WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
எகிப்து
Egyptian
junta clamps down on strikes
எகிப்திய இராணுவ ஜூண்டாக்
குழு வேலைநிறுத்தங்களுக்கு தடைவிதிக்கிறது
By Chris
Marsden
23 February 2011
ஜனாதிபதி
ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட்டதை தொடர்ந்து நிலவும் சமூக அமைதியின்மையை எதிர்கொள்ளும்
வகையில் எகிப்தின் இராணுவ ஆட்சி வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கப் போவதாக
அச்சுறுத்தியுள்ளது.
பெப்ருவரி
14 தொடங்கி
எகிப்தில் வேலைநிறுத்த அலையொன்று வெடித்துள்ளது.
தொழில்துறை
நடவடிக்கையானது ஜவுளி ஆலைகளை,
இரசாயன,
பெட்ரோக்கெமிக்கல்
ஆலைகள் மற்றும் கெய்ரோவின் விமான நிலையத்தையும் மூடிவிட்டது.
வங்கிகளும் அரசாங்க
அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.
மூலோபாய சூயஸ்
கால்வாயில் கிட்டத்தட்ட
1,500 தொழிலாளர்கள்
இஸ்மைலியா,
சூயஸ் மற்றும்
போர்ட் செயித்தில் பெப்ருவரி
17 அன்று
எதிர்ப்புக்களை நடத்தியதுடன்,
நல்ல ஊதியங்கள்,
மருத்துவக் காப்பீடு
ஆகியவற்றைக் கோரினர்.
எதிர்ப்புக்களில்
தொழில்நுட்ப வல்லுனர்களும் நிர்வாகிகளும் அடங்கியிருந்தனர்.
அல்-மஹல்லா
அல்-குப்ராவிலுள்ள
மிசர் நூற்பு,
நெசவு ஆலையில்
கிட்டத்தட்ட
15,000 தொழிலாளர்கள்
ஈடுபட்ட மிகப் பெரிய,
முக்கியமான மோதல்
நடந்தது.
நைல் முகத்துவார நகரத்தில்
24,000 பேரை
வேலைக்கு அமர்த்தியுள்ள எகிப்தின் மிகப் பெரிய ஆலை வேலைநிறுத்தத் தளமாயிற்று.
பெப்ருவரி
10ம்தேதி தொடங்கிய
உள்ளிருப்புப் போராட்டம் முபராக்கின் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டதற்கு
ஏற்படுத்தப்பட்டது,
அவருடைய வீழ்ச்சியை
மறுநாள் விரைவுபடுத்தியது.
மீண்டும் பெப்ருவரி
14ம் தேதி போராட்டம்
துவங்கியது—இப்பொழுது
ஊதிய உயர்வுகளுக்கும்,
நிர்வாகத்தின்
தலைவர் மற்றும் மூன்று பிற நிர்வாகிகள் இராஜிநாமா மற்றும் சுயாதீன தொழிற்சங்கம்
கோரியும் இது நடைபெறுகிறது.
எகிப்திய
ஜவுளித் தொழில்துறை நாட்டின் மொத்த தொழிலாளர் தொகுப்பில்
48 சதவிகிதத்தினரை
பணியில் இருத்தியுள்ளது.
இதைத்தவிர,
Dakietta நூற்பு
மற்றும் நெசவு தொழிற்சாலையிலும்
6,000 தொழிலாளர்கள்
வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.
பெப்ருவரி
18 வெள்ளியன்று,
இரு முன்
எச்சரிக்கைகளுக்குப் பின்,
எகிப்தின் இராணுவம்
இப்பொழுது வேலைநிறுத்தம் சட்டவிரோதம் எனக் கருதப்படும் என்று அச்சுறுத்தியது.
ஆயுதப் படைகளின் அதி
உயர் தலைமைக்குழு
“இச்சட்டவிரோதச்
செயல்கள் தொடர்வதை அனுமதிக்காது,
இவை நாட்டிற்கு
ஆபத்தை அளிப்பவை,
தலைமைக்குழு அவற்றை
எதிர்கொள்ளும்”
என்று அது
அறிவித்தது.
