WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
Indian human rights activist jailed for life
on frame-up charges
போலிக்குற்றச்சாட்டுக்கள்
மீது
இந்திய மனித உரிமை
ஆர்வலருக்கு ஆயுள் சிறை
By
Ajay Prakash
2 February 2011
Back
to screen version
சர்வதேச
அளவில் நன்கு அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலரும்,
குழந்தை மருத்துவருமான டாக்டர் பினாயக் சென்னுக்கு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு
(மாவோயிஸ்ட்-CPI-M)
உதவிய குற்றச்சாற்றுக்களின்பேரில்,
கிழக்கு மாநிலமான சட்டீஸ்கரில் உள்ள அமர்வு அல்லது மாவட்ட
நீதிமன்றத்தால் கடந்த டிசம்பர் மாதம் ஆயுள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும்
கொல்கத்தாவை சேர்ந்த சிறிய தொழிலதிபரான பியுஷ் குஹா மற்றும் மாவோயிஸ்ட் என
குற்றம்சாற்றப்பட்ட
74 வயது நாராயண் சன்யால் ஆகியோருக்கும் கடுங்காவல் ஆயுள் தண்டனை
வழங்கப்பட்டுள்ளது.
சென்னுக்கு
வழங்கப்பட்ட தண்டனை,
இந்திய மற்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களாலும்,
இந்திய பத்திரிகை மற்றும் சட்ட ஸ்தாபனங்களை சேர்ந்த குறிப்பிடத்தக்க
பிரிவுகளை சேர்ந்தவர்களாலும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
சென்னுக்கு எதிரான வழக்கு ஏறக்குறைய முற்றிலும் போலீஸ்
சாட்சியத்தின் அடிப்படையிலானது என சுட்டிக்காட்டும் அவர்கள்,
இதனை குற்றம்சாட்டப்பட்டவர் எதிர்த்ததையும்,
அரசு தரப்பில் உள்ள முரண்பாடுகளை நீதிபதி கணக்கில்
எடுத்துக்கொள்ளாததையும் குறிப்பிடுவதோடு,
மாநில அரசின் மனித உரிமை மீறல்களை கடுமையாக விமர்சிப்பதை நிறுத்த
செய்யும் அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சிதான் சென்னுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
என்கின்றனர்.
"சர்வதேச
மன்னிப்புச் சபையின் மனசாட்சியின் கைதியாக கருதப்படும் டாக்டர் சென்,
சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத
தெளிவற்ற
மற்றும் குற்றவியல் சட்டத்திற்கான சர்வதேச வரையறைகளுக்கு
உட்பட்டதல்ல" என்று மன்னிப்புச் சபையின் ஆசிய-பசிபிக் இயக்குனர்,
சாம் ஷர்ஃபி அறிவித்தார்.
அனைவரையும்
பிடித்துப்போடும் இந்திய மற்றும் சட்டீஸ்கர் மாநில அரசாங்களின் பெயர்போன "தீவிரவாத
எதிர்ப்பு" சட்டத்தின் பிரிவுகளின் கீழ் சென் மற்றும் அவரது சக குற்றவாளி ஆகியோர்
மீது பிரிவினை,
மாவோயிச தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்ததாக குற்றம்சாற்றப்பட்ட
நிலையில்,
சன்யால் இன்
வழக்கில் அவர் சட்டவிரோத இயக்கத்தை சேர்ந்தவராக
குற்றம்சாற்றப்பட்டது.
2006
ஏப்ரல் மாதம் சட்டீஸ்கர் போலீஸாரால் கைது செய்யப்பட்டதிலிருந்து
சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் சான்யாலுக்கு தூதராக செயல்பட்டார் என்று சென்
குற்றம்சாற்றப்பட்டார்.
ஒரு மருத்துவர் மற்றும் மனித உரிமைகளுக்கு குரல்கொடுப்பவர் என்ற
அளவில்,
2007 மே மாதத்தில் அவரே கைதாவதற்கு முன்னர் மாநில அரசின் கடுமையான
கண்காணிப்பின் கீழ்,
சன்யாலை முப்பது முறைகளுக்கும் மேலாக சென்று பார்த்துள்ளார்.
இந்திய
அரசாங்கத்தின் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA)
மற்றும் சட்டீஸ்கர் பொது பாதுகாப்பு சட்டம் (CPSA)
ஆகியவை மிகவும் பரந்த
மற்றும் அவர்களது "சட்டவிரோத நடவடிக்கை" என்ற
வரையறையின் கீழ் ஒதுக்கப்பட்ட
மற்றும்
வறிய ஏழைகளுக்காக தீங்கிழைக்காத
அரசியல் அல்லது
சமூக தொண்டாற்றுபவரை கூட குற்றவாளியாக்கிவிட முடியும்.
