WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்திய மாவோயிஸ்டுகள் வலதுசாரி திரிணாமுல் காங்கிரஸிற்கு ஆதரவு
தெரிவிக்கின்றனர்
By Arun Kumar and Deepal Jayasekera
12 February 2011
Use this version to print | Send
feedback
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மாவோயிஸ்டு)
அல்லது
சிபிஐ (CPI
மாவோயிஸ்ட்)
என்றழைக்கப்படும் இந்தியாவின் முக்கிய மாவோவாத கட்சி,
இந்த
வசந்தகாலத்தில் நடக்கவிருக்கும் மாநில சட்டசபை தேர்தலில்
மேற்கு வங்காள அரசாங்கத்திற்கு வலதுசாரி திரிணாமுல் காங்கிரஸை
தேர்ந்தெடுக்க அதன் ஆதரவை அறிவித்துள்ளது.
கம்யூனிச-எதிர்ப்பு
வார்த்தைஜாலக்காரர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்
காங்கிரஸ்,
மேற்கு
வங்காளத்தில் ஒரு முக்கிய எதிர்கட்சியாக இருப்பதுடன்,
இந்தியாவின் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி
தலைமையிலான கூட்டணியிலும் ஒரு உறுப்பினராக உள்ளது.
1977இல்
இருந்து இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நான்காவது
மாநிலத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்துவரும் ஸ்ராலினிச இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தலைமையிலான
இடது முன்னனியை,
வரவிருக்கும்
மாநில தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பதவியிலிருந்து இறக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்)
அல்லது
சிபிஎம் இலிருந்து பிரிந்து வந்திருந்த மாவோயிஸ்டுகள்,
விவசாயிகளை
அடித்தளமாக கொண்ட ஒரு "நீடித்த
மக்கள் யுத்தத்திற்கும்"
மற்றும் தேசிய
முதலாளித்துவத்தின் பிரசித்திபெற்ற முற்போக்கு பிரிவுகளுடன்
சேர்ந்து கொண்டு
ஒரு
நிலபிரபுத்துவ-எதிர்ப்பு,
ஜனநாயக
புரட்சி ஆகியவற்றை ஆதரித்து வருகின்றனர்.
அவர்கள்,
மேற்கு
வங்காளத்தில் உள்ள மேற்கு மித்னாபோர் மாவடத்தின் சில பகுதிகள்
உட்பட,
கிழக்கு
இந்தியாவின் மலைகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் வாழும்
இந்தியாவின் நம்பிக்கையிழந்த வறிய மற்றும் கைவிடப்பட்ட
பழங்குடி மக்களின் பிரிவுகளிடம் ஆதரவைப் பெற்ற ஒரு கிளர்ச்சியை
நடத்தி வருகின்றனர்.
பெப்ரவரி 7,
ஞாயிறன்று
ஊடகத்திற்கு கிடைத்த ஒரு சிறுவட்டிலும் (CD)
மற்றும்
கடந்தமாத ஒரு எழுத்துபூர்வ அறிக்கையிலும்,
சிபிஐ
(மாவோயிச)
தலைவர்
பிக்ராம்,
திரிணாமுல்
காங்கிரஸ் அதிகாரத்திற்கு வருவதை மாவோயிஸ்டுகள் ஆதரிப்பதாக
அறிவித்தார்.
அவர் அக்கட்சியை
மேற்கு வங்காளத்தின் "முதலாளித்துவ
மாற்றீடாக"
முத்திரை
குத்தினார்.
வங்காளம்–ஜோர்கண்ட்–ஒரிசா
மாவோயிச பிராந்திய குழு உறுப்பினர் பிக்ராம் குறிப்பிட்டது,
“
எங்களுடைய கூட்டு முயற்சியால், CPI-M
[CPM]
என்றழைக்கப்படும் அரக்கனை மேற்கு வங்காளத்தில் பின்வாங்க
வைத்துள்ளோம்…
மக்கள் இதை
விரும்புகிறார்கள்…
[திரிணாமுல்
காங்கிரஸ் தலைவர்]
பானர்ஜியுடன்
எங்களுடைய உறவை நாங்கள் தக்க வைக்கவும்,
பலப்படுத்தவும் விரும்புகிறோம்.”
பானர்ஜிக்கு ஒரு அழைப்புவிடும் விதத்தில் மாவோயிச தலைவர்
அவருடைய ஜனவரி அறிக்கையின் பகுதிகளை நளினமாக
வடிவமைத்திருந்தார்.
