WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The Egyptian
Revolution enters a new stage
எகிப்திய புரட்சி ஒரு புதிய
கட்டத்திற்குள் பிரவேசிக்கிறது
Alex
Lantier
14 February 2011
Back
to screen version
மூன்று
தசாப்தங்களாய் நாட்டை ஆண்டு கொண்டிருந்த எகிப்தின் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை
கட்டாயமாக இராஜினாமா செய்யத் தள்ளியமை கடந்த சில வாரங்களிலான ஆர்ப்பாட்டங்களிலும்
மற்றும் வேலைநிறுத்தங்களிலும் பங்கேற்றிருக்கும் மில்லியன்கணக்கான தொழிலாளர்கள்
மற்றும் இளைஞர்களுக்கு ஒரு மகத்தான வெற்றி ஆகும். எவ்வாறிருந்தபோதிலும் அதனையடுத்த
நிகழ்வுகள் இந்த புரட்சி அதன் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே உள்ளது என்பதைக்
காட்டியிருக்கின்றன.
எகிப்திய
இராணுவம்,
வார இறுதியில் தான்
விநியோகித்த தொடர்ச்சியான அறிக்கைகளின் மூலமாக,
புரட்சிகர
போராட்டங்களுக்கான தனது பதிலிறுப்பை தெளிவாக்கி விட்டிருக்கிறது. பரந்த மக்களின்
இயக்கத்தைத் திசைதிருப்புவதும் ஒடுக்குவதும்,
அதேசமயத்தில் பெயரைத் தவிர மற்ற அனைத்திலும் பழைய ஆட்சியையே
பராமரிக்க அதிகாரத்தை தந்திரமாக மாற்றுவதை உறுதி செய்வதும் தான் அதன் நோக்கம்.
இரப்பர்
ஸ்டாம்ப் நாடாளுமன்றம் மற்றும் சர்வாதிகாரியின் அரசியல்சட்டம் ஆகிய முபாரக்
ஆட்சியின் பல்வேறு சட்டபூர்வமான புனைவுகளை தான் அகற்றுவதை எகிப்திய இராணுவம்
கூடுதலாக எடுத்துக் காட்டுகிறது. இராணுவம் ஒரு
“ஜனநாயக
மாற்றத்திற்கு”த்
இட்டுச் செல்லும் என்பதான ஒபாமா நிர்வாகத்தின் மோசடிக் கூற்றுகளின் அடியொற்றி
நியூயோர்க் டைம்ஸ்,
இந்த நடவடிக்கைகள்
எல்லாம் “ஆர்ப்பாட்டக்காரர்களின்
கோரிக்கைகளை எதிரொலித்த பெரும் நடவடிக்கைகள்”
என்று புகழ்ந்தது.
இது ஒரு
நகைப்பிற்கிடமான பொய்மைப்படுத்தலாகும். இராணுவம் தன்னையே அதிகாரத்தில் வைத்துக்
கொள்ள முயற்சித்துக் கொண்டிருப்பதோடு,
மில்லியன்கணக்கான
எகிப்தியர்களை வீதிகளில் இறக்கியிருக்கும் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றினைக் கூட
நிறைவேற்றவில்லை. இப்போது நாடு ஒரு இராணுவக் குழுவின் ஆட்சியின் கீழ் உள்ளது.
இக்குழு பழைய ஆட்சியின் அத்தனை அவசரகால அதிகாரங்களையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது,
போலிசை பாதுகாத்துக்
கொண்டுள்ளது,
அத்துடன் பிரதமர் அகமது ஷபிக் போன்ற பழைய முபாரக் பரிவாரம் ஒன்றின்
மூலம் ஆட்சி செய்ய முயற்சிக்கிறது.
ஒபாமா
நிர்வாகத்தை பொறுத்தவரை,
அது முபாரக்கை
எவ்வளவு காலத்திற்கு ஆதரிக்கமுடியுமோ அவ்வளவுகாலம் ஆதரித்துவந்திருந்த நிலையில்,
இப்போது இராணுவ
ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருக்கிறது. தளபதிகள் எடுத்த நடவடிக்கைகளையும்
ஜனநாயகத்திற்கான அவர்களது உறுதிப்பாட்டையும் வரவேற்பதாக சனியன்று நிர்வாகம்
அறிவித்தது. எகிப்தின் அதிகாரிகளில் பலருக்கும் பயிற்சியளிக்க உதவியிருந்த நிலையில்
இப்போது அவர்களை எகிப்திலும் மத்திய கிழக்கிலுமான தனது நலன்களைப் பாதுகாத்துக்
கொள்ளப் பயன்படுத்த அது நோக்கம் கொண்டிருக்கிறது. தனது இராணுவ மற்றும் மூலோபாய
நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல,
எல்லாவற்றிற்கும் மேலாய் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஒரு
புரட்சிகர சவாலைத் தடுப்பதும் இவற்றில் அடங்கும்.
