World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Mubarak resignation staggers Obama administration

முபாரக் இராஜிநாமா ஒபாமா நிர்வாகத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்துகிறது

By Alex Lantier
12 February 2011

Back to screen version

நேற்று எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட்டமையானது ஒபாமா நிர்வாகம் எகிப்திய மக்களின் ஜனநாயக விழைவுகளுடன் ஒற்றுமை என்ற பாசாங்குத்தனமான அறிக்கைகளுடன் எதிர்கொண்டது. ஆனால், அமெரிக்க அரசாங்கம் 31 ஆண்டுகளாக ஆதரவு கொடுத்து வந்திருந்த ஒரு சர்வாதிகாரியின் வீழ்ச்சி பற்றிய பீதியை நிர்வாகத்தினருடைய கருத்துக்களால் அதிகம் மறைக்க முடியவில்லை.

வினாக்களுக்கு விடையிறுக்க இயலாது எனக்கூறிவிட்டு ஓர் ஆறு நிமிட வெற்று உரை நிகழ்த்தியபின், ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காஎகிப்தின் நட்பு நாடாகவும் பங்காளியாகவும்தொடர்ந்து உள்ளது என்று அறிவித்தார். “வன்முறையின்மையின் அறநெறி ஆற்றலைஅதுதான் எதிர்ப்புக்களின் அடித்தளத்தில் இருந்த கொள்கை என்று அவர் புகழ்ந்துஅது வரலாற்றின் வளைகோட்டை நீதியின் பக்கம் மீண்டும் வளைத்துள்ளதுஎன்றார்.

வாஷிங்டனை எகிப்திய மக்களுக்கு பரிவுணர்வு காட்டும் வகையில் ஒபாமா சித்தரிக்க முற்பட்டுள்ளது பாசாங்குத்தனத்தின் உயர்நிலையாகும். அதிகாரத்தில் இருந்து இறுதியில் கட்டாயப்படுத்தி அகற்றிய மகத்தான வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் என்னும் அலைகளுக்கு நடுவே அமெரிக்க அரசாங்கம் அதன் ஆதரவை முபாரக்கிற்கு மிகவும் தெளிவாக்கியுள்ளது.

பெப்ருவரி 1 அன்று முபாரக் அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்னும் மக்கள் கோரிக்கைகளை மீறிய முறையில் பேசியபோது, ஒபாமா எகிப்திய ஜனாதிபதியிடம் ஒரு 30 நிமிட தொலைபேசி உரையாடலை நடத்தினார். அதன்பின் ஒபாமா அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் இடையேயுள்ளபங்காளித்தனத்தைமீண்டும் வலியுறுத்தி ஜனநாயகத்திற்குஇடைமாற்றம்தேவை என்று அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் எகிப்தில் முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த பிராங்க் விஸ்னர் முபாரக் ஆட்சியின் தலைமைக்கு நிலைப்பாட்டைப் பற்றித் தெரிவிக்க கெய்ரோவிற்குப் பயணித்தார்.

அமெரிக்காவின்நாடுகடத்தல்திட்டத்தின் கீழ் எகிப்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட்ட கைதிகளைச்  சித்திரவதைக்கு உட்படுத்திய அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகளுடன் ஒத்துழைத்த உளவுப் பிரிவுத் தலைவரான முபாரக்கின் உதவியாளரான துணை ஜனாதிபதி ஒமர் சுலைமானுக்கு ஆதரவளித்ததுடன் முபாரக்கிற்கும் தொடர்ந்த பங்கு இருக்க வேண்டும் என அமெரிக்கா கூறி வந்தது. ஒரு வாரத்திற்கு முன்புதான் விஸ்னர் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில்ஜனாதிபதி முபாரக் வருங்காலத்தைப் பற்றி நாம் தீர்மானித்துச் செல்லவுள்ள ஆட்களில் முற்றிலும் முக்கியமாக இருக்கிறார்என்றார். “இம்மாற்றங்களைக் கொண்டுவருவதின் பொருட்டு முபாரக் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும்என்றும் அவர் வலியுறுத்தினார்.

வாஷிங்டனுடைய பரிவுணர்வுகள் எங்கிருந்தன என்பதற்கு இன்னும் விபரமான ஆதாரங்களும் உள்ளன. கண்ணீர்ப்புகை, அடர்த்தியான கையெறி குண்டுகள் என்று  பொலிசாரால் அவர்கள் மீது எறியப்பட்டவைஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவைஎன்ற முத்திரையைக் கொண்டிருந்ததை எகிப்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்த்தனர். முபாரக்கின் இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளுக்கு முழு ஆயுதங்களை கொடுக்கும் அமெரிக்காவின் பரந்த கொள்கையின் ஒரு பகுதி ஆகும் இது. இதற்காகப் பல தசாப்த காலமாக அமெரிக்கா ஆண்டிற்கு 1.3 பில்லியன் டொலர் செலவழித்துள்ளது.

