WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
எகிப்து
முபாரக் இராஜிநாமா செய்கிறார்,
இராணுவம் எகிப்தில் அதிகாரத்தைப் பெறுகிறது
By
Tom Eley
12 February 2011
Use this version to print | Send
feedback
வெள்ளியன்று மாலை கிட்டத்தட்ட
6
மணிக்கு எகிப்திய துணை ஜனாதிபதி ஒமர் சுலைமான் தேசியத்
தொலைக்காட்சியில் தோன்றி சர்வாதிகாரியான எகிப்தை
30
ஆண்டுகாலமாக ஆண்டு வந்த ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இராஜிநாமா
செய்துவிட்டார்,
உயர்மட்டத் தளபதிகள் குழுவான ஆயுதப் படைகளின் தலைமைக்குழுவிடம்
நாட்டின் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றுள்ளார் என்று சுருக்கமாக
அறிவித்தார்.
முபாரக் இராஜிநாமா செய்த தகவலைக்
கேள்வியுற்றதும் பெரும் களிப்பில் எகிப்து மூழ்கியது.
மில்லியன் கணக்கில் கெய்ரோவின் பல புறங்களில் இருந்தும்
தஹ்ரிர் சதுக்கத்தில் வந்து குழுமியிருந்த கூட்டம் ஆடல்
பாடல்களிலும் ஆனந்தக் கண்ணீர் விட்டும் மகிழ்ச்சியைக்
கொண்டாடியது.
இதேபோன்ற காட்சிகள் எகிப்து முழுவதும்,
அலெக்சாந்திரியாவில் நூறாயிரக்கணக்கானவர்கள் நிறைந்த
ஆர்ப்பட்டம் உட்பட நிகழ்ந்தன.
18
நாட்கள் பரந்தளவிலும் குறைந்தளவிலும் நடைபெற்ற
வேலைநிறுத்தங்கள்,
ஆர்ப்பாட்டங்களுக்குப் பின் முபாரக்கின் விலகுதல் நிகழ்ந்தது.
பொதுவாக எதிர்ப்புக்கள் எண்ணிக்கையிலும் பரப்பிலும் ஆட்சியின்
மிருகத்தன அடக்குமுறையை மீறி வளர்ச்சியுற்றன.
புரட்சியின் இக்கட்டத்தில் குறைந்தது
300
பேராவது கொல்லப்பட்டனர்.
உண்மையான எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி அதிகமாக இருக்கும்.
ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும்
“காணாமற்
போயினர்.”
புதன் மற்றும் வியாழனன்று முடிவான கணம் வந்தது.
அப்பொழுது எகிப்தின் தொழிலாள வர்க்கம் முன்னணிக்கு
வந்துவிட்டது.
அல்லது
பொருளாதாரத்தின் மற்ற பிரிவுகளை முற்றிலும் மறைத்துவிட்ட
அளவில் பெருகியிருந்தது.
வேலைநிறுத்த அலை எகிப்திய இராணுவத்தை இறுதியாக
முபாரக்கிற்கு எதிரான செயலில் ஊக்கிவித்தது.
அதுவரை
ஒபாமா நிர்வாகம் முபாரக்கிற்கு ஆதரவு கொடுத்து வந்தது.
அதற்குக் காரணம் அவர் அகற்றப்படுவது எகிப்திற்கும் அப்பால்
புரட்சிகரத் தொற்று பரவக்கூடும்,
எகிப்திய தொழிலாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே
பலப்பரீட்சை என்ற அரங்கம் வந்துவிடும் என்ற அச்சம் இருந்தது.
இராணுவமோ மக்களுடைய சமூக,
ஜனநாயகக் குறைகளைத் தீர்க்க தயாராகவும் இல்லை,
விருப்பத்தையும் காட்டவில்லை.
வியாழன் மாலை தொலைக்காட்சி உரையில் முபாரக்
இராஜிநாமாவை அறிவிப்பார் என்பதற்கு பல அறிகுறிகள் இருந்தன.
அன்று
முன்னதாக நாட்டின் தலைமை இராணுவக்குழு தொலைக்காட்சி
புகைப்படக்கருவிகளுக்கு முன்பு கூட்டப்பட்டனர்.
அதில்
குறிப்பிடத்தக்க வகையில் முபாரக்கும் சுலைமானும் இடம்
பெறவில்லை.
இக்குழு அறிக்கை ஒன்றை,
“Communique No.1”
என்ற
பெயரில் வெளியிட்டு,
ஒரு
இராணுவமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைப் போன்ற தோற்றத்தைக்
காட்டியது.
