சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Strikes, workers’ protests spread throughout Egypt

வேலைநிறுத்தங்கள், தொழிலாளர்கள் எதிர்ப்புக்கள் எகிப்து முழுவதும் பரவுகின்றன

By Patrick O’Connor
15 February 2011

Use this version to print | Send feedback
 

அதிக ஊதியங்கள், நல்ல பணி நிலைமைகள், அரசிற்கு சொந்தமான நிறுவனங்களில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் கீழிருந்த ஊழல் நிர்வாகிகளை அகற்றுதல் ஆகியவற்றிற்காக நேற்று எகிப்தின் முக்கிய நகரங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். தொழிலாள வர்க்கத்தின் இந்த இயக்கம் ஆளும் இராணுவக் கட்டுப்பாட்டை மீறி நடைபெறுகிறது. அது அனைத்துத் தொழில்துறை நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கடுமையாகக் கூறியுள்ளது.

முபாரக்கின் எடுபிடிகளான பீல்ட் மார்ஷல் ஹுசைன் தன்தவி மற்றும் பிரதம மந்திரி அஹ்மத் ஷபிக் தலைமையிலுள்ள இராணுவ ஆட்சிக்குழு நேற்று முன்கூட்டி அறிவிக்கப்படாத பொது விடுமுறையை அறிவித்தது. வேலைநிறுத்த அலையைக் குறைக்கும் வகையில் இம்முயற்சி நடந்திருக்கலாம். இன்றும் பொது விடுமுறை என்று இராணுவம் அறிவித்துள்ளது.

ஆயினும்கூட நேற்று பல தொழில்துறைகளிலும் தொழிலாளர்கள் பொது மற்றும் தனியார் பிரிவுகளில் அணிதிரண்டனர். “திரு முபாரக் அகற்றப்பட்டதையடுத்து தொடர்ந்த பல சிறு புரட்சிகள் நடக்கின்றன எனத் தோன்றுகிறது என்று ஒரு BBC செய்தியாளர் கூறினார்.

எகிப்தின் மிகப் பெரிய வங்கியான தேசிய எகிப்து வங்கியின் (NBE) தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து, எகிப்திய மத்திய வங்கி நாடு முழுவதிலுமுள்ள வங்கிகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. NBE தலைமையகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்காலிக தொழிலாளர்களால் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன. “இது புரட்சியின் ஒரு பகுதி ஆகும். இது ஒரு வாய்ப்பு என்று அவர்கள் கருதுகிறார்கள்குறைகள், கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் முன்வைப்பதற்கு. இப்பொழுது அவை தீர்க்கப்படுவதற்குக் கூடுதலான வாய்ப்பு உள்ளது என நினைக்கலாம் என்று அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் வங்கியின் தலைவர் தரிக் அமெர் கூறினார்.

பல நிறுவனங்களிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலைநிறுத்தத்தில் உள்ளனர். நேற்று அவர்கள் கெய்ரோவின் நசர் சிட்டிப் பகுதிக்கு அருகே பெட்ரோலிய அமைச்சரகத்திற்கு வெளியே எதிர்ப்பை நடத்தினர். ஹொசம் எல் ஹமலவி என்னும் வலைத் தள வெளியீட்டாளர் கருத்துப்படி, “தொழிலாளர்கள் பல பொருளாதார, அரசியல் கோரிக்கைகளைக் கொண்டுள்ளனர். இவற்றுள் தவறான நிர்வாகச் செயற்பாடுகளான உரிமைகளுக்கு போராடும் தொழிலாளர்களை நீக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், நீக்கப்பட்ட தொழிலாளர்களைப் பணியில் மீண்டும் அமர்த்துதல், ஊதியங்களை கிட்டத்தட்ட LE400 ($68) என்று உயர்த்துதல், சுயாதீனத் தொழிற்சங்கத்தை நிறுவுதல், ஊழல் மந்திரி சமே பஹ்மியை குற்றச்சாட்டிற்கு உட்படுத்துதல், இஸ்ரேலுக்கு எரிவாயு ஏற்றுமதியை நிறுத்துதல் ஆகியவை அடங்கியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கான பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் அரசாங்கத் தொலைக்காட்சி மற்றும் வானொலிக் கட்டிடத்திற்கு வெளியே ஊதிய அதிகரிப்புக்களை கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். 18 ஆண்டுகள் சாரதியாக வேலைபார்க்கும் தொழிலாளர்களில் ஒருவரான அஹ்மத் சயித் கார்டியனிடம் அவருடைய ஊதியத்தில் பாதிக்கும் மேல் வாடகை கொடுப்பதில் சென்று விடுகிறது என்றும் அவருடைய ஐந்து பேர் அடங்கிய குடும்பத்திற்கு மிச்சமுள்ள பணத்தைத்தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது என்று கூறினார். “உணவிற்குச் சற்றே போதுமான பணம்தான் உள்ளது. …ஒரு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்குப் பணம் கொடுக்க வேண்டும். அப்பொழுது எனக்கும் என் மனைவிக்கும் உணவு இருக்காது. இது தவறானது. முபாரக்கிடம் அவ்வளவு பணம் எங்கிருந்து சேர்ந்தது, எங்களிடம் ஏன் இவ்வளவு குறைவாக உள்ளது? முன்பு நாங்கள் கவனத்துடன் இருக்க வேண்டியிருந்தது. இப்பொழுது நான்கு நாட்களாக வேலைநிறுத்தத்தில் உள்ளோம். இராணுவம் எங்களைத் தடுக்க முடியாது.”

