WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
விஸ்கான்சன் தொழிளார்கள் போராட்டம் ஒரு புதிய கட்டத்திற்கு
பிரவேசிக்கிறது
Jerry White
21 February 2011
Use this version to print | Send
feedback
கடந்த வாரத்திலிருந்து
மத்தியமேற்கு அமெரிக்க
மாநிலமான விஸ்கான்சனில்,
பத்தாயிரக்கணக்கான மக்கள்
திரண்டிருந்த பெருந்திரளான
தொழிலாள வர்க்க எதிர்ப்பு போராட்டங்கள்
வெடித்துள்ளன.
கால்
நூற்றாண்டாக அமெரிக்காவில்
காணக்கிடைத்திராத தொழிலாள
வர்க்கத்தின் வெளிப்படையான
போராட்டங்களின் மீள்-எழுச்சியின்
ஓர் ஆரம்பக்கட்ட வெளிப்பாடாக
அந்த ஆர்ப்பாட்டங்கள் இருந்தன.
மாநில தலைநகர்
மாடிசனில் குவிந்த
75,000
போராட்டக்காரர்களுடன்,
சனியன்று நடந்த
ஆர்ப்பாட்டங்கள் இதுவரை
நடந்தவைகளிலேயே மிகப் பெரியதாக
இருந்தது.
அரசு
தொழிலாளர்களின் நலன்களை
வெட்டும்,
கல்வி
மற்றும் இதர அத்தியாவசிய
சேவைகளைச் சுருட்டும்,
மற்றும்
1,75,000
மாநில
மற்றும் உள்ளாட்சி அரசு
தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை
உரிமைகளை அழிக்கும் குடியரசுக்
கட்சி ஆளுநர் ஸ்காட் வால்கரின்
திட்டங்களை எதிர்க்க தலைமை
செயலக கட்டிடத்தை முற்றுகையிட்டிருக்கும்
ஆயிரக்கணக்கானவர்களுடன்
அவர்களும் சேர்ந்து கொண்டனர்.
மாநில தலைமை
செயலகத்தைச் சுற்றி நடந்த
ஓர் அணிவகுப்பில்,
ஆசியர்களும்,
தீயணைப்புப் படையினர்
மற்றும் அரசு பணியாளர்களுடன்,
எஃகுத்துறை,
வாகனத்துறை,
கட்டுமானத்துறை
மற்றும் இதர தனியார்துறை
தொழிலாளர்களும்,
மேல்நிலை
பள்ளி மற்றும் கல்லூரி
மாணவர்களும் சேர்ந்தவுடன்
ஒரு போர்குண மனோபாவமும்,
நம்பிக்கையும் காற்றில்
நிரம்பியது.
விஸ்கான்சின்
சம்பவங்கள் என்ன வரவிருக்கின்றன
என்பதற்கு ஓர் அறிகுறியாகும்.
அமெரிக்க தொழிலாளர்கள்
பெருந்திரளான சமூக போராட்டங்களில்
பங்கெடுத்து மொத்தத்தில்
ஒரு தலைமுறை ஆகியிருக்கும்.
AFL-CIO
தொழிற்சங்கங்கள்
தொழிலாள வர்க்கத்தின்
ஒவ்வொரு எதிர்ப்பு அறிகுறியையும்
மறைமுகமாக ஒடுக்க வேலை
செய்துள்ளன.
1981 PATCO
வேலைநிறுத்தத்தின்
காட்டிக்கொடுப்பு—மற்றும்
12,000
விமான போக்குவரத்து
கட்டுப்பாட்டாளர்களை ரீகன்
நீக்கியதில் தொழிற்சங்கங்கள்
உடந்தையாய் இருந்தமை—ஆகியவற்றைத்
தொடர்ந்து ஒரு தசாப்தத்திற்கு
வேலைநிறுத்தங்கள்
தனிமைப்படுத்தப்பட்டு,
தோற்கடிக்கப்பட்டன.