எகிப்தின்
வணிக சமுதாயத்துடன் ஆழமாய் பிணைக்கப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரம் எகிப்தை
உலுக்கிக் கொண்டிருக்கும் போராட்ட அலைகளுக்கும் மற்றும் மேம்பட்ட ஊதியங்கள் மற்றும்
சமூக நிலைமைகள் கோரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் விரோதமாக உள்ளது. இன்னும்
அதனைச் செய்யும் அளவுக்கு வலிமையானதாய் உணரவில்லை என்கிற அதே சமயத்தில்,
இராணுவம்
போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு தான் கொண்டுள்ள நோக்கத்தை சமிக்கை
செய்கிறது. “குழப்பத்தையும்
ஒழுங்கின்மையையும்”
கண்டிக்கின்ற ஒரு
அறிக்கையில் உயர் இராணுவக் குழுவானது தான் தொழிற்சங்கங்கள் அல்லது தொழிற்முறை
கூட்டமைப்புகளின் கூட்டங்களையும் தடை செய்யக் கூடும் என்று கூறியது,
அதாவது வேலைநிறுத்தங்கள் சட்டவிரோதமாகி விடும்.
ஆறு மாத
காலத்தில்,
இன்னும் கூட நீளலாம்,
முழுக்கத் தன்னாலேயே
வரைவு செய்யப்பட்ட ஒரு அரசியல்சட்டத்தின் அடிப்படையிலும்,
அத்துடன்
முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சியைக் கலைக்காமலும் தேர்தலை நடத்தத்
திட்டமிடுகிறது. அதாவது,
இந்த ஆறு மாத காலத்தை போராட்டங்களை இல்லாது செய்வதற்கும் வெறுப்பைச்
சம்பாதித்திருந்த முபாரக்கின் ஆட்சிக்கு சற்றும் சளைக்காமல் மக்களின் கோரிக்கைகளை
உதாசீனப்படுத்தும் ஒரு ஆட்சிக்கு போலி-ஜனநாயக முகத்திரையை அளிப்பதற்கும்
பயன்படுத்தலாம் என்று அது நம்புகிறது.
இப்போது
உத்தியோகபூர்வமாய் எகிப்தின் ஆட்சியாளரான பீல்டு மார்ஷல் முகமது ஹூசைன் தந்தாவி
என்னும் மனிதர் குறித்து எகிப்திற்கான அமெரிக்க தூதர் பிரான்சிஸ் ரிசியார்டோன்
விவரித்திருந்தது (விக்கிலீக்ஸ் கசிவு) இந்த அடிப்படையான அரசியல் உண்மையை
சுருக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. 2008 மார்ச்சில் கூறப்பட்ட தந்தாவி குறித்த
இந்த விவரிப்பில்,
இஸ்ரேலுடனான 1979
உடன்படிக்கைக்கு உறுதிப்பாடு கொண்டவராகவும்
“பொருளாதாரம்
மற்றும் அரசியல் இரண்டிலுமான சீர்திருத்தங்களுக்கு எதிரானவராகவும்”
அவரை விவரித்த
ரிசியார்டோன் தந்தாவியின் அரசியலை பின்வருமாறு சுருக்கிக் கூறினார்:
“அவரும்
முபாரக்கும் தங்களது காலம் முழுவதிலும் ஆட்சியின் ஸ்திரத்திலும் உள்ளபடியான
நிலையைப் பராமரிப்பதிலும் கவனத்தை கொண்டவராக உள்ளனர்.”
இது
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ளதாக இருக்கின்றது
எனக்கூறுவது ஒரு முரண்படுகின்ற பொய் ஆகும். வேலைநிறுத்தங்கள் மற்றும்
ஆர்ப்பாட்டங்களில் இப்போது பங்குபெற்று வரும் மில்லியன்கணக்கான மக்களும்
கொல்லப்பட்ட மற்றும் சித்திரவதைக்கு ஆளான ஆயிரக்கணக்கான பேரும் போராடியது பழைய
ஆட்சியைப் பாதுகாப்பதற்கு அல்ல.
இவ்வாறுள்ள
நிலையிலும் எகிப்தின் உத்தியோகபூர்வ
“எதிர்க்கட்சி”
இராணுவத்திற்கான
தனது ஆதரவை சமிக்கை செய்கிறது. வெள்ளியன்று
“சட்டம்
ஒழுங்கின்”
அவசியத்தை
வலியுறுத்திய பின்னர் முகமது எல் பரேடேய் நேற்று அறிவித்தார்:
“நாங்கள்
இராணுவத்தை நம்புகிறோம்,
அத்துடன் அவர்கள்
வாக்குறுதியளித்ததை நிறைவேற்ற அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று
மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.”