ஊதிய அதிகரிப்பை நாடும் நூற்றுக்கணக்கான மருத்துவ வாகன துணை ஊழியர்கள் 70 வாகனங்களை வரிசையாக கிசா மாநிலத்தில் நைல் ஆற்றையொட்டி சாலையில் நிறுத்தினர். ஒரு முக்கிய கெய்ரோ போக்குவரத்து நிலத்தடிப் பாதை ஊழியர்கள் தங்கள் ஊதியங்கள் உயர்த்தப்படவில்லை என்றால் பாதை மூடப்படும் என்று அச்சறுத்தியுள்ளனர். அரச இளைஞர் மற்றும் விளையாட்டுக்களின் அமைப்பிலுள்ள நூற்றுக்கணக்கானவர்களும் தஹ்ரிர் சதுக்கத்தில் முன்னேற்றகரப் பணி நிலைமைகளை நாடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போராட்டங்கள் குறித்து வந்துள்ள மற்றய தகவல்கள், அரச விமான நிறுவனமான எகிப்த் ஏயரின் தொழிலாளர்கள் கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு நிறுவனத்தின் தலைவர் அலா அஷௌர் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் வெற்றி பெற்றனர். இதேபோல் ஓபரா ஹௌசில் பணிபுரியம் 500 தொழிலாளர்கள் நிறுவனத்தின் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக் கூறி அவர் அகற்றப்பட வேண்டும் என்று கோரினர். 6 அக்டோபர் அன்று கெய்ரோவின் துணைவட்டார நகரத்தில் இருக்கும் கல்வி அமைச்சரகத் தொழிலாளர்களும் நேற்று அதிக ஊதியங்கள், தற்காலிக தொழிலாளர்களுக்கு நிரந்தர ஒப்பந்தம் மற்றும் அமைச்சரக இயக்குனர் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நடவடிக்கைக்கு பல மாணவர்கள் ஆதரவு கொடுத்தனர். ஒரு இடைநிலை தொழில்துறைப் பள்ளியிலுள்ள கோலௌட் அப்துல்லா Al Ahram இடம், “எங்களிடம் புத்தகங்கள் இல்லை, கணணிகள் இல்லை, கற்பதற்கு இவை தேவை என்றனர்.

தொடர்ந்த வேலைநிறுத்தங்கள் ஜவுளி, எஃகு, அஞ்சல் அலுவலக அரச தொழிலாளர்களாலும் நடத்தப்படுவது பற்றித் தகவல்கள் வந்துள்ளன.

பல நூற்றுக்கணக்கான மக்கள் முபாரக் ஆட்சியின் உத்தியோகபூர்வ தொழிற்சங்கமான வணிக, தொழிலாளர் கூட்டமைப்பிற்கு வெளியே கூட்டமைப்பின் குழு கலைக்கப்பட வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்டிடத்திற்குள் இருந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் செங்கல்கள், பாட்டில்கள் ஆகியவற்றை வெளியே இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வீசினர். மற்றவர்களும் அதே வகையில் விடையிறுத்தனர். பின்பு இராணுவச் சிப்பாய்கள் இவற்றைத் தடுத்து நிறுத்தினர்.