வன்முறையின்மைக் கோட்பாட்டை ஒபாமா குறிப்பிட்டுள்ளதும் இதேபோல் வெற்றுத்தன்மை வாய்ந்தது, போலியானது. அக்கருத்திற்கு ஒன்றும் எகிப்திய அரசாங்கம் மதிப்புக் கொடுக்கவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர், சித்திரவதைக்குட்பட்டனர் அல்லது ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள்காணாமற் போயுள்ளனர்”. எதிர்ப்பாளர்களும் தெரு மோதல்களில் இருந்து பொலிஸ் மற்றும் கத்திகள், மொலடோவ் கலவை, தடிகள் மற்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய முபாரக் சார்புடைய குண்டர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வன்முறையின்மையைக் கைவிடும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்.

முபாரக் அகற்றப்படுவதற்கு ஒபாமா நிர்வாகம் துணை நின்றிருந்தால், ஐயத்திற்கு இடமின்றி இதற்குக் காரணம் அது எகிப்திய தளபதிகளின் மதிப்பீடான முபாரக்கை எதிர்க்கும் மில்லியன்கணக்கான மக்களைத் திறமையுடன் கட்டாயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இராணுவத்தின் மூலம் கட்டுப்படுத்த அவர்களால் முடியாது என்பதை ஒப்புக் கொண்டதுதான். மாறாக அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை ஒரு புதிய கெய்ரோவின் தளபதிகள் குழுவிடம் ஒப்படைப்பதற்கு முடிவெடுத்துள்ளனர்.

ஆனால் வாஷிங்டனின் கொள்கையான அனைத்து வழிவகைகளையும் பயன்படுத்தி எகிப்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றத்தையும் இது குறிக்கவில்லை. சூயஸ் கால்வாய் கடல்வழியை எகிப்து கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பைக் கொண்ட தொழில்துறைச் சக்தியாக விரைவாக வளர்ந்து வருகிறது, இஸ்ரேலுடன் முக்கியமான சமாதான உடன்படிக்கையைத் தக்க வைத்துள்ளது, மற்றும் அரபு உலகில் மைய அரசியல், பண்பாட்டுப் பங்கையும் கொண்டுள்ளது. வாஷிங்டனின் பார்வையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முபாரக் ஆற்றிய பணிகள் அவர் அவருடைய மக்கள் மீது இயக்கிய குற்றங்களைவிட அதிக ஆதாயம் கொடுத்தன.

இப்பொழுது எகிப்தில் ஒரு வருங்கால அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முன்புபோல் இயைபு உடையதாக இருக்காது என்ற அச்சத்தை வாஷிங்டன் கொண்டுள்ளது. ஏனெனில் நாட்டு மக்கள் அமெரிக்க அடக்குமுறைக் கொள்கை மற்றும் மத்திய கிழக்குக் கொள்கையைப் பெரிதும் எதிர்க்கின்றனர். உண்மையில் Brookings Institute ன் சிந்தனைக் குழு சமீபத்தில் டானியல் எல்.பைமன்எகிப்தில் ஜனநாயகம்: அமெரிக்காவிற்கு வரக்கூடிய இடர்கள் என்ன?” என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டது.

எப்படிப்பார்த்தாலும், முபாரக் ஒரு நண்பராக இருந்தார்மிருகத்தன, ஊழல் நலிந்த, சர்வாதிகாரம் படைத்த நண்பர், ஆனால் எப்படியும் நம் நண்பர். அவருடைய ஆட்சி எகிப்தில் எந்த அளவிற்கு அமெரிக்கச் சார்பு முடியுமோ அதைக் கொண்டிருந்த ஆட்சியாகும். எகிப்திய மக்களின் விருப்பத்தைப் பிரதிபலித்துப் பதவிக்கு வரும் வேறு எந்த அரசாங்கமும் வாஷிங்டனிடமிருந்து சற்று தொலைவில்தான் இருக்கும்.

புதிய எகிப்திய ஆட்சியைப் பொறுத்தவரையில் அமெரிக்க உறவுகளில் இஸ்ரேல்பெரும் இடரைக் கொடுக்கும் பிரச்சினையாக இருக்கும்என்று பைமன் கூறியுள்ளார்.