இஷ்டப்பட்டவர்களை போலீஸ் வலைக்குள் சிக்க வைக்கும் இந்த
கொடுங்கோன்மையான சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள்
பிடிக்கப்பட்டுள்ளதோடு,
அவர்களில் பெரும்பாலானோர் போலீஸ் மற்றும்/அல்லது வழக்கமான சித்ரவதை
மூலமாக கட்டாயப்படுத்தி பெறப்படும் வாக்குமூலங்களால் இட்டுக்கட்டிய சாட்சியத்தின்
மூலம் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய
மற்றும் மாநில அரசாங்கங்களால் திட்டமிட்டமுறையில்
வழங்க தவறிய மருத்துவ மற்றும் இதர வசதிகளை சட்டீஸ்கர் மாநிலத்தின்
ஒடுக்கப்பட்ட பழங்குடியினத்தவர்களுக்கு கிடைப்பதற்காக அவர்களிடையே பல ஆண்டு காலம்
சேவையாற்றிய சென் விடயத்திலும் இதே கதைதான்.
மனிதஉரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் தேசிய துணை தலைவர் மற்றும்
அதன் சட்டீஸ்கர் பிரிவின் பொதுச் செயலாளர் என்ற வகையில் சென்,
கிழக்கிந்தியாவில் மாவோயிச தலைமையிலான பழங்குடியின
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் எப்போதும் மேற்கொள்ளும்
தீவிரவாதத்திற்கு எதிரான சண்டையின்போது நிகழ்த்தும் எண்ணற்ற மனித உரிமை மீறல்கள்
மற்றும் அப்பட்டமான அட்டூழியங்களுக்கு எதிராகவும் அவ்வப்போது தனது
கருத்துக்களை
தெரிவித்துவந்தார்.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாற்றப்பட்ட 74 வயது சன்யால்,
சென் மற்றும் குஹா ஆகியோர் மீது
UAPA
மற்றும்
CPSA
வின் கீழ் அரசு தரப்பால் குற்றம்சாற்றப்பட பயன்படுத்தப்பட்டாலும்,
ஆரம்பத்தில் சன்யால்
மீது
இந்த சட்டங்களின் கீழ் குற்றம்சாட்டப்படவில்லை.
கொலைக்காக கைது செய்யப்பட்ட அவர்,
சென் மற்றும் குஹா ஆகியோர் தீவிரவாத தடுப்பு சட்டங்களின் கீழ்
குற்றம்சாற்றப்பட்ட பின்னர்தான்,
மாநில அரசு சன்யால் மீதும் அதே குற்றச்சாட்டுக்களை சுமத்தியதோடு,
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட அவர் மீதான
குற்றச்சாட்டு பின்னர்,
இவர்கள் மூவருக்கு எதிரான மாநில அரசின் வழக்குகளுக்கு அச்சாணியாக
அமைந்தது.
சட்டீஸ்கர்
அதிகாரிகளின் விரோதத்தை சென்னுக்கு எது சம்பாதித்துக்கொடுத்தது என்றால்,
சால்வா ஜூடும்
அல்லது
அமைதி
போரணி
(Salwa
Judum or Peace March)
என்ற ஒரு வெளி வேஷம் கொண்ட பிரபல மாவோவிச
போராளிக்குழுவிற்கு
எதிரான படையினர் நிகழ்த்திய கற்பழிப்பு,
கடத்தல்கள் மற்றும் கொலைகளை அவர் அம்பலப்படுத்தியதுதான்.
சட்டீஸ்கரின் தாண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினத்தவர்களை
அங்கிருந்து கிளப்புவதற்காக இந்து மேலாதிக்க வலதுசாரி அமைப்பான பாரதிய ஜனதா
கட்சியால் வஞ்சகத்துடன் உருவாக்கப்பட்ட சால்வா ஜூடும்,
உண்மையில் மாநில அரசின் சதித்திட்டத்துடன் இரண்டு இரும்பு
நிறுவனங்களான
டாடா
எஸ்ஸர்
ஸ்டீல்
ஆல் ஆதரிக்கப்பட்டது.
தற்போது அதிகாரபூர்வமாக சால்வா ஜூடும் கலைக்கப்பட்டபோதிலும்,
இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் ஆதரவையும்
அது பெற்றிருந்தது.
கடந்த
பத்தாண்டுகளின் மத்தியில்,
சால்வா ஜூடும் குறித்து சென் தலைமையிலான
PUCL
மற்றும் இதர நான்கு மனித உரிமை குழுக்கள் கொண்ட கூட்டு உண்மை
கண்டறியும் பணியை மேற்கொண்டது.