கெய்ரோவிற்கு வெளியே பெரும் சுகரி தங்கச் சுரங்கத்தில், மார்சா ஆலம் என்னும் தெற்கு நகரத்திற்கு அருகே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பெரிய பிரமிட்டுக்கள் அருகே 150 சுற்றுலாத்துறை ஊழியர்கள் அதிக ஊதியங்கள் கோரி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கெய்ரோவின் தென்புற வறியப் புறநகரான பெனி ஸ்வெல்பில், “ஆயிரக்கணக்கானவர்கள் உறுதிமொழியளிக்கப்பட்ட அரசு கட்டிய குறைந்த செலவு அடுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரினர். இவை இப்பொழுது தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுகின்றன என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது. உள்ளூர் மக்கள் 60,000 காலி வீடுகளை அத்தகைய வீட்டுத் திட்டத்தில்  கெய்ரோ, பெனிஸ்வெல்ப் மற்றும் காலயௌபியா பகுதிகளில் ஆக்கிரமித்துள்ளனர் என்று பொலிசார் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதிக ஊதியங்களை நாடும் பொலிஸ் அதிகாரிகள் தஹ்ரிர் சதுக்கத்தில் ஒரு தூண்டிவிடும் தன்மையுடைய ஆர்ப்பாட்டத்தை நேற்று காலை நடத்தினர். கிட்டத்தட்ட 2,000 முபாரக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரிதும் வெறுக்கப்படும் பொலிசுக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அல் ஜசீரா மற்றும் பிற செய்தி ஊடகத்தினர் சதுக்கத்தில் இருந்து தகவல் எதையும் வெளியிடுவதற்கு தடுக்கப்பட்டனர். இந்த தணிக்கை இராணுவத்தின் முயற்சியான அனைத்து எதிர்ப்பாளர்களையும் தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து அகற்றுதல், “இயல்புநிலை வந்துவிட்டது என்னும் தோற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

ஆனால் மற்றொரு ஆர்ப்பாட்ட அணிவகுப்பு, “வெற்றி அணிவகுப்பு என அழைக்கப்படுவது வெள்ளியன்று நடக்கவுள்ளது.

வேலைநிறுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று கோரி இராணுவக்குழு ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டது. “இந்த வேலைநிறுத்தங்கள், இந்த கூருணர்வு நிறைந்த நேரத்தில் எதிர்மறை விளைவுகளான நாட்டின் பாதுகாப்பிற்குத் தீமை என்பதைத்தான் ஏற்படுத்தும் என்று கௌரவமான எகிப்தியர்கள் காண்கின்றனர். அது அனைத்து நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் அளிக்கும் வசதிகளைத் தடைக்கு உட்படுத்திவிடும் என்று ஒரு இராணுவச் செய்தித் தொடர்பாளர் கூறினார். “[வேலைநிறுத்தங்கள்] குடிமக்களுடைய தேவைகளை அளிக்கும் திறனை எதிர்மறையாகப் பாதிக்கும். உற்பத்தி வழிவகை, வேலை ஆகியவற்றை அரசப் பிரிவுகளில் தடைக்கு உட்படுத்திவிடும்…. எனவே தேசியப் பொருளாதாரத்தை அவை எதிர்மறையாக பாதிக்கும்.”

இந்த அறிக்கை ஒரு இராணுவ அதிகாரி ராய்ட்டர்ஸிடம் இராணுவத் தலைமை தொழிற்சங்கக் கூட்டங்களை தடுக்க விரும்புகிறது என்று கூறிய பின் வந்துள்ளது. இது இறுதியில் இராணுவம் செயல்படுத்தவுள்ள கொள்கைகளை எப்படித் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கையாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

1952ம் ஆண்டு சுதந்திர அதிகாரிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு மாற்றத்திலிருந்து (Free Officers Coup) முதலாளித்துவ எகிப்திய அரசிற்கு இராணுவமானது மையத் தூண் போல் இருந்து வருகிறது. முபாரக்கின் IMF ஒப்புதல் பெற்றதடையற்ற சந்தை நடவடிக்கைகளின் கீழ், இராணுவம் தனியார்மயமாக்கப்பட்ட அரச தொழிற்துறைகள், நிலச் சொத்துக்கள் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடு கொண்டதுடன், மூத்த இராணுவக் குழுவினர் பெரும் தனிச் சொத்துக்களைக் குவித்துக் கொண்டனர். அதிக ஊதியங்கள், வேலைகள், முன்னேற்றகரமான பணி நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான தொழிலாளர்களின் இயக்கமானது இராணுவ அதிகாரத்துவத்தின் செல்வக்கொழிப்பு நலன்களுக்கு நேரடி அச்சறுத்தலை பிரதிபலிக்கின்றன. மேலும் முழு எகிப்திய முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு உட்குறிப்பான சவாலாகவும் உள்ளன.