அன்றே
ஒரு தளபதி தஹ்ரிர் சதுக்கத்திற்கு வந்து
ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அவர்களுடைய கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
இதற்கிடையில்,
அமெரிக்காவில் மத்திய உளவுத்துறைப் பிரிவின்
(CIA)
இயக்குனர் லியோன் பானெட்டா முபாரக் அன்று பிற்பகுதியில்
பதவியில் இருந்து இறங்கக்கூடும் என தான் எதிர்பார்ப்பதாகக்
காங்கிரசிடம் கூறினார்.
வியாழன் இரவு முபாரக் தொலைக்காட்சியில் தோன்றி,
ஆத்திரமூட்டும் தன்மையில்,
தான்
பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்கப்போவதாகவும்,
கூடுதல் அதிகாரத்தை நாட்டின் முன்னாள் உயர்மட்ட உளவுத்துறை
அதிகாரியும் அமெரிக்கா,
இஸ்ரேலுடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் சுலைமானிடம் அளிக்க
இருப்பதாகவும் வலியுறுத்தியபோது,
ஒரு
சமூக வெடிப்பிற்கான அரங்கு அமைக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை அவர் செய்யும் வரை,
முபாரக் இராஜிநாமா செய்வாரா,
மாட்டாரா என்பது தெளிவாக இல்லை.
காலையில்,
இராணுவக்குழு மற்றொரு அறிக்கையை
–“அறிக்கை
எண்.2”
வெளியிட்டு,
முந்தைய இரவு சர்வாதிகாரியின் உரைக்கு ஆதரவைக் காட்டியது.
இந்த
ஆவணம் இராணுவம் முபாரக்கிடம் விசுவாசமாக காலவரையறையற்று
இருக்கும் என்ற குறிப்பைத்தான் காட்டியது.
ஒபாமா
நிர்வாகம் மீண்டும் முபாரக் இராஜிநாமா செய்யவேண்டும் என்று
பகிரங்கமாகக் கோர மறுத்துவிட்டது.
ஆனால் முபாரக்கின் உரை மக்களுடைய
உறுதிப்பாட்டைத் தீவிரப்படுத்தியது.
வெள்ளியன்று தஹ்ரிர் சதுக்கத்தில் குவிந்த ஆர்ப்பாட்டம்
இதுகாறும் இல்லாத அளவிற்குப் பெரிதாக இருந்தது.
எகிப்தின் தலைநகர் மற்றும் மிகப் பெரிய நகரமான கெய்ரோவில்,
முபாரக் அரண்மனை மற்றும் வெறுக்கப்பட்ட அரச தொலைக்காட்சி
வலையமைப்பின் தலைமையகம் உட்பட,
எல்லா
இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
பிற்பகலில்,
முபாரக்கும் அவருடைய குடும்பத்தினரும் நகரத்தைவிட்டு நீங்கி
ஷரம் எல் ஷேக்கிலுள்ள செங்கடல் அரண்மனைக்குச் சென்று விட்டதாக
தகவல்கள் வந்தன.
எகிப்திய இராணுவத்தின் அதிகம் ஆயுதமேந்திய
பிரிவுகள் நகரம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டு,
குருதி
கொட்டுதல் என்னும் பயங்கரம் தோன்றும் என்ற அச்சத்தை எழுப்பியது.
ஆனால்
நாள் முடிவதற்குள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கீழ்மட்ட
இராணுவப் படையினர்களுக்கும் இடையே நட்புறவுகள் பெருகின.
எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான
அலெக்சாந்திரியாவும் மிகப் பெரிய எதிர்ப்பை வெள்ளியன்று கண்டது.
அந்த
ஆர்ப்பாட்டத்தில் நூறாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு,
மத்தியதரைக் கடலோரத்தில் பல கிலோமீட்டர்கள் அணிவகுத்துச்
சென்றனர்.
முபாரக்கின் அலெக்சாந்திரியாவிலுள்ள அரண்மனையும்
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஒரு குவிப்பு முனையாக அமைந்தது.
தொழிற்துறை நகரமான சூயசில்
பல்லாயிரக்கணக்கானவர்களை கொண்டது என்று மதிப்பிடப்பட்ட
ஆர்ப்பாட்டக் கூட்டம் பத்து அரசாங்கக் கட்டிடங்களை சுற்றி
வளைத்தது.
சினாயில் எல்-அரிஷ்
சிறு நகரத்தில் பொலிஸுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே
மோதல்கள் ஏற்பட்டன.
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு
ஆர்ப்பாட்டக்காரர்கள் எறிகுண்டுகளை வீசி விடையிறுத்ததுடன்
பொலிஸ் கார்களையும் தீக்கிரையாக்கினர்.