அதன் 2005 டிசம்பர் அறிக்கை,
"மாவோயிஸ்டுகளுக்கு
எதிராக பழங்குடியினத்தவர்களின்
சுயமான
எழுச்சியால்
தோன்றியதுதான் சால்வா ஜூடும் என கூறப்படுவதற்கு அப்பாற்பட்டு
இருப்பதாக கூறி முடிக்கப்பட்டிருந்தது.
அது ஒரு திட்டமிடப்பட்ட,
மாநில அரசால் இயக்கப்படும் நிறுவனம். ...போலீஸ் மற்றும் நிர்வாக
கண்காணிப்பின் கீழ் பாய்ராம்ஹர்,
கீதம் மற்றும் ஜூடும் பகுதிகள் முழுவதும் உள்ள மக்கள்,
கட்டாயமாக இடப்பெயர்ச்சி
செய்யப்பட்டதற்கு சால்வா ஜூடும்தான் தலைமையேற்றது. ... உள்ளூரை
சேர்ந்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒன்றாக இணைந்து சால்வா
ஜூடுமுக்கு ஆதரவளித்தன. ...மேலும்,
மக்கள் ஆயுதங்களை ஏந்தவும் ஊக்கப்படுத்தப்பட்டனர். ... சட்டீஸ்கர்
ஒரு பழங்குடியின மாநிலம் என்று கூறப்பட்டாலும்,
ஆதிவாசி (பழங்குடி) சமூக மற்றும் கலாச்சாரம் தீவிரமாக அழிக்கப்பட்டு
வருகிறது."
இந்த
அறிக்கை வெளியான ஒரு மாதம் கழித்து,"
PUCL
இனை
பின்னர்
கவனிக்கிறோம்" என்று சட்டீஸ்கர் மாநில காவல்துறை தலைவர் ஓ.பி.
ரத்தோர் பத்திரிகைகளிடம் தெரிவித்தார்.
(Hum
PUCL ko dekh lenge)
சென்னுக்கு
அளிக்கப்பட்ட தண்டனை மிகவும் அதிர்ச்சிகரமாகவும்,
உண்மையற்றதாகவும் இருந்ததோடு,
பிரபல சட்ட நிபுணர்கள் கூட அதற்கு கண்டனம் தெரிவித்தனர். டெல்லி
உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்தர் சச்சார்,
இந்த தண்டனை ஐயத்திற்கு இடமளிப்பதாக உள்ளது என்று கண்டித்தார்:"
சான்யாலுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதற்கு இடமே இல்லை. ... இதைவிட
ஒரு மகா முட்டாள்தனமான தீர்ப்பு இருக்க முடியாது. நான் நீதித்துறையை சேர்ந்தவன்
என்பதற்காக வெட்கப்படுகிறேன். ...இதுபோன்ற கேலிகூத்தான தீர்ப்பு ஒருபோதும்
வழங்கப்பட்டதில்லை."
முன்னதாக,
இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான கிருஷ்ண அய்யர்,
2007இல் சென் கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டாண்டுகளாக
சென்னுக்கு ஜாமீன் அளிக்க அரசாங்கமும்,
நீதிமன்றமும் மறுத்து வருவதை கண்டித்து இந்திய பிரதமருக்கு கடிதம்
எழுதினார். "இந்திய அரசு" டாக்டர் சென் மற்றும் அவரைப்போன்ற இதர பல மனித உரிமை
பாதுகாவலர்களை "தீவிரவாதிகள்" என தவறாக முத்திரை குத்தி,
ஜனநாயக மாண்புகள் மற்றும் நேர்மையான நிர்வாகத்தை மட்டுமல்லாது,
அதன் ஒட்டுமொத்த தீவிரவாத எதிர்ப்பு
மூலோபாயம்
மற்றும் நடவடிகைகளையும் முற்றிலும்
கேலிக்குள்ளாக்கிக்கொண்டிருக்கிறது." என்று அதில் அய்யர் எழுதியிருந்தார்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர்-உண்மையில்
பழங்குடியின மக்கள் மற்றும் அவர்களது வளங்கள் -செழிப்பான நிலங்கள்- மீதான இந்திய
அரசாங்கத்தின் ஆதிக்கத்தை உறுதிபடுத்திக்கொள்வதற்கான ஒரு போர்-
என்று கூறிக்கொண்டு ஏராளமான பிரிவு மக்களை விரட்டியடிப்பதற்காக
மனிதத்தன்மையற்ற மற்றும் பாரபட்சமான முறையில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
குறித்த பரவலான கவலையையே இதுபோன்ற அறிக்கைகள் பிரதிபலிக்கின்றன.
