சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Worker demonstrations, walk-outs spread in Wisconsin        

விஸ்கான்சினில் தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள் பரவுகின்றன

By Tom Eley
18 February 2011

Use this version to print | Send feedback


வியாழனன்று விஸ்கான்சினின் தலைநகரான மாடிசனில் 8 முதல் 20 சதவிகிதம் அரச தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைத்து அவர்களுடைய அடிப்படை பணியிட உரிமைகளை அகற்றும் சட்டத்திற்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆயிரக்கணக்கான மாணவர்களும் பட்டதாரி மாணவர்களும் பெயர் குறிப்பிடுவதை தவிர மற்ற அனைத்திலும் ஒரு வேலைநிறுத்த அலையாகவுள்ள இயக்கத்தில் சேரும் வகையில் வெளிநடப்புச் செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வெளிநடப்புக்கள் பெருகியுள்ளதுடன் மாநிலம் கடந்தும் பரவி வருகின்றன.

சட்டமன்றம் மற்றும் கவர்னரின் மாளிகையும் குடியரசுக் கட்சியினரின் கைகளில் இருக்கையில், இச்சட்டவரைவு விரைவில் செனட், சட்டமன்ற கீழ் பிரிவு மற்றும் கவர்னர் ஸ்காட் வாக்கரின் அலுவலகம் ஆகியவற்றில் விரைவாக்கப்பட்டு வியாழனன்றே சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14 உறுப்பினர்களை உடைய ஜனநாயகக் கட்சியின் செனட் குழு, இதை பிற்பகல் கூட்டத்தொடருக்கு திருப்பி அனுப்பி வைக்கவில்லை. இதையொட்டி வாக்களிப்பதற்கான ஐந்தில் மூன்று பகுதி குறைந்தபட்ச வாக்கு முறிக்கப்பட்டுவிட்டது. குடியரசுக் கட்சியினர்மன்ற அழைப்பு ஒன்றை விடுத்தனர். இதையொட்டி வராத செனட்டர்களை தேடும் பொலிஸ் முயற்சி தொடங்கியது. அவர்கள் வடக்கேயுள்ள இல்லிநோய்ஸ் மாநிலத்திற்கு பறந்து சென்றுள்ளனர் என்று பின்னர் தெரியவந்துள்ளது.

ஜனநாயகக் கட்சியினரின் தந்திர உத்தி தொழிலாள வர்க்கத்தின் பெருகிய எதிர்ப்பைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது. மற்றும் சட்டவரைவு பற்றி பின்புல விசாரணைகளை மேற்கொண்டு தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருடன் கருத்து ஒப்பந்தங்களைக் கொள்வது என்று உள்ளது. குடியரசுக் கட்சியினர் விரைவில் சட்டவரைவை இயற்றிவிட்டால், மாடிசனில் சீற்றம் வெடித்துவிடும் என்று செனட்டர்கள் அஞ்சுகின்றனர். இல்லிநோய்ஸில் மறைவிடத்தில் இருந்து கூறுகையில், ஒரு செனட்டர் இதன் நோக்கம்நிகழ்வுகளை சற்று தாமதப்படுத்துவது என்றார். மற்றொருவர் ஒரு வானொலி நிலையத்திடம் செனட்டர்கள்ஓரிரு நாட்களில் திரும்பி வந்துவிடுவர் என்றார்.

இதற்கிடையில் ஜனநாயகக் கட்சியினர் திரைகளுக்குப் பின்னே ஒரு அழுகிய உடன்பாட்டை காண்பதற்கு முயல்வர். தொழிற்சங்க அதிகாரிகள் பலமுறையும் தாங்கள் மகத்தான ஊதியச் சலுகைகளை வழங்கத் தயார் என்று வலியுறுத்தியுள்ளனர் உண்மையில் தொழிற்சங்கங்கள் இப்பணியைத்தான் விஸ்கான்சின் மற்றும் நாடு முழுவதும் செய்துவருகின்றன அவற்றைச் செயல்படுத்துவதில் அவர்கள் தொடர்பு இருக்கும் வரை. “இது ஒன்றும் எங்கள் ஊதியங்கள், நலன்களைக் காப்பது அல்ல என்று விஸ்கான்சினுடைய கல்விச் சங்கக் குழுவின் தலைவர் மேரி பெல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்: “இது நாங்கள் கூட்டாகப் பேரம் பேசி பேச்சுக்கள் நடத்தும் உரிமையைக் காப்பது பற்றியாகும்.”

தொடர்ச்சியாக இரண்டாம் நாளாக, மக்கட்தொகை 235,000 என்று உள்ள மாடிசனின் பொதுப்பள்ளி முறை முற்றிலும் மூடப்பட்டது. இதற்குக் காரணம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நோய்வாய்ப்பட்டுவிட்டதாக விடுப்பு எடுத்துக் கொண்டதுதான். வியாழனன்று மாடிசனுக்கு அருகேயுள்ள பெரும்பாலான பொதுப்பள்ளிகளும் ஏராளமான ஆசிரியர்கள் வராததால் மூடப்பட்டன.