“அமைதி
மற்றும் அபிவிருத்தி தேவைப்படுவதால்",
மாவோயிஸ்டுகள் "தேர்தல்களைப்
புறக்கணிக்க மாட்டார்கள்.
மேலும் உங்களால்
முன்மொழியப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையிலும் பங்கெடுப்பார்கள்,”
என்ற
அறிவிப்புடன்,
பானர்ஜி மத்திய
அரசாங்கத்தின் இரயில்வே மந்திரி பதவியை இராஜினாமா செய்ய
வேண்டும்,
காங்கிரஸ் கட்சி
தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலக
வேண்டும்,
மத்திய அரசாங்கம்
தலைமையில் நடக்கும் மாவோயிச-எதிர்ப்பு
கிளர்ச்சி தடுப்பு நடவடிக்கையான
Operation Green Huntஐ
எதிர்க்க வேண்டும் என்று பிக்ராம் பானர்ஜியை வலியுறுத்தினார்.
ஆனால் எவ்வாறிருந்தபோதினும்,
பானர்ஜி
இதை செய்யவில்லை என்றாலும்கூட (திரிணாமுல் காங்கிரஸ்
மேற்கு வங்காள தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான ஒரு
கூட்டணியுடன் போட்டியிடுகிறது)
மாவோயிஸ்டுகள் அவருடனும்,
அவருடைய வலதுசாரி
திரிணாமுல் காங்கிரஸ் உடனும் உள்ள அவர்களின் கூட்டணியை
ஆழப்படுத்த விரும்புவதாக,
அந்த மாவோயிச
தலைவர் தெளிவுபடுத்தினார்: “தேர்தல்களைப்
புறக்கணிப்பதற்கு பதிலாக,
நாங்கள் அவரை
ஆதரிப்போம்;
அவர் பதவிக்கு
வரும்பட்சத்தில் அவரால் வரையப்படும் முன்னோக்கு திட்டத்தைப்
பின்பற்றுவோம்.”
வர்க்க போராட்டங்களை ஒடுக்கவும்,
காங்கிரஸ்
கட்சிக்கும் மற்றும் முதலாளித்துவ மேற்தட்டின் பல்வேறு ஜாதிய
மற்றும் மதவாத கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தைக்
கட்டிவைக்கவும், CPM
மற்றும் அதன் இடது
முன்னனி இந்தியாவில் முக்கிய முதலாளித்துவ முண்டுகோல்களாக
நீண்டகாலமாக செயல்பட்டு வந்துள்ளன.
UPA
அரசாங்கம் சந்தைசார்பு கொள்கைகளை முன்னெடுத்து வந்த போதினும்,
அது
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய கூட்டுறவைக்
கொண்டிருந்த போதினும் கூட,
நான்கு ஆண்டுகளாக,
2004 மே
மாதத்திலிருந்து 2008
ஜூன் மாதம்
வரையில்,
இடது முன்னனி அதன்
பாராளுமன்ற வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி தலைமையிலான
UPA
அரசாங்கம்
பதவியில் நிலைத்திருக்க உதவியது.
CPM
தலைமையில் அரசாங்கம் அமைந்துள்ள மேற்கு வங்காளம் போன்ற
மாநிலங்களில்,
தகவல்
தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறை
போராட்டங்களுக்கு தடைவிதித்தும்,
சமூக
செலவுகளைக் குறைத்தும்,
அரசுத்துறை
வேலைகளை குறைத்தும்,
மற்றும்
வியாபாரத்திற்கு உகந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை
ஸ்தாபித்தும்,
அது உலக
முதலாளித்துவத்திற்காக ஒரு மலிவுக்கூலி தயாரிப்பாளராக
இந்தியாவை மாற்றும் முதலாளித்துவ திட்டத்தை இரக்கமின்றி
செயல்படுத்தி வந்துள்ளது.