அமெரிக்க
வாழ்க்கையிலிருந்து
வேலைநிறுத்தங்கள் தோற்றப்பாட்டளவில்
காணாமல் போனதானது,
சமூக
சமத்துவமின்மையில் பாரிய
உயர்வு மற்றும் தொழிலாள
வர்க்கத்திடமிருந்து சமூகத்தின்
ஒரு சதவீத பணக்காரர்களுக்கு
செல்வவளம் பாரியளவில்
கைமாறியதோடு பொருந்தி நிற்கிறது.
சமூக பதட்டங்கள்
இப்போது ஒரு கொதிநிலையை
எட்டியுள்ளது.
நிதியியல்
நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து
இரண்டரை ஆண்டுகளுக்குப்
பின்னர்
26
மில்லியனுக்கும்
மேற்பட்ட தொழிலாளர்களால்
ஒரு முழு-நேர
வேலையைக்
காண முடியவில்லை.
பள்ளிகள்,
நூலகங்கள்,
வைத்தியசாலைகள்
மற்றும் ஏனைய மக்கள் நலச்சேவைகளை
மூடுவதன் மூலமாகவும்,
மாநில
மற்றும் பெருநகராட்சி
(municiple)
பணியாளர்களின்
மீது தாக்குதலை நடத்துவதன்
மூலமாகவும்,
ஜனநாயகக்
கட்சியும்,
குடியரசுக்
கட்சியும் இரண்டின்கீழ்
இருக்கும் மாநில அரசாங்கங்களும்,
வரவு-செலவு
கணக்கு பற்றாக்குறைக்கு
விடையிறுப்பைக் காட்டுகின்றன.
இதற்கிடையில்,
2008
உடைவுக்குப் பின்னர்
வோல் ஸ்ட்ரீட் பங்கு மதிப்புகள்
முழுவதுமாக மீண்டு வந்துள்ளன;
பெருநிறுவனங்களும்,
அவற்றின் உயர்மட்ட
நிர்வாகிகளும் முன்னர்
இருந்ததைவிட பணக்காரர்களாகி
உள்ளனர்.
தங்களின்
வேலைகளையும்,
வீடுகளையும்,
வாழ்க்கை சேமிப்புகளையும்
இழந்து வரும் தொழிலாளர்களை
மீட்டெடுக்க ஜனாதிபதி ஒபாமா
ஒரு நயாபைசா அளிக்கவும்
மறுத்துள்ளார்.
அதற்கு
பதிலாக அவர் வோல் ஸ்ட்ரீட்டை
பிணையெடுக்கவும்,
புஷ்
சகாப்தத்தில் பணக்காரர்களுக்கு
அளிக்கப்பட்ட வரி வெட்டுக்களை
மற்றும் பெண்டகனின் யுத்த
எந்திரத்தை நீடிப்பதற்காகவும்,
அத்தியாவசியமாக
தேவைப்படும் ஒரு ட்ரில்லியன்
டாலர்களை சமூக சேவைகளில்
இருந்து வெட்டும் திட்டங்களை
அவர் வரைந்துள்ளார்.
இது
வெறும் ஆரம்பம் மட்டும் தான்.
வெளிப்படையான
வர்க்க மோதலின் எழுச்சி,
அரசியல் நிர்வாக
அமைப்பால் பிரச்சாரம்
செய்யப்பட்ட மாயைகளை
அம்பலப்படுத்தி வருகிறது.
“Tea Party”க்கு
பெருந்திரளான
ஆதரவு உள்ளதாக கூறப்பட்டதும்
இதில் ஒன்றாகும்.
பெரும்பாலும்
ஊடகங்களின் உருவாக்கமாக
இருக்கும்,
பெருநிறுவன
பில்லினியர்களிடமிருந்து
வந்த மில்லியன் கணக்கான
டாலர்களால் தூண்டிவிடப்பட்ட,
ஆளுநர் வால்கரின்
Tea Party
ஆதரவாளர்கள்,
சனியன்று மாடிசனில்
ஒரு சிறிய சோர்ந்துபோன
ஆதரவாளர்களின் கூட்டத்தைத்
தவிர அதற்கு மேற்பட்டு
ஒன்றுதிரட்ட முடியவில்லை.