La Cross மற்றும் Eau Claire ஆகிய மாநிலத்தின் மேற்குப் பகுதிகளிலுள்ள பள்ளிகள் இதேபோல் மூடப்பட்டன. அதேபோல் சிறு நகரங்களிலுள்ள பள்ளி மாவட்டங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டன. ராசைன் உட்பட பல பெரிய மில்வௌக்கி பள்ளி மாவட்டங்களிலும் பள்ளிகள் வியாழன் காலையில் மூடப்பட்டன. ஆனால் மில்வௌக்கி பள்ளி மாநிலத்திலுள்ள பள்ளிகள் மேற்பார்வையாளர் Gregory Thornton வேலைக்கு வராவிட்டால் ஆசிரியர்கள் மீதுகட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததை அடுத்து திறந்திருந்தன.

பள்ளி மூடல்களின் முழுப் பரப்பு இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் இது பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் பாதித்திருக்க வேண்டும். விஸ்கான்சினில் சட்டப்படி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. “நோய் விடுமுறை என்னும் இயக்கம் அவர்களை ஊதிய இழப்பு உட்பட பல அபராதங்களுக்கு உட்படுத்தும்.

ஆயிரக்கணக்கான முதுநிலை பட்டதாரிகள் மற்றும் இளநிலை பட்டதாரிகள் வியாழனன்று விஸ்கான்சின் மாடிசனிலுள்ள பல்கலைக் கழகத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். இது அமெரிக்காவிலுள்ள பெரிய பல்கைலக்கழகங்கள் ஒன்றை ஓரளவிற்கு மூட வைத்தது. ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 2,000 மாணவர்கள் கல்வி வளாகத்தில் இருந்து காபிடோல் கட்டிடத்திற்கு அணிவகுத்துச் சென்றனர்.

அங்கு ஏற்கனவே இருந்த ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டனர். இன்னும் ஏராளமான, ஆயிரக்கணக்கான மாணவர்கள் மாநிலம் முழுவதிலும் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்கள், வாகனங்கள் மற்றும் கார்கள் என்று தொடர் அணிவரிசையில் வந்து இறங்கத் தொடங்கினர்.

பள்ளி மாணவர்கள் வெளிநடப்பும் மாநிலம் முழுவதும் நகரங்கள், சிறுநகரங்களிலுள்ள பள்ளிகளைப் பாதித்தன. இவற்றுள் Madison, Green Bay, Appleton, Eau Claire, La Crosse, Onalaska, Holmen, West Salem, Tomah, River Falls, Platteville, Fennimore, Iowa-Grant, Viroqua, Shullsburg மற்றும் Dodgeville ஆகிய நகரங்கள் அடங்கும். இந்த வெளிநடப்புக்களில் கூட்டாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தனர். இவை பேஸ்புக் மற்றும் பிற சமூக செய்தி ஊடகங்கள் மூலம் ஏற்பாடானதாகக் கூறப்படுகிறது.

விஸ்கோன்சின், மாடிசன் பல்கலைக்கழக வெளிநடப்பை தவிர, நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் Eau Claire, Stout ஆகிய விஸ்கான்சின் பல்கலைக்கழக வளாகங்களில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர்.

விஸ்கான்சின்- Milwaukee பல்கலைக்கழகத்தில் 1,000 பேர் கொண்ட கூட்டம் வியாழனன்று வளாகத்தின் மையப்பகுதியில் குழுமியது. “பல்கலைக் கழகத்திலிருந்து அனைவரும் அங்கு இருந்தனர் என்று ஒரு பட்டப்படிப்பு மாணவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள், பேராசிரியர்கள், TA க்கள், என்று அனைவரும், முழு அரங்கமும் நிறைந்திருந்தது.”

விஸ்கான்சின்-சுபீரியர் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் ஆகியோர் எதிர்ப்பதற்குக் கூடினர். “இந்த மாநிலம் மற்றும் நாட்டில் உழைக்கும் மக்களுடைய கௌரவமான, மனிதத்தன்மை நிறைந்த வாழ்க்கை நடத்துதலின் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதிதான் இது என்பதை நாங்கள் அறிவோம் என்று வரலாற்றுப் பேராசிரியர் ஜோயல் சிப்பரஸ் கூட்டத்தில் தெரிவித்தார். “பொதுத் தொழிலாளர்களின் உரிமைகளை அகற்ற விரும்பும் இதே நபர்கள்தான் நமக்குமூழ்கிவிடுவோம் அல்லது முயற்சி செய்து நீந்தித் தப்ப வேண்டிய சமூகம் என்று நம்மிடம் கூற விரும்புகின்றனர்.” பொருளாதார உயரடுக்கு தூக்கி எறியும் துண்டுகளைத் தின்று வாழும் தொழிலாளர்கள் என்ற நிலைக்கு விஸ்கான்சின் தள்ளப்பட்டுவிடாமல் நாம் பாதுகாப்போம்.”

வியாழன் மாடிசனின் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டங்களை நடத்தி தொடர்ந்தது நான்காவது நாளாயிற்று. மாநிலத்தின் காபிடோல் கட்டிடத்தின் உள்ளும், வெளியேயும் மக்கள் குழுமினர். உண்மையில் ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறதுநூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள், எகிப்தியர்கள் கெய்ரோவில் தஹ்ரிர் சதுக்கத்தை ஆக்கிரமித்ததில் ஊக்கம் அடைந்தவர்கள் மாநிலக் கட்டிடத்தில் இவ்வாரம் முகாமிட்டுள்ளனர்.

வெள்ளியன்றும் ஆர்ப்பாட்டங்கள், வெளிநடப்புக்கள், பள்ளி மூடல்கள் ஆகியவை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.