சில
குழுக்கள்
“உற்பத்தியை
தடுக்கும் எதிர்ப்புக்களை அமைக்கின்றன,
பொருளாதாரச்
சூழ்நிலையில் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.
இவை நாட்டின்
பொருளாதாரத்தை மோசமாக்கும் தன்மை உடையவை”
என்று இராணுவம்
கூறியது. “உறுதியற்ற
தன்மை அதன் விளைவுகள் தொடர்வது தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும்.”
முபாரக்
அகற்றப்பட்டு ஒரு வாரம் கடந்ததை களிக்கும் விழா நடந்த மறுதினம் வேலைநிறுத்தங்கள்,
தொழில்துறை
நடவடிக்கையை தடைசெய்யும் ஆணை வந்தது.
எரிசக்தித்துறை
நிர்வாகி ஒருவரான வாலிட் அப்தெல்-சத்தார்
கூறினார்: “முன்னரே
இந்த அறிவிப்பு வந்திருக்க வேண்டியது என்றாலும்,
இராணுவம் மக்களை
தங்கள் கோரிக்கைகளுக்குக் குரல் கொடுக்கவும் சுதந்திர உணர்வைக் களிக்கவும் ஒரு
வாய்ப்பை அனுமதித்தது என்று நினைக்கிறேன்.”
இராணுவ
ஜூண்டாக் குழு உண்மையான
“சுதந்திரத்தை பற்றி”
கவலைப்பட்டதில்லை.
அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில்,
Centre for Trade Union and Workers’ Services
அமைப்பு அன்று மிசர் நூற்பு
ஆலைத் தொழிலாளர்கள் நான்காவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகின்றனர்
என்றும் “அவர்களுடைய
முக்கிய கோரிக்கையான நிறுவனத்தின் தலைவர் அகற்றப்படும் வரை எதிர்ப்பை நிறுத்த
மறுத்துவிட்டனர்”
என்றும் கூறினார்.
ஞாயிறன்று
மிசர் வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்தது.
வேலைநிறுத்த
தலைவர்களில் ஒருவரான பைசல் நவோஷா
AFP இடம்,
“நாங்கள்
வேலைநிறுத்தத்தை முடித்து விட்டோம்,
ஆலை செயற்படுகிறது.
எங்கள் கோரிக்கைகள்
ஏற்கப்பட்டுள்ளன”
என்றார்.
இதில் ஊதிய உயர்வு
25 சதவிகிதம்
மற்றும் ஊழலில் தொடர்புடைய ஒரு நிர்வாகி அகற்றப்பட்டதும் அடங்கும்.
வங்கிகளும்
ஞாயிறன்று மறுபடியும் திறக்கப்பட்டன.
எகிப்தின் மத்திய
வங்கி பெப்ருவரி
14ம் தேதி
வேலைநிறுத்தங்கள்,
உள்ளிருப்புப்
போராட்டங்கள் என்று முந்தைய தினம் அனைத்துக் கிளைகளிலும் இருந்ததையடுத்து மூடியது.
அஹ்ரம் ஆன்லைன்
தகவலின்படி, “ஊழியர்கள்
தங்கள் கோரிக்கைகளைக் கைவிட்டுவிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்”
வங்கி ஊழியர்கள்
“நிர்வாகக் குழு
இயக்குனர் முறை,
ஊதியங்களில் பெரும்
வேறுபாடுகள் ஆகியவற்றை எதிர்க்கின்றனர்…
எதிர்ப்பாளர்கள்
தங்கள் கோரிக்கைகளை எகிப்திய மத்திய வங்கிக்குத் தெரிவிப்பதற்கு
10 முதல்
20 உறுப்பினர்கள்
அடங்கிய குழுக்களை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
குழுக் கூட்டங்கள்
திங்களன்று தொடங்கவுள்ளன.
எகிப்தின் இரண்டாவது
பெரிய வங்கியான பாங்க் மிசரில் ஊழியர்கள் ஏற்கனவே தங்கள் பேரம் பேசுபவர்களை
நியமித்து,
மத்திய வங்கி
நிர்வாகத்தின் மேலாளர்கள் அவர்களின் பிரதிநிதிகளாக இருக்காலம் என்று கோரியதை
நிராகரித்துவிட்டனர்.”