முஸ்லீம்
சகோதரத்துவ (Muslim
Brotherhood)
அமைப்பின் ஒரு முன்னணி அலுவலரான முகமது எல்-கடானி
“புரட்சியின்
பிரதான இலக்கு சாதிக்கப்பட்டு விட்டது.”
எனக்கூறினார்.
உண்மையான
ஜனநாயகத்திற்கான எந்த இடமும் எகிப்திய முதலாளித்துவ வர்க்கத்திலோ,
அல்லது
அமெரிக்காவில் உள்ள அதன் ஆதரவாளர்களிடமோ,
அல்லது மற்ற
ஏகாதிபத்திய சக்திகளின் தலைநகரங்களிலோ இருக்கவில்லை என்பதையே இந்த அறிக்கைகள்
தெளிவாய் விளங்கப்படுத்துகின்றன. தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின்
அடிப்படைக் கோரிக்கைகளான மேம்பட்ட ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள்,
சமூக சமத்துவத்துவம்
மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு கட்டுவதற்கான கோரிக்கைகள் அரசியல்
ஸ்தாபகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் மிரட்சியால் நிரப்பியிருக்கிறது. தொழிலாள
வர்க்கத்தின் ஒரு பரந்த எழுச்சிக்கு முகம் கொடுத்து தங்களது அடிப்படை நலன்களுக்கு
அச்சுறுத்தலைக் காணும் முதலாளித்துவ-ஆதரவு
“எதிர்க்கட்சிகள்”
சர்வாதிகாரத்தை ஆதரிப்பதன் மூலம் எதிர்வினையாற்றுகிறது.
இது லியோன்
ட்ரொட்ஸ்கியால் விவரிக்கப்பட்ட நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் ஒரு மையமான
அம்சத்தை உறுதி செய்கிறது: ஒடுக்கப்பட்ட நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தால்
ஜனநாயகத்திற்கான மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவதற்கான ஒரு
போராட்டத்திற்குத் தலைமை கொடுக்க முடியாது. ட்ரொட்ஸ்கி நிரந்தரப் புரட்சி
தத்துவத்தில் பின்வருமாறு எழுதுகிறார்
''அத்தகையதொரு
போராட்டம்,
தவிர்க்கவியலாமலும்
மிகத் துரிதமாகவும் கடமைகளுக்கு முகம்கொடுக்கிறது,
அவை
நிறைவேறுவதென்பது முதலாளித்துவ சொத்துரிமைகளுக்குள் ஆழமாய் ஊடுருவுவதுடன்
பிணைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகப் புரட்சி நேரடியாய் சோசலிசப் புரட்சியாக வளர்ந்து
இவ்வாறாய் ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது.”
புரட்சியைத்
தொடர்வதும் தனது நலன்களுக்காகப் போராடுவதும் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட
பரந்த மக்களையும் இராணுவத்துடனும்,
உத்தியோகப்பூர்வ
எதிர்க்கட்சிகளுடனும்,
மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் முன்னெப்போதையும் விட
நேரடியானதொரு மோதலுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கிறது.
இந்தப்
போராட்டத்தை முன்கொண்டுசெல்ல தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான
அடித்தளமிடுவதற்கு இராணுவ-போலிஸ் அரசுக்கு எதிராக தொழிலாளர்’
ஜனநாயகத்தின்
சுயாதீனமான அமைப்புகளைக் கட்டுவது என்பது அவசியமாகிறது. இதற்கு எகிப்தின்
தொழிலாளர்களை ஒட்டுமொத்த பிராந்தியத்தின் தொழிலாள வர்க்கத்துடன்,
அத்துடன் முன்னேறிய
முதலாளித்துவ நாடுகளில் உள்ள,
எல்லாவற்றிற்கும் மேலாய் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுடன்
ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டம் அவசியமாய் உள்ளது. பெருநிறுவன மற்றும் நிதித்துறை
உயரடுக்கினால் செய்யப்படும் பொதுவான தாக்குதலுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள
தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒரு உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதி
தான் எகிப்தின் புரட்சிகர எழுச்சி ஆகும்.
அனைத்திற்கும் மேலாய்,
இந்தப் போராட்டங்களை சோசலிசப் புரட்சி என்னும் அவற்றின்
அத்தியாவசியமான முடிவிற்கு அழைத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புக் கொண்ட ஒரு புதிய
கட்சியைக் கட்டுவதும் இதற்கு அவசியமாய் உள்ளது. அத்தகையதொரு கட்சியைக் கட்டுவதற்கான
போராட்டத்தில் இணைவதற்கு எகிப்திலும் மற்றும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள
தனது வாசகர்கள் மற்றும் அனுதாபிகளுக்கு உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது. |