ஒபாமா அலுவலகத்திலிருந்து வெளியேறும் செய்தித் தொடர்பு செயலாளர் ரோபர்ட் கிப்ஸ் பைமனுடைய கவலைகளை தன் இறுதிச் செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார். எகிப்து ஒரு காலனித்துவ நாட்டிற்கு ஒப்பானது என்ற கருத்தில் இருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள முடியாத நிலையில், அவர் எகிப்திய மக்களுக்கு, “எகிப்தில் அடுத்துவரும் அரசாங்கம் இஸ்ரேலுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்பதை நன்கு அறிதல் முக்கியமாகும்என்று கூறினார்.

ஜனநாயகத்தைப் பற்றி கவலை வேண்டும் என்று நான் நினைக்கவில்லைஎன்று கிப்ஸ் அறிவித்தாலும், அவருடைய விடைகள் வேறுவிதக் குறிப்பைத்தான் காட்டின. சௌதி அரேபியா மற்றும் ஜோர்டானில்இரு அமெரிக்க ஆதரவுடைய முடியாட்சிகள், தங்கள் மக்களை மிருகத்தனமாக அடக்கி வைத்துள்ளவை-- ஜனநாயகத்திற்கு அவர் ஆதரவு கொடுப்பாரா என்ற கேட்கப்பட்டதற்கு கிப்ஸ் தயங்கியவாறுஅத்தகைய அறிக்கையை வெளியிடுவது நம் வேலையில்லை.” என்றார்.

ஆனால் சௌதி அரேபியாவைப் போல் இல்லாமல் தன்னுடைய எண்ணெய் மற்றும் எண்ணெய் மூலம் கிடைக்கும் வருமானங்களை அமெரிக்க இராணுவ-நிதிய இயந்திரம் விரும்பும்படி கீழ்ப்படிந்து நடக்காத நாடான ஈரானைக் குறைகூறுவதற்கு கிப்ஸிடம் மன உளைச்சல் ஏதும் இல்லை. ஈரானைப் பற்றிக் கூறுகையில் அவர்தங்கள் மக்களுடைய கருத்தைப் பற்றி அரசாங்கம் அச்சப்படவில்லை என்றால் …. அவர்களைப் பேசுவதற்கு அது அனுமதிக்கும்என்றார்.

அமெரிக்கா நடத்திவரும் ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தை, 2009 ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்களில் தொடங்கியதை, கிப்ஸ் இன்னும் தொடர்கிறார். அப்பொழுது அமெரிக்க ஆதரவுடையபச்சை வண்ணப் புரட்சிஎன்னும் முயற்சி சீர்திருத்தவாத வேட்பாளர் மீர்ஹோசைன் மௌசவியால் ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜாட்வை மறு தேர்தலை நடத்தச் செய்வதற்கு முயன்றார். இப்பிரச்சாரத்தின் ஒரு முக்கியமான கூறுபாடு ஜூன் 4ம் தேதி ஒபாமா கெய்ரோவில் கொடுத்தஜனநாயக சார்புஉரையாகும். அப்பொழுது அமெரிக்க அதிகாரிகள்ஜனநாயகத்தை பாராட்டிப் பேசும் சொற்றொடர்களை கையாள்வதில் சங்கடம் சிறிதும் கொள்ளவில்லை. முபாரக் சர்வாதிகாரத்தின் அதிகாரிகள் சூழ்ந்திருந்த நிலையிலும்.

கிப்ஸின் குறைகூறல், மற்றொரு இயல்பான, மடத்தனமான கருத்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் மூலம் எதிரொலித்ததுஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள்காணாமற் போய்விட்டனர்அல்லது எகிப்திய ஆட்சியில் கொல்லப்பட்டனர் என்பது முற்றிலும் தெரியாதது போல், பிடென் கூறினார்: “ஈரானிய அரசாங்கம் ஈரானிய மக்களை அமைதியான முறையில் கூடவும், ஆர்ப்பாட்டம் செய்யவும், கருத்துத் தெரிக்கவும் , கெய்ரோ மக்கள் செய்வது போல், டெஹ்ரானிலும் அனுமதிக்க வேண்டும்.” முபாரக் அவருடையநண்பரென்றும்’, அவர் பதவிவிலகக்கூடாது என வலியுறுத்தியும் ஒரு கிழமைக்கு முன்னதாக ஒரு பேட்டியில் பிடென் அறிவித்தார்.

இத்தகைய கருத்துக்கள் அமெரிக்க அதிகாரிகள் எவ்வளவு இழிந்த முறையில்ஜனநாயகம்என்ற கருத்தைப் பற்றி துதிபாடுகின்றனர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது அவர்களுடைய வெளியுறவுக் கொள்கையின் மற்றொரு கூறுபாடு ஆகும். கிளஸ்டர் வெடிகுண்டுகள், நாடுகடத்தல் ஆகியவற்றைப் போல்.