தெற்கு
எகிப்திய மாநிலம் ஒன்றின் கவர்னர் அப்பகுதியிலிருந்து அன்று
காலையில் ஏற்பட்ட வன்முறை எதிர்ப்புக்களை அடுத்து ஓட்டம்
பிடிக்க நேர்ந்தது.
முபாரக்கின் காபினெட் கலைக்கப்பட்டுவிட்டது
அல்லது விரைவில் கலைக்கப்படும் என நம்பப்படுகிறது.
அதே
போல் பாராளுமன்றத்தில் இரு பிரிவுகளுமே கலைக்கப்பட உள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பெரிதும் விரும்பும் வாரிசான
சுலைமான் ஜனாதிபதிப் பதவியை ஏற்க மாட்டார் எனத் தெரிகிறது.
ஆளும்
தேசிய ஜனநாயகக் கட்சியும்
கலைக்கப்படுவதற்கான அறிகுறைகளைக் காட்டுகிறது.
அதன்
தலைவர் தன் இராஜிநாமாவை,
முபாரக் இராஜிநாமா அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு
முன்னர் அறிவித்து விட்டார்.
இராணுவ ஆட்சி எத்தகைய நடவடிக்கைகளை
எடுக்கக்கூடும் என்பது பற்றி இக்கட்டத்தில் கூறுவதற்கில்லை.
“அறிக்கை
எண்3”
என்று
இராணுவக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் முபாரக் இராஜிநாமாவிற்குப்
பின் வெளியிட்டதில் மக்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது
குறித்து
“தான்
ஆராய்வதாக”
தெரிவித்துள்ளது.
பல
தசாப்தங்கள் தடையற்று நாட்டிலிருந்து வரும் நெருக்கடி கால
நிலையை அது அகற்றவில்லை.
தற்போதைய எதிர்ப்புக்கள் முற்றுப்பெற்ற பின்தான் அது
அகற்றப்படும் என்று கூறியுள்ளது.
முகம்மது எல்பரடெய் மற்றும் முஸ்லிம்
சகோதரத்துவக் கட்சி உட்பட முக்கிய நபர்களும் கட்சிகளும்,
எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்துவதில் முறையாக உழைத்தவை,
இராணுவம் அந்த அரசாங்கத்திலும் பங்கு பெற வேண்டும் என
வலியுறுத்தியுள்ளனர்.
வியாழன் இரவு கூட,
திகைப்பிற்குட்பட்டவகையில் எல் பரடெய் புரட்சி தீவிரமடையாமல்
இருப்பதற்காக இராணுவம் தலையிட வேண்டும் என்று வாதிட்டார்.
“இப்பொழுது
இராணுவம்தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.
எகிப்திய இராணுவம் உடனடியாகத் தலையிட்டு எகிப்தை மீட்க
வேண்டும் என்று நான் அழைப்பு விடுகிறேன்.
இராணுவத்தின் நம்பகத்தன்மை முறையாக உள்ளது”
என்று
முபாரக் வியாழன் இரவு பேசிய பின்னர் எல்பரடெய் குறிப்பிட்டார்.
முபாரக் விலகிய பின்னர்,
எல்
பரடெய் வெற்றி ஏற்பட்டுள்ளது என அறிவித்தார்.
“பல
தசாப்தங்கள் அடக்குமுறைக்குப் பின்னர் நாடு
விடுவிக்கப்பட்டுள்ளது”
என்றார் அவர்.
வேலைகள்,
நல்ல
ஊதியங்கள் மற்றும் வீடுகள் ஆகிய எகிப்திய வெகுஜனக் கோரிக்கையை
நிறைவேற்றுவதற்கு ஒரு இராணுவ ஆதரவு உடைய அரசாங்கம் அதிகம்
ஏதும் செய்ய வாய்ப்பு இல்லை.
எகிப்திய இராணுவ அரசாங்கமே தற்பொழுதுள்ள ஒழுங்குமுறைக்கு
உறுதியாக விசுவாசமுடையது.
இதன்
முக்கியத் தலைவர்கள் வணிக நிறுவனங்களில்
ஒருங்கிணைந்துள்ளனர்.
மூன்று
தசாப்தங்களுக்கும் மேலாக இது முபாரக் ஆட்சிக்கு அடிப்படையில்
உத்தரவாதம் கொடுத்து வந்துள்ளது.
இராணுவம் அதிகாரத்தை எடுத்துக் கொண்டுள்ளது,
அதுவும் ஒபாமா நிர்வாகம் மற்றும் முதலாளித்துவ அரசியல்
சக்திகளான எல் பரடெய் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின்
ஆதரவுடன் என்பது,
புரட்சியில் ஒரு புதிய கட்டத்திற்கான அரங்கைத்தான் அமைக்கும். |