நகரின் ஏறத்தாழ
ஒவ்வொருவராலும் எதிர்நோக்கப்பட்ட
ஒன்றாக வெளிப்பட்ட கொந்தளித்துவரும்
மக்கள் உணர்வு,
போராட்டங்களுக்கு
ஆதரவாக இருந்தது.
விஸ்கான்சனில்
பல்வேறு கூர்மையான அரசியல்
பிரச்சினைகளை தொழிலாளர்கள்
எதிர்கொண்டுள்ளனர்.
மிக
பிற்போக்குத்தனமான பெருநிறுவனங்கள்
மற்றும் அரசியல் நலன்களின்
ஒரு வெட்கங்கெட்ட பிரதிநிதியாக
இருக்கும் வால்கர் தான்
போராட்டக்காரர்களின் உடனடி
இலக்காக உள்ளார்.
வால்கரைப்
பொறுத்த வரையில் அரசு
பணியாளர்களின் உரிமைகளை
நசுக்குவதென்பது ஒரு கோட்பாட்டு
விஷயமாக உள்ளது.
மேலும்
அது வேலையிடத்தில் சர்வாதிகாரம்
போன்ற அமைப்புமுறைக்கும்
ஒரு கருவியாக உள்ளது.
எவ்வாறாக இருந்த
போதினும்,
விஸ்கான்சினிலும்
ஒட்டுமொத்த நாட்டிலும்
தொழிலாளர்கள்,
ஜனநாயக
கட்சியிலுள்ள மற்றும் இப்போது
பெயரளவிற்கு போராட்டங்களின்
தலைமையில் உள்ள தொழிற்சங்க
அதிகாரிகளின் நேரடியான
எதிரிகளுக்கு குறைவில்லாமல்
முகங்கொடுத்து வருகின்றனர்;
உண்மையில் வால்கர்
சட்டமசோதாவிற்கு எதிரான
ஆர்ப்பாட்டங்கள் திடீரென்று
தான் வெடித்தது.
தொழிற்சங்கங்களில்
உள்ள ஜனநாயக கட்சியினரும்,
அவர்களின் கூட்டாளிகளும்
உடனடியாக இந்த போராட்டங்களைத்
தணிக்கவும்,
அவற்றை
அவர்களுக்கு பாதுகாப்பான
வழியில் திருப்பவும் முயற்சிக்க
நகர்ந்துள்ளனர்.
வால்கரின்
சட்டமசோதாவில் உள்ள எல்லா
வெட்டுக்களையும் ஏற்றுக்கொள்வதாகவும்,
ஆனால் பெரும்பாலான
அரசு தொழிலாளர்களின் கூட்டு
பேச்சுவார்த்தை உரிமைகளை
மறுக்கும் ஏற்பாடுகளை மட்டும்
நிராகரிப்பதாகவும் ஜனநாயகக்
கட்சி பிரதிநிதிகளும்,
தொழிற்சங்க தலைவர்களும்
வெளிப்படையாகவே வலியுறுத்தி
உள்ளனர்.
தற்போதிருக்கும்
தொழிற்சங்க வடிவத்தைத் தக்க
வைத்து கொண்டே,
எல்லா
வெட்டுக்களையும் உள்ளடக்கியுள்ள
ஒரு
"சமரசமான"
சட்டமசோதாவில்
நிபந்தனைகளை உருவாக்க அவர்கள்
வேலை செய்து வருகிறார்கள்.
பின்னர் அது வெற்றியாக
அறிவிக்கப்படும்.
