WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஹோஸ்னி
முபாரக்கின் வீழ்ச்சி
World Socialist Web Site Editorial Board
12 February 2011
Use this version to print | Send
feedback
எகிப்திய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கின்
வீழ்ச்சியை உலக சோசலிச வலைத் தளம் வரவேற்கிறது. கெய்ரோ,
அலெக்சாண்டிரியா மற்றும் பிற நகரங்களில்
மில்லியன்கணக்கான எகிப்திய தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களது
வரலாற்று வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடுவது நியாயமானதே.
இந்த அசாதாரண நிகழ்வுகள் எகிப்துக்கு
மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும் திருப்புமுனையானவை ஆகும்.
இவை தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூகசக்தியை
எடுத்துக்காட்டியிருப்பதோடு,
சோவியத் ஒன்றியத்தின் நிலைக்குலைவு
“வரலாற்றின்
முடிவு''
மனித
விவகாரங்களில் வர்க்கப் போராட்டம் ஒரு காரணி என்பதை
முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதான கூற்றுக்களை பதிலளிக்க
முடியாத வகையில் மறுத்துரைத்துள்ளன. சித்திரவதை,
கைதுகள் மற்றும் அடக்குமுறைக்கு முன்னால்
எகிப்தின் பரந்த மக்களின் வெற்றிகரமான வீரமானது உலகெங்கிலுமான
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உத்வேகத்திற்கான
முன்மாதிரியாக அமைந்திருக்கிறது.
24 மணி நேரத்திற்கும் குறைவான காலத்திற்கு
முன்பாக தான் வழங்கிய உரையில் கோபத்தைத் தூண்டும்வகையில்
பதவியிறங்க மறுத்திருந்த முபாரக்,
தலைகீழ் முடிவாய் தலைகுனிவுடன் இராஜினாமா
செய்தார். இது இராணுவத் தலைமைக்கும் ஒரு அடியாக விழுந்தது.
ஏனென்றால் வெள்ளியன்று காலை எகிப்திய உளவுத் துறையின் நெடுநாள்
தலைவரான துணை ஜனாதிபதி ஓமர் சுலைமானுக்கு அதிகாரத்தை மாற்றுவதை
ஆதரித்து வெள்ளியன்று காலையில் அது ஒரு அறிக்கையை
வெளியிட்டிருந்தது.
எகிப்தைத் தாண்டி புரட்சி பரவும் அச்சத்தில்
உள்ள அரபு முதலாளித்துவத்திற்கும் அத்துடன் அடக்குமுறை மற்றும்
இராணுவப் பயங்கரவாத கொள்கைகள் அரபு நாடுகளிலும் மற்றும்
இஸ்ரேலிலுமே கூட தொழிலாள வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதை
நம்பி உள்ள இஸ்ரேலிய அரசுக்கும்,
மற்றும் அனைத்திற்கும் மேலாய் 31 ஆண்டுகளாக
முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு பிரதான நிதியளிப்பாளராகவும்
ஆதரவாளராகவும் இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இது ஒரு
நடுக்கமூட்டும் பின்னடைவு ஆகும். அரசியல் எதிரிகளுக்கு எதிராக
சித்திரவதைகளை பரவலாய் பயன்படுத்துவது உட்பட இந்த ஆட்சியின்
அனைத்துக் குற்றங்களிலும் அமெரிக்கா உடந்தையாய் இருந்து
வந்துள்ளது.
வட ஆபிரிக்காவை சூழ்ந்துள்ள புரட்சிகர
எழுச்சிகள்,
முதலாளித்துவத்தின் உலகளாவிய பொருளாதார நெருக்கடியால்
உருவாக்கப்பட்டுள்ள நிலைமைகளுக்கு உலகத் தொழிலாள வர்க்கத்தின்
முதல் பெரும் பதிலிறுப்பாகும். முபாரக்கை கீழிறக்கியதன் மூலமாக,
எகிப்தில் மட்டுமின்றி உலகெங்கிலும் பொருளாதாரச் சுரண்டல்,
ஜனநாயக
உரிமைகள் ஒடுக்கப்படுவது,
மற்றும் அரசாங்கங்களால் பாதுகாக்கப்படும் சமூக
ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு எதிரான ஒரு உலகளாவிய போராட்டத்தில்
எகிப்திய தொழிலாளர்கள் முதல் வெற்றியைக் கொண்டுவந்துள்ளனர்.