ஞாயிறன்றே,
அரசாங்கத்திற்கு
சொந்தமான செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களின் செய்தியாளர்கள்
Journalists’ Syndicate
க்கு முன் எதிர்ப்புத்
தெரிவித்து இராணுவக் குழு தலைமை ஆசிரியர்களையும் நிர்வாக ஆசிரியர்களையும் மாற்ற
வேண்டும்,
அவர்கள் ஊழல்,
பாசாங்குத்தனம்
நிறைந்தவர்கள் என்ற குற்றமும் சாட்டப்பட்டது.
அல் அஹ்ரம்
நாளேட்டின் தலைமை ஆசிரியரான ஒசாமா சரயாவின் அலுவலகத்தை இராணுவப் பொலிஸ் சூழ்ந்து
திட்டமிடப்பட்டிருந்த எதிர்ப்புக்களில் இருந்து அவரைப் பாதுகாக்க முற்பட்டது.
தொழிலாள
வர்க்கத்தை நேரடியாக நசுக்குவதுடன்,
இராணுவ ஆட்சிக்குழு
முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ
“எதிர்ப்பு
இயக்கங்களையும்”
ஆட்சியில் இணைத்துக்
கொள்ள முயல்கிறது.
இது ஜனநாயக முறை,
சிவிலிய ஆட்சி
மாற்றத்திற்கு தயாரிப்பு நடக்கிறது என்னும் கூற்றுக்களுக்கு நம்பகத் தன்மை
கொடுப்பதற்காக செய்யப்படுகிறது.
நேரடி
இராணுவ ஆட்சிக்கு ஜனநாயக சார்பில் வருபவர்கள் என்று கூறப்படுபவர்களிடையேயுள்ள
போட்டியை பற்றிய இழிந்த நிலைப்பாடு,
இராணுவ ஆட்சியானது
தொழிலாள வர்க்கத்தை பெரும் அடக்குமுறையைக் கையாளும்போதே,
அத்துடன் விவாதிக்கத் தயார் என்று கூறுவதில் நன்கு புலனாகிறது
முபாரக்
மற்றும் அவருக்குப் பதிலாக வந்த துணை ஜனாதிபதி ஒமர் சுலைமான்,
இராணுப் படைகளின்
தலைமைத் தளபதி மஹ்மத் ஹுசைன் தன்டவி போன்றோருடன் மௌசா நெருக்கமான நண்பர் ஆவார்.
எழுச்சியின்போது
மௌசா முபாரக் அவருடைய
30 ஆண்டுச்
சர்வாதிகாரத்தை உத்தியோகபூர்வமாக வரைகாலம் முடியும் வரை அனுமதிக்க வேண்டும் என்று
ஆர்ப்பாட்டக்காரர்களிடையே வலியுறுத்துவதற்குத்தான் எதிர்த்தரப்பினராக
முன்னேற்றுவிக்கப்பட்டார்.
இப்பொழுதும்கூட மௌசா
ஸ்பெயினின் எல் பைசிடம்,
“தற்பொழுது அவர்
ஓய்வு பெற்றுள்ளார்,
நாம் அவரை உரிய
மரியாதைகள் அனைத்துடனும் முன்னாள் ஜனாதிபதியாக நடத்த வேண்டும்”
என்று கூறினார்.
இதே
பேட்டியில் அவர் ஒரு ஜனநாயக முறைக்கான மாற்றம் மற்றும் எதிர்ப்பை சிதைக்கச்
செய்யும் இராணுவத்தின் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்தார்.
“இராணுவ தலைமைக்குழு
பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அரசியலமைப்புச்
சீர்திருத்தங்கள்,
பாராளுமன்றத்தை
கலைத்தது,
மக்கள் மீண்டும் பணிக்குச்
செல்ல வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது,
அமைதியை மீட்பது
ஆகியவை இதிலடங்கும்.”
முஸ்லிம்
சகோதரத்துவக் கட்சியின் ஆட்சியுடன் விவாதங்களைக் கொண்டு சுதந்திரமும்,
நியாயமும் என்று
அழைக்கப்படும் ஒரு கட்சியை நிறுவ முயல்கிறது.