மாநிலத்தின்
இரண்டு மிகப்பெரிய அரசாங்க
தொழிற்சங்கங்களை விஸ்கான்சன்
மாநில பணியாளர்கள் சங்கம்
மற்றும் விஸ்கான்சன் கல்வி
கூட்டமைப்பு கழகம்,
இரண்டுமே
தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தும் முகவர்களாக அவற்றின்
சட்டபூர்வ நிலைப்பாட்டை
தக்கவைக்க ஆளுநர் அனுமதித்தால்,
ஆளுநரின் பொருளாதார
கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த
உடன்படுவதாக ஏற்கனவே அவை
ஒப்பு கொண்டுள்ளன.
ஜனநாயகக் கட்சியினர்
தொழிலாள வர்க்கத்தின்
வாழ்க்கை நிலைமைகளை சீரழிக்க
உதவுவதோடு மட்டுமில்லாமல்,
தொழிலாளர்களின் ஜனநாயக
உரிமைகளில் குடியரசு கட்சியினரை
விட அவர்களுக்கு இன்னும்
அதிக ஆர்வம் ஒன்றும் இல்லை.
பெருநிறுவனங்களுக்கு
எதிராக போராட்டங்களை ஏற்பாடு
செய்யும் மற்றும் போராடும்
தொழிலாளர்களின் உரிமையை
பாதுகாப்பதல்ல அவர்களின்
நோக்கம்,
மாறாக
தொழிலாள வர்க்கத்தின்
போராட்டங்களை ஒடுக்குவதில்
ஒரு முக்கிய கருவியாக நிரூபித்துக்
காட்டியுள்ள தொழிற்சங்க
எந்திரத்தை தக்க வைத்து
கொண்டு,
வெட்டுக்களை
நடைமுறைப்படுத்துவதே ஆகும்.
உண்மையில்,
நியூயோர்க்
மற்றும் கரோலினா போன்ற
மாநிலங்களின் ஆளுநர்கள்,
முக்கியமாக இந்த
நோக்கத்திற்காக தான்
தொழிற்சங்கங்களுக்கு
பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
தொழிற்சங்க
பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில்,
எச்சசொச்ச வருமானத்தின்
ஓர் ஆதாரமாக தொழிலாளர்களை
தக்கவைத்து கொள்வது மட்டும்
தான் அவர்களின் ஒரே கவலையாக
உள்ளது.
அவர்களைப்
பொறுத்த வரையில்,
“
கூட்டு
பேச்சுவார்த்தை உரிமைகளைப்"
பெறுவது என்பது,
தொழில் வழங்குநர்களுடன்
"பேச்சுவார்த்தை
மேஜையில் ஓர் இடத்தை"
தக்க வைத்து கொள்வது
என்பதை மட்டுமே குறிக்கிறது.
இதன்மூலம் அவர்களின்
உறுப்பினர்களின் வேலைகள்
மற்றும் வாழ்க்கை தரங்களை
பேரம்பேசி ஒதுக்கிவிட்டு
தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களை
பார்த்துக் கொள்ள முடியும்.
வரவு-செலவு
கணக்கு வெட்டுக்களின்
தலைவரான
ஜனாதிபதி ஒபாமாவை பொறுத்த
வரையில்,
வால்கர்
மீதான அவரின் விமர்சனத்தை,
தொழிற்சங்கங்கள்
வால்கர் மீது நடத்தும்
தாக்குதலின் பக்கம் திருப்பிவிட்டு
விட்டு,
விஸ்கான்சன்
தொழிலாளர்கள்
"தியாகத்திற்கு"
தயாராக இருக்க வேண்டும்
என்று அவரும் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையால்
திணிக்கப்பட்ட இரண்டு வருட
கூலி உயர்வு-நிறுத்தத்திற்கு
எதிராக மத்திய அரசு தொழிலாளர்கள்
போராட்டத்தில் இறங்கினால்,
இந்த ஜனநாயகக் கட்சி
ஜனாதிபதியின் பிரதிபலிப்பும்
விஸ்கான்சன் ஆளுநரின்
இரக்கமற்ற பிரதிபலிப்பிற்கு
குறைவில்லாமல் இருக்கக்கூடும்.