ஆயினும் முபாரக் இராஜினாமா செய்தது போன்று
முக்கியமானது என்னவென்றால்,
இது
போராட்டத்தின் தொடக்கம் மட்டுமே என்பதே. முபாரக் போயிருக்கலாம்,
ஆனால்
ஆட்சி அப்படியே தான் இருக்கிறது,
எகிப்தில் பல தசாப்தங்களாய் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின்
அச்சாணியாக இருந்து வந்திருக்கும் இராணுவ அதிகாரிகளின்
கரங்களில் தான் அதிகாரம் இருக்கிறது. இரகசிய போலிசார்,
கூலிக்கு மாரடிக்கும் எகிப்திய தளபதிகள்
மற்றும் முபாரக்கும் உள்ளிட சுரண்டல்காரர்களுடன் கணக்கைத்
தீர்ப்பதை தாங்கள் ஆரம்பித்து மட்டுமே இருக்கிறோம் என்பதை
பரந்த மக்கள் அறிவார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதற்கான
தனது போராட்டத்தில் எகிப்திய ஆட்சி ஏகாதிபத்திய சக்திகளின்
மிகவும் ஈவிரக்கமற்ற நிதிய பிரபுத்துவத்துவ கூட்டாளிகளைக்
கண்டறியும். பல வாரங்களாக ஒபாமா நிர்வாகம் முபாரக்கை
வலிமைப்படுத்துவதற்கு திரைமறைவில் வேலை செய்து வந்திருந்ததோடு
அவர்
“ஒழுங்குமுறையான
இடைமாற்ற”த்தை
மேற்பார்வை செய்ய வேண்டும் என்பதாய் வலியுறுத்தி வந்தது.
வெள்ளியன்று மாலை முபாரக்கின் இராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும்
வகையான ஒபாமாவின் சம்பிரதாய உரை வந்தது. ஆனால் அன்று காலையில்
நிர்வாகத்திடம் இருந்து வந்திருந்த ஒரு அறிக்கையில் முபாரக்
பதவியிறங்குவதற்கு குறிப்பாய் எந்த அழைப்பும்
விடுக்கப்படாதிருந்தது. முபாரக்கை இடம்பெயர்ப்பது எந்த
ஆட்சியாக இருந்தாலும் அது அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு
விசுவாசம் மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அமெரிக்கா
எகிப்திய இராணுவத்துடன் தீவிரமான விவாதங்களை நடத்திக்
கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.
”ஜனநாயக
இடைமாற்ற”த்தை
மேற்பார்வை செய்வதற்கு இராணுவத்தின் மீதோ அல்லது இராணுவ
அரசாங்கத்திற்கு தங்களது முழுமையான ஆதரவைச்
சுட்டிக்காட்டியிருக்கும் எகிப்தின் உத்தியோகபூர்வ
“எதிர்க்கட்சிகள்”
மீதோ
எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. இராணுவம் ஒரு முழு
வருடத்திற்கு தான் விரும்பியதைச் செய்து கொள்ள முடியும்
வகையில்,
இப்பணி
ஒரு வருட காலத்தில் நடைபெறலாம் என
“எதிர்க்கட்சி”த்
தலைவர்களில் ஒருவரான முகமது எல்பரேடேய் கூறியிருக்கிறார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் எகிப்தில் இருக்கும்
தனது தலையாட்டிகள் மீது அமெரிக்கா பணமழையைப் பொழிந்து,
முபாரக் தூக்கியெறியப்படுவதற்கு முன்னதாக தொழிலாள வர்க்கம்
எங்கிருந்ததோ அங்கே மீண்டும் திரும்பச் செய்கின்ற ஒரு
“மாற்றத்தை”
ஏற்பாடு செய்ய முடியும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மூலோபாய அறிஞர்கள் நம்புகின்றனர். முன்னாள் சிஐஏ இயக்குநரான
ஜேம்ஸ் வூல்ஸ்லி சிஎன்என் தொலைக்காட்சியில் பேசுகையில்,
அமெரிக்கா
“ஒரு
ஜனநாயகமான மற்றும் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்த திசையில்
ஸ்திரநிலை மற்றும் மாற்றத்திற்கான சக்திகளுடன் இணைந்து
பணியாற்ற”
வேண்டும் என்றும்
“அவர்களுக்கு
பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் உதவ வேண்டும்”
என்றும் கூறினார்.
