சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Iran and the Egyptian revolution

ஈரானும், எகிப்திய புரட்சியும்

Bill Van Auken
16 February 2011

Use this version to print | Send feedback

முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் மிர் ஹோசெயின் மௌசாவியும், அவரின் சமகாலத்திய எதிர்கட்சி தலைவர் மெஹ்தி கர்ரௌபியும் விடுத்த ஓர் அழைப்பிற்குப் பிரதிபலிப்பாக, திங்களன்று தெஹ்ரான் மற்றும் ஏனைய ஈரானிய நகர வீதிகளில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். துனிசியாவில் ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலி மற்றும் எகிப்தில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் ஆட்சிகளைத் தலைகீழாக கவிழ்த்திப் போட்ட சமீபத்திய பெருந்திரளான மக்கள் எழுச்சிகளுக்கு ஆதரவாக, வெளிவேஷமாக, இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக, குறிப்பாக, ஆட்சியில் மிக சக்திவாய்ந்த மதகுருவாக இருக்கும் அயாதொல்லாஹ் அலி காமெனிக்கு (Supreme Guardian) எதிராக திரும்பியிருந்த அந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் பொலிஸ் மற்றும் பாஸ்ஜி போராட்டக்குழு உறுப்பினர்களின் விரைவான ஒடுக்குமுறையை முகங்கொடுத்தனர். போராட்டங்களில் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டதாக தெஹ்ரானின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் ஒப்புக் கொண்டன. டசின் கணக்கான மக்கள் காயப்பட்டதாகவும், நூறிலிருந்து 1,500 வரையிலான நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த போராட்டங்கள், வெறுமனே 2009 ஜனாதிபதி தேர்தலில் மௌசாவியின் தோல்விக்குப் பிரதிபலிப்பாக, அமெரிக்க ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட வலதுசாரி ஆர்ப்பாட்டங்களின் ஒரு தொடர்ச்சியா அல்லது மத்தியகிழக்கில் இப்போது சீறிக்கொண்டிருக்கும் ஒருவகையான சமூக அதிருப்தியின் ஏதாவது பரந்த அபிவிருத்தியின் பிரதிபலிப்புகளா என்பது இன்னும் தெளிவாக இல்லை. போராட்டங்களைப் பதிவுசெய்யாமல் இருக்க வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. பெரும்பாலான மேற்கத்திய ஊடகம், மௌசாவி மற்றும் கர்ரௌபி தலைமையிலான பசுமை இயக்கம் என்றழைக்கப்படுவதன் பிரமுகர்களால் அளிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையிலும் மற்றும் ஈரானிய ஆட்சிக்கு வாஷிங்டனின் விரோதத்தால் வர்ணம் பூசப்பட்டதன் அடிப்படையிலும் அவற்றின் செய்திகளை அமைத்துள்ளன.

என்னவாக இருந்த போதினும், ஈரானிய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இரும்புக்கரம் கொண்ட ஒடுக்குமுறையானது, விலையுயர்வுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மையால் தோற்றுவிக்கப்பட்டுள்ள பரந்த மக்களின் கோபம், துனிசியா மற்றும் எகிப்தில் ஏற்பட்ட போராட்டங்களை போன்ற போராட்டங்களுக்குள் நுழைந்து விடக்கூடிய சாத்தியம் இருப்பதைக் குறித்த அதன் அச்சங்களைப் பிரதிபலிக்கிறது.

எகிப்திய புரட்சியைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களின் சொந்த மூலோபாய மற்றும் அரசியல் நலன்களை முன்னெடுக்கும் முயற்சிகளை அடித்தளத்தில் கொண்டிருப்பதாக ஈரானிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. “முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்லாமிய புரட்சியின் பெருமை, உலகளாவிய கூட்டாட்சியின் தூண்களுக்குக் குழிபறித்து கொண்டு, இப்போது துனிசியா மற்றும் எகிப்தில் மக்களைத் தூண்டிவிட்டு வருகிறது. மௌசாவியும், கர்ரௌபியும் எகிப்து மக்களுக்கு ஆதரவாக வீதிகளில் களமிறங்க அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் உண்மையில் அவர்கள் அமெரிக்க மற்றும் சியோனிச ஆட்சியின் திட்டத்திற்கு உதவி வருகின்றனர்,” என்று அரசாங்கத்திற்கு ஆதரவான 233 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.

எகிப்தில் அமெரிக்க ஆதரவுடன் இருந்த முபாரக்கின் ஆட்சியை பதவியிலிருந்து இறக்கிய புரட்சியைப் போன்றே, ஷாவின் வெறுக்கப்பட்ட சர்வாதிகாரத்தை தூக்கிவீசிய 1979 ஈரானிய புரட்சி, பாரியளவில் ஒரு மதசார்பற்ற எழுச்சியாக ஈரானிய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களால் நடத்தப்பட்டது என்பது தான் நிஜம். தற்போதும் இருக்கும், தொழிலாளர்கள் இயக்க தலைவர்களின் காட்டிக்கொடுப்புகள் தான் குறிப்பாக ஸ்ராலினிச துடெஹ் கட்சி தான் அயாதொல்லாஹ் காமெனி மற்றும் ஷியா மதக்குழு அதை கட்டுப்பாட்டில் எடுக்கவும், போர்குணம் மிகுந்திருந்த பரந்த அடுக்கை ஒடுக்கவும், ஈரானிய முதலாளித்துவத்தின் நலன்களுக்கு புரட்சியை அடிபணிய வைக்கவும் அனுமதித்தது.