விஸ்கான்சனிலும்
மற்றும் ஒட்டுமொத்த நாட்டிலும்
தொழிலாளர்களை ஒட்டுமொத்த
அரசியல் அமைப்புமுறையோடும்
நேரடியாக முரண்பாட்டிற்குக்
கொண்டு வரும் வர்க்க போராட்டத்தில்
ஒரு தர்க்கம் உள்ளது.
தொழிலாளர்கள் தங்களின்
அடிப்படை வாழ்வாதாரத்திற்காக
போராடி வருகிறார்கள்.
இருபது சதவீத அளவிலான
சம்பள வெட்டு மற்றும் தங்கள்
குழந்தைகளுக்கான பொதுக்கல்விமுறை,
மாநில பல்கலைக்கழகங்களில்
செய்யப்படும் நாசகரமான
வெட்டுக்களோடு அவர்களால்
வாழ முடியாது.
தொழிற்சங்கங்கள்
மற்றும் ஜனநாயக கட்சி
ஆகியவற்றிற்கும் தொழிலாள
வர்க்கத்திற்கும் இடையிலான
இந்த பிளவு இன்னும் வேகமாக
வளர்ந்து வருகிறது.
ஏற்கனவே
ஞாயிறன்று மாடிசனில்
3,000
ஆசிரியர்கள் கலந்து
கொண்ட ஒரு பெருந்திரளான
கூட்டம்,
தங்களின்
வேலை நடவடிக்கைகளை முடிவுக்கு
கொண்டு வந்து இன்று அவர்களை
வேலைக்குத் திரும்ப செய்ய
தொழிற்சங்க அதிகாரிகளால்
செய்யப்பட்ட முயற்சிகளை
நிராகரித்தது.
இந்த போராட்டத்தை
முன்னோக்கி எடுத்துச்செல்ல
தொழிலாளர்களுக்கு புதிய
கருவிகள் தேவைப்படுகிறது.
அவர்களை மூச்சுத்திணற
செய்ய,
அவர்களின்
நம்பிக்கையைக் கெடுக்க மற்றும்
அவர்களை தோல்வியுற செய்ய
வேலை செய்துவரும் தொழிற்சங்க
எந்திரங்களிலிருந்து அவர்கள்
உடைத்து கொள்ள வேண்டும்.
மாணவர்கள்,
இளைஞர்களையும்
சேர்த்து கொண்டு அரசுதுறை
மற்றும் தனியார்துறையில்
வேலையில் இருப்போர்,
வேலையற்றோர் என
தொழிலாள வர்க்கத்தின்
அனைத்து பிரிவுகளையும் ஒன்றுதிரட்ட
புதிய அமைப்புகள் கட்டப்பட
வேண்டும்.
விஸ்கான்சனில்
தொழிலாளர் போராட்டங்கள்,
வரவு-செலவு
கணக்கில் உள்ள வெட்டுக்களுக்கு
எதிராகவும்,
தொழிலாளர்களின்
அடிப்படை உரிமைகளின்
பாதுகாப்பிற்காகவும் நாட்டிலுள்ள
ஒட்டுமொத்த தொழிலாளர்களின்
போராட்டத்தோடு இணைக்கப்பட
வேண்டும்.
எல்லாவற்றிற்கும்
மேலாக,
ஒரு புதிய
கட்சியும்,
ஒரு
புதிய வேலைத்திட்டமும்
தேவப்படுகிறது.
வரவு-செலவு
கணக்கு வெட்டுக்களுக்கு
எதிரான போராட்டம்,
நாட்டைக்
கொள்ளையடித்திருக்கும்
மற்றும் ஒட்டுமொத்த அரசியல்
அமைப்புமுறையையும் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் பெருநிறுவன
மற்றும் நிதியியல் பிரபுத்துவத்திற்கு
எதிரான போராட்டத்தோடு இணைக்கப்பட
வேண்டும்.
அதாவது
இது சோசலிசத்திற்கான
போராட்டத்தையும்,
சோசலிச
சமத்துவ கட்சியைக் கட்டியமைப்பதையுமே
குறிக்கிறது. |