எல்லாதரப்பிலும் சொல்லப்படுவது என்னவென்றால்,
இந்திய
முதலாளித்துவம் CPM
அதன்
மேற்கு வங்காள கோட்டையில் இருந்து கீழே இறங்குவதை நாட்டின்
அரசியலை வலதிற்குப் விரைவாக மாற்றும் ஒரு சந்தர்ப்பமாக
பார்க்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
என்ன தயாரிப்பு நடந்த வருகிறது என்பதில் யாருக்கும் எந்த
ஐயுறவும்
வரக்கூடாது. CPM
ஊழலுக்கு எதிராக
போராடுவது, CPMஐ
சேர்ந்திருக்க போராளிகளை நிராயுதபாணியாக்குதல் என்ற பெயரில்
பானர்ஜியும்,
அவருடைய
திரிணாமுல் காங்கிரஸும் பொதுச்சேவைகளைக் குறைப்பார்கள்;
வேலைகளை
வெட்டுவார்கள்;
பொதுத்துறை ஆலைகளை
தனியார்மயமாக்குவார்கள்;
மற்றும் தொழிலாள
வர்க்கத்திற்கு எதிராகவும்,
கிராம்ப்புற
ஏழைகளுக்கு எதிராகவும் பொலிஸ்-அரசு
ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவார்கள்.
பானர்ஜியால் பெரும்பாலும் மேற்கோளிடப்பட்ட வகையில்,
மேற்கு
வங்காளம் இந்தியாவின் அதிக கடனிலாத மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு கூட்டாளியாக பானர்ஜியை
ஊக்குவிப்பதன் மூலமாக,
இந்த
ஒடுக்குமுறைக்கு தயாரிக்கும்
முதலாளித்துவத்திற்கு உதவுவதில் மாவோயிஸ்டுகள் ஒரு முக்கிய
பாத்திரம் வகிக்கின்றனர்.
இவ்வாறு செய்வதன் மூலமாக,
தொழிலாள
வர்க்கத்தின் பாரிய காட்டிக்கொடுப்புகளுடன் தொடர்புபட்ட
ஸ்ராலினிச கையிருப்பு திட்டங்களையே அவர்களும்
பயன்படுத்துகின்றனர். CPMஐ
"சமூக
பாசிசவாதிகள்"
என்று
குற்றஞ்சாட்டும் அவர்கள், “முற்போக்கான"
முதலாளித்துவ பானர்ஜி மற்றும் அவரின் திரிணாமுல் காங்கிரஸுடன்
சேர்ந்து "மக்கள்
முன்னணிக்காக"
போராடுகின்றார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ்
எப்போதும் இருந்து வந்துள்ளதைப் போலவே,
அதுவொரு
வலதுசாரி முதலாளித்துவ கட்சியாகும்.
அது
1997இல்
காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த,
பகிரங்கமாக
அறிவித்துக் கொண்ட,
ஒரு வலதுசாரி
வங்காள பிராந்தியவாத கட்சியாக பானர்ஜியால் ஸ்தாபிக்கப்பட்டது.
மேற்கு
வங்காளத்தில் இடது முன்னனியைப் பதவியிலிருந்து இறக்க
போராடுவதில் காங்கிரஸ் தவறிவிட்டதாக அது காங்கிரஸைத் தாக்கியது.
ஆனால்
காங்கிரஸிற்கோ அப்போது தேசிய அரசியலில் ஸ்ராலினிஸ்டுகளின்
ஆதரவு தேவைப்பட்டு வந்தது.
விரைவிலேயே இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியுடன் திரிணாமுல்
காங்கிரஸ்
ஒரு
கூட்டணிக்குள் நுழைந்தது.
பாரதீய ஜனதா கட்சி
தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில்,
பானர்ஜிக்கு ஒரு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது.
கடந்த
13
ஆண்டுகளாக பானர்ஜி,
பாரதீய
ஜனதா கட்சியிலும் மற்றும் இந்தியாவை நவ-தாராளவாத
கட்டமைப்பிற்குள் நிறுவிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய
அரசாங்கங்களில் மாறிமாறி ஒரு மந்திரி பதவி வகித்து வந்துள்ளார்.
பிற்போக்குத்தனம் மற்றும் ஒடுக்குமுறை உடனான பானர்ஜியின்
தொடர்பு அவருடைய அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே
பின்தொடர்ந்து வந்துள்ளது.
1970களில்
அகில இந்திய அளவில் அவசரகால நெருக்கடி நிலை
அறிவிக்கப்பட்டிருந்த போது,
தொழிலாள வர்க்கம்
மற்றும் விவசாயிகளுக்கு எதிராக மாநில-ஜமீன்தார்களின்
வன்முறையுடன் மேற்கு வங்காளத்தில் அது தொடர்புபட்டிருந்த போது,
அவர்
காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு தலைவராக வளர்ந்தார்.