2009 தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றதிலிருந்து காங்கிரஸ்
தலைமையிலான மத்திய அரசாங்கத்தால்,
தேசத்தின் "உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக"
மாவோயிச தீவிரவாதம் உள்ளது என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் முத்திரையுடன் இந்த போர்
பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த
தீவிரவாதத்தை தோற்கடிப்பது அவசியம் என்று,
அப்படி செய்தால்தான் பழங்குடியின பகுதிகளின் வளங்களை இந்திய மற்றும்
அயல்நாட்டு தொழிலதிபர்களுக்கு திறந்துவிட முடியும் என்பதால்,
சிங் அறிவித்த சில தினங்களுக்குள்ளாகவே இந்திய (மாவோயிஸ்ட்)
கம்யூனிஸ்ட் கட்சி ஒரு "தீவிரவாத" அமைப்பாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
(பார்க்க: "தீவிரவாத தடுப்பு" சட்டத்தின் கீழ் சிபிஐ (மாவோயிஸ்ட்) க்கு இந்தியா
தடை)
1897
ல் பாலகங்காதர திலகர் மற்றும் 1922 ல் மகாத்மா காந்தி உள்ளிட்ட
இந்திய தேசத் தலைவர்களுக்கு வாய்பூட்டு போடுவதற்காக பிரிட்டிஷ் காலனித்துவ
ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் எச்சமான இந்திய குற்றவியல் பிரிவு 124
(பிரிவினை) ஐ சென்னுக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்தியது அரசு தரப்பின் மிக
பிற்போக்கான குணத்தை நிரூபிப்பதாக உள்ளது.
இந்த பிரிவு
இப்படி கூறுகிறது,"
யாராகிலும்,
வார்த்தைகளாலோ,
பேச்சு அல்லது எழுத்தாலோ,
அல்லது சமிக்ஞையாலோ,
அல்லது பார்க்கக்கூடிய பிரதிபலிப்பாலோ,
அல்லது மற்றவகையிலோ,
அரசாங்கத்திற்கு எதிராக துவேஷத்தையோ அல்லது வெறுப்பையோ
கொண்டுவந்தாலோ அல்லது கொண்டு வர முயற்சித்தாலோ அல்லது அமைதியின்மையை தூண்டினாலோ
அல்லது தூண்ட முயற்சித்தாலோ... ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு
தண்டிக்கப்படுவார்கள்..."
சென்னுக்கு
விதிக்கப்பட்ட தண்டனையையடுத்து டைம்ஸ் ஆப் இந்தியா இப்படி குறிப்பிட்டது,"
உலக அளவில் பாராட்டப்பட்ட மனித உரிமைகள் ஆர்வலரான பினாயக்
சென்னுக்கு பிரிவினை குற்றச்சாட்டின் கீழ் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை சுதந்திர
இந்தியாவில் மிச்சமிருக்கும்
காலனித்துவத்தின்
இகழ்ச்சியான
துஸ்பிரயோகமாகும்."
பிரபல
தாராளவாத
வரலாற்றாசிரியரான
ராமச்சந்திரா குஹா தனது பங்கிற்கு இவ்வாறு கூறினார்,
"சட்டீஸ்கர்
அரசாங்கத்தின் கண்களில்,
மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை சமாளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஊழல்
மற்றும் கொடூரமான முறைகள் குறித்து தைரியமாக கேள்வி கேட்டதுதான் பினாயக் சென்னின்
குற்றமாக உள்ளது. ...அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை எதிர்க்கப்படும் மற்றும்
எதிர்க்கப்பட வேண்டும்.
ஆனாலும்,
அதன் தற்போதைய நிலையில்,
ஜனநாயகத்திற்கு இது ஒரு இழுக்குதான்."
பினாயக்
சென் தனக்கு எதிரான மாநில அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அடிபணிய
மறுத்துவிட்டார். அவர் நீதிமன்றத்தில் இவ்வாறு கூறினார்,
"என்
மீதான குற்றச்சாட்டு தீய நோக்கமுடையது என்று நான் கூறுகிறேன்;
உண்மையில் இது பாரபட்சமானது. சட்டீஸ்கரில் நடைபெறும் மனித உரிமை
நசுக்கல்களை அம்பலப்படுத்தக்கூடாது என்று அம்மாநில அரசு மற்றவர்களுக்கு விடுக்கும்
ஒரு எச்சரிக்கைக்கு
நான்
ஒரு
உதாரணமாக்கப்பட்டுள்ளேன்.
என்னை தவறாக சிக்கவைப்பதற்காக போலீஸாரால் ஆவணங்கள் போலியாக
புனையப்பட்டும்,
தவறான சாட்சியங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன." |