இந்த ஆண்டு ஜனாதிபதி
பதவிக்கு அது ஒரு வேட்பாளரை நிறுத்தாது.
அடுத்த
பாராளுமன்றத்திலும் கால் பகுதி இடங்களுக்குத்தான் போட்டியிடும்.
இது எகிப்தின்
இராணுவ ஆட்சியாளர்களுக்குக் காட்டும் விசுவாசத்தின் அடையாளம் ஆகும்.
ஞாயிறன்று
நீதிமன்றங்கள் ஒரு புதிய கட்சிக்கு ஒப்புதல் கொடுத்தன.
அல் வசல் கட்சி
(மத்திய கட்சி)
என்று அழைக்கப்படும் இது முன்னாள் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி
உறுப்பினர்களான அபௌல் எலா மடி மற்றும் எஸ்ஸம் சுல்தான் ஆகியோரால்
வழிநடத்தப்படுகிறது
வணிக
நலன்கள் மற்றும் முன்னாள் ஆட்சியின் பிரதிநிதிகள் ஆகியோரால்
நேரடியாகப்
பிரச்சாரப்படுத்தி நிதி கொடுக்கப்படும் மற்ற கட்சிகளும் நிறுவப்படுகின்றன.
ஆரம்ப
எதிர்ப்புக்களுக்கு உதவிய ஒரு கூகுள் நிர்வாகி வேல் கோனிம் இப்பொழுது முபாரக்கின்
தேசிய ஜனநாயகக் கட்சி
(NDP) உடன் ஒரு
புதிய அரசியல் கட்சியை நிறுவுவதற்காகப் பேச்சுக்களை நடத்துகிறார்.
இதில்
NDPயின் முன்னாள்
தலைவர் ஹொசம் பட்ரவியும் அடங்குவார்.
அப்தெல்
மொனிம் இமாம் முன்னாள் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவரான மஹ்மத் எல்பரடெய்க்கு
ஆதரவு கொடுக்கும் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
இவர் ஒரு புதிய
கட்சியை அமைப்பதற்காக
Orascom Telecom
நிறுவனமான SAE
உடைய தலைவர்
Naguib Sawiris உடன்
பேச்சுக்களை நடத்துகிறார்.
இத்தந்திரோபாயங்கள் இராணுவப் படையின் அதி உயர் தலைமைக்குழு,
“தற்போதைய உறுதியற்ற
அரசியல் நிலைமை புதிய அரசியலமைப்பை அனுமதிக்கவில்லை”
என்று கூறும்போதே
நடைபெற்று வருகின்றன.
இராணுவக்
குழுவின் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் முயற்சியில் ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும்
தங்கள் பங்கைக் கொண்டுள்ளன.
கடந்த சில
நாட்களாக மௌசா அமெரிக்க வெளிவிவகார துணை செயலர்
(அரசியல்
விவகாரங்கள்)
வில்லியம் பர்ன்ஸ்
மற்றும் வெள்ளை மாளிகை ஆலோசகர் டேவிட் லிப்டனுடன் கெய்ரோவில் அரபு லீக்
உச்சிமாநாட்டிலும் அது நடக்கும் காலத்திலும் தீவிர விவாதங்களை மேற்கொண்டார்.
பர்ன்ஸ் தன்னுடன்
எகிப்திய அரசாங்கத்திற்கு
“நடக்கவுள்ள
மாற்றத்திற்கு ஆதரவு என்னும் முறையில்”
150 மில்லியன் டொலர்
நிதியை பரிசாகக் கொண்டுவந்துள்ளார்
“தலைமைச்
செயலாளர் அமர் மௌசாவுடன் எகிப்திய நகர்வுகள் மற்றும் அப்பிராந்தியத்தைச் சுற்றிய
நிகழ்வுகள் பற்றி ஆர்வமுடைய,
விரிவான உரையாடலை
முடித்தேன்.
எப்பொழுதும் போல்
இப்பொழுதும் நிறையக் கற்றேன்”
என்று அவர் செய்தி
ஊடகத்திடம் கூறினார்.