மேற்கு வங்காளத்தின் ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகளுக்கு ஆதரவாக
பேசும் ஒரு வெளிப்படையான பெண்மணியாக சமீபத்திய ஆண்டுகளில்
பானர்ஜி தன்னைத்தானே காட்டிக் கொள்கிறார் என்றால்,
அதற்கு
ஒருபுறம் ஸ்ராலினிஸ்டுகளின் போட்டி பிரிவுகளான பாராளுமன்ற
CPM
மற்றும் அதன் இடது
முன்னணி மற்றும் மற்றொருபுறம் மாவோயிஸ்டுகளின்
காட்டிக்கொடுப்புகளும் தான் காரணம்.
இடது முன்னணி அரசாங்கம் பின்பற்றும் ஒரு வெளிப்படையான
"முதலீட்டாளர்கள்
சார்ந்த"
திட்டத்துடன்,
பானர்ஜி
தொழிலாள வர்க்கத்தில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில்
அதிகரித்து வரும் அதிருப்திக்கு ஒரு வார்த்தைஜால
அழைப்பைவிட்டுள்ளார்.
இந்த
போலித்தனத்திற்கு மாவோயிஸ்டுகள் அவர்களின் ஆசிர்வாதத்தை
அளித்திருப்பதுடன்,
கட்டாயம்
தேவைப்படும் "இடது"
நன்சான்றுகளை திரிணாமுல் காங்கிரஸ்
தலைமைக்கு அளிக்கவும் முன்வந்துள்ளனர்.
முதலில்
இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கான ஒரு
சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் இரண்டாவதாக,
ஒரு டாடா
கார் ஆலை போன்ற பெரிய வியாபார அபிவிருத்தி திட்டங்களுக்காக
விவசாயிகளின் நிலத்தை பறிக்க முயன்ற இடது முன்னனி
அரசாங்கத்திற்கு எதிராக நந்திகிராம் மற்றும் சின்கூரில் மக்கள்
எதிர்ப்பை நசுக்க மாவோயிஸ்டுகள் அரசியல்ரீதியாக பானர்ஜியுடன்
நெருக்கமாக வேலை செய்தார்கள்.
“சின்கூர்
மற்றும் நந்திகிராம் போராட்டங்களில் நாங்கள் ஒன்றிணைந்து
போராடினோம்…
நந்திகாரமிலும்,
லால்கார்ஹிலும் [அங்கே
பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் வளர்ச்சியின்மை ஆகியவற்றிற்கு
எதிராக உள்ளூர் பழங்குடி மக்கள் போராடினர்]
கூட
நாங்கள் ஒன்றிணைந்து CPMஇன்
ஆயுதந்தாங்கிய பிரிவுகளையும்,
மத்திய-மாநில
கூட்டு படைகளையும் எதிர்த்தோம்,”
என்று
அறிவித்ததன் மூலமாக,
மாவோயிச தலைவர்
பிக்ராம் இந்த கூட்டுறவைக் குறித்து அவருடைய ஜனவரி அறிக்கையில்
தம்பட்டம் அடித்தார்.
திரிணாமுல் காங்கிரஸுக்கும்,
மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் அரும்பிவரும் கூட்டணிக்கு,
மேற்கு
வங்காள இடது முன்னனி அரசாங்கமும்,
CPMம்
இன்னும் அதிகமாக வலதிற்குத் திரும்பியதன் மூலமாக
பிரதிபலிப்பைக் காட்டியுள்ளன.
பெரிய
வியாபாரங்களின் ஆதாரவள அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்தியாவின்
"பழங்குடி
பகுதிகளைத்"
திறந்துவிட
நோக்கம் கொண்டிருக்கும்,
மற்றும் இந்திய
பிரதம மந்திரி மன்மோகன் சிங்கால் வெளிப்படையாக
ஒத்துழைக்கப்பட்ட Operation Green
Huntக்கு
அவர்கள் மிகவும் உற்சாகமாக அவர்களின் ஆதரவை அளித்துள்ளனர்.
மாவோயிச
அமைதி பேச்சுவார்த்தை தூதரின் படுகொலை,
ஒரு
திட்டமிட்ட-என்கவுண்டர்
படுகொலை (அதாவது
விசாரணையின்றி அளிக்கப்பட்ட மரணதண்டனை) என்று மம்தா பானர்ஜி
கூறிய போது,
மனித உரிமைகள்
துஷ்பிரயோகத்திற்குப் பெயர் போன இந்திய பாதுகாப்பு படைகளுக்கு
ஆதரவாக CPM
பாய்ந்து வந்தது.