சமீபத்திய நிகழ்வுகள் முபாரக் ஆட்சியின் இறுதி நாட்களில் தொழிலாள வர்க்கத்தின் வெளிப்பட்டு வரும் இயக்கம் பற்றிய இராணுவத்தின் கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. பெப்ருவரி 8, 9 திகதிகளில் வெடித்தெழுந்த பெரும் வேலைநிறுத்தங்கள், முபாரக் பெப்ருவரி 10 அன்று தொலைக்காட்சி உரையை நடத்தும் வரையில் தொடர்ந்தன. அதில் அவர் இராஜிநாமாவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, மாறாக அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொள்ள விரும்பியது தெரிய வந்தது.

Al Ahram ல்  வெளியிடப்பட்டுள்ள விரிவான தகவல்களின்படி சர்வாதிகாரி பதவியிலிருந்து இறங்க விரும்பினார், ஆனால் அவருடைய மனைவி மற்றும் மகன் கமெல் தடுத்து நிறுத்தினர். இது புரட்சிகர இயக்கத்தில் இன்னும் கூடுதல் எழுச்சியை தூண்டும் அச்சுறுத்தலைக் கொடுத்தபோது, இராணுவம் உள்ளே குறுக்கிட்டு நிலைமை மீது கட்டுப்பாட்டைக் கொள்வதற்கு அதிகாரத்தைக் கைப்பற்றியது.

உத்தியோகபூர்வ மத்தியதரஎதிர் கட்சிகள் ஏதும்முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மற்றும் மஹ்மத் எல்பரடெயின் மாற்றத்திற்கான தேசிய சங்கம் ஆகியவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இராணுவ அச்சுறுத்தல்களை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவத்தின் பங்கு பற்றிய போலித்தோற்றத்தை தக்க வைக்கும் முறையில் இச்சக்திகள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் முடிவிற்கு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. எல்பரடெயும் அவருடைய சக சிந்தனையாளர்களும் இப்பொழுது இராணுவ ஆட்சியில் பங்கு பெறத் தயாரிப்புக்களை கொண்டுள்ளனர்.

பிரிட்டனின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் நேற்று எகிப்தின் பிரதம மந்திரி அஹ்மத் ஷபிக் தன்னிடம் தற்போதைய அரசாங்கம் மாற்றி அமைக்கப்பட்டு அடுத்த வாரத்திற்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்ளும் எனக்கூறியதாகத் தெரிவித்தார். இந்தஎதிர்த்தரப்பு சக்திகளை வெற்றிகரமாக உயர்நிலைக்குக் கொண்டு வருவது தனிப்பட்ட நபர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தாலும், எகிப்திய தொழிலாளா வர்க்கத்திற்கு இராணுவ ஆட்சிக்கு ஒரு சிவிலிய அத்தி இலை மறைப்பு என்பதைத் தவிர வேறு எதையும் கொடுக்காது.

முக்கிய முபாரக் எதிர்ப்புச் செயற்பாட்டார்களான கூகுளின் நிர்வாகி வாயெல் கோனிம் மற்றும் வலைத் தள எழுத்தாளர் அம்ர் சாலமஹேயும் இராணுவக் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். அவர்கள் இராணுவம் பத்து நாட்களுக்குள் அரசியலமைப்பை மாற்றி எழுதும் என்று கூறியதாக தெரிகிறது இது எகிப்திய மக்களுக்குப் பின்புலத்தில் நடக்கும் பின் இரு மாதங்களுக்குள் ஒப்புதலுக்காக மக்களுடைய வாக்கெடுப்பிற்கு விடப்படும்.

எப்பொழுது முபாரக்கின் கடுமையான நெருக்கடிக்கால சட்டங்களை அகற்றுவோம் என்ற அதன் உறுதிமொழியைச் செயல்படுத்தும் என்பதை இன்னும் இராணுவம் அறிவிக்கவில்லை. அதேபோல் காவலிலுள்ள பல அரசியல் கைதிகளை எப்பொழுது விடுவிக்கும் என்பது பற்றியும் மௌனமாக உள்ளது.

Independent இன் ரோபர்ட் பிஸ்க் கேட்டார்: “முந்தைய ஆட்சியில் இராணுவம் கொண்டிருந்த தொடர்பு பற்றி அதிகம் தெரிந்துள்ள கைதிகள் இருப்பதால் இந்த நிலைமையா? அல்லது தப்பித்துவிட்ட, புதிதாக விடுவிக்கப்படும் கைதிகள் கெய்ரோவிற்கும் அலெக்சாந்திரியாவிற்கும் பாலைவன முகாம்களில் இருந்து சித்திரவதை மரண தண்டனைகள் பற்றிய கொடூரமான தகவல்களுடன் இராணுவத்தை பற்றிக் கூறக்கூடும் என்பதாலா?’