ஐரோப்பிய
ஒன்றிய வெளியுறவு,
பாதுகாப்புக்
கொள்கைத் துறையின் உயர் பிரதிநிதி கத்ரின் ஆஷ்டன் ஆட்சிக்கு ஒரு பெரிய பானையளவு
நிதி உதவியைக் கொண்டுவந்து,
கெய்ரோவில்
செய்தியாளர்களிடம்,
“ஏற்கனவே இன்னும்
அதிகமாக பில்லியன் யூரோக்களைக் கொடுக்கும் திறன் பற்றியும்,
நிதியத் திட்டங்கள்
மூலம் கொடுப்பது பற்றியும் விவாதித்துள்ளோம்”
என்றார்.
அத்தகைய உதவிக்கு
பிரதிபலன் ஏதும் எதிர்பார்க்கப்படவில்லை என்று இராணுவ ஆட்சிக் குழுவிற்கு
உத்தரவாதம் கொடுத்த அவர் இது ஜனநாயக உரிமைகளுக்குக் கொடுக்கும் மதிப்பு ஆகும்
என்றார். “தன்
வருங்காலத்தை எகிப்து தான் தீர்மானிக்க வேண்டும்.
அதைப் பற்றி நான்
மிகத்தெளிவாக்க விரும்புகிறேன்”
என்றார் அவர்.
இத்தகைய
உதவிகள் இருந்தும்,
இராணுவக் குழு
முகங்கொடுக்கும் நிலைமை வெடிப்புத் தன்மை உடையதாக உள்ளது.
இதன் காரணம் கடாபி
ஆட்சிக்கு எதிராக லிபியாவில் நடக்கும் வெகுஜனப் போராட்டம் மற்றும் மத்திய கிழக்கில்
பிற இடங்களில் நடக்கும் போராட்டங்கள் ஆகும்.
கெய்ரோ
மற்றும் எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான அலெக்சாந்திரியாவிலும் கடாபிக்கு எதிரான
ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
அதேபோல் அல்ஜீரியா,
பஹ்ரைன் தூதரகங்கள்
முன்பும் நடைபெறுகின்றன.
ஒரு பதாகை
“குறிக்கோள்:
அரபு நாடுகள்
விடுவிக்கப்பட வேண்டும்—நேரம் :
இப்பொழுதே.”
“அரபு
நாடுகளின் இராணுவ ஆட்சிகளுக்கு எதிராக மக்கள் ஐக்கியப்பட வேண்டும் என
விரும்புகின்றனர்”
என்று மக்கள்
கோஷமிட்டனர்.
பல மருத்துவ
உதவிகள் நிறைந்த எகிப்திய வாகன வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை லிபியாவிற்கு
செல்ல விரும்புகின்றன.
ஒரு லிபிய
நாட்டினரான அப்துல்,
முபாரக்கிற்கு
எதிரான இயக்கத்தில் தொடர்பு பெற்றிருந்தவர்
ABC யின்
The World Today
நிகழ்ச்சியில் கூறினார்:
“நேற்றோ அதற்கு
முந்தைய தினமோ ஒரு மருத்துவரிடம் நான் பேசினேன்.
காயங்களை
தைப்பதற்குத் தக்க இழை அவர்களிடம் இல்லை….
பல்லாயிரக்கணக்கான
உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
(மருத்துவ மனைகளில்)
இடமே இல்லை.”
இராணுவ
ஆட்சிக்குழு இத்தகைய ஐக்கிய நடவடிக்கையை கட்டுப்படுத்த பொலிசாரை நாடுகிறது.
அரசியல் உறவுகள்
எகிப்து மற்றும் கெய்ரோவிலுள்ள எதிர்ப்பாளர்களுக்கு இடையே பிணைக்கப்படுகின்றன.
இராணுவம்
லிபியாவுடனான எல்லையை வலுப்படுத்துகிறது,
அதே நேரத்தில்
முக்கிய சலும் பாதையை நோயுற்றவர்களையும் காயமுற்றவர்களையும் அனுமதித்து இரு தள
மருத்துவமனைகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. |