இத்தகைய கருத்துகள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு
தீவிரமான எச்சரிக்கை ஆகும். முபாரக் அகன்றதன் இன்றிரவின்
கொண்டாட்டம் உள்ளபடியே சரியானதே என்றாலும் புரட்சியின் ஆரம்ப
வெற்றிகள் இழக்கப்பட்டு விடக்கூடாது. வர்க்க மூலோபாயம்
தொடர்பான கேள்வியும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய
புரட்சிகரத் தலைமை உருவாவதும் தான் புரட்சியின் அடுத்த
கட்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும். 1917 அக்டோபர்
புரட்சியில் விளாடிமிர் லெனினின் சக தலைவராய் இருந்தவரும்,
நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரும்,
சர்வதேச சோசலிசப் புரட்சியின் முன்னோடியான சாதகரும்
தத்துவாசிரியருமான லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைப்
படிப்பதற்கு எகிப்திய தொழிலாளர்களின் கவனத்தை நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைக்கிறது. ட்ரொட்ஸ்கியின்
நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் விளக்கப்பட்டுள்ளதைப் போல,
ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது தொழிலாளர்’
அதிகாரத்திற்கான போராட்டத்தில் இருந்தும்
மற்றும் எகிப்தையும் மற்றும் ஒட்டுமொத்த உலகத்தையும்
சோசலிசரீதியில் உருமாற்றுவதற்கான போராட்டத்தில் இருந்தும்
பிரிக்கவியலாதது.
இராணுவ அரசாங்கத்திற்கு அமெரிக்காவும்
எல்பரேடேயும் ஆதரவளிப்பதென்பது ஒரு தற்செயலல்ல,
மாறாக
முதலாளித்துவ வர்க்க நலன்களின் ஒரு பிரதிபலிப்பு ஆகும்.
ஊதியங்களை உயர்த்துவது,
விலைகளைக் குறைப்பது,
அல்லது அரசியல் சுதந்திரங்களை பாதுகாப்பது என
பரந்த மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான ஒவ்வொரு
முயற்சியும் தவிர்க்கவியலாமல் தொழிலாளர்களை இந்த உயரடுக்கின்
பிரதிநிதிகளோடு மோதலுக்கு இட்டுச்செல்லும். இந்த உயரடுக்கு
தங்களது பொருளாதார அல்லது மூலோபாய நலன்களுடன் மோதலுக்கு வரும்
எந்த மாற்றத்தையும் எதிர்க்கிறது.
முபாரக் ஆட்சியின் தப்பிப் பிழைத்த பிரிவுகளைத்
தூக்கியெறிவதற்கும் அவற்றை ஒரு தொழிலாளர்’
அரசாங்கத்தால் இடம்பெயர்ப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை
அடிப்படையாகக் கொண்ட அதிகாரத்திற்கான மக்கள் அமைப்புகளை
உருவாக்குவது தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டிருக்கும் மையமான
பணியாகும். எகிப்தைக் கடந்து புரட்சியை விரிவுபடுத்தி,
எகிப்தியத் தொழிலாளர்களை மத்திய கிழக்கு
மற்றும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் முழுவதிலும் இருக்கக்
கூடிய தங்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றுபடுத்துவதில்
தான் இப்புரட்சியின் வெற்றி தங்கியுள்ளது.
இது முபாரக்கின் வீழ்ச்சி அடையாளம் காட்டுகின்ற
தீவிரமான வர்க்கமோதல்களுக்கு,
எகிப்திலும் சர்வதேசரீதியாகவும்,
தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குகிற
ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்குகளுக்காக போராடும் கட்சிகளை
கட்டுவதற்கான போராட்டமாகும். |