ஈரானிய ஆட்சி, அவர்களின் எதிர்பலத்தில் எகிப்தைப் போன்றே அதேமாதிரியான ஒரு மக்கள் போராட்டத்தில் ஈரானிய தொழிலாளர்களும் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதைக் கண்டு இப்போது அஞ்சுகிறது. ஏனென்றால் 1979இல் இருந்து, முயற்சிக்க பயந்த, தாவிபாய்ந்துவரும் "சுதந்திர சந்தை சீர்திருத்தங்களை" ஜனாதிபதி மஹ்மொத் அஹ்மதினிஜத் ஆட்சி இடைப்பட்ட காலத்தில் திணித்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஈரானிய ஆளும் மேற்தட்டின் ஆதரவுடன், நாட்டின் 100 பில்லியன் டாலர் விலைவாசி மானிய திட்டத்தைத் துண்டுதுண்டாக்கும் ஒரு வேலைத்திட்டத்தைத் துவக்கிய கையோடு, கடந்த டிசம்பரில் அந்த "சீர்திருத்தங்கள்" தொடங்கின. அதன் உடனடி விளைவாக, எரிவாயு விலைகளின் நான்குமடங்கு உயர்வு, உணவுப்பொருட்களின் திடீர் விலையுயர்வு, தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்களின் உயர்வு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு ஏற்பட்டன.

இத்தகைய முறைமைகளுக்கு எதிராக நிற்காமல், அவற்றை இன்னும் முன்னதாகவும், இன்னும் தீவிரமாகவும் செய்ய தவறிவிட்டதற்காக பசுமை இயக்கம் அந்த அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டியது. ஈரானிய சமூகத்தின் மிகவும் சலுகைபடைத்த அடுக்குகளின் நலன்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஏழை மக்களின் நலவாழ்வு திட்டங்களில் ஆதாரவளங்களை "வீணடித்து வருவதாக" அஹ்மதினிஜத்தை அது ஒரு வெகுஜனவாதி என்று குற்றஞ்சாட்டியது.

தேர்தல்களில் மோசடி செய்யப்பட்டதாகவும், அஹ்மதினிஜத்தும் அவருடைய ஆதரவாளர்களும் தேர்தல் முடிவுகளில் சூழ்ச்சி செய்ததாகவும் மௌசாவியும், அவருடைய ஆதரவாளர்களும் குற்றஞ்சாட்டியதன் அடிப்படையில், பசுமை இயக்கம் முதன்முதலில் 2009இல் அதன் போராட்டங்களைத் தொடங்கியது. இத்தகைய முறையீடுகளுக்கு ஆதரவாக எந்த நம்பத்தகுந்த ஆதாரங்களும் அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஈரானிய மற்றும் மேற்கத்திய குழுக்கள் தேர்தலில் போட்டியிட்டமையும் பெருமளவிற்கு வாக்குகளை உறுதிப்படுத்தியது. “பசுமை புரட்சி" எழுச்சிபெற்ற பகுதிகளாக அழைக்கப்பட்ட, தெஹ்ரானின் மிகவும் வளமான பகுதிகளில் மௌசாவிக்கு இருந்த செல்வாக்கு, அவர் வெற்றி குறித்த விஷயத்தில் பசுமை இயக்கத்தின் நம்பிக்கைக்கு எண்ணெய் வார்த்திருந்தது.

ஈரானிய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு பரந்த புரட்சிகர போராட்டத்தின் அபிவிருத்தியானது, அரசாங்கத்துடன் மட்டுமல்லாமல் மாறாக உழைக்கும் மக்களுக்கு முற்றிலும் எதிராக சமூக நலன்களைக் கொண்டிருக்கும், வலதுசாரி முதலாளித்துவ எதிர்ப்புடனும் உடனடியாக முரண்பாட்டிற்கு வரும்.

சந்தேகத்திற்கு இடமின்றி பல இளம் ஈரானியர்கள் எகிப்திய, துனிசிய மற்றும் அப்பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளின் புரட்சிகர நிகழ்வுகளால் தூண்டப்பட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான ஒரு நிஜமான புரட்சிகர போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில் உள்ள தீர்க்கமான பிரச்சினையென்பது, தனது சுதந்திர-சந்தை வேலைத்திட்டத்தை ஊக்குவிக்கும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நட்புறவை ஜோடிக்க விரும்பும் விருப்பத்துடன், வலதில் நின்றுகொண்டு அரசாங்கத்தை எதிர்க்கும் ஆளும் மேற்தட்டின் பிரிவுகளால் ஏற்பாடு செய்யப்படும் போராட்டங்களில் இருந்தும் அரசியல்ரீதியாக துண்டித்துக் கொள்வதில் தான் உள்ளது. ஜனநாயக உரிமைகளை, சமூக சமத்துவத்தை, ஏகாதிபத்தியத்திடம் இருந்து நிஜமான சுதந்திரத்தை, மௌசாவி போன்ற வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் பாஹ்லாவி பரம்பரையின் எச்சசொச்சங்களுடன் சேர்ந்து செய்யப்படும் ஒரு பொதுவான கூட்டணியின் பக்கம் நின்று ஒருபோதும் அடைய முடியாது.

ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைதிட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் சுயாதீனமாக ஒன்றுதிரட்டும் அடிப்படையில் மட்டும் தான், இத்தகைய சக்திகளிடமிருந்து அரசியல்ரீதியான சுதந்திரத்தை எட்ட முடியும். இத்தகைய ஒரு முன்னோக்கை முன்னெடுப்பதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட, வலதுசாரி மற்றும் பசுமை இயக்கத்தின் முதலாளித்துவம் சார்ந்த கொள்கைகளுக்கு எதிரான ஒரு கட்சி தான், ஈரானிய தொழிலாளர்கள் உருவாக்க வேண்டிய கருவியாக உள்ளது.

ஆனால் பசுமை இயக்கத்தின் அரசியல்ரீதியான கட்டுப்பாட்டில் போராட்டங்கள் இருக்கும் வரையில், அவை ஈரானில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும், அரைத்த மாவையே அரைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய பிரச்சாரத்தைப் போன்றே, சமூக பிற்போக்குத்தனத்திற்கு மட்டுமே உதவும்.

"ஆட்சி மாற்றம்" என்ற அதன் சொந்த மூலோபாயத்தை ஈரானில் முன்னெடுக்கவும், எகிப்து மற்றும் துனிசியாவில் அமெரிக்க கொள்கையால் ஏற்பட்ட அரசியல் வீழ்ச்சியிலிருந்து உலக கண்ணோட்டத்தை திசைதிருப்பவும், வாஷிங்டன் ஈரானிய ஆர்ப்பாட்டங்களை கைப்பற்ற விரும்புகிறது.

செவ்வாயன்று பேசும் போது, போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒடுக்குமுறையை செயல்படுத்துவதன் மூலமாக, "எகிப்தில் என்ன நடந்ததோ அதற்கு நேர்எதிர்மாறாக ஈரானிய அதிகாரிகள் செயல்பட்டார்" என்று வலியுறுத்தி, “எகிப்தில் என்ன நடந்ததோ அதை வரவேற்பதாக ஈரானிய ஆட்சி பாசாங்கு செய்வது, ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது" என்று ஜனாதிபதி ஒபாமா தெரிவித்தார். ஆனால் முபாரக்கிற்கு எதிரான எழுச்சியில், எகிப்திய "ஜனநாயக இயக்கத்தின்" சார்பாக அமெரிக்க தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக, பல நூறு எகிப்தியர்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

அதே குறிப்புகளில், அரசை கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும் மற்றும் தொடர்ந்து வரும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை அடக்க முயன்று வரும், அமெரிக்க நிதியுதவி பெற்ற எகிப்திய இராணுவத்தை, ஒபாமா மெச்சினார்.

ஒருபுறம் போராட்டங்களை ஈரானில் தடுத்துக் கொண்டே, ஆனால் எகிப்தில் அவற்றிற்கு ஆதரவு காட்டும் தெஹ்ரானின் "போலித்தனத்தைக்" குற்றஞ்சாட்டி, திங்களன்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக ஈரானைக் குற்றஞ்சாட்டினார்.

வாஷிங்டன் எதை நம்புகிறதோ அந்த உரிமைகள், இப்போதும் இருந்துவரும் மத்தியகிழக்கு சர்வாதிகாரங்களுக்கு எதிராகவும், யேமன், பஹ்ரெயின், ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள முடியாட்சிகளுக்கு எதிராகவும் பொங்கி எழுந்துவரும் மக்களுக்கு அளிக்கப்படுகின்றனவா என்பதைக் குறித்த குறிப்புகள், அவற்றில் விடுபட்டிருந்த குறிப்பிடத்தக்க விஷயங்களாக இருந்தன.

ஈரானிய அரசாங்கத்தைத் தூக்கியெறிவதும், அதனிடத்தில் அமெரிக்க நலன்களுக்கு நேரடியாக அடிபணியும் ஓர் ஆட்சியை நிறுத்துவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு மூலோபாய இலக்காக இருக்கின்ற நிலையில், துனிசியா, எகிப்து மற்றும் அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள நாடுகளில், தொழிலாளர்களின் சுயாதீனமான போராட்டங்களின்மீது வாஷிங்டன் எந்த விரோதபோக்கைக் கொண்டிருக்கிறதோ, அதையே தான் ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு நிஜமான புரட்சிகர போராட்ட எழுச்சியிலும்அதாவது, வலதை விட இடதின் சவாலை முகங்கொடுக்கும் ஒரு போராட்ட எழுச்சியிலும்அது காணும்.