(பார்க்கவும்:
“ndian
state murdered Maoist peace envoy”.
மாவோயிச கிளர்ச்சிப்படை நாட்டின்
"மிகப்
பெரிய உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலாக"
உள்ளது
என்றும்,
பானர்ஜியையும்,
அவருடைய
திரிணாமுல் காங்கிரஸையும் அரசாங்கத்தை விட்டு தூக்கியெறிய
வேண்டும் என்று பிரதம மந்திரி சிங்கின் முறையீட்டைச்
செயல்படுத்த CPM
மீண்டும் மீண்டும்
காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தியது.
மாவோயிச
கிளர்ச்சிப்படையை எதிர்ப்பதிலும்,
இல்லையென்றால் முதலாளித்துவ வேலைத்திட்டத்தை
செயல்படுத்துவதிலும்,
திரிணாமுல்
காங்கிரஸை விட இடது மிகவும் நம்பிக்கையான கூட்டாளி என்று
நிரூபித்துள்ளதால்,
ஒரு புதிய இடது-காங்கிரஸ்
கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலமாக,
அவர்கள்
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சட்டரீதியாக தடைசெய்யப்பட்ட ஒரு
"பயங்கரவாத"
அமைப்பான
CPI (மாவோயிஸ்டு)
இன்
தேர்தல் அறிக்கையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் உடனடியாக
விலகி நின்றது. “இது
மாவோயிஸ்டுகளின் அறிக்கையா அல்லது
CPM
நம்முடைய நல்மதிப்பைக் கெடுக்க விதைத்துள்ளதா என்று யாருக்குத்
தெரியும்?”
என்று பிக்ராமின்
ஜனவரி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ்
பொது செயலாளர் முகுல்ராய் அறிவித்தார்.
பானர்ஜி,
அவருடைய
பங்கிற்கு,
மாவோயிஸ்டுகளுக்கு
எதிரான கிளர்ச்சி-தடுப்பு
பிரச்சாரத்தின் மேற்கு வங்காள அரசாங்க பாத்திரத்தின்
முக்கியவத்தை—மாவோயிஸ்டுகளுக்கு
களங்கம் கற்பிக்க,
நூற்றுக்கும்
மேற்பட்டவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான ஒரு ரயில்
மோதலுக்கும் கூட அவர் (பானர்ஜி)
ஒரு சமயம்
CPMஐ
குற்றஞ்சாட்டினார்.
CPM
மற்றும்
மாவோயிஸ்டுகள் "சகோதரர்களைப்"
போன்றவர்கள்,
அவர்களை
ஒருவரிலிருந்து ஒருவரைப் வேறுபடுத்திப்பார்க்க முடியாது என்ற
எப்போதாவது கூறப்படும் குற்றச்சாட்டுக்களுடன் அறிக்கைகளில்
சேர்த்துக் கொண்டுள்ளார்.
மேலோட்டமாக பார்த்தால்,
பிந்தைய
அறிக்கை அர்த்தமற்றதாக இருக்கும்.
பூசல்மிக்க
ஸ்ராலினிச கட்சிகள் ஒன்றுக்கெதிராக ஒன்று சிறியளவிலான
உள்நாட்டு யுத்தத்தில் நிற்கின்றன.
ஆனால்
அப்பப்போதான பானர்ஜியின் மோசமான கம்யூனிச-எதிர்ப்பு
கலவைகள்,
ஒரு திட்டவட்டமான
முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
அவருடைய
"இடது"
ஏமாற்றுவித்தைகளுடன் மாவோயிஸ்டுகளைப் பயன்படுத்தி,
CPM
தலைமையிலான இடது
முன்னனியிலிருந்து மேற்கு வங்காள அரசாங்கத்தை அவர்
கையிலெடுத்துக்கொண்டால்,
இந்திய பெரு
வர்த்தகங்களுக்கும்,
காங்கிரஸ் கட்சி
மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கும் அவருடைய
(பானர்ஜியுடைய)
முந்தைய
கூட்டாளிகளை இரத்தந்தோய்ந்தவகையில் கையாள்வேன் என்பதை
உறுதிப்படுத்திக்காட்டுவதையே அவை குறிக்கின்றன.
மேற்கு வங்காள அபிவிருத்திகள்,
நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும்
இந்திய ஸ்ராலினிச அல்லது மாவோயிச போக்கு,
தொழிலாள
வர்க்கத்தை முட்டுச்சந்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்பதையே
அடிக்கோடிடுகிறது.
CPI
(மாவோயிஸ்டுகள்)
நீண்டகாலமாகவே நாடாளுமன்ற அரசியலில் பங்கெடுப்பதற்காக,
“ஆயுதந்தாங்கிய
போராட்டத்தில்"
இருந்து விலகி
நிற்கின்றனர்.
ஆனால்,
முதலாளித்துவ எதிர்ப்பில் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக
அதனை அதுவே நிறுத்துவதற்காக காட்டும் மாவோயிஸ்டுகளின் தேர்தல்
"எதிர்ப்பு",
தொழிலாள
வர்க்கத்திற்குள் சோசலிச நனவைக் கொண்டு வரும் போராட்டத்தோடு
சிறிதும் சம்பந்தப்பட்டதில்லை.
சிலபோது
பாட்டாளி வர்க்கமாக காட்டிக்கொள்ளும் மாவோயிஸ்டுகள்,
இந்தியாவின் மூலைமுடுக்குகளில் விவசாயிகளை அடிப்படையாக கொண்ட
ஒரு கிளர்ச்சியை நடத்துவதில் அவர்களின் சக்தியை
ஒருமுகப்படுத்திக் கொண்ட நிலையில்,
ஸ்ராலினிச
நாடாளுமன்ற கட்சிகளின் அரசியல் செல்வாக்கில் தொழிலாள
வர்க்கத்தைக் கைவிட்டுள்ளது.
அவர்களின்
காலங்கடந்த "மக்கள்
யுத்தம்"
மற்றும்
திரிணாமுல் காங்கிரஸுடனான அவர்களின் தேர்தல் ஆதரவு ஆகிய
இரண்டுமே,
பிற்போக்கான
ஸ்ராலினிச-மென்ஷ்விக்
இரண்டு கட்ட புரட்சி கோட்பாட்டிலிருந்து ஊறி வருகிறது.
அக்கோட்பாடு,
தாமதமாக
முதலாளித்துவ அபிவிருத்தி கண்ட நாடுகளில்,
முதலாளித்துவத்தின் முற்போக்கு பிரிவுகளுடனான கூட்டணியுடன்
தேசிய ஜனநாயக—அதாவது,
முதலாளித்துவப் புரட்சி பூர்த்திசெய்யப்படாத வரையில் சோசலிசம்
வரலாற்று நிகழ்ச்சிநிரலில் வெகுதூரத்திற்கு அப்பால் உள்ளது
என்று கூறுகிறது.
பிரிவினையை திணிக்கவும்,
ஜனநாயக
புரட்சியை ஒடுக்கவும் ஏகாதிபத்தியத்தைக் கண்டும் காணாமல்
இருந்த இந்திய முதலாளித்துவத்தை பார்த்த
20ஆம்
நூற்றாண்டில் தெற்கு ஆசியாவின் வரலாற்று அனுபவம்,
தீர்மானமாக
அதன் எதிர்ப்பக்கத்தை எடுத்துக்காட்டியது.
உழைப்பாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக தேவைகள்,
தொழிலாள
வர்க்க தலைமையிலான சோசலிசப் புரட்சி மூலமாக மட்டுமே
தீர்க்கப்பட முடியும்.
முதன்முதலில் நிரந்தர புரட்சியின் அவருடைய திட்டத்தில் லியோன்
டிரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட இந்த புரட்சிகர திட்டத்திற்காக,
இன்று
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் அதன் வெளியீடான
உலக சோசலிச
வலைத் தளமும்
போராடி வருகிறது.
ஸ்ராலினிசத்தோடு
சமசரப்படாத எதிர்ப்போடு,
நான்காம்
அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு பிரிவாக இந்திய தொழிலாள
வர்க்கத்தின் ஒரு புதிய கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும்.
ஆசிரியர் பரிந்துரைக்கும் பிற கட்டுரைகள்:
Indian state murdered Maoist peace envoy
Indian Stalinists provide “left” cover for government’s
anti-Maoist counter-insurgency war
Indian government to launch major military offensive against
Maoist insurgents
India’s Lalgarh “uprising”
Rival Stalinist camps abet reaction |