் கடலோரப் பகுதியின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர்; இங்குதான் லிபியாவின் பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர்; இது எகிப்திய எல்லையில் இருந்து சிர்ட்டே நகர் வரை, மேற்கே 600 மைல்கள் படர்ந்துள்ளது. பெங்காசிக்கு மேற்கே உள்ள அட்ஜபியா மக்கள் அருகிலுள்ள எண்ணெய் நிலையங்கள், குழாய்த்திட்டங்கள் மற்றும் ஜுவெட்டா எண்ணெய்த் துறைமுகத்தை காத்தனர் என்று செய்தி ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள நகரங்களில் சிதறிய முறையில் போர்கள் நடந்தன; இவற்றில் டிரிபோலியும் அடங்கும்; ஆனால் கடாபியின் படைகள் செவ்வாயன்று அங்கு கட்டுப்பாட்டைக் கொண்டது போல் தோன்றியது. தலைநகரத்திற்கு 50 மைல் தொலைவில் உள்ள சப்ரடாவில், லிபிய இராணுவம் பாதுகாப்புப் பணிகளின் அலுவலகங்களை எதிர்ப்பாளர்கள் தாக்கி அழித்துவிட்டதை தொடர்ந்து அங்கு லிபிய இராணுவம் நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆன்லைன் Quryna செய்தித்தாள் அறிவிக்கிறது.

அல்ஜசீரா மற்றும் மேலைச் செய்தி ஊடகங்களுடன் பேசிய டிரிபோலி மக்கள் ஞாயிறு மற்றும் திங்கள் அன்று பாதுகாப்புப் படையினர் காட்டுமிராண்டித்தனமாக கடாபியை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை கனரக ஆயுதங்கள், டாங்குகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஜெட் விமானம் மூலம் கூடத் தாக்கியதில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தனர். டிரிபோலியில் மட்டும் 250 க்கு மேல் இறப்பு எண்ணிக்கை இருக்கும் என்று அல்ஜசீரா மதிப்பீடு செய்துள்ளது.

இரு லிபிய Mirage F1 ஜெட் போர் விமானங்கள் திங்களன்று மால்ட்டாவில் இறங்கின; அதில் இருந்த விமான ஓட்டிகள் தாங்கள் டிரிபோலிக்கு அருகே உள்ள ஒக்பா பின் நபே தளத்தில் இருந்து வரும் கேர்னல்கள் என்று கூறி, எதிர்ப்பாளர்கள்மீது குண்டுபோட வேண்டும் என்ற கட்டளையே ஏற்க மறுத்து எழுச்சியாளர்கள் பக்கம் வந்துவிட்டனர்.

ஞாயிறு இரவு மற்றும் திங்கள் காலையில் டிரிபோலியின் மத்திய மருத்து அவசரப் பிரிவில் குறைந்தபட்சம் 40 பேர் துப்பாக்கிக் காயங்களுக்காக சிகிச்சை பெற்றனர்; மற்றொம் ஒரு 12 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும்போதே இறந்து விட்டனர். பல இறப்புக்கள் இருந்தன என்பதை ஒட்டி, மருத்துவமனையில் மருந்துகள் தீர்ந்துவிட்டதால், பல பாதிப்பாளர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். டிரிபோலியின் டஜௌரா மற்றும் பஷ்லௌம் பகுதிகளில் சுவர்கள் முழுவதும் தோட்டாத் துளைகள் இருந்தன; தெருக்களில் இறந்தோரும் காயமுற்றோரும் கிடந்தனர்.

“Land Cruisers குழுவினர் பலர் முகமூடி அணிந்து, இராணுவச் சீருடையுடன் கனரகத் துப்பாக்கிகளுடன் என் தெருவழியே நகரமையத்திற்குச் சென்றனர்என்று நகரவாசி வாஷிங்டன் போஸ்ட்டிடம் Skype வழியே கூறினார். “அவர்கள் ஆட்சியின் படைப்பிரிவினர். இன்று இரவு எங்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்…. ஹெலிகாப்டர்கள் டிரிபோலி தெருக்களில் நடப்பவர்கள்மீது குண்டுகளைப் போடுகின்றன.”

அசோசியேட்டட் பிரஸ் கூற்றுப்படி இராணுவத்தினர்எந்த நகரும் மனிதரையும்உயிர்த்த வெடிமருந்துகளால் சுடுகின்றனர். அம்புலன்ஸ் வாகனங்களும் விட்டுவைக்கப்படவில்லை. நகரவாசி AP இடம் கூறினார்: “தெருக்களில் சடலங்கள் நிறைந்துள்ளன காயமுற்றோர்களும், குருதி கொட்டுபவர்களும் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை, அம்புலன்ஸும் இவர்களை மீட்டு அங்கு கொண்டு செல்ல முடியாது. எவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாது, எவரேனும் நகர்ந்தால் சுட்டுக் கொல்லப்படுவர்.”

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஒரு டிரிபோலி வணிகரைப் பேட்டி கண்டது; அவர் தானியங்கி ஆயுதங்களை வைத்துள்ளவர்கள் திங்கள் அதிகாலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடாபியின் மகன் Seif al-Islam இன் தொலைக்காட்சி உரையை அடுத்துச் சுட்டனர் என்றார். “எல்லா இடங்களிலும் உடல்கள் சிதறிக்கிடந்தனஎன்ற அவர் நான்கு ஹெலிகாப்டர்கள் நகரத்திற்கு மேலே பகலில் பறந்து எதிர்ப்பாளர்கள்மீது குண்டு வீசின என்றும் சேர்த்துக் கொண்டார்.

மற்றொரு நகரவாசி McClatchy செய்தி நிறுவனத்துடன் பேசியபோது, தான் 70 சடலங்களை மத்திய டிரிபோலியின் பசுமைச் சதுக்கத்திற்கு அருகே ஒரு பூங்காவில் பார்த்ததாகக் கூறினார். “இடைவிடாமல் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. அடிப்படையில் ஒரு போர்ப்பகுதியாகத்தான் இது உள்ளது.”

டிரிபோலிக்கு அருகே உள்ள சார்யான் நகரத்தின்மீது எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டைக் கொண்டு, மெஸ்லலா பொலிஸ் நிலையத்தை எரித்து  டர்ஹுனாவிற்கு அணிவகுத்துச் சென்றனர்; அங்கு போலிசும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து கொண்டது. அல் ஜவியா, மிஸ்ரடா மற்றும் கோம்ஸ் என்னும் டிரிபோலிக்கு அருகே உள்ள சிறு நகரங்களும் எழுச்சியாளர்களின் வசம் உள்ளன.  

கிழக்கே ஞாயிறு காலை ஆயுதமேந்திய மக்கள், பொலிஸ் மற்றும் எழுச்சிபெற்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் பெங்காசியிலும் மற்ற நகரங்களிலும் தெருக்களில் உள்ள மக்களுடன் சேர்ந்த அளவில் கடாபி ஆட்சியின் சக்தி சரிந்தது. 250க்கும் மேற்பட்டவர்கள் பெங்காசியில் மட்டும் கொல்லப்பட்டனர் என்று மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

லிபியாவின் மூன்றாம் பெரிய நகரமான அல் பேய்டாவில் நடந்த எழுச்சியின்போது 26 பேர் கொல்லப்பட்டனர் என்று நகரவாசி மரான் அல் மஹ்ரி ராய்ட்டர்ஸிடம் தொலைபேசி மூலம் கொடுத்த தகவல்படி தெரிகிறது. டாங்குகள் மற்றும் விமானங்களில் இருந்து எதிர்ப்பாளர்கள் தாக்கப்படுகின்றனர் என்றார் அவர். “இப்பொழுது நாங்கள் செய்யக்கூடிய ஒரே செயல் விட்டுவிட முடியாததுதான், சரணடையக்கூடாது, பின்வாங்குதல் கூடாது.” “எப்படியும் இறக்கப்போகிறோம், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் அவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. இது இனப் படுகொலை ஆகும்.” என்றார்.

மற்ற சாட்சிகள் பொலிஸ் மற்றும் இராணுவத் துருப்பினர் அல் பேய்டாவில் மோதினர்; பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு இராணுவம் நகரத்தைவிட்டு வெளியேறுமாறு செய்தனர். நாட்டின் கிழக்குப் பகுதி முழுவதும், ஆயுதமேந்திய மக்கள் தெருக்களிலும், சிறு நகங்களிலும் பெரிய நகரங்களிலும் ரோந்து வருகின்றனர்; கடாபி ஆட்சியின் பாதுகாப்புப் படையினர் மறைந்துவிட்டனர்.

உள்துறை மந்திரி யூனிஸ் எழுச்சியாளர்களுடன் சேர்ந்துகொண்டது சமீபத்திய உயர்மட்ட இராஜிநாமாக்களில் ஒன்றாகும்; நீதித்துறை மந்திரி முஸ்தாபா மஹ்மத் அபுத் அல் ஜெலீல் மற்றும் டஜன் கணக்கான லிபிய தூதர்கள், ஆட்சியின் ஐ.நா., அரபு லீக் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்கா, சீனா, இந்தியா, இந்தோனிசியா, பங்களாதேசம், மலேசியா, போலந்து, ஆஸ்திரேலியா உட்பட இராஜிநாமா செய்துள்ளனர்.

ஏகாதிபத்திய சக்திகளின் முக்கிய கவலை, லிபிய எண்ணைய் தொழில்துறையில் தங்கள் நலன்களை பாதுகாத்தல், தங்களுடைய நலன்களுக்காக சொந்த இராணுவத்தை அறிமுகப்படுத்துதல் என்று உள்ளது. கடற்படைக் கப்பல்கள் மற்றும் இராணுவத் தளவாட போக்குவரத்து ஜெட் விமானங்களும் அரை டஜன் ஐரோப்பிய நாடுகளில் இருந்து, நெதர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி உட்பட, ஏற்கனவே இந்த முன்னாள் இத்தாலிய குடியேற்றப்பகுதிக்கு விரைந்துள்ளன.

இத்தாலிய வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டனி கெய்ரோவிற்குச் சென்றிருக்கையில்லிபியாவில் தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போர் என்ற ஆபத்துள்ளது; இத்தாலிக்கு ஏராளமானோர் குடிபெயரக்கூடும்என்ற கவலையை வெளிப்படுத்தினார். இதே கவலை இத்தாலிய அரசாங்கத்தாலும் துனிசியவிற்கு பாதுகாப்புப் படைகளை அனுப்ப போலிக் காரணமாயிற்று.

இரு பெரும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான இத்தாலியின் ENI, ஸ்பெயினின் Repsol ஆகியவை உற்பத்தியையும் ஏற்றுமதிகளையும் நிறுத்தி வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தொழிலாளர்களை அனுப்பத் தொடங்கியுள்ளன. ஷெல், BP மற்றும் ஜேர்மன் வின்டர்ஷல் என்னும் BASF ன் துணை நிறுவனம் ஆகியவையும் இதையே செய்துள்ளன.

அரபு லீக் மற்றும் ஐ.நா.பாதுகாப்புக் குழு ஆகியவை, லிபிய நெருக்கடியில் தலையிடவும், ஏற்கனவே இப்பகுதி முழுவதும் படர்ந்துள்ள இயக்கத்திற்கு புதிய ஊக்கம் தரும் வகையில் புரட்சி வெடிப்பு நடப்பதை கட்டுப்படுத்துவதற்காகவும், செவ்வாயன்று அவசர கூட்டத்தை